07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சரம் 4. Show all posts
Showing posts with label சரம் 4. Show all posts

Thursday, June 7, 2012

இந்தப் பூக்களிலும் வாசம் உண்டு- சரம் 4


1.சில எதிர்மறைத் தலைப்புகள் நம்மைக் கவர்ந்து அதனை உடனே படிக்கத் தூண்டும். அந்த வகையில் அப்துல் வலைப்பதிவில் நான் படித்தது.குளோபல் வார்மிங் என்பதே பொய். என்ற பதிவு. உலகை அச்சுறுத்தி வரும் புவி வெப்பமயமாதலை .வேறு கோணத்தில் பார்க்கிறது இப் பதிவு. எய்ட்ஸ் பற்றிய இன்னொரு பதிவான ஓரினச்சேர்க்கை (Homosex) ‘எய்ட்ஸ்’ நோய் கடுமையாக பரவுகிறது ம் கவனிக்கத் தக்கது.

2. மௌனம்  பேசியதே வலைப்பூவில் ராஜராஜன் ராஜ மகேந்திரனின் புத்தகக் காதல் , சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள் ஆகியவை குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளது.

3. முத்துச்  சிதறல் வலைப்பதிவில் மனோ என்பவர் எழுதும் முத்தான பதிவுகளைக் காணலாம். அதில்  ஒன்று கிரிக்கெட்டும் நானும் சச்சினின் நூறும்!!. முக்கியமான விஷயம் பதிவர் மனோ ஒரு பெண் என்பதே.

4. கோபிகா அசோக்   உடல் நலம், ஆன்மிகம்,சமூகம் சார்ந்த பதிவுகள் எழுதி வருகிறார். அவரது வலைப்பூவில் நான் கண்ட  விவாகரத்தின் மறுபக்கம் சிந்திக்க வேண்டிய பதிவு. தள்ளிபோடாதீங்க கல்யாணத்தை என்ற பதிவும் உண்மைகளை சுட்டிக் காட்டுகிறது.

5. மதுரை அழகு வின்  பதிவுகளில் வடிவேலு - வைகைப் புயல் மீண்டும் வருமா? என்ற பதிவு நம்முடைய ஆதங்கத்தையும் எதிரொலிக்கிறது, தெங்குமரஹாடா - ஒரு சிலிர்ப்பான பயணம் . என்ற சிறிய பயணக் கட்டுரை அருமை.
பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும்  என்ற நூல் விமர்சனம் புத்தகத்தை படிக்கத் தூண்டுகிறது.

6. ஊஞ்சல்  கலையரசியின் செயல் வீரன் - ஒரு நிமிடக் கதை எளிமையான கதையாக இருந்தாலும் ஒரு நல்ல கருத்தை வலியுறுத்துகிறது. இன்னொரு கதையான தண்டனை  மிக அருமை.

7. என்.ராமதுரை அவர்கள் பயனுள்ள அறவியல் செய்திகளை தனது அறிவியல்புரம் வலைப்பூவில் எழுதிவருவது பாராட்டத் தக்கது. காக்கைகள் பற்றிய செய்திகளை  காக்கைக்கு உங்கள் குரல் தெரியும் என்ற பதிவு அழகாக எடுத்துரைக்கிறது. பணக்காரர்களின் மின்சாரம் என்ற பதிவில் சூரிய ஒளியிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தைப் பற்றி பல  தகவல்கள்  தெரிவிக்கப் பட்டுள்ளது.

8. பலே பிரபு  வலைப்பக்கத்தில் நான் படித்த சந்தோஷம் என்ன விலை? என்ற பதிவு பலே! போடவைக்கிறது. சந்தோசமாக இருக்கக் கூடாது என்பதையே சந்தோஷமா மாற்றிவிட்டோம் என்று முடித்திருப்பது அருமை.

9. பிரபல பதிவர் (வலைப்பதிவின் பெயர்) எழுதியுள்ள வாசகர் கடிதம் எழுதும் முறைகள் நல்ல நகைச்சுவைப் பதிவு.

10.அணு போஸ்ட் கார்ட் மேகசின் (ணு எழுத்துப் பிழை அல்ல) ஒரு வித்தியாசமான வலைப்பூ. அஞ்சலட்டையில் வெளியிடப்படும் மாதப் பத்திரிகை  இது. பக்கவாத நோயாளிகளுக்கு ஓர் புதிய நம்பிக்கை ஒளி! என்ற பதிவு புதிய மருத்துவ செய்தி.

11.சிறுவர்களுக்கென்று  இருக்கும் ஒரே வலைப்பதிவு சிறுவர் உலகம் மட்டும்தான் என்று நினக்கிறேன். இதில் நீதிக் கதைகள் எழுதும் காஞ்சனா ராதா கிருஷ்ணன் பாராட்டுக்குரியவர். அச்சம் கலந்த மரியாதை , என்ற கதை மிக அருமை

12.கோவை  ரவி அவர்களின் பாசப் பறவைகள்  தமிழ் திரை இசை ரசிகர்களுக்கான  வித்தியாசமான வலைபப்பதிவு. சென்று பாருங்கள் நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.


****************************************************************************************
வலைச்சரத்திற்கு வாருங்கள்! கருத்துக்களை அள்ளித் தாருங்கள்!
நாளையும் சரம் தொடுப்போம்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது