07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label தென்றல் சசிகலா வலைச்சரத்தில். Show all posts
Showing posts with label தென்றல் சசிகலா வலைச்சரத்தில். Show all posts

Monday, May 14, 2012

தென்றலின் அறிமுகம் ....!

வலைச்சர ஆசிரியராய் ஆன்றோரும் சான்றோரும் அழகாய் அமர்ந்த இடத்தினிலே எனக்கொரு அங்கீகாரம் தந்து அமர்த்திய தமிழ்வாசி பிரகாஷ், சீனா ஐயா உள்ளிட்ட வலைச்சரக் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்கி ....

   வாழ்த்துக்களால் வளர்கிறேன்.......வணங்கித் தொடர்கின்றேன் .

  தமிழ்த்தாயின் விரல்நுனிபற்றி,
   நடக்கப் பழகிய தென்றலின்று,
   இந்தியத்தாயின் பாதம் பணிந்து,
   பயணம்தொடர விரும்புகிறேன்!
   இந்தியராய்ப் பிறப்பதென்பது,
   இனிமையான ஓர் வரனென்பேன்,
   அதிலும் தமிழராய் ஜெனித்தல்,
   தரணியில் பெரும் பேரென்பேன்!

   இமயம்முதல் குமரிவரை,
   இதயங்கள் வாழ்ந்திருக்கும்,
   சொர்கபுரி பார்க்கின்றேன்-அதில்,
   நானுமொரு பாத்திரமாய்,
   உடன் வாழ வரம் பெற்றேன்.
    மனம் பாடும் பாட்டு இதுவே !
   என்னினிய உறவெல்லாம்,
   எனதருமை நட்புகளே!

   எதுவும் கொடுக்க என்னிடமில்லை,
   எதையும் நீங்கள் கேட்பதுமில்லை,
   அள்ளி,அள்ளித் தந்த அன்பை,
   இதயத்தில் வைத்து வணங்குகிறேன்!
   ஆராதனைப் பொருளாக-அதை,
   ஆராதிப்பேன் உயிருள்ளவரை!

   நேற்றுவரைப் பிறை நிலவு,
   இன்று வளர் பிறையாய்!
   பௌர்ணமியாய் வளர்கவென,
   வாழ்துகின்ற சுடரொளி உங்கள்,
   பாதம் தொழுது வளர்கின்றேன்,
   பயணத்தைத் தொடர்கின்றேன்!

   உங்களில் நானுமாகி!!
   மீன்குஞ்சாய் கடலில் நீந்தி,
   விண்மீனாய் வானில்பறந்து,
   கார்முகிலாய் கவிதைபாடி,
   காற்றாகி ,தென்றலாகி,
   ஊற்றாகி தாகம் தீர்த்து
   இந்தியத்தாயின் மடியினலே,
   தமிழாய் மடியவேண்டும்.
   அழைப்பு வரும்வரையில்,
   எழுதும் என் எழுதுகோல்!
   நீதிக்காய்-அநீதியெதிர்த்து!

   தமிழுக்காய்-குரலை உயர்த்தி,
   அன்புக்காய்-தலைவணங்கி,
   உண்மைக்காய்-போராடி,
   அறிவுக்காய்-அறியாமைஅகற்றி,
   நட்புக்காய் -விட்டுக்கொடுத்து,
   ஆத்மாவுக்காய்-ஆறுதல்பாடி,
   இல்லார்காய்-நாழும் அழுது,
  தொடரும்  பயணமதை!
   உங்கள் வாழ்த்தோடு!தொடர்கிறேன் முடிந்தமட்டில் ...

கிராமத்தில் பிறந்து , வளர்ந்து ஓடியாடி நகரம் வரும்வரை சேர்த்து வைத்த பார்வைகளை கவிதைகளாய்ப் புனைந்து கதையும் சொல்லி தென்றலாய் உருமாறி எழுதிய பதிவிங்கே .
இயந்திர வாழ்வணிந்து உண்மை வாழ்வில் நிம்மதியும், உறவும் தொலைத்து, ஓடுகின்ற ஓட்டத்தில் இழப்புகள் ஆயிரம் என்பதை  உணர்த்தும் ,பகிர்வு . 
மனம் நினைப்பதையெல்லாம்  எல்லோரோடும் பகிர்ந்து விட முடியாமல் தவிக்கின்ற தவிப்புகளும் , ஆசையோட்டதில் விளைந்த தப்பு விதை.
விட்டுக்கொடுப்பது என்பது வீட்டைக் கட்டிக் காப்பது போல், எடுக்க எடுக்கச் சுரக்கின்ற நீர் ஊற்று கொடுப்பதைப் போல் நாமும் விட்டுக் கொடுத்து வாழ்தல்  நலம் .

கதை எழுத வருமா ? வராதா ? மனம் ஐயம் கொண்டாலும் எழுதித்தான் பார்ப்போமே என்று எழுதிய முதல் கதை .

மனதினில் தீமையணிந்து நல்லார் போல் வேடமிட்டு, பொல்லாங்கைக் களையப் போகும் பொல்லாரிடம் நீ என்ன யோக்கியனா எனக் கேட்கும் மனச்சாட்சி .

இயற்கையை சுயலாபத்துக்காய் உருமாற்றத் துடிக்கும் மனித இனம் ,நாளையை அழித்து, எதிர்காலத்திற்கு முடிவெழுதும் முயற்சியில் .

திக்குத் தெரியாமல்; வாய்ப்புகளுக்காய் தட்ட வேண்டிய வாசல் புரியாமல் ஓடி மாய்ந்து ஆயரமாயிரம் எழுத்தாளர்கள் அலைந்து திரிகையிலே ,வழிகாட்டியாய் வந்த வசந்த மண்டபம் திரு .மகேந்திரன் அண்ணா அவர்களுக்கும் , வலைச்சரத்தில் முதல்  முதலாக அறிமுகப்படுத்திய திரு . மதுமதி அவர்களுக்கும் மற்ற அன்பு நெஞ்சங்களுக்கும் , தொடர்ந்து எனது பதிவுகளுக்கு வருகை தந்து கருத்துக்களால் எனை ஊக்கப் படுத்தும் சக தோழமைகளுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்து இன்று விடை பெறுகிறேன் ... நாளை சந்திப்போம்!
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது