07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label மணியன். Show all posts
Showing posts with label மணியன். Show all posts

Sunday, March 23, 2008

வணக்கம் ! சுபம் !

வலைச்சரத்தில் விடை பெறும் நாள் வந்துவிட்டது. படித்த பதிவுகளை மீண்டும் அசை போட ஒரு நல்ல வாய்ப்பு.சென்ற வருடமே பொன்ஸ் எழுத அழைத்திருந்தும் இதற்கான எந்த ஒரு முன்னேற்பாடும் செய்து கொள்ளாமல் கடைசி நிமிடத்திலேயே அட்ரினல் சுரப்பது நமது இயல்பாக போயிற்று (நன்றி:TBCD). மாற்று! தள பங்களிப்பிற்காக கூகிள் ரீடரில் வகைபிரித்து வைத்திருந்தபோதிலும் காலத்தை வென்ற சில பதிவுகளுக்காக சுட்டிதேடி அலைந்ததும் பிற இனிய பதிவுகளில் மூழ்கி சுகமாகத் தான் இருந்தது.மர்பி விதி சொல்வதுபோல் ஈயடித்துக் கொண்டிருக்கும் கடைக்கு வாடிக்கையாளர்கள் கிடைக்கும்போதுதான் வேலைக்காரர்கள் விடுமுறையில் செல்வார்கள் என்பதாக அலுவலகத்திலும், பண்டிகை தினங்களில் வீட்டிலும் ‘ஆணி பிடுங்கும்' வேலை மற்றுமோரிரு இடுகைகள் இட தடங்கலாயிற்று. ஆனாலும் சிந்தாநதியின் எதிர்பார்ப்பான மூன்று இடுகைகளுக்கு குறைவில்லை.வாய்ப்பளித்த வலைச்சர ஆசிரியர்களுக்கு நன்றி.

கதை,கவிதை,இசை,ஆன்மிகம் மற்றும் நடப்புநிகழ்வுகளைப் பற்றிய சீரிய பதிவுகளை முந்தைய வலைச்சர ஆசிரிய்ர்கள் சுட்டியிருந்ததால் சற்றே மாறுபட்ட பதிவுகளை குறிப்பிட்டிருக்கிறேன்.

இந்திய பொருளாதாரம் தாராளமயமாக்கலின் ஒரு முக்கிய புள்ளியில் இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்துக் கொண்டிருக்கிறது.வெளிநாட்டு முதலீடு ஒருசாராருக்கு பலனளித்தப்போதிலும் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் தற்கொலைகள் மிகுந்த கவலையை தருகின்றன. பிரகாஷின் இந்தப்பதிவு ரமன் மக்சேசே விருது பெற்ற சாய்நாத்தின் சொற்பொழிவின் சாரத்தை கொடுத்து பிரச்சினையின் முழு வடிவத்தை விவரித்தது.மா.சிவகுமார் அவர்களின் விவசாயி - என்னதான் தீர்வு மற்றும் (தொடர்ச்சி), இரு பதிவுகளும் பின்னூட்டங்களும் வலைபதிவர்கள் கொண்ட கவலையை வெளிப்படுத்தின.அண்மைய நடுவண் அரசின் விவசாயக் கடன் தள்ளுபடி பிரச்சினைக்கு தீர்வாக அமையுமா என கேள்விகேட்கிறார் சம்சாரி. அரசு வகிப்போர் தேர்தல் வெற்றிகளைத் தாண்டிய கண்ணோட்டம் கொள்வார்களா ?

தமிழ் வலையுலகில் புதிய பலபதிவர்கள் தங்கள் தாக்கங்களை பதிவுசெய்ய வந்துகொண்டிருக்கிறார்கள்.அவர்கள் பொருளற்ற விவாதச் சுழலில் சிக்கிக் கொள்ளாமல் எட்டுதிக்கிலும் உள்ள கலைச்செல்வங்களை தமிழிற்கு கொண்டு சேர்த்து தமிழனை சொல்லிலும் பொருளிலும் பெருமை கொள்ளச் செய்ய வேண்டும்.இந்த சுட்டிகள் அவர்களுக்கு வழிகாட்டியாக அமையுமானால் நான் மகிழ்வுறுவேன்.

நன்றிகளுடன் விடைபெறுகிறேன்.
மேலும் வாசிக்க...

Saturday, March 22, 2008

விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி !

இயல்,இசை,நாடகமென இருந்த முத்தமிழுக்கு அழகு சேர்க்க அறிவியல் தமிழ் அரும்பிவர வலைப்பதிவுகள் தளம் அமைத்துக் கொடுக்கின்றன. தமிழ்ப்பதிவுகளிலே எனக்கு முதலில் அறிமுகமானதே வெங்கட்டின் உள்ளும் புறமும் பதிவுகளில் வந்த இயற்பியல் கட்டுரைகளே. அவரின் அறிவியல் சார்ந்த தமிழ்சொற்கள் மற்றும் கட்டமைப்புகள் எனக்கு புதிய வடிவமாக விளங்கின.நேருக்கு நேர் சொற்களை மொழிமாற்றுவதன் அபத்தத்தை சுட்டிய அவரது பதிவு எனக்கு கிடைக்கவில்லை.அவருடைய பழைய தளத்தை அணுக இயலவில்லை.இடையில் காணாமல் போயிருந்த அவர் மீண்டும் வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அண்மையில் மருத்துவத்துறையில் நடைமுறையில் உள்ள மூலக்கூறுகளை அவற்றின்மீதான காப்புரிமம் தீரும்நிலையில் சற்றே மாற்றி காபபுரிமத்தை நீட்டிக்கொள்ளும் வணிக ஏமாற்றை விவரிக்கும் அவரது முனைவாக்கம், மூலக்கூறு, மூலதனம் - பகுதி 1 மற்றும் பகுதி 2 அவரது அறிவியல் மற்றும் மொழி மேலாண்மையை விளக்கும்.

இவரைப்போலவே இந்திய அணுசக்தி துறையிலிருந்து கனடா சென்றிருக்கும் ஜெயபாரதனும் அழகான அறிவியல் கட்டுரைகளை தந்து வருபவர். இவரது பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலத்தை மர்மான ஈர்ப்பியல்
எப்படி ஆள்கிறது ?
பதிவையும் படியுங்கள். இவர் சீதையின் துன்பத்தை பதிவுசெய்யும் சீதாயணம் என்னும் முழுநீளநாடகத்தையும் எழுதியுள்ளார்.தாகுரின் கீதாஞ்சலியையும் தமிழில் தந்துள்ளார்.

தமிழார்வமுள்ள நுட்பவியலாளன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இராம.கி ஐயா அவர்கள் வேதியியல் பொறியாளர்.தமது வாகை மாற்றங்கள் என்ற பூதியலும் வேதியலும் அடிப்படையாகக் கொண்டெழுதிய பதிவில்
தமிழில் அறிவியற் கட்டுரைகள் எழுத விழைவு மட்டுமே, நமக்கு வேண்டும்; மற்றவை தானாகவே வரும். எழுதும் போது, நான் கூறிய சொற்களைத் தான் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பது கிடையாது. ஒரே கருத்திற்கு 4 சொற்கள் வெவ்வெறு ஆட்களால் பரிந்துரைத்து வந்தால், எது ஆழமான பொருளுடன், பரந்து பட்டு, பல்வேறு பயன்பாட்டுக்கும் ஏற்ற முறையில் பொருந்தி வருகிறதோ அந்தச் சொல்லை நடைமுறையில் நிலைக்கச் செய்யும் பாங்கு பொதுத் தமிழருக்கு என்றுமே உண்டு. எனவே கவலுறாமல் தமிழில் எழுத முயலுங்கள்.

எனக் கூறுகிறார். வானிலிருந்து பெய்யும் பனியில் படிகங்கள் உருவாவதெப்படி என எங்கும் பனிமழை பொழிகிறது! பதிவில் விளக்குகிறார் வைசா.விஞ்ஞானம் வளரும்போது அழிவுசக்தியும் அதிகரிப்பதை, கணினி பற்றி பல கேள்விகளுக்கு
தமது பதிவில் தீர்வு கூறிவரும் பிகேபி போட்டு தாக்கு என்ற இந்தப் பதிவில் விவரித்திருக்கிறார்.

நமது விக்கிபசங்க பதிவர்களின் கேள்விகளையொட்டி அறிவியல் ஆக்கங்களை தங்கள் குழுப்பதிவில் இட்டுவந்தார்கள்..சற்று ஆர்வம் தொய்ந்துள்ளதாகத் தெரிகிறது.வானவெளியில் குறுங்கோள்களைப் பற்றிய இந்த பதிவு பயனுள்ளது.

ஐன்ஸ்டைனுக்கும் அடி சறுக்கும்,சுஜாதாவுக்கும் என அண்மையில் பத்ரி எழுதியுள்ள கட்டுரை அறிவியலை குமுகாய அரசியல் எவ்வாறு பாதிக்கறது என வெளிக்கொணர்கிறது.

முந்தைய வலைச்சர ஆசிரியர் விஎஸ்கே அவர்களின் லப்டப் தொடர் இதயத்தைப் பற்ரியும் இதய நோய்களைப்பற்றியும் பல பயனுள்ள விதயங்களை விவரித்தது. சற்றுமுன்னில் அறிவியல் செய்திகளுக்கான போட்டியில் வென்ற
சிவீஆரின் நில் கவனி கேன்சர் தொடர் புற்றுநோயின் விவரங்களை பதிவு செய்தது.மனதின் சைகான்களை ஆராய்கிறார் சீனு என்கிற சீனிவாசன் கிருட்டிணசாமி.

பதிவின் நீளம்கருதி இத்துடன் முடித்துக் கொள்வோம்.நிச்சயமாக சுட்டியுள்ள பதிவுகளைப் படியுங்கள். பள்ளிப்பாடங்கள் போல கட்டடித்து விடாதீர்கள் :)
மேலும் வாசிக்க...

Thursday, March 20, 2008

ஊரெல்லாம் பாரு..உல்லாசம் ஜோரு..

பதிவுலகில் கணினிமுன் அமர்ந்தபடியே உலகம் சுற்றி பார்க்க நமது பதிவர்கள் அழகான படங்களுடன் பயாஸ்கோப் காண்பிப்பதை இன்று காண்போமா ? பயணக்கட்டுரைகள், எழுதுபவருக்கும் இனிமை, படிப்பவர்களுக்கும் இனிமை. உள்ளூர்,வெளியூர் என விரவியிருக்கும் பயணக்கட்டுரைகளில் சிலவற்றை இங்கே சுட்டுகிறேன்.

அருகிலிருக்கும் யாழ்பாணத்திற்கு இன்று செல்லமுடியாதநிலையில், வி ஜே சந்திரன் அவர்கள் தமது அனுபவங்களை யாழ்பாணம்: இரசித்தவையும் இரசிக்க முடியாது போனவையும் என சுட்டுகிறார். யாழ்பாணத்தின் திருவிழாவொன்றிலே கலந்து கொண்ட இன்பம் கிடைக்கிறது நமக்கு. அவரே கனடாவின் வல்மோரின் முருகன் கோவில் பற்றியும் நமக்கு தெரிவிக்கிறார். கனடாவில் அமைதியான ஈழம் போல உள்ளது.
இனி சில பதிவுகளின் பட்டியல்:
கனடாவின் க்யூபெக் மாநிலத்தின் மாண்ட்மொரென்சி அருவி : சினேகிதி
அமெரிக்கா:
கிராண்ட் கன்யான் தேசியப்பூங்கா : நக்கீரன் பரமசிவம்
சிகாகோ: SHEDD AQUARIUM, சிகாகோ - படங்கள் : சிவபாலன்
வாஷிங்டன் - ஒருநகர்வலம் (முதல் பகுதி) கல்யாண மாப்பிள்ளை மு.கார்த்திகேயன்

எழிலின் ஐரோப்பா: எழிலுலா
நார்வே: நாடு நல்ல நாடு - நோர்வே 1 கலை

கிழக்காசியா:
சிங்கப்பூர்: சிங்கப்பூர் சக்கரம் வடுவூர் குமார்
மலேசியா: லங்காவி போகலாம்..வர்றீங்களா? மைஃபிரண்ட்
பாலி : ஒரு புகைப்பட கண்காட்சி எம்கே குமார்

ஆஸ்திரேலியா:
சிட்னி:"Bondi Beach" போனோம்் கானாபிரபா

இவ்வளவு சொன்னபிறகு உலகம் சுற்றும் வாலிபியான துளசி டீச்சரின் பயணக்கதைகளை அனைவருக்கும் தெரிந்தவர் என்று குறிப்பிடாமல் விட்டால் பதிவு முழுமையடையுமா? ஆஸ்திரேலியா: கோல்ட்கோஸ்ட்டில் எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்? என்று அவர் அடிச்ச லூட்டியைச் சொல்லலாமா? அல்லது நியுசிலாந்து வரலாற்றை கட்டாயக்கல்வியாக்கிய கொடுமையைச் சொல்லலாமா?
நீங்க அங்க போய் செட்டிலாகவும் சொல்லிக் கொடுக்கிறார்: நியூசிலாந்து: பகுதி 68

மண்ணில் மட்டுமா, விண்ணிலும் தொட்டில் கட்டுவோம்...என்று வலைப்பதிவுலகிலேயே முதன்முதலாக பலூனில் பறந்தவரும் அவர்தான். ஆகாயத்தில் தொட்டில்கட்டி........ அவரைத் தொடர்ந்து ஜிரா எனப்படும் ராகவனும் இறக்கைகட்டி பறந்தார் .நான் பறக்கிறேனே மம்மி

என்ன அடுத்துவரும் பண்டிகை விடுமுறையில் சுற்றுலா செல்லத் தயாராகி விட்டீர்களா ? திரும்ப வந்ததும் உங்கள் அனுபவங்களையும் படங்களையும் பகிருங்களேன் !

புனிதவெள்ளி, மிலாது நபி, பங்குனி உத்திரம் மற்றும் ஹோலி கொண்டாடும் அனைவருக்கும் விழாக்கால வாழ்த்துகள் !!
மேலும் வாசிக்க...

Wednesday, March 19, 2008

படித்ததில் பிடித்தவை 1

வலைச்சரத்தில் ஒரு இடுகை இடுவதை விட நமது பதிவில் நாம் எடுத்துக்கொண்ட விதயத்தை விவரிப்பது எளிதாக தோன்றுகிறது. நினைவிலிருக்கும் ஆக்கத்திற்கான இணையத்தொடர்பை கண்டுபிடித்து கோர்த்து எழுதுவதற்குள் வேறொரு இணைய கோர்ப்பில் வேறெங்கோ சென்றுவிடுகிறோம். முந்தைய ஆசிரியர்களின் பொறுமையையும் முனைவையும் இன்றுதான் புரிந்து கொண்டேன். இந்தப் பின்னணியில் எனது நினைவுகளில் சிக்கிக்கொண்ட சில பதிவுகளை இன்று பதிகிறேன்.

காசி ஆறுமுகம் அவர்களை தமிழ்மணத்தினை ஆக்கியவர் என்றளவிலே அனைவரும் அறிந்திருப்பார்கள். அவரது எழுத்தாற்றலின் முழு திறன் அவரது வலைப்பதிவில் இன்றைய பொறுப்புகளால் வெளிப்படுவதில்லை.அவரது முன்பதிவுகளில் நுட்பங்களைப் பற்றி அழகான தமிழில் அவர் எழுதிய கட்டுரைகள் விக்கியில் இடம் பெறத் தகுந்தவை.அவரது தமிழில் எழுதலாம் வாருங்கள், வலையில் பரப்பலாம் பாருங்கள் , என் கோடு, உன் கோடு, யுனிகோடு தனி கோடு ஆகியன தமிழ்மணத்தில் பதிவுகள் கீற்றில் உள்ளன. படக்கோப்புகள் குறித்த அவரது கணினியில் கையாளப்படும்படங்கள் கட்டுரை மிகவும் எளியமுறையில் நல்ல விளக்கம் வழங்குகிறது. அவர் வலையில்லா பின்னல் என்ற தொடர் WiFi பற்றி விளக்கியது. தவிர அவரது சமையல் குறிப்புகளும் நன்றாக இருக்கும். பான்கேக் செய்வது பற்றி அவர் இட்டிருந்த ஒரு இடுகையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆண்பிள்ளை சமையல் பற்றிய இந்த இடுகையைப் படியுங்கள்.

உருப்படாதது நாராயண்:இவரது நட்சத்திரப் பதிவுகளின்போது அறிமுகமானவரின் எழுத்து என்னை மிகவும் ஈர்த்தது.பன்முகத்தன்மையோடு சமூகம், நுட்பம், அரசியல்,சினிமா என எல்லா துறைகளிலும் சிறப்பாக எழுதக்கூடியவர். இவரது சில பதிவுகளை இங்கு சுட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தியாவின் மென்பொறியாளர்களின் அபரிமித வளர்ச்சியை யொட்டி எழுந்த விவாதங்களின் பின்னணியில் சமச்சீரின்மை குறித்த இவரது பதிவு தொடர் பிரச்சினையின் பலபக்கங்களையும் காட்சிப்படுத்துகிறது.....சமச்சீரின்மை - ஒரு ட்ரைய்லர்

இவரது பதிவுகளில் சில:
சிலுக்கு சுமிதா புராணம்
கானா - சென்னை நகர்ப்புற இசை வடிவம் - பகுதி 1

பெனாத்தல் சுரேஷின பிளாஷ் படங்களும் அங்கதப் பதிவுகளும் அனைவராலும் விரும்பப்பட்டாலும் எனக்கு அவரது இந்த Bihar - ஒரு முரண்பாடுகளின் மூட்டை 02 Aug 05 பதிவு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

டிபிஆர் ஜோசஃப் சாரின் ஆற்றொழுக்கான நடையில் அவரது திரும்பிப் பார்க்கிறேன் தொடர் ஒரு வங்கியில் அவரையடுத்து நாம் பணிசெய்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.அடுத்து என்னவரப்போகிறது என வார இதழ்களில் வரும் நாவல்களைப் போன்று விறுவிறுப்பாக எழுதிவந்தார். அவரது சூரியன் கதைத்தொடரும் மனித இயல்புகளை மிக அழகாக வெளிக்கொணர்ந்தது.

இனி அடுத்த தொகுப்பை நாளை காணலாம்...
மேலும் வாசிக்க...

Monday, March 17, 2008

சொல்லை செயலாக்கியவர்கள்!

தமிழ்மண முகப்பில் எதிர்மறையான செய்திகளையே பார்த்து சலித்தவர்களுக்கு செயலில் இறங்கி சாதனைகள் புரிந்துவரும் சக பதிவர்களை இங்கே பதிகிறேன்.

திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வை பதிவுலகில் ஏற்படுத்தியதோடல்லாமல் அவர்களது பலவேறு துயரங்களின்/வலிகளின் ஆழத்தை வெளிக்கொணர்ந்தவர் லிவிங்ஸ்மைல் வித்யா. இவரது பதிவுகள் உண்மை உறைந்திருப்பதால் சூடானவை.

மங்கை: நலவாழ்வில் எய்ட்ஸ் நோயினால் துன்புறுவதே கொடுமையானது.அதிலும் கள்ளம்கபடில்லா பெண்கள் கல்யாண பந்தத்தால் அக்கொடுமைக்கு உள்ளாவது எத்தனை கொடியது... அவர்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வாழும்வகைக்கு துணைசெல்லும் மங்கையின்் சேவை மானுடம் போற்றுதற்குரியது. அவரது பதிவில் மீனாட்சி என்ற பாதிப்புக்குள்ளானவரின் இந்த இடுகை நிச்சயம் படிக்கவேண்டியவைகளில் ஒன்று.

சாலைகளின் குறுக்கே கட்டப்படும் கோவில்களா ? தொடர்வண்டிகளில் மனிதக்கழிவுகளை சூழலை பாதிக்காது வெளியேற்ற வழிவகை காணவேண்டுமா?காவல்துறைகளின் குறைகளை உரிய இடத்தில் சேர்த்துக்களைய வேண்டுமா ? நமது தருமி இருக்கிறார். இவரது இடஒதுக்கீட்டிற்கான பதிவுகள் அரசியல்சத்தங்களுக்கு அப்பால் தெளிவாக கேட்பவை. அவற்றை நிறைவேற்றுவதில் UPSC செய்யும் தில்லுமுல்லுகளை காட்சிப்படுத்தியவர்.

கோவில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் எனக் கூறியதால் கோவில்களின் மாநிலமாயுள்ளது தமிழ்நாடு. ஆனால் மக்கள் பெருந்திரளெனக் கூடும் சில கோவில்களைவிட்டால் பெரும்பாலானவை கவனிப்பாரின்றி சிதிலமடைந்து வருகின்றன. இந்நிலை மாற திருநாவுக்கரசரின் உழவாரப்பணி போல ஆலயம்தோறும் திருப்பணி செய்துவரும் மரபூர் சந்திரசேகரன் பழமையைப் பாதுகாக்கும் உன்னதப் பணியை செய்துவருகிறார்.

குழந்தைகளின் கல்விக்காகவும் ஊரக கல்வி மேம்பாட்டிற்காகவும் தனது நேரத்தை செலவிட்டு நமது கவனத்தைக் கவர்ந்த இம்சையின் இந்தப்பதிவு எவரது மனதையும் கரைக்கும். இவர் பங்காற்றும் Friends of Children அமைப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக வேண்டும்.

தமிழகத்தின் மோசமான இயற்கைச்சீற்றமான சுனாமி பாதிப்பின்போது தமிழ் வலைப்பதிவினரின் தரப்பில் ரஜினி ராம்கியும், பத்ரியும் தீவிரமாய் மீட்புபணிகளில் ஈடுபட்டிருந்தனர். ரோசாவசந்த் அவர்கள் சுனாமி நிவாரணத்திற்கு பதிவர்களின் முயற்சிகளை இந்தத் தளம் அமைத்து ஒருங்கிணைத்தார்.

வறியவர்களின் கல்விக்காகவும் மருத்துவசெலவுகளுக்காகவும் பதிவர்கள் என்றென்றும் அன்புடன் பாலா, செந்தழல்ரவி ஆகியோர் ஒருங்கிணைத்து உதவியதும் பதிவர்களின் சமூக அக்கறையை காட்டுவதாக அமைந்தது. தற்சமயம் பாலா அன்புக்குரிய அந்தோணிமுத்து அவர்களுக்கு உதவிட பதிவிட்டதும்அதன் தொடர்ச்சியாக பலநல்ல உள்ளங்களின் பொருளுதவியை ்வேஅடுத்தகட்ட வேண்டுகோளும் வைத்துள்ளார். இதனைக் கொண்டு சக்கரநாற்காலி கொடுத்திட பண உதவி கேட்டுள்ளார்.
நற்பணிக்கு நாமும் நம் பங்காற்றிடுவோம்.

எனது நினைவில் நின்றவர்களைச் சொல்லி விட்டேன்...இனி பின்னூட்டங்களில் உங்கள் நினைவிற்கு வந்தவர்களைக் குறிப்பிடுங்களேன் !
மேலும் வாசிக்க...

சரம் தொடுக்க வரம் வேண்டி...

வலைப்பதிவுகளின் ஆரம்பகட்டத்தில் ஒரு திசைகாட்டியாய் அமைந்த மதியின் வலைப்பூ என்ற கருத்தை சிந்தாநதி,பொன்ஸ் மற்றும் கயல்விழி கூட்டணி ‘வலைச்சரமாக' தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கட்டத்தில் ஆங்கில சாகரத்திலிருந்து தமிழ்முத்துக்களை தேடிட உதவிய தளம் இன்று ஆயிரக்கணக்கான தமிழ் வலைப்பதிவுகளில் படிக்கத் திணறும் வாசகர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது.தமிழ்மணத்திலே நட்சத்திர பதிவரை அடுத்து தனியிடம் கொண்டு சிறப்புற விளங்கும் தளம்.இதனை அழகுற நடத்தும் நண்பர்களுக்கு வாழ்த்துகள் ! இங்கு என்னை பங்கு பெற அழைத்தமைக்கு நன்றிகள்!

53 வலைச்சர ஆசிரியர்கள் எனக்குமுன் மிகச் சிறப்பாக சிறந்த வலைப்பதிவர்களையும் அவர்தம் பதிவுகளையும் அழகான வகைகளில் தொகுத்தளித்து ஒரு பாரம்பர்யத்தை உருவாக்கியுள்ளார்கள்.நாளும் பதியும் துளசி டீச்சர் போன்றவர்களே அலசி முடித்ததை மறுஅலசல் செய்திருக்கையில் பேருக்கு பதியும் நான் என்ன செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை. அதிலும் சென்றவாரத்தில் ஆத்திக நண்பர் வி எஸ் கே யின் அசத்தலான தொகுப்பின் பின்னணியில் கதிகலங்கி இருக்கிறேன்.இரண்டு ஆண்டுகளாக மணிமலர் என்ற வலைப்பதிவை எழுதிவந்தாலும் கடந்த ஆறுமாத காலம் எந்தவித மன உந்துதலும் ஊக்கமும் இன்றி வாசகனாக மட்டும் வலையுலகில் வலம் வருகிறேன்.இந்த மனநிலையில் பொன்ஸ் அவர்களின் தொடர்ந்த உந்துதலாலும் கயல்விழி முத்துலெட்சுமியின் அன்புகட்டளையாலும் இம்முயற்சியில் இறங்குகிறேன்.இந்தவாரம் இனிய வாரமாக அமைய தொடர்ந்து முருகனருள் முன்னிற்க !

முதல்பதிவு சுருதிசேர ‘ஸ ப ஸ' எனக் கனைத்துக் கொள்வதைப்போல நம்மைப் பற்றி சொல்லிக் கொள்ள வேண்டுமாம். இவ்வளவு வலைச்சர ஆசிரியர்கள் கண்ணில்படாமல் இரண்டுவருடத்திற்கும் மேல் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதிலிருந்தே நம்ம சரக்கு எப்படியென்று தெரிந்திருக்கும்..சுப்பையா சார்மட்டுமே எனது சபரிமலை பயணத்தை குறிப்பிட்டுள்ளார்.வருகை எண்ணிக்கையை கொண்டு நான் ஆட்சிமொழிபற்றி அரசியல்சட்ட வடிவமைப்பு மன்றத்தில் நடந்த விவாதத்தை சுட்டிக்காட்டிய இந்த பதிவு பலரின் கவனத்தைக் கவர்ந்தது.எனது நட்சத்திரவாரத்தில் எனது இளமை மீள்நினைவுகளை பதிந்த
ஞாபகம்வருதே..தருமமிகு சென்னையில்
நான்மாடக்கூடலில் நான்!
ஓ கொல்கொதா !
...இந்த பதிவுகள் எனக்குப் பிடித்தவை.

இந்தளவு அறிமுகம் போதுமென்று நினைக்கிறேன்..நாளையிலிருந்து எடுப்பதும் தொடுப்பதும் நிகழும்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது