07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label கோலங்கள். Show all posts
Showing posts with label கோலங்கள். Show all posts

Wednesday, May 7, 2014

கோலங்கள் ! கோலங்கள் !!

 எழில் தனைக் கூட்டுமே
தீவினைகள் தமை விரட்டுமே
சிந்தையதை கூர் தீட்டுமே
வாசல் தனை அலங்கரிக்குமே
சிற்றுயிரின் பசியையும் தீர்க்குமே
அரிசி மாக் கோலமே !



வணக்கம் நண்பர்களே !



           இன்று  அழகான கோலங்களை நம் கண்களுக்கு விருந்தாக்கும் சில பதிவர்களை பார்க்கலாம் .

கோலம்  நமது பண்பாட்டுச் செறிவின் வெளிப்பாடு. அரிசி மாவால் இடும் கோலம் எறும்புக்கும்,பறவைக்கும் உணவாகிறது.அறிவு விசாலம், நாகரிக விருத்தி, சோம்பலின்மை, மறதியின்மை, சூட்சமபுத்தி, முயற்சி, ஊக்கமுடமை, மனச்சோர்வின்மை போன்ற மனம் தொடர்பான செயல்பாடுகள் கோலம் போடுவதில் அடங்கியுள்ளன. 
(கோலம் குறித்த இச்செய்திகள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டன.) 

கோலம்  பற்றி  நமது  வலைப்பதிவர்களின் பதிவுகள் சிலவற்றை நாம் இன்று காணலாம்.

1. சகோதரி சசிகலா அவர்களின் கோலங்களை இங்கு காணலாம். வண்ண மயமான, கண்ணைக் கவரும் ரங்கோலிக் கோலங்கள்.  


2. காகிதத்தில் கிறுக்கியவை தளத்தில் சகோதரி ரதிதேவி அவர்கள் கணினியில் வரைந்த கோலங்கள் பலவற்றை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அழகான ரங்கோலிக் கோலம் நம் கண்ணைக் கவர்கிறது.

3. என் தமிழ் பக்கம் வலைப்பூவில் எழுதிவரும் சகோதரி ரேவதி சண்முகம் அவர்களது வண்ணமயில் கோலத்தினை ரசிக்கலாம் வாருங்கள்.

இவரது அழகான நெளிவுக் கோலங்களை இங்கு காணலாம்.

4. நல்லதோர் கருத்தினை வலியுறுத்தும் சகோதரி பவித்ரா நந்தகுமார் அவர்களது மாட்டுப் பொங்கல் கோலங்கள்.

 அழகான ஜல்லிக்கட்டு கோலம், இவரது ஓவியத் திறமைக்கு ஓர் சான்று.

5. ஊஞ்சல் தளத்தில் எழுதிவரும் சகோதரி ஞா. கலையரசி அவர்களது கைவண்ணத்தில்  அழகான கோலங்கள்.

இவரது கத்தரிகாய் கோலம்  அழகோ அழகு !

வண்ணப் பூக்களைக் கொட்டி வைத்தது போல மிளிரும் கோலங்கள் ... அருமை !

 இன்னும் சிலர் முகப் புத்தகத்தில்   கோலங்களுக்கென்று  தனி பக்கங்களை உருவாக்கி, தங்களது கோலங்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றுள் சிலவற்றையும் காணலாம்.

6. விருதுநகர் கோலம் என்ற பக்கத்தில் சகோதரி சாந்தி அவர்கள் வண்ணக் கோலங்கள் பலவற்றை பகிர்ந்துள்ளார்.

7. ராணி மாருதன் அவர்கள் தனது ராணி'ஸ் ரங்கோலி 
முகப் புத்தக பக்கத்தில் தனது  வண்ணக் கோலங்களை பகிர்ந்துள்ளார்.

8. தமிழ் கலாச்சார கோலங்கள் தளத்தில் செல்வம் மற்றும் எழில் செல்வம் ஆகியோர் கோலங்கள் பகிர்ந்து வருகின்றனர். தீபாவளி நோன்பு கோலம் 
மற்றும் அரியாங்குப்பம் பச்சைவழி அம்மன் கோவிலில் எடுத்த கோலங்களின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் பாருங்கள். 

9.  கோலங்கள் என்ற வலைப்பூவில் திருமதி. தேனம்மை  லஷ்மணன் அவர்கள் பல கோலங்களை பகிர்ந்திருக்கிறார். இவர் நம்மையும் " கோலமயில்களே ! கோலமிட வாருங்கள் ! "  என்று அன்புடன் அழைக்கிறார்.
பல பத்திரிகைகளிலும் இவரது கோலங்கள் வெளியாகின்றன.

இருதய கமல கோலம் போடுவதெப்படி என்று விளக்கியிருக்கிறார் பாருங்கள்.

வரலஷ்மி கோலம், விநாயகர் கோலம், கிருஷ்ணர் கோலம், கிராம தெய்வக் கோலங்கள், இராசிக் கோலங்கள், கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள் முருகன் கோலம் என்று பல வகையான கோலங்களையும் பகிர்ந்திருக்கிறார்.

10. முனைவர்  இரத்தின. புகழேந்தி அவர்கள் கோலம் போடும் முறை, சாணிப் பிள்ளையார், பரங்கிப்பூ, அரிசி மாக்கோலத்தின் மகத்துவம் என்று பல விஷயங்களை தனது பொங்கல் கோலம் பதிவில்  விளக்கியிருக்கிறார்.
 
என்ன நண்பர்களே, இன்றைய பதிவுகளை பார்த்தீர்களா ? பதிவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்போமே ! நாளை வேறோர் தலைப்பில் வேறு புதிய பதிவர்களை சந்திப்போம்.



நன்றி ! வணக்கம் !!
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது