07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label குழந்தைகளுக்கான வலைப்பூக்கள். Show all posts
Showing posts with label குழந்தைகளுக்கான வலைப்பூக்கள். Show all posts

Tuesday, May 6, 2014

சுட்டிக் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான வலைப்பூக்கள்

கொஞ்சும்  மழலையர் தம் 
சொல்லும் செயலுமே
கொண்டு  வருமே 
மனதிற்கு அளவிலா
உற்சாகம் தனையே !


அன்பு நண்பர்களே, 

      வணக்கம் !



சுட்டிக் குழந்தைகளின் ஒவ்வொரு  சிறு  நடவடிக்கையும், குறும்பையும் இரசிக்காத  பெற்றோர் உண்டோ ? குழந்தைகளின் குறும்புகள், அவர்தம் அறிவும், துடுக்குத் தனமும் நிறைந்த செயல்கள், அவர்களது திறன்களை பெற்றோர் பலரும் பகிர்ந்துள்ளனர். குழந்தைகளுக்கான நீதிக் கதைகள், சிறுவர் பாடல்கள்  பலவற்றையும் பதிவர்கள் பகிர்ந்துள்ளனர். அவற்றுள் சில வலைப்பூக்களையும், சின்னஞ்சிறு பிள்ளைகளின் கைவண்ணங்களையும் இன்று காணலாம்.

1. சிறு கிள்ளை தனது தந்தைக்கு எழுதிய  இரகசிய பிறந்தநாள் வாழ்த்து அட்டையை இங்கு பாருங்கள்.

சிறு குழந்தைகட்கு   சீட்டுக் கட்டின் உதவியுடன் கணிதம் கற்றுக் கொடுக்கும் உபாயத்தையும் நமக்கு விளக்குகிறார் பூந்தளிர் தளத்தில்  சகோதரி தியானா அவர்கள்.

2. நாற்றாங்கால் தளத்தில் சிறுவர்களுக்கான பாடல்கள் , நீதிக் கதைகள்,  தாலாட்டு பாடல்கள் , குழந்தைகளுக்கான போட்டித் தேர்வுகள் போன்ற பலவிதமான தகவல்களை தொகுத்து வழங்குகிரார் வலைப்பூவின் ஆசிரியர் விதூஷ்  அவர்கள். பார்த்து பயன் பெறுவோமே.

3. வெளிச்சக் கீற்றுகள் தளத்தில் சகோதரர். வெங்கட் நாகராஜ் அவர்கள், தனது மகள்  ரோஷ்ணி  வெங்கட் அவர்கள் வரைந்த கணினி ஓவியங்கள் மற்றும் வண்ண ஓவியங்களை பகிர்ந்துள்ளார்.

பாடப் புத்தகத்தில் உள்ள ஓர் காட்சியை எவ்வளவு அழகாய் கணினியில் வடித்துள்ளார் பாருங்களேன்.

4. தமிழ் அறிவுக் கதைகள் தளத்தில், சிறுவர்களுக்கான அறிவுக் கதைகள், திருக்குறள் கதைகள், தன்னம்பிக்கை கதைகள் போன்ற  சிறுவர்களுக்கான பல கதைகளை பகிர்ந்து வருகிறார் திரு. மாணிக்கம் நடேசன் அவர்கள்.

5. பாட்டி சொல்லும் கதைகள் வலைப்பூவில் திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்கள் தெனாலிராமன் கதைகள், நீதிக் கதைகள், பக்தி கதைகள், மகான்களின் கதைகள், திருக்குறள் கதைகள் பலவற்றை தொகுத்து வழங்கி வருகிறார்.

6. அம்மாக்களின் பகிர்வுகள்  தளத்தில், சிறு குழந்தைகளின்  பெற்றோர்கள் சிலர் ஓர் குழுமமாக இணைந்து, தங்களது  அனுபவங்கள், குழந்தைகளின் உணவு பழக்க முறைகள், கல்வி முறைகள், ஆரோக்கியம் என பலதரப்பட்ட பயனுள்ள செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.

7. பிள்ளைகள் அதிகநேரம் தொலைக்காட்சியின் முன் அமர்ந்துள்ளனரா ?  அப்படியானால் இந்தப் பதிவை அவசியம் படிக்கவும். பேரன்ட்ஸ் கிளப் வலைப்பூவில் பெற்றோர்களுக்கு ஓர் எச்சரிக்கை பதிவில் நண்பர் புதுகைத் தென்றல் அவர்கள் சொல்வதை பாருங்களேன்.

என்ன நண்பர்களே, இன்றைய பகிர்வுகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தனவா ? 

மீண்டும் நாளை சந்திப்போம்.


நன்றி !!!!
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது