07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label மதுரைவாசகன். Show all posts
Showing posts with label மதுரைவாசகன். Show all posts

Tuesday, April 17, 2012

கடம்பவனத்திலிருந்து...


எல்லாம் பெரிய விஷயங்கள்தான்; எல்லோரும் உயர்வானவர்கள்தான். மனிதர்களுக்கு அன்பு என்கிற பெரிய வஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. மனிதனை நெருங்குகிறதுக்கு எவ்விதத் தடையுமில்லை. எவ்வளோ இழந்தாலும் பெறுகிறதற்கும் எதாவது இருந்து கொண்டேதான் இருக்கிறதென்று நினைக்கிறேன். ஸ்ரீ சுந்தர ராமசாமி சொன்னது மாதிரி, ‘எதையாவது இழந்துதான் எதையாவது பெறுகிறோம்’ என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப்படுகிறது. கலை, மனம் சம்பந்தப்பட்டது; ரசனை பூர்வமானது; உண்மையோடு நெருங்கிய சம்பந்தமுள்ளது. நல்ல கலைஞன் ஜனங்களிடம் பொய்சொல்ல மாட்டான். கலைக்கு பொய் ஆகாது. - வண்ணநிலவன்

கடம்பவனத்திலிருந்து பதிவுகளைத் தொடர்கிறேன். முதலில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரான வண்ணநிலவனைக் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய அவர்அப்படித்தான் என்னும் கட்டுரை வாசித்துப்பாருங்கள். நீங்களும் வண்ணநிலவனின் தீவிர வாசகனாகிவிடுவீர்கள். வண்ணதாசனின் அகமும் புறமும் வாசித்துப்பாருங்கள். தாமிரபரணியின் ஈரம் உங்கள் மீதும் பரவட்டும். முறையான கழிப்பறை வசதிகள் இல்லாமலிருக்கும் கல்விக்கூடங்களைப் பற்றி நாஞ்சில்நாடன் எழுதிய கட்டுரை பல கல்விநிலையங்களைத் திருந்த வைத்தது. கடலோரகிராமத்துமக்களின் கதைகளை எழுதிய தோப்பில் முகமது மீரானின் தளத்தையும் வாசித்து பாருங்கள். அவரின் ஆளுமை தெரியும்.

கவிஞரும் சமூகசேவகியுமான சக்திஜோதியின் தளத்தையும், சிறுகதைகள் மற்றும் கவிதைகள் எழுதிவரும் விஜயலட்சுமியின் தளத்தையும் வாசித்துப்பாருங்கள். இதுவரை குறிப்பிட்ட ஆறுபேருடைய எழுத்தையும் பதிந்து வரும் சுல்தான் அவர்களுக்கு நன்றிகள் பல. அறிவுமதி, யுகபாரதி, தமிழச்சிதங்கப்பாண்டியன் போன்ற கவிஞர்களின் கவிதைகளையும் கட்டுரைகளையும் வாசித்துப்பாருங்கள். கவிதை மீதான உங்கள் காதலும் அதிகரிக்கும்.

புத்தகங்களுக்கான சிலிக்கான் செல்ஃப் என்னும் தளத்தில்தற்போது ஜெயமோகனின்விஷ்ணுபுரம் குறித்ததொடர்பதிவுவந்துகொண்டிருக்கிறது. கூட்டாஞ்சோறு தளத்தில்நல்ல பதிவுகள் பலஅணிவகுத்து நிற்கின்றன.

விழியன் எடுக்கும் நிழற்படங்களைப்பார்க்கும் போது எனக்குப் பொறாமையாய் இருக்கிறது. நல்ல பதிவுகளைத் தொடர்ந்து எழுதிவரும் நற்றமிழன் தற்போது கூடங்குளம் அணுஉலைக்கெதிராக எழுதிவரும் பதிவுகள் முக்கியமானவை. பன்றிக்காய்ச்சலுக்குக்கூட மருந்துண்டு, ஐ.பி.எல் கிரிக்கெட் கிறுக்கிற்கு மருந்தில்லை என்னும் புரட்சிகரமாணவர்இயக்கத்தின் தளத்தைப் பாருங்கள். கிரிக்கெட் தவிர மற்ற நல்ல விளையாட்டுகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

மனசை மேம்படுத்த மந்திரச்சாவி என்னும் தொடர் எழுதிவரும் எழுத்தாளர் நாகூர்ரூமியின் தளத்தை வாசியுங்கள். நெகிழ்வூட்டும் நினைவுகளைப் பதிந்து வரும் ஆருத்ரா தரிசனம் தளத்தில் சைக்கிள் குறித்த நினைவுகளை வாசித்து பாருங்கள். நீங்கள் சுஜாதாவின் வாசகரா? அப்பொழுது பாலஹனுமன் தளத்தைப் பாருங்கள். முன்பெல்லாம் பாட்டுப்புத்தகங்களை வாங்கி வைத்து சினிமாப்பாடல்களைப் பாடிக்கொண்டிருப்போம். உங்களுக்கு பிடித்த தமிழ்ப்பாடல்வரிகளை வானம்பாடியோடு சேர்ந்து பாடுங்கள். இயற்கை உணவு உண்டு நோயற்ற வாழ விரும்புபவர்கள் இந்தப் பதிவை வாசியுங்கள். சமையல் குறிப்புகளை வாசிக்க இத்தளத்தை காணுங்கள். வனம் என்னும் இதழை வாசித்துப்பாருங்கள்.

இவன்தான் பாலா புத்தகம் தன்னை மாற்றியதை குறித்து ஆம்பல் எழுதியுள்ளதைப் படியுங்கள். மதுரையைச் சேர்ந்த கவிஞர் இரா.ரவியின் ஹைக்கூ கவிதைகளை வாசித்துப்பாருங்கள். ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களமான தூமை எனும் தளத்தை வாசித்துப்பாருங்கள். மதுரை வடக்குமாசிவீதிக்கும் செல்லூருக்கும் உள்ள தொடர்பை அறிய கட்டியங்காரன் சொல்வதைப் படியுங்கள்.

இணையதளங்கள் குறித்த அதிக தகவல்களைப் படிக்க சைபர்சிம்மன் தளத்தையும், தமிழை விரும்பும் தமிழாள் பக்கத்தையும், சிபிச்செல்வனின் இலக்கியசுற்றம் தளத்தையும், அரவான் குறித்து அருமையான பதிவு எழுதிய வித்யாசாகரின் தளத்தையும், ஆனந்தவிகடனில் வந்த அறிவழகனின் சிறுகதையையும், பாண்டித்துரை, ராம்மலர், நடைவழிக்குறிப்புகள் தளத்தையும் பாருங்கள். இன்றென்ன முழுவதும் வேர்டுபிரஸ் பதிவுகளாக இருக்கிறதென்று பார்க்கிறீர்களா? இந்தப் பதிவை வாசித்துப் பாருங்கள். தமிழில் உள்ள நிறைய வலைப்பதிவுகளின் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை தவிர எல்லாநாட்களும நூலகம் இருக்கும் நாம் செல்கிறோமா? நம்முடைய வாசிப்பையும், எழுத்தையும், நம்மையும் செதுக்கிக்கொள்ள கீழ்உள்ள தளங்களையாவது அடிக்கடி வாசிக்கலாமே.

கீற்று, அழியாசுடர்கள், தமிழ்தொகுப்புகள், நூலகம், தமிழ்இணையப்பல்கலைகழகம், கூடு, சொல்வனம், நட்பூ, உயிர்மை, காலச்சுவடு, வடக்குவாசல்.

மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி.

- சித்திரவீதிக்காரன்

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது