குருகுலத்தில் (கடைசி நாள்) ஆயுள் ஹோமம்
➦➠ by:
மாணவன்
அன்பின் நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம், இன்றுடன் எனது வலைச்சர ஆசிரியப்பணி நிறைவு பெறுகிறது. எனக்கு வலைச்சரத்தில் வாய்ப்பு கொடுத்த மதிப்பிற்குறிய திரு.சீனா ஐயா அவர்களுக்கும் மற்றும் வலைச்சர நிர்வாக குழுவினருக்கும் எனது இதயங்கனிந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். ஓரளவிற்கு எனக்கு கொடுத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி எனது பொன்னான பணியை சிறப்பாகவே செய்துள்ளேன் என்றே நினைக்கிறேன்.. :)) அதற்கு உங்களின் ஊக்கமும் ஆதரவும்தான் முழுகாரணமாகும். இந்த தருணத்தில் எனது மனமார்ந்த நன்றியினை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்..
இந்த மாணவன் என்ற சிறுவனை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி நல்வழிப்படுத்தி பாடாய்படுத்தி இப்படி பல வகையாய் படுத்தி எடுத்த :))
எங்கள் தலைவர் சிங்கையின் சிங்கம் டாக்டர்.பட்டாபட்டி(PhD..,in China)அவர்களுக்கும்,
மற்றும் டெரர் கும்மி குரூப்ஸின் தலைவர் பாசமிகு அண்ணன் டெரர் - பாண்டியன் அவர்களுக்கும்
குரூப்ஸின் செயாலாளர் பெரும் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு.பன்னிகுட்டியாருக்கும்
குரூப்ஸின் பாதுகாவலர் சிந்தனை சிற்பி, சிங்கை கொண்டான், சாதனைச் செல்வன், தென்பாண்டிச்சிங்கம் எங்கள் கேப்டன். சிரிப்பு போலீசு - (ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா) அவர்களுக்கும்,
மற்றும் டெரர் கும்மி குரூப்ஸ் போர்ப்படை தளபதிகள், வீரர்கள் அனைவருக்கும், மற்றும்
அருமை அண்ணன்கள் :
இதுவரை, இனியும் எனது வளர்ச்சிக்கு வழிகாட்டியாய் நின்று நிறைகளை பகிர்ந்துகொண்டு குறைகளை சுட்டிக்காட்டி நல் வழிபடுத்திகொண்டிருக்கும் இவர்கள் அனைவருக்கும், மற்றும் இந்த சிறுவனுக்கு தொடர்ந்து நல்ஆதரவும் கருத்துரையும் வழங்கி ஊக்கமளித்து உற்சாகப்படுத்தி கொண்டிருக்கும் அனைது அன்பு நெஞ்சங்களுக்கும் எனது இதயத்தின் அன்பு கலந்த நன்றியினை உங்கள் பொற்பாதங்களில் காணிக்கையாக்குகின்றேன்... நன்றி!! நன்றி!! நன்றி!!
(நன்றியுரை முடிந்தது. :))
வாங்க... அப்படியே குருகுலத்துல என்ன நடக்குதுன்னு கொஞ்சம் எட்டி பார்க்கலாம்.....
சுவாமி கொஞ்சம் கவலையுடன் அமர்ந்திருந்தார்........
"சுவாமி ஏன் கவலையாய் இருக்கிறீர்கள்?
"ஒன்றுமில்லை சிஷ்யா.....இதுவரை நாம் பேசுவதையெல்லாம் பேட்டி கண்டு பதிவில் போட்ட மாணவன் நாளையோடு வீட்டுக்கு நடைய கட்ராறு.....அந்த வருத்தந்தான் சிஷ்யா.....
"ஓஓ....அதுதானா? அதனால்தான் சில பதிவர்கள் உங்களிடம் ஆசிர்வாதம் வாங்க வந்திருக்கிறார்களா?......உள்ளே வரச்சொல்லவா சுவாமி?
"தாராளமாக வரச்சொல்....ஆனால் மொபைல்போன் , கேமரா இருக்கான்னு செக் பண்ணிரு...பயபுள்ளைக படம் புடிச்சு பதிவுல போட்ருங்க...அதிலயும் அந்த நொள்ள போலிச நம்பவேமுடியாது......
"சரி சுவாமி..அப்படியே செய்கிறேன்......
முதலில் பன்னிகுட்டி உள்ளே செல்கிறார்......சாமியை பார்த்ததும் அதிர்ச்சியாகி......
"அடங்கொன்னியா......நீதானா அது? ரெண்டு பேரும் பாளையங்கோட்டையில் ஒண்ணா இருந்தோம்....அப்பறம் நீ புழலுக்கு போறேன்னு போன.....இப்ப என்னடான்னா புண்ணியவானா நீ? அட ராமா...என்ன கருமாந்திரம் இது?
"சரி விடு பன்னி.....நாலு பேரு வந்து போற எடம் சத்தம் போடாத......பாரு பேசும்போதே உனக்கு இருமல் வருது....போயி போலிசோட ப்ளாக்கெல்லாம் படிக்காம இந்த இருமலைபோக்கும் ஆயுர்வேத மருத்துவம் இந்த பதிவ படி சரியாயிரும்....
"அட சொறி புடிச்ச மொன்ன நாயி...இந்த டகால்ட்டி வேலைதான் நம்மகிட்ட நடக்காது....இருடி நான் போயி போலிச வரச்சொல்றேன்..அவன்கிட்ட காட்டு உன் டகால்ட்டி வேலையெல்லாம்.......
அடுத்து சிரிப்பு போலிஸ் ரமேஷ் உள்ளே வருகிறார்......வரும்போதே எதையோ தேடிக்கொண்டே வருகிறார்....
"வா மகனே...வா....நீதான் அந்த போலீசா?
"அட இருயா....உன்ன எவன் பாக்கவந்தான்? ஆசிரமும்னா உள்ள நாலஞ்சு பிகரு இருக்கும்னு பேரு....இங்க என்னயா ஒன்னத்தையும் காணும்? (வந்தது வீணாப்போச்சோ?)
"(நல்லவேள....எல்லோரையும் ஒளிச்சுவச்சது..) மகனே...தவறாக நினைக்காதே....காமாலை பிடித்தவன் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாம்.....நீ சென்று மஞ்சள் காமாலை பற்றி தமிழ்துளியில் சொல்லியிருக்கும் பதிவை படி..அதற்க்கு முன் நீ பதிவெழுதுவதை நிறுத்திவிடு...மக்கள் சந்தோசமாக இருக்கட்டும்.......
அடுத்து வெறும்பய ஜெயந்த் உள்ளே வரும்போதே ஏப்பத்துடன் வருகிறார்.....
"என்னப்பா...ஏப்பமெல்லாம் பலமாக இருக்கிறது?
"ஆமாம் சாமி....நல்ல சாப்பாடு உங்கள் ஆசிரமத்தில்......கொஞ்சம் பார்சல் கட்டிவேற வச்சிருக்கேன் ராத்திரிக்கி.....ஆனா சாப்புடற அவசரத்துல உச்சா இருக்க கூட மறந்திட்டேன்...இப்ப கொஞ்சம் அவசரம் உங்க பாத்ரூம பயன்படுத்திக்கலாமா?
"ஐயோ...அதெல்லாம் முடியாது மகனே...(பொண்ணுங்க உள்ள ஒளிஞ்சத பாத்துட்டானோ?) எதை மறந்தாலும்..இதை மறக்க கூடாது மகனே.....சிறுநீரக பாதிப்பு ஏற்படும்..இதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ளசிறுநீரகங்கள் - கிட்னி பாதுகாப்பு, இந்த பதிவை படி பயனுள்ளதாக இருக்கும்.....
"அதெல்லாம் சரி சாமி..அந்த பாத்ரூம........(அதற்குள் அடுத்த பந்திக்கு இலை போட்டதும் ஓடி விடுகிறார்...)
அடுத்து வைகை உள்ளே வருகிறார்.......கொஞ்சம் பயந்துகொண்டே வருகிறார்....
"வாப்பா வைகை.....நீதானா? ரெம்ப சின்ன பையனா இருக்கியேப்பா? எப்பிடி இவிங்களோட மாரடிக்கிறியோ? கொஞ்சம் கஷ்டம்தாம்ப்பா....
"ஆமாம் சாமி.....அதுலயும் இந்த குரூப்ல டெரர்னு ஒருத்தரு இருக்காரு.....பேரைக்கேட்டாலே பயமா இருக்கு சாமி...அப்பறம் இந்த போலிசு வாரத்துக்கு மூணு பதிவு போட்டே பயமுறுத்துராறு சாமி....இந்த சின்ன வயசுல இதையெல்லாம் எப்பிடி சாமி தாங்கிக்கிறது?
"மகனே...உன் கஷ்டம் புரிகிறது....கவலைப்படாதே.... உன்னமாதிரியே டீன் ஏஜ்ல இருக்கும் புள்ளைகளுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு இந்த பதின் பருவத்தின் டாப் 10 பிரச்சனைகள் பதிவுல டாக்டர் ஷாலினி மேடம் சொல்லியிருக்காங்க.....போயி படிச்சு தெரிஞ்சுக்க..
"ரெம்ப நன்றி சாமி.....சாமி சன் டீவில உங்க போட்டி ச்சீ....பேட்டி பார்த்தேன் சாமி....அடுத்த பேட்டி எப்ப சாமி..ஹி ஹி
"மகனே வைகை...உன்னை காவிரில தூக்கிப்போட்டாலும் நீ அடங்கமாட்டியா? உனக்கு போலிசுதாண்டா லாயக்கு... போய்த்தொலை இங்கிருந்து.......தம்மாதூண்டு இருந்துகிட்டு என்னா கேள்வி கேக்குது.....ஸ்.ஸ்..முடியல.... டேய்...சிஷ்யா.... கொஞ்ச நாளைக்கு ஆசிரமத்த இழுத்து மூடுடா.....அம்மா....ரஞ்சி.... ச்சீ...அடுத்து யாரும்மா......
என்னாது.....மங்களம் உண்டாகனுமா? ......அந்த பொன்னான பணிய நீங்களே பாத்துக்கங்க.........வரட்டுமா. ....! உத்தரவு வாங்கிக்கிறேன்.... :))
திரு. சீனா ஐயா அவர்களுக்கும், மற்றும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறி விடைபெறுவது உங்கள் மாணவன்
மாணவன் ஸ்பெஷல்:
“வாழ்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை..!!”
நீ உன் நண்பர்களிடம் பேசும் போது
என்னை மறந்து விடுகிறாய்
-இப்படிக்கு கவலைகள் ...
“வாழ்வது ஒருமுறை... வாழ்த்தட்டும் தலைமுறை”
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்