07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label கடல்பயணங்கள். Show all posts
Showing posts with label கடல்பயணங்கள். Show all posts

Saturday, April 12, 2014

மின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் !

வீட்டில் எனது மகனுடன் டிவி பார்த்து கொண்டிருந்தேன், அப்போது அவன் பட்டாம்பூச்சி என்று கத்தினான். நானும் அவனை ஆமோதித்தேன், அதை அவன் யாபகம் வைத்து கொண்டு சென்ற வார சனிக்கிழமை அன்று ஒரு பட்டாம்பூச்சி ஒன்று காண்பித்தால்தான் ஆயிற்று என்று அடம் பிடிக்க ஆரம்பித்தான். அட இது என்ன பெரிய விஷயமா என்று தேட ஆரம்பித்த போதுதான் சில நிஜங்கள் முகத்தில் அறைந்தன. அப்போதெல்லாம் வீடு என்று இருந்தால் அங்கு சில செடிகள் இருக்கும், அதை நாடி பூச்சிகள் வரும், அதனிடம் கடி வாங்கி, உடம்புக்கு வந்து இந்த வாழ்க்கை முறையை கற்றுகொண்டோம். இன்று பூச்சிகள் என்றாலே மருந்து அடித்து கொல்ல  வேண்டும் என்ற நமது வாழ்க்கை முறையில், ஒரு சக மனிதனிடம் அன்பை எதிர்பார்ப்பது என்பது கடினம்தானே. ஒரு பட்டாம்பூச்சி இல்லா வாழ்க்கை என்பது குறை ஒன்றும் இல்லை...... ஆனால் ஒரு இனம் சிறுக சிறுக அழிகிறதே என்ற கவலை இல்லாமல் இல்லை என்பது மட்டும் உண்மைதானே.



யோசித்து பாருங்கள்.... கடைசியாக நீங்கள் எப்போது மின்மினி பூச்சியை பார்த்தீர்கள் ? நாம் சிறு வயதில் பார்த்த கட்டெறும்பு, பிள்ளையார் எறும்பு, வெட்டுக்கிளி, குச்சி பூச்சி, தட்டான், பொன்வண்டு, அணில், சிட்டு குருவி, கரையான், கம்பளி பூச்சி, மண்புழு, நத்தை, தவளை, தண்ணி பாம்பு போன்ற நாம் தொட்டு உணர்ந்த அந்த உயிரினங்கள் எல்லாம் இப்போது எங்கே ? ஒரு பட்டாம்பூச்சியின் இறகில் இருக்கும் அந்த ஓவியத்தை வரைந்தது யார் என்று அதிசயித்த அந்த தருணங்கள் எல்லாம் இப்போது எங்கே ?






அன்று வீடுகளில் பறவை கூடு கட்டுவதும், அணில் சமையலறை வந்து அரிசி பொறுக்குவதும், அம்மா போட்ட கோலத்தை திங்க பிள்ளையார் எறும்பு வருவதும், மழை பெய்தால் தவளை கத்துவதும், அம்மா வீட்டின் முன் வைத்த பூச்செடியில் இருக்கும் தேனை சுவைக்க வரும் பட்டாம்பூச்சியும், முருங்கை மரத்தில் ஊரும் கம்பளிபூச்சியும், செடி வைக்க குழி தோண்டும் போது  தோன்றும் மண்புழுவும், மழை பெய்து ஊரும் சாலை ஓரங்களில்  தெரியும் நத்தைகளும், காலி பிளாட்களில்  ஓடி ஓடி பிடித்த தட்டான் பூச்சி, ஊருக்கு வெளியே இருக்கும் கரையான் புற்று என்று இயற்கையோடு சேர்த்திருந்தது அந்த கால வாழ்க்கை.




ஆனால் இன்று மாடுகள் என்பது பால் கொடுப்பது, கரப்பான் பூச்சிகள் என்றால் அருவருக்கதக்கது, கொசு என்றால் பட்டென்று அடித்து கொல்லு, பூச்சிகளில் எந்த வகை இருந்தாலும் காலி பண்ணு, தவளை என்பது ஒரு அசிங்கமான அமேசான் காட்டு விஷ பிராணி, பட்டாம்பூச்சி என்றால் துரத்து, கோழி என்றாலே தின்பதற்கு, ஆடு என்றாலே அது தோல் அறுத்து தொங்க விடப்பட்டிருக்கும், எறும்பு என்றால் கடிக்கும் என்று மிருகங்களிடம் நாம் இரக்கம் இல்லாமல் அல்லவா நடந்து கொள்கிறோம். இன்று மிருங்கங்கள் என்றாலே ஜூ சென்றுதான் காட்ட வேண்டி இருக்கிறது, எந்த மிருகத்தையும் அது கொடியது என்று சொல்லி தள்ளி வைத்துதானே பார்க்கிறோம். கம்பிகளின் பின் இருப்பதால் பாதுகாப்பு மிருகத்துக்கா இல்லை நமக்கா என்பதே புரியாத வாழ்க்கைதான் நமது குழந்தைகள் வாழ்வது !!


இன்று வீடு என்பது நகரத்தில் இருக்கும் பலருக்கு பிளாட் என்று ஆகிவிட்டது. இந்த வீட்டுக்குள் என்ன செடி வளர்க்க முடியும் ? நாகரிகம் என்ற பெயரில் நாம் அடைந்ததை விட இழந்ததே மேல் என்று இன்று புரிகிறது. எனது மகன் இன்று மிருகங்களை நேசிப்பது எல்லாம் டிவியில் எனும்போது மனதில் வருத்தம்தான் வருகிறது. பாட்டி வடை சுட்டதும், மரத்தின் மீது இருந்த காக்கா வடை தூக்கி சென்றதும் இன்று வெறும் கதைகள்தான்...... ஒரு நாள் அவன் ஒரு காக்காவை நேரில் பார்க்கும்போது வியப்புடன் பார்ப்பான், அந்த வியப்பு நாம் குழந்தைகளுக்கு இயற்கையை கற்று கொடுக்க மறந்ததற்கு கிடைக்கும் சவுக்கடி இல்லாமல் வேறண்ண ??!!


*********************************************************************************

வாருங்கள், இன்று எனக்கு பிடித்த, நான் ரசித்த பதிவுகளை எல்லாம் பட்டியல் இடுகிறேன், நீங்கள் கண்டிப்பாக ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் !

கவியாழி கண்ணதாசன் - கவிதை கொட்டும் இந்த தளத்தில், வார்த்தை ஜாலங்கள் புரியும். கவிதையை ரசிக்க இங்கே வாரங்கள் !

ஜெயதேவ் தாஸ் - அறிவியல், சுற்றுலா, கருத்துக்கள், நகைசுவை, விழிப்புணர்வு என்று தெளிவான, ரசிக்க வைக்கும் எழுத்துக்கள்  இவருடையது. எனது இனிய நண்பர் என்று சொல்வதில் பெருமை !

தஞ்சை சிவா - துபாய் வரமா சாபமா என்று இவர் எழுதும் தொடர் மிகவும் அருமை. ரசித்து படிக்க வைக்கும் நடை !

நாஞ்சில் மனோ - கதை, கவிதை, குறிப்புக்கள், அரசியல், அனுபவம் என்று பல தளங்களில் ரசிக்கும்படி எழுதுபவர், ஒரு முறை உள்ளே சென்றால் கவர்ந்து இழுக்கும் இவரது எழுத்து நடை !

நினைவில் சில கனவுகள் - எந்த டாபிக் எடுத்தாலும் அதை சிரம்பட தெளிவாக வாசகருக்கு புரியும்படி எழுதுவதில் வல்லவர் !

பஞ்சாமிர்தம் - பிரபலங்களின் சொற்பொழிவுகள், உரைகள் எல்லாம் இங்கே அருமையாக தொகுக்க பட்டு உள்ளது !

புலவர் ராமானுசம் - ஐயாவின் கவிதைகளை ரசித்து படிப்பவன் நான். தமிழில் அழகிய வார்த்தைகளை தொடுத்து இவர் கொடுக்கும் கவிதைகளின் சுவை அபாரம் !

முத்துசரம் -  மிகவும் பிரபலமான பதிவாளர், கவிதை கட்டுரை கதை கருத்துக்கள் எல்லாவற்றிலும் ஒரு தெளிவு என்று அசத்துபவர்.

மேலதாணியம் ஆசாத் - இப்போது இருக்கும் டெக்னாலஜியில் ஏதேனும் சந்தேகமா, இவரிடம் கேளுங்கள் அல்லது இவரது இடுகைகளை படியுங்கள் எல்லாமும் புரியும் !

ரூபனின் எழுதுப்படைப்பு - கவிதை படைக்கும் நண்பர், எந்த ஒரு பின்நூடதிலும் -நன்றி- -அன்புடன்- -ரூபன்- என்று இருப்பதை பார்க்கும்போது ஒரு பாசம் தோன்றும் !

வளரும் கவிதை - ஐயாவை பற்றி எப்படி ஒரு சின்ன வரியில் சொல்வது என்று தெரியவில்லை, இவர் மகளுக்கு எழுதிய கடிதம் என்ற பதிவு நெற்றியடி எனலாம். கருத்துக்களை ஆழமாக பதிபவர்....

இன்னும் நிறைய பதிவர்களை நாளை பார்க்கலாம் !! அதுவரை விடைபெறுகிறேன் நண்பர்களே !


மேலும் வாசிக்க...

Friday, April 11, 2014

மேரா பாரத் மகான்....!!

பயணம், பயணம் என்று கடந்த சில நாட்களாக பதிவு எழுதி போர் அடித்து விட்டேனோ ?! நான் எழுதும் பதிவுகளை படித்துவிட்டு என்னிடம் நிறைய பேர் கேட்க்கும் கேள்வி..... வெளிநாட்டில்தான் எல்லா சந்தோசமும் இருக்கிறது இல்லையா, நீங்கள் கொடுத்து வைத்தவர் என்று, அதை சற்று இங்கே விளக்கி சொல்லலாமே என்று கருதுகிறேன். இதுவரை நான் சென்ற நாடுகளை பட்டியலிட்டால்(எல்லாமே பல முறை சென்றது) ..... சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, மாலத்தீவு, ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, ஜெர்மனி, ஹாலாந்து, பெல்ஜியம், சீனா, பிரான்ஸ், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, கத்தார், அபு தாபி, ஆஸ்திரேலியா என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். ஆனால், உண்மையை சொல்வதென்றால் என்ன இருந்தாலும் நமது இந்தியாவை போல வராது, அதை ஏன் என்று சொல்கிறேன் கேளுங்கள் !!


நமது ஊரில் ஒரு பழக்கம் உண்டு, நீங்கள் எங்கே வேண்டுமானாலும் சென்று இருக்கலாம், ஆனால் அமெரிக்கா சென்று இருந்தால் மட்டுமே நீங்கள் வெளிநாடு சென்று வந்ததாக கருதுவார்கள். நான் பல பல நாடுகள் சென்று வந்தாலும் என் அப்பா நான் ஒவ்வொரு முறை வீட்டுக்கு செல்லும்போதும் "ஏன்டா...என் பிரண்டு பையன் எல்லாம் அமெரிக்கா போறான், நீ எப்போடா போக போற ?" என்று கேட்டுகொண்டே இருப்பார், நான் இதற்காகவாவது போக வேண்டும் என்று கீழதெரு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்துவதாக வேண்டி கொண்டேன். அவரும் அதை ஒரு பொன்னாளில் நிறைவேற்றியும் வைத்து விட்டார், பின்னர்தான் தெரிந்தது அவர் என் தொல்லை தாங்காமல் பயங்கர கடுப்புடன் அதை நிறைவேற்றி இருக்கிறார் என்று !!!?? நானும் அமெரிக்கா வந்துடும் வந்துடும் வந்துடும்னு சும்மா 20 மணி நேரமா ப்ளைட்டு உள்ளே உட்கார்ந்து என்னென்னமோ பண்றேன், ஆனா பைலட்டு "நீ ரொம்ப நல்லவன்" அப்படின்னு சொல்லி ப்ளைட்டை சுத்து வழியில ஓட்டறார் !!! கடைசியில சிகாகோவில இறக்கி விட்டப்ப இடுப்பு எலும்பும், பட்டக்சும் ஒரு ரெண்டு இன்ச் தேய்ந்சிடுச்சு !!? அமெரிக்கா போறதுக்கே இவ்வளவு......சாப்பிட போகலாம்னு வெளியில வந்தா எதுவுமே நடந்து போற தூரத்தில் இல்லை, இதுக்கு கார் வேற வாடகைக்கு எடுக்கணுமாம். நம்ம ஊரில் எல்லாம் வீட்டை விட்டு இறங்கினா சாயா கடையில் இருந்து சரக்கு கடை வரைக்கும் இருக்கும், அதை அனுபவித்தால்தான் தெரியும் !! அமெரிக்காகாரரே...... நீங்க சொல்லுங்களேன், அட சொல்லுங்க சார் !!


எந்த நாட்டுக்கு போனாலும் ஒரு அந்நியமாகவே எனக்கு தோன்றும்....... சரக்கு அடிச்சிட்டு தெனாவட்டா வண்டி ஓட்ட முடியாது, கைலி கட்டிக்கிட்டு முக்கு கடையில் சாயா குடிக்க முடியாது, பஸ்சில் புட் போர்டு அடிக்க முடியாது, வீட்டில் சத்தமாக "என் உச்சி மண்டையிலே சுர்ருங்குது..." அப்படின்னு பாட்டு சத்தமா வைத்து கேட்க முடியாது, எச்சில் துப்ப முடியாது, காரில் போகும்போது எதையும் வெளியில் தூக்கி போட முடியாது, டக்குன்னு ஹை வேயில் காரை நிறுத்திவிட்டு ஒன்னுக்கு போக முடியாது, பிளாட்பாரம் எல்லாம் வண்டி ஓட்ட முடியாது, ஒன் வே என்று போட்டு இருந்தாலும் ஓட்டி போக முடியாது, பாட்டி சுடற வடையை சட்னியில் ஊற வைத்து திங்க முடியாது, மாஸ்டர் ரெண்டு ஆம்பலேட் அதில் கொஞ்சம் வெங்காயமும் பெப்பரும் தூக்கலா போட்டு ஓரம் கருகிடாம கொஞ்சம் பதமா.... என்றெல்லாம் நமக்கு பிடிச்சதை சொல்லி வாங்கி சாப்பிட முடியாது, பிள்ளைகளோட பார்க்கில் கத்திகிட்டே ஓட முடியாது, எங்கே என்றாலும் கியூவில் நின்றுதான் எதையும் செய்யணும், பொண்டாட்டிக்கு ஆசையா மல்லியப்பூ வாங்க முடியாது..... இப்படி நிறைய சொல்லிகிட்டே போகலாம். இதை படித்துவிட்டு இதில் ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுதே அப்படின்னு யோசிக்காதீங்க மக்கா, உண்மையிலேயே இவ்வளவு சுதந்திரமா நாம வெளிநாட்டில் இருக்க முடியாது அப்படின்றதுதான் உண்மை. மேரா பாரத் மகான்....!!

நமது ஊரில் இருக்கும் மிக பெரிய பலமே, நீங்கள் எங்கே சென்றாலும் கிடைக்கும் அன்னியோநியம்தான் !! சமீபத்தில் ஒரு இடத்தில் மழைக்கு நின்று கொண்டு இருந்தேன், அது ஒரு கிராமத்து டீ கடை. ஈரம் படிந்த உடையோடு எப்படி உள்ளே போறதுன்னு தெரியாம தயங்கி நின்றப்ப அந்த கடைக்காரர் என்னை உள்ளே வாங்க என்று அழைத்தார். மழை நிற்கும்போது சூடான டீ, கொஞ்சம் அங்கே இருந்த கார கடலை மற்றும் சிரிப்போடு அவர் என்னை வழியனுப்பி வைத்தார், போகும்போது தம்பி அடுத்த தடவை வந்தா மறக்காம நம்ம கடை பக்கம் வாங்க என்று வேறு சொன்னார். நான் ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு செல்லும்போதெல்லாம் இதை உணர்ந்துள்ளேன்....... சென்னிமலை போர்வை பார்க்க சென்றபோது ஒரு உதவி கேட்டேன் என்பதற்காக என்னோடு இரண்டு மணி நேரம் சுற்றிய அந்த நண்பரும், ஏலக்காய் தோட்டம் பார்க்க வேண்டும் எனும்போது எங்களை தனது தோட்டத்திற்கு கூட்டி சென்று காண்பித்த அந்த பெரியவரும் எந்த ஆதாயத்தை எதிர்பார்த்தார்கள். எங்கு சென்றாலும் இது நமது ஊர் என்று திமிரும், ஆனந்தமும் வரும், இது எந்த வெளிநாடு சென்றாலும் கிடைப்பதில்லையே..... என்ன சொல்லுங்க, சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா !!



*********************************************************************************
 எனது பதிவுகளில் சிலவற்றை இங்கே ரசியுங்களேன்.....

அறுசுவை

சுவையான டீ                   : அறுசுவை - ஷரோன் டீ ஸ்டால், பெங்களுரு
சுவையான உணவகம் : அறுசுவை - பிராமின்ஸ் காபி பார்
வியந்த உணவகம்         : அறுசுவை - ஜேக்கப்'ஸ் கிச்சன், சென்னை

உயரம் தொட்ட பயணம் : மவுண்ட் பியூஜி, ஜப்பான்

18+ பயணம் :  உலக பயணம் - கிளு கிளு நகரம் (18+)

ஊர் ஸ்பெஷல்

வியந்தது                                     : போளியம்மனுர் மோர் மிளகாய்
கஷ்டப்பட்டு திரட்டியது        : சிவகாசி வெடி (பகுதி - 1)
அழிந்து கொண்டு இருப்பது : சாத்தூர் காராசேவு

எண்ணங்கள் : நகரத்து பறவையின் எச்சம்...!!

சாகச பயணம் : 

ஆல் டெரயின் வெஹிக்கிள் (ATV)



மறக்க  முடியா பயணம்

உள்ளூர் : நிருத்யாகிரம், பெங்களுரு
வெளிநாடு : யுனிவெர்சல் ஸ்டுடியோ (பகுதி - 1)
வித்யாசமானது : சொகுசோ சொகுசு பஸ்

*********************************************************************************
மேலும் வாசிக்க...

Thursday, April 10, 2014

எனது தேடலும்.... பதிவர் அறிமுகமும் !!

கடந்த மூன்று நாட்களாக என்னையும், எனது பதிவுகளை பற்றியும் மற்றும் பதிவுலக நண்பர்களை பற்றியும் சொன்னேன், இதன் மூலம் என்னை பற்றி நீங்கள் சற்று தெரிந்து கொண்டு இருப்பீர்கள். பொதுவாக எனது பதிவுகளில் நான் சென்று பார்த்த, அனுபவித்த ஒன்றை மட்டுமே கொடுக்க வேண்டும் என்று கொண்டுள்ளேன், அதை நான் நிஜமாகத்தான் சொல்கிறேன்  என்பதற்காகதான் நான் அந்த இடத்தில் இருந்ததை உறுதி செய்யும் பொருட்டு எனது புகைப்படத்தை போடுவேன். ஆனால் இந்த புகைப்படங்களை எடுப்பதற்கு எவ்வளவு கஷ்டப்படுவேன் என்பதை நகைசுவையாக இங்கே பகிர்கிறேன்.


எல்லோருக்கும் பிடித்த பகுதி என்பது அறுசுவை. முதலில் இந்த பதிவை எழுத காரணம் கேபிள் சங்கர் அவர்கள்தான். அவர் உணவகத்திற்கு சென்று வந்து அதை விவரிக்கும்போது இங்கே எனக்கு நாக்கு ஊறும். முதலில் பதிவு எழுத ஆரம்பித்து சில நாட்களில் ஒரு உணவகம் சென்று வந்து எழுதியபோது அதற்குதான் ஏகப்பட்ட ஹிட் !! சரி, எல்லோரும் ரசிக்கிறார்களே என்று மாதம் ஒரு உணவகத்திற்கு சென்று எழுத ஆரம்பித்து, இன்று சாப்பிடவே ஒரு ஊருக்கு தேடி செல்வது என்றாகிவிட்டது. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் திரு. சமஸ் எழுதிய சாப்பாட்டு புராணம் என்ற புத்தகத்தை படித்துவிட்டு சுமார் மூன்று நாட்கள் மதுரையில் இருந்து சிதம்பரம் வரை ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு உணவகத்தில் உணவை சுவைத்த கதை உணவை விட சுவையானது !! அதில் ஒரு சாம்பிள் பார்க்க..... ஒரு ஜோடி நெய் தோசை !!


ஊர் ஸ்பெஷல் பகுதியில் நடக்கும் கதை வேறு..... இந்த பயணங்களில் அதிகம் எந்த திட்டம் இல்லாமல் ஆரம்பிக்கும் என்பதுதான் உண்மை. எந்த இடத்திலும் எனக்கு ஆள் தெரியாது..... உதாரணமாக ஒரு நாள் நான் திண்டுக்கல்லில் இருந்தபோது, நல்ல இஞ்சி, ஏலக்காய் போட்ட டீ வேண்டும் என்று என் தம்பியிடம் கேட்டேன், அவன் செம்பட்டி அருகே ஒரு டீ கடையில் நல்ல ஏலக்காய் டீ கிடைக்கிறது என்று கூட்டி சென்றான். அன்று பார்த்து கடை லீவு, அடுத்து என்ன செய்வது என்று நினைத்தபோது வத்தலகுண்டுவில் ஒரு இடம் இருக்கிறது என்றான், அங்கு நெருங்கும்போது தேனி, போடி என்று மைல் கல் கண்ணில் பட்டது. காரில் சென்றதால் இன்னும் சிறிது தூரம்தானே, போடி வேறு ஏலக்காய்க்கு பேமஸ், அங்கே சென்று ஒரு டீ சாப்பிடலாம் என்று விளையாட்டுத்தனமாக யோசித்தோம். போடி சென்று நாங்கள் ஏலக்காய் செடி பார்க்க வேண்டும் என்று கேட்க, அவர்கள் அங்கிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்த போடி மெட்டுவுக்கு செல்ல வேண்டும் என்றனர். இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது, இன்னும் சிறிது தூரம்தானே என்று அங்கும் செல்ல, அவர்களோ கேரளாவில்தான் உள்ளது, செக் போஸ்ட் தாண்டி போங்கள் என்றனர். நாங்கள் கேரளாவினில் நுழைந்து ஏலக்காய் செடி பார்த்து முடித்து திரும்பும்போது ஒருவர் இந்த ஏலக்காய் காய வைக்கும் இடம் இன்னும் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது என்றவுடன் அங்கிருந்து பூப்பாறை என்ற இடத்திற்கு சென்று முழுமையான ஏலக்காய் செய்முறையை அங்கே இங்கே கேட்டு ஒரு ஆளை பிடித்து பார்த்தோம். 


பயணங்கள்....... எல்லோரும் என்னை கேட்க்கும் கேள்வி என்பது, எப்படி இவ்வளவு பயணம் செய்கிறீர்கள் என்பது. எனது வேலை நிமித்தமாக அதிகம் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டி வரும், அது மட்டும் இல்லாமல் இந்த பதிவுகள் எழுத ஆரம்பித்த பிறகு நிறைய தேடல் அதிகமாகிவிட்டது. இப்படி பயணிக்கும்போது எவ்வளவு அற்புதமான நண்பர்கள் அமைகிறார்கள் தெரியுமா..... இப்படிதான் சிங்கப்பூரில் நண்பர் வினோத் அவர்களை ஒரு நாள் சந்தித்தேன், அவர் என்னை வானத்தை தொட வைத்து ஒரு பீர் வாங்கி கொடுத்தது இன்னும் பசுமையான நினைவு. இன்னொருவர் எனது தம்பி என்று செல்லமாக சொல்லும் ஆனந்த், இவனோடு நான் திருப்பூர் வரை சென்று பின்னலாடை எப்படி செய்கிறார்கள் என்று தெரிந்துகொண்டேன், அப்போதுதான் நான் எப்படியெல்லாம் இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு அலைகிறேன் என்று தெரிந்தது அவனுக்கு. பதிவர் திருவிழாவில் ஸ்கூல் பையன், மெட்ராஸ் பவன் சிவகுமார், திடம் கொண்டு போராடு சீனு, ஜாக்கி சேகர், சுப்பு தாத்தா, வெங்கட் நாகராஜ் என்று பல பல பதிவர்களை சந்தித்தேன். இவர்களது ஒவ்வொரு பதிவையும் விரும்பி படிப்பவன் நான், இவர்களுடைய பதிவுகளுக்கு முன்னுரை என்பது தேவை இல்லை, நீங்கள் ஒரு முறை சென்றாலே விரும்பி படிக்க ஆரம்பித்து விடுவீர்கள் !! இப்படி ஒவ்வொரு பயணமும் சில பல நண்பர்களை உருவாக்கி கொடுத்து உலகத்தை விரிவுபடுத்துகிறது எனலாம்.


சரி, இன்று இன்னும் சில பதிவர்களை பார்க்கலாமா......



ஒரத்தநாடு கார்த்திக் - குமுதம், கற்கண்டு, விகடன் என்று எல்லா பத்திரிக்கைகளையும் இவரது பதிவுகளில் படிக்கலாம், ப்ரீ !!

டுபுக்கு - பதிவுகள் படிக்க ஆரம்பித்த பிறகு, இவரது பதிவைத்தான் விரும்பி படிப்பேன். கிண்டலும், நக்கலும் என்று அசத்துபவர்.

கார்த்திக் நிலகிரி - எனது காலேஜ் ஜூனியர், இன்று பதிவுலகை கலக்குகிறார். புத்தக விமர்சனம், நிலவை தேடி என்று அசத்துபவர், சத்தம் இல்லாமல் பதிவுகளை படித்து விடுவேன்.

அமுதா கிருஷ்ணா - அக்கம் பக்கம் என்ற பதிவில் எழுதும் இவர் அனுபவங்கள், சமையல், கோவில், சினிமா, செய்திகள், நொறுக்ஸ், நட்பு என்று காக்டெயில் விருந்து படைக்கிறார்.

அதிஷா - பிரபல பதிவர் இவர், ஒரு புத்தகத்தின் விமர்சனம் பற்றி இவரது பதிவுக்கு சென்று இன்று வரை தொடர்பவன். இவரை பற்றி நான் எப்படி சொல்வது !

ஆலிலை - கிருஷ்ணகுமார் என்னும் இவர் எழுதும் கவிதைகளும், கதைகளும் மெல்ல மெல்ல உங்களை ஆட்கொள்ளும்.

இனிய ஓவியா - வெகு சில பதிவுகளே எழுதி இருந்தாலும், நிறைய பதிவுகளை படிப்பவர், அதற்க்கு அழகாக கருத்து சொல்பவர். இவரது வலைத்தளம் முழுவதுமே ஓவியம், ஓவியம் மற்றும் ஓவியர்களை பற்றியே. 

இனியவை கூறல் - இதை எழுதுவதும் மேலே சொன்ன கலாகுமரன் அவர்கள்தான். இந்த பகுதியில் அனைத்தையும் கலந்து கட்டி அடிப்பவர்.... சுவையாக !

இன்றைய வானம் - அறிவியல், புகைப்படம், அரசியல், நகைசுவை என்று ஒன்பது சுவைகளை தனது பதிவுகளின் மூலம் தருபவர்.

உலக சினிமா ரசிகன் - சினிமாவை நிரம்ப நேசிப்பவர், உலக சினிமாவில் இருந்து உள்ளூர் சினிமா வரை புரட்டி எடுப்பவர். தற்போது உடல் நலம் நன்கு தேறி விரைவில் வந்து எழுத ஆண்டவனை வேண்டுகிறேன் !

எங்கள் ப்ளாக் - ஐந்து பேர் சேர்ந்து எழுதும் பதிவுகளின் தொகுப்பு. இவர்கள் எழுதும் பாஸிடிவ் செய்திகள் நீங்கள் மிஸ் செய்யவே கூடாத ஒன்று..... கண்டிப்பாக மிஸ் செய்ய கூடாதது.

என் கண்கள் - சுய தொழில் தொடங்க வேண்டுமா அல்லது அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா, இங்கே சென்றால் உங்களுக்கு எல்லாமும் கிடைக்கும். பயனுள்ள பதிவு இது.

"தோட்டம்" சிவா - மாடி தோட்டம், தோட்டம் போடுவது பற்றிய குறிப்புகள் என்று வெகு சில பதிவுகளே எழுதி இருந்தாலும், அனைத்தும் நல்ல தகவல்கள்.

"கசியும் மௌனம்" கதிர் - கவிதை, கட்டுரை, விமர்சனம், சிறுகதைகள், விவசாயம் என்று பல தளத்தில் சுவாரசியம் காட்டுகிறார்.
புதியவன் - சிறியவன் - அஜித், அஜித், அஜித் படங்கள் பற்றிய விமர்சனம், தகவல்கள் மட்டுமே இந்த தளத்தில், ஆனால் சுவாரசியமாக இருக்கிறது.

இன்று நிறைய பதிவர்களை பார்த்தோம், எனது அனுபவங்களையும் கேட்டீர்கள். நாளை இன்னும் பல சுவையான செய்திகளோடு சிந்திப்போம் !!

 

மேலும் வாசிக்க...

Wednesday, April 9, 2014

வலையுலக நண்பர்களும்.... பதிவுகளும் !

பதிவுகலகில் முதன் முதலில் ஆர்வத்துடன் எழுத நுழையும் எல்லோருக்குமே ஒரு பாராட்டு கிடைத்தால் அது பெரிய சந்தோசமாக அமையும். பின்னர் ஒவ்வொரு பதிவிலும் இப்படி நண்பர்கள் கிடைத்து, உங்களது நட்பு வட்டம் விரிவடைய ஆரம்பிக்கும்போது இந்த வலைஉலகம் ஒரு புதிய நண்பர்கள் வட்டத்தையும், அனுபவங்களையும் கொடுக்கும் ! நீங்கள் ஒருவரே எல்லா விஷயங்களையும் பற்றியும் எழுத முடியாது, ஆனால்  இந்த பதிவுலகில் சிலரது எழுத்துக்களும், அவர்கள் எழுதும் பதிவுகளும் உங்களை சுண்டி இழுக்கும். மீண்டும் மீண்டும் அவர்களது பதிவுகளை தேடி செல்ல ஆரம்பிப்பீர்கள்..... அப்படி எனது நண்பர்களும், பதிவர்களும் ஆகிய இவர்களை பற்றிய சிறிய குறிப்புகள், உங்களுக்கு உதவும் என்றே கருதுகிறேன் !!

நான் சொல்லும் எல்லா பதிவர்களும் முதல், இரண்டு என்று எந்த வரிசையிலும் சொல்லவில்லை, எல்லோருமே எனக்கு பிடிதமானவர்களே ! 


திண்டுக்கல் தனபாலன் :
பதிவுகளில் இவரை செல்லமாக DD என்று அழைப்பார்கள். இந்த பதிவுகளில் பதிவர்களையும், அவர்கள் எதில் சிறந்தவர்கள் என்று உங்களுக்கு சந்தேகம் என்றாலும் இவரை கேட்கலாம்..... எந்த பதிவுக்கும் முதல் கருத்து இவரோடதாகதான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை ! இவரது பதிவுகளில் திருக்குறளையும், பழைய பாடல்களையும் சேர்த்து இவர் எழுதுவது அனைவரையும் கவரும். இப்போது இவர் எழுதி வரும் பதிவு எழுதுவது எப்படி என்ற தொடர் புதிய பதிவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று !

ரமணி : தீதும் நன்றும் பிறர் தர வாரா.....
மரபு கவிதைகளில் இருந்து புது கவிதைகள் வரை இவர் எழுதும் கவிதைகளில் ஒவ்வொன்றும் வித்யாசமாக இருக்கும். ஒவ்வொரு கவிதைகளிலும் வார்த்தைகளில் விளையாடி இருப்பார். "யாதோ ரமணி" என்ற தள பெயரில் எழுதும் இவரது பதிவுகளை கவிதை பிடிக்காதவர்களுக்கும் பிடிக்கும் என்பதே இவர்களின் பதிவுகளின் சிறப்பு !!



மோகன்குமார் : வீடு திரும்பல்
சார் இப்போ ரொம்ப பிஸி, அதனால் நிறைய பதிவுகள் எழுதுவதில்லை, ஆனால் எப்போ எழுதுவார் என்று காத்திருக்கிறோம் ! சினிமா விமர்சனம், வானவில் என்ற கருத்து கதம்பம், பயண கட்டுரைகள் என்று எல்லா ஏரியாவிலும் புகுந்து விளையாடுவார், படிக்க படிக்க உங்களை இவரது எழுத்துக்கள் உள்ளே இழுக்கும். சக பதிவர்களை பாராட்டுவது, நட்புடன் இருப்பது என்று என்றுமே இனியவர், இவர் எழுதிய வெற்றி கோடு என்ற புத்தகம் அருமை !!

ராஜி : காணாமல் போன கனவுகள்
பதிவுலகின் அக்கா என்று இவரை செல்லமாக அழைக்கலாம். முதன் முதலில் பேசும்போதே பாசத்தை பொழிவார். இவர் எழுதும் சமையல் குறிப்புகள், மௌன சாட்சிகள், கைவினை பொருட்கள் செய்யும் முறை, புண்ணியம் தேடி என்று பதிவுகளில் நம்பர் 1 பிளாக்கர் ஆக இருந்து கொண்டு இருக்கிறார் !

ஜோதியர் இல்லம் ஜோதிஜி திருப்பூர் :  
"டாலர் நகரம்" என்ற புத்தகத்தை எழுதியவர் என்றால் நீங்கள் சட்டென்று புரிந்து கொள்வீர்கள் ! சமூக கருத்துக்களை சுவைபட, அதே சமயம் ஆழமாக எழுதுபவர் இவர். ஒரு முறை சந்தித்து இருந்தாலும் அடுத்த முறை சந்திக்க வேண்டும் என்று ஆர்வமுடன் காத்திருக்கிறேன் !



மின்னல் வரிகள் : பாலகணேஷ் 
இவருக்கு என்னை தெரியுமா என்று தெரியவில்லை, ஆனால் இவரது பதிவின் ரசிகன் நான். போட்டோ ஷாப் கொண்டு இவர் வெளியிடும் படங்கள் குபீரென்று சிரிப்பை வரவழைக்கும். சரிதா என்ற ஒரு கேரக்டர் வைத்துக்கொண்டு இவர் எழுதும் பதிவுகள் சிரிப்பை வரவழைக்கும். சூப்பர் ஜி !


சுருக்.... நறுக்....எனக்கு பிடித்த பதிவர்களின் லிஸ்ட் 

"ஆஸ்ட்ரோ வணக்கம் " ராஜேஷ் - ஜோதிட மேதை, ஒவ்வொரு நாளும் ஜாதகங்கள், பரிகாரங்கள் என்று ஜோதிட சம்மந்தமாக மிகவும் எளிய முறையில் எழுதுகிறார்.

"ஜோக்காளி" பகவான்ஜி - தினமும் ஒரு நகைசுவை துணுக்கு என்று கலக்குவார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையில் !

"சங்கவி" சதீஷ் - வெகுஜன நடையில் எல்லா விஷயத்தையும் பற்றியும் சுவைபட எழுதும் நண்பர் இவர், ஒரு முறை படித்தால் தொடர ஆரம்பிப்பீர்கள் !

"கோவை நேரம்" ஜீவா - கோயம்புத்தூர்காரர், ஒவ்வொரு உணவக பதிவும், இவர் சுற்றும் ஊர்களும் நம்மை பொறாமை படவைக்கும் ! நல்ல எழுத்து நடை !

"ஜகமணி" மணிராஜ் - ஒவ்வொரு கடவுளும், அதன் சிறப்புகளும் என்று பக்தி மனம் கமழும் பதிவுகள் இவருடையது.

"ரம்யம்" மாதேவி - படங்களுடன் பல்சுவை பதிவுகள் இவருடையது, நான் தவறவிடுவதே கிடையாது !

"கோவை" ஆவி -  படமாகட்டும், பயணமாகட்டும் அதை சிறப்பாக எழுதுவார். எட்டு திக்கும் சுற்றும் இந்த ஆவி, உங்களை பயமுறுத்தாமல் மகிழ்விக்கும் வித்தைக்காரர்.

கரந்தை ஜெயக்குமார் - உள்ளம் விரிந்தால் உலகமே சொந்தம் என்று எல்லா தலைப்பிலும் எழுதுபவர், ஒவ்வொரு தலைப்பும் சிறப்பு என்பேன்.

"தளிர்" சுரேஷ் - தெளிவாக ஒவ்வொரு விஷயமும் புரியும்படியாக இருக்கும் இவரது பதிவுகள். கதைகள், ஜோக் என்று கலந்து கட்டும் இவரது பதிவுகள்.

"நிகழ்காலம்" எழில் - குழந்தைகள், அவர்களது மனம் என்று சமூக கருத்துக்களை மிக சிறப்பாக பதிபவர். தொண்டுள்ளம் கொண்டவர் !

ஆரூர் மூனா செந்தில் - இவரது விமர்சனத்தை பார்த்துதான் படம் பார்க்கவே செல்வேன். பார்க்க முரடன் போல தெரிந்தாலும் குழந்தை இவர் !


இன்னும் நிறைய நிறைய புதிய, மூத்த, சிறப்பு பதிவர்களை நாளையில் இருந்து பார்க்கலாம். இது நிறைய புதிய நண்பர்களை அடைய உங்களுக்கும், எனக்கும் உதவும் என்று நினைக்கிறேன் !!
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது