நல்முத்துக்கள் - நான்காம் நாளில்
நான்காம் நாள் நல்முத்துக்களுடன் வலைச்சரத்தில் வலம் வந்து வணக்கங்களுடன் பதிவுடன் கூடிய பதிவர்களைப்பார்ப்போம்.
சமீபத்தில் ஒரு நாள், ஒரு ஷாப்பிங் முடித்து செம தாகம் பீறிட , அப்போது தான் அந்த வரலாற்று பிழையை செய்தார் என் கணவர். தெரியாத்தனமாக ..அருகிலிருந்த ஒரு நார்த் இண்டியன் ரெஸ்டாரண்ட்க்கு அழைத்துப்போக.. பக்கத்து டேபிளில் இருந்தப்பெண் ஒய்யாரமாய் பலூடா - falooda ஆர்டர் செய்து சாப்பிட்டபடி இருக்க..மெனு கார்டை அலட்சியப்படுத்தி ஸ்ட்ரெயிட்டா ஒரு பலூடா என்றேன் !
என்னவருக்கு ஆச்சார்யத்தில் ,கண்கள் பக்கத்திலிருந்த அரேபியன் gulf ஐ தொட்டு வந்தன. பின்ன ஐஸ்கிரீம் ஐ அவாய்ட் செய்பவள் , எத்தனை யோ முறை அவரது சாய்ஸ்ஐ நிராகரித்தவள் கேட்டதும் , சிரித்தப்படியே ஆர்டர் செய்து சாப்பிட்டும் முடித்து , வீடு திரும்பும் வரையில் ..ஓ..இத்தனை டேஸ்டா பலூடா..சே இத்தனை நாள் மிஸ் பண்ணிட்டோமே என்ற குற்ற உணர்வில் கொஞ்சம் புழுங்கித்தான் போனேன்..(ம்க்கும் !! ரொம்ப முக்யம் ந்னு தானே நினைக்கறீங்க :D )
அதிலிருந்து .. எதாவது சாப்பிடறியா என்றால் பலூடா தான் ! பல ரெஸ்டாரண்ட்ல் முயற்சித்தும் தேடலும் சுவையும் அடங்குவேனா என்றது..எங்கெங்கே பலூடா ஆர்டர் செய்யக்கூடாதென்று உணர்ந்தேன் ! கடைசியாக ஓரிடத்தில் மிகவும் சிலாகித்து சாப்பிட்டபோது பையன் , "இப்ப எதுக்குப்பா பலூடா ஸ்பெஷலா அம்மாக்கு/ " என்றான்..அவரோ " புதுக்கார் வாங்கினதுக்கு ட்ரீட் கேட்டா ! அதான் " என்றதும்.. " கார் வாங்கி செலவு செய்தவங்களை மேலும் செலவாளியாக்கி ட்ரீட் கேக்கலாமா ! " என்றான்..அதற்கும் இவரும் , " ஆமா..நம் கல்ச்சரில் கல்யாணமோ , கிரஹபிரவேசமோ செலவு செய்தவர்களுக்கு மொய்யாக அவர்களுக்கு உதவி செய்யத்தான் சொல்லித்தந்திருக்கிறது " என்றார்.
என்னப்பா..ஒரு பலூடாக்குள்ள இத்தனை தத்துவமா..என்ற உங்கள் கேள்விப்புரிகிறது.. வந்துட்டேன் விஷயத்துக்கு...
முருகனை மிஞ்சிய தெய்வனில்லை.. முருகலான தோசைக்கு மிஞ்சின உணமில்லைன்னு ஒருவர் எழுதிருக்கார் !
அட .. செக் குடியரசுக்கு படிக்கப்போனவர் ப்ரகாஷ் சங்கரன் ..இத்தனை சுவைப்பட சமையலையும்..அம்மாவையும்.. தனது வாழ்வையும் செதுக்கியிருக்கிறார் பதிவில்....
ஐரோப்பிய வாழ் சமூகம் நம் இந்தியாவை எப்படிப்பார்க்கிறது , அதுவும் ஒரு பிரம்மச்சாரியின் பார்வையில்..எத்தனை அழகான கோணம்..அருமையாக விவரிக்கிறார்..
அயல் நாட்டு கலாச்சாரம் என்ற பதிவுகளில் ..
ஜெமோவின் தீவிர வாசகராக அறிமுகமாகும் பிரகாஷ் , சொல்வனம் இதழில் வெளியான கவிதை குஞ்ஞுண்ணி எறும்பைப்பற்றிய குஞ்ஞுண்ணி மாஷ் பற்றிய கவிதையையும் தந்து ஆஹா ! எத்தனை ரசனை இந்த இளைஞருக்குள் என்று மனதை ஆள்கிறார்.
குஞ்ஞுண்ணிக்கவிதைகள் என்ற பதிவில் ...
2015 ள் பதிவுகளை இடாமல் , படிப்பில் பிஸியாகிவிட்டாரோ என்ற எண்ண வைத்த ..இல்லையில்ல மிஸ் செய்ய வைத்த பிரகாஷ் தென்கரை .. என்ற ப்லாக் ஸ்பாட் சொந்தக்காரரே ! நிறைய எழுதுங்கள்..வேண்டும்..என்று வாழ்த்துகிறோம்..வலைச்சரம் சார்பாக வளைக்கரம் கொண்டு ! .
அடுத்தது.. நாச்சியார் இவர் பக்கம் கண்டது , கேட்டது , நினைத்தது எல்லாம் இங்கே பதிவாகிறது என்ற கேப்ஷனுடன் வரவேற்கிறார்.. வல்லி சிம்ஹனாக ..நம் திருமதி. ரேவதி நரசிம்மன் அவர்கள் !
அ விலிருந்து ஹாலோவீன் வரை இவரது பதிவுகள் ஆ..ஆ வென ஆச்சர்யப்படுத்துகின்றன.
துபாய் , ஐரோப்பா , ப்ளாஷ்பேக் என பயணமாகும் பதிவுகளுக்கு சொந்தக்காரர்
பயணங்கள் அனைவருக்கும் எதோ ஒரு செய்தியைக்கூறிச்செல்லும் .பல தரப்பட்ட மனிதர்கள் அவர்தம் அனுபவங்கள் என.
பயணங்கள் அனைவருக்கும் எதோ ஒரு செய்தியைக்கூறிச்செல்லும் .பல தரப்பட்ட மனிதர்கள் அவர்தம் அனுபவங்கள் என.
அப்படி இவரது ஒரு பயண அனுபவமும்..என்னை மிகக்கவர்ந்தது..அது உங்களுடனும் பகிர்கிறேன்.
சம்சாரம் அது மின்சாரம். கரண்ட் போயி ஷாக் அடிக்கறத ஹாஸ்யமாக எழுதிருக்கிறார்..படிக்கும் நமக்கு ஷாக் இல்லாமல் எழுதியிருக்கிறார் ...
ராமன் முதல் நரசிம்மன் வரை அத்தனை மூர்த்தியையும் , ஆடிப்பெருக்கு முதல் தீபாவளி வரை அத்தனை பண்டிகைகளுக்கும் இவரது வாழ்த்தும் நம்முடன் வாழ்தலையும் இயல்பாக சொல்கிறார் வார்த்தைகளில்
ஆண்டாளும் அக்காரவடிசலும் என்றப்பதிவு மிகக்கவர்ந்தது..பாருங்களேன்..
ஆண்டாளும் அக்காரவடிசலும் என்றப்பதிவு மிகக்கவர்ந்தது..பாருங்களேன்..
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் என்று வாழ்த்தி பதிவிடும் திருமதி ரேவதி நரசிம்மஹனை நாமும் ஆரோக்கியமும் சிறப்புற்று ..பலப்பல பதிவுகள் தரவேண்டுமாய் வாழ்த்துகிறோம்..!
மஹாபாரதத்தில் அர்ஜூனனின் மனைவி , கிருஷ்ணரின் தங்கை சுபத்ரா தேவி.!
இவர் மகன் அபிமன் யூ ..வத்சலா திருமணம் திரைப்படமாகவும் வந்தது..ஏனோ அந்த சுபத் ரா கேரக்டர் ரொம்பப்பிடிக்கும்..கண்ணனுக்கே தங்கையானதாலா தெரியவில்லை !
இங்குமொரு சுபத்ரா .. சுபத்ரா பேசுகிறேன் என்ற வலைப்பூவுடன் பேசுகிறார்.
இவரது சிறுகதை ஒரு நாயகன் ,20,000 ரூ பரிசை வென்றக்கதை , படிக்க படிக்க உருக்குகிறது.. ! அருமையான சிறுகதை..
தமிழும் சமஸ்கிருத மும் என்ற இவரது கூகிள் அகழ்வாராய்ச்சி கட்டுரை அசத்துகிறது..
தமிழும் சமஸ்கிருதமும் அசத்தல்.
பேருந்தில் பயணம்..அதில் தந்த பத்து ரூபாய் தனக்குள் தாக்கத்தை விளைத்தது என்கிறார்.. அமேஸிங்..
இது கதையல்ல நிஜம் ... என்ற பதிவாக .. படிக்கலாம் .
எல்லாத்துறைகளையும் தொட்டு எழுதும் சுபத்ரா விற்கு நம் வலைச்சரம் சார்பாக வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்.!
மீண்டும் அடுத்தடுத்த பதிவுகளுடன் உங்களை சந்திக்கிறேன்
அன்புடன்
சுமிதா ரமேஷ் ..



