கல்விச் சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு.
- மகாகவி பாரதியார்.
பல்வேறு தலைப்புகளில் பல தளங்களை அறிமுகப்படுத்தினாலும் அது நதிபோல் நீண்டு கொண்டே போய்கொண்டிருக்கிறது. பல தளங்கள் விடுபட்டிருக்கின்றன. இருந்தாலும் கிடைத்த நேரத்தில் என்னால் முடிந்த அளவு பல சிறப்பு வாய்ந்த பதிவுகளை அறிமுகப்படுத்தி வருகிறேன். அந்த வகையில் இன்று நான் ரசித்த பல பதிவுகளில் சில வரிசைகளைச் சரமாக தொடுத்துள்ளேன்.
நான் வலைப்பூவிற்கு வந்த புதிதிலும் இன்றும் விரும்பி படிக்கும் ஒன்று ஜாக்கிசேகரின் சாண்ட்வெஜ் அண்ட் நான்வெஜ். அட்ரா சக்க சி.பி.செந்தில்குமாரை மறந்தால் யாரும் என்னை மன்னிக்கமாட்டார்கள். அவரின் சினிமா விமர்சனமும் அதற்குரிய படங்களும் அருமையாக இருக்கும். சிவகார்த்திகேயன் பெண்களை கலாய்த்த ஜோக்குகளை சொல்கிறார். பதிவுலக உறவுமுறைகளை காமெடியாய் கலாய்க்கும் நாய் நக்ஸ்.
கடற்கரயின் பதிவான ஊர்ப்புராணம் தொடரில் எனக்குத் தெரிந்த மெட்ராஸ் வாசித்துப் பாருங்கள்.வழிப்போக்கனது உலகத்தில் உலகின் வரலாறு தொடரை ரசியுங்கள்.
அறிமுகம் :
1. நா.முத்துநிலவனின் வளரும் கவிதை வலைப்பூ. தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்த்த இவரின் படைப்புகளையும் பாருங்கள்.இவரது வலைப்பூவினை அறிமுகப்படுத்துவதில் எனக்கு மிகப்பெறும் மகிழ்ச்சி.
2. S.இராமனின் ஒரு ஊழியனின் குரல் தளம். நிறைய சுவராஸ்யமான அரசியல் மற்றும் தகவல்களைக் கொண்டுள்ளது.
நன்றி :
இதுவரை தொடர்ந்து ஏழு நாட்கள் பதிவு எழுதியதேயில்லை. அதுவும் மற்றவர்களின் தளங்களை அறிமுகம் செய்யும் ஒரு அரிய வாய்ப்பு. அதனை வலைச்சரத்தில் தொடுக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த சீனா ஐயா மற்றும் அவரது குழுவினர்களுக்கும் எனது முதல் நன்றி. இந்த வாரம் முழுவதும் அனைத்து பதிவுகளுக்கும் கருத்துக்கள் வழங்கிய அனைவருக்கும் நன்றி. எனக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் நான் கணினியிலேயே அமர்ந்திருப்பதை பொறுமையாகவும் கோபத்தை அடக்கிக்கொண்டும் இருந்த எனது அன்பு மனைவிக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் எனது நன்றிகள்.
இப்படிக்கு
அலையல்ல சுனாமி - விச்சு...
படங்கள் அனைத்தும் கூகுள் தேடலில் கிடைத்தவை (எனது போட்டோவைத் தவிர). இம்புட்டு தூரம் வந்தாச்சு. மறந்திடாம தமிழ்மணத்தில் வாக்கும் உங்கள் அருமையான கருத்துக்களையும் இடுங்கள்.
மேலும் வாசிக்க...
ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.
- பாரதியார்
அறிவியல் என்பது மனித அனுபவங்களின் தொகுப்பு ஆகும். இன்றைய நவீன உலகில் அறிவியல் வளர்ச்சி வியக்க வைக்கும் அளவில் முன்னேறியுள்ளது. அறிவியலின் மூலம் பல ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்புகள் உருவாகின. மனிதகுலம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் பூமியில் அனைத்து உயிர்களும் வாழ வகைசெய்யும் முறையில் அறிவியல் முன்னேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வலைப்பூக்களில் அறிவியலைப் பற்றி நிறைய பதிவர்கள் எழுத முன்வரவேண்டும். ஆங்கிலத்தில் உள்ளதை தமிழில் மொழி பெயர்க்கலாம். பிறமொழியில் உள்ள சிறந்த நூல்களைத் தமிழ் மொழியில் எழுத அனைவரும் முன்வந்தால் சிறந்த கட்டுரைகள் நம் மாணவர்களுக்கு கிடைக்கும்.
அறிவியல் கட்டுரைகள் கடல்போல் கிடைத்தாலும் சில பதிவுகளை நான் இன்று வலைச்சரத்தின்மூலம் பகிர்ந்துகொள்கிறேன்.அறிவியல் கவிதையுடன் முதலில் ஆரம்பிப்போம். Dreamer அவர்கள் தளத்தில் கேணிவனம் என்னும் அற்புதமான தொடர்கதை உள்ளது. செம இன்ட்ரஸ்டிங்க். மேலும் விருபா அறிவியல் புனை கதைகள் பற்றி அலசி ஆராய்ந்துள்ளார்.
செல்வராஜின் மானிடன் வலைப்பூவில் சூரியன் உலக சக்திகளின் மையம் என்ற கட்டுரையினை வாசியுங்கள். சூரியனின் மஹாசக்தி நமக்குப் புரியும். நாம்தான் உலகத்தில் பெரியவன் என்று நினைத்துக்கொண்டு காலம்கடத்துகிறோம். மனசாலியின் தளம் சென்றால் நம் எண்ணத்தினை நிறையவே மாற்றிக்கொள்வோம்.
இன்றைய வானம் தளத்தில் பிரபஞ்ச ரகசியம் பற்றி அருமையான கட்டுரையும் அதில் ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்றவர்களைப்பற்றியும் அறியலாம். வானத்தினை எட்டிப் பிடிக்க கைக்கெட்டும் தூரம் வானம் வாசியுங்கள்.
அப்பு சிவாவின் நட்சத்திரம் பற்றிய கட்டுரையில் நிறைய சுவாரஸ்யமான விசயங்களை அருமையாக விளக்கியுள்ளார். டிலீப் அவர்கள் வானியல் என்றால் என்ன என எளிமையாக விளக்குகிறார். சொ.ஞானசம்பந்தன் அவர்கள் வால்மீன்கள் என்பதனைப் பற்றி அரிய தகவல்களுடன் அழகுபடச் சொல்லியுள்ளார்.
நிறைய வானியல் பற்றிய தளங்களாகப் பார்த்துவிட்டோம். ஜலீலா கமலின் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் குறைவதால் ஏற்படும் பல்வேறு குறைபாடுகளையும் அறிந்துகொள்வோம். தமிழ்மகனின் கட்டுரையான தேசிய கடல்வாழ் உயிரின பூங்காவில் தீவுகளின் பெயர்கள், அமைவிடம் பற்றியும் சொல்லியுள்ளார்.
தமிழ்நாடு விவசாயத்தில் மண்புழு உரத்தினைப் பற்றி சிறிய பகுதியாகவும், வீடியோவுடனும் சொல்லியுள்ளார்கள். மேலும் விஞ்ஞானம் பற்றி அறிந்து கொள்ள பல தளங்களின் இணைப்புடன் கூடிய விஞ்ஞானக் குருவி தளத்திற்கு செல்லுங்கள்.
தமிழ் :
அறிவியலை மட்டும் பார்த்தால் போதுமா. நமது தாய்மொழியினைப் பற்றி கொஞ்சம் எனக்குப் பிடித்த சில தளங்களின் வரிசை.
"என்றும் இளமை குன்றா மொழியே" எனப்போற்றும் கவிதைகளில் சிறப்பு கவனம் செலுத்தும் புலவர் சா ராமாநுசம் அவர்களின் அருமையான பாடல்.
கிருஷ்ண பிரபுவின் தளத்தில் புத்தகப் பட்டியலை பாருங்கள். நிறைய புத்தகங்களின் வரிசை.சேரலாதன் பாலசுப்பிரமணியன் தாமரை பூத்த தடாகம் என்ற புத்தகம் பற்றி பாருங்கள். தமிழ் புத்தகங்களின் விமர்சனத்தோடு அருமையான தளம்.
அறிமுகம் :
1.ஏஞ்சலினின் காகித பூக்கள் வலைப்பூ. நிறைய பொருட்களை எளிமையான முறையில் செய்வதனைப் பற்றி படங்களுடன் விளக்குகிறார்.
2.மதுமிதாவின் வலைப்பூ. மிகவும் அருமையான கவிதைகள், சிறுகதை, கதம்பம் எனக்கலக்குகிறார்.
படங்கள் அனைத்தும் கூகுள் தேடலில் கிடைத்தவை. இம்புட்டு தூரம் வந்தாச்சு. மறந்திடாம தமிழ்மணத்தில் வாக்கும் உங்கள் அருமையான கருத்துக்களையும் இடுங்கள்.
மேலும் வாசிக்க...
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.
- பாரதியார்
இன்று வலைச்சரத்தினை ஒரு கதம்பமாகத் தரலாம் என எண்ணினேண். பல தலைப்புகளில் நம்மவர்கள் எழுதுகிறார்கள். அத்தனையும் இணைக்க முனையும்போது நிறைய கட்டுரைகள் காணக்கிடைக்கின்றன. நான் படித்த சில தொகுப்புகளைக் காணலாம். நண்பர் சூர்யஜீவாவின் ஒரு சந்தேகத்திற்காக ஒரு பதிவினையேப் போட்டுள்ளார் வவ்வால். வால்மார்ட், சில்லரை வர்த்தகம் பற்றிய பதிவு. எனது சில சந்தேகங்களையும் இது போக்கியுள்ளது.
நீங்க மரமாகப் போறீங்க என்று பயமுறுத்திவிட்டு மரம் பேசுவதுபோல் அருமையான கட்டுரை வடித்துள்ளார் திண்டுக்கல் தனபாலன். இன்றைய காலக்கட்டத்தில் அந்த மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் சிக்கிச் சீரழிகிறோம். சிவகாசி போன்ற ஊருக்குள் ஒருநாள் முழுவது சுற்றிவிட்டு வாருங்கள். உங்களின் மேனியின் பளபளப்பு மெருகேறிவிடும்.சுற்றுச்சூழல் மாசுபடுதல் மூலம் விளக்குகிறார் ராஜா.
சங்கீதாவின் அம்மா ஊருக்குப் போகிறாள் மூலம் சீனியர் சிட்டிசன்கள் படும்பாட்டை விளக்கியுள்ளார். இது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றுதான்.
விமலன் வலைப்பூ அற்புதமான பல கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இவரது எழுத்தும் வேறு கோணத்தில் பயனிக்கிறது. இவரின் உலர்களம் படித்துப்பாருங்கள். பசியினால் யாசகம் கேட்கவருபவர்களைப் பற்றி விவரித்து்ள்ளார்.
நேற்று - குழந்தை, இன்று - குமரி, நாளை - அடிமை எனச் சாடுகிறார்.
ஜோஸபின் பாபா இதனைப்போன்றே ஒரு கட்டுரையில் பெண்களுக்கு மனஅழுத்தம் என்ற தலைப்பில் எழுதியுள்ளார். காலைமுதல் இரவுவரை வேலை பார்த்துக்கொண்டே இருக்கும் பெண்களின் மன அழுத்தத்தினைப்பற்றி கூறியுள்ளார்.
செ குவேராவை அறிந்துகொள்ள என்னைகவர்ந்த பிரபலங்களில் ராஜ் நண்பர்கள் வலைப்பூவில் சுவைபடக்கூறியுள்ளார். செ குவேராவினை அறிந்துகொள்ள அந்தத் தளம் சென்று பாருங்கள்.
சே.குமாரின் வரி கொடுக்க மறவான் என்ற கட்டுரையில் "முப்பது வயதில் ஆட்சிப்பொறுப்பேற்று வெள்ளையனை எதிர்த்துப் போராடி 39வது வயதில் மக்களுக்காக இன்னுயிரை ஈந்த வீர மறவனை போற்றுவோம்" என்கிறார்.
இரா. எட்வின் அவர்கள் ஒரு சிறுகதையின் மூலம் சாமிக்கும் ஒரு பொம்மை விற்கும் வியாபாரிக்கும் இடையில் நடக்கும் சம்பாஷைனைகளை சுவைபட விவரித்துள்ளார். சாமி மீண்டும் பொம்மையாகிப் போனார் கதையினைப் படியுங்கள்.
சோழிகளை வைத்து ஜோசியம் பார்க்கணுமா? லட்சுமி அம்மாவின் பலகரை சோதிடம் சென்று பாருங்கள். நீங்களும்கூட சோழிகளை வைத்து ஜோசியம் பார்க்கலாம்.
என்னங்க உங்களுக்கு எதப்பார்த்தாலும் தெனாலி கமல் மாதிரி பயமா இருக்குதா? பயப்படாதீங்க நிறைய போபியாவைப்பற்றி ராம்வி அவர்களிடம் கேட்டு அறிந்து கொள்வோம்.
சிவரஞ்சனியின் உங்களுக்கும் ஒரு குழந்தை வாசியுங்கள். உங்களிடம் இருக்கும் குழந்தை மனப்பான்மையால் டென்சனிலிருந்து வெளியே வாருங்கள். உழவனின் குழந்தை மொழியை புரிந்துகொள்ள அம்மா டம்மா வாசியுங்கள். உங்கள் குழந்தைகள் பேசும் பேச்சுக்களை ரசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
இப்போது நாகரீகம் என்ற பெயரில் நமது குழந்தைகளுக்கு தனி அறை ஒதுக்கி கொடுக்கிறோம். இணைய இணைப்புடன் கூடிய கணினி கொடுக்கிறோம்.அதுதான் பிரச்சினைக்கே ஆரம்பம். எனது உறவினர் அத்தகைய தவறினை செய்துவிட்டு உடனே சுதாரித்து ஹாலில் இணைய இணைப்புள்ள கணினியை வைத்தார். அங்கேதான் யன்படுத்த வேண்டும். வீடு சுரேஷ்குமார் அபாயம் இணைய இணைப்பு இங்குள்ளது என எச்சரிக்கை விடுக்கிறார்.
கீதமஞ்சரியில் ஆஸ்திரேலிய பள்ளிகள் பற்றிய தொடர் பதிவினை கீதா அவர்கள் எழுதிவருகிறார்கள். நிறைய விசயங்கள் இதில் உள்ளன.இதுவரை ஐந்து பகுதிகள் எழுதிவிட்டார்.சென்று படித்துப்பாருங்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன் ஐயாவினைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். எனக்கு வலைப்பூவினை எழுத தொடர்ந்து உற்சாகம் கொடுக்க கூடியவர்.அவரின் ஹீமோபிலியா பற்றிய பதிவு அனைவருக்குமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும். படங்களுடன் எளிமையாகவும் புரியும்படியும் இருக்கும்.
அறிமுகம் :
1. திவ்யா@ தேன்மொழியின் வலைப்பூ தேன்சிட்டு. கவிதைகளை அழகாக தொகுத்து வருகிறார். 2. கடம்பவன் குயிலின் கடம்பவன பூங்காவில் கவிதைகள் கட்டுரைகள், இலக்கியங்களை எழுதுகிறார்.
படங்கள் அனைத்தும் கூகுள் தேடலில் கிடைத்தவை. இம்புட்டு தூரம் வந்தாச்சு. மறந்திடாம தமிழ்மணத்தில் வாக்கும் உங்கள் அருமையான கருத்துகளையும் இடுங்கள்.
மேலும் வாசிக்க...
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கண நாதன் நங்குடியை வாழ்விப்பான்;
சிந்தையே! இம்மூன்றும் செய்.
கவிதை எழுதும் பதிவர்கள் அதிகம் எனவே எண்ணுகிறேன். நான் கல்லூரியில் படிக்கும்போது எழுதும் கவிதைகள் அனைத்தும் எனக்கு சிறந்ததாகத் தோன்றினாலும் அதனை வாசிக்கவோ, விமர்சிக்கவோ யாருமில்லை. ஆனால் வலைப்பூவில் நண்பர்கள் வட்டமும் அதிகம், உற்சாகப்படுத்துவோரும் அதிகம். அதனால் தைரியமாக கவிதை எழுதுகிறேன். இன்றைய வலைச்சரத்தினை கவிதையாகவும் கதையாகவும் தொடுக்கலாம் என எண்ணுகையில் எத்தனை கவிதைகள் மண்டிக்கிடக்கின்றன. சிறந்த கவிதைகள் பல இருந்தாலும் நான் படித்தவற்றில் சில உங்கள் பார்வைக்கு.
முதலில் தோழி ஹேமாவின் கவிதையான பொல்லாத கடவுள். கனவில் கூரை பிய்வதனை வைத்து அழகான கற்பனையுடன் கவிதையை வடித்திருக்கிறார்.
சசிகலாவின் தண்ணீரின் தாகம். தண்ணீரின் தேவையை வலியுறுத்தும் கவிதை.அப்பாவி தங்கமணியின் மருதாணி நினைவுகள் வாசித்துப்பாருங்கள். சின்னவயதில் அம்மா இட்ட மருதாணியின் ஞாபகம் கட்டாயம் வரும்.
"சீர்மிகு கவிகள் செய்ய
சிந்தனை அதிகம் வேண்டாம்
கூர்மதி அதுவும் வேண்டாம்
குழப்பமும் சிறிதும் வேண்டாம்"
என்று அருமையாக உரைக்கிறார்.
என்.விநாயகமுருகனின் ஜப்திக்கு வந்த வீட்டில் நடக்கும் சோக நிகழ்வினை படம் பிடித்துக் காட்டுகிறார்.
மாய உலகம் ராஜேஷினை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளை நமக்கு ஞாபகமூட்டி செல்கிறார். அவருக்கு இது சமர்ப்பணம்.
நிலாமகளின் செவிக்குணவு. ஒரு குழல் விற்பவனின் மனநிலையை நம்முன் நிறுத்துகிறார்.
பெற்றோரை தம்
"பிடிவாதத்தால் மசிய வைக்கும்
குழந்தைகள்
சூழ்ந்தனர் அவனை
இன்றிரவு உறங்கலாம்
அவனும்
நிறைந்த வயிறுடன்" அற்புத வரிகள்.
அஞ்சல் முகவரியில்
நீ எழுதிய எனது பெயரிலும்
காதலை தேடுகிறேன்!!!
வாசிக்க சுவராஸ்யமாக உள்ளது.
கதை எழுதுவது அவ்வளவு எளிது என்று எனக்குத்தெரியவில்லை. நான் முதலில் எழுதிய கதை மொக்கராசுவின் கட்டில். ஒரு மனிதன் கட்டில் மேல் கொண்டிருக்கும் காதலை வர்ணிக்க முயற்சித்தேன். அது சோக முடிவினைத் தந்தாலும் அதிகம் ரசிக்கப்பட்ட ஒரு கதை. ஆனால் இரண்டு கதைகள்தான் முயற்சித்தேன்.
பல முன்னனி எழுத்தாளர்களின் அற்புதமான கதைகளைப் படிக்க அழியாச்சுடர்கள் பக்கம் வாருங்கள். எனக்கு மிகவும் பிடித்த தி.ஜானகிராமனின் முள்முடி கதை அதில் உள்ளது. கல்லூரிக் காலங்களில் நான் மிகவும் ரசித்து படித்த கதைகளில் இதுவும் ஒன்று.
கதையினைப் பற்றி சொல்லும்போது வை.கோபாலகிருஷ்ணன் ஐயாவைப்பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. தினமலர் போட்டிக்காக அவர் எழுதிய என் உயிர்தோழியில் பாட்டியும் பேத்தியின் சிந்தனையுமாக இருக்கும் ஒரு கதை. மற்றொன்று ஜாதிப்பூ. ஒரு பூ விற்கும் பெண்மணியினைப் பற்றிய கதை. இதில் சுவராஸ்யமான திருப்பமும் உள்ளது.
ஷைலஜாவின் அரங்க பவன் கதையில் ஒரு மனிதரின் விடாப்பிடியான சுபாவத்தினை அழகான கதையாக வடித்துள்ளார். படித்துப் பாருங்கள். பிடித்துப்போகும்.
ஸாதிகாவின் அதிர்ஷ்டக்காரி. தாழ்வு மனப்பான்மையுள்ள ஒரு மணப்பெண்ணைப் பற்றிய கதை. ஒரு கணவன் மனைவிக்குமிடையே நடக்கும் கோபியின் 24/5 சிறுகதையினை வாசியுங்கள்.ஒரு கணவனின் பாசத்திற்கு ஏங்கும் மனைவியின் கதை. முடிவும் நன்று.
சிறுவர் உலகத்தினை புரிந்து கதை எழுதும் ஒரு வலைப்பூ காஞ்சனா ராதாகிருஷ்ணனின் சிறுவர் உலகம்.மூத்தோர் சொல் மதிப்போம் கதை சிறுவர்கள் மூத்தோர்களை மதிக்க கற்றுக்கொடுக்கிறது.
அறிமுகம் :
1.சசிகலா எழுத்தில் உலாவர தென்றல் வாசியுங்கள். விதவிதமான கவிதைகளில் நம்மை கிறங்கடிக்கிறார்.
2. மாலதியின் சிந்தனைகள் ஒரு அருமையான வலைப்பூ. அவர் வரைந்த மரண சாசனம் கவிதை அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் கூகுள் தேடலில் கிடைத்தவை. இம்புட்டு தூரம் வந்தாச்சு. மறந்திடாம தமிழ்மணத்தில் வாக்கும் உங்கள் அருமையான கருத்துகளையும் இடுங்கள்.
மேலும் வாசிக்க...
"கத்தரிப் பொரியலும்
கரும்பாகக் குழம்பும்
புத்துருக்கு நெய்யும்
பொன்நிறப் பருப்பும்
மிளகின் சாறும்
புளியாத் தயிரும்
அனைவருக்கும் நிகரே!" - பாவேந்தர் பாரதிதாசன்
நாம் சம்பாதிப்பதெல்லாமே உணவுக்காகத்தான். மற்றதெல்லாம் அப்புறம்தான். பசியில் இருக்கும் ஒருவனிடம் கவிதை பேசினால் கவிதையாவது கழுதையாவது... என்ற பதில்தான் வரும். அதனால்தான் பள்ளியில்கூட சத்துணவுத்திட்டத்தினை கொண்டு வந்தனர். பசியிருந்தால் மாணவர்களின் சிந்தனை மாறிவிடும். வாருங்கள்!!! நாமும் கொஞ்சம் உணவினை ருசித்துப் பசியாறுவோம்.
முதலில் காய்கறி வாங்குவது பற்றி அனைவருக்கும் சொன்ன துரை டேனியலுக்கு நன்றிகள். அப்புறம் ராஜி மாதிரி சமையலறையை சமர்த்தா வச்சுக்கணும். அது உடம்புக்கும் மனசுக்கும் ஆரோக்கியத்தினைத் தரும். காய்கறிகளில் பல வண்ணங்கள் உள்ளன.வண்ணச்சுவை மூலம் அதன் நலன்களை அறிந்து கொள்ளலாம்.
எனக்குப் பிடித்த சமையல் டொமெட்டோ நூடுல்ஸ் செய்வது பற்றி சமையலில் பின்னி பெடெலெடுக்கும் ஆமினாவினை கேளுங்கள்.
ஆரோக்கியமான உடம்புக்கு நல்லது . ராகி சேமியா முளை கட்டிய பயறு சமைத்து சாப்பிடுவது பற்றி அழகாகப் படங்களுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் சொல்கிறார் ஆசியா ஓமர்.
ஜலீலா கமலின் பாலக்கீரை போண்டா சாப்பிட்டுப் பாருங்கள். செம டேஸ்ட். கோவை 2 தில்லியின் வாழைப்பூ பருப்புசிலி செய்து பாருங்கள். உடம்புக்கு நல்லது அதனையே பீன்ஸ் , குடைமிளகாய், கொத்தவரங்காய் வைத்தும் செய்யலாம்.
சரி வாழைப்பூவினை எப்படி உரிப்பது? அழகாகப் படங்களுடன் சொல்லித்தருகிறார் துளசி கோபால்.
இப்போதெல்லாம் மக்கள் மூலிகையைத் தேடித் தேடி வாங்க ஆரம்பித்துவிட்டனர்.ஒரு சிறந்த மூலைகையான தூதுவளைக் குழம்பு செய்து சாதம், பிட்டு, இடியாப்பத்துடன் சாப்பிட்டுப் பாருங்கள் என்கிறார் மாதேவி.
சமையலைப் பத்தி சொல்லும்போது மேனகாவை சொல்லாமல் விடமுடியுமா? காலிபிளவர் பட்டாணி மசால் தோசை செய்து பார்க்கலாம் என்கிறார் மேனகா.இவருடைய பதிவில் சமையல் கொட்டி கிடக்கின்றன.
பாம்பு மாதிரி இருக்கும் புடலங்காயைச் சில குழந்தைகள் உண்ணாது. அவர்களுக்காக அடுப்பங்கரையில் வித்தியாசமாக புடலங்காய் மசாலா அடைத்த கறி செய்து கொடுத்துப் பாருங்கள். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.
அசைவ சமையல் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காவிட்டாலும் சில குறிப்பாவது சொல்லிவிடுவோம் எனும் எண்ணத்தில் S.மேனகாவின் முட்டை கட்லெட் மற்றும் சிநேகிதியின் சிக்கன் டிக்கா செய்து சாப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
சுவை போதும். இனி கொஞ்சம் நகைச்சுவை. நகைச்சுவையில்லா மனிதன் மனிதனே இல்லை. மூஞ்சிக்கும் முகத்திற்கும் வித்தியாசம் உண்டு. மூஞ்சி என்பது சிரிக்காத மனிதனிடம், முகம் என்பது சிரிக்கும் மனிதனிடம். .சிரித்தாலே பாதி கவலை ஓடிவிடும். பிரச்சனைகளைத் தள்ளிப் போடுங்கள். பொழுது மலச்சிக்கல் இல்லாமல் விடியவேண்டும்...இரவு மனச்சிக்கல் இல்லாமல் முடியவேண்டும் என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகளுக்கேற்ப மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள்.
கார்ட்டூனை ரசிக்க நீச்சல்காரனைப் பாருங்கள்.அதுவும் அந்த திருமண அழைப்பிதழ் சூப்பர். கடி என்று வந்தபின் டாக்டரை எப்படி விட்டு வைப்பது. ரியாஸி்ன் ஜோக்ஸ் டாக்டரைப் பாருங்கள். உங்களின் நோய் அனைத்தும் போயே போச்...
காக்கை தெரியும், சக்கை தெரியும், தக்கை தெரியும், யாக்கை தெரியும் (உடம்பு) அட புக்கை கூட தெரியும் ( ஒருவகை கூழ்) அதென்ன மொக்கை?
அறிமுகம் :
1.மயிலனின் மயிலிறகு. முத்ததின் மிச்சம், இரவானவள், ஒரு காதலின் டைரி என கலக்குகிறார்.சென்று பாருங்கள்.
2.நண்பர் கணேஷின் மின்னல் வரிகள். பசிப்பிணி என்னும் பாவி, கொஞ்சம் ஹீ.ஹி,ஒரு காதல் கதை என அருமையாக படைத்து வருகிறார்.
அப்படியே சிரிச்சுக்கிட்டே போனா எப்படி? இம்புட்டு தூரம் வந்தாச்சு. மறந்திடாம பின்னூட்டம் இடுங்கள். தமிழ்மணத்தில் ஓட்டுப் போடுங்கள்.
மேலும் வாசிக்க...
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம்; சிற்பமுதற் கலைக ளுண்டாம்:
ஆதலினால் காதல்செய்வீர் ; - பாரதியார்
காதலிக்கும்போது ராசிபலன் பார்ப்பதில்லை. சாதிமதம் பார்ப்பதில்லை. சிலநேரம் முகத்தினைகூட பார்ப்பதில்லை.
"உன் கால்நகம் கூட கவி சொல்லும்"
சிலநேரம் காதலியையோ காதலனையோ வாழ்த்த... அதாங்க...ஐஸ் வைக்க வார்த்தைகளில்லாமல்
"என் இனிய ரோபோவே... என் இனிய ஆப்பிளே... என் இனிய முத்தமே.."
என்று சகட்டுமேனிக்குப் புகழும்போது மாதங்களை விட்டு வைத்தால் எப்படி? மாதங்களில் காதலி " ஆவணியில் வீசிய என் தவணிக்காற்று" என ஒவ்வொரு மாதமாக அழகாக வர்ணிக்கிறார் தினேஷ்குமார்.
கடன் கேட்டலும் கொடுத்தலுமே காதலுக்கு அழகு. ஆனால் அதனை வட்டியுடன் கேட்கிறார் கவிதை காதலன்.
காதலித்தபின் ரொமான்ஸ் இல்லையென்றால் எப்படி.
"சாயம் பூசாமல் எப்போதுமே
சிவந்து கிடக்கின்றன
சாயப்பட்டறையாய் என் உதடுகள்
உன் முத்தத்தால்." என ரொமான்ஸ் மழையில் நனைய வைக்கிறார். வேற யாருங்க? கவிதையில் அசத்தும் தேனம்மை.
ஜில்லுனு ஒரு காதல். அட சினிமா படமில்லீங்க. அப்பாவி தங்கமணியின் இது ஒரு தொடர்கதை. சும்மா 25 பாகங்கள்தான். நேரம் கிடைத்தால் படித்துப்பாருங்கள். குளிர்ந்துவிடும் மனது. நல்லநாள் பார்த்தே உன் அப்பாவை
உன்னை பெண் கேட்பதற்காக அல்ல
என்னை உன்னிடம் எழுதித் தருவதற்காக!!!
சும்மா காதலியைப் புகழ்ந்து தள்ளுகிறார் தெருப்பாடகனின் வெட்கத்துண்டை வீசியவள்.
முதலில் ஒரு பெண்ணைப் பார்க்கும்போது யாரெனத்தெரியாது. நாட்கள் செல்லசெல்லத்தான் தெரியும் அவள்தான் நீயென்று. விழிச்சேர்க்கையில்தான் சிலபேரின் உயிரே வாழும். நீ யாரெனத் தெரியவில்லை எனச் சொல்லிக்கொண்டே அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டார் மதுமதி.
மணமானவர்கள் உண்மையான காதலை எங்கும் தேடவேண்டாம். உன் மனைவியை நேசி. காதலும் உன்னை காதலிக்கும். காதலிக்க கற்றுக் கொள்ளத் தவறுவதால்தான் விவாகரத்து அதிகரிக்கின்றன. எனக்கு வாய்த்தவளைப்பற்றி நான் அப்படித்தான் நினைக்கிறேன்.
இமை, இதழ், கன்னம், மார்பு எதையும் விட்டு வைப்பதில்லை காதலர்கள். அட... நீங்க வேற... வர்ணிக்கும்போதுதான்!!!. போர்க்களம் சென்று பாருங்கள். அப்போதுதான் உண்மை தெரியும்.
கணவனும் மனைவியும் சின்ன சின்ன சண்டைகளைக்கூட நகைச்சுவையாக எடுத்துக்கொண்டால் வாழ்வில் என்னாலும் வசந்தமே. கணவன் மனைவி ஜோக்ஸ் மூலம் இதனைச் சொல்கிறார் மணிவண்ணன்.
எனக்கு மிகவும் பிடித்த ஹேமாவின் காதல் சாக்லெட்டினை சுவைத்துப்பாருங்கள். தனி இனிமையுடன் கூடியது அது. "சுவாசிக்கும் காற்றினில் உணர்கிறேன்
அவள் மூச்சுக் காற்றின் ஸ்பரிசம் "
இன்று முகம்பார்க்காமல் வளரும் காதலினால் ஏற்படும் தொல்லையை ஒரு செய்திமூலம் வேடந்தாங்கல் கருன் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
எப்போதும் காதல் வெற்றி பெறுமா? நிறைய காதல்கள் தோல்வியைத்தான் தழுவியுள்ளன. புவனேஷ்வரியின் காதல் தோல்வியைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.
சிலபேர் காதலித்துவிட்டு கழட்டிவிட முடியாமல் தவிப்பர். சி.பி.செந்தில்குமார் சொல்லியதுபோல் காதலர் தினம் என்பது சேர்வதற்கு மட்டுமல்ல...கழட்டிவிடவும்தான். காதலில் தோற்பது எப்படி என அழகாகப் பாடம் எடுக்கிறார் நிலாப்பெண்ணுக்கு.
காதலித்தால் கிடைப்பது என்னவோ தூக்குதான் என முடிவு செய்துவிட்டார் நினைவுத்தூறல்களில் காதல் தூக்கு கவிதையின் மூலம்.
காதல் என்றால் இது மட்டும்தானா?
அப்பாவையும் காதலி உன் அன்பினால். ஓய்வு பெறும்போது தான் தனித்துவிட்டது போன்ற பிரமையுடன் வரும் அப்பாவினை அப்பா நானிருக்கிறேன் உங்களுக்கு என அழகாக அப்பாவுடன் துணையிருக்கும் ராஜி சொல்கிறார்.
ரெவெரியின் அன்புள்ள அம்மாவினை வாசியுங்கள். அம்மாவின் மீதான காதல் அதிகமாகும். எல்லோருக்கும் பிடித்தமானவர்கள் தாத்தா,பாட்டிதான் . ஆனால் இன்றைய நவீன உலகத்தில் உறவினை நேசிக்க முடியாமல் அவர்களைத் தனித்து விட்டு விடுகிறோம். உறவுகளுடன் கூடி வாழ்ந்த பாட்டியை பாசத்திற்காக ஏங்க வைக்கும் உலகமிது. பாட்டியை நேசித்துப்பாருங்கள். வாழ்வின் அர்த்தம் புரியும். உலகம் உன் வசப்படும்.
காதல் தேவையில்லை எனப் பொய் சொல்பவர்கள் பிரபாகரனின் முந்நூறு டன் காதலை வாசியுங்கள்.
அறிமுகம் :
1. பாமரனுக்காக திருக்குறள் எழுதும் வியபதியின் ஏதாவ்து எழுதுவோம்.
2.வித்தியாசமான எழுத்தில் ஓலைக்கணக்கன். பட்டாம்பூச்சி என்ற பதிவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
மேலும் வாசிக்க...