அரட்டைக் கச்சேரி -- நிறைவு.
➦➠ by:
ராஜலக்ஷ்மிபரமசிவம்
இன்று உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.என் கடமையை சரி வரச்செய்தேனா...... நான் குறிப்பிட வேண்டிய பதிவர்கள் எல்லோரையும் பற்றி சொல்லமுடிந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்வேன். மிகச் சிலரை மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது.
இவரைப் பற்றி எழுதவில்லையே
அவருடைய பதிவுகள் பற்றி சொல்லவில்லையே ! என்கிற பதட்டத்துடன் தான், நான் இன்று உங்களிடமிருந்து பிரியா விடை பெறுகிறேன்.
சரி............இருக்கும் நேரத்தில் மேலும் சில பதிவர்கள் பற்றி இங்கே குறிப்பிடுகிறேன்.
தளிர் என்னும் தளத்தில் எழுதி வரும் திரு. சுரேஷ் பதிவுகள் அத்தனையும்
அருமை.
நீங்கள் பதம் பார்க்க கிழிந்த நோட்டு.
அவர் கவிதைகள் படித்து ரசிக்கலாம் இங்கே
சுரேஷின் சாமியாட்டம் பார்க்கலாம் வாருங்கள்.
இவர் சிறுகதையும் எழுதுகிறார்.
தன் குற்றம் என்னும் இவர் சிறு கதையைப் படித்தால் உண்மைச் சம்பவம் போலவே இயல்பாக இருக்கும் .படித்து ரசியுங்கள்.
மின்மினி பூச்சிகளைப் பற்றியக் கதை மிகவும் சுவாரஸ்யம்.
பிரச்சினை என்று வந்தால் தீர்த்து வைப்பீர்களா? அப்படிஎன்றால் சுயம்பு என்னும் தளத்தில் எழுதிவரும் விக்னேஷ் அவர்களுக்கு பெரிய பிரச்சினையாம். தீர்த்து வைக்க சொல்கிறார். முடியுமா பாருங்கள்.
இவர் பள்ளிக்குப் போய் பாடம் கற்றுக்கொண்டாரோ இல்லையோ பல்லியிடம் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறார். என்ன என்று பாருங்களேன். நல்ல நகைச்சுவை கலந்து எழுதியிருக்கிறார்.
ஜால்ரா மனிதர்கள் பற்றி சொல்வதை கேளுங்கள் இங்கே.
மனசு என்னும் தளத்தில் திரு. குமார் மழை எத்தனை ரம்மியமானது என்று சொல்கிறார் படியுங்கள்.
நாம் எப்படியெல்லாம் ஏமாத்தப் படலாம் என்பதை இங்கே படிக்கலாம்.
திருமணத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகள் பற்றி சாடுகிறார்.. அவசியம் படிக்க வேண்டியப் பதிவு.
இவருடைய கிராமத்து நினைவுகளை நம்முடன் இங்கே பகிர்கிறார் படியுங்கள்.
திருமதி ராஜியின் கற்றலும், கேட்டலும் படித்துப் பாருங்கள் .திரும்பாதோ அந்த தீபாவளி என்கிறார். ஏன் என்று அவரிடமே கேட்போம்.
தாய்மை உணர்வை எப்படி படம் பிடித்திருக்கிறார் பாருங்கள்.
தாய் தன் பதினாறு வயது பெண்ணிற்கு சொல்லும் கதை இங்கே படிக்கக் கிடைக்கும்.
கடிகார முள்ளில் பூவாய் என்கிற பதிவில் அழகிய கவிதை ஒன்று காத்துக் கிடக்கிறது, படிப்போம் வாருங்கள் .
பூப் பறிக்கக் கோடாலி எதற்கு? என்று கேட்கும் திரு. Killergee அவர்கள்
சுட்ட பழம் பற்றி சொல்வதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்போமா?
டிரைவிங் லைசென்ஸ் வேண்டுமா? அப்படிஎன்றால் முதலில் அவர் சொல்லும் வாகனம் ஓட்டியிருக்க வேண்டுமாம். அநேகமாக எல்லோருமே ஓட்டியிருப்போம். அதை விடுங்கள்......பதிவில் அவர் சொல்லியிருக்கும் வாகன ரகங்கள் படித்து முடிப்பதற்குள் மூச்சு முட்டும்.. படித்து விட்டு சொல்லுவீர்கள் பாருங்கள்.
தென்னாட்டுக் காந்தி, காமராஜர் என்ன படித்திருக்கிறார் ?
எவ்வளவு சாதனைப் படைத்திருக்கிறார் என்று நம் கில்லர்ஜீ பட்டியலிடுகிறார் பாருங்கள்.கூண்டுக்குள் இருக்கும் விலங்குகளின் வலியை நாம் உணரலாம் இந்தப் பதிவைப் படித்தால் .
முதுகு வலி தீர வீட்டிலிருக்கும் பொருட்களை விற்க வேண்டுமாம்.
நான் சொல்வது புரியவில்லையா? கில்லர்ஜீயிடமே உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.
கடமை முடிந்து விடை பெறுகிறேன். அரட்டைக் கச்சேரி ஓய்ந்தது ," ஸ்வீட் எடு, கொண்டாடு " என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.
இங்கே ஒன்று சொல்ல வேண்டும்.இங்கே தான் அரட்டைக் கச்சேரி ஓய்ந்திருக்கிறது. என் சொந்தக் கடையில் தொடர்கிறேன்.... அங்கு வாருங்கள் உரையாடுவோம்.
என்னோடு தொடர்ந்து பயணித்து ஊக்கமளித்த சைலண்ட் வாசகர்கள் மற்றும் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த நன்றிகள் பல.
வலைச்சரத்தில் வாய்ப்பளித்த திரு. சீனா ஐயா அவர்களுக்கும் இத்தருணத்தில் என் மனம் நிறைந்த நன்றிகள்.
image courtesy--google.



