07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label வேலூர். Show all posts
Showing posts with label வேலூர். Show all posts

Monday, May 26, 2014

உங்களின் அன்பை சுமந்து கொண்டு மீண்டும் வலைச்சரத்தில்

சில தினங்கள் முன்பாக ஐயா அன்பின் சீனா அவர்களின் மின்னஞ்சல்
ஒரு இன்ப அதிர்ச்சியை சுமந்து கொண்டு வந்தது. வலைச்சர வாசகர்களின் அன்பையும் சுமந்து கொண்டு வந்தது என்றும் 
சொல்லலாம்.

பதினைந்து மாதங்களுக்குப் பின்பு மீண்டும் வலைச்சர ஆசிரியர்
பொறுப்பு கிட்டியிருப்பது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பாகவே
பார்க்கிறேன்.

கடந்த முறை ஆசிரியப் பொறுப்பு பல அனுபவங்களையும் 
பல புதிய நட்புக்களையும் கொண்டு வந்து சேர்த்தது.  எனது 
வலைப்பக்கத்தின்  ஆயிரமாவது பதிவை எழுதுகையில்
வலைப்பக்கத்தால் கிடைத்த மிகப் பெரிய பெருமைகளில் 
ஒன்றாக வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்றது என்பதை
குறிப்பிட்டிருந்தேன்.

இந்த பதினைந்து மாத இடைவெளியில்  நிகழ்ந்துள்ள
சில இனிய அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

எங்களது வேலூர் கோட்டச் சங்கத்தின் 25 வருட இயக்கங்கள்
தொடர்பாக நான் எழுதிய நூலை எங்களது சங்கத்தின்
அகில இந்தியத் தலைவர் தோழர் அமானுல்லாகான் வெளியிட்டு
சிறப்பு சேர்த்தார்.



மூன்று சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. மிகுந்த சர்ச்சைக்குள்ளாகிய
ஒரு கட்டுரை குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியானது. அதைப்பற்றி
பிறகு பார்ப்போம். 

எனக்கு நானே நிர்ணயித்துக் கொண்ட இலக்கான ஐம்பது முறை
ரத்த தானம் என்பதை அடைந்ததே இக்காலக்கட்டத்தில் நிகழ்ந்த
மனதிற்கு மகிழ்ச்சியளித்த செயல் என கருதுகிறேன்.

இத்துடன் சுய அறிமுகத்தை நிறுத்திக் கொள்கிறேன். 

மாலை ஆசிரியர் பொறுப்பை துவக்குகிறேன். நான் ரசித்த பல
இடுகைகளோடு சந்திக்கிறேன்.

வணக்கம். 



 
மேலும் வாசிக்க...

Monday, February 4, 2013

கேள்விக்கு பதில் சொல்வார் யாரோ?





அறிமுகப் பதிவிற்கு வாழ்த்து சொல்லியுள்ள அத்தனை நல்லிதயங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. வைட்டமின் டானிக் பருகிய உற்சாகம் கிடைத்துள்ளது.

தீபாவளி முடிந்து விட்டது. வண்ணமயமாய் வாண வேடிக்கைகளும் முடிந்து விட்டது. வெடித்துச் சிதறிய பட்டாசுகளின் துகள்கள் போல பட்டாசுத் தொழிலாளர்கள் சிதறுண்ட போது பதறிய நெஞ்சங்கள் கூட பட்டாசுகளும் புஸ்வாணங்களும் எழுப்பிய ஒளியிலும் ஒலியும் அந்த சோகத்தை மறந்து விட்டன. போனவர்கள் வாழ்வே நிம்மதி, இருப்பவர்களின் துயரம் இன்னும் மோசம் என்பதை நான் மிகவும் நேசிக்கும், மதிக்கும் அன்பிற்குரிய எழுத்தாளர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் தமிழ்வீதியில் நான் சிரித்தால் தீபாவளி  என்று எழுதிய நான் சிரித்தால் தீபாவளி என்ற இந்த பதிவை அவசியம் படியுங்கள். வலைப்பக்கத்தில் ஏன் அதிகம் எழுதுவதில்லை என்று சண்டையும் போடுங்கள். அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள் பற்றிய அவரது  வழியெங்கும் புத்தகங்கள் பட்டியல் நல்லதொரு வழிகாட்டி.

நான் வலைப்பக்கம் எழுதத் தொடங்கிய போது தவறாமல் பின்னூட்டம் இட்டு உற்சாகப் படுத்திய பெரியவர் என்.ரத்னவேல் அவர்களின் வலைப்பக்கம் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் பல சுவாரஸ்யமான பதிவுகளைக் கொண்டது. நடைப் பயிற்சி பற்றிய அவர்களின் இந்த  பதிவு பயனுள்ள ஒன்று.

நான் தவறாது படித்து வந்த இன்னொரு வலைப்பக்கம் தீராத பக்கங்கள் தீராத பக்கங்கள். என்னை அறிமுகம் செய்து எனது வலைப்பக்கத்திற்கான போக்குவரத்தை அதிகப்படுத்திய தோழர் மாதவராஜ் இப்போது என்னவோ எழுதுவதை மிகவும் குறைத்துக் கொண்டு விட்டார். வாராது வந்த மாமணியாய் கடைசியாய் வந்த இந்த நூல் அறிமுகம் நூல் அறிமுகம், புத்தகத்தை வாங்கத் தூண்டுகிறது.

பத்திரிக்கை ஆசிரியர் கேள்விகளுக்கு பதில் சொல்வார்.
பள்ளி ஆசிரியர் கேள்விகளுக்கு பதில் கேட்பார்.
பதில் சொல்வதை விட கேள்வி கேட்பது எப்போதுமே எளிதானது.

ஆகவே நான்  கேள்விகள்தான் கேட்கப் போகிறேன்.

மும்பை தீவிரவாதத் தாக்குதலை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போது வீர மரணம் அடைந்த ஹேமந்த் கர்கரேவையும் யாரும் மறந்திருக்க முடியாது.

ஹேமந்த் கர்கரே எல்.ஐ.சி நிறுவனத்தில் இருபத்தி ஐந்து லட்ச ரூபாய்க்கு பாலிஸி எடுத்திருந்தார். இன்னொரு தனியார் கம்பெனியிலும் அதே தொகைக்கு பாலிஸி எடுத்திருந்தார்.

அவர் இறந்த மூன்றாம் நாள் எல்.ஐ.சி அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்று அந்த பாலிஸிக்கான கேட்புரிமத் தொகைக்கான காசோலையை கொடுத்து விட்டு வந்தனர். இது அதிசயமான செய்தி ஒன்றுமில்லை. எல்.ஐ.சி யின் இயல்பான செயல்பாடுதான். காட்பாடியில் உள்ள தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஒரு விபத்து ஏற்பட்டு முப்பது தொழிலாளர்கள் இறந்த போது இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் அவர்களுக்கான பணத்தை பட்டுவாடா செய்தோம்.

ஆனால் அந்த தனியார் நிறுவனம் வெளிநாட்டுக் கம்பெனியோடு கூட்டு வைத்துள்ள ஒரு நிறுவனம் ,ஆறு மாதங்கள் இழுக்கடித்து கடைசியில் பணம் கிடையாது என்று கை விரித்து விட்டார்கள். அவர்கள் நிராகரித்ததற்கு என்ன காரணம் தெரியுமா?

உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் ஹேமந்த் கர்கரே, தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷனில் ஈடுபட்டார். எனவே அவருடைய பாலிசிக்கான பணம் கிடையாது என்று மறுத்து விட்டார்கள்.

இப்போது என் கேள்விகள்

அந்த தனியார் நிறுவனத்தை என்ன செய்யலாம்?

இது போன்ற தனியார் கம்பெனிகளில் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்தை இன்னும் அதிகமாக்க மத்தியரசு முயற்சிக்கிறதே, இது நியாயமா?

சரி இனி நீங்கள் யாரிடம் பாலிஸி எடுப்பீர்கள்? எல்.ஐ.சி யிடமா இல்லை சால்ஜாப்பு சொல்லி நிராகரிக்கும் தனியார் கம்பெனிகளிடமா?

மேலும் வாசிக்க...

நன்றிகளோடு தொடங்குகிறேன்

புதிய இடம், புதிய சூழல், புதிய நண்பர்கள், புதிய பணி
தயக்கத்துடன் ஒப்புக் கொண்டிருந்த பணி, மற்றவர்கள்
அற்புதமாய் செய்து வருகின்ற சங்கிலித் தொடர் நம்மால்
அறுபட்டு விடக்க்கூடாதே என்ற சிறு அச்சம், இத்தனைக்கும்
மத்தியில் நேற்று இரவு முதல் குவிந்து கொண்டிருக்கிற
வாழ்த்துச் செய்திகள் எனக்கு உற்சாகம் அளித்துள்ளது.

வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பை அளித்த
நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் உற்சாகமூட்டிய
அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறி எனது பணியை
தொடங்குகிறேன்.

முதலில் என்னைப் பற்றி

அதிகார பீடத்தின் உச்சத்திற்கு மிக விரைவில் செல்ல
வேண்டும் என்ற கனவோடு எல்.ஐ.சி நிறுவனத்தில்
உதவியாளாராக சேர்ந்த எனக்கு வாழ்க்கை பற்றியும்
எல்லோரும் இன்புற்றி இருக்க என்ன செய்ய வேண்டும்
என்பதைப் பற்றியும் கற்றுக் கொடுத்த ஆசானாக எனது
அமைப்பான அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தைப்
பார்க்கிறேன். 

அந்த மகத்தான பல்கலைக் கழகத்திடம் கற்று வரும்
பாடங்கள்தான் எனது வலைப்பக்கமான 
ஒரு ஊழியனின் குரல்   க்கு அடிப்படை. 

எனது தொழிற்சங்க, அரசியல்  பணிகளுக்கும் எழுத்து
வேலைகளுக்கும் மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வரும்
எனது மனைவி ஜி.ராதா, மகன் ரகுநந்தன் ஆகியோருக்கும்
இத்தருணத்தில் சிறு நன்றி.

இது வரை எண்ணூறு பதிவுகள் எழுதியிருந்தாலும்
இப்போது உங்களிடம் இரண்டு பதிவுகளை மட்டும்
அறிமுகம் செய்கிறேன்.

சற்று நீண்டு நெடிய ஒன்றுதான். ஆனால் இன்றைய
அரசியல் தலைவர்கள் குறிப்பிட்ட ஒரு பிரச்சினையில்
எப்படியெல்லாம் தடுமாறினார்கள் என்பதை உங்களுக்கு
சொல்லும். தலைவனுக்கு ஓசிச் சோறு  எனது 
நூறாவது பதிவும் கூட.

அமெரிக்கா ஒன்றும் சொர்க்கபுரியல்ல  என்பதைச்
சொல்ல இந்த பதிவில் முயன்றுள்ளேன்.

இன்னமும் கூட சில உள்ளது. அவை வரும் நாட்களில்.

நான் ரசித்த பதிவர்கள் பற்றி, பதிவுகள் பற்றி
என் முன் உள்ள கேள்விகள் 

அனைத்தோடும் மாலை சந்திக்கிறேன்.



 
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது