வலைச்சர ஆசிரியர் பொறுப்பை என் சுய அறிமுகத்துடன் நிறைவு செய்கிறேன். இதோ என்னைப் பற்றி....
நானும் உங்களில் ஒருத்திதான். நத்திங் டு ஸ்பெஷல். கடந்த 6- மாதங்களாகத் தான் பதிவு எழுதுகிறேன். எல்லோருமே சொல்வது போல ரெண்டு மாசமா என் பதிவையும் படிக்க யாருமே வரலே. ஃபாலோயரும் வரலே. ரெண்டுமாசம் ஈ ஓட்டினேன். பிறகு மத்தவங்க ப்ளாக்கெல்லாம் போயி படிச்சு கமென்ட்டும் போட்டு ஃபாலோயராகவும் இணைச் சுண்டேன். பிறகு ஒவ்வருவராக என் பக்கமும் வர ஆரம்பிச்சாங்க.
அப்புறம் கமெண்ட், ஃபாலோயர் பத்தியில்லாம் கவனம் செலுத்தாம, எனக்கு என்ன எழுதணும்னு தோனுதோ அதையெல்லாம் எழுத ஆரம்பிச்சேன். ஒரு 10 வருடங்களுக்கு முன்பு, மங்கையர் மலர், சினேகிதி, அவள் விகடன் என எல்லாத்துலயும் கதை கட்டுரையெல்லாம் எழுதிண்டு இருந்தேன். நிறைய பிரசுரமும் ஆகி இருக்கு. கம்ப்யூட்டர் பழக்கம் ஆனதில் இருந்து, பத்திரிக்கைக்கு எழுதும் விஷயமே நின்னு போச்சு. பதிவுகளில் எல்லா விஷயங்கள் பற்றியும் எழுதினேன்.
எனக்கு வெளி விஷயங்க எல்லாம் அவ்வளவா தெரியாது. வீட்டில் நடப்பது, என் சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களை மலரும் நினைவுகள் என்ற தலைப்பில் திறந்த புத்தகமாக விரித்து வைக்கிறேன். அது தவிர, கொஞ்சம் பிடித்த பாடல்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், பயணக் கட்டுரைகள் என்று வெரைட்டியாக எழுதறேன்.
மொத்தம் ரெண்டு ப்ளாக் எழுதறேன். குறைஒன்றுமில்லை, தமிழ் விரும்பி என்ற தலைப்புகளில் எழுதிண்டு இருக்கேன். குறை ஒன்றுமில்லையில் இதுவரை 50- பதிவுகளும், தமிழ் விரும்பியில் 34- பதிவுகளும் எழுதி இருக்கேன். கிட்டத்தட்ட 25 பதிவுகள் பாப்புலர் லிஸ்டில் வந்திருக்கு. ரெண்டிலுமாகச் சேர்த்து 200- ஃபாலோவர்ஸ் வரை இனைஞ்சிருக்காங்க. வலைச்சரத்திலும் இதுவரை என்னை 6-பேர்கள் அறிமுகப்படுத்தி இருக்காங்க. அதுவே பெரிய பெருமை. இப்ப ஆசிரியர் பொறுப்பையும் கொடுத்திருக்கீங்க. சந்தோஷத்துல தல கால் புரியல்லே. இதுல ஒரு வேடிக்கை என்னன்னா நான் பள்ளிக்கூடம்லாம் போயி படிச்சதே இல்லே. இன்னிக்கு ஆசிரியர் பொறுப்பு. என்ன வேடிக்கை இல்லியா? என் எழுத்தைப் படிக்கும் பெரும்பாலோர் நேர்ல உக்காந்து பேசுறது போலவே இருக்குன்னு சொல்வாங்க. அந்த எழுத்தை ரசிக்கவும் நிறையா பேரு இருக்காங்க. ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு. பதிவு எழுத ஆரம்பிச்ச பிறகு தான் நிறைய நல்ல , நல்ல நண்பர்களும் கிடைச்சிருக்காங்க. இதெல்லாம் எனக்கு பெரிய ப்ளஸ் பாயிண்ட்ஸ். 50-வருஷமா வடக்கேயே வசிப்பதால ஹிந்தி, மராட்டி நல்லா எழுத படிக்க பேச வருவது போல என் தமிழ் சரளமா இருக்காது. இது என்னோட மைனஸ் பாயிண்ட். இதுக்கும் மேல என்னைப் பத்தி எதுவும் சொல்ல இல்லே.
என்பதிவில் பாப்புலர் லிஸ்ட்டில் இருக்கும் பதிவிலிருந்து கொஞ்சம் கீழே.-----
தமிழ்விரும்பியில்
குறை ஒன்றுமில்லையில்
இந்த இடத்தில் ஒன்னு சொல்ல ஆசை. இந்த வலைச்சர ஆசிரியர் பொறுப்பைக் கொடுத்து பெருமைப்படுத்திய சீனா ஐயா அவர்களுக்கு என் நன்றியை தெரிவிச்சுக்கறேன். இந்தப்பணியை சிறப்பாக நடத்த உதவிய அன்பு நண்பருக்கும் நன்றிகள். அவரின் உதவி இல்லாமல் நான் இந்த வேலையை இவ்வளவு சிறப்பாகப் பண்ணியிருக்கவே முடியாது. அவர் பேரைச் சொல்லி அவரை தர்ம சங்கடதில் ஆழ்த்த விரும்பலை. அவருக்கும் அது பிடிக்காது. நான் யாரைச் சொல்கிறேன் என்பது அவருக்கும் புரியும், எனக்கும் தெரியும். நன்றி மறப்பது நன்றன்று. இல்லியா. அதனால அவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை இங்கு சொல்லிக்கவிரும்பறேன். ஒரு வாரமாக என் பதிவுகளை பொறுமையாக படித்து பின்னூட்டமிட்டு என்ன உற்சாகப்படுத்திய என் அன்பு வாசக நண்பர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவிச்சுக்கறேன்.
ம்ம்ம்... ஒண்ணு சொல்ல மறந்திட்டேன்.... என்கிட்டே சாட் பண்ணனும்னா இங்க வாங்க, நாம மீட் பண்ணலாம்.
மேலும் வாசிக்க...
கண்ணா இந்த மாலை வேளையிலும் புதுசு கண்ணா புதுசு.
1. வேர்களைத்தேடி......முனைவர் இரா. குணசீலன். அரசியல், கிரிக்கெட், கல்வி,சினிமா, ஆன்மீகம்,எல்லாமே சொல்றார்.அன்றும் இன்றும் தமிழின் சிறப்பு சொல்கிறார். சிறந்த 10 இடுகைகள். அறிவும் அரை குறைவும் நல்லா இருக்கு.
2. வை. கோபால கிருஷ்ணன்...... VAI. GOPALAKRISHNAN. இவரின் சிறுகதைகள், கவிதைகள், தொடர்கதைகள் பலதும் பத்திரிக்கைகளில் பிரசுரம் ஆகி இருக்கிறது. அனுபவம் என்று சாப்பாடு பற்றிய தலைப்பு. மூக்குத்தி தொடர்பில் நகைச்சுவை சொல்கிறார். டிஸ்மிஸ் நல்லாயிருக்கு,
5. வலையுகம்.... ஹைதர் அலி..... கொட்டிக் கிடக்கிறதா சவுதியில் வெளி நாட்டு வாழ்வு என்றுஅங்கே வேலை பார்க்கும் தமிழனின் அவல நிலை சொல்கிறார். மதமும் அறிவியலும் பற்றிய புத்தக விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார். உடற்பயிற்சி செய்யுமுன் இவரின் இந்தப்பதிவை படித்துப்பார்க்கவும். கவலைப்படாதே புத்தக விமரிசனம் நல்லா இருக்கு.
8. அனுராகம் சக்க்ரவர்தின்னு தொடர்கதை, கவிதை இருக்கு
14. மதுரகவி. ராம்வி அவர்களின் வலைப்பூ. தமிழில் எழுத உதவச் சொல்கிறார்.
மேலும் வாசிக்க...
வலைச்சரம் சனிக்கிழமை - பல்சுவை பதிவர்கள். ஓரிருவர் தவிர எல்லாருமே புதியவர்கள். புதுசு கண்ணா புதுசு.
அடுப்பு பற்றியும் சொல்றார். இது நல்லா இருக்கு.
மேலும் வாசிக்க...
இன்று வெள்ளி அறிமுகங்களாக ஆன்மீகம் பற்றிய வலைப்பூக்களும், வலைப்பதிவர்களும் வலம் வருகிறார்கள்.
மேலும் வாசிக்க...
வணக்கம் நண்பர்களே! இன்று உங்களை தொழில்நுட்பம் வாயிலாக சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய அறிமுகங்களை பார்க்கலாமா?
1. வந்தேமாதரம்....சசிக்குமார்...யோகா செய்வது எப்படி?, சுலபமாக உங்கள் கணினியின் விவரங்களை அறிய தியானம் செய்வது எப்படி? நல்லா இருக்கு.
மேலும் வாசிக்க...
இன்று மாலையும் வலைச்சரம் காவிய புதனாக மலர்கிறது உங்களுக்காகவே...
12. இனிமை.. காதுக்கினிய திரைப்படப் பாடல்கள் யூட்யூப் வசதியுடன் பழைய புதிய படல்களின்
மேலும் வாசிக்க...
இன்று காவிய புதனாக வலைச்சரம் மலர்கிறது.
இன்றைய அறிமுகம் காதுக்கினிய திரைப்பட பாடல்கள், மனதுக்கினிய பக்திப்பாடல்கள், கவிதைகள் வலைப்பூ, வலைப் பதிவர்களின் அறிமுகம்.
மேலும் வாசிக்க...
மகளிர்மட்டும். வெரும் 33% மட்டுமில்லே. 25/25 பெண்களுக்குத்தான்.
1.அமைதிச்சாரல்: அமைதிச்சாரல் என்னும் வலைப்பூவுக்கு ஓனர்.டிட்வாலா பிள்ளையார் பற்றி ஆன்மீகம் சொல்கிறார். பச்சைப்பயிரு சப்பாத்தியென்று ரெசிப்பியும் சொல்கிறார். வீட்டுத்தோட்டமும் போடச் சொல்லித் தருகிறார். ஏக் காவ் மெ எக் கிசான் ரகு தாத்தா என்று நகைச்சுவையிலும் கலக்குகிறார். பல்சுவைக் கலைஞர் இவர் பதிவில் எனக்குப் பிடித்தது பவளமல்லி. 2.அப்பாவி தங்கமணி, அப்பாவிதங்கமணி எனும் வலைப்பூ இவரோடது. பாடம் படிக்கும் நேரம் என்று சைலன்ஸ் என்கிறார். அலை பாயுதே என்று கவிதையும் சொல்கிறார், ரஸ்க் சாப்பிடறதே ரிஸ்க் என்கிறார். ஜில்லுனு ஒரு காதல் என்று மெகா சீரியல் கதை முடிவே தெரியாமல் ஓட்டிண்டு இருக்கார். தப்பும் தவறும் என்ற பதிவு நல்லா இருக்கு. 3.உப்புமடச்சந்தி, ஹேமாவின் வலைப்பூ. தொலைந்து போவோமா தூர தேசத்தில் என்கிறார். உதவுவோம் என்று மனிதம் பேசுகிறார். தான் வந்த பாதையைத்திரும்பியும் பார்க்கிறார். தாய்தேசத்தின் சார்பில் நன்றியும் சொல்கிறார். ததரினா தாத்தா பதிவு எனக்குப் பிடித்தது சுவிஸ் பதிவு. 10.கற்றலும் கேட்டலும் ராஜி அவர்களின் வலைப்பூ. உணவே வா, உயிரே வா என்று தொடர்பதிவு எழுதுகிறார். மைத்ரீம் பஜதேன்னு காஞ்சி ஆச்சார்யாரினுடைய தத்துவங்கள் சொல்கிறார். உயிர் காத்த, உறவும் நட்பும் பற்றியும் சொல்கிறார்.. அலமேலுவின் அட்டகாசம் சொல்லி சிரிக்க வைக்கிறார். திருக்குளந்தை என்று ஆன்மிகமும் சொல்கிறார். மாறாத நிமிடங்கள் என்று கவிதையும் சொல்கிறார். மைத்ரீம் பஜதே நல்லா இருக்கு.
11.கவிப்பக்கம் (new) கவிசிவாவின் வலைப்பூ. கவிசிவானதாவின் தனிமை, இனிமை, கொடுமை வாழ்வியல் போதனைகள் சொல்கிறார். புத்தியும் மனமும் பற்றி பேசுகிறார். முதல் முறை அழுகை- ஒரு எதிர்வினை பற்றியும் சொல்கிறார். இடுக் கண் வருங்கால் நகுக என்கிறார். அடிக்கடி லீவு போட்டு விட்டு போய் விடுகிறார். புதுசு கண்ணா புதுசு நல்லா இருக்கு.
12.குட்டி சுவர்க்கம், ஆமினா-வின் வலைப்பூ. ரொம்ப நாட்களாக இவரைக் காணோம். தமிழ் நூலகம் பற்றி உபயோகமான பதிவு இருக்கு, அரபு நாடுகளில் வேலை வாய்ப்பு பற்றி சொல்கிறார். பூல் புலையா (bhool bulaiya) என்று சுற்றுலா பற்றி சொல்கிறார்.
உயிரே உனக்காக என்று கவிதை சொல்கிரார்.ஆத்தா கண்டு பிடிச்சுட்டேன் என்று ஜி. டாக் பற்றி சொல்கிரார். நல்லா இருக்கு.
13. கொஞ்ச்ம்வெட்டிப்பேச்சு சித்ராவின் வலைப்பூ. என் பெயர் சொல்லவா என்று தொடர் பதிவில் கேட்கிறார். அங்கிட்டு கலாசாரம், அங்கிட்டு அமரிக்கா என்கிறார். வசந்தகாலப்பறவைகள் பற்றியும் சொல்கிறார். அரசியல் பற்றியும் கொஞ்சமாகச்சொல்கிறார். பூசனிக்காய் ஆரோக்கியமும், புடலங்காய் அல்வாவும் என்று நகைச்சுவையும் சொல்கிறார். இது நல்லா இருக்கு.
14.கோவை 2 தில்லி, கோவை 2 தில்லியின் வலைப்பூ. நிறைய மணக்க, மணக்க சமையல் குறிப்புகள், அவசரத்துக்குகைவைத்திய முறைகள் என்று சொல்லி இருக்கார். இப்ப டில்லி பூத்து குலுங்குதுன்னு சொல்றார். இது நல்லா இருக்கு.
16 சின்னு ரேஸ்ரி மாதேவியின் வலைப்பூ. இங்கும் நிறைய சமையல் குறிப்புகள் இருக்கு.சமையல் அறையில் ஜோக்ஸும் இருக்கு. கனவாகிப் போன பழங்கால அடுக்களைப் பாத்திரங்களையும் நினைவு கூறுகிறார். தேங்காய்த் துருவல் ரவா கிச்சடி நல்லா இருக்கு.
17. திவ்யாம்மா, வலைப்பூ திவ்யாம்மாவுக்கு சொந்தமானது. பாரம்பர்ய முறைச் சமையல் பற்றி தெரிஞ்சுக்கனுமுன்னா, இவங்க கடலைப்பருப்பு வெல்ல போளி பக்கம் வந்தா போதும். மணக்க, மணக்க, வாய்க்கு ருசியாக நல்ல குறிப்புகள் நிறையா கிடைக்கும். அதற்கு உண்டான பாத்திரத்தில் சமைத்தால் அதன் ருசியே தனி தான். .மிளகு குழம்பு நல்லா இருக்கு.
18. கோமு வலைச்சரத்தின் ஓனர் கோமு. இவரின் வலைப்பூ சுற்றுலாவினால் நிரம்பி இருக்கு. மும்பை டு கோவா, குக்ஜி&பேடா காட் வைஷ்னவி தேவி யாத்ரா பற்றி ஹிமாச்சல் பிரதேஷ் என்கிற தலைப்பில் அருமையான கட்டுரைகள் கொடுத்திருக்கார். ஆல்பம் இந்தியன் என்று இரண்டு சிறு கதைகளும் எழுதி இருக்கார். மெஹந்தி பார்ட்டி என்கிர தலைப்பில் ஒரு பதிவு மிகவும் நல்லா எழுதி இருக்கார்.
19..vanathy's, vanathi யின் வலைப்பூ. ஆச்சர்யங்களை தொடராகச் சொல்கிறார். மணக்க, மணக்க, ரெசிப்பியும் இருக்கு, பெண்ணெழுத்தையும் தொடர்பதிவாகச் சொல்கிறார். பூரணியின் முதல் ஓட்டு, சின்ன வாளியின் சாபம் என்று சிறுகதையும் சொல்கிறார். எம்ப்ராய்டரி, வாழ்த்து அட்டைகள் செய்கிறார், இரண்டு பெண்கள் நன்றாக இருக்கு.
20.இந்திராவின் கிறுக்கல்கள் வலைப்பூவின் ஓனர் இந்திரா. அரிதாரக் கடவுள்கள் என்று சினிமா பேசுகிறார். மஞ்சள் நீராட்டு விழா என்னும் மடத்தனத்தைச் சாடுகிரார். பல்பு வாங்குவதே எனக்குப் பொழைப்பாப் போச்சு என்கிறார். அறிமுகப் பதிவர்களுக்கு சில டிப்சும் தரார். தேடிப் போய் வாங்கின பல்பு, கிளையுதிர் காலம் என்று கவிதையும் சொல்கிறார்.
21.முத்துச்சரம் வலைப்பூவின் சொந்தக்காரர் ராமலஷ்மி. விதை விருட்சமாகும். அன்னா ஹசாரேக்கு ஆதரவை தருவோம் என்கிறார். வடக்கு வாசல், இவள் புதியவள், கல்கி பத்திரிக்கைகளில் இவரின் படைப்புகள் வெளியாகி இருக்குன்றன. பக்,பக் புறாக்களும் கீச், கீச் மைனாக்களும் நல்லா இருக்கு.
22.வள்ளுவம் வலைப்பூ goma வுடையது. திண்ணை பத்திரிக்கையில் எல்லாம் மாயான்னு கதையெல்லாம் எழுதி இருக்கார். கேட்டாலே சிலிர்க்கும் பாடலை ரசிக்கிறார். எது நிஜம் எது நிழல் என்ரு கேட்கிறார். இறைவன் ஏமா ந் ந் ந் ந் ந் தான் என்கிறார். இது நல்லா இருக்கு.
23. ஹைக்கூ அதிர்வுகள் வலைப்பூவின் ஓனர் ஆனந்தி. இளையராஜா பற்றி சில சுவாரசியமான நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்கிறார். ஆண்களே உங்களுக்கான பதிவு என்கிறார். மக்கு, டுபுக்கு, ஆடிட்டர்கள் அரசுக்கு உடனடித் தேவை என்கிறார். இதுக்கு பேரு பக்தியா என்று கேட்கிறார். சொர்க்கம் போகணுமா மதுரைக்கு வரச் சொல்கிறார் இது நல்லா இருக்கு.
24. முத்துச்சிதறல் ம்னோ சாமினாதன் காய்கறிகள் வாங்குவதும் ஒரு கலை என்கிரார். பெயர்க் காரணம் தொடர் பதிவும் எழுதுகிறார். கற்பனையை விஞ்சும் நிகழ்கால உன்மைகள் சொல்கிறார். பிராயச்சித்தங்கள் நியாயங்கள் ஆவதில்லையாம். சேமியா பருப்பு உசிலும் இருக்கு. நம் உயிர் நம் கையில் நல்லா இருக்கு.
25.சமைத்து அசத்தலாம், ஆஸியா ஓமரின் வலைப்பூ, பெயருக்கேற்றார் போல் பூராவும் சமையல்தான். மணக்க, மணக்க ருசிகரமான ரெசிப்பிக்கள் நிறைய இருக்கு. அம்மா பிள்ளைனு ஒரு சிறு கதையும் எழுதி இருக்கார். குலாப்ஜாமுன் ஈசி பீன்ஸ் பொரியல் நல்லாஇருக்கு. மீண்டும் நாளை சந்திப்போம். இப்போ விடை பெறுகிறேன்
மேலும் வாசிக்க...