07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label தி.தமிழ் இளங்கோ. Show all posts
Showing posts with label தி.தமிழ் இளங்கோ. Show all posts

Sunday, February 24, 2013

7. வலைச்சரம் ஏழாம் நாள்: நாள் என் செய்யும்?



இறைவனால் படைக்கப்பட்ட எல்லா நாளுமே நல்ல நாள்தான். இது நல்லநாள் இது கெட்டநாள் என்று எதை வைத்துச் சொல்வது? ஒவ்வொரு நாளும் ஒரு எதிர்பார்ப்போடு விடிகிறது. நாளும் ஒரு அனுபவத்தோடு முடிகிறது.


நாள் என் செய்யும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த
கோள் என் செய்யும் கொடும் கூற்று என்செயும் குமரேசன் இரு
தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும், எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
                        - குமரகுருபரர் (கந்தர் அலங்காரம்)

வலைப்பதிவு என்பது தனி உலகம். தொடர் ஓட்டம் ( Relay Race)  போல. எழுதிக் கொண்டே இருப்பவர்கள் ஒரு கால கட்டத்தில் நின்று விடுகிறார்கள். புதிதாக வருவர்கள் தொடர்கிறார்கள். இருந்தாலும் பதிவுக் கோப்பை வழிந்தபடியேதான் இருக்கிறது. தீருவதில்லை. எல்லா பதிவர்களையும் இங்கு என்னால் காட்ட இயலவில்லை. ஒவ்வொரு பதிவரைப் பற்றியும் ஒரு பதிவு போடலாம். ஆனால் அதற்கான நேரமும் இடமும் போதாது.

அண்மையில் தமிழ் மணம்  தமிழ் வலைப்பதிவுகளின் தர வரிசை (Traffic Rank) முழுப் பட்டியல் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் உள்ள முதல் நூறு பதிவுகளுக்கு மட்டும் அவற்றின் இணையதள முகவரிகளை இணைத்து ஒரே பதிவில் தொகுத்தேன். (நன்றி: தமிழ்மணம்) http://tthamizhelango.blogspot.com/2013/01/1-100-traffic-rank-2012.html அதில் 100 பதிவர்களை காணலாம்.

கடந்த ஒருவார காலம் வலைச்சரத்தில் என்னை உற்சாகப்படுத்திய, எனது பதிவுகளை விமர்சனம் செய்த அனைவருக்கும் நன்றி! மீண்டும் சந்திப்போம்!
இன்றைய  எனது அறிமுக வலைப்பதிவுகள்:

பதிவின் பெயர்: எஸ்.ராமகிருஷ்ணன்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. நான் படித்த அவரது ஒரு கட்டுரையை மட்டும் இங்கு சொல்ல வந்தேன்.

வாசிப்பு ஆசை அதிகம் உள்ளதால் நிறைய புத்தகங்களையும் வீட்டில் சேர்த்து வைக்கிறோம். நமக்குப் பின் இந்த புத்தகங்கள் கதி? நமது பிள்ளைகள் என்ன செய்யப் போகிறார்கள்? இதற்கு விடையாக இவரது இந்த பதிவு.

// புத்தகங்களைச் சேர்த்து வைப்பதால் ஒரு பயனுமில்லை, வீட்டில் உள்ள அலமாரி தான் அடைந்து போகிறது அதனால் படித்தவற்றைத் தூக்கி வெளியே போடுங்கள் என்று வீட்டோர் சொல்கிறார்கள், தூக்கி எறிய மனமில்லை, ஆனால் வைத்துக் கொள்ளவும் இடமில்லை , இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது,//


பதிவின் பெயர் : துளசிதளம்

” வீடு திரும்பல் மோகன் குமார் ”அவர்கள் துளசி-கோபால் அவர்களின் மணிவிழா சிறப்பு பதிவு  ஒன்றை  எழுதி இருந்தார்கள். அப்போது இவரது வலைத்தளம் சென்று படித்தேன். எனது கருத்துரைகள் எழுதியதில்லை.
மூத்த பதிவரின் மணிவிழா நிகழச்சியை அவரே (துளசி கோபால் அவர்களே) சொல்கிறார். பல பதிவர்களின் மகிழ்ச்சியை இங்கே காணலாம்.
பதிவின் பெயர் : SIVAPARKAVI 

சினிமா விமர்சனம் தொடங்கி பல பொது கட்டுரைகளைத் தந்துள்ளார். எனது பதிவு ஒன்றிற்கு இவர் தந்த கருத்துரை இது...

// கம்பெனி சீக்ரெட்ஸ்ன்னா…. இந்த பதிவுலகில் பெற்ற அனுபவங்களின் தொகுப்புதான் இந்தப் பதிவு // என்று தொடங்கி பதிவு உலகில் தனது அனுபவங்களைச் சொல்கிறார்.

பதிவின் பெயர் : கரிசக்காடு
http://udhayasankarwriter.blogspot.in  ( உதயசங்கர் )
இவர் கோவில்பட்டியைச் சேர்ந்தவர். சிந்தனையாளர். தான் சார்ந்த மண்ணைச் சார்ந்து தனது பதிவின் பெயரை வைத்துள்ளார். க.நா.சு.வும் சி.ஐ.ஏ.வும்
என்ற கட்டுரையில் க.நா.சுவின் இலக்கியப் பணி பற்றி பேசுகிறார்.

பதிவின் பெயர் : தமிழன் வீதி
http://tamilanveethi.blogspot.in ( தோழன் மபா )

மகேஷ் பாபு பத்மனாபன் என்ற தோழன் மபா அவர்கள்.  விளம்பர உலகம்!  மற்றும் கவிதை வீதி என்ற வலைப் பதிவுகளிலும் படைப்புகள் வருகின்றன.

மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்து மார்க்கத்தில் குத்தாலம் மற்றும்  மாதிரிமங்கலம் தாண்டினால்   வரும் திருவாலங்காடு இவரது ஊர். அந்த ஊரைப் பற்றி ஒரு பதிவு.


பதிவின் பெயர் : முனைவர் நா.இளங்கோ -மலையருவி

முனைவர் N.இளங்கோ. புதுவை தமிழ்ப் பேராசிரியர் இவர். தனது பதிவுகளில் தமிழ் இலக்கியம், புதுச்சேரி, மானிடவியல் என்று பல தலைப்புகளில் எழுதியுள்ளார். நாட்டுப்புறவியல் என்ற தலைப்பில் அவர் அளித்த ஆய்வுக் கட்டுரை....


பதிவின் பெயர் : இணையக் குயில்
http://duraidaniel.blogspot.in ( துரை டேனியல்)

தன்னைப் பற்றி “புதுமையை விரும்புபவன் பழமையை விட்டுவிடாதவன். ஏதோ மாறுதலுக்காக அல்ல உண்மையான மாற்றங்களுக்காக சிந்திப்பவன்” என்று சொல்லிக் கொள்ளும் இவர் இந்த பதிவில் பழமையையும் புதுமையையும் இணைத்து சிந்தித்து  எழுதிய சில குறிப்புகள்.
http://duraidaniel.blogspot.in/2012/10/blog-post_28.html




பதிவின் பெயர்: நினைவில் சில...கனவுகள்!
http://semmalai.blogspot.com  ( செம்மலை ஆகாஷ்)

இளம் பதிவரான இவர் சமையல்,அனுபவம்,தொழில் நுட்பம் என்று எழுதி வருகிறார். அவர் எழுதிய ஒரு பதிவு கீழே
 
 


http://kumarimainthan.blogspot.in  ( குமரிமைந்தன் )

நான் வலைப் பதிவுகளை படிக்க ஆரம்பித்த காலத்தில் இவரது உணர்ச்சிபூர்வமான கட்டுரைகளைப் படித்து இருக்கிறேன். குமரி மைந்தன் என்பவர் 1984 – இல் பொதுப்பணித் துறையில் இளநிலைப் பொறியாளராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.(See Profile) 2005 முதல் வலைப்பதிவாளர். இப்போது அவருக்கு நிச்சயம் வயது எண்பதை நெருங்கியிருக்கும். முதுமையின் காரணமாக இவர் இப்போது  2009 இற்குப் பிறகு அதிகம் எழுதவில்லை என்று நினைக்கிறேன்  மேலும் குமரிக் கண்ட அரசியல் என்ற வலைப்பூவும் இவருடையதே ஆகும்.

நமது நாடு முன்னேற முடியாமல் போனதற்கு காரணம் ”வருமான வரி விதிப்பு” முறையே காரணம் என்பதனை  வெற்றிடம் http://kumarimainthan.blogspot.in/2009/07/blog-post_05.html என்ற பதிவில் தெளிவாகக் காட்டுகிறார்.

குமரி மைந்தன் படைப்புகள் பலவும் ஆராய்ச்சி கண்ணோட்டத்தில் அமைந்தவை. குமரிக் கண்ட ஆய்வுகள், மதுரையை எரித்தது யார்?, ஓங்கலை(சுனாமி) போன்ற தலைப்புகளில் அவர் எழுதியவற்றைச் சொல்லலாம்.

பதிவின் பெயர் : ஸ்கூல் பையன்

பதிவின் முகப்பில் “ பேரு போட்டோ எல்லாம் பார்த்து என்னை சின்னப்பையன்னு நினைச்சிராதீங்க. இது எங்கப்பாவோட blog “ என்று ஒரு சிறிய அறிமுகம். பதிவுகளைவிட மற்றவர்கள் பதிவில் இவரது கருத்துரைகளை மட்டுமே காணமுடிகிறது. எனவே அண்மையில் இவர் எழுதிய ஸ்டார் ஹோடல் ஒன்றில் சாப்பிட்ட அனுபவத்தினை ” ஹோட்டல் - பார்க் ஷெரட்டன் ஹோட்டல்ஸ் & டவர்ஸ், சென்னை ” என்ற பதிவினையே இங்கு தெரிவு செய்கிறேன்.


இந்த பதிவர் தனக்கு இருக்கும் திறமைக்கு இன்னும் எழுதலாம். வாருங்கள்! வரவேற்கிறோம்1



பதிவின் பெயர் : Dondus dos and donts
http://dondu.blogspot.in (டோண்டு ராகவன் )

அண்மையில் மறைந்த வலைப்பதிவர் டோண்டு ராகவன் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் தனக்கு வந்த புற்றுநோய் பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளார். இதில் நோயின் தன்மை தெரிந்தும் தெளிவாக இருந்த அவரது மனவுறுதியைக் காணலாம்.
புற்றுநோய் பற்றி சில எண்ணங்கள்
http://dondu.blogspot.in/2012/10/blog-post.html

அந்த பதிவில் எனது கருத்துரையை எழுதி இருந்தேன்.சென்ற ஆண்டு திரைப் படம் - பத்து கட்டளைகள் (THE TEN COMMANDMENTS) என்று ஒரு பதிவு எழுதினேன். அப்போது அவர் எனது பதிவில் எழுதிய கருத்துரை:

dondu(#11168674346665545885) said... இப்படம் பற்றி நான் இட்ட பதிவைப் பார்க்க: http://dondu.blogspot.in/2010/09/blog-post_898.html அன்புட்ன், டோண்டு ராகவன்  3 October 2012 15:34

அன்னாருக்கு எனது கண்ணீர் அஞ்சலி!







மேலும் வாசிக்க...

Saturday, February 23, 2013

6. வலைச்சரம் ஆறாம் நாள்: வலைப் பதிவு ஒரு கலை



வலைப்பதிவைப் படிப்பதும் அதில் எழுதுவதும் இப்போது ஒரு சிறந்த பொழுது போக்கும் அம்சமாக மாறி வருகிறது. இப்போது அரசியலுக்கும் வலைப்பதிவு தேவைப் படுகிறது.. நான் வலைப்பதிவை ஒரு கலையாகவே காண்கிறேன். அதில்  பைத்தியம் கிடையாது. வலைப்பதிவர்கள் அனைவரும் அவரவர் வழியில் நன்றாகவே எழுதுகிறார்கள். படிக்கும் அனைத்துப் பதிவுகளுக்கும் கருத்துரை இட நேரம் இருப்பதில்லை. மாறிவரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப வலைப்பதிவும் மாறி வருகிறது. நமக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

இன்றைய  எனது அறிமுக வலைப்பதிவுகள்:

பதிவின் பெயர் : நாச்சியார்

திருமதி ரேவதி நரசிம்ஹன் என்ற வல்லிசிம்ஹன் அவர்கள்
” கண்டது, கேட்டது, நினைத்தது எல்லாம் இங்கே பதிவாகிறது. “ என்று எழுதி வருகிறார்.  நானும் ஒரு நட்சத்திரம் என்று http://naachiyaar.blogspot.in/2011/10/blog-post_17.html
தான் வலைப் பக்கம் வந்த கதையைச் சொல்லுகிறார்.

சென்ற ஆண்டு (2012) சென்னையில் நடைபெற்ற சென்னையில் நடைபெற்ற பதிவர் மாநாடு குறித்து இவர் எழுதிய பதிவு இது.
வெற்றிகரமாக நடந்த பதிவர் மாநாடு..நன்றி

பதிவின் பெயர் : ஹரணி பக்கங்கள்.......
 
தஞ்சை கரந்தை பேராசிரியர் ஒருவரின் பக்கங்கள் இவை. தனது தந்தையின் கவிதைகளை இங்கே மகன் தந்தைக்கு ஆற்றும் விதமாக இங்கே தந்துள்ளார். என் அப்பாவின் கவிதைகள்... http://thanjavur-harani.blogspot.in/2012/02/blog-post.html

 


பதிவின் பெயர் : சினிமாப் பாடல்கள் http://cinemapadalkal.blogspot.com (சந்த்ரவதனா)

இந்த பதிவில் சந்த்ரவதனா அவர்கள் பல தமிழ் திரைப் படப் பாடல்களை எழுத்து வடிவத்தில் தந்துள்ளார். சினிமா பாட்டு புத்தகம் போல படிக்கலாம்.
http://familytree-chandravathanaa.blogspot.in என்ற பதிவில் தனது குடும்பம் என்ற ஆலமரத்தின் மூல வேர்களைத் தொகுத்துள்ளார். இது ஒரு புதிய வழி காட்டலாகத் தெரிகிறது.

இவரது Profile – இல் இவருடைய பல வலைப் பதிவுகளைக் காண முடிகிறது.


பதிவின் பெயர் : R P ராஜநாயஹம்   http://rprajanayahem.blogspot.in

இவரது வலைத்தளம் உலக இலக்கியம், சங்கீதம்,உலக சினிமா, ஹாலிவுட் சினிமா, அரசியல், செக்சுவாலிட்டி, சுய அனுபவங்கள், போன்ற பன்முக விஷயங்கள் அடங்கியது. இவர் எழுதிய பதிவுகளை முழுதும் படித்தால்தான் நான் சொல்வதன் உண்மை தெரியும். நான் மாணவனாக இருந்த காலத்தில் கேள்விப்பட்ட தமிழ் சினிமா உலகின் செய்திகளையும் இலக்கியங்களைப் பற்றியும் எழுதி இருக்கிறார். எங்கள் ஊரில் இருந்த எம்.கே.தியாகராஜர் பற்றிய ஒரு பதிவு.

ஒருமுறை, திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் இருக்கும் எம் கே தியாகராஜ பாகவதர் அடக்கம் செய்து இருக்கும் சமாதியை காணச் சென்று இருக்கிறார். அந்த சமாதியானது அங்கு கழிவறையாக பயன்பட்டு வருவது கண்டு மனிதன் நொந்துவிட்டார். எம்.கே. தியாகராஜ பாகவதர் தங்கத் தட்டில் சாப்பிட்ட வாழ்வினையும் இப்போது அவரது சமாதி இருக்கும் நிலையினையும் எண்ணி ஒரு பதிவில் எழுதியுள்ளார்.



பதிவின் பெயர் : சட்டப் பார்வை
http://sattaparvai.blogspot.in  (அட்வகேட் P R ஜெயராஜன்) 
           
சேலம் அட்வகேட் P R ஜெயராஜன் அவர்கள் தனது பார்வையில் சட்டத்தைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் இங்கு பேசுகிறார்.
சேலம் பிறந்த கதை http://sattaparvai.blogspot.in/2010/05/blog-post.html என்ற பதிவில் சேலம் நகருக்கு அந்த பெயர் எப்படி வந்தது என்பதைச் சொல்லியுள்ளார். மேலும் மதனப் பெண் என்ற வலைப்பதிவு ஒன்றையும் எழுதி வருகிறார். இதில் முழுக்க முழுக்க குடும்பப் பிரச்சினைகளை முன்வைத்து பதிவுகள் தந்துள்ளார். 


பதிவின் பெயர் : சிட்டுக்குருவி 
http://vimalann.blogspot.in ( விமலன் )  

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா என்று தனது வலைபதிவில் ஏகப்பட்ட விஷயங்களை அள்ளி தருகிறார் விருதுநகரில் இருக்கும் விமலன் அவர்கள்.
சாரக்காத்து என்ற தலைப்பில் தனது சைக்கிள் கனவை அழகாக சொல்லுகிறார். http://vimalann.blogspot.in/2011/05/blog-post_24.html
//அனைத்து குடும்பங்களிலும் பங்கு வகிக்கும் ரத்தமும்,சதையுமற்ற ஓர் குடும்ப  உறுப்பினராக  இன்றளவும்  காட்சி   தருகிற  ஒரு   பொருளாயும், பயன்பாட்டிலுள்ள உயிர் திணைபோல் ஆகிப்போன எனது சைக்கிளின் பரிதாப நிலைபற்றி,,,,,,,,,  //


பதிவின் பெயர் : அவார்டா கொடுக்கறாங்க? http://awardakodukkaranga.wordpress.com


RV என்ற ராமஸ்வாமி வைத்தியனாதன் என்பவரும் அவரது நண்பர் பக்ஸ் என்பவரும் இணைந்து எழுதும் தளம். அன்றும் இன்றும், எம்ஜிஆர் பக்கம், சிவாஜி பக்கம், திரை உலக வரலாறு, 1950 - இலிருந்து என்று பழைய புதிய தமிழ் திரைப்பட விவரங்களை இந்த தளத்தில் காணலாம். இடையிடையே ஹாரி பாட்டர், ஸ்கைபால் என்று ஆங்கில படங்களைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மலரும் நினைவுகளாக பழைய தமிழ் படங்களை நினைப்பவர்கள் இந்த தளம் சென்று பார்க்கலாம்.



பதிவின் பெயர் : மதன்மணிஅன்பைத்தேடி.....
http://thamizhmagan.blogspot.com  ( த.மணிகண்டன்)

ஈரோட்டுக்காரர். தமிழ் இலக்கிய மாணவன். ( கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி.திருச்செங்கோடு ) இவர் தனது வலைப்பூவில் தமிழ் இலக்கிய மணம் கமழ எழுதுகிறார். மாணவர் என்பதால் இவர் அதிகம் வலைப்பக்கம் வருவதில்லை என்று நினைக்கிறேன். தனக்கு தமிழார்வம் ஊட்டிய தமிழாசிரியர்களைப் பற்றி தமிழ் தேடல் அதை நாடல் கண் பாடல் என்ற பதிவில் http://thamizhmagan.blogspot.in/2010/11/blog-post_25.html சொல்லுகிறார். இணையத்தோடு இணைந்து வாழுங்கள் என்று இவருக்கு வழிகாட்டியவர் வலைப்பதிவர் ” வேர்களைத் தேடி” முனைவர் இரா.குணசீலன் என்பதில் மிக்க மகிழ்ச்சி!

பதிவின் பெயர் : கவிதை வீதி...  
http://kavithaiveedhi.blogspot.com (சௌந்தர்)

இந்த வலைப் பதிவின் சொந்தக்காரர் கவிதைவீதி சௌந்தர் அவர்கள். இவர் கவிதை, கட்டுரை, அரசியல், அனுபவம் என்று வலைப் பதிவில் கலக்குகிறார். எம்ஜிஆர் பற்றிய தகவல்களை
என்ற பதிவில் காணலாம். 


மோகனன் என்பவர் நாட்டுப்புற, கிராமியப் பாடல்களையும், பழைய திரைப்பாடல்களையும் இங்கு தொகுத்து தந்துள்ளார். பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

”செவலக் காளை ரெண்டு பூட்டி” என்ற புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடலுக்கு முன்னுரையுடன் ஒலி வடிவில் தந்த பக்கம் இது: http://moganaraagam.blogspot.in/2011/06/blog-post.html

பதிவின் பெயர் : வல்லத்தான்...
http://duraigowtham.blogspot.in (துரை கௌதம்)

தஞ்சைக்கு அருகில் உள்ள வல்லம் என்ற ஊர்க்காரர். இவரது பதிவுகளில் அதிகம் இடம் பெறுவது சினிமா செய்திகள்தான் என்று நினைக்கிறேன். தஞ்சை நகரத்தைப் பற்றியும், அதன் அருகில் உள்ள தனது ஊர் வல்லம் பற்றியும் நிறைய தகவல்கள் தருகிறார். ஒரு பழைய தமிழ் திரைப்பட விமர்சனத்தை அமுத வள்ளி-1959 http://duraigowtham.blogspot.in/2012/06/1959.html என்ற பதிவில் படிக்கலாம். இந்த படத்தில் “ஆடைகட்டி வந்த நிலவோ” என்று கணீர் குரலில் பாடி நடித்தவர் டி ஆர் மகாலிங்கம்.

பதிவின் பெயர் : தமிழ்ஸ்டுடியோ

// இன்றைய நிலையில் ஒரு குறும்படம் எடுப்பது என்பது யாருக்கும் எட்டாக் கனியல்ல. // என்று குறும்படத்தைப் பற்றி பேசுகிறது இந்த தளம்.  தமிழில் குறும்பட ஆவணப் படங்களுக்கான அனைத்து விதமான தொழில்நுட்ப வசதிகள், படங்களை திரையிடல் போன்ற செய்திகளை இந்தத் தளத்தில் காணலாம்.

பதிவின் பெயர் : அன்புடன்

நான் எழுதியவையும் படித்து ரசித்தவையும் என்று, இந்த வலைத்தளத்தில் சினிமா, அரசியல் என்று தனது பார்வையை வீசுகிறார் வர்மா அவர்கள். திரைக்கு வராத செய்தி, தடம் மாறிய தமிழ்ப் படங்கள் என்று பழைய தமிழ் திரைப்படங்கள், கமல் ரஜினி கால சினிமா செய்திகளை காணலாம்.

நடிகை விஜயகுமாரி பற்றிய செய்திகள் கொண்ட இரண்டு பதிவுகள்:
தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 11 http://varmah.blogspot.in/2011/11/11.html
திரை உலகில் பறிக்கப்பட்ட கதைகள் http://varmah.blogspot.in/2011/12/blog-post_21.html



பதிவின் பெயர் : பாரதி பயிலகம் வலைப்பூ

http://www.bharathipayilagam.blogspot.in (தஞ்சாவூரான்)


சுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்களின் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ. பொதுத்துறை ஒன்றில் 38 ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வுபெற்றவர். தஞ்சாவூரான் என்ற பெயரில் எழுதி வருகிறார்.

கரிச்சான்குஞ்சு என்ற பழைய எழுத்தாளர் பற்றி ” இவருடைய தோற்றம் தலையில் குடுமி, வேதப் படிப்பு, நெற்றியில் பட்டை திருநீறு, சந்தனக் கீற்று, ஆனால் இவர் ஒரு கம்யூனிச சித்தாந்தவாதி.” – என்று அறிமுகம் செய்கிறார்.

கரிச்சான்குஞ்சு

உலக வரலாற்றில் நடந்த சம்பவங்களைப் பற்றி ஒரு கட்டுரை.
உலக சர்வாதிகாரிகளின் கோர முடிவுகள்



 





மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது