07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சுயஅறிமுகம். Show all posts
Showing posts with label சுயஅறிமுகம். Show all posts

Monday, March 11, 2013

பெரு மகிழ்வுடன் சிறு அறிமுகம் ...

அன்பின் வலைச்சர , மற்றும் தமிழ் பதிவுலக நண்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள். எங்கோ, எப்படியோ இலக்கின்றி பொழுதை போக்கி கொண்டிருந்த என்னை, என்னின் துளி ஆர்வத்தைக் கண்டு எனக்கு, இளைய/இணைய தமிழின் பெருங்களமாகிய  பதிவுலகத்தை அறிமுகப் படுத்தி, இதுநாள் வரை கைப்பிடித்து வழி நடத்திச் செல்கிறார் எங்கள் மண்ணின் மைந்தர் திரு. கருணாகரசு, இப்படி தான் எனக்கு பதிவுலகின் முதல் அறிமுகம், அவரின் அந்த சிறு விதை இன்று எண்ணற்ற நட்புக்களை எனக்கு வழங்கி இருக்கிறது. 


புதுக்கணவன் மனைவி வீட்டுக்கு முதலில் செல்லுகையில் எந்த மாதிரி தயக்கத்தில், கூச்சத்தில் இருப்பாரோ அந்த அளவு தயக்கத்தில் இருந்த என் மன தயக்கத்தை உடைத்தெறிந்தது கடந்த வருடத்தில் சென்னையில் நடந்த பதிவர் மாநாடு. அனைவரிடமும் இயல்பாக பேசி கலக்க சந்தர்ப்பம் வழங்கிய நண்பர் குழுவினருக்கு நன்றியை தவிர்த்து சொல்ல வேறு எதுவும் வார்த்தைகளின்றி தவிக்கிறேன்.


மெத்தப் படித்தவனுமில்லை, தமிழின் பால் அதீத ஆர்வமுமில்லை. மொழியின் வீரியத்தை, அதன் தாக்கத்தை என்னுள் விதைத்தது சில நண்பர்களின் பேச்சும், அவர்களின் எழுத்தும். அதை பற்றி நாம் விரிவாக வரும் நாட்களில் காண்போம். சரி தோழமைகளே, வாருங்கள் நான் இதுவரை கிறுக்கிய மொத்த குப்பைகளில், தேறிய சிலதை பார்ப்போம். தவறுகள் இருக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து தயங்காமல் அடிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்பதை முன் கூட்டியே உங்களுக்கு நினைவு படுத்த கடமை பட்டுள்ளேன்.

எனது ஆரம்பால கவிதைகளை என்னாலே மீண்டும் படிக்க இயலாது என்பதால் உங்களை இம்சிக்க விருப்பமின்றி என்னால் அதிகம் இரசிக்க பட்ட சில பதிவுகளை உங்களுக்கு என் அறிமுகமாக வழங்க விழைகிறேன்! அதில் ஒன்று தான் தாயில்லா ஒரு பெண் குழந்தையின் ஏக்கம் அம்மா இல்லா வீடு என்ற கவிதையில் கிறுக்க முனைந்தேன்!

அடுத்து களவு போன கடவுள்வரலாறாகும் வாழ்வு என்ற இரு பதிவுகளையும் எழுத சற்று சிரமப்பட்டேன். எனக்குள் நிறைந்த மகிழ்வை தந்த பதிவுகளும் கூட.. ஊரைவிட்டு சென்னை நோக்கி நகருகையில் மனம் சற்று சந்தோசத்தில் திளைத்தது என்னவோ உண்மை தான், பிறகு இங்கு அடைப்பட்டு கொண்டதும் மீண்டும் மனக்குரங்கு ஊரை பற்றி சிந்திக்கையில் எழுத ஆரம்பித்தது தான் ஊர்ப்பேச்சு  எனும் தொடர்...

அடுத்து எங்களது மண்ணின் பெருமைகளை எடுத்துரைக்கும் விதமாக நான் எடுத்த சில படங்களை பகிர்ந்து கொண்டு வருகிறேன் ... அதையும் ஒரு எட்டு பார்த்துடுங்க .தோழமைகளே .. அடுத்து  சிதையும் கலைத்தமிழ் என்ற கிறுக்கலையும் கிறுக்கி உள்ளேன்.

பெரும்பாலானவர்களை சுழற்றிப் போடும் காதல் என்னையும் விட்டுவைக்கவில்லை, அதை மையப்படுத்தி சிலவற்றை புனைந்துள்ளேன். அவற்றுள் சில உங்களின் பார்வைக்கு 

செம்மண் தேவதை

அப்படியே உன்னையும்

சின்ன சின்ன ஆசைகள்

மேலும் இந்த வாய்ப்பை வழங்கி என்னை பெருமை படுத்திய திரு. சீனா அய்யா அவர்களுக்கும், என்னை இந்த வாரம் முழுதும் தொடரப் போகும் நண்பர்களாகிய உங்களுக்கும் இந்த கிராமத்தானின் உள்ளம் நிறை நன்றிகளும், வணக்கங்களும்....

நிறை மகிழ்வுடன், 

அரசன் 
உ. நா குடிக்காடு  


மேலும் வாசிக்க...

Monday, August 22, 2011

ஒரு பனிமலை எரிமலை ஆன கதை!

அனைவருக்கும் வணக்கம்!

பதிவெழுத வந்த புதிதில் நானும்  முட்டையை உடைத்து வர முயற்சி செய்யும் கோழிக்குஞ்சு போல பதிவுலகிற்கு என்னை வெளிச்சம் போட்டு காண்பிக்க முயற்சி செய்யும்போது முதன் முதலில் பன்னிகுட்டி ராமசாமியால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போது வந்த சந்தோசத்தை சொல்ல வார்த்தைகள இல்லை.. இன்று நானே அதே பணியை செய்ய வந்துள்ளேன் உங்கள் ஆதரவுடன் இதையும் வெற்றிகரமாக செய்வேன் என்ற நம்பிக்கையுடன்.. தொடருகிறேன்! இன்னும் என்னைப்பற்றி தெரியாதர்வர்களுக்காக இந்த சின்ன அறிமுகம்!



 
நான்தாங்க வைகை(ரொம்ப நல்லவன் இல்லை சத்தியமா), இப்பிடித்தான் என்னை அறிமுகப்படுத்திக்கனுமாம்! மண்டபத்துல சொல்லி   அனுப்பிச்சாங்க!


ஊர்ல கிராமத்து பொங்கல ஓசில தின்னுகிட்டு சும்மா வெட்டியா சுத்தி திரிஞ்ச பயங்க நான்! சரி.... எவ்வளவு நாள்தான் இப்படி வெட்டியாவே திரியிறது? அதான்.. ஒரு நல்ல நாளா பார்த்து அரசுப்பேருந்துல ஏறி நம்ம சின்ன டாகூட்டர்.. அதாங்க... நம்ம இளைய த(ருத)ளபதிய பேட்டியெடுக்க போனேன்! நான் போன நேரம் நம்ம மீனவர்களா ஸ்ரீலங்காகாரன் கொன்னு குவிச்ச நேரம்! அதனால நம்ம அணில்பதி என்காலில் விழுந்து கெஞ்சி அப்ப முதல்வரா இருந்த கலைஞருக்கு கடிதம் எழுத சொன்னாரு! 


அட.. கடிததுக்கே ஒரு கடிதமான்னு நினைச்சுகிட்டு.. முதல்வருக்கு அப்பாவியா ஒரு கடிதம் எழுதினேன்! எழுதி போஸ்ட் பண்ணிட்டு வெளில வந்தா சரியான மழை! மழைய பார்த்ததுமே எனக்கு பழைய மழைக்கால ஞாபங்கள் வந்துருச்சு! இருந்தாலும் கடமைன்னு ஒன்னு இருக்கே? அதான்.. என் மூன்றாவது கண் வழியா மழைய பார்த்துகிட்டே ஒரு இடத்துல ஒதுங்கினேன்! அட.. அது ஒரு டாஸ்மாக் பார்! அட.. அட..அரசாங்கமே ஊத்தி கொடுக்கிற கொடுமைய அங்கதான் பார்த்தேன்!


இப்படி தண்ணியடிச்சிட்டு போறவங்க எல்லாம் மனைவி பேசாமல் இருக்க என்ன பண்ணுவாங்கன்னு யோசிச்சிகிட்டே பக்கத்துல கொஞ்சம் நகர்ந்தா.... அங்க பல பிரபல பதிவர்கள் ஆலோசனை பண்ணிக்கிட்டு இருந்தாங்க! இது என்னடா வம்பா போச்சுன்னு இன்னும் கொஞ்ச தூரம் போனா... அங்க நம்ம பிரபல பதிவர்கள ஓட்டு கேட்க சொல்லி பயிற்சி கொடுத்திட்டு இருந்தாங்க! இந்த கொடுமைக்கு பேசாமசிறைச்சாலையில் உட்க்கார்ந்து நெஞ்சுக்கு நீதி எழுதலாம்னு  நினைப்பு வந்ததை தவிர்க்கமுடியவில்லை!


மழைல நனைஞ்சிகிட்டே ரோட்ல நடக்கும்போது பார்த்தா.. குழந்தைகளை ஆடு மாடு மாதிரி ஆட்டோவுல அடைச்சிகிட்டு போனத பார்த்தா இந்த அதிகாரிகளுக்கு எப்பதான் விழிப்பு வருமோன்னு தோனுச்சு! அப்படியே மனசுக்குள் நம்ம குழந்தைக்கு என்ன தரலாம்னு தோன்ற ஆரம்பித்தது! இந்த கொடுமையெல்லாம் மறந்திட்டு வீட்ல நிம்மதியா டிவி பார்க்கலாம்னு போட்டா.. சேனல்4 போட்ட வீடியோவ  பார்த்துட்டு இதயமே வெடிக்கிற மாதிரி ஆயிருச்சு! இதுக்கு காரணமான சிங்கிளா வராத சிங்கள நாய்கள திட்டிக்கிட்டே நம்ம உச்ச நடிகர்களின் உண்மை முகத்த பார்க்க ஆரம்பித்தேன்!


இதுதாங்க என் பதிவுலக வரலாறு! இதுல ஏதாவது தப்பு இருந்தா பதிவுலக நாட்டாமையே.... தீர்ப்ப கொஞ்சம் பார்த்து சொல்லுங்க!


இதெல்லாம் நீங்க கண்டிப்பா படிக்கணும்னு அவசியம் இல்லைங்க.. ஆனா படிச்சா நல்லாயிருக்கும்னுதான் சொல்றேன் :-))
 
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது