வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள்
காலை வணக்கம் நண்பர்களே...
நாளை கோபுரங்கள்.. சுற்றுக் கோவில்கள் கும்பாபிஷேகம் ஸ்ரீரங்கத்தில்..
அந்நாட்களில் சோலைகள் நிறைந்த ஊர்.. நடுவே கோவில்.. சுற்றிலும் மதில்கள்..
மதிள் சூழ் தென்னரங்கம் என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருவரங்கத்தின் மதில்களுக்குள் கடைசி வீதி அடையவளைந்தான்..
இங்குதான் வெளிஆண்டாள் சந்நிதி என்றழைக்கப்படும் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் சந்நிதி உள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து வந்த ஆண்டாள் வந்திறங்கிய இடம்.
அடுத்த முறை வாய்ப்பு கிட்டும்போது வந்து பாருங்கள்.. அர்ச்சகரும் சொல்வார்.. ஆண்டாளின் திருமுகம் நம்மை நேரடியாய்ப் பார்க்காமல் ஒரு புறம் சற்றே திரும்பி உள் வீதியில் மூலஸ்தானத்தில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கனைப் பார்க்கும் கோணத்தில் அமைந்திருக்கும். ஆச்சர்யம் இல்லையா.. ! இதோ வெண்ணைத்தாழி அலங்காரத்தில் ஆண்டாள்..
சப்தப்ராகாரத்தில் அடையவளைந்தான் சேர்த்தி இல்லை. ஆனால் ஆண்டாள் சந்நிதி அமைந்து வீதியை பெருமைக்குரியதாக்கி விட்டது.
இனி இன்றைய நமது நண்பர்கள்...
மஹா சுமன் எண்ணங்கள் பல வண்ணங்கள் என்கிற தலைப்பில் தமது எண்ணங்களைப் பகிர்ந்து வுருகிறார். இவரை எனக்கு முகநூல் மூலம் தான் முதலில் அறிமுகம். எழுத்தில் இவர் சளைப்பதில்லை.. அதேபோல நட்பைப் பேணுவதிலும். இவர் ரசித்த படைப்பாளிகளைப் பற்றி இவர் பகிர்ந்த பேரன்பிற்கு வார்த்தைகள் இல்லை பாராட்ட. தானும் எழுதி பிறரையும் ஊக்குவிக்கும் இவர் முதல் தர ரசிகர்.
மௌனக்கலை பயில்வதில்தான் எத்தனை நன்மைகள்..
மூங்கில் காற்று திரு டி.என் முரளிதரனின் வலைத்தளம்.
வலைப்பூவில் எழுதுபவன் நோக்கம் படைப்புத் திறனை வெளிப்படுத்துவது மட்டுமன்று. யாரும் படிக்க வேண்டியதில்லை எனது ஆத்ம திருப்திக்காகத் தான் எழுதுகிறேன்.பார்வையாளர்களைப் பற்றிக் கவலை என்று ஒரு சிலர் சொன்னாலும் நமது படைப்புகளை பிறர் படிப்பதாலும் அங்கீகரிப்பதாலும் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பதே உண்மை .விவேக் ஒரு திரைப்படத்துள் சொல்வது போல யாரும் இல்லாத கடையில் யாருக்காக டீ ஆற்ற வேண்டும்.
நமது பதிவுகள் நிறையப் பேரை சென்றடைய வேண்டும் என்று விரும்புவது அதற்கான முயற்சிகள் எடுப்பதும் தவறில்லை.
நெத்தியடியாய் சொல்லி நிறைய டிப்ஸ்களை வழங்கியிருக்கும் இவர் பல சுவாரசியமான பதிவுகளுக்கு சொந்தக்காரர். சலிக்காமல் எழுதி வரும் இவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
இவரது வலைத்தளத்தில் போய் உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றை கிளிக் செய்து படிக்க அழைக்கிறேன்.. இன்ன விதமாகத்தான் எழுதுவது என்று வட்டம் போட்டுக் கொள்ளாமல் வானமே எல்லை என்று எழுதும் இவரது ஏதேனும் ஓரிரு பதிவுகளை மட்டும் குறிப்பிடுவது சரியில்லை என்று உணர்வதால் இப்படி அழைக்கிறேன்.
விமலன் வெகு இயல்பான எழுத்து நடை. வாசகனை அன்னியப்படுத்தாமல் கைப் பிடித்து அழைத்துப் போகும் இவர் வாசிப்பது கதையா.. அல்லது நாம் அன்றாடம் பார்க்கும் நிஜமா என்று யோசிக்க வைத்து விடுவார். சிட்டுக் குருவி இவரது வலைத்தளம். 6 தொகுப்புகளுக்குச் சொந்தக்காரர்.
ஒரு சொல் ஒரு ஓசை என்ன ஒரு இயல்பாய் மனதை ஈர்க்கிறது.. ஒங்கள நான் மாப்ளைன்னு கூப்பிடட்டுமா.. மனசு கனத்துப் போகும் தருணம் அது.
விடுவிக்க முடியா
தீரா வனம்
விரிந்து கொண்டேயிருக்கிறது
புல்லாங்குழலுள்.

இந்திராவின் கிறுக்கல்கள் நான் மிகவும் ரசிக்கிற எழுத்துக்காரர்.
தூரங்கள் என்னும் தொலைவுகள் என்கிற பதிவில் அவர் சொல்லிப் போயிருப்பது அப்படியே எனக்கான.. ஏன் நம்மில் பலருக்கான மனநிலையும் தானே.
எதையுமே யோசிக்காமல், அந்நேர மனமாறுதலுக்காக மட்டுமேயென சிம்மக்கல் தொடங்கி மாட்டுத்தாவணி வரை நடந்தே சென்ற நாட்கள் இருக்கின்றன. ஆனால் வழி நெடுக எதை ரசித்தேன் என்று யோசித்தால் விடை பூஜ்ஜியம் தான். திண்டுக்கல் மலைக்கோட்டை உச்சியில் மேகங்களை வேடிக்கை பார்க்கவென நான் தேர்ந்தெடுத்த பாறையும், திருச்சி வழியிலிருக்கும் சிவன்கோவில் மண்டபத் தூணில் கன்னம் வைத்து உணர்ந்த அந்த ஜில் தன்மையும் இன்னமும் அப்படியே தான் இருக்கின்றன. ஆயுளுக்கும் நினைத்துச் சிலிர்க்கும் அம்மாதிரியான தருணங்களை, மீண்டும் சந்திப்பதற்கு வெகுநேரமாகிவிடப் போவதில்லைதான். ஆனால் பட்டாம்பூச்சியிலிருந்து மீண்டும் கூட்டுப்புழுவாக மாறும் இவ்வியந்திரத்தனம் அதற்கான நேரங்களை எப்போதும் திருப்பித் தருவதில்லை.
நினைத்த மாத்திரத்தில் நனையும் மழையும், நினைத்த மாத்திரத்தில் நமக்கே நமக்கென சந்தோசமாய் கிளம்பும் பயணங்களும் வரம்.
என்ன அழகாய் எழுத்து.. வாழ்த்துகள்..
வலைச்சரத்திற்காக நான் இப்போது மீண்டும் ஒவ்வொரு வலைத்தளமாய் நுழைந்து பார்க்கிறேன். மனசுக்குள் ஒரு வேதனை கவ்விக் கொள்கிறது.. எத்தனை பேர் இப்போது எழுதுவதை அதாவது அவரவர் வலைத்தளத்தில் எழுதுவதை விட்டு விட்டார்கள் என்று அறிய நேரும்போது ஒரு வித சங்கடம்..
நண்பர் கே.பி.ஜனார்த்தனன் சொல்லுவார்.. முகநூலில் எழுதினால் என்ன.. அதையே கூட நீங்கள் உங்கள் வலைப்பூவிலும் பதியலாமே.. உயிர்ப்போடு வைத்திருக்கலாமே என்று.
ஏதாவது ஒரு வகையில் வலைப்பூவுடன் தொடர்பிருந்தால் அதுவே ஒரு தூண்டுதலாகிப் பிறகு வலைத்தளத்திற்காகவே புதிதாய் எழுதத் தோன்றும் அல்லவா..
முகநூல் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் ஃப்ராங்ளின்குமார்.. இவரது கவிதைகளில் காட்சியும்.. புகைப்படங்களில் கவிதையும் விரியும்.
தீரா வனம்
விரிந்து கொண்டேயிருக்கிறது
புல்லாங்குழலுள்.
இதோ அவரது புகைப்படக் கவிதை..
தொடர்வோம் நாளை...