07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label பட்டறிவு. Show all posts
Showing posts with label பட்டறிவு. Show all posts

Friday, September 26, 2014

வெள்ளி: வலைச்சரத்தில் தில்லைஅகத்துக் க்ரோனிக்கிள்சின் 5 ஆம் நாள்: பட்டறிவுதான் சிறந்த ஆசிரியன்! தமிழ்ச் சோலையின் ஒரு பகுதி!


The only source of knowledge is Experience – Albert Einstein

Experience is an Expensive lesson but only this way you can learn something! – Benjamin Franklin

Experience: The most brutal of teachers.  But you learn, My God do you learn. – C.S Lewis

வலை அன்பர்கள் எல்லோருக்கும் தில்லைஅகத்தின் இனிய காலை வணக்கம்!
இன்று வெள்ளி! எல்லா நாட்களும் புனித நாட்கள்தான் என்றாலும்! எல்லா சமயத்தினருக்கும் இது ஒரு புனித நாள்!, வாரத்தின் இறுதி நாள்! எனவே இந்தப் புனித நாளில், பட்டறிவினால் பெற்ற புனிதமான பாடங்களின் சுவடுகள்! அனுபவம் என்பதில் “பவ” என்பது வடமொழிச் சொல்லானதால் “அனுபவம்” என்பது வடமொழிச் சொல்லாம்.  பட்டறிவு என்பதுதான் தமிழ் சொல் என்று இணையத் தகவல்!

பட்டறிவு என்பது மிக மிக உயர்ந்த ஓர் அறிவு! அறிவுச் சுரங்கத்தின் மிக உயர்ந்த அறிவுச் சுரங்கம் இந்த பட்டறிவுச் சுரங்கம்! பட்டறிவின் விலை பல சமயங்களில் மிகவும் அதிகமாக இருக்கும்! அதற்கு ஏற்றார் போல் பாடங்களும்! இன்றைய கல்வித் துறையைப் போல!

பட்டாதான் புத்தி வரும், பட்டுத்தான் திருந்தப்போறான் போன்ற வாசகங்களை நாம் நம் நடை முறை வாழ்க்கையில் சொல்லுவதுண்டு! படிப்பறிவை விட பட்டறிவு என்பது மிகச் சிறந்த ஆசிரியன்! பல வலி மிக்க, வாழ்வியல் தத்துவங்களையும், பாடங்களையும் கற்பிக்கும்! மகிழ்வான பாடங்களையும் கற்பிக்கும்!  அது கற்பிக்கும் எல்லா பாடங்களும் மிகவும் பலமானது, ஆழமானது, நம் இறுதி நாள் வரை நம் மனதில் பதிந்து, நம் வாழ்க்கையை வழி நடத்திச் செல்வது!  இந்தப் பட்டறிவையும் நாம் கூர்ந்து நோக்கி உள்வாங்கினால் மட்டுமே!

நம் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒவ்வொரு வகையில் நிகழலாம்! பயணங்கள், நமக்கும், நம்மைச் சுற்றியும் நடக்கும் நிகழ்வுகள், மனிதர்கள், கேளிக்கைகள், சமையல் கலையிலிருந்து ஆயக் கலைகள் அனைத்தும், உணவுகள், என்று இப்படிப் பல, நமது ஒவ்வொரு நொடியையும், பொன்னைப் புடம் போடுவது போல் நம்மை புடம் போட்டு  நம் வாழ்வில் நமக்கு வழி காட்டியாய் அமைந்து நம்மை வழி நடத்துதுபவை. எல்லோரும் பிறக்கும் போதே மேதைகளாகப் பிறப்பதில்லையே! பட்டறிவு நம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்கும்.  அத்தகைய பட்டறிவு நமக்குத் தரும் படிப்பினைகளும் வித்தியாசமே! அதை நம் பதிவுலக வித்தகர்கள் கையாளும் விதமோ அருமை! இன்று நாம் அதையெல்லாம்தான் சுவைக்க இருக்கிறோம் இந்த வெள்ளி சுக்கிர வித்தக வேந்தன் அள்ளித்தரும் அருள் பயக்கும் நன் நாளில்! இந்தப் பட்டறிவைக், கதைகளாகவும், கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும் வெளிக் கொணர்ந்து, அழகானத் தமிழில் வீறு நடை போடும் நம் பதிவர்களைப் பாருங்கள்! 

தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸின் பட்டறிவு இடுகைகளின் சுட்டிகள்
மாதவன் மாமா

வெங்கட்நாகராஜ்

சந்தித்ததும் சிந்தித்ததும் வலைத்தளம்.  அதற்கு ஏற்றார் போல் இந்தப் பிரபலப்பதிவரான தில்லி ராஜாவின் வலைத்தளம் முழுவதும் நல்ல விஷயங்களும், பட்டறிவும் நிரம்பிக் கிடக்கின்றன அழகிய தமிழில்!  நாங்கள் மிகவும் ரசிப்பது போல் நீங்களும் ரசியுங்களேன்!
இவரது அனுபவங்களை இங்கு வாசியுங்கள்!  எத்தனை எத்தனை பாடங்களைச் சொல்கின்றது என்று பாருங்கள்!


ரயில் பயணங்களில்

பக்கிரிசாமி என்

ஊக்கமது கைவிடேல் வலைத்தளம். பழக்கங்களின் ஆதிக்கம் என்ற மிக மிக அருமையான அனுபவத் தொடர்.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு வாழ்க்கைப் பாடம்! பயனுள்ள பாடம்! வாசிக்க வேண்டிய தொடர்!  சுட்டி இதோ

வாத்தியார் பாலகணேஷ்

மின்னல் வரிகள் வலைத்தளம். நம் எல்லோருக்கும் வாத்தியார், தனது பட்டறிவு வாத்தியாரைப் பற்றிச் சொல்லும் சுட்டி இதோ. இவர் எது எழுதினாலும் ரசனையோடும் நாம் ரசித்து ரசித்து வாசிக்கும் படியும் இருக்கும்! அப்படிக் கலக்குவதால் வாத்தியார் மற்றொரு தலைப்பிலும் வருவார்.  எனவே இங்கு ரத்தினச் சுருக்கமாக....நடைவண்டிகள் என்ற அவரது படைப்பு!  ஆம் நமது அனுபவங்கள் தானே நம்மை நடத்திச் செல்லுகின்றன!


எங்கள் blog

இதில் ஆ 'சிரி' யர்கள்: Kasu Sobhana, kg gouthaman, kg, ஸ்ரீராம்., raman
எங்களுக்குப் பிரபலமானவர் ஸ்ரீராம் அவர்கள்! அலுவலக அனுபவங்களுக்கு இதோ சுட்டி.  நல்ல அருமையான அனுபவங்கள்! அதை அவர் எழுதியிருக்கும் விதமோ அருமை!! நகைச்சுவையும் இழையோடும்!


மீனாக்ஷி அம்மன் கோவில், அழகர் கோவில், பழமுதிர் சோலை, திருப்பரங்குன்றம்

தின்ற அனுபவம். இது ஒரு பெரிய அனுபவம்! சும்மா இல்லை! இதில் நமக்கு பல பாடங்கள் கிடைக்கும்!  இவர் எழுதிய தொடர் பதிவான தோசையாயணம் மிகவும் பிரபலம்!!!!!  அதன் சுட்டி அல்ல இது!  இது வேறு!  சென்றுதான் பாருங்களேன்!

வை.கோபாலகிருஷ்ணன்

வைகோ என்று பிரபலம்.  எல்லோரும் இவரை அறிவார்கள்
அருமையான கதைகள் எழுதுவது மட்டுமன்றி பல விமர்சனப் போட்டிகளும் நடத்தி பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்துபவர்! சிறந்த அனுபவம்! மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று!

மனதைத் தொட்ட அவரது சிறுகதை ஒன்றின் சுட்டி இதோ-முதிர்ந்த பார்வை

சுட்டி ஒன்று!  உள்ளே செல்லுங்கள்.  வாசிக்க நிறைய இருக்கின்றன!  நூலகம் எனலாம்.

ஜீவி                

பூ வனம் வலைத்தளம். மூத்த வலைப்பதிவர்.  பார்த்ததும், படித்ததும் என்று இவரது இந்தக் கட்டுரையைப் படியுங்களேன்.  அறிய தகவல்கள் அடங்கிய ஒரு பகுதி!  ஓல்ட் இஸ் கோல்ட்

தி.தமிழ் இளங்கோ

எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL  வலைத்தளம். சொல்ல நினைத்ததை எழுதுகின்றேன்! என்று சொல்லும் இவரின் இந்த அனுபவச் சுட்டியைப் பாருங்களேன்.  பல விடயங்கள் சொல்கின்றது.


சாமானியன் சாம்

சாமானியனின் கிறுக்கல்கள் வலைத்தளம். ஆனால், அவை கிறுக்கல்கள் இல்லை.  அத்தனையும் அழகிய தமிழில், அருமையான நடையில் எழுதப்படும் படைப்புகள்!
தாய் மண்ணே வணக்கம் என்ற அவரது அனுபவச் சுட்டி

காசு, பணம், துட்டு என்ற ஒரு சுட்டி

தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா.  மிக அருமையான அனுபவப் பதிவு! அதுவும் அவரது தமிழில்!  மிளிர்கின்றது!  கிறுக்கல்கள் அல்ல! பதுக்கிப் பாதுகாக்க வேண்டியப் பொக்கிஷங்கள்!!!

குடந்தையூர் ஆர் சரவணன்

குடந்தையூர் வலைத்தளம்.  இவரது அனுபவம் பல வாழ்வியல் பாடங்கள் நிறைந்தவை.  பாருங்களேன்! சுட்டி இதோ! தற்போது குறும்படமும் இயக்கியுள்ளார்!


சீனு

திடங்கொண்டு போராடு வலைத்தளம்.  அருமையான எழுத்தாளர் இவருள்!  இலக்கிய வாசிப்பு இவரது எழுத்துக்களில் மிளிரும்!  இதோ பாருங்களேன்!

இவரது நாடோடி எக்ஸ்பிரஸ் பிரபலமான பதிவுகள்

சென்னை பட்டறிவு

இதோ ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்ட ஒரு சிறுகதை http://www.seenuguru.com/2014/09/ragavan-short-story.html

ஸ்கூப்பையன்-சரவணன்-ஸ்பை என்று செல்லமாக...

ஏனிந்த சோதனை, வியாபாரம் நட்பை முறிக்கும் போன்ற நல்ல அனுபவப் பாடங்கள் இந்தச் சுட்டியில்..  நாமும் கற்போமே!

ரூபக்ராம்

சேம்புலியான் வலைத்தளம் பெயர். சினங்கொண்ட ஊழியனின் குமுறல் : CAB சிஸ்டம் நடப்பது என்ன? மிகவும் மனதைத் தொட்ட ஒன்று!

ஆனந்த ராஜா விஜயராகவன் ஆவி என்று வலையுலகிலும், முக நூலிலும் பிரபலம்

பயணம் கோவை ஆவி வலைத்தளம்.  மிகவும் அழகான, நம் வாழ்க்கைப் பாடங்கல் எப்படி எல்லாம் வருகின்றன எனச் சொல்லும் அவரது பட்டறிவுச் சுட்டி.  இவர் வேறு ஒரு தலைப்பிலும் வருவதால் இங்கு ரத்தினச் சுருக்கமாக.

ராஜி 

காணாமல் போன கனவுகள் வலைத்தளம்.  இப்போது அவரைக் காணவில்லை வலைத்தளத்தில்! மிகவும் அழகாக வட்டார வழக்கில் எழுதுபவர்!  மீண்டும் வருவார் என்று நினைக்கின்றோம்!  அவரது அனுபவப் பகிர்வுகளின் சுட்டி இதோ

தருமி

கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே!  இது அவரது வாசகம்!  வலைத்தளத்தில் அறிந்து கொள்ளவும், சிந்திக்க வைக்கும் அளவு  பல நல்ல கருத்துக்களும் நிரம்பிக் கிடக்கின்றன. லேட்டரல் திங்கிங்க்!

பட்டறிவுப் பகிர்வு

இவரது மின் நூல் காண இந்தச் சுட்டி

இவரது, வெளியிடப்பட்டப் புத்தகங்களின் சுட்டி

தேனம்மைலெக்ஷ்மணன்

பிரபல பத்திரிகையாளர். பலரும் அறிந்திருப்பீர்கள்! சும்மா - இவரது வலைத்தளம் பல நல்ல கட்டுரைகளை தன்னகத்தே கொண்டுள்ளது!

பக்தர்களா.. பதர்களா.  நல்ல அருமையான அனுபவகட்டுரை

டாக்டர் ஜம்புலிங்கம்

கோயில் உலா எனும் பயணக் கட்டுரைக்குச் சுட்டி

சோழ நாட்டில் பௌத்தம் இதுவும்


அகச்சிவப்புத் தமிழ் வலைத்தளம்.  வார்த்தை என்னும் வல்லாயுதம் மிக அழகான இடுகை.  வாசிக்க வேண்டிய இடுகை

அ. முஹம்மது நிஜாமுத்தீன்

நிஜாம் பக்கம் வலைத்தளம் அழகான ஒரு பதிவு. அம்மா சொன்ன கதை என்று வாழ்வின் மிகவும் அடிப்படை வாழ்வியல் தத்துவத்தைச் சொல்லும் ஒன்று அதன் சுட்டி

முட்டா நைனா

சென்னை வட்டார மொழியில் மிக அழகாக பல நல்ல வாழ்வியல் தத்துவங்கள் இழையோடச் சொல்லி வந்தவர்.  தற்போது இவரைக் காண வில்லை.  ஏனோ?!

செல்விஷங்கர்

பட்டறிவும் பாடமும் வலைத்தளம்.  பாடம் படிக்குமா உலகம் என்று கேட்கின்றார் கவிதை மூலம்.  சுட்டி இதோ!

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

அங்கோர் வாட் (சியாம் ரீப்) – பயணக்கட்டுரை... நாம் ஏன் பயணம் செய்கின்றோம்..சுட்டி

விறால் மீன் பற்றிய தகவல்கள் சுட்டி

காயத்ரி தேவி

என்னில் உணர்ந்தவை வலைத்தளம் அதற்கு ஏற்றார் போல் பல பட்டறிவுகள் கட்டுரைகளாக உள்ளன. ஒரு சுட்டி இதோ.

bandhu

எளியவை வலைத்தளத்தின் பெயர்.  நல்ல பதிவுகள் வலைத்தளத்தில்.

காசிருந்தால் இங்கிருக்கவும்

காரிகன்
வார்த்தைகளின் விருப்பம் வலைத்தளம்.  இசையைப் பற்றி பல தகவல்கள் இது ஒரு உதாரணச் சுட்டியே!  

சே.குமார்
மனசு வலைத்தளம்.  உண்மையாகவே அவர் மனசு பேசுகின்றது!  இதோ சுட்டிகள்

பட்டறிவுச்சுட்டி

வாழ்க்கைச் சுட்டி

கோவைக்கவி வேதா இளங்கதிலகம்       

வேதாவின் வலை. வலைத்தளம்.  இவரது வலை முழுவதும் பல அனுபவங்களும், கவிதைகளும், நிரம்பிக் கிடக்கின்றன.  இங்குள்ளச் சுட்டி அவரது பயண, பட்டறிவுக் கட்டுரைகள். இந்தச் சுட்டியில் அவர் விவரித்திருக்கும் கொழும்பில் இருக்கும் முனீஸ்வரம் சிவன் கோயில் கீதாவின் கொழும்பு நினைவுகளை மனதின் ஆழத்திலிருந்து மேற்பரப்பிற்குக் கொண்டுவந்தது! நன்றி சகோதரி!


பூச்சோங் எம்.சேகர்

நாட்டுப்புறவியலில் பழமொழிகள் அழகான இடுகை!  இன்னும் பல உள்ளன வாசிப்பதற்கு!  கவிதகளும், கதைகளும்!  நாங்களும் செல்ல வேண்டும்!

சிங்கமணி

இவரது தொகுப்புகள் தளம் ஆனந்த விகடனால் விகடன் வரவேற்பறையில் பாராட்டப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியத்தின் செழுமையான படைப்புகளை ஒருங்கிணைத்து உருவாக்கபட்டுள்ள இந்த வலைப்பக்கம் மிகச்சிறப்பாக உள்ளது, கட்டுரைகள், சிறுகதைகள். ஆய்வுரைகள் என்று விரிவான பகுப்புமுறை இதன் தனிச்சிறப்பு, இம்முயற்சிக்கு காரணமாக இருந்த சிங்கமணிக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
எஸ்.ராமகிருஷ்ணன்
ஆர்வம் உள்ளோர் இந்த வலைத்தளத்தைத் தொடரலாம்.  நிரம்பி வழிகின்றது! 

சுபா ஆனந்தி

இவரது தளம் பல தகவல்களைக் கொண்டுள்ளது

இந்தக் கேள்விக்கு பதில் என்ன -- ஒரு சுட்டி

பழமொழிகள்

விமலன்

சிட்டுக் குருவி வலைத்தளம்.  கைத்துட்டு எனும் ஒரு அனுபவப் பகிர்வின் சுட்டி இதோ

மனோசுவாமிநாதன்

முத்துச் சிதறல் வலைத்தளம்.  நல்ல முத்துச் சிதறல்கள்.  உதாரணத்திற்கு இதோ
மருத்துவ முத்துச் சிதறல் என்ற அனுபவம் ஒன்று


சாதம் எப்படிச் சாப்பிட வேண்டும் என்ற ஒரு பாடம்

ஸ்ரீகந்தலக்ஷ்மி

நல்ல கட்டுரைகள் உள்ளன. ஒரு சுட்டி இதோ, கல்வி Vs அறிவு: சில சிந்தனைகள்


பிழை இருப்பின் பொறுத்துச் சுட்டிக்காட்டவும்!

இன்னும் நிறைய உள்ளன.  பிறிதொரு சமயத்தில்! ஹப்பா, வார இறுதி வந்து விட்டது! சனியும், ஞாயிறும் கொண்டாட்டம்தான்! வாருங்கள்!

இந்த நாள் இனிய நாளாக அமைந்திட தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸின் இனிய நல்வாழ்த்துக்கள்!


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது