கனித்தமிழில் கற்கண்டு சொல் எடுத்து கட்டிய கவிதைச்சரம் இது..
கவிதைகளை மட்டும் அறிமுகப்படுத்தும் இந்த பதிவில் முதலில் கவிதை என்றால் என்ன என்று கொஞ்சம் பார்க்கலாமா?

கவிதையை உண்மையில் நாம் எழுதுவதில்லை. வாழ்க்கைதான் நம்மீது கவிதையை எழுதுகிறது எனலாம். கவி உலகம் சுதந்திரப்பறவைகளின் சரணாலயம். இங்கே தன் ராகத்தை திர்மானித்துக்கொள்ள ஒவ்வொரு பறவைக்கும் உரிமை உண்டு. இது ஆயிரம் மலர்களின் தோட்டம்.
கவிதை என்பது எந்த சந்தர்ப்பங்களிலும் முட்டிக்கொண்டு வந்துவிடுமா? சுனாமி வந்தபோது கவிதை வந்தது.கும்பகோண ம் தீவிபத்து நடந்தபோது கவிதை வ ந்தது. பிரபல நடிகை தற்கொலை செய்துகொண்டபோது கவிதை வ ந்தது. இந்தக்கவிதைகள் எழுதும் கவிஞர்களை நாம் மதிக்கிறோம் ஆனால் இதுபோல இன்னொருகவிதை எழுத வாய்ப்பு நேராதிருந்தால் தேவலை என்று மனம் எண்ணுகிறது.
நம்மில் அவ்வபோது உக்கிரம் கொள்ளும் உணர்ச்சிகளையே கவிதையாக்குகிறோம் நம் உதடுகளுக்கு புன்னகைபுரியவும் தெரியும் நம் விழிகளுக்கு கனல் உமிழவும் தெரியும்.
கவிதை இதயம் சம்பந்தப்பட்ட்து. விமர்சனங்கள் ,அதனை மூளையைக்கொண்டு அணுகும்போது அபத்தமான விளைவுகள் ஏற்படுகின்றன.
கவிதை பலவித ருசிகளைகொண்டது சிலர் குறளில்காமத்துப்பாலை அகற்றி விட்டு மற்றதை பைண்ட் செய்துவைத்திருப்பார்கள் உண்மையில் காமத்துப் பாலில்தான் கவிதை இருக்கிறது,மற்றதில் உரைநடை இருக்கிறது!
முகத்தைதான் படமெடுக்கலாம் முகமூடியை படமெடுத்து என்னபயன்?
கவிதையில் நாம் நாமாக இருக்கவேண்டும்
நம் ஒவ்வொருவரிடமும் ஒருகவிஞன் இருக்கிறான். பலரின் கவிதைகள் மௌனமாக உறைந்திருக்கின்றன சிலர்மட்டுமே அவற்றை வார்த்தையால் மொழிபெயர்க்கிறார்கள். கவிதை பார்வையிலேயே இருக்கிறது.
இந்தவகையில் நான் ரசித்த கவிதைத்தளங்களில் சிலவற்றை இங்கு அறிமுகப்படுதத் விரும்புகிறேன்.
வளர்ந்துவரும் இளம்கவிஞர்
ரிஷான் ஷெரீபின் கவிதைத்தளத்தில்
! பல கவிதைகள் மிகவும் எதார்த்தமானவை..’மரணம்துரத்தும் தேசத்துக்குரியவனாக ‘ ‘நடுநிசியில் எனது தேசம்’ போன்ற கவிதைகளின் சோக்ம் நெஞ்சை உலுக்குகிறது. காதல்கவிதைகளிலும் எதார்த்தம் மெனமை மிளிர்கிறது.
மைத்துளிகள் என்று வலைத்தளத்தில் தோழி சுவாதி எழுதிய காதல்பறிய கவிதை அதன் இயல்பை அப்படியே சொல்கிறது சுவாதியின் பலகவிதைகள் அவர் வலையில் சிறப்பாக் உள்ளன. அவை உண்மைத்துளிகள்!
இங்கு நிலவுநண்பன் எனும் ரசிகவ் ஞானியரின் தூக்கம் விற்ற காசுகள் இது பலமுறை பலரால்பாராட்டு பெற்றதுதான்,,,இன்னும் பலகவிதைகள் சிறப்பாக உள்ளன.
அவைகால்தடங்கள் மட்டுமன்று எனும்
ப்ரியனின் கவிதையைக்காண வாருங்கள் இந்தவலைத்தளத்தில் அவரது பலகவிதைகள் எல்லாரையும் கவர்ந்துவிடும்.
என் அன்புத்தம்பி நிலாரசிகன்! செல்லமாய் இவரை ஜூனியர்வைரமுத்து என்போம் குழுவில் நாங்கள். இரு கவிதை நூல்கள் அளித்திருக்கும் இவரது வலைமனையில் ஏராளக்கவிதைகள் கதவிடுக்கில் சிக்கியவிரலென உன் பிரிவில் நசுங்கிய என் காதல் என்பது போன்ற காதல்கவிதைகள் தொடங்கி சமுதாய சிந்தனை கொண்ட கவிதைகள் வரை நிலாதன் வலையில் உலா போவதை கவனியுங்கள் அவைகள்
உங்கள் பார்வைக்குக்கிடைக்க இதோ..
. கென் பெயர்தான் சின்னது .மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது இவருக்கு!
இவருடைய தற்கொலைக்கானகாரணங்கள் கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும்.
ப்ரேம்குமார் வலையில் தேடும்போதே கிடைத்த தேடல்கவிதை சின்னது ஆனா சிறப்பானது இவருடைய மற்றகவிதைகளும் அப்படியே படித்துப்பாருங்கள்.
காதல்கவிஞர் அருட்பெருங்கோவாஇ இங்க விடலாமா? காதல்மட்டுமல்ல மற்ற தலைப்புகளிலும் மனிதர் அசத்துகிறார். பாருங்க அவைகளை
இங்க… கவிநயாவின் கனியான கவிநயமிக்க கவிதைகளை காணவும் அங்கே அருவியின் சப்தம் கேட்கும்.அபிராமி அன்னையின் அருள்விழி திறந்திருக்கும். வசந்தம் வீசும் இன்னும் இன்னும்!! எனக்குப்பிடித்த இளம் கவிதாயினிகளில் கவிநயாவும் ஒருவர்.
தணீகையின் அருமையான பலகவிதைகள் இங்கே ..புரியமுற்படுகையில் எனும் இவரது கவிதை சிந்திக்கவைக்கும் வெற்றுக்காகிதம் என்று சொல்லிக்கொண்டு பல வெற்றிக்கவிதைகள் படைக்கிறார்.
சிறுவனின் வலைத்தளமாம்
கம்ல்ராஜன் இங்கே பெரியபெரிய அற்புத விஷய்ங்களை கவிதையாய் தருகிறார்.
தஞ்சைமீரானின்
‘தடை ‘கவிதை அவரது இந்த பிடிக்கும்
சூர்யாவின் கவிதைகளை அவரது
சூர்யபார்வையில் காணலாம்….உணர்சிபூர்வமான எதார்த்த கவிதைகளின் சொந்தக்காரர் இவர்.
அங்கே தீட்டு கவிதை பிடிக்கும் எனக்கு
இங்க மங்களூர் சிவா கவிதைகள் அருமை . ஆனா ஒரு படம் போடறார்பாருங்க பெண்களுக்கு வருமே வெட்கம் வெட்கம்! சைன்னு சொல்வேன் ஷை!!!
அண்ணா கண்ணன் சிஃபி ஆசிரியர் மரபு மற்றும் புதுக்கவிதைகள் எழுதுவதில் வல்லவர். அவருடைய பொய்க்காரியின் ரசிகை நான்!
இங்கேஎன் அன்புத்தோழி
மதுமிதாவின் கவிதைகளை காற்றுவெளியிடையே காணுங்கள் அதில் அன்பின் நிறம் எனக்கு மிகப்பிடிக்கும்.
<.
லக்ஷ்மண் ராஜா சகாராதென்றல் என்று இன்னும் பலரின் கவிதைகள் கொண்ட தளங்களை இன்னொரு பதிவில் காண்போம்.
கவிதைச்சரம் இப்போது கட்டிவிட்டேன். மணக்கிறதா?!