07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label காயத்ரி தூரிகைச்சிதறல். Show all posts
Showing posts with label காயத்ரி தூரிகைச்சிதறல். Show all posts

Sunday, August 4, 2013

தூரிகை காயத்ரியின் - நன்றி _/\_

அன்புத்தோழமைகளுக்கு, மனமார்ந்த மாலை வணக்கம்.  


இன்றுடன் வலைச்சரத்தில் எமது பொறுப்பாசிரியர் காலம் முடிவடைவதால் நன்றி கூறித் தங்களிடமிருந்து விடைபெறுகிறேன். எழுத்துலகில் எழுத்தாணியை சரிவரப் பிடிக்கக்கூட கற்காத என்னையும் அழைத்து இந்த மலர்த்தோட்டத்தில் இளைப்பாற இடமளித்த அன்பின் சீனா ஐயா அவர்களுக்கும், இத்துனை நாளும் எமது அரட்டைகளைப் பொறுமையாகப் படித்ததோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து ஊக்கம் அளித்துவரும் எனதன்புத் தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  

இந்த வலைச்சரத்தில், ஆங்காங்கே பூத்திருக்கும் எண்ணற்ற மலர்கள் அனைத்தையும் கோர்ப்பதற்கு இயலாது என்பதை அனைவரும் அறிவோம். விடுபட்ட மலர்கள் எமது கண்களுக்கும், எம் காலத்திற்கும் சிக்காது போனதுதான் காரணமே தவிர மலர்களின் மணத்திலோ, அழகிலோ எந்தக்குறையுமில்லை.  

வலைச்சரத்தில் கோர்க்கப்படாது விடுபட்டு, எமது தோழமைகளால் சரத்தை அலங்கரிக்கக் காத்திருக்கும் அனைத்து மலர்களுக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்.  அந்த மலர்களைக் கொண்டு வலைச்சரத்தை அலங்கரிக்கக் காத்திருக்கும் தோழமைகளுக்கு பாராட்டுக்கள்.  

இந்த வாரம் தூரிகை கண்டெடுத்த முத்துக்கள் அனைத்தும் தொடர்ந்து ஒளிவீசிக்கொண்டிருக்க இறைவேண்டி வாழ்த்துகிறேன்.

தன் சிந்தனைச் சிதறல்களால்  இந்த வலைச்சரத்தை அலங்கரிக்கவிருக்கும் அடுத்த பொறுப்பாசிரியரை மனமார வாழ்த்தி வரவேற்கிறேன்.  தங்கள் அனைவருடைய அன்பிற்கும் நன்றி. அன்பை அரிதாரமாய்ப் பூசாமல் அன்பை உணர்ந்து உணர்த்துவோம்.  எங்கும் அன்பு தழைக்கட்டும்.  வாழ்க வளமுடன்._/\_



மேலும் வாசிக்க...

தூரிகை கண்ட முத்துக்கள் - நாள் 6

தோழமைகள் அனைவருக்கும் இனிய நண்பர்கள்தின வாழ்த்துக்கள். 



காயத்ரி  : வாங்க விசு சார்..வணக்கம்

விசு        : வணக்கம்மா.. இன்னியோட வலைச்சரத்தில் என் பொறுப்பு முடியுதா..?

காயத்ரி  : ஆமா சார்.  இன்னிக்கு நண்பகள் தினத்தை முன்னிட்டு  நம்ம வலைச்சர மலர்த்தோழமைகள் அனைவருக்கும் சிறப்புப்பரிசு இது....:) (இன்னிலேர்ந்து கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க..)

விசு        :நம்ம அன்பின் சீனா ஐயா  இறுதிப் பதிவை வழங்க சரியான நாள்தான் கொடுத்திருக்கார்...நம்மப் பத்திமுன்னாடியே அவருக்குத் தெரிஞ்சிருக்குமோ...?!!

காயத்ரி  : ம்ம்... சார் இன்றைய மலர்களை அறிமுகப்படுத்தும் முன்பு நண்பர்கள் தினத்துக்கு நீங்க ஏதாச்சும் சொல்லனும்னா சொல்லுங்களேன்...ஆவலா இருப்பாங்க நம்ம தோழமைகள்..

விசு       : ஏம்மா, தினமும் என் பாணிலதான் சொல்றமே...இன்னிக்கு ஒரு மாறுதலுக்கு உன் பாணில காயத்ரியா ஏதாச்சும் சொல்லும்மா..நானும் கேட்கறேன்..

காயத்ரி : பாவம் சார் நீங்க.. என் கருத்துக்களையும் கேட்கனும்னு ஆவலா இருக்கீங்களே..!! 

அன்பெனும் அரிதாரம் பூசாது...
தோல்வியில் துவண்டு
துயரத்தில் மூழ்கியிருக்கும்
தோழமைகளுக்கு
கர்ணனின் கவசகுண்டலமாய்
அன்பையணிந்து
உள்ளத்தால் உணர்ந்து
உணர்வால் உணர்த்தி
உடனிருந்து 
தோழமைக்கு தோள்கொடுப்பதே நட்பு..இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள். 

விசு      : எங்க என்னமாதிரியே  நட்பென்பது நட்பெனும் சொல்லில் இல்லை. நட்பை நட்பாக உணர்வதில் இருக்குனு ஏதாவது சொல்லிடுவியோனு நினைச்சேன்மா...நல்லவேள உன்பாணிலயே சொல்லிட்ட. என் சார்பாகவும் நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.  சரிம்மா அறிமுகத்துக்கு போகலாமா..

காயத்ரி : போகலாம் சார்.  முதல் பதிவரே குளிர்ச்சியான ஒரு அறிமுகம் சார்..

விசு       : என்னம்மா குளிர்ச்சி...ஏதாவது வில்லங்கமா மாட்டிவிடமாட்டியே..?

காயத்ரி : அட என்ன சார்..நம்ம வலைச்சரத்துல உங்களைப்போய் மாட்டிவிடுவேனா....? இவரு நொய்யல் ஆற்றை பாதுகாப்பது பற்றி தன்னோட வலைப்பூவில் எழுதியிருக்கார் அதான் ஆறுன்னதுமே குளிர்ச்சியா உணர்ந்தேன்..

விசு       : இரும்மா நானும் படிச்சுப்பார்க்கறேன்..

கோயம்புத்தூர் நகரை கடக்கும்போது நகரின் கழிவுகளும், திருப்பூரை கடக்கும்போது அந்நகரின் சுத்திகரிக்கப்படாத சாயப்பட்டறைகளின் கழிவுகளும் கலந்து நொய்யல் ஆற்றை  மாசுபடச்செய்கின்றன.  நொய்யல் பாதுகாப்பு அமைப்பு (பதிவர் பற்றிய விபரங்கள் பகிரப்படவில்லை) என்ற  தளத்தில் நொய்யல் ஆற்றைப் பாதுகாப்பது எப்படி...?
மழை நீர் சேகரிப்பு என  நீர் சேமிப்பு, நீர் மாசுபடுதல் போன்ற பதிவுகளாகப் பகிர்ந்துள்ளார். 
//காலத்துக்குக் காலம் இயற்கையைப் பார்க்கும் பார்வை மாறி மாறி வந்தாலும், மாற்றம் ஏதுமின்றியே இருக்கிறது இயற்கை!
மனித அறிவு எவ்வளவு குறுகலானது என்பதை வெளிச்சம் போட்டதைத் தவிர நவீன அறிவியல் வேறெதையும் சாதிக்கவில்லை.//
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள். தலைப்பே வித்தியாசமா இருக்கு இல்ல..ஏன் பொண்ணு கொடுக்க மாட்டேங்குறாங்களாம்..வாங்க பார்ப்போம். 
அவசியம் அனைவரும் படித்து உணரவேண்டிய பதிவாத்தான் எனக்கும் தோணுதும்மா.  இதுபோன்ற விழிப்புணர்வூட்டும் பதிவுகள் தொடர பதிவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

காயத்ரி அடுத்த பதிவர்.. இணையத்தில் ஒரு பிரபளம் சார்.  நம்ம திண்டுக்கல் தனபாலன் சகோதரர் மாதிரியே இவருக்கும் அறிமுகம் தேவை இல்லை..இருந்தாலும் திரும்ப நாம அறிமுகப்படுத்தும்போது இவரையும், இவரது வலைப்பூவையும் அறிந்திருந்தாலும் இதுவரை படிக்காதவங்க படிச்சு அறியவேண்டியதை அறிவாங்க என்ற எண்ணத்தில்தான் இவரையும் இன்று சேர்த்திருக்கிறேன்.

விசு       : என்னமா பீடிகையே பலமா இருக்கு..

காயத்ரி : நீங்களே இவரைப்பற்றியும், இவரோட தளத்தையும் படிச்சுப்பாருங்க சார்..உங்கள்ளுத் தெரியும்.
நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேரான ஈரோடு கதிர் அவர்களின் கசியும் மௌனம் தளத்தில் கவிதைகட்டுரைவிமர்சனம்விவசாயம்சிறுகதைகள் என பல்வகைப்பதிவுகள் கொடுத்து அனைவரையும் அசத்திவருகிறார்.  இவரை வலைப்பதிவுலகில் அறியாதவர்கள் மிகக்குறைவே எனினும்புதிதாக இணைந்திருக்கும் பலருக்கு பயனுள்ளதாக இருக்குமென்பதாலும், எம்மைக்கவர்ந்த வலைப்பூக்களில் இவரது கசியும் மௌனமும் ஒன்று என்பதாலும் அறிமுகப்படுத்துகிறேன். தலையை விட வால்தான் அதிகம் ஆடுகிறது..!!  இதில் பல துணுக்குகள் நகைச்சுவையாய் பகிர்ந்துள்ளார். நகைச்சுவைத் தோற்றத்தில் காணப்படும் உண்மைகளாய் திகழ்கின்றன..
//எதைச் சொன்னாலும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருப்பதுபோல்எதைச் சொன்னாலும்நம்பாததற்கும் ஒரு கூட்டம் இருப்பதுதான் உலகின் 
விந்தை! //
//சில விசயங்கள் புரிபடாமலே இருப்பதற்குஅது குறித்த ’எதிர்ப்பு’ 
மனோநிலையும்காரணமாக இருக்கலாம்.//

எங்கு மழைப்பெய்திடினும் நம் ஊரின் மீதான பாசத்தில்நம்ம ஊரிலும் மழைப்பெய்திருக்குமா என்ற எண்ணத்தையே ஏற்படுத்த வைக்கும்.  அதுபோலத்தான்  இவர்கூட தன்னுடை மனசும் தழையும் மழையில்.. பதிவில் நம்ம ஊரிலும் மழை பெய்திருக்குமான்னு நடுசாமத்தில் ஊரில் இருக்கும் தாத்தாவை அழைத்துக் கேட்கலாமா என எண்ணிக்கொண்டிருக்கிறார். தொடர்ந்த அவரின் எண்ணங்களை அறிய மேற்கொண்டு படிப்போம் வாங்க. :)
//காலையில் எழுந்து கைபேசியில் ஃபேஸ்புக்கைப் பார்க்க எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊர்ப்பெண் “ Its raining after 5 mnths... Thank GOD”  எனத் தகவல் இட்டிருந்தார். நேரத்தைப் பார்த்தேன்இரவு 10 மணி எனக் காட்டியது. மனசில் மழை பெய்தது போலிருந்தது.//

விசு: யதார்த்தமா மண்ணின் மணத்தை மணமாய் மனதால் வழங்கியிருக்கிறார். தோழர் ஈரோடு கதிர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
***
காயத்ரி :   சாப்பாடே வாழ்க்கையென சிலர்...வாழ்க்கையே சாப்பாடு என சிலர்...சுவைத்து உண்பவர் சிலர்..உண்பதற்காக உண்ணவேண்டுமே என சிலர்..

விசு     : இதை ஏன்மா இப்ப சொல்ற..??!!

காயத்ரி: இப்ப நீங்க அறிமுகப்படுத்தப்போகும்    Asiya Omar அவர்களின் சமைத்து அசத்தலாம்..  வலைப்பூவில் அனுபவம் பேசுகிறதுவ்கை வகையான உணவு வகைகள் என வலைப்பூவின் பெயர் போலவே அசத்தியிருக்காங்க.

மிகவும் எளிமையான வெஜ் ஓட்ஸ் கிச்சடி ஓட்ஸ் தேங்காய் லட்டு என பலவகைப் பதார்த்தங்களைப் பகிர்ந்து உடனே செய்துபார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது இவரது பதிவுகள்.  செய்து பாருங்க..(ஆனா முதல் சோதனை நீங்கதான் யாரையும் சாப்பிட்டுப்பார்க்க சொல்லி வம்பு செய்யக்கூடாது) அது மட்டுமா எங்க வீட்டு பத்மினியும்தோட்டமும்... அவங்க வீட்டு பத்மினியப்பற்றி என்னமா பெருமையா பேசிக்கிறாங்க..யாருங்க அந்த பத்மினி அவளையும் பார்த்துட்டு வருவோமே அவங்க வீட்டுக்குப்போகலாம் வாங்க..

விசு    : அட ஆமாம்மா.. இதையெல்லாம் இப்பவே சாப்பிடனும்போல இருக்கே...நான் எப்படிம்மா மேற்கொண்டு அறிமுகப்படுத்துவேன்...

காயத்ரி : இதைப்பார்த்ததும், எனக்கு சம்சாரம் மின்சாரதுல நீங்க உங்க மனைவி கோதாவரிகிட்ட காஃபி எப்படி செய்யனும், கேசரி எப்படி செய்யனும்னு சொல்வீங்களே அதைக்கேட்டவுடனே நாங்க  சாப்பிட ஹோட்டலுக்கு எழுந்து போயிடாம படம் பார்த்தோமே அந்த நினைவுதான் சார்...:)

விசு    : தோழமை Asiya Omar அவர்களின் பசித்தூண்டும் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள். 

விசு    : உங்க அளவிற்கெல்லாம் எனக்கு பொறுமை இல்லம்மா. நான் தம்பி கில்லாடிக்கிறுக்கனும், ராகவன் தளத்தையும் அடுத்தடுத்து அறிமுகப்படுத்திட்டு கிளம்பறேன்..நண்பர்கள் தினம் கொண்டாடுவது அவசியமான்னு ஒரு பட்டிமன்றம் போகனும்..அதோட காஃபி குடிக்கனும்னு நீயே நினைவு படுத்திட்ட..

காயத்ரி :நானேதான் வாயக்கொடுத்து உங்கள விரட்டிட்டேனா..?!

விசு    : கில்லாடிக்கிறுக்கன் கலைச்செல்வன் என்றபெயரில் எழுதிவரும் வலைத்தளத்தில் சின்ன சின்ன சிந்தனைகளை சிந்திக்கும்படி வழங்கியிருக்கிறார்.  இந்த சின்னவயதில் இவருக்குள் இவ்வளவு திறமையா என வியக்கும் வகையில் சமூகசிந்தனை சற்றே கூடியிருக்கும் இவரது பதிவுகளில்.
//சங்கூதப் போன இடத்திலே
சங்கூதிட்டாங்க
குத்தாட்டம் போட்ட இடத்திலே
குத்திட்டாங்க
புதைக்கப்போன இடத்திலே
எரிச்சிட்டாங்க
உடலை எரிக்க
போனவங்க
ஊரையே எரிச்சு
வந்தாங்க
என்னமோ குல வழக்கமாம்...//
இதுபோன்ற சிந்தனைகள் சிதறியிருக்கும் அவர் தளம் செல்வோம்.
தம்பி கில்லாடிக்கிறுக்கனின் சமூக சிந்தனை விதைகள் தொடர்ந்து முளைத்துத் தோட்டமாய் மாறிட வாழ்த்துக்கள்.
 *********
 ராகவன் வலைத்தளத்தில் இசைசிறுகதைஅனுபவக்கதைகவிதைகள் நினைவலைகள் என்று பலவிதமான பதிவுகளும் பதிந்திருக்கிறார்.  இவரது கதைகள் உயிர்ப்புடன் கதை மாந்தர்கள் பேசுவதைவிட கதையே பேசுவதை நம்மால் காண இயலும். இவரின் சிறுகதையான பரிவர்த்தனை யில் "பத்தர் கடை விவரணைகள் இயல்பான எழுத்து நடையில் மண்ணின் மணம் வீசச்செய்திருக்கிறார்.
பகலில் மிச்சம் இருக்கிற இரவு என்ற பதிவில் இவர் கூறியிருக்கும் கருத்துக்களை பலரும் உணர்ந்து அனுபவித்திருப்பார்கள் என்றே கருதுகிறேன்.

//அதுவாய் வந்து விழும் வார்த்தைகள் சில சமயம் ஞாபகத்தின் அலமாரிக்குள் குடையும் போது வந்து விழுகிறது கவிதைகள்  அதன் மேல் படிந்து போன தூசிகளுடன். ///
 //தொடர்ந்து எழுதுகிறேன் பன்படுமா என்று பார்க்கலாம்...கால் பதிந்து பதிந்து வழுக்கலான பாறைகளில் ரேகைகள் இன்னும் மிச்சமிருக்கின்றன,.. // 
நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.  மண்ணின் மணம் தொடர்ந்து மணக்கட்டும். 

காயத்ரி : என்னுடைய அழைப்பை ஏற்று இத்துனை நாளும் உங்க பணிகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கி வலைச்சரம் வந்தமைக்கு வலைச்சர மலர்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் விசு சார்.

விசு    : ரொம்ப மகிழ்ச்சிம்மா..எனக்கும் பல்வேறுபட்டத் தளங்களை அறிய வாய்ப்பு கிடைத்தது.  எப்பவும் மேடைப்பேச்சு, சினிமா, நாடகம்னு இருந்துட்டு ஒரு வித்தியாசமான அனுபவம்.   இத்துனை நாள் நம்ம அரட்டையைப் பொறுமையா சகிச்சுக்கிட்டு இருந்த வலைச்சர தோழமைகளுக்கும், உனக்கு வாய்ப்பளித்து அதன்மூலம் எனக்கு வாய்ப்பு கிடைக்க காரணமாயிருந்த அன்பின் சீனா ஐயாவிற்கும் நன்றிகள். அறிமுகமாகும் அனைத்து தோழமைகளின் எழுத்துக்கள் எண்ணற்று வெளிவர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

காயத்ரி  : தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி சார்.  தோழமைகளுக்கும் மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துகளும்.  _/\_
***
எமது பதிவுகளை சற்றே மாறுபட்ட கோணத்தில் வழங்கிடவே இப்படிப்பட்ட ஒரு  முயற்சி.    இந்தப்பதிவுகள் மூலம் எவரையும் காயப்படுத்தும் எண்ணம் இல்லை.  அறியாது எவர் மனமேனும் வருந்துவதற்குக் காரணமாயிருப்பின் மன்னிக்கவேண்டுகிறேன். 





மேலும் வாசிக்க...

Saturday, August 3, 2013

தூரிகை கண்ட முத்துக்கள் - நாள் 5

எனதன்புத் தோழமைகளுக்கு இதமான வணக்கம்.  


காயத்ரி : வணக்கம் விசு சார்...

விசு       : வணக்கம்மா.  என்னம்மா..? என் 2 நாளா வரலை நாளைக்கு சீக்கிரம் அவசியம் வலைச்சரம் வாங்கன்னு என்கிட்ட சொல்லிட்டு நீ இவ்ளோ நேரம் கழிச்சு வர...??

காயத்ரி : இன்னிக்கு ஆடி 18 சார்.  விடுமுறை.. வீட்ல இருக்கிறவங்கள எல்லாம் கவனிச்சுட்டுதான வரமுடியும் அதான் லேட்டா ஆச்சு...

விசு        : இன்னிக்கு 6வது நாளின் 5வது அறிமுகமா..?

காயத்ரி : அட..!! சார் தெளிவாத்தான் இருக்கீங்க.. (ஆமா நீங்கவந்தபிறகு நாங்கதான குழம்புவோம்..மறந்துட்டேன்)

விசு       ; எப்படிம்மா மறப்பேன்..மூன்றாவது நாள்ள 2வது நாள்னு சொல்லி ஒரு நொடி என்ன குழப்பினியே..அதன்பிறகும் தெளியலேன்னா எப்படிம்மா...??

காயத்ரி : உங்ககூட இவ்வளவு நாள் பேசி ஒரு நொடிகூட குழப்பலன்ன என்ன சார்..?? விடுங்க விடுங்க.  தூரிகை கண்டெடுக்கும் முத்துக்களை இன்னிக்கும் வலைச்சரத்துல நீங்கதான் அறிமுகப்படுத்தனும் .  ஏற்கனவே 2 நாள் சூட்டிங்னு வரல ..  நம்ம வலைச்சரத்து மலர்கள் உங்களைக் காணாம ஏமாந்துட்டாங்களாம். ஏதோ எனக்குத் தெரிந்த அளவு சமாளிச்சேன்..இருந்தாலும் உங்களமாதிரி ஆகுமா சார்...??! 

விசு       : ஏம்மா இன்னிக்கும் என்ன கூப்பிடற...??  பாவம் அவங்க கொஞ்சமாச்சும் அமைதியா இருக்கட்டுமே..!!

காயத்ரி :  அதெல்லாம் ஒன்னும் நினைக்கமாட்டாங்க சார்..உங்களப்பிடிக்காதவங்க இருக்குமா என்ன..(இன்னும் 2 நாள்தான அப்புறம் நிம்மதியா இருக்கட்டுமே..:)

விசு       : நீ இன்றைய பதிவர்களைப் பற்றி தயாரா வச்சிருக்கியா... ? சூட்டிங்கல இருந்து பாதில வந்திருக்கேன்.. முதல்ல யாரை அறிமுகப்படுத்தனும்..?

காயத்ரி : ஒரு வித்தியாசமான வலைப்பூ சார்...அங்க போனா ஒரு பள்ளிக்கு சென்றமாதிரி இருக்கும்.

விசு       : அப்படியா..எனக்கு ஏதும் பாடம் எடுத்து படிக்க சொல்லமாட்டாங்களே..முதல்ல விவரம் கொடும்மா. என்ன வம்புல மாட்டி விட்டுடாத.. 

காயத்ரி : அப்படியெல்லாம் ஆகாது சார்.. இதான் சார் அவர் பற்றிய விவரம். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த திரு.கான் அவர்கள் தாமறிந்த கணினி அனுபவம் அனைவருக்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தில் துவங்கியிருக்கும் தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்.. வலைப்பூவில் கணினியில் கோரல்ட்ராபோட்டோசாப் போன்ற மென்பொருட்களை பயன்படுத்தும் முறைபற்றி விவரமாக குறிப்பிட்டுள்ளார்.   அவற்றில் சில..நம் வலைச்சரத்தையும் அலங்கரிக்கட்டுமே.. கோரல் ட்ரா அறிமுகம்  நீங்களும் கோரல் ட்ரா தெரிந்துகொள்ளலாம்..போட்டோஷாப் பாடங்கள் போட்டோஷாப்பின் பாடங்கள் அனைத்தும் இங்கு பகிரப்பட்டுள்ளன.  கற்க ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த தளம் ஒரு வரம்.
விசு   : தான் அறிந்ததை  மற்றவர்களுக்கும் உபயோகப்படும் வகையில் தளத்தை அமைத்திருக்கும் தோழர் கானுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.  தங்களது இந்தச் சேவை தொடர்ந்து நடைபெற வேண்டுகிறேன்.

விசு       :  ரொம்ப நல்ல பயனுள்ள வலைத்தளம்மா.. அடுத்து யாரும்மா..??

காயத்ரி :  அடுத்தது திரு.விஷ்ணு அவர்களின் என் எழுத்தோவியம் என்ற வலைப்பூ சார்.  இங்க போனா பாத்துக்கிட்டே இருக்கவேண்டும் என்பதுபோல் தன் வலைப்பூவை அழகா அலங்கரிச்சதோட இல்லாமல் தன் அன்பு வார்த்தைகளினால் கவிதையினைப் பகிர்ந்திருக்கிறார். போய்ப் பார்த்துவிட்டு அவரை அறிமுகப்படுத்துங்க..

குவைத்தில் பொறியாளராக வேலைப்பார்க்கும் எளிமையும்அன்பும் உடைய நண்பர் விஷ்ணு   கவிதைபுகைப்படம் மற்றும் ஓவியம் இவைகள் அனைத்தும் படைக்கவும் பார்க்கவும் படிக்கவும் விருப்பமுடைய  இவர் தன்னுடைய  என் எழுத்தோவியங்கள்..   நிஜமாகும் நிழல்கள்.. போன்ற வலைப்பூக்களை தன் திறமையினால் அலங்கரித்து அசத்தியிருக்கிறார்.  எனது எண்ணங்கள்...
//ஆசைகள் எளிதாக கிடைக்கும்
சேர்க்காதே ... 
அதிகம் சேர்ந்துவிட்டால் 
செலவழிப்பது கடினம் ...
உன்னையே அழித்துவிடும் ...// மற்றும் ஊமை  என் கடிதம்என் கவிதைஎன் காதல்என் வருத்தம் என தன் அன்பையும்உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். 

விசு        : நீ கூறியதுபோலவே மிக அழகான வடிவமைப்பு.. அன்புவார்த்தைகள்னு சொன்னியே நிஜம்மா..இந்த காலத்துக்கு  அனைவரிடத்தும் அவசியம் இருக்கவேண்டியதும்மா. தோழர் விஷ்ணுவிற்கு  மனம்கனிந்த வாழ்த்துக்கள்.  தொடரட்டும் தங்கள் அன்புப்பகிர்வு. சரிம்மா அடுத்து நீ அறிமுகப்படுத்து.... நான் நீ மற்ற தளங்களைப் பார்வையிட்டு வரேன்மா..

காயத்ரி : சரி சார்...படிச்சிட்டு அப்படியே தூங்கிடாதீங்க..மற்றவர்களுக்கு கருத்திட்டு ஊக்கப்படுத்துங்க.. அறிமுகத்தின் நிறைவில் உங்க பாணில ஏதாவது ஒன்னு சொல்லிட்டுபோங்க( நான் அதுக்கு கவிதைன்னு பேர் வச்சிக்கிறேன்..)

ஷைலஜா அவர்களின் http://shylajan.blogspot.com/  நிகழ்வுகள்ஆண்டாள் எனும் பிரிவில் ஆண்டாள் பெருமாள் மீது கொண்ட காதலை அழகாக படத்துடன் பகிர்ந்துள்ளார்.  சிறுகதையான ஆராதனா..வில் அனைவரும் சிந்திக்கும் விதமாக திருநங்கைக்கு கிட்டும் அவமரியாதைப்பற்றிக் கூறியுள்ளார். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை இக்கதையில் எடுத்துக்காட்டியுள்ளார்.  திருநங்கையான ஆராதனா  வீட்டை விட்டு வெளியேறக் காரணமாயிருந்த பூஜாவிற்குக் காத்திருக்கும் அதிர்ச்சிதான்  என்ன...சென்று ஆராதனாவைப் படிப்போமா..?//ஆராதனாவும் இல்ல அவரோஹனாவும் இல்ல..நான் பூஜா ,உங்க தர்ம பத்தினி” என்று கிண்டலாய் எதிர்முனையில்குரல்வரவும் திவாகர் ஏமாற்றமுடன்,”நீயா?// ஷைலஜாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்கள் எழுத்துப்பணி என்றும் தொடர்ந்து வலைப்பூவிற்கு மணமூட்டட்டும்.

அமுதா முருகேசன் அவர்களின் மனசு.. இவற்றில் உணர்வுகள்கட்டுரைகவிதை எனப்பகிர்ந்துள்ளார். கவிதையில் உங்களுக்கு எப்போதும் பெண்வேண்டுமா..? உணர்ச்சிக்கொந்தளிப்பில் பொங்கியிருப்பது சற்று சிந்திக்கவும் வைக்கிறது.  உணர்வுகளில் அப்பாவிற்குப்பின்.... 

//அம்மாவிற்கு பின் அம்மாவைப் போல் மாறிவிடும் பல பெண்களுக்கு...........
அப்பாவிற்கு பின் அப்பாவின் கரங்கள் கிடைப்பதேயில்லை எப்போதும்!// இன்னும் இவர் அப்பா பற்றி என்ன கூறியிருக்கிறார் அவரது மனசில் இருக்கும் மற்ற பதிவுகளையும் கண்டு உணர்வோம்.

காயத்ரி : விசு சார்...படிச்சிட்டீங்களா..வாங்க உங்க வார்த்தைகளை அள்ளி வீசுங்க..

விசு    : நீ விடற மாதிரி இல்லியா..? 
கற்பிக்கப்பட்டதை
கற்பிக்கப்பட்டவாறே 
கற்றோமா..??
கற்றது 
கற்பிக்கப்பட்டதுதானா..
கற்றுக்கொள்ளப்பட வேண்டியதுதானா..?
கற்பிக்கப்படாததைக் கற்றாலும் 
கற்றது 
கற்க வேண்டியதுதானா..?
கற்கவேண்டியது 
கற்பிக்கப்பட்டாலும்
கற்கப்பட்டதா..?
கற்றது 
கற்பிக்கப்பட்டவாறே 
கற்கப்பட்டதா..?
கற்றது 
கற்றவாறே கடைபிடிக்கப்படுகிறதா..?
கற்பிப்பவர்கள் 
கற்றுக்கொடுத்துக்கொண்டேயிருக்க
கற்பவர்கள் 
கற்றும் கல்லாமலும்
கற்றதை உணர்ந்தும், உணர்ந்ததை உணர மறுத்தும்..
கற்பதும், கற்பிக்கப்படுவதும் தொடர்கிறது.. 
கற்றலின் தன்மை விளங்காமலேயே..!! 

காயத்ரி: மிக்க மகிழ்ச்சி சார்...ஏதோ நீங்க இப்படி ஒரு பதிவு போட்டு நம்ம தூரிகையில் வருகைதரும் மலர்கள் மட்டுமின்றி வலைச்சரத்தில் பூத்திருக்கும் மலர்களும் குழம்புவதில் ஒரு சந்தோசம்..சரி சார் நாளை சந்திப்போம். நன்றி சார்

விசு      : நாளைக்குமா..? பாவம்மா நானு..உன்மேல உள்ள கோவத்துல என்ன எதுவும் செய்திடமாட்டாங்களே..??

காயத்ரி  : சே சே அப்படியெல்லாம் இல்ல சார்..நம்ம வலைச்சர நண்பர்கள் மனம் பூப்போன்றது...எவ்வளவு நீங்க குழப்பினாலும் தெளிவா இருப்பாங்க..கவலையே படாதீங்க

விசு        : என்னமோம்மா நீ கொடுக்கும் தைரியத்துல வரேன்..நல்லது சந்திப்போம்.  அறிமுகமாகும் நண்பர்களுக்கு, அனைவரும் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து படைப்பாளிகளின் எழுத்துக்கள் எண்ணற்று வெளிவர தொடர்ந்து உடன் இருப்போம் தோழமைகளே.

அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி... _/\_
வாழ்க வளமுடன்... J

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது