வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள்
இனிய காலை வணக்கம் !
அரங்கனைக் காண நாம் ஒவ்வொரு வீதியாய் சுற்றி வருகிறோம். என்னோடு இணைந்து நீங்களும் வருவதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி.
சப்தப்ராகாரத்தில் ஏழாம் பிராகாரம் சித்திரை வீதிகள் தான். சித்திரைத் தேரும் பங்குனி கோரதமும் இந்த வீதிக்கான பெருமைகள். அவை மட்டுமா..
உடையவர் என்றழைக்கப்படும் ஸ்ரீராமானுஜரின் பிரதான சிஷ்யரான கூரத்தாழ்வான் திருமாளிகையும், உடையவரின் ஆசார்யர்களில் ஒருவரான பெரிய நம்பி ஸ்வாமிகள் திருமாளிகையும் இந்த வீதியில் தான் (கீழச் சித்திரைவீதி) உள்ளன.
மனித நேயம் மட்டுமே உண்மையான வழிபாடு என்பதை அப்போதே வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்பெருமானார் என்கிற உடையவர். அவரது குருவான பெரிய நம்பி ஸ்வாமியும் அப்படித்தானே இருந்திருப்பார்.. மாறனேர் நம்பி என்கிற பிராம்மணர் அல்லாத ஒருவருக்கு இறுதிச் சடங்கை அவர் செய்ததால் ஊரார் அவரை விலக்கி வைத்தனர்.
பெரிய நம்பி ஸ்வாமியின் திருமகள் அத்துழாய் இதைக் கண்டு மனம் பொறுக்காமல் ஒரு முறை அரங்கன் வீதி வரும்போது “என் தகப்பனார் செய்தது சரியென்றால் நீங்கள் இந்த இடம் விட்டு நகரக் கூடாது.. “ என்று வேண்ட அரங்கன் அப்படியே நகராமல் நின்று விட்டாராம்/ ஊர்க்காரர்கள் வந்து மன்னிப்பு கேட்டபின்னரே நகர முடிந்ததாம்.
பதிவுகளில் வீண் வம்பிற்கு இடந்தராமல்.. பிறர் மனம் புண்படாமல்.. அழகழகான கருத்துகளைப் பதிவு செய்து வரும் அற்புதமான பதிவர்களுக்கு நமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வோம்.
இதோ இன்றைய பதிவர்கள்...
ஹரணி பக்கங்கள் என்கிற தலைப்பில் பதிவிடுகிறார் தஞ்சாவூர் கரந்தையைச் சேர்ந்த பதிவர்..தமிழ் பால் மாறாத காதல் கொண்டவர்.
சிறுகதைகள்.. நாவல்.. கட்டுரைகள்.. கவிதைகள் என பல தளங்களில் இயங்கி வரும் இவர் பல பரிசுகளுக்கும், தொகுப்புகளுக்கும் சொந்தக்காரர்.
வலை வீசுதலில்
மீன்கள் சிக்குகின்றன
ஒரு போதும்
நதியல்ல..
இலக்கிய ரசனையை அவர் நம்மோடு பகிரும் பதிவுகளைப் படித்து மகிழ உங்களை அழைக்கிறேன்.
பறத்தல்- பறத்தல் நிமித்தம் நிலாமகளின் எழுத்துக் கூடு. இங்கே எண்ணப் பறவைகள் அடைபடுவதில்லை. அதன் சிறகுகளை விரித்துப் பறக்கும் பிரபஞ்சக் கூடாகவே அமைந்திருக்கிறது. எழுத்து குறித்த கவனிப்பும் நேர்த்தியும் சக மனிதர் மீதான கம்பீரப் பார்வையும் கொண்ட எழுத்தாளர் இவர். கவிதைகள் இவரின் சிறகுகள்.. கதைகள் இவர் அமரும் கிளை. ஏனோ தானோவென்று எழுதிப் பழகும் சராசரி வேடிக்கை மனிதர் கூட்டத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பது இவரின் பலம். பறவை வடிவிலொரு பரமன் பறவையின் மொழியைத் தேடி அலைந்து கண்டுபிடித்தும் விடுகிற அதிசயத்தைப் படித்து ரசியுங்கள்.
எண்ணிய முடிதல் வேண்டும் ஸ்ரீரங்கம் பற்றி சொல்லிக் கொண்டு ஸ்ரீரங்கத்து எழுத்தாளரை எப்படிச் சொல்லாமல் விடுவது.. பிரபல எழுத்தாளரின் மகள் என்கிற பெருமை ஒரு புறம்.. இவரே பிரபலம் என்கிற சுயபலம்..ஷைலஜா அவர்களின் எழுத்தாற்றல் பல பரிசுகளை அவருக்கு வாங்கித் தந்திருக்கிறது.
சமூகம்.. ஆன்மீகம் என்று எந்தத்துறையைத் தொட்டாலும் பரிமளிக்கிற எழுத்து வித்தை அவரிடம். பழக மிக எளிமை.. அன்புள்ள அப்பா அப்பாவை அவர் கொண்டாடுகிற இந்தப் பதிவைப் படியுங்கள்.
கற்றலும் கேட்டலும் வலைப்பூவிலும் முகநூலிலும் சக்கைப் போடு போடும் இவர் நவீன ஆண்டாள்.. தமிழ் தன் அத்தனை வார்த்தைகளையும் இவரிடம் கொடுத்து வேடிக்கை பார்க்கிறது. பாக்களில் எவ்வளவு வகை உண்டோ அவ்வளவும் இவரிடம் வரிசை கட்டி நிற்கிறது. எல்லா திவ்யதேச எம்பெருமான்களும் புளியமரத்தின் கிளைகளில் தொங்கிக் கொண்டு எம்மை மங்களாசாசனம் செய்யும் என்று முன்பு நம்மாழ்வாரைக் கேட்பார்களாம். அவர் பாசுரங்களின் இனிமையும் பெருமையும் அப்படி. இந்த நவீன ஆண்டாளுக்கும் இத்திறமை எம்பெருமான் அருளாய் இருக்குமோ.. முகநூலுக்கு வந்து இவர் பாக்களின் ருசியை அனுபவியுங்கள்.. சிறுகதைகள் முயற்சியிலும் இவர் சளைக்கவில்லை என்பதற்கு உதாரணமாய் பிரமி !
இனி ஒரு முகநூல் கவிதை... குறிப்பிடத்தக்க கவிதாயினிகளில் ஒருவரான இவர் எழுத்துக்களில் இயல்பாய்ச் சொல்வது போல வந்து விழும் வார்த்தைகளினுள்ளே ஒளிந்திருக்கும் நம்மைத் திடுக்கிடச் செய்யும் அற்புதம்..
தீரா வேட்கையுடன்
நீந்தி வருகிறதோர் நீரரவம்
நிதானமாய் பற்றி அருந்துகிறது
நிலைப்பெருங்கடல் ….
கனிமொழி.ஜி.
நாளை சந்திப்போம்...