07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label பழனிவேல். Show all posts
Showing posts with label பழனிவேல். Show all posts

Sunday, December 11, 2011

தொழில்நுட்ப வலைப்பதிவர்களும், வலைப்பூக்களும்

எனக்குப் பிடித்த, நான் பயன்பெற்ற வலைப்பதிவுகளை இந்த இடுகையில் அறிமுகம் செய்கிறேன். அதற்கு முன்பு இரண்டு  புதியவர்களையும் பார்த்துவிடுவோம்.

அவர்களில் முதன்மையானவராக வைரஸ் சதீஸ் என்பவரது வலைப்பூ நன்றாக இருக்கிறது.

இவரது ப்ளாக்கரில் கருத்துரைகளை சுருக்க விரிக்க என்னும் பதிவு மிகவும் பிரபலம்..

 என்ற பதிவில் வலைதளங்களின் பின்புல நிறத்தை கண்டுபிடிப்பதைப் பற்றி எழுதியிருக்கிறார்.


இதில் பெரும்பாலான மென்பொருட்களைப் பற்றி சொல்லியிருக்கிறார். வலைப்பதிவை நிர்வகிக்கும் இவரது பெயரே வித்தியாசமாக இருக்கிறது. சுப்புடு வாம்.
  
இணையத்தில் தரவிறக்கும் வேகத்தை அதிகரிக்க Free Download Manager 3.8 RC1 என்று மென்பொருளை அறிமுகப்படுத்துவதோடு 

 உங்கள் பிளாக்கரில் Template மாற்றுவது எப்படி? என்று வார்ப்புரு மாற்றுவதையே ஒரு பதிவாக பதிவிட்டிருக்கிறார்.

 இணையத்திற்கேற்ப தமிழில் தட்டச்சிட இலவச மென்பொருள் தமிழ்99  என்ற இடுகை தமிழில் வலைதளத்தில் எழுத உதவும் மென்பொருளைப் பற்றியும், எழுதும் முறையைப் பற்றியும் அழகு தமிழில் விளக்கியுள்ளார்.

என்று எளிய பதிவுகளையும் பதிவிட்டு புதிய வலைப்பதிவர்களுக்கும் ஒரு சில வழிகாட்டுதல்களை தன் பதிவின் மூலம் கொடுக்கிறார்..

மேலும் பல சிறப்பு இடுகைகள் இங்கே காணப்படுகிறது.



இவரைப்பற்றி அறிமுகம் தேவையில்லை. இப்போது இந்த வலைப்பூ பெயர் மாற்றத்துடன் நால்வர் கூட்டணியில் புதிய பொலிவுடன் புத்துயிர் பெற்று வலம் வருகிறது.

கற்போம் என்ற பெயருடன்... தொழில்நுட்பத்தை கற்றுத்தர வந்திருக்கிறது. 

நீங்கள் ஒரு தொழில்நுட்ப பதிவரென்றால் அல்லது தொழில்நுட்பத்தைப் பற்றி அறிந்தவர் என்றால்உங்களுக்கு தொழில்நுட்பத்தைப் பற்றி எழுத ஒரு வாய்ப்பை அளிக்கிறது இந்த கற்போம் வலைதளம்.

மேலதிக விவரங்களுக்கு இந்த பதிவைக் காணலாம்.. கற்போமில் தொழில்நுட்ப பதிவு எழுத விருப்பமா?



இவரது வலைப்பூவில் முதலில் எனக்குப் பிடித்தே இந்த தலைப்புதான்.. தமிழ்கிழம் அருமையான தமிழ்வார்த்தை அர்த்தம் பொதிந்தது.

குறிப்பிட்டு சொல்வதென்றால் இவரின் இந்த பதிவைச்சொல்ல்லாம்.. நண்பர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு மற்றும் துணுக்கு என்பதில் வார்ப்புருவில் இடம்பெற்ற விளம்பர நிரல்களை அழிப்பது எப்படி என்பதை சொல்லித்தருகிறார். 



மேலும் எனக்குப்பிடித்த தொழில்நுட்ப வலைப்பதிவர்களும், வலைப்பூக்களும்

நண்பர் அப்துல் பாசித்தின் பிளாக்கர் நண்பன்,

இவர் தொடர்ந்து எழுதும் ப்ளாக் தொடங்குவது எப்படி? என்ற தொடர் பதிவு புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக  இருக்கும். மேலும் பல தொழில்நுட்ப பதிவுகளை இவர் வலையில் காணலாம்.


நண்பர் சசியின் வந்தேமாதரம், அவ்வப்போது இணையத்திலுள்ள புதிய தொழில்நுட்ப செய்திகளை பகிர்வதில் வல்லவர். தொடந்து தனது பதிவுகளின் மூலம் முன்னேறிக்கொண்டிருப்பவர். 

அனுபவ பதிவர் ஜி.எஸ்.ஆர் ன் தமிழ்தொழில்நுட்பம் 

நண்பர் வடிவேலனின் கௌதம்இன்போடெக்

சகோதரி பொன்மலரின் பொன்மலர் பக்கம்



இவர்களின் கட்டுரைகள் பத்திரிகைகளிலும் வந்து பாராட்டைப் பெற்றவை..

இவர்களின் பதிவுகளைப் பார்த்தாலே புதியதாக வலைப்பதிவு தொடங்கியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.. 

அனுபவ வலைப்பதிவர்கள் கூட ஒரு சில தொழில்நுட்ப நுணுக்கங்களை இவர்களின் பதிவுகளை வாசிப்பதன் மூலம் அறிந்துகொள்ளலாம். 

*****

உங்களுடன் ஒரு சில வார்த்தைகள்...

நாளொரு பதிவு, அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பதிவுகளை பதிவேற்றலாம் என்பதே வலைச்சரத்தின் முதன்மையான கட்டுப்பாட்டு விதிகளுள் ஒன்று. அவற்றை சரியாக என்னால் கடைப்பிடிக்க முடியவில்லை என்பதில் எனக்கு வருத்தமே..

வாய்ப்பளித்த சீனா ஐயா அவர்களுக்கும், வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர் குழுவுக்கும் எனது மனமார்ந்த நன்றி.. 

வாசகர்களாகிய உங்களுக்கும், எம் சக பதிவர்களுக்கும், என்னுடன் என்றும் அன்பு செலுத்தும் பதிவர் நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கடுத்து வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பை ஏற்கும் நண்பரையும் வருக வருக என வரவேற்கிறேன்.அதிகமான வலைப்பதிவுகளை வலைச்சரத்தில் தொடுத்து-தொகுத்து, எங்களுக்கு வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்வதோடு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த பதிவோடு இனிதே விடைபெறுகிறேன். வாழ்க வளமுடன்.

என்றும் அன்புடன்
உங்கள்
தங்கம்பழனி.

நன்றி நண்பர்களே..!!!


மேலும் வாசிக்க...

Friday, December 9, 2011

சோத்து மூட்டையும், சிறந்த பதிவுகளும்


கிட்டதட்ட அனைவரும் அறிந்த பெயர்தான்.. இவரின் வலையில் யதார்த்தமான உண்மைகளை தோலுரித்துக் காட்டுகிறார்.. இன்றைய சூழலையும், முந்தின நிலையை ஒப்புமை செய்து சமுதாயத்தில் நிகழும் சீர்கேடுகளை அலசி ஆராய்கிறது இவரது கட்டுரைகளும், கதைகளும்...

போராளி யார் என்ற இந்த பதிவில் இந்தியாவில் இன்று நடக்கும் அரசியல் சார்ந்த கூத்துகளை பகத்சிங் போன்றவர்கள் செய்கைகளுடன் ஒப்பு நோக்கி... எடுத்துரைக்கிறார்.

உண்மைநிலையை எடுத்துரைப்பதால் பதிவில் பரபரப்புக்கு பஞ்சமில்லை..

ஒவ்வொரு பதிவிலும் தனது பார்வையில் உண்மைநிலையை உரக்கக் கூறுகிறார்.. காந்தியடிகளும் ஏசுநாதரும் ..........என்ற பதிவில் காந்தியின் உன்னதத்தை மீண்டுமொருமுறை உணர்த்துவதோடு மட்டுமல்லாமல்...அஹிம்சையின் இலக்கணத்தை இயல்பாக சொல்லியிருக்கிறார்.

*****


வலைப்பூவின் ஆசிரியர் மோகன்ஜி  அவர்கள்

இவரின் ஒரு ஊதாப்பூ ஒரு அனுபவ சிறுகதையாகவும், கட்டுரை வடிவையும் கொண்டுள்ளது. படிக்க சுவராஸ்யம்.


*****


இவரின் பொம்பளை வண்டி சிறுகதை அடிப்படைஉரிமைகளைக் கூடப் பெறாத நிலையில் இருப்பவர்களின் உளவியலைச் சித்தரிப்பதாய் அமைந்துள்ளது. 


ஈஃபில் கோபுரம்.- பாரீஸின் அடையாளம்(?!) பயணக் கட்டுரை நம்மை பாரிசுக்கே அழைத்துச் செல்கிறது பதிவினிடையே பகிரப்பட்ட படங்கள் அருமை.


******

எங்கே செல்லும் இந்தப் பாதை

 இனிய கவிதைகள் அங்கங்கே அணிவகுத்து நிற்கிறது.. கருப்பன் உத்தரவு சமுதாய மூடநம்பிக்கை அப்பட்டமாய் அறிவிக்கிறது இக்கவிதை. இன்னும் சில கவிதைகளும் உண்டு.. இனிமையைக் கூட்ட...

****



ஒழுக்காற்று விழுமியங்களும் Mid-Life Crisis ம்வாழ்க்கையின் அனுபவங்களை காட்டும் கட்டுரை.

இதயம் பேசுகிறேன் இந்த வகையைச் சார்ந்ததே. மன ஓட்டங்களை சீராக சொல்லிப்போகிறார் கட்டுரையாளர்.

ஆண் பெண் உறவு - Intimacy  ஆண் பெண் உறவு பற்றி அழகாய் சித்தரிக்கிறார் இந்த கட்டுரையில்.

******



எடுப்பார் கைப்பிள்ளை வாழ்க்கையின் தத்துவத்தை சொல்லிப்போகிறார்.


மற்றுமொரு வலைச்சரத்தோடு சந்திக்க முற்படுகிறேன்.நன்றி நண்பர்களே!!!
மேலும் வாசிக்க...

Thursday, December 8, 2011

மனதைக் கவர்ந்த வலைப்பதிவுகள்...!!

வணக்கம் நண்பர்களே.. !

இன்றும் சில வலைப்பதிவுகளை அறிய தருவதில் மகிழ்வுறுகிறேன். அந்த வகையில் எனக்குப் பிடித்த வலைப்பதிவு இந்த புதுக்கவிதை

வலைப்பதிவின் ஆசிரியர் அண்ணாமலை. இவர் தமிழுக்காக உயிரையும் தருவேன் என்கிறார். சிவகங்கை மாவட்டத்தை சேரந்தவர்.

ஏ..ஏ அற்ப மானிடா..!! இன்றைய மனிதர்களின் அவசர வாழ்க்கை வழிமுறைகளை அலசுகிறது..

இவரின் சேதுவை மேடுறுத்தி பீதி சமைப்போம்!!!!  என்ற கவிதை மீனவர்படும் துயரையும் அதற்கான தீர்வை பெற அழைக்கும் கவிதையாக அழகு தமிழில் தந்திருக்கிறார். படிக்க படிக்க நிச்சயம் உங்களுக்கும் ஒரு எழுச்சி உணர்வை உண்டாக்கும்..!!

கவிதை மட்டுமல்ல சிறுகதையும் உண்டு...

நோவா கிரகம் போவோமா??  என்று கேள்வி கேட்டு அறிவியல் புனைவாய் ஒரு கதையுமுண்டு. சிறந்த சிந்தனைமிக்க சிறுகதையாய் மிளிர்கிறது.

நாத்திகமும்..ஆத்திகமும்! என்ற பதிவில் சில கேள்விகள் நம்மை சிந்திக்க வைக்கிறார்.


வெட்டு ஒண்ணு..துண்டு ரெண்டு! என்ற பதிவுகளில் இரண்டு வரிகளில்.. இல்லியில்லை இரண்டு வார்த்தைகளில் சிந்தனை செறிவு மிக்க கருத்துகளை முன்னெடுத்து வைக்கிறார்.. காதலைப் பற்றி இரண்டு வரிகளில் இப்படி சொல்கிறார்.

காதல்

கடற்கரைகளிலும்
கணநேரங்களிலும்

யதார்த்தமும், உண்மையும் கலந்த பதிவுகள் ஒவ்வொன்றும் நினைவில் நிற்கும்விதமாய் இருக்கிறது. வலைப்பதிவு தரத்தில் முதன்மை ்பெறுகிறது.


*****


இளைய பல்லவனின் காஞ்சித்தலைவன் 

உள்ளே உறங்கா
மௌனம்...
பேசாமல் பேசும்
கவனம்...

என்று முடிவில்லா மௌனத்தின் மொழி. . .பேசுகிறார்.

*****

கடகம்

அனைத்தும் கடந்து நிற்கிறது.. 

ஆசிரியர் ஆயில்யன், மயிலாடுதுறையிலிருது கத்தாரில் பணியாற்றுவதாக கூறுகிறார்.

பெற்றோர்களின் கடமையாக முடிந்தவரை தங்களால் இயன்ற அளவு வெட்கத்தினையும் தயக்கத்தினையும் தம் பிள்ளைகளிடத்திலிருந்து களைய முயற்சி மேற்கொள்ளுதல் மிக அவசியம் என்கிறது இவரின் வெட்கம் பதிவு.


மகாத்மாவின் கனவுகளோடு காலங்களை கடந்து போய்க்கொண்டிருக்கிறோம் என்கிறது இவரது மகாத்மா-காந்தி!

பொங்கல் பானையில் பொங்குவோம் பானைத்தொழிலாளர்களின் வாழ்வு நிலையை எடுத்துரைக்கிறது.

எட்டில் வாழ்க்கை இனிக்கிறது.

*******

நிறைய வலைப்பூக்களை அறிமுகப்படுத்த ஆசைதான். போதிய நேரமின்மையால் இந்த அரிய வாய்ப்பை அரிதாகவே பயன்படுத்த முடிகிறது..

வாரம் முடிவதற்குள் இந்த குறையை போக்க முயற்சிக்கிறேன். மற்றுமொரு வலைசரத்தில் சந்திக்கலாம். நன்றி நண்பர்களே..!!


மேலும் வாசிக்க...

Wednesday, December 7, 2011

சில கவிகளும், சில கவிதைகளும்..!!


வணக்கம் அன்பு நெஞ்சங்களே..! நீண்ட நேர இடைவெளிக்குப் பிறகு உங்களை வலைச்சரத்தின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி..


நல்லவே எண்ணல் வேண்டும்! திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும்! பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா! என்று மீண்டும் ஒரு முறை பாரதியின் கருத்தை அழுத்தந்திருத்தமாய் பதிக்கிறார் தன் வலையில்...

 யார் அவர்.. உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஷைலஜா அவர்கள் தான்.. ஸ்ரீரங்கத்தில் பிறந்துவளர்ந்து இப்போது பெங்களூரில் வசிப்பதாக கூறுகிறார்.

இவரின் மழலை உலகம் மகத்தானது! உண்மையிலேயே மகத்தானது. கருத்தாழம் மிக்கதோடு கவிதையும் கூடவே இலவச இணைப்பாக இந்த பதிவில்.

வித்தியாசமான வேடிக்கை மிகுந்த சிறுகதை மெய்மறந்த காதல்

உள் மனதில் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறுது அகமும் புறமும் 

காதல் கொண்ட மனதை கனகச்சிதமாய் படம்பிடித்துக் காட்டுகிறது காதலியின் கடிதம் கவிதை...!

ஒவ்வொரு பதிவும் ஒப்புயர்வற்றதாய் இருக்கிறது.

 *****
ஆன்மீகம், பக்தி

ஊனை உருக்க, உள்ளொளி பெருக்க
நாவை அடக்க நமச்சிவாய மெனும்
நற்கதிதரும் மந்திரமே என்னுள் ஒலிக்கவே 
கோவே! குருவே!! குணமில்லா அருவே!!! 
தேவே! திருவே!! திரிலோக கருவே!!! 
தேனே! தீதில்லாஅமுத ஊணே!! 

என்று நம்மையெல்லாம் உருக வைக்கிறது தமிழ்விரும்பியின் அன்னைத்தமிழ் 

ஆன்மிக விரும்பிகளுக்கு அற்புதமான தளம்.. சிவனைப் பற்றி சிலாகிக்கிறது இந்த பதிவு...
ஆன்மீகம் மட்டுமா அழகு காதலையும் இவர்விடவில்லை.. காதலின் ஏக்கத்தில் காதலனின் கவிதை வரிகள் இது..
 *******
 கவிதை என்றாலே காதல் தான்.. காதல் என்றாலே கவிதை தான்.. இரண்டிற்குமான தொடர்பு என்றுமே விலகியதில்லை.. அந்த வகையில் இவரை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.. 
தபூ சங்கர்.. தன்னிச்சையாக கவிதை எழுதி கல்நெஞ்சிலும் காதல் வர வைப்பவர்..காதலின் உணர்வுகளை ஒரு சில வார்த்தைகளில் கவிதையாக்குவதில் வல்லவர்..
தேவதைகளின் தேவதை  என்கிறவர், சட்டென எனக்கு இரண்டு காதலிகள் என்று அதிர்ச்சி அளிக்கிறார்.  உன் பேச்சு கா.. என்று சொல்லி காதலில் முடிக்கிறார்.. இந்த கவிதையில்..

பதினாறு கவிதை நூல்களின் ஆசிரியன்.. பரவசமூட்டும் கவிதைகள்.. இளைஞர்களுக்கு மட்டுமல்ல வலைஞர்களும் விரும்பிப்படிப்பவைதான் இவரது கவிதைகள்..

 *******



பச்சை வர்ணம் போர்த்த தோகை
பாதி சேலை அணிந்த பூவை..
இச்சை வர்ணம் பூசும் பாவை
இமை வருடும் குளிர்ந்த சோலை

என்று மலையரசின் எழிலை கூறி மயங்க வைக்கிறார்.

எழிலார்ந்த மலையின் அழகை மாய்ப்பது மனிதர்களே என்பதை

தேவதையை தெய்வத்தை
வானவளை வனப்பேச்சியை
அவளை அவளாய் வாழவிடுங்கள்
மழையும் மலையும் நமை உய்விக்க.

என்று சுட்டிக்காட்டி வேண்டுகோளும் விடுக்கிறார்.

இவரது கொள்ளை கவிதை மனதை கொள்ளைகொள்கிறது.
யதார்த்தம் தொனிக்கிறது.

சின்ன சின்ன சிகப்பு ரோஜாக்கள் நம்மையும் குழந்தையாக்கிவிடுகிறது.. ஒவ்வொரு வரியையும் ரசித்து படிக்க எளிய வரிகைகளை காயாண்டு இருக்கிறார். எதுகை, மோனையுடன் கவிதை மனதை அள்ளிச் செல்கிறது.

இவரது ஊடல்மழை உண்மையிலேயே வித்தியாசமான கற்பனையாக இருக்கிறது. 


வலையெங்கும் கவிதைப் பூக்களை அள்ளி வீசியிருக்கிறார். அதிலிருந்து ஒரு சில பூக்களை மட்டும் இங்கே தொடுத்திருக்கிறேன்.


*****

இதய பூக்கள்


கவிக்குவியல் கொட்டிக்கிறது இந்த இதயபூக்களில்..


அதிகாலை சூரியனே நட்சத்திர போர்வையை மடித்து வை என்று சூரியனுக்கே கட்டளை இடுகிறார் இவரது கவிதை மாதிரியில் 


பசியின் அளவீடுகளை மூனு ரெண்டு ஒன்று கவிதையில் காட்டியிருக்கிறார்.


இன்னும் நிறைய இருக்கிறது இதயப்பூக்களில் வாசித்துத்தான் பாருங்களேன்..


****
நன்றி நண்பர்களே!!! மற்றுமொரு அறிமுகத்தில் சந்திப்போம்.


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது