கதம்பச்சரம்
➦➠ by:
ஸாதிகா



தனக்குள் சிரிப்பவன் ஞானி
தனக்குத்தானே சிரிப்பவன் பைத்தியம்
தன்னை மறந்து சிரிப்பவன் ரசிகன்
தன்னை நினைத்து சிரிப்பவன் காதலன்
பிறரை பார்த்து சிரிப்பவன் கர்வி
பிறருக்காக சிரிப்பவன் கயவன்
பிறர் நோக சிரிப்பவன் கொடியவன்
பிறர்காண சிரிப்பவன் கோமாளி
சிரித்துக்கொண்டே வெற்றி பெறுபவன் மதியூகி
வெற்றி பெற்றாலும் சிரிக்காதவன் கர்மயோகி
ஓயாமல் சிரிப்பவன் பைத்தியகாரன்
ஓட விட்டு சிரிப்பவன் வஞ்சகன்
சதா சிரிப்பவன் வேடிக்கையாளன்
இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்
கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்
கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்
மோகத்தில் சிரிப்பவன் வெறியன்
மகிமையில் சிரிப்பவன் மன்னன்
தெரியுமென்று சிரிப்பவன் பசப்பாளி
தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்
இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி
நிலை கண்டு சிரிப்பவன் காரியவாதி
கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்
கொடுக்கும் பொழுது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்
மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்
வெற்றியில் சிரிப்பவன் வீரன்
விளையாமல் சிரிப்பவன் வீணன்
தற்பெருமையால் சிரிப்பவன் கோழை
அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி
அன்பால் சிரிப்பவள் அன்னை
காதலால் சிரிப்பவள் மனைவி
நிலை மறந்து சிரிப்பவள் காதலி
நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்
நினைவோடு சிரிப்பவன் அறிவாளி
குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி
கும்மி அடித்து சிரிப்பவன் இதய கசடுள்ளவன்
அகம் மகிழ்ந்து சிரிப்பவன் உண்மை நண்பன்
துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.
பிறரை மனதார சிரிக்க வைப்பவன் படைப்பாளி
நகைச்சுவை மட்டுமல்ல பல சுவைகளும் கலந்த கதம்பச்சரமாக மணக்கின்றது இறுதியாக பிறந்திருக்கின்ற கதம்பச்சரம்.
1.பதிவுலகம் வந்த புதிதில் என்கண்களில் மாட்டிய கொன்றைவேந்தன்.படிச்சு படிச்சு அப்ப மட்டுமில்லை இப்பவும் சிரிப்பை வரவழைத்துக்கொண்டுள்ளது. சீனா ஐயாவுக்கு பிடித்த கொன்றை வேந்தன்.பெரிசுங்க ஒதுங்குங்கப்பா என்று சீனா சார் பயம் காட்டினாலும் பெர்சுங்களும் படித்து ஜாலியாக சிரிக்கலாம். வாய் விட்டு படிங்க.மனம் விட்டு சிரியுங்க.நோய் விட்டுப்போகும்.
2.நிஜாம் ரசித்த ஜோக்குகளை நாமும் ரசித்து நகைப்போமா?
3.கொறுக் கொறுக் என்று பித்தனின் வாக்கு சுதாகர் பக்கத்தில் இருந்து சப்தம் வருகின்றதே.போய் பார்த்தால் வேறொன்றுமில்லை.சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டே பயங்கரமாக ஜோக் அடிக்கின்றார்.
4.சிரித்து ரிலாக்ஸ் பண்ண வேண்டுமா?ஆயிஷா அபுல் பதிவிட்ட நகைச்சுவையை படித்து சிரியுங்கள்.
5.பழரசத்தை இப்படி கூட தயாரிக்கலாமா?சைட் எஃபக்ட் எதுவும் இல்லாமல் ஆயுர்வேதிக் முறையில இதை வெற்றிகரமா செய்ததுவேறு யாராக இருக்க முடியும் ?ஜெய்லானியேதான்.
6.களுக் என்று பதிவர் சர்புதீனை சிரிக்க வைத்த ஜோக் கண்டிப்பாக நம்மையும் படக் என்று சிரிக்க வைக்கும்.
8.”மிச்சர் கடையில் கொசுரு கேட்க்கிறவனுங்க...
டீ கடையில் ஓசி பேப்பர் படிக்கிறவனுங்க...
சாக்ஸை தொவைக்காமல் போடுறவனுங்க...
பப்ள்கம் சாப்பிட்டு சீட்டுக்கு அடியில் ஒட்டுறவனுங்க...
சோறு வாங்கி கொடுத்துட்டு சொல்லி காட்டுறவனுங்க...
பஸ்ஸில் ஓசி பயணம் செய்ரவனுங்க...
இவர்கள் எல்லோரும் வன்மையாக தண்டிக்கப் படக் கூடியவர்கள்.”
நாட்டாமை ஐயூப் உத்தரவு போட்டு விட்டார்.ஜோக்கை படிச்சுட்டு சிரிச்சுடுங்க.சிரிக்கா விட்டால் இதற்கும் வன்மையா தண்டனை கொடுத்து விடுவார்.
9.நிஜப்பூக்களா என்று வியக்கும் படி ஸ்டாகின்ஸில் மின்னும் பூக்கூடையை செய்து அசத்தியவர் பாயிஜா காதர்.
10.பணத்தாணி..என்ன வென்று பார்க்கின்றீர்களா?பதிவர் ஷஃபி ஏ டி எம் மெஷினைத்தான் இங்ஙனம் தமிழாக்கம் செய்து அருமையான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
11.பிளாக் தொடங்குவது எப்படி என்று அக்கு வேறு ஆணி வேறாக விபரமாக எழுதி இருக்கும் பிளாக்கர்களின் நண்பரான அப்துல்பாஸிதின் இடுகையை அவசியம் படிங்க.மிகவும் உபயோகமாக இருக்கும்.
12.போட்டோ ஷாப் பற்றி தெளிவான விளக்கம் ஸ்ரீதர் தந்து இருக்கின்றார்.
13.ஒரே கல்லில் மூன்று மாங்காய்.ஆமாமாம்.டவுசர் பாண்டியின் இடுகையில் உபயோகமான டெக்னிக்கையும் கற்றுக்கொள்ளலாம்.அதனை நகைச்சுவையாக சொல்லும் விதத்தில் சிரித்தும் மகிழலாம்.கூடவே மெட்றாஸ் பாஷயையும் கற்றுக்கொள்ளலாம்.
14.கற்பனை உருவங்களை கணினியில் உருவாக்கும் வித்தையை வேலனின் இந்த இடுகை மூலம் கற்றுக்கொள்ளலாம்.
15.ஊரில் 30% மக்கள் வெளிநாடு,வெளியூர்களில் புலம் பெயர்ந்து விட்டதால் இந்த ஊரில் நடக்கும் எந்த சிறு நிகழ்வுகளையும் படங்களுடன் உடனுக்குடன் தந்து அசத்தும் கீழக்கரை செய்திகள் வலைத்தளம் கீழை வாசிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.
16.கீழை இளையவன் தளமும் அதே சேவையை அளிக்கின்றது.சேவையை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.
17.நகராட்சியின் சேர்மனுக்காக ஒரு வலைப்பூ .நகராட்சியின் ஒவ்வொரு நடப்புகளையும் அவ்வப்பொழுது அப்டேட் செய்து வருவது கீழக்கரை சேர்மன் வலைப்பூவின் சிறப்பு
18.தமிழ் மீரானின் தேடலில் நட்பின் ஆழம் நன்றாகவே தெரிகின்றது.
20.ஆடைகளில் படிந்த கறைகளை எவ்வாறு போக்குவது என்ற அருமையான டிப்ஸ்களை வழங்கியவர் வனப்பு - சந்திரக்கெளரி.
21.நகராட்சித்தலைவருக்கு மட்டுமல்ல உதவித்தலைவரின் செயல் முறை குறித்தும் அவ்வப்பொழுத்து சுடச்சுட தகவல்கள் தரும் நேற்று ஜனித்த புத்தம் புது வலைப்பூ இது.
22.பிளாகின் தலைப்பு போல் இவரது இடுகைகளும் சூடாக இருக்கும். சிராஜின் அறிமுக ஆரம்பமே அட்டகாசமாக இருப்பதை பாருங்கள்.
23.வரவேற்பரை சுவரை அலங்கரிக்க அழகான முறையில் படம் வரைந்து காட்டி இருப்பவர் பிரியா.
24.டெல்லி குளிரைப்பற்றி வாய் தந்தி அடிக்க அழகாய் சொல்லி இருப்பவர் ஜிஜி .
25.உள்ளத்தில் நம்பிக்கை கொண்டால் செயலில் வெற்றி பெறலாம் என்ற தத்துவத்தை அருமையாக பகிர்ந்திருப்பவர் ஆயிஷா பேகம்.
26.தில்லி ஜனாதிபதி மாளிகையைப்பார்த்திருக்கின்றீகளா?ஆதி வெங்கட் நம்மை எல்லாம் அழைத்துச்செல்கின்றார் .போய் பார்க்கலாமா?
l
27.தமிழில் போர்ட் எழுத வேண்டுமென்ற அரசாங்க ஆணை குறித்து ஐயராத்து மாமி என்னமா பொலம்பறா பாருங்க.ஐயராத்து மாமியை அறிமுகப்படுத்தியவர் பக்கோடா பேப்பர் விதூஷ்
28.மாமிச உணவு மனித இனத்திற்கு உகந்ததா இல்லையா என்பதை அலசி கட்டுரையை தந்திருப்பவர் பாத்திமா ஜொஹ்ரா.
29.ஆம்னி பஸ்,வோல்வோ ,பஸ்,புளூ லைன் ,பஸ் எல்லோ லைன் பஸ்,ஏஸி பஸ்,எக்ஸ்பிரஸ் பஸ் என்று பஸ் வகைகளை அறிந்திருக்கின்றோம்.சூப்பர் பஸ் பார்த்திருக்கின்றீர்களா?சூப்பர் பஸ்ஸை கண்காட்சிக்கு வைத்திருப்பவர் ரஜின்.
30.அமீரகத்தில் கோடைகால மதியத்தினை பற்றி கண் முன் கொணர்ந்து நிறுத்துகின்றார் ராஜகிரி ஹாஜா மைதீன்.
31.டிஷ்யூ பேப்பரில் அருமையான பூ செய்து காட்டி இருக்கும் ஏஞ்சலினின் அழகிய கைவண்ணத்தைப்பாருங்களேன்.
32.எவரால் இந்தியப்பொருளாதாரம் உயிரோடு இருக்கிறது என்று யாரை ஸ்ரீ குறிப்பிடுகின்றார் தெரியுமா?
32.மன அழுத்தம் மூளையை பாதிக்கும் என்ற விஞ்ஞான உண்மையை பட விளக்கத்துடன் துரைடேனியல் பகிர்ந்திருக்கும் இந்த இடுகை அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய ஒன்று.
விடை பெறுகின்றேன்.
ஒரு வாரகாலமாக வலைச்சரத்தில் கிடைத்த ஆசிரியர் பணியில் பெரிதும் உவகை அடைகிறேன்.வாய்ப்பு கொடுத்த சீனா ஐயா,மற்றும் வலைச்சரகுழுவினருக்கும்,பரிந்துரை செய்த வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை மீண்டும் கூறிக்கொள்கிறேன்.
பிரிக்கப்படாமல் இருந்த நாளிதழ்கள்,அருந்தப்படாமல் ஏடு படிந்த தேநீர் கோப்பை,சார்ஜ் செய்யாது விட்ட கைபேசி,”த்சோ..என்னம்ம்ம்ம்ம்மா”என்று செல்லமாக அலுத்துக்கொள்ளும் என் செல்லங்களின் செல்லச்சிணுங்கல்கள்,”சண்டே,மொறு மொறு வென்று மசால் தோசையும்,சட்னி சாம்பாரும் வேண்டும் ”என்று கேட்கும் பிள்ளைகளுக்கு பிரட்டில் ஜாமை தடவி பவ்யமாக தட்டில் வைத்து நீட்டி சமாளிக்கும் சாதுர்யம், மடிக்கப்படாமல் சலவை செய்து மலையாய் குவிந்த துணிகள்,”என்ன ஊரில் இல்லையா?ஆளையே காணும்”எதிர் வீட்டுத்தோழியின் கேள்விக்கணைகள் எல்லாம் என்னை சுற்றிலும் நடக்க நானோ கணினியும் கண்ணுமாக வெகு சுவாரஸ்யமாக பொழுதைப்போக்கிக்கொண்டிருந்தேன்.
நட்புக்களிடம் இருந்து வந்த பின்னூட்டங்களும்,மெயில்களும் என்னை மிகவுமே உற்சாகம் கொள்ள வைத்தன.தினமும் தவறாது வந்து பின்னூட்டம் இட்டு எனக்கு எனர்ஜி கொடுத்த அன்புள்ளங்கள்,நாளை என்ன சரம் என்று வினா எழுப்பும் இனிய உள்ளங்களின் ஆர்வம்,குறையே காணாது தட்டிக்கொடுத்து பின்னூட்டமிட்ட கருத்துக்கள் அத்தனையும் என் அலுப்பையும் சோர்வையும் விரட்டி அடிக்கும் விட்டமின் டானிக்குகளாக இருந்தன.
பொதுவாக நான் இடும் இடுகையில் பின்னூட்டம் இடுபவர்களுக்கு தனித்தனியாக பின்னூட்டம் இட்டு நன்றி தெரிவிப்பதையே விரும்புவேன்.ஒரு இடுகை எழுதுவதை வேண்டுமானால் தாமதப்படுத்தலாம்.பின்னூட்டம் இடுபவர்களுக்கு பதிலளிக்க தவறிவிடக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருப்பேன்.ஆனால் இந்தவலைச்சரத்தில் நேரமின்மை காரணமாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலவில்லை.சரத்தில் தொடுக்க மறந்த விடுபட்ட பதிவர்களும்,சரத்தில் தொடுத்தும் படத்தில் வர மறந்த பதிவர்களும் தயவு கூர்ந்து மன்னிக்கவேண்டுகிறேன்.
மொத்தத்தில் இந்த வாரம் எனக்கோர் மறக்கவியலாத மகிழ்வான வாரம்.இந்த வாய்ப்பை எண்ணி மகிழ்வுடன் விடை பெறுகின்றேன்.நன்றி!
எல்லாப்புகழும் இறைவனுக்கே!
















