07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label வலைச்சரத்தில் சனி. Show all posts
Showing posts with label வலைச்சரத்தில் சனி. Show all posts

Saturday, December 15, 2012

ஏழரை நாட்டு சனின்னா என்னங்க ?!

அது என்னமோ பலருக்கும் வார இறுதி நாட்களில் முதலில் வரும் சனிக் கிழமை மீது ஒரு ஈர்ப்பு ! நான் பள்ளி படிக்கையில் சனி,ஞாயிறு என்று சேர்த்தே சொல்லப்பட்டு வந்த விடுமுறை நாட்கள் இப்போதெல்லாம் இல்லை..இப்ப சனிக்கிழமைகளிலும்  பள்ளிகள் வைத்து  மாணவர்களை எல்லாம் படி(வெறு )க்க வைக்கின்றன தனியார் பள்ளிகள்...

ஏழரை நாட்டு சனி,சனியன், சனி பொணம்  தனியா போகாது (இது உச்ச கட்ட மூட நம்பிக்கை!) போன்ற பொருள் புலப்படாத பிரபலமான வாக்கியங்களை தன்னகத்தே கொண்ட பெருமை சனிக்கிழமையையே  சாரும்!இந்த 3 க்கும் அர்த்தம் தெரிந்தவர்கள் கொஞ்சம் இங்கே சொல்லிட்டு போங்க...

இதில் ஏழரை நாட்டு சனி என்பது என்னன்னு இன்னைக்கு தெரிந்தே ஆகணும் எனக்கும் இதை படிப்பவர்களுக்கும்!

சனி என்ற கோள் சூரியனிலிருந்து 6 வதாக அமைந்துள்ள கோள் ...சூரிய குடும்பத்தில் இரண்டாவது பெரிய கோளும் இதுதான்...சனி  கோளின் நிலவுகள் 61...சனி கோளின் மிகப்பெரிய நிலவான டைட்டன் புதன் கோளை விடவும் பெரியது !

பட்டையான வளையம் சூழ்ந்துள்ள மிகப் பெரிய கோளாகிய சனிக்கு உரிய நாளாக சனிக்கிழமை என பெயரிடப்பட்டுள்ளதாக விக்கீப்பீடியாவில் படித்தேன் ...


பாலாவின் பக்கங்கள்  என்ற வலைப்பூவில் அரசியல், சினிமா,நாட்டு நடப்புகளை சுவாரஸ்யமாக எழுதி வரும் பாலாவின் பதிவுகளில் என்னை கவர்ந்த பதிவுகள் சில.


வெட்டி அரட்டை - ஏதோ சொல்லணும்னு தோனிச்சு....


-வெட்டி அரட்டை - சிதம்பரம் vs நடுத்தரம்



ayesha farook  எனும் வலைப்பூவில் கவிதை,சமூகம் பற்றி எழுதி வருகிறார் சகோதரி ஆயிசா ...அந்த வலைப்பூவில்  என்னை கவர்ந்த  பதிவுகள் உங்கள் பார்வைக்கு


ஜாதிகள் இருக்குதடி பாப்பா



தமிழுக்கு வந்த ஆபத்து




மவுன தேசம்  என்ற தலைப்பில் எழுதி வரும் RIZI அரசியல்,நாட்டு நடப்புகள்,நகைச்சுவை என எல்லாவற்றையும் கலந்து கட்டி அடித்து ஆடி வருகிறார்..அவரின் பதிவுகளில் சில...



இப்பொழுது சந்தையில் ஆண்ட்ரியா போன்!



சே குவேரா என்னும் புரட்சிக்காரன்!!




வலையுகம்  என்ற வலைப்பூவில் சகோ  ஹைதர் அலி  அரசியல்,உடல்நலம்,வரலாற்று தகவகல்கள், சமூகம் குறித்த பார்வைகள் என எல்லாவற்றையும் தனது பார்வையில் அழகாக,ஆழமான கருத்துக்களோடு எழுதி வருகிறார்...வலையுலகில் பரவலாக அறியப்பட்டவர்தான் அவர்..அவரின் பதிவுகளில் சில...


சுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி!



நீங்களும் பேச்சாளர் தான்,பேசக் கற்றுக் கொள்ளுவோம்....



 நிச்சயம் இவர்கள் உங்களை ஈர்ப்பார்கள்...நாளை பார்ப்போம் நண்பர்களே..

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது