07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label மதுரை சொக்கன். Show all posts
Showing posts with label மதுரை சொக்கன். Show all posts

Sunday, August 5, 2012

நிற்காது வீசும் புதுத்தென்றல்.

”சூடுவன்:நெஞ்சிடை வைப்பன்;பிரான் என்று
பாடுவன்;பன்மலர் தூவிப் பணிந்து நின்று
ஆடுவன்;ஆடி,அமரர் பிரான் என்று
நாடுவன்;நான் இன்று அறிவதுதானே”----(திருமந்திரம்)


----------------------------------------------------


பஞ்சகவ்யம் என்பது பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களால் உருவாக்கப்படும் ஒரு கலவை. பஞ்சகவ்யம் - பஞ்ச என்றால் ஐந்து மற்றும் கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்கள் - 1) பால் 2) தயிர் 3)நெய் 4)சாணம் 5)கோமியம்.
இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கப் படுவதே பஞ்சகவ்யம். இது இந்து சமய இறை வழி பாட்டின்போது முக்கியபூசை பொருளாகவும், ஆயுர்வேத வைத்தியம், வேளாண்மை பயிர் பாதுகாப்பிலும் பயன் படுகிறது. பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


பசுவுன் மடியிலிருந்து பெறப்படும் பொருட்களே குறிக்கப்படுவதாகவும் அவை,பால், தயிர்,மோர், வெண்ணை, நெய் என்றும் சிலர் கூறுவர்.  


-------------------------------------------------


1)சிறு புன்னகையால் இந்த உலகை அழகாக்க வருகிறார் அவரது செவ்வாய்,சுக்கிரனுடன், விக்னா@யமுனா. இவரது பயணத்திற்கான பயணம் நிச்சயமாகச் சிரிக்க வைக்கும்!


2)கொஞ்சம் பூக்கள்,கொஞ்சம் புன்னகை ,கொஞ்சம் கண்ணீரால் நிறைந்தது இந்த மௌனதேசம் இடுகை ஒன்றில் மகாத்மா காந்தி பெண்களுக்காகச் சொன்ன பிரபல வாசகம் ஒன்றை நினைவு கூர்ந்திருக்கிறார். அதே வாசகத்தையே சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி யொருவர் தனது நேற்றைய தீர்ப்பில் சொல்லி யிருக்கிறார்.பெண்களுக்கான , என்றும் பொருந்தும் வாசகம்!


3)வாழ்க்கையின் அவலங்களை ,யதார்த்தங்களைச் சின்னச் சின்ன வரிகளில் அழகான கவிதைகளாக வடிக்கும் இனிப்பு மனிதர்--சீனி!  இவரது மன்னிப்பு சிறப்பான சிந்தனை கொண்டது


4) இனியவை கூறுகிறது கலாகுமரனின்  இந்த வலைப்பூ.கோவை அருகில் உள்ள பேரூர் பற்றி இவர் எழுதியுள்ள சுவடுகளைத் தேடி என்ற தொடர்பதிவு சிறப்பாக இருக்கிறது


5)பதிவின் பெயரும் இணைந்த பெயர் சிகரம்பாரதி. கல்யாண வைபோகம் என்னும் தலைப்பில் கவனிக்கப்பட வேண்டிய, குறு(வலை)நாவல் ஒன்று எழுதி வருகிறார். பாருங்கள். 


இன்னும் இருக்கிறார் எத்தனையோ!
------------------------------------------------------------
வலைப்பூச் சரம் தொடுக்கப் பணித்தார் சீனா
மலைத்தேன் ஒரு கணம் செய்வது நானா?!
மலைத்தேன் போல் இனிக்கும் பல பதிவுகள் !
தொலைப்பேனோ பகிரும் வாய்ப்பை நான்?

சொல்ல நினைத்தது எத்தனையோ
சொல்லி முடித்ததோ கொஞ்சமே!  
சொல்ல நினைத்ததிலும்
சொல்லி முடித்ததிலும் 
இல்லை ஏதும் குறை.
சொல்லத் தெரியாத இந்த 
சொக்கனிடம்தானே குறை.


வாய்ப்பளித்த சீனாவுக்கும்
வந்து வாழ்த்திய மக்களுக்கும்
படித்து ரசித்த  உள்ளங்களுக்கும்
படிக்காமல் விட்ட பாசங்களுக்கும்


நன்றி,நன்றி,நன்றி!


மேலும் வாசிக்க...

Saturday, August 4, 2012

தொடர்ந்து வீசும் புதுத்தென்றல்

தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்;
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை;
சேயினும் நல்லன்;அணியன் நல் அன்பர்க்கு;
தாயினும் நல்லன்;தாழ் சடை யோனே ---(திருமந்திரம்)


---------------------------------------------------------------


சிவதத்துவங்கள்
உயிரின் நிலைகளை அவத்தைகள் என்று குறிப்பிடுவர்.


 ஐந்து காரிய அவத்தைகள்
கீழ்வருமாறு :

1) நனவு : இது வடமொழியில் சாக்கிரம் என்று
சொல்லப்படும். இந்நிலையில் உயிர்
புருவ நடுவிலிருந்து செயல்படும்.
2) கனவு : சொப்பனம்     என்று கூறப்படும்.
இந்நிலையில் கண்டத்திலிருந்து உயிர்
செயல்படும்.
3) உறக்கம் : சுழுத்தி     என்று     கூறப்படும்.
இந்நிலையில் உயிர் இருதயத்திலிருந்து செயல்படும்.
4) பேருறக்கம் : இது துரியம் என்று கூறப்படும்.
இந்நிலையில் உயிர் உந்தியிலிருந்து
செயல்படும்.
5) உயிர்ப்படக்கம் : துரியாதீதம்     என்று கூறப்படும்.
இந்நிலையில் உயிர் மூலாதாரத்திலிருந்து
செயல்படும். 











-------------------------------
1) இரண்டு மாதக் குழந்தையால் ஓட முடியுமா?ஓடுவது மட்டுமல்லை சிந்தனைச் சிறகுகளை விரித்துப் பறக்கிறது இரண்டே மாதம் நிறைந்த இக்குழந்தை.சலனம் என்ற தலைப்பில் இரண்டு பாகத்தில் ஒரு அருமையான நீள்கதை எழுதியிருக்கிறார்.இன்னும் எதிர்பார்க்க வைக்கிறார், சாமுண்டேஸ்வரி பார்த்தசாரதி


2)அமிழ்ந்து கிடந்தது போதும் பொங்கி எழு சுனாமியாய் என்ற முழக்கத்தோடு வரும் பெண் என்னும் புதுமை இவர்,கோவை மு சரளா.இவரது நாட்குறிப்பின் பக்கங்கள்,நமக்குள்ளும் பல பக்கங்களைத் திறந்துவிடும்..


3)”என் இதயம் பேசுகிறது” என்ற தலைப்புக்குச் சரியாக அவர் இதயம் பேசும் உண்மைப் பேச்சு இந்த வலைப்பூ. ”மரித்துப் பிளைத்தவள்” என்ற தொடரில் இலங்கை யுத்தபூமியில் தன் அனுபவங்களை,வலிகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்,எஸ்தர்சபி


4)ரசிக்கத்தக்க கிறுக்கல்கள்தாம் இவை.எங்கே (எவற்றை) விலை பேசுகிறோம் நாம்? என்ற கேள்வியுடன் இன்றைய வாழ்வின் யதார்த்தத்தை எடுத்துக் காட்டுகிறார்,யுவராணி தமிழரசன்.மழையை ரசிப்பவரா நீங்கள்?பாருங்கள் இந்த மழைநேரம்


5)பதிவு தொடங்கி இரு மாதங்களிலேயே பிரபலமாகி ஒரு லட்சம் ஹிட்ஸை நெருங்கிக் கொண்டிருக்கும் ஹாரிபாட்டர்.
முரண்செய்  என்ற ஒரு குறு நாவல்,சீரியஸ் பதிவு என்ற புதுமை முயற்சி என்று கலக்கிக் கொண்டிருக்கிறார் இவர்.


நாளையும் வீசும் தென்றல்!
மேலும் வாசிக்க...

Friday, August 3, 2012

புதிய தென்றல் வீசுகிறது!

”அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவராலாவ தொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே”----(திருமந்திரம்)


----------------------------------------------


பஞ்ச பூதங்கள் எனப்படுபவை வடமொழியில்-பிருதிவி,அப்பு,தேயு,வாயு,ஆகாயம்..

தமிழில்-நிலம்,நீர்,நெருப்பு,வளி,வெளி.சிவ பெருமானின் ஐந்து தலங்கள் பஞ்ச பூதத்தலங்கள் என்றழைக்கப் படுகின்றன. அவையாவன--நிலம்-காஞ்சி;,நீர்-திருவானைக்கா;நெருப்பு-திருவண்ணாமலை;காற்று(வளி)-திருக்காளத்தி;ஆகாயம் (வெளி)-சிதம்பரம்


----------------------------------------------------
2011-2012 இல் வீசத்துவங்கிய தென்றல்.


1)இந்தக் கவிமனம்  கொண்ட வர் தன் பெயரை எண் கணித சாத்திரப்படி எழுதுகிறார் என நினைக்கிறேன்.முதல் பதிவே தொடர்கதைதான்.போகப் போகத் தெரியும் என்ற தொடர் கதை 18 அத்தியாயங்கள் முடிந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.போகப் போக அல்ல,இப்போதே தெரிகிறது,அவர் திறமை.


2)மழை கழுவிய பூக்களின் அழகை நீங்கள் பார்த்த துண்டா?அப்படிப்பட்ட ஒரு பூ இது.சிறிது வித்தியா சமான தமிழ் நடையில் வருகிறது இந்தக் காட்சிப் பிழைகள். இவரது எழுத்து நடையில் எஸ்.பொ.வின் தாக்கம் இருப்பது போல் எனக்குத்  தோன்றுகிறது. அதிசயாவின் வலைப்பூ


3)என் ஜன்னலுக்கு வெளியே பார்த்து ரசித்தது உங்களுக்கும் என்று காட்டுகிறார் நிரஞ்சனா.நினைத்ததைத் துணிச்சலுடன் சொல்லும் தைரியம் இவரிடம் இருக்கிறது. தற்கால மாணவர் களின்  பொது அறிவு பற்றிய இவரது ஆதங்கம்  இங்கே.


4)இந்த வரலாற்று சுவடுகளைப் பின் பற்றினால் பல புதிய அரிய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.அறுவை சிகிச்சை வரலாறு என்று நான்கு பதிவுகளில் அன்று முதல் இன்று வரையான அனைத்துத் தகவல்களையும் விளக்கமாக எழுதியிருக்கிறார்.அவசியம் படியுங்கள்.


5).திடங்கொண்டு போராட வருகிறார் சீனு.நான் சென்னையின்  காதலன்.சென்னைக்காதல் என்று சில பதிவுகள் எழுதினேன்.அதே சென்னை இவரது பார்வையில் எப்படி இருக்கிறது?சுவாரஸ்யம்தான்.பாருங்கள்.


நாளை ஐவர்.
மேலும் வாசிக்க...

Thursday, August 2, 2012

இவர்களும் பீஷ்மர்களே!

”சிவனொடொக் குந்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கு யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன் ஒளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே”--(திருமந்திரம்)


---------------------------------------------------
புலன்கள் ஐந்து.நாம் சாதாரணமாகச் சொல்பவை-கண்,காது,வாய்,மூக்கு,மெய் என்பவை.ஆனால் இந்திரியங்களை இரண்டாகப் பிரிப்பர்-கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் என்று.


கர்மேந்திரியங்கள்-வாக்கு,பாதம்,கை,எருவாய்,கருவாய்.
ஞானேந்திரியங்கள்-செவி,கண்,மூக்கு,நாக்கு,மெய்.

-----------------------------------------------------

1)பதிவின் பெயரே கட்டுமானத்துறை என்பதால் துறை சார் பதிவுகள் அநேகம் இருக்கின்றன. நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களை விளக்கிச் சொல்கிறார்.ஒரு மேம்பாலம் கட்டுவதில் என்ன தவறு செய்திருக்கிறார்கள் என்பதச் சுட்டிக் காட்டுகிறார்.நடுவில் உத்திரமேருர், காளஹஸ்தி,சோலிங்கர் என்று நம்மை அழைத்துச் செல்கிறார் வடுவூர் குமார்.


2)free  mason  என்பது தமிழில் இலவசக் கொத்தனார் ஆகி விட்டது.2006 த்திலிருந்து எலவசமாகக் கொத்தி வருகிறார்.  சொல்வதை நகைச்சுவையாகச் சொல்வதில் வல்லவர்.தமிழில் நாம் செய்யும் பிழைகள் பற்றி,அன்றாட வாழ்வில் பயன் படுத்தும்  சொற்றொடர்கள் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார்.(உ-ம்)வாழ்த்துகளா,வாழ்த்துக்களா?” 
சில சுவாரஸ்யமான க்விஸ் பதிவுகளும் உண்டு. பாருங்கள்”மொழியறிவும்,முழியறிவும்-க்விஸ் பாகம்-1”(400 பின்னூட்டங்களா?!)

3)2006 இல் மலர்ந்த இன்னொரு பூ வல்லிசிம்மனின்” நாச்சியார்” 
சமீபத்தில்  எழுதிய கும்பகோணத்திற்கு ஒரு புண்ணியப் பயணம்  அவரது கோவில் பயணக்கட்டுரைகளுக்கு ஒரு மாதிரி.
தனது பயணங்கள் பற்றி மிகச் சுவாரஸ்யமாக அநேகப் பதிவுகள் எழுதியுள்ளார்.அவரது புகைப்படங்களே எல்லவற்றையும் விளக்கும்!(உ-ம்)ஸ்விஸ் பயணங்கள் 

4) / இந்தக் கோவி கண்ணனின் காலம் 2006இல் தொடக்கம்.சமீபத்தில் எழுதிய பழைய சோறு நல்லதா என்ற பதிவு, நீண்டநாள் கருத்துகளை உடைக்கிறது!அறிவியல் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்-. உலக அறிவியலின் உச்சம் - ஒரு கற்பனைக் கதை ! .

5)2006 இல் மலர்ந்த மற்றொரு பூ. இந்த உலகின் புதிய கடவுள்.சமீபத்திய பதிவு அரளியும் நம்பிக்கைகளும். படித்துப் பாருங்கள் செல்வனின்  வலைப்பூ.

நாளை?!

மேலும் வாசிக்க...

Wednesday, August 1, 2012

இன்னும் சில பீஷ்மர்கள்

போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை
மேல்திசைக்குள் தென் திசைக்குஒரு வேந்தனாம்
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே”- -----(திருமந்திரம்)

சிவபெருமானின் முகங்கள் ஐந்து,அவையாவன-சத்யோஜாதம்,வாமதேவம்,அகோரம்,தத்புருஷம்,ஈசானம்.
இம்முகங்களை வணங்கும் ஸ்லோகம் ஸ்ரீருத்ரத்தில் உள்ளது.
இவை தவிர அதோமுகம் என்று ஒன்று உண்டு என்றும்
சொல்வர் 


---------------------

1)அவரே முட்டி மோதித் தெரிந்து கொண்டவற்றைப் பற்றி நம்மிடம் சொல்ல ஆசைப்படுகிறார் இவர்.2004 முதல் இன்று வரை அசராமல் எழுதி வருகிறார். .தன் எண்ணங்களை எந்த வித தயக்கமோ அச்சமோ இன்றிச் சொல்பவர். பழனி பஞ்சாமிருதம்தான் பிரசித்தி பெற்றது என்றில்லை. இவரது நங்கநல்லூர்பஞ்சாமிருதமும்தான்! டோண்டு என்றால் அறியாதவர் இருக்க மாட்டார்கள்.


2))எல்லாம் எல்லோருக்கும் என்று பிச்சைப் பாத்திரம் ஏந்திவருகிறார் சுரேஷ் கண்ணன்.
2004 இல் மலர்ந்த வலைப்பூ.இவரே கூறுவது போல்,இலக்கியம், திரைப்படம் போன்றவை பற்றியே அதிகம் உரையாடப்படும் ஒரு தளம்.சமீபத்தில் பில்லா 2 படத்துக்கு ஒரு விமரிசனம் எழுதியிருக்கிறார். அதன் கடைசி வரி-’நச்’
--// Final verdict: படத்தில் 'தல' இருக்கிறது.மூளைதான் இல்லை. :)//

3)இந்தப் பினாத்தல்கள்  2004 இல் ஆரம்பித்ததுதான். எண்ணிக்கை குறைந்தாலும் இன்னும் ஓயவில்லை.நமது கல்விமுறை பற்றி +2 சாமியார்கள் என்று ஒரு பதிவு.படித்துப் பாருங்கள்

4)பாண்டியனின் சந்தேகத்தைத் தீர்க்கச் சென்ற தருமி தெரியும்.இந்தத் தருமியும் சந்தேகம் தீர்க்கும் பேராசியர்தான்.  2005 இல் மலர்ந்த வலைப்பூ இந்தத் தருமி.எல்லா விதமான செய்திகள் பற்றியும் எழுதுகிறார். தருமியின் சின்னச்சின்ன கேள்விகள் படித்துப் பாருங்கள்.

5)2006 இல் பதிவு தொடங்கி இன்று வரை எழுதிக் 
கொண்டி ருக்கும்  வல்லவர் இவர்.
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்” என்பதே இவர் நோக்கம். தொழிலதிபர்.முன்பு பதிவர் பட்டறை,பாசறை என்று கலக்கியவர்.துறை சார்ந்த பதிவுகள் பல எழுதி யுள்ளார்.(economics)  (பொருளாதாரம்)என்ற தலைப்பில்  50 பதிவுகள் எழுதியுள்ளார்கட்டாயம் படித்துப் பாருங்கள்.நிறைய வாசிக்கிறார்.  வாசிப்பதைப் பகிர்ந்து கொள்ளவும் செய்கிறார். இவரது சமீபப் பதிவு” காலடித்தடங்கள்,நிழல்கள் மற்றும் நிதர்சனம்.”


நாளை சந்திப்போம்..

 

மேலும் வாசிக்க...

Tuesday, July 31, 2012

பீஷ்ம பிதாமகர்கள்-நாள்-2

”ஒன்று அவன்தானே; இரண்டு அவன் இன்னருள்;
நின்றனன் மூன்றினுள்;நான்கு உணர்ந்தான்;ஐந்து
வென்றனன்;ஆறு விரிந்தனன்;ஏழு உம்பர்ச்
சென்றனன்;தான் இருந்தான் உணர்ந்து எட்டே”.(திருமந்திரம்)


******************************





விநாயகப் பெருமானின் ஐந்துகரங்கள்- ஐந்துகரங்களும் ஐந்தொழில்களைச் செய்கின்றன.

அவையாவன-படைத்தல்,காத்தல்,அழித்தல்,அருளல்,மறைத்தல்.

கும்பம்  ஏந்திய கரம்-நம்பிக்கை அளிக்கும் தும்பிக்கை- படைத்தலையும் 

மோதகம் ஏந்திய கரம் காத்தலையும்,

அங்குசம் ஏந்திய கரம் அழித்தலையும்,

பாசம் ஏந்திய கரம் மறைத்தலையும்,

அபயகரம் அருளலையும் குறிக்கும்.

சிலர் பாசம் ஏந்திய கரம் படைத்தலையும்,மோதக கரம் மறைத்தலையும் உணர்த்தும் என்றும் கூறுவர்.


*********************************
முன்பே சொன்னேன் ,நான் 2007இல் என் வலைப்பூவைத் தொடங்கினேன் என்று.அதற்கு முன்பிருந்தே எழுதிக் கொண்டிருக்கும் சிலர் இருக்கிறார்கள். 

பல நேரங்களில் எழுதியது போதும் கடையை மூடிவிடலாம் என்ற எண்ணம் எனக்கு வருவதுண்டு. ஆனால்,இவர்கள் இன்னும் அயராமல் அதே உற்சாகத் துடன் எழுதிக் கொண்டி ருக்கும் வித்தகர்கள்.

1) 2003 இல் மலர்ந்த பூ இந்தக் கவினுலகம்.முழு ஒன்பது ஆண்டுகளைக் கடந்து விட்ட பதிவு.இப்போதெல்லாம் எண்னிக்கை குறைந்து போனாலும் இன்னும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்.இவர் எழுதிய ” ஆலவட்டம்” என்ற தொடர் பதிவு  குறிப்பிடத்தக்கது


2)இவரும் 2003இலிருந்து எழுதி வருகிறார்.அரசியல், இலக்கியம், சினிமா, விளையாட்டு என்று பலவும் இருக்கும் இவர் பதிவில்.2009க்குப்பின் ஒரு இடை வெளி,2012இல் மீண்டும் எழுதத் துவங்கியிருக் கிறார். இப்போது பெரும்பாலும் அமெரிக்காவின் தமிழ் நிகழ்வுகள் குறித்தே எழுதுகிறார்,இந்த பாஸ்டன்பாலா. பழைய பதிவுகளைப் படித்துப் பாருங்கள்.

3) 2003 இல் மலர்ந்த வலைப்பூ,இந்த டுபுக்கு.பல பதிவுகளில் ஒரு நகைச்சுவை இழை கலந்தே இருக்கும். படித்துப் பாருங்கள் இந்த 
  வித்துவான்




4)2003 இல் மலர்ந்த மற்றொரு வலைப்பூ இந்த நினைவுத் தடங்கள்.சிறுகதை நாவல், கவிதை,இலக்கிய அனுபவங்கள்  என்று அனைத்தும் எழுதும் இலக்கிய வாதி.கால நதிக்கரையில் என்று ஒரு குறிப்பிடத்தக்க நாவல் 2007ல் எழுதியி ருக்கிறார்.’ எழுத்துக்கலைபற்றி இவர்கள்’ என்று 40 பதிவுகளில் பிரபல எழுத்தாளர்களின் கருத்துகளைத் தொகுத்து தந்திருக்கிறார். பிரமிக்க வைத்திருக்கிறார்.

5)ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த பொருள்.வீட்டில் வைத்து வளர்த்து வழிபடுவதே நன்மை பயக்கும். மருத்துவ குணங்களும்  நிரம்பியது.மாதா என்று அழைக்கப்படுவது. ஆம்,துளசியன்றி வேறென்ன?துளசி அக்கா,துளசி றீச்சர் என்றெல்லாம் மரியாதையுடன் அழைக்கப்படும் துளசி கோபால் அவர்களின் இந்த துளசிதளம்,2004 இல் தொடங்கப் பட்டது.ஆயிரம் பதிவுகளை அநாயாசமாகக் கடந்த பின்பும் இன்றும் அதே உற்சாகத்துடன் எழுதிக் கொண்டிருப்பவர். இவரது பயணக்கட்டுரைகள் படிக்க மிகவும் சுவையானவை. அவர் சென்ற இடங்களை நமக்கும் நேரில் பார்ப்பது போல் காட்டி விடுவார்.இப்போது எழுதிக் கொண்டிருக்கும் ‘பிரிஸ்பேன்பயணம்’ என்ற தொடரைப் படித்துப் பாருங்கள்.


நாளை அடுத்த ஐந்து பேர்!
மேலும் வாசிக்க...

Monday, July 30, 2012

முதல் மலர்

”ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.”  (திருமந்திரம்)


***************
 
விநாயகரின் கரங்கள் ஐந்து.அவர் தந்தை சிவனின் முகங்கள் ஐந்து. இயற்கை பூதங்கள் ஐந்து.நமது புலன்கள் ஐந்து. நிலத்தின் வகைகள் ஐந்து.பாண்டவர்கள் எண்ணிக்கை ஐந்துஒரு கை விரல்கள் ஐந்து.

நாம் தினம் பார்க்கப்போகும் பதிவுகளின் எண்ணிக்கையும் ஐந்தே!

----------------------------------------------------------------
 ------------------------------------------


சரத்தில் முதல் மலர் சுய அறிமுக மலராக  இருக்க வேண்டும் என்பது நடைமுறை. 
அந்நடை முறையைப் பின்பற்றி முதலில்  என் வலைப்பூ அறிமுகம்.

அறிமுகம் செய்தால்தான் பலருக்குத் தெரிய வரும் என்ற நிலைதான் இந்த வலைப்பூவுக்கு.

2007 ஆம் ஆண்டில் இரண்டு கடைகள் திறந்தேன்.


மற்றது மயிலை டப்பாச்செட்டி கடை போன்ற நாட்டுமருந்துக்கடை.

இரண்டாவதுதான் இந்த ”நமக்குத் தொழில் பேச்சு ”என்ற வலைப்பூ.

நான் அறிந்த,நான் படித்த திருமந்திரக் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவாவில் ,அதன்மூலம் நாமும் கற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில், தொடங்கப்பட்ட வலைப்பூ,மதுரை சொக்கனின்,  ”நமக்குத் தொழில் பேச்சு”

மக்கள் தினமும் நாட்டு மருந்துக்கடைக்குக் கூட்டம் கூட்டமாய்ப் போவதில்லை.

தேவை ஏற்பட்டால் ,அக்கடைக்குச் செல்வர்.இல்லையேல் கடையில் காற்றாடும்.

ஆனால் அக்கடையின் தேவையை மறுக்க முடியாது.

அது போன்றதுதான் ஆன்மீகப் பதிவு என்பதும்.

திருமந்திரப்பாடல்களை குட்டிக்கதை மூலம் விளக்க எண்ணி,முதலில் சில பதிவுகள் எழுதினேன்.


முதல் பதிவாக அமைந்தது இந்த ”இரண்டல்ல”(அத்வைதம்) என்ற பதிவு.


வேத முதல்வனைப் பற்றிப் பேசும் பதிவு முதல் பதிவாக அமைந்தது பெருமைதானே.


இவ்வரிசையில் வந்த சில பதிவுகள்-’இறைத் தத்துவம்’,’யாக்கை நிலையாமை’
ஆகிய  பதிவுகள்

அந்த பாணியிலேயே சில பாடல் விளக்கங்கள்.ஆனால் அதிகம் எழுதவில்லை. 2007இல்தான் அதிகமாக 12 பதிவுகள் எழுதினேன்.இது வரை மொத்தம் 28 பதிவுகள்தான்.எனவே இவற்றில் எனக்குப் பிடித்த பதிவுகள் பற்றிச் சொல்வது மிக எளிதே!திருமந்திரமே எனக்குப் பிடித்த நூல்தான். அதைப் பற்றி என்ன எழுதினாலும் எனக்குப் பிடித்தே இருக்கும் .இருப்பினும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில்,சூனிய சம்பாஷணை  பற்றிய பதிவுகள். 


குறிப்பாக,”கூறையுஞ்சோறும்’ ’பார்ப்பான் அகத்திலே’ ஆகிய பதிவுகள், அதுவரை எப்பதிவும் பெறாத வரவேற்பைப் பெற்றன.

28 பதிவுகளே தந்த ஒரு பதிவர் வலைச்சரப் பொறுப்பில் இன்று என்றால் அதற்குத்துணை நிற்பது அந்த பல்பொருள் அங்காடிதான்.


நாட்டு மருந்துக்கடை மதுரையில்;பல்பொருள் அங்காடி சென்னையில்.


இங்கு சொக்கன்பொறுப்பு;அங்கு பித்தன்.பொறுப்பு!


இன்று நான் இங்கிருப்பதற்கோஅந்தத் தில்லைக் கூத்தனே பொறுப்பு!

நாளை சில பழம்பெரும் பதிவர்களைப்  பீஷ்ம பிதாமகர்களைப் போற்றுவோமா?
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது