07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label பன்னிக்குட்டி ராம்சாமி. Show all posts
Showing posts with label பன்னிக்குட்டி ராம்சாமி. Show all posts

Sunday, December 12, 2010

நன்றி சொல்ல வந்தேன்...

(என்னையும் நம்பி...!) வலைச்சரத்தில் எழுத வாய்ப்புக்கொடுத்த சீனா அய்யா அவர்களுக்கும், வலைச்சர நிர்வாகக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வலைச்சரத்தில் நான் எழுதுவதை உறுதி செய்ய உதவிய நண்பர் வெங்கட் மற்றும் நண்பர் தேவாவிற்கும் நன்றிகள்.
எனது வலைப்பூவில் மட்டுமில்லாது, இங்கு வலைச்சரத்தில், மற்றும் பதிவுலகில் வேறு எங்கு நான் சென்றாலும் வந்து நேசக்கரம் நீட்டும் டெர்ரர் கும்மி குரூப்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
பின்னூட்டம் வழியாக ஆதரித்த அனைத்து நன்பர்களுக்கும் என் நன்றி!
மேலும் வாசிக்க...

வானவில்லே….வானவில்லே….!

என்ன நண்பர்களே, இன்றைய இறுதி நாள்  அறிமுகங்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமா?

காதல் கவிதை:
மழையில் நனைந்தபடி கவிதை எழுத முயற்சித்ததையே கவிதையாக்கி இருக்கிறார் ஆர்.வி. சரவணன்.
சுதந்திரக் கவிதை:
சுதந்திர தினம் மற்றுமொரு விடுமுறை நாளாகி விட்டதைச் சாடுகிறார் இளங்கோ.

அனுபவம் பலவிதம்:
இசைஞானியின் தீவிர ரசிகரான மாணவன் (நானும்தான்!) உருகி உருகி பாடலைக் கேக்கும் விதமே நெகிழ்வு.
இன்றைக்கு பவர் கட் எவ்வளவு சாதாரணமாகி விட்டது, ஆனாலும் தினமும் அதே எரிச்சல், அதே கோபம்…. ! பவர் கட் ஆன உடனே என்ன பண்றோம்னு ரொம்ப சுவைபட சொல்றாரு பிரசன்னா.
பள்ளிகூடத்தில் உணவு இடவேளையின் போது நாம் செய்த லூட்டிகளை யாரும் மறந்திருக்க மாட்டோம். அவற்றைத் தன் எழுத்துக்களால் அப்பிடியே கண் முன்னே கொண்டு வருகிறார் டனிஷ் முத்துக்குமாரசாமி.
யாகூ சாட்டிங்கில் திரைமறைவாக (இன்விசிபிளாக) திரிந்து கொண்டிருப்பவர்களை (கண்டு) பிடிப்பது எப்படின்னு சொல்லித் தருகிறார் விழியே பேசு.
திருவனந்தபுரத்தில் மூட்டுவலிக்காக ஆயுர்வேத சிகிச்சை பெற்றதைச் சுவை பட விவரிக்கிறார்கள் லக்ஷ்மி அவர்கள்.

இன்றைய கதைசொல்லி:
கிராமங்களில் வாய்த்துடுக்காகப் பேசிக்கொண்டு திரிபவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரால் உறவுகளும், வாழ்க்கயும் எவ்வாறு சீர்குலைகின்றன என்று உணர்வுப்பூர்வமாகக் கதை சொல்கிறார் இராம்.

இன்றைய புன்னகைப்பூ:
எந்திரன் படத்தப் போட்டு கலாயோ கலாய்னு கலாய்ச்சு எடுத்திருக்கிறார் தன்ஸ். அதற்கு இவர் சொல்லும் விஷயங்கள் நியாயமாவும் படுதுங்க.

இன்றைய பிரபலம்:
உலகின் அழகிய முதல் பெண் என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் பிரபலமாகிய லீனா மணிமேகலை தனது கவிதைகளை வலைப்பூவிலும் பிரசுரித்து வருகிறார்.

சிறப்பு அறிமுகம்:

நான் படித்தவற்றில், சிறந்த ரொமான்ஸ் பதிவாக கருதுவது வெளியூர்காரன் எழுதிய சைந்தவி-சிபி கடிதங்கள் தான். அதை ரெட்டைவால்ஸ் மற்றும் சிவமஞ்சுநாதன் ஆகியோரும் தொடர்ந்து எழுதினார்கள். ஒவ்வொரு எழுத்திலும் காதல் வழிந்தோடும் பதிவுகள். அத்தனையும் அற்புதம். இதுவரை இவற்றைப் படிக்காதவர்கள் கட்டாயம் படியுங்கள்.

என்ன நண்பர்களே, கடந்த ஒரு வாரமாய், நான் அறிமுகப்படுத்திய வலைப்பதிவுகள் நிச்சயம் உங்கள் வாசித்தலை சிறிதளவேனும் விசாலப்படுத்தி இருக்கும் என்ற நிறைவுடன் விடை பெறுகிறேன்.

மேலும் வாசிக்க...

Saturday, December 11, 2010

நதியோரம்…!

வந்தனம் நண்பர்களே, இன்றும் சில நல்ல வலைப்பூக்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

காதலின் தீபங்கள் ரெண்டு:
ஒற்றைச் சொல்லில் உயிர் வாழ்வதும், ஒற்றைச் சொல்லுக்காக உயிர்வாழ்வதும்தான் காதல் என்று காதல் செய்யச் சொல்கிறார் ரேவா.
தன் காதல் மகாராணியைப் பார்த்து பூந்தோட்ட்த்தில் உள்ள பூக்களெல்லாம் எப்படி பொறாமைப்படுகின்றன என்று உருகுகிறார் லோகு.

அனுபவம் பலவிதம்:
பல்பு வாங்கினேன்னு மிக அடக்கமாகச் சொல்லிவிட்டு, பல்பு கொடுத்த கதையச் சுவைபட சொல்கிறார்  இந்திரா.
விந்தைமனிதன், தரமான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர். ஆங்காங்கே அருமையாக மேற்கோள் காட்டி எழுதும் இவரது வார்த்தை வீச்சுக்கள் தேர்ந்த எழுத்தாளரைப் போல இருக்கிறது.  நான்என்பதைப் பற்றி இவர் அலசும் அலசல், வெகு அருமை..!
இந்தோனேசியாவில் வாழ்ந்துவரும் கவிசிவா தனது அனுபவங்களைப் பற்றிச் சுவராசியமாக விவரிக்கிறார்.
அழகிய தீயே படத்திற்கு ராஜா எழுதியிருக்கும் விமர்சனம், படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்கச் சொல்கிறது. படத்தின் அழகியலை விமர்சனத்திலும் கொண்டுவந்திருக்கிறார் ராஜா.
திரையில் பார்த்த அந்நியனைப் போலவே சமூக அவலங்களை எழுத்தில் விளாசுகிறார் இந்த அந்நியன் 2.
தனிமை கொடுமையானது, அதுவும் நண்பர்கள் தினம் அன்றே தனிமை என்றால்? தனது தவிப்பையும் ஆற்றாமையையும் வினு வெளிப்படுத்தும் போது நமக்கே சற்று பதை பதைப்பாக இருக்கிறது.

இன்றைய கதைசொல்லி:
சுஜாதாவின் தீவிர ரசிகரான கணேஷ் மூர்த்தி, ஒரு சைன்ஸ் பிக்சன் கதையை சுஜாதாவின் பாணியிலேயே எழுதியிருக்கிறார். படிக்கத் தொடங்கியதும் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன், புதுமைக்கும், வேகத்திற்கும் குறைவில்லை.

இன்றைய புன்னகைப்பூ:
பதிவர்களோடு திரை நட்சத்திரங்கள் வீட்டிற்கு நவராத்திரி கொலுவிற்குச் சென்றால் எப்படி இருக்கும் என்று சொல்லி எல்லோரையும் கலாய்க்கிறார் காயத்ரி.

இன்றைய பிரபலம்:
தொலைகாட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான டாக்டர் ஷாலினி, சமீப காலமாகப் பத்திரிக்கைகளில் எழுதி வருவது தெரிந்ததே. இவர் வலைப்பூவிலும் எழுதி வருகிறார்.
என்ன நண்பர்களே, வழமை போல இன்றைய அறிமுகங்களும் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன். நாளையும் இனிய அறிமுகங்களுடன் உங்களைச் சந்திக்கிறேன்.

நேற்றைய ஆட்டத்தில் 1000+ கமென்ட்டுகள் போட்டு சாதித்த 'டெர்ரர் கும்மி குருப்ஸ்' நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது