ஞாயிறு ஸ்வரம் 'த' 'நி'
➦➠ by:
இசை,
ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம்
வீணை ஒரு நரம்பு இசைக்கருவி.மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது.இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்த கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம். பழங்காலம் முதலே வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும்,கி.பி. 17ம் நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது.
வீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது. வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. பலா மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது.
நான்கு வாசிப்புத் தந்திகள் தண்டின் நுனியிலுள்ள வளையங்களில் முடியப்பட்டு, மெட்டுக்களின் மேல் சென்று மற்றொரு முனையில் பிணைக்கப்பட்டிருக்கும்.பக்கவாட்டில் 3 தாளத் தந்திகள் உண்டு.வலதுகை
ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரல் கொண்டும்,இடது கை ஆள்காட்டி விரல், நடுவிரல் கொண்டும் வாசிக்கப் படுகிறது.
வலைச்சரத்தில் இன்றைய எனது நிறைவுப் பதிவில் ஆறாம் இடத்தை வகிக்கும் ஸ்வரம 'த' மற்றும் ஏழாம் இடம் வகிக்கும் ஸ்வரம் 'நி' இடம் பெறுகின்றன.
6. தைவதம்: தெய்வ சம்பந்தமானதாலும், தைரியத் தன்மையை அடைந்துள்ளதாலும் ஆறாம் சுரம் தைவதம் எனப்பட்டது. ஸ்வர எழுத்து "த"
7. நிஷாதம்: ஸட்ஜம் முதல் ஆறு ஸ்வரங்களும் தன்னிடம் முடிவு பெற்றதால், ஏழாவது ஸ்வரம் நிஷாதம் எனப்பட்டது. ஸ்வர எழுத்து "நி"
தன், தனது என்ற 'த' நிலையிலிருந்து, இறையிடத்தில் நீயே கதி என்ற 'நி' நிலைக்கு செல்லும் உயிர்கள் உயர்வடைகின்றன.எங்கு முட்டி மோதினாலும் முடிவில் ஆன்மிகமே மனிதனை பக்குவமாக்குகிறது என்பதால் இந்த பதிவில் இசை மற்றும் ஆன்மிகம் சம்பந்தப் பட்ட பதிவுகள் அறிமுகம் செய்யப் படுகின்றன.
இசை ரசிகர்கள் இன்புறுவதற்காக இசை இன்பம் தரும் பதிவு இது.இதில் ஏழு பேர் பயணிக்கின்றார்கள்.உங்களுக்கும் பயணிக்க வேண்டுமா?சென்று பாருங்கள்.
கண்ணன் பாடல்கள் கேட்கவும் பாடல் வரிகள் தெரிந்து கொள்ளவும் இங்கே
செல்லவும்
தமிழ்ப் பாடல்களின் வளர்ச்சிக்காக தமிழிசைக்குரல் ஏற்படுத்தி இருக்கார் இவர்
ராகம் பாடுங்கன்னு தன்னோட ராக ஆலாபனை பதிவுக்கு கூப்பிடறார் இவர்
இசையின் ஈர இயக்கங்கள் அப்படின்னு இசை சம்பந்தமான எல்லாத்தையும்
வகைப் படுத்தி எழுதிக்கிட்டு வராங்க நித்யவாணி.
இசைக் கலைஞர் ஒருவரை சந்தித்தது பற்றி இங்க குறிப்பிட்டு எழுதி இருக்கார் கிருஷ்ணப்ரபு.அந்த இசைக் கலைஞரின் உரையையும் இங்கே தொகுத்திருக்கிறார்.
சிதம்பர ரகசியத்தைப் பத்தி தெரிஞ்சுக்க நம்மை கூப்பிடறார் சிதம்பரம் சரவணன்.
அந்த ரகசியம் தெரிஞ்சுக்கிட்டு வந்தா இந்த குடந்தையூர்காரர் நம்மை அப்படியே திருத்தாளமுடையார் கோவில் கூட்டிக்கிட்டு போறார்.
ஆலய தரிசன்ம் பண்ண போற நமக்கு இவர் எம்பார் வைபவம் சொல்லித் தரார்.
அங்கேருந்து இங்க வந்து சுந்தர காண்டம் தெரிஞ்சுக்கலாம்.உள்ள நுழையும் போதே பதிவில ஆண்டாளும் ரங்கமன்னாரும் நாங்க இருக்கோம்னு சொல்றாப்ல சேவை தராங்க.
கடம்ப வனத்துலேருந்து ஒரு குயில் வந்து தேவி வழிபாடு பற்றி சொல்றாங்க.
பக்தில நவவித பக்தி இருக்கு.அது என்ன என்ன பக்தின்னு சந்தானம் சொல்றார்
இப்படி பக்தி சம்பந்தப்பட்ட விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டு நாம வற்றாத வரமருளும் வடதிருநள்ளாறு போவோம்.அப்பறம் அனுகூலங்கள் அருளும் அனுமனை சேவித்து விட்டு, அங்கிருந்து ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில்
சென்று கோவிலின் அழகை ரசித்து ஓம் நமோ நாராயணாய நமஹ என்று சொல்லி நம் பாவங்களை கரைக்க இறையை நாடுவோம்.
கல்யாணி : கல்யாணி என்றால் மங்களம் என்பது பொருள். நம் மனதில் தோன்றும் பயம் என்னும் இருளை நீக்கி ஒளி தரும் ராகம்.இருளைப் போக்கி இறையை ஒளிர விடுவோம்.
நிதி சால சுகமா....
Artists: EGayathri
எழுத்தும் இசையும்:
ஸ்வரங்களுடன் கூடிய இந்த வார அறிமுகங்களை ரசித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.இன்னும் எனக்குப் பிடித்த ராகங்கள் பட்டியல் மத்யமாவதி,ரீதிகௌளை,தோடி,தர்பார்,கானடா,பிருந்தாவன சாரங்கா,ஆபேரி,அடாணா என்று நீள்வது போல் வலையில் பதிவுகளின் பட்டியலும் நீள்கின்றன.இருப்பினும் பெருங்கடலின் ஒரு பகுதியில் கால் நனைக்கும் சுகம் போல் நிறைவாக விடை பெறுகின்றேன்.இந்த வார வலைச்சர பணியை செம்மையாக நிறைவேற்ற ஊக்கமளித்து உடன்வந்த அனைவருக்கும் எனது நன்றிகள்.இந்த வாய்ப்பை எனக்களித்த திரு சீனா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.