பகல் முழுவதும் வேலை முடித்து மேற்கு வாசல் மறைந்திடும்
பரிதியின் பசிக்கு உணவாக கடவுள் தரும் சோற்று உருண்டை நிலா!
கதை சொன்ன பாட்டி பிரபஞ்சத்தில் நட்சத்திரமானாளோ அல்லது
என்னுடைய மரபணுக்களில் ஒளிந்து மறைந்து வாழ்கின்றாளோ...
ஆனால் .....
இன்றைக்கும் நிலா மட்டும் தேய்வதும் வளர்வதுமாக வருகிறது.
எப்படி ஏமாந்திருக்கிறேன் பாருங்கள். சின்ன வயதில் நான் சற்று மக்கு குழந்தை போலும். ரொம்பவும் கேள்வி கேட்கமாட்டேன். ஆனால், சூரியனுக்கே உழைத்தால்தான் சாப்பாடு என்று உழைப்பின் முக்கியத்துவத்துவத்தை பாட்டி போதித்திருப்பது மட்டும் புரிகிறது.
இதோ கண்களை உறக்கத்திற்குள் ஆழ்த்தும் இரவு வந்துவிட்டது. நிலவின் வெளிச்சம் வெள்ளியை உருக்கி வார்த்ததுபோல உலகின் காட்சிகளை மாற்றிவிட்டன. இன்றைக்கு முழு நிலவு நாள் எனில் படகுத்துறைக்கு அழைத்துச்சென்றிருப்பேன். சுற்றிலும் முழுவதுமாக நீர் நிறைத்திருக்க பூமிக்கும் ஆகாயத்திற்கும் இடையே எந்த மறைப்பு இன்றி முழு நிலவை பார்ப்பது மனம் கவரும் காட்சியாகும். அப்படியே அன்பையும் பரிமாறிக் கொண்டு கைப்பிடி உருண்டையாக நிலாச்சோறும் சாப்பிடலாம்.

ரொம்பவும் பேச முடியாத நேரம் இரவு. ஏனெனில் மௌனம் மிக மெல்லிய கண்ணாடித்திரையாக படர்ந்திருக்கிறது. சிறு ஒலிகூட திரையை உடைத்துவிடும் அபாயமிருப்பதால், இங்கு மூச்சுக்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. அமைதியாக அருகிருப்பவர் மறந்து மனமாகிய மாற்று உலகிற்குள் உள் நோக்கி பயணித்தால்.... இன்றைய நிகழ்வுகள், அதன் தொடர்ச்சியாக நேற்று.. பிறகு அதற்கு முந்தைய நாள்... சில வேளை ஒரே கணத்தில் வருடங்களைக்கூட கடக்க முடியும். இது போன்ற காலப்பயணங்கள் மிக அவசியம். அது கடந்து போன தோல்விக்கு மயிலிறகு வருடல் தந்து ஆசுவாசப்படுத்தலாம் அல்லது செய்த தவறுகளுக்கு அக்னி குளியல் நடத்தி புடம் போடலாம். இந்த நேரத்து மந்திரம் - என்னிலிருந்து நான் பிரிந்து என்னை புரிந்து கொண்டு தவறுகளை திருத்த மீண்டும் நானாகினேன்.
இரவின் குறியீடுகளுள் முக்கியமான ஒன்று வயோதிகம் மற்றொன்று மரணம். இவை இரண்டுமே காலதேவனின் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டவை. வெகு சிலர் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு தயாராக இருப்பார்கள்.
நம்மை மார்பிலும் தோளிலும் சுமந்து கைப்பிடித்து நடத்தி உலகில் வாழத்தகுதியான உயிராக ஆக்கியவர்களுக்கு நாம் அன்பையும் ஆறுதலையும் தர வேண்டிய நேரம். உள்ளுறுப்புகளின் செயலாக்கக் குறைவு உடல்நலத்தையும் மனநலத்தையும் பாதிக்கும் நேரம். அவர்களை புரிந்து கொண்டு மகன்/மகளாக இல்லாமல் ஒரு தாதிக்குரிய பொறுப்புடன் கவனித்துக் கொள்வதே சரியான அணுகுமுறை என்பது என் கருத்து.
இன்றைய குறிப்புகள்: வயோதிகம், மென்மையான அன்பு, தனிமை, மரணம்.
1. மதிப்பிற்குரிய திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் வலைப்பூவில் இல்லறம் நல்லறமாகும் கருத்தை வலியுறுத்தி நிறைய அழகிய சிறுகதைகள் உள்ளன. குடும்பத்தின் பெரியோரின் மேன்மை மிக்க எண்ணங்களை போற்றும் இந்த சிறுகதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
முதிர்ந்த பார்வை
2. மதிப்பிற்குரிய புலவர்.சா.ராமாநுசம் அவர்களின் வலைப்பூவிலிருந்து வாழ்க்கையை திறனாய்வு செய்ய வைக்கும் கவிதை படியுங்கள்.
முடிந்தது வாழ்வுப் பாதையென...
3. முதியோருடன் பழகும் முறை பற்றி வேர்களைத் தேடி வலைப்பூவில் முனைவர்.இரா.குணசீலனின் பதிவை படியுங்கள். சங்கத்தமிழை சிறப்பிக்கும் சிறந்த வலைப்பூகளில் ஒன்று.
4. திருமதி. கீதாவின் வணக்கம் வலைப்பூவில், உள்ள இந்த பதிவு மனம் கலங்க வைக்கிறது .ஆனாலும் தாயை மகளாக பாவித்து சேவை செய்யும் மகளை நினைத்து பெருமிதம் கொள்கிறது. குழந்தையாக மாறிவிட்டாய் அம்மா.
5. கடம்பவனப்பூங்காவில், பாட்டியின் பாசத்திற்காக ஏங்கும் குழந்தையாக கவிதை தவிக்கிறது. தேவதையைத் தேடினேன்
6. ஆயுத எழுத்து திரு.ராஜகோபாலன் எழுதுவதை குறைத்து விட்டார். இந்த பதிவினை இப்போது படியுங்கள். அடுத்த பிறவி..
7. நண்பர் விச்சுவின் வலைப்பூவில் முதியோர் பற்றிய இந்த பதிவை படியுங்கள். பாசத்திற்கு ஏங்கும் பாட்டி
8. சகோதரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதரின் ஆச்சி ஆச்சி வலைப்ப்பூவில் முதியோர் இல்லங்கள் பற்றிய ஒரு பதிவு கவனத்தை ஈர்க்கிறது. முதியோர் இல்லங்கள்
9. கதம்ப உணர்வுகள் மஞ்சுபாஷினியின் வலைப்பூவில் இந்த கவிதை வாழ்க்கை பற்றிய மற்றொரு பார்வையை பதிகிறது. இருப்பேனா?? இறப்பேனா??. இது போல மற்ற கவிதைகளும் உணர்வுபூர்வமாக பதிவாகியுள்ளன.
10. வானம் தாண்டிய சிறகுகள் ஜீயின் வலைப்பூவில் வாழ்க்கை பற்றிய பார்வையை இந்த அருமையான கவிதை பதிக்கிறது. ஆடுகளம்!
11. இன்னுமொரு சிறுகதை அப்பாவி தங்கமணியின் வலைப்பூவிலிருந்து. அப்பாவி தங்கமணியின் வலைப்பூவை எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். மதுரையிலிருந்து சென்னை செல்லும் நான்குவழிச்சாலையில் சீரான வேகத்தில் செல்லும் மகிழுந்தில் பயணிப்பதைபோல நேரம் நழுவிச்சென்றுவிடும்.
என்னுயிர் நின்னதன்றோ.
12. நான் அறிமுகம் செய்யப்போகும் கடைசி வலைப்பூ இது. மகளிர் கடலில் கிட்டியது. இப்போது புதிதாக ஏதும் பதியப்படவில்லை. 'காலா என் அருகில் வாடா' என்று அறைக்கூவல் விடுத்த மீசைக்கவியின் காட்டம் தெரியும் இந்தக் கவிதையை படியுங்கள். பிரமிக்க வைத்த இந்த கவிதைக்காக மிக்க நன்றி கலகலப்பிரியா.
நத்தைக்குள்ளுறங்கும் தவளைகள்...
இப்போது விடைபெறும் நேரம்.
நான் கூறியது போலவே, திங்களன்று ஆரம்பித்த இந்த வாழ்க்கைப் பயணம், இனிமையான நண்பர்களின் துணையுடன் புனித யாத்திரையாகிவிட்டது. ஏராளமான வலைப்பூக்களை படித்தாலும் வலைச்சரத்தின் தலைப்பிற்கு பொருத்தமாக சிலவற்றை மட்டுமே தேர்ந்தெடுக்க முடிந்தது என்பதில் எனக்கு மிகுந்த வருத்தம் உண்டு.
இந்த பெரிய பொறுப்பை எனக்களித்த மதிப்பிற்குரிய திரு.சீனா ஐயா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை ஊக்கப்படுத்திய மதிப்பிற்குரிய திரு.வை.கோபால கிருஷ்ணன் அவர்களுக்கும், ஊக்கமூட்டி கருத்துக்களை பதிந்த மதிப்பிற்குரிய திரு.ரத்னவேல் ஐயா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நிலையிலும் இங்கு வந்து வாழ்த்தி கருத்து பதிந்த மதிப்பிற்குரிய புலவர் சா இராமாநுசம் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிதாக பள்ளிக்கு வந்த சிறுமியை புன்னகைத்து அழைத்து அருகில் அமர்த்தி பயம் விலக்கும் மூத்த மாணவர்களைப் போல் தங்கள் கருத்துரையின் மூலம் அபயம் தந்த மூத்த பதிவர்கள் - வல்லி சிம்ஹன் மேடம், மனோ சாமிநாதன் மேடம், ஆசியா மேடம், சகோதரி கோவைக்கவி, திரு.ரமணி சார், திருப்பூர். ஜோதிஜி., திரு.வெங்கட் நாகராஜ், சகோ.அமைதிச்சாரல், சகோ.ஷைலஜா, காஞ்சனா மேடம், திரு.எம்.கே.முருகானந்தம் ஆகியவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
அன்புத் தோழி ராஜேஸ்வரி, பிரியத்திற்குரிய ராஜி, கீதமஞ்சரி கீதா , மதுரகவி ரமாரவி, ஆச்சி ஆச்சி திருமதி.ஸ்ரீதர் ,குட்டி சுவர்க்கம் ஆமீனாஆகியோருக்கு என் அன்பை தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய தோழி பரிசு பெற்றால் கை குலுக்கி பாராட்டு தெரிவிப்பது போல தோழமையுடன் கருத்துக்களை பகிர்ந்த திரு.சண்முகவேல், சகோ..மகேந்திரன், திரு.சூரியஜீவா, திரு.சத்ரியன், தமிழ்வாசி பிரகாஷ், மதுரைத்தமிழன், திரு.கருன், திரு.நம்பிக்கை பாண்டியன், மாய உலகம் ராஜேஷ், தமிழ் உதயம் ரமேஷ், பிரபாதாமு, மிடில்கிளாஸ்மாதவி, சகோ.ரெவரி, பரிவை.குமார், முனைவர்.இரா.குணசீலன், அமைதி அப்பா, ராஜபாட்டை ராஜா, கவிப்பிரியன், விச்சு,எம்,ஆர், கோகுல், மதன்மணி, அரசன்,கல்பனா, பொன்மலர், ஆயிஷா அபுல், ஹேமா, நிஜாமுதீன், போளூர் தயாநிதி, தமிழ்க்காதலன், தங்கம் பழனி ,ஷீ-நிஷி.ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
வலைச்சரத்தில் வந்து வாழ்த்தி பாராட்டி ஊக்கப்படுத்திய அத்தனை நல் நெஞ்சங்களுக்கு என் இதயபூர்வமான நன்றியை தெரிவித்து வாழ்த்து கூறி விடை பெறுகிறேன். வணக்கம்.
 |
| இதயபூர்வமான நன்றி! |
மேலும் வாசிக்க...
வெளிச்சம் சென்றபின் பொதிகை தென்றல் கைவீசிட...
பகற்போதின் அலுக்கை மிக்க சுமைகளை கரைத்திட....
கண்களும் கண்களும் பேசிடலாம். களிப்பேருவகை எய்திட
மனதை தீண்டும் மணமிகு பூக்களுடன் வரும் அந்திமாலை.
வேலை முடிந்து வீடு திரும்பியாகிவிட்டது. உடை மாற்றி வாருங்கள். உங்களுக்காக இந்த இனிப்பு வகைகள் காத்திருக்கின்றன. இன்றைய மாலை நேரத்து அளவலாவலில் என்னையும் சேர்த்துக் கொள்வதற்குதான் இந்த இனிப்புகள்.
எனக்கு மிகவும் பிடித்த ஒரு விசயத்தை செய்யலாமா? என்னுடன் மாடிக்கு வாருங்கள். அதோ சூரியன் மறைந்து மேற்கில் வானம் நடத்தும் வண்ண வேடிக்கைகளை பாருங்கள். விடியலில் நடந்த அத்தனை நிகழ்வுகளும் இப்போதும் நடக்கும் - எதிர்மறையாக. மாலைக்குரிய கூடுதல் பெருமை வானவில். இப்போது மழை நேரம் என்பதால் அதோ அங்கே வானவில் தெரிகிறது பாருங்கள்.

இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகாவில் இரண்டு நாட்டு ராணுவ வீரர்களும் அவரவர் தேசக்கொடியை காலையில் மிகுந்த மரியாதையுடன் ஏற்றுவார்கள் அதேபோல் மாலையில் அவரவர் தேசக்கொடியை இறக்குவார்கள். அந்த சமயங்கள் ஒன்றுக்கொன்று சளைக்காததுபோல் இருக்கும். தேசியக்கொடிக்கு கிட்டும் மரியாதையை உளம் பூரித்து காண முடியும். காலையிலும் மாலையிலும் உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு இயற்கைத் தாய் நடத்தும் இந்த விழாக்கோலங்கள் எனக்கு அதனையே நினைவூட்டுகின்றன.
இத்தகைய அழகிய உணர்வுகள் இனிமையாக வெளிப்படுகின்றன. மெல்லிய குரலில் பாடலாம். அழகிய கவிதைகள் புனையலாம். எனக்கு வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்தின் கவிதைகள் மிகவும் பிடிக்கும். ஒரு மேகமாக தனிமையில் நான் அலைந்தேன் (I wandered lonely as a cloud) என்ற கவிதை நம்மை வானவெளிக்கே கொண்டு சென்று விடும். சிலருக்கு ஷெல்லியின் நினைவுகளும் வரும் - அதுதான் காதல் என்ற விளங்கமுடியாத விளக்க முடியாத உணர்வு. கண்டவர் விண்டிலர்... விண்டவர் கண்டிலர் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

சில விழாக்கள் மாலை நேரத்திற்கு பெருமை கூட்டுகின்றன. கேளிக்கைகளுக்கும் இப்போது முக்கியத்துவம் உண்டு.
மாலை என்றாலே புத்துணர்ச்சிதானே. ஒரு நாளைய நிகழ்வுகளின் தாக்கங்களின் பிடியில் இருந்து நம்மை முழுமையாக மீட்டெடுக்கும் புத்துணர்வு தருவது மாலைதான். குடும்பத்துடன் இனிமையாக நேரம் செலவிடுவதும், நண்பர்களுடன் மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வதும் என எத்தனை அழகான தருணம் இது.
மாலை மிகவும் ரம்மியமானது என்றாலும், மனித வாழ்க்கையின் ஒப்புமை பருவமாகிய மூத்தமகன் பருவம் மிகவும் கடுமையான காலக்கட்டம் ஆகும். முப்பது வயதிற்கு மேல் அறுபது வயதிற்குள். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானவற்றுடன் எதிர்காலத்திற்கும் சேர்க்க வேண்டும். தம்மை பார்த்துக் கொள்வதுடன் இளைய பருவத்திலிருக்கும் பிள்ளைகளையும் மூத்தவயதிலிருக்கும் பெற்றோரையும் பேண வேண்டும். கிட்டதட்ட முப்பது ஆண்டுகாலம் நீ...ண்ட பருவம். எனவே யாராவது உங்களிடம் "இன்று முதல் எனக்கு முப்பது வயது" என்று சொன்னால், பிறந்த நாள் வாழ்த்துக்களை சக்தி மிக்கதாக சொல்லுங்கள்.
 |
| இதை எடுத்துக் கொள்ளுங்கள் |
இன்றைய குறிப்புகள்: மாலை நேரம், உறவுகள், காதல், அன்பு, விழா கொண்டாட்டங்கள், புதிர்கள், கதைகள்.
1. மாலை வேளை என்றாலே இயல் இசை நாடகம் உண்டல்லவா? இதோ நாடகம் பற்றிய அருமையான பதிவினை மதிப்பிற்குரிய ஐயா திரு.ஜி.எம்.பாலசுப்ரமணியம் அவர்கள் பதிவிட்டுள்ளார். மெல்ல மறைந்து கொண்டிருக்கும் நாடகக்கலை பற்றி படியுங்கள். நான் போட்ட நாடகங்கள். ...
2. திருமதி.இராஜராஜேஸ்வரியின் மணிராஜ் வலைப்பூவில் கண்ணைக்கவரும் புகைப்படங்கள் தசரா கொண்டாட்டத்தை விழிகளுக்கு விருந்தாக்குகின்றன. தசரா கொண்டாட்டம் - பொதுவாகவே இந்த வலைப்பூவில் காட்சிப்பதிவுகள் மனதை கொள்ளை கொள்ளும்.
3. அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை சிவாவின் வலைப்பூவில் இந்த கவிதை படியுங்கள். விழிகளிலே ஒரு மயக்கம்...!
4. தோழி.பிரஷாவின் வலைப்பூவில் கிடைத்த இந்த கவிதை இனிமையாக இருக்கிறது மௌனம். ரோஜாப்பூ கவிதைகள் அழகாக இருக்கின்றன.
5. என் வார்த்தை .. என் குரல் .. என் முகம் .. வருணனின் வலைப்பூவில் அருமையான கவிதைகள் கிட்டுகின்றன. . - இதைப் படியுங்கள்
6. குட்டிக்குட்டி கவிதைகள் மட்டும் பதிவிடப்பட்டு வரும் வலைப்பூ பிரணவனின் சில மணித்துளிகள். ஏன் என்று இந்த கவிதையை படித்தாலே புரிந்துவிடும். என்றும் என் நினைவில்
7. அன்னை தமிழ் தமிழ் விரும்பியின் வலைப்பூவில் இந்த கவிதை அழகாக இருக்கிறது. உன்மத்தமாக இனி இங்கு யாருமில்லை
8. திரு.நம்பிக்கை பாண்டியனின் எண்ணங்கள் அழகானால் வலைப்பூவில் நீ படித்த கவிதைகள் . இந்த வலைப்பூவில் கவிதைகள் கடுகு மாதிரி. சிறியதாக இருந்தாலும் காரம் குறையாது.
9. நண்பர்கள் வலைப்பூவில் சிறுகதை ஒன்று படியுங்கள். விதியின் ரேகை.
10. திரு.கறுவல் அவர்களின் வலைப்பூவில் இந்த பதிவு சிந்திக்க வைக்கிறது. படித்து சிந்தியுங்கள். இறுதிக்கணங்கள்
11. உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு உறங்குமுன் கதை சொல்ல புத்தகத்தை தேட வேண்டாம். அதற்கு மதிப்பிற்குரிய காஞ்சனா மேடம் அவர்களின் கதைகள் உதவும். சிறுவர் உலகம்
12. இது மாலை மயக்கத்தில் சிக்காத இளையவர்களுக்கு. முத்தரசுவின் முத்தான தகவல்கள் வலைப்பூவில் கணிதப்புதிர்கள் உள்ளன. போட்டுப்பாருங்கள்.
மாலை நன்கு முடிந்தது. மீண்டும் இதம் தரும் இரவு பொழுதில் சந்திப்போம். நன்றி
மேலும் வாசிக்க...
உண்ட உணவு வயிற்றுக்குள் செல்லும் முன் மீண்டும் வேலை
சொற்பமான சப்தங்களுடன் மட்டும் ஒரு மௌன வேள்வி நடக்க
தொடங்கிய வேலை மாலைக்குள் முடியுமா என்ற கவலையும் சேர
நாழிகை வட்டத்தை வருடும் கண்களுடன் ஆயாசமிகும் சாயங்காலம்.
என்ன இதுவரைக்கும் நாள் நல்லபடியாக சென்றதா? சற்று சோர்வாக தோன்றுகிறதல்லவா? எனக்கும்தான். ஏனெனில் நம்முடைய முழு கவனத்தையும் முற்பகலில் செலவிடுவதால் ஒருவித அயர்ச்சி தோன்றும். முக்கியமாக கண்கள் சோர்வுற்றிருக்கும். சிந்திக்கும் வேகம் குறையும். உடல் சக்தியும் குறைந்துவிடுவதால் ..... என்ன நடக்கும்? சரிதான், பசிக்க ஆரம்பித்துவிடும்.
முன்னோர்கள் சொன்னதின்படி மதிய உணவு நிறைவு பெற்ற உணவாக இருக்க வேண்டும். உடலுக்குத் தேவையான எல்லா சத்தும் நிறைந்திருக்க வேண்டும். ஒருவேளை (முக்கியமாக பெண்களுக்கு) மதியத்திற்குமேல் ரொம்பவே சோர்வடைவதுபோல் தோன்றினால், உணவின் முடிவில் சில பழத்துண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உடனடியாக சீரணிக்கவும் புத்துணர்வு பெறவும் வைக்கும்.
 |
| சாப்பிடுங்கள். |
சூரியனின் பயணம் இறங்கு முகத்தில் இருப்பதால், சாயும் நேரம் என்பதையே சாயுங்காலம் என்று குறிப்பிட்டனர். வெயில் குறைந்திருந்தாலும் உச்சி வெயிலின் பாதிப்பு நமக்குள் சக்தியிழப்பை தந்துவிடும், இந்தியாவில் இது குறிப்பிடத்தக்கவிதமாக இருக்கும். உள்வாங்கும் திறன் குறைகிறது. நீங்கள் ஒரு கற்பிக்கும் பணியில் இருக்கிறீர்கள் எனில் இந்த நேரத்தில் புதிய பயிற்சிகள், பாடங்களை தொடங்காதீர்கள். என்னுடைய கருத்து என்ன என்றுதானே கேட்கிறீர்கள். இந்த நேரத்தில் கல்லூரியின் வகுப்பறைக்குள் சென்று கடினமான பொறியியல் தேற்றங்களை(algorithms) எடுப்பதைவிட சிங்கத்தின் வாய்க்குள் தலையைவிடலாம்.
மனோவியல் என்ன சொல்கிறது? மதிய உணவு முடித்தபின் பத்து நிமிடங்களுக்கு(மட்டும்) கோழித்தூக்கம் போட்டபின், முகம் கழுவி உடைகளை சீர் திருத்திக்கொள்ள வேண்டுமாம். கண்ணாடியில் கொஞ்சம் புத்துணர்ச்சியுடன் நாம் தெரிந்தாலும் உற்சாகம் பிறந்துவிடுமாம். சில தொழில் நிறுவனங்கள் இதை கடைபிடிக்கின்றன. பொருட்களின் தயாரிப்பில் நேரடித் தொடர்புடைய தொழிலாளர்களுக்கு இது போன்ற சிறு ஓய்வுகள் கொடுப்பது தயாரிப்பின் திறனை அதிகரிக்கிறதாம்.
மனித வாழ்வில் யௌவன பருவம். இல்லறம் ஆரம்பிக்கும் நேரம். புரிந்து கொள்ளுதலும் நெகிழ்ந்து போகுதலும்தான் இல்லறத்தின் விளக்கம் என்பது என் கருத்து.
சரி பெருமையாக சொல்வதற்கு எற்பாடு பற்றி எதுவுமே இல்லையா என்றுதானே கேட்கிறீர்கள்? இதோ இதுதான் சரியான சமயம். என்னுடன் வாருங்கள். தாழ்வாரத்தின் ஓரமாக சில நிமிடம் நிற்கலாம். இயலாதவர்கள் சன்னலோரமாகவும் வரலாம். கண்களை மூடி உணருங்கள்....
சிறு சிறு துளிகளாக மழைச்சாரல் பன்னீரை தெளிக்கிறதா? வெளியே இருக்கும் குளுமை உள்ளேயும் பரவியிருக்குமே!. விடியல் மழை மடிதுயில், காலை மழை வேலையை கெடுக்கும், முற்பகல் மழை கவனிக்கப்படாது, மாலை மழை இதம் தராது, இரவு மழை உறக்கம் தருவிக்கும். சாயுங்கால மழைதான் உயிர்ப்பிக்கும். விடுமுறை நாட்களில் நனைந்தாலும் பரவாயில்லை என்று நகைக்கும். இதனை மழையை ரசித்தபடியேதான் எழுதுகிறேன்.
மழையில் நனைந்தாகிவிட்டதா...! அப்படியே விடாமல் சூடாக இதைப் பருகுங்கள். எந்த தோஷமும் பிடிக்காது.
 |
| சுக்குமல்லி காபிதான்.... |
அப்படியே விட்ட வேலையையும் தொடருங்கள். முற்பகல் செய்த தவறுகள் ஏதாவது இருந்தால் திருத்திக் கொள்ளவும் நேரம் இருக்கிறது.
இன்றைய குறிப்புகள்: சிந்திக்கும் தருணம், இல்லறம், கொஞ்சம் கசந்துபோன நினைவுகள், மழை, செய்தவற்றின் விளைவுகளை சீர் தூக்கி பார்க்கும் நேரம்.
1. அமைதிச்சாரல் அவர்கள் வலைப்பூவில் அரைகுரையாய்போன கனவுகள் பற்றி சொல்கிறார். படியுங்கள். அரைகுறையாய்ப் போன கனவுகள்... பெண்களுக்குத் தேவையான செய்திகள் இவர் வலைப்பூவில் நிறைய இருக்கிறது.
2. ஒரு தந்தையாக மாறும் தருணம் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம். அதனை எத்தனை அழகாக பதிந்துள்ளார் திரு.சங்கவி. ரொம்பவும் பிடித்த பதிவு. - என் குழந்தையின் மழழைச் சத்தம்
3. இவர் அன்னைபூமியின் பங்களிப்பாளர். விளிம்பு நிலை வாழ்க்கை பற்றிய கவிதைகள் மனம் வலிக்க வைக்கும். சில கவிதைகளே பதியப்பட்டுள்ளன. மற்றவை தாளின் எழுத்துக்களாக மட்டுமே உள்ளன. ஆராய்ச்சி படிப்பு முடிந்தபின் தொடர்ந்து எழுத வேண்டும் என்று விரும்புகிறேன். சகா என்கிற சண்முகம். சாமி கொடுத்த வரம்.
4. இல்லறத்தினை நல்லறமாக்குவது குழந்தைகளே. புதிதாக நமக்கு நிறைய கற்றுத்தருகின்றன. வலிக்காமல் சுமக்க வைக்கின்றன. அவையே சுமையென்றாகும்போது... கரடிபொம்மை லாலியின் கவிதை, சுமையை அதிகரிக்கிறது. . யார் தொலைத்த கவிதை அவள்?
5. இதுவும் குழந்தை பற்றியதுதான். விளிம்பு நிலையில் வாழும் உழைப்பாளித்தாய் குழந்தைக்காக பாடும் பாட்டு. ஷி-நிஷியின் கவிதைகளில் அழகிய நடையில் வந்துள்ளது. தாய்ப்பாசம்
6. மிகவும் நுட்பமான உணர்வுகளை நான் எழுதுவதாக சொல்வார்கள். ஆனால் என்னுடைய வாக்கு கீதமஞ்சரிக்குத்தான். பெண்ணியல்பாய் வெளிப்படும் கவிதைகள் நிறைந்த கீதாவின் கீதமஞ்சரி வலைப்பூவில் அலையும் மனதிற்கு ஆதரவாய்….
7. நகர வாழ்வு நரக வாழ்வு என்று சில வேலைகளில் எனக்குத் தோன்றும். அதுவும் மின் தடை ஏற்படும் மதிய வேளைகளில் கவனித்துப் பாருங்கள். பார்பதற்கும் பேசுவதற்கும் ரசிப்பதற்கும் எதுவுமே இல்லாததுபோலத் தோன்றும். திரு.அரசனின் எழுத்துக்களில் இந்த ஆதங்கம் அதிகமாகவே வெளிப்படுகிறது. நகர வாழ்வு...
8. ஒரு தோல்வியை சந்தித்தாகிவிட்டது. அப்படியே விழ முடியாதல்லவா? எழ வேண்டுமே. அதற்குத்தேவை தன்னம்பிக்கை. கிராமத்துக்காக்கையின் வலைப்பூவில் இந்த பதிவை படியுங்கள். தன்னம்பிக்கையின் பக்கம் .
9. நான் இரசித்தவை... ரசிக்க வாருங்கள்... கல்பனாவின் வலைப்பூவில் இந்த கவிதை ஆதரவற்ற குழந்தையை பற்றி சிந்திக்கிறது. பதியம் போடாத விதை . இன்னும் பல கவிதைகள் அழகாக பதியப்பட்டுள்ளன.
10 குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்பை விளக்கும் கவிதையாய் ஒரு புகைப்படம் ஸ்டாலின் அவர்களின் எனதி ஆய்வகம் வலைப்பூவில் இருந்து....
11. திரு.நாகசுப்ரமணியத்தின் நதியில் விழுந்த இலை (தலைப்பே மிக அருமையாக இருக்கிறதல்லாவா?) வலைப்பூவிலிருந்து வாழ்க்கை பற்றிய கவிதையை படியுங்கள்.
12. மிக சில பதிவுகளே பதிவிட்டிருக்கும் அன்புதேவனின் வசந்தம் வலைப்பூவில் இந்த கவிதை சட்டென்று என் கவனத்தை ஈர்த்துவிட்டது.
சாமான்யன்
சரியாக சிந்தித்து செயல்பட்டால் எற்பாடு ஒரு எழுச்சியை தரும். இனி மனம் கவரும் (நாளை) மாலை சந்திப்போம். நன்றி.
மேலும் வாசிக்க...
சூரியனின் கதிர்கள் நுழைய முடியாத கூட்டத்துடன்
வெப்ப மூச்சையும் அலைப்பேசி ஓசையையும் சுமந்து
சாலைகளில் மெதுவாக ஊரும் பேருந்துகளிலிருந்து
பைகளில் உணவையும் நினைவுகளில் வேலையையும்
சேர்த்துக் கொண்டு அலுவலகத்திற்குள் புகுத்தும் பகல்.
வணக்கம். வெளியுலகம் நம்முடைய வருகைக்காக காத்திருக்கிறது. வாருங்கள் கடமைகளை ஆற்றத் தொடங்குவோம். வீட்டை விட்டு வந்து வெளியுலகை சந்திக்கும் நேரம். நண்பர்கள், சக ஊழியர்கள் ஆகியோர்களை புன்னகையுடன் எதிர் கொள்ளுங்கள். முக்கியமாக நேற்றைய கசப்பான உணர்வுகளை இன்றைக்கும் தொடராதீர்கள். அவை இன்றைய நாளை பாதிக்கலாம். மாலை வீட்டிற்கு செல்லும்போது மறுபடியும் இதையே சுமந்து செல்ல வேண்டி இருக்கும். காலை நேரம் உற்சாகமிகு நேரம். மூளைக்கு வேலை தரும் நேரம்.
 |
| அலுவலகம் செல்லும் நேரம் |
கல்லூரிக்குச் செல்லும் இந்த குமார பருவத்தில் வாழ்க்கைக்குத் தேவையான அடித்தளம் அமைக்கப்படும். "இப்போது நாம் கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு விசயமும்தான் பிற்காலத்தில் நாம் வாங்கப்போகும் மாத சம்பளத்தை நிர்ணயிக்கிறது" என்று என் மாணவர்களிடம் சொல்லுவேன். சிலர் வாழ்க்கை பாதை மாறி தோல்வியை சந்திப்பதும் இந்த பருவத்தில்தான்.
மனோவியல் என்ன சொல்கிறது?. யாரோ ஒரு தேவதை நமக்காக காத்திருக்கிறது என்ற உணர்வு வராதவரை கல்லூரிக்குள்ளோ அல்லது அலுவலகத்திற்குள்ளோ உற்சாகமாக செல்லத் தோன்றாதாம். தேவதையானது ஒரு வகுப்பறையில் கணித குறிப்புகளுடன் கரும்பலகையாகவோ, வேதியியல் திரவங்களாக குடுவையில் இருக்கலாம். கணிப்பொறி திரையில் நிரல்களாக மின்னலாம் அல்லது மேலாளர் கையில் சம்பள பட்டியலாக காத்திருக்கலாம், - அதன் பெயர் ஸ்வதர்மா(love what you do or do what you love)
வீட்டிலிருந்து வெகு தொலைவு பயணித்து புகையிலும் வாகன இரைச்சலிலும் மாராத்தான் நடத்துவது , குளிர்காலத்தில் பறவைகள் செய்யும் புலப்பெயர்வைவிட கடினமாக இருக்கிறதல்லவா?
அதென்ன மேசையின் மேல் ஒரு தாளில் குறிப்புகள். ஓ.. இன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகளின் செயல் திட்டமா? சில சமயம் இந்த குறிப்பு புத்தகத்தை பார்த்தாலே எனக்கு ஒரு கோப்பை தேநீர் அருந்தத் தோன்றும்.
 |
| எடுத்துக்குங்க! |
இன்றைய குறிப்புகள்:
செயல் திட்டங்கள், கல்லூரி வாழ்க்கை, அலுவலக நேரம், வேலை, குமார பருவம்., நண்பர்கள் , வேலைக்கு தேவையான திறமைகள்
1. கவிப்பிரியனின் வலைப்பூ கடித இலக்கியத்தை போற்றுகிறது. கடிதம் எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. இந்த கடிதத்தில் நம்பிக்கை பற்றி எழுதியிருக்கிறார். நம்பிக்கையோடு காத்திரு..
2. சகோதரர் சிசு அவர்களின் கூட்டாஞ்சோறு வலைப்பூவில் இந்த கடிதத்தை படியுங்கள். கல்லூரி வாழ்க்கை ஒரு காட்சியாக இருக்கும். அன்புள்ள தோழனுக்கு.
3. சகோதரர்.சண்முகம் அவர்களின் வலைப்பூ எப்போதும் சமூகம் பற்றிய சிந்தனையை வெவ்வேறு பரிமாணங்களில் தூண்டிவிடும். தனி மனித முன்னேற்றத்தை அக்கரையாக எடுத்துரைக்கும். இந்த பதிவை படியுங்கள். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிட்ட ஆங்கிலம் தேவை. ஆனால், ஆங்கிலம் பேச ஆசைப்பட்டும் முடியாமல் போவது ஏன்? .
4. திரு.கருன் அவர்களின் வேடந்தாங்கல் வலைப்பூவில் பல்சுவை பதிவுகள் நிறைய இருக்கின்றன. அக்கரையான ஆசிரியராக அவருடைய பதிவு சொல்கிறது. படியுங்கள். வெற்றி பெற தேவையான 5 குணங்கள் - அப்துல்கலாம்
5. தோள் தருவோம் தோழனே திரு..சூரியஜீவாவின் வலைப்பூவில் இந்த கவிதையை படியுங்கள். உழைப்பே வெற்றியின் ரகசியம்.
6. வாழ்க்கை வாழ்வதற்கே..! . கல்லூரி வாழ்க்கையென்றாலே காதலும் வரும். காதல் பற்றிய யதார்த்தமான ஒரு பதிவை பதிந்துள்ளார் பரிவை.சே.குமார் . படியுங்கள். இவருடைய பதிவில் படிக்கவும்,சிந்திக்கவும் சிறுகதைகள் நிறைய இருக்கின்றன.
7. அம்பாளடியாளின் வலைப்பூவில் வரும் பாட்டுக்களை வாய்விட்டு பாடமுடிகிறது -ஏதாவது ராகம் இணையாகிறது. இந்த அலுவலகம் செல்ல ஆரம்பிக்கும் புதுப்பெண்களுக்காக, சொன்னால் புரிஞ்சுக்கோ ....
8. படிப்பு , வேலை இதெல்லாம் எதற்காக? பணம் சம்பாதிக்கத்தான். இந்த வெள்ளிப்பணம் பற்றி மனவிழி சத்ரியன் சொல்வது நன்றாக உள்ளது. வெள்ளிப் பணம்
9. அப்பா எப்போதும் வாழ்க்கை பற்றி பேசுவார். கல்லூரியில் சேரும் முன், ஒரு நிமிடம் சிந்தியுங்கள் என்று அமைதி அப்பா சொல்வதை கவனியுங்கள்.
10. சமரசம் உலாவும் இடமே சர்வாகன் கணிதக்குறிப்புகளுடன் காத்திருக்கிறார் புதிய நடையில் கடினமான விசயங்களை விளக்கும் பயனுள்ள வலைப்பூ.
11 வரமாய் வந்த நட்பு ரேவாவின் கவிதைகள் வலைப்பூவில் நட்பு பற்றிய கவிதையை படியுங்கள்.
12. தொழில்நுட்ப பதிவுகளை கொண்ட வலைப்பூ பொன்மலருடையது. கணிப்பொறியின் தேவை அதிகரிக்கும் இந்த காலத்தில் நிறைய சந்தேகங்களும் எழும். இங்கே பதில் கிட்டும். மாதிரிக்கு ஒன்று இதோ... வைரஸ்களிடமிருந்து கணிணியின் பாதுகாப்பை அதிகமாக்க
சீக்கிரம் உங்கள் வேலைகளை ஆரம்பியுங்கள். நாம் (நாளை) உணவு இடைவேளையில் சந்திப்போம். நன்றி.
மேலும் வாசிக்க...
ஆதவனின் கிரணங்களின் வருடலில் ஆம்பல் மலர
வெள்ளி பட்டாடை எடுத்து பூமித்தாய் உடை மாற்றிட
இருள் திரை விலகிய அழகை காண மேகங்கள் உலா வர
வண்டினம் ரீங்காரிக்க இதோ வருகிறது புதிய காலை.
விடியலின் பின் புத்தொளியுடன் கூடிய காலை. பரிதியின் கதிர்கள் உலகத்தின் ரகசியத்தை மொத்தமாக வெளிச்சம் போட்டு காட்டிடும் காட்சி. இல்லை... இல்லை, இப்போது உலா போக அழைக்க மாட்டேன். காலையில் அலுவலகம் செல்லும் நேரத்தில் கடவுளே வந்தாலும் "சற்று பொறு" என்று சொல்கின்ற கர்மயோகிகளாக மாறிவிடுகிறோம். எனவே உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன். ஆனால்... உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலின் குளம் நிறைய தாமரைகள் மலர்ந்து பச்சையும் இளஞ்சிவப்புமாக உடை உடுத்தியிருப்பதை பார்த்தீர்களா என்று கேட்க மட்டும் நினைக்கிறேன்.
 |
| உங்களுக்காக ஒரு தாமரை மட்டும் |
இன்றைய நாளின் ஆரம்பம்... எத்தனை கடமைகள் காத்திருக்கின்றன. நேற்றைய இரவு நீங்கள் பட்டியலிட்ட செயல்களை ஆரம்பிக்கப் போகிறீர்கள். வெற்றிபெற வாழ்த்துக்கள். புதிதாக ஒரு செயல் செய்யப் போகிறீர்கள் எனில், அனுபவமிக்க பெரியோரின் ஆலோசனையையும் கேட்பது நல்லது என்று சொல்லியிருக்கிறார்கள். கூடவே, முயற்சி பலனளிக்க வேண்டுமே என்கிற பதட்டமும் இருக்கும். இன்றைய நாளுக்காக நம்மை தயார் செய்து கொள்ளும் சமயத்தில், மனதையும் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். பன்னாட்டு நிறுவனங்களின் தாக்கத்தில் உள்ள இந்த காலத்தில் குடும்ப பொறுப்பை பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. காலையில் பள்ளி வாகனம் வந்து குழந்தையை அழைத்துச் செல்லும்போது முழுமை பெறாத காலை உணவை முடித்துக் கொண்டிருப்போம். இதில் அலுவலம் செல்லும் பெண்கள் பத்து வேலைகளை பத்து சிந்தனைகளுடன் செய்ய வேண்டியிருக்கும்.
முன்பெல்லாம், பள்ளிக்கு மிதிவண்டியில் வைத்து அழைத்து செல்லும் தந்தைகளும் அவர்கள் கூறும் நல்ல கருத்துக்களும் இப்போது நினைவிற்கு வருகிறதல்லாவா? ஆமாம் அப்பாக்கள் மட்டும் ஏன் எப்போதுமே கதை கூறாமல் கருத்துக்களை மட்டும் கூறுகிறனர்? ஆனால் ஒன்று, மிதிவண்டி அழுத்தும் நேரத்திலேயே வாழ்க்கை பற்றி நிறைய சொல்லியே நம் மனதில் கதாநாயகனாகி விடுவார்கள். பாவம், இப்போதைய தந்தைக்கு இன்னும் பல சக்திகள் தேவைப்படுகின்றன.
மனோவியல் என்ன சொல்கிறது எனில், 80 சதவிகிதம் பேர் காலையில் வீட்டைவிட்டு கிளம்பும்போது வீட்டை ஒரு முறை பார்த்துவிட்டுதான் கிளம்புகிறார்களாம். நம்மை பொறுத்தவரை வீடு என்பது பாதுகாப்பான இடமாக இருக்கிறது. அதைவிட்டு கிளம்பும்போது மெல்லிய பதட்டம் வருகிறது. எனவேதான் வீட்டை விட்டுக் கிளம்பும்போது ஒரு அப்படி பார்க்கிறோமாம். எனவே பதட்டமடையாமல் திட்டமிடுங்கள்.
 |
| வீடும் பத்திரமாகத்தான் இருக்கிறது. |
காலை உணவு உடம்பிற்கும் மட்டுமல்ல சிந்திக்கும் திறனை தூண்டிவிடும் தன்மையுடையதாகவும் இருக்கிறது. மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை தூண்டும் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். அது என்ன தெரியுமா? பாரம்பரியமிக்க இட்லிதான் (இது சங்ககால உணவு வகை இல்லையாமே?) சிரித்த முகம் பல விசயங்களை சாதித்துக் காட்டும்.
இன்றைய குறிப்புகள்
முயற்சியின் துவக்கம், பிள்ளைப்பருவம், தந்தை, வெற்றியின் முனைப்புகள், வீடு ,
கல்வி
1. மதிப்பிற்குரிய திருமதி. மனோசாமிநாதனின் முத்துச்சிதறலில் பெண்ணை வாழ்த்தியனுப்பும் அழகுக் கவிதை, பெருமிதம் கொள்ள வைக்கிறது. புறப்படு பெண்ணே புவியசைக்க!
2. வாழ்க்கையின் தொடக்கத்தில் எப்படி வாழ வேண்டும் என்று தெரிந்து கொள்வது முக்கியமல்லவா? தீதும் நன்றும் பிறர் தர வாரா திரு.ரமணி அவர்களின் பதிவினை படித்தால் புரியும். வாழும் வகையறிந்து.....
3. மதிப்பிற்குரிய திரு.ரத்னவேல் ஐயா அவர்களின் வலைப்பூவில் இந்த பதிவு கல்வி பற்றிய விசயங்களை பகிர்கிறது. வாசிப்பின் முக்கியத்துவத்தை படியுங்கள்.
5. யதார்த்தமான நடையில் பெரும்பாலும் சிறுகதைகளே எழுதும் தமிழ்உதயம் அவர்கள், வீட்டின் மீது பிரியம் கொண்டு எழுதிய கவிதை. வீடு விற்பனைக்கு...
6. இந்த பதிவில் பிள்ளையின் பார்வையில் அப்பா எடுக்கும் பலவித அவதாரங்கள் பற்றி பதிந்துள்ளார் அவர்கள் உண்மைகள் மதுரை தமிழன். அறிவின் திறவு கோலான அப்பா என்ற அப்பாவித்தந்தை
7. கடமைகள் கழுத்தை பிடித்து தள்ளும் இந்த நேரத்தில் உழைப்பை பற்றி சொல்கிறார் மாய உலகம் ராஜேஸ். இந்த பதிவை படியுங்களேன். சும்மா நிற்காதீங்க...
8. வாழ்க்கையின் முன்னேற்றத்தை பற்றி நினைக்கும் இந்த வேளையில் அவற்றிற்கான தடைகளை அறிந்துகொள்வோமா? அன்பு உலகம் வலைப்பூவில் திரு.ரமேஷ் எழுதியிருக்கும் பதிவை படியுங்கள். நம் முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்.
9. மூச்சுவிடக் கூட முடியாதபடிக்கு கடமைகளால் கட்டுப்பட்டு, பேசுவதை குறைத்த பின் பேசுவதை கேட்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் பெண்ணின் மனச்சிதறல்கள் அச்சமூட்டும் அளவிற்கு வெளிப்பட்டுள்ளன. இதுதான் இன்றைய பெண்ணீயத்திற்கான பதிவு. ஹேமாவின் வலைப்பூவில் பாருங்கள். வார்த்தைகள்
10. பிள்ளை பருவத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் அனைத்தும் மதிப்பிற்குரிய. திருமதி.ருக்மணி சேஷசாயி அவர்களின் வலைப்பூவில் கிட்டுகின்றன். சிறு பிள்ளைகளை படிக்கச்சொல்லுங்கள். பாட்டி சொல்லும் கதைகள்
11. ஆழ்கடல் களஞ்சியம் என்ற வலைப்பூவில் குழந்தை வளர்ப்பு பற்றி பிரபா தாமு சொல்வதை படிக்கலாமா?. இந்த பதிவு மட்டும் அல்ல இந்த வலைப்பூவில் உடல் நலனில் அக்கரைமிக்க பல நல்ல பதிவுகள் உள்ளன.
12. வெற்றியின் ரகசியம் எண்ணம்தான். எண்ணம்தான் ஒரு செயலை சாதிக்க வைக்கிறது. என்கிறார் மதுரகவி ராம்வி எண்ணம் ...செயல்.
 |
| கிளம்பும் முன் காலை உணவை சாப்பிட மறக்காதீர்கள். |
இப்போது விடை பெறுகிறேன். மீண்டும் (நாளை) முயற்சி திருவினையாக்கும் முற்பகலில் உங்களை சந்திக்கிறேன். நன்றி
மேலும் வாசிக்க...
வெள்ளி முளைத்து பரிதியின் வருகைக்கு கட்டியம் கூற
தாய் பறவைகள் பிள்ளை வயிற்று பசிக்காய் பறந்திட
நேற்றைய பன்னீர் பூக்கள் மணம் வீசி உறக்கம் கலைய
கீழ் வானத்தின் சிவப்பில் புதிய கவிதை எழுதுவோம்.
இன்றைக்கு விடியலை பார்ப்போமா? உறக்கம் கலைத்து எழுந்திருங்கள். என்னுடன் வாருங்கள். தோட்டத்து பக்கம் ஒரு சிறுநடை பயிலுவோம். புற்களையும் அதை அண்டி வாழும் சிற்றுயிர்களையும் துயில் கலைக்காமல், நடை பாதையிலேயே செல்லுவோம். விடியல் இரவின் தொடர்ச்சி. இருள் இன்னும் நீடிக்கிறதல்லவா?. இதோ... சுத்தமான குளிர் காற்று நெஞ்சத்தை நிரப்பி கன்னத்தை வருடிச்செல்கிறது. மிக மென்மையாக... அம்மாவின் மெல்லிய கரங்களின் வருடல்கள் நினைவிற்கு வருகிறது.. அதோ சில பூக்கள் மலர காத்திருக்கின்றன. இந்த பன்னீர் மரத்தின் கீழே மட்டும் இரவில் மலர்ந்த பூக்கள் தரையில் உதிர்ந்து வெள்ளை போர்வை போர்த்தியிருக்கிறது - இருக்கட்டும்... பூமித்தாய்க்கு மட்டும் குளிராதா என்ன?. ஒரு பதில் மட்டும் சொல்லுங்களேன். குமரிப்பெண்ணின் காதில் ஆடும் முத்து தொங்கல் போல பன்னீர் பூக்கள் மட்டும் ஏன் தரை நோக்கி ரம்மியமாக ஆடுகின்றன?
சற்று நேரம் அமரலாமா? இங்கிருந்து அடிவானம் சூரியனின் வருகை கண்டு சிவக்க ஆரம்பிப்பது நன்றாக தெரிகிறதல்லவா? புற்கள் பொக்கிசமாக சுமக்கும் பனித்துளி ஆதவன் வந்தபின் தன் ரகசியம் உடைத்து சில்லென்று பனி நீரை தெளித்து மொட்டுக்களை மலர்விக்கும். பூக்கள் மலர்ந்து மணம் பரப்பும், தென்றல் வீசும், வானம் வர்ணஜாலம் பூசிக் கொள்ளும். தினம் தினம் நடக்கும் இத்தனை கொண்டாட்டங்களுக்கும் ஒரு பின்னனி இசை வேண்டாமா?
அங்கே தொலைவில் உள்ள ஒரு ஆல மரத்திலிருந்து பறவைகள் பறக்கும் ஓசையும், அவை இசைக்கும் கீச்சொலிகளும் யுகம் யுகமாக காலை நேரத்து பூபாளம் இசைக்கின்றனவே. அந்த இசைதான் இன்றைய நம்பிக்கையின் ஆரம்பம். ஆமாம்... அந்த பறவைகள் என்ன சொல்கின்றன? நேற்றைக்கு நம் பசியை தீர்த்த இறைவன் இன்றைக்கும் நம் வயிற்றுக்கு உணவு தருவான் என்பதுதான். நமக்கும் அப்படித்தான், விடியல் என்பது இன்றைய நம்பிக்கையின் ஆரம்பம் இன்றைக்கும் நல்லதே நடக்கட்டும் என்றோ அல்லது இன்றைக்காவது நல்லது நடக்கட்டும் என்றோ நம்பிக்கை துளிர்க்கும் நேரம்.

உங்களுக்குத் தெரியுமா இப்போது மட்டும் நான் தேவதையாகிவிட்டேன்!. தேவதை என்றால் வரம் தர வேண்டுமல்லாவா? உங்களுக்குப் பிடித்த ஐந்து நபர்களின் பெயர்களை சொல்லுங்கள். அவர்களுக்கு இன்றைக்கு நல்லது செய்வோம். அட... சொல்லி முடிக்கும் முன் சட்டென்று சொல்லி விட்டீர்கள். சரி, இப்போது தண்டிக்கவும் செய்யலாம். உங்களுக்கு பிடிக்காதவர்களின் பெயர்கள்...?. என்னது ஒன்றும் நினைவிற்கு வர மாட்டேன் என்கிறதா? ஒருவர் கூடவா இல்லை..!
ஒரு மனோவியல் ரகசியம் சொல்லவா... நமக்கு யாரிடமும் கோபம், வெறுப்பு ஆகியன இந்த நேரத்தில் வராது. அதுதான் குழந்தை மனதின் ஆளுமை. நல்லதே நாடும் மனம். யாருக்கும் தீங்கு செய்யாத எண்ணங்கள். இந்த சமயத்தில் வாழ்க்கையினை பற்றி சிந்தியுங்கள். நேற்றைய பிழையான குறிப்புகளை திருத்தி இன்றைக்கு ஒரு புது ஆரம்பம் கிட்டட்டும்.
இன்றைய குறிப்புகள்: நம்பிக்கை, குழந்தை, தாய்மை, ஒரு நல்ல ஆரம்பத்திற்கான அறிகுறி, சுத்தமான காற்று.
இப்போது பதிவுகளின் அறிமுகம்:
1. என் மகளாக நான் நினைக்கும் பதிவுல உறவு - கற்றலும் கேட்டலும் ராஜி சொல்வதை கேளுங்கள். மௌனத்தின் விடியல்
2. சிறந்த சங்கத்தமிழ் கவிதைகள் உலா வரும் வலைப்பூ வேதாவின் வலை, மதிப்பிற்குரிய கோவைக்கவி அவர்களின் விடியல் படியுங்கள்.
3. தமிழ்வாசி பிரகாசின் வலைப்பூவில் எப்போதாவது கவிதை வரும். இதோ நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஒரு கவிதை. விடியல் வருமா
4. மனம் தெளிந்தால்தான் மார்க்கம் கிட்டும். திரு.மகேந்திரனின் வசந்த மண்டபத்தில் தென்றெலென உலாவரும் தமிழ்கவிதைகளில் நம்பிக்கை பற்றிய கவிதையை படியுங்கள். அகமழித்து மீண்டுவா!!
5. அழகான வார்த்தைகளின் கோர்வையாக கவிச்சரம் கிட்டும், தமிழ் காதலனின் இதயச்சாரல் வலைப்பூவில் "விழிகள் தேடும் விடியலை
நாமும் தேடலாம் வாருங்கள்.
6. பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. ஆனால் சில கவிதைகளை சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி. இதோ கவிதை வீதியில் பூத்த குழந்தை பற்றிய அழகுக் கவிதை படியுங்கள். கவிதை வீதி...
7. தேடலும் தெளிதலும் புரிதலும் யாவர்க்கும் சிறப்பே. அருமையான தமிழில் சந்திரகௌரியின் வலைப்பூ. வலைப்பூவில் கண்ட கவிதை. அன்னைக்குப் பெருமை
8. இறையியல் படிப்பு மாணவியான மீனாவின்-எண்ணங்கள் வலைப்பூவில் உள்ள இந்த கவிதை மனதை குழந்தையாக்கி பாடுகிறது. இன்றைய சரத்திற்கான விளக்கங்களை எழுதியபின்தான் இந்த கவிதையை படித்தேன். மிகப் பொருத்தமாக இருக்கிறது. குழந்தை மனம்
9. அருமையான மருத்துவ குறிப்புகள் கொண்டிருக்கும் உங்களுக்காக வலைப்பூவில் கோபி.கே.அசோக். விடியலில் செய்யப்படும் மூச்சுப்பயிற்சிகள் எப்படி ஆரோக்கியத்தை உறுதிபடுத்துகின்றன என்பதை மூச்சில் முன்னூறு விஷயத்தில் சொல்கிறார்.
10. விடியலை பற்றி இன்னும் சில விசயங்கள் சொல்கிறார் திரு. தங்கம் பழனி கேளுங்களேன்.
11. புதிய வசந்தம் என்ற வலைப்பூவில் புரிந்துகொள்ளுங்கள் குழந்தைகள் சைக்காலஜி என்று ஆயிஷா பானு சொல்வதை படியுங்கள். இவர் குழந்தை வளர்ப்பு பற்றி அருமையான பதிவுகளை பதிகிறார்.
12. புன்னகையின் ரகசியத்தை கூறும் வலைப்பூவில் தனலட்சுமி நீயும் போதி மரமாவாய் என்று நம்பிக்கை வரிகளை கூறுகிறார். படித்து பாருங்களேன். விதை .
குளிர் காற்றை அனுபவித்துக் கொண்டே இதனை அருந்துங்கள். உற்சாகம் பிறக்கட்டும்.
உங்களுடன் இந்த விடியல் நேரம் இனிமையாக கழிந்தது நன்றி. நாளை (காலையில்) சந்திப்போம். நன்றி
மேலும் வாசிக்க...
வணக்கம். இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு வலைச்சரத்திற்கு ஆசிரியர் பொறுப்பினை ஏற்றுள்ளேன். இது என்னுடைய பதிவுலக வாழ்க்கையின் புதிய பரிமாணம் என்று கருதுகிறேன். இந்த பொறுப்பினை தந்த வலைச்சர ஆசிரியர் திரு.சீனா அய்யா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள ஊக்கமளித்த திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆரம்ப காலத்தில் தங்களின் அருமையான பின்னூட்டத்தினால் என்னை ஊக்குவித்த பதிவுலக நண்பர்கள் திரு.எல்.கே, திரு.கருண், திரு.மனோ, ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் அடிப்படையிலேயே ஒரு ஆசிரியர். கற்றுத்தருதல் என்கிற வார்த்தையைவிட தேவையானவற்றையும், புதியனவற்றையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதே ஆசிரியரின் பணி என்பதே என் கொள்கை. இங்கேயும் அதேதான், என்னையும் எனக்கு அறிமுகமான பதிவுகளை உங்களுக்கும் அறிமுகம் செய்கிறேன். இந்த அனுபவம் ஒரு காலை நேர நடைப்பயணமாக ஆரம்பித்து ஒரு புனிதமான யாத்திரையில் பங்கேற்ற அனுபவமாக முடியும் என்று நம்புகிறேன். முன்னதில் ஒரே ஒரு புன்னகையில் பல அறிமுகம் தொடங்கும், பின்னது நண்பர்களாக பரிணமித்த ஒரு குழுவின் வெற்றிப்புன்னகையுடன் நிறைவடையும்.
இந்த வார வலைச்சரத்தின் கருப்பொருள் : சிறு பொழுதுகள்.
சிறு பொழுதுகள்: ஒரு நாளானது ஆறு பகுதிகளாக பிரித்து அவை சிறு பொழுதுகள் என அழைக்கப்பட்டன. அவை பின்வருமாறு:
விடியல் அல்லது வைகறை - 2 முதல் 6 மணி வரை
காலை - 6 முதல் 10 மணி வரை
மதியம் அல்லது முற்பகல்- 10 முதல் 2 மணி வரை
ஏற்பாடு அல்லது சாயுங்காலம் - 2 முதல் 6 மணி வரை
மாலை அல்லது அந்தி - 6 முதல் 10 மணி வரை
இடையாமம் அல்லது இரவு - 10 முதல் 2 மணி வரை
சிறு பொழுதுகளை பற்றிய விளக்கமானது குறியீடுகளாக இலக்கியத்தில் கொள்ளப்படுகிறது. உதாரணமாக, ஒரு நாளின் பகுதிகளை மனித வாழ்க்கையின் பல்வேறு பருவங்களாகவும் கொள்ளலாம். இவையே வலைச்சரத்தில் சரம்சரமாக சேர்த்துக் கட்டப்படப்போகின்றன. வாருங்களேன். இன்றைய சிறு பொழுதுகளில் மகிழம்பூச்சரத்தில் பயணிப்போம். நாளை முதல் உங்களுடன் நான்.
விடியல் :
அன்றைய நம்பிக்கையின் ஆரம்பம்
குழந்தை பருவம் -பால பருவம். கருவிலிருந்தது முதல் பள்ளி செல்லும் பருவம் வரை.
பிறந்த குழந்தை முதலில் உணர்வது பசி. தேடுவது தாயை. இங்கு தாய்மைக்கு மதிப்பு மிக அதிகம். விடியலில் பசிக்குரல் எழுப்பும் குஞ்சுகளுக்காய் உணவு தேடி வரும் தாய் பறவையின் அறிவை சேர்த்து சொல்கிறேன் தாய்மை என்பது ஐந்து அறிவுகளுக்கும் உட்பட்ட மகத்துவம் உடையதுதான். ஒரு குழந்தை வளர்வதற்குள் தாய் 32 அவஸ்தைகளை அடைகிறாள் என்று வேதம் சொல்கிறது.
அன்றைய நம்பிக்கையை வெற்றிபெறவைக்கச் செய்யும் முனைப்புகள்.
பிள்ளைப்பருவம். பள்ளி செல்வது முதல் பதின் வயது வரையுள்ள பருவம்.
இந்த பருவம் குழந்தை தந்தையை கவனிக்கத் தொடங்கும் காலம். குழந்தைக்கும் தந்தைக்குமான உறவு தொடக்கமாகிறது. தாய்க்கும் குழந்தைக்குமான உறவு ஆரம்பம் முதல் கடைசி வரை அமைதியான நதியில் செல்லும் ஓடம் என்றால், தந்தையுடன் ஏற்படும் உறவு அடிக்கடி அலை வந்து அலைக்கழிக்கும் ஓடமாகிறது. தந்தை என்ற உறவின் முழு பரிமாணமும் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் விசுவரூபம் எடுத்து பிரமிக்க வைக்கும். இந்த கடிதத்தை படியுங்களேன்.
அஞ்சல் பெட்டியை சேராதவை.
முற்பகல் :
அன்றைய நாளின் செயல் திட்டங்களை செயல்படுத்தும் நேரம்.
குமார பருவம் - பதின் வயது முதல் திருமணம் ஆகும்வரை.
வாழ்க்கையை பற்றியும் முன்னேற்றத்தை பற்றியும் சிந்திக்கும் பருவம். மற்றவர்களை எடைபோட முனையும் தருணம். நட்பு, சகோரத்துவம் போன்ற மற்ற உறவுகளின் மேன்மையை உணரும் நேரம். வேலை,படிப்பு ஆகியவை கவனத்தில்வரும்.
உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்திற்கான உளவியல் தீர்வுதான் Emotional Intelligence. இது பற்றி விளக்குகிறது இந்தப் பதிவு உணர்வுகள் என்னும் ஆயுதம் -1. உணர்வுகளை சரியாக பிரயோகிக்க கற்றுக் கொண்டால் இனிய வாழ்க்கையின் அடித்தளம் அமையும். மனதின் பரிமாணங்களை உணர இந்த கட்டுரையினை படியுங்கள்.
மலரினும் மெல்லிய மனம்
சாயங்காலம் :
அன்றைக்கு செய்ய திட்டமிட்ட செயல்களின் செயலாக்கத்தினை திறனாய்வு செய்யும் நேரம்.
யௌவனம் அல்லது சம்சார பருவம். தனக்கென்று ஒரு குடும்பம் அமைத்து அதற்கு தலைவனாகும் தகுதியை பெற்றுக் கொள்ள விழையும் பருவம். வெற்றிகரமான இல்வாழ்க்கைக்கு அடித்தளமிடும் இந்த பருவத்தில்தான் மிகுந்த மனமாச்சரியங்களை உணர முடிகிறது. இல்லறத்தின் அடிப்படையை புரிந்து கொள்ள இந்த கட்டுரையினை படியுங்கள்.
ஆல் போல் ... அறுகு போல்...
மாலை அல்லது அந்தி நேரம்:
அன்றைய செயல்கள் வெற்றியோ அல்லது தோல்வியோ, அவை நம்மை பாதிக்காத வகையில் சக்தியூட்டிக் கொள்ளும் தருணம்.
மூத்தமகன் அல்லது பேரிளம் பருவம். முப்பதிலிருந்து அறுபது வயது வரை. ஒரு நிறைவான குடும்ப வாழ்க்கையின் முக்கியமான கட்டம். மற்ற பருவத்திலிருப்பவர்களுக்கு உதவும் பொறுப்பு மிக்க காலம். பிள்ளைகளுக்கு வாழ்க்கை அமைத்து தருவதும், வீட்டின் பெரியவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை அமைத்துத் தருவதும் இந்த வயதுள்ளோரின் கடமையாகிறது. பொறுப்புகளும் கவலைகளும் அதிகம் வரும் இந்த வயதில் ஒரு உறுதியான மன நிலை தேவைப்படுகிறது. உடல் நிலையை பொறுத்தவரை ஒரு அடுத்த கட்டத்திற்கு செல்லக்கூடிய மாற்றங்கள் நிகழும் நேரம். (சாமியாராகப் போகிறேன் என்று சிலர் குமுறும் நேரமும் இதுதான்). இந்த நேரத்து பிரச்சினைகளை சீர் செய்ய கீழ்வரும் கட்டுரைகள் உதவும்.
நிம்மதி என்றொரு தென்றல்
மணவிழா உண்மையான வெள்ளிவிழா காண.
இடையாமம்:
இருள் ஆரம்பித்து ஒரு நாளைய உழைப்பின் பலன்களை அனுபவிக்கும் நேரம்.
வயோதிக பருவம். அறுபது வயதிற்கு மேல். வாழ்க்கையின் நிறைவான கட்டம். இத்தனை நாளைய வாழ்க்கையின் பலனாக அமைதியும் அன்பும் சூழ இருக்க வேண்டிய தருணம். குழந்தைகளை கொண்டாடுபவன் மனிதனாவான் எனில், மனிதன் புனிதனாவது மூத்தவர்களை முக்கியமாக வயதான பெற்றோரை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்போதுதான். முதியோரின் பார்வையாக இந்த பதிவுகளை படியுங்கள்
மேலும் வாசிக்க...