நகைச்சுவை மாலை-சரம் 5
மற்ற பதிவுகளை விட நகைச்சுவைப் பதிவுகளுக்கு என்றுமே வரவேற்பு உண்டு. மற்றவர்களை சிர்க்கவைப்பது என்பது சாதரானமான விஷயம் அல்ல. அப்பணியைச் செய்யும் ஒரு சில நகைச்சுவை பதிவுகளை அறிமுகப் படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நகைத்திறம் கொண்டால் நலக்குறைவு இல்லை
பகைத்திறம் என்றும் இவர்முன் பணிந்திடும்
ஈகையே கொண்டீர் குணமாக! தந்திடுவீர்!
வாகையே சூடிடவே வாழ்த்து,
என்ற வெண்பாவுடன் இன்றைய சரத்தை தொடங்குகிறேன்.
1. கிரிக்கெட் என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். கிரிக்கெட் வீரகளை கலாய்ப்பது தனி இன்பம் நம் பதிவர்களுக்கு. பி.எம்.சரணின் கோடை மழை இல் கேப்டன் தோணி படும் பாட்டை கேப்டன் தோனி :- போட்டோ டூன்ஸ்! பதிவில் படங்களாகப் பாருங்கள்.
2. டாக்டர் முருகானந்தம் கிளினிக் தன் பதிவில் தனது அனுபவங்களை சுவையாக-நகைச்சுவையாக விவரிக்கிறார். அதில் ஒன்று வழியெங்கும் கக்கூஸ் கட்டுவோம். . சிரிப்பதற்கு மட்டுமல்ல சிந்திக்கவும் தூண்டும் பதிவு இது.
3. மென்பொருள் பொறியாளரான ராம்குமார் தனது நெல்லை நண்பன் வலைப்பதிவில் எழுதிய பதிவு நான் சொன்னது தப்பா சார்? படித்து ரசித்து சிரிக்கலாம்.
4. இடிமுழக்கம் வலைப்பதிவில் நான் படித்த நகைச்சுவைப் பதிவு அறியாமைக்குள் புதைக்கப்படும் தப்புகள்.. இளமையில் நடந்த ஒரு நகைச்சுவை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது
5. தாய்க்கும் தாரத்திற்கும் இடையில் மாட்டிக்கொண்டு விழிக்கும் அப்பாவி இளைஞனைப் பற்றிய ,கோ.ராகவனின் செந்தில்நாதனும் செம்பருத்திப்பூ ஷாம்பும் என்ற கோ.ராகவன் பதிவு சிரிப்புக்கு உத்தரவாதம் தரும் பதிவு என்பதில் ஐயமில்லை.
6. நிலவன்பனின் வலைப்பதிவான நிலாப் பெண்ணுக்கு நகைச்சுவை நிரம்பிய வலைப்பூ. அவற்றில் நான் படித்து சிரித்த இரண்டு பதிவில் ஒன்று காதல் வசனம் காமெடி கலாய்த்தல் மற்றொன்று நேபாளம் அதள பாதாளம்!
7. நம்பள்கி நினைவுகள் வலைப்பூவில் பதிவிடப்பட்ட நகைச்சுவை பதிவு 1.கணவனை சந்தேகித்த மனைவி.
8. ஜெயலலிதா பிரதமரானால் என்ன நடக்கும் என்று ஜெ" பிரதமரானால்...!! பதிவில் நையாண்டியுடன் விளக்குகிறார் மதிபாலா
9. மணிமாறனின் மனதில் உறுதிவேண்டும் வலைப்பூவில் ஒரு பதிவு சிரிப்பா சிரிக்குது. படங்களும் அதற்குரிய கம்மென்ட் களும் சூப்பர்.இன்னொரு பதிவு ஆறு கோடியும் மூன்று உயிர்களும் மற்றும் நித்தியும் கடைசியில் நகைச்சுவை இணைக்கப்பட்டுள்ளது.
10. இனியவை கூறல் மூலம் சிரிக்கவைக்கும் கலாகுமாரனின் பதிவு சில ஜோக்ஸ் : படித்தவை
11.சிரிப்பு வருது வலைப்பூவில் குழந்தைக்ளுக்கேற்ற நகைச்சுவைக் கதைகள் உள்ளன. அதில் ஒன்று தொப்பை கரைச்சான் லேகியம் .
12. சிரிப்பு போலீஸ் வலைப்பூ நிச்சயமாக சிரிக்கவைக்கும்.அந்த சிரிப்பு போலீசின் தத்துவம் "உங்கள் மீது ஒருவன் செருப்பை எறிந்தால், பொறுமையாக இருங்கள், அவன் இன்னொரு செருப்பையும் வீசியதும் எடுத்துக் கொண்டு ஓடுங்கள், ங்கொய்யால வெறுங்கால்ல நடந்து போகட்டும்....!" குபீர் சிரிப்பை வரவழைக்கிறது. நூத்துக்கு நூறு பதிவை படித்து மனம் விட்டு சந்தோஷமா சிர்க்கலாம்.
13.இன்னொரு சிரிப்பு போலீஸ் வலைப்பதிவும் இருக்கிறது.(இது வேறு) தொலைக்காட்சி விளம்பரங்கள் பற்றிய சத்தியமா திருடப்பட்ட பதிவுகொஞ்சம் சிந்திக்கவும் வைக்கிறது.
14.சிரிப்பு -பேரில் மட்டும் னு சொன்னாலும் நன்றாகவே சிரிக்க வைக்கிறது ரசிகர் மன்றம் என்ற பதிவு
***************************************************************************************
வலைச்சரம் வலம்வர வாருங்கள்.தாராளமாக உங்கள் கருத்துக்களை தாருங்கள்.
நாளை: வாசம் குறையாப் பூக்கள்- சரம் 6
