வலைச்சரத்தில் ஜீஎம்பியின் 3-ம் நாள்
➦➠ by:
3-ம் நாள்,
gmb writes
வலைச்சரத்தில் ஜீஎம்பியின் 3-ம் நாள்
-----------------------------------------------------------
மூன்றாம் நாள்
இன்றும் சில பதிவர்களை வகைப் படுத்தி அறிமுகப்படுத்துகிறேன்
முதலில் மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டு வலைப்பூவில்
தமிழில் எழுதிக் கொண்டு வரும் துளசிதரன் மற்றும் கீதா அவர்கள். இருவரும் கல்லூரி
நண்பர்களாம் ஒருவர் சென்னையிலும் மற்றொருவர் பாலக் காட்டிலும் வசிக்கின்றனர்.
இருவருக்கும் ஒரே வலைத் தளம் துளசிதரன் தில்லையகத்து என்னும் பெயரில் இருவருக்கும்
நல்ல கோ ஆர்டினேஷன் ஓரோர் சமயம் இது யாருடைய கருத்து என்னும் ஐயம்
எழுவதுண்டு,.மின் அஞ்சலானாலும் ஒருவரை ஒருவர் உடனுக்குடன் தொடர்பு கொண்டு
கருத்துப் பரிமாறி எழுத்துக்கள் வந்துவிடும். இவர்களுக்கு எழுதுவது மட்டும் போதாது
என்று குறும் படமும் தயாரிக்கிறார்கள். பதிவுலகில் எனக்குப் பின் வந்தாலும் என்னைவிட
அதிகம் அறியப் பட்டவர்கள் என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றைச்
சிறிதும் வெளிக்காட்டாமல் அனைவரையும் ஊக்குவித்துக் கருத்திடுவார்கள் இதற்கு பல ஆதங்கப் பதிவுகள் எழுதி இருந்தாலும்
எல்லோருக்கும் கருத்து வேறுபாடு இருக்காத ஒருபதிவு.
.தமிழ் தொலைக்காட்சி பற்றியது
தமிழ் தமிழ் அதிலும் பண்டையத் தமிழையே அனுபவித்து ஒருவர்
பதிவிடுவதென்றால் அவரது திறமையிலும் எழுத்திலும் அவருக்கு இருக்கும் நம்பிக்கையை
காட்டுவதாகும் ஊமைக் கனவுகள் என்னும் தளம் படித்தால் தமிழன் தலை நிமிர்ந்து
நிற்கலாம் கவிதை எழுதக் கற்கலாம் பண்டைய இலக்கியங்களில் மூழ்கி முத்தெடுக்க
உதவுவார் மரபுக் கவியின் இலக்கணங்களையும் கற்பிப்பார் ஜோசப் விஜு இவரது பெயரை
அறியவே எனக்கு நாளாயிற்று. , நான்
நீதிகேட்கிறேன் என்னும் ஒரு பதிவை எழுதி இருந்தேன்.அதற்கு பின்னூட்டமாக இக்குரல்
பழங்காலத்திலேயே ஒலித்திருக்கிறது என்று எழுதி இருந்தார்.அதுவே ஒருவேளை அவரை
இப்பதிவை வெளியிடச் செய்ததோ என்னவோ தெரியவில்லை உலகாயுதம்-கடவுளைக்கொன்றவனின் குரல் படித்துப்
பாருங்கள் ரசிப்பீர்கள்.
வலையுலகில் நான் சந்தித்த முதல் பதிவர். அவரை என்
வீட்டுக்கும் அழைத்து வந்திருக்கிறேன். செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைப்பவராக
எனக்குத் தோன்றினார். இளம் பருவத்தினரை விழிப்புணர்வோடு இருக்கக்
களப்பணிகளுக்கெல்லாம் கூட்டிச் செல்வார். அண்மையில் மந்திரியிடம் பாராட்டு
வாங்கியவர் கதை எழுதுவார் கவிதையும் எழுதுவார். ஆனால் சில நேரங்களில் இந்த
பெங்களூர் தந்தையையும் மறந்து விடுவார்
போலும்....! இவர் எழுதிய ஒரு கவிதை. படித்துப்பாருங்கள்மதுரை சரவணன் கை வண்ணத்தை. கடவுள் காஞ்சனா வாகிவிடுகிறார்
அடுத்ததாக செழுங்காரிகை என்னும் தளத்தின் உரிமையாளர். ஒரு
விதத்தில் என் ஆசான் எனக்கு மரபு வழிக்கவிதை எழுத விருப்பம் இருந்தது. ஆனால்
விதிமுறைகள் தெரியாதே. கணினியில் மேய்ந்தபோது இவரது சில பதிவுகள் தென்பட்டன.
அவரைத் தொடர்பு கொண்டு நான் அறிந்தது எழுதுவதைச்சரிபார்க்கக் கேட்டுக் கொண்டேன்
எனக்கு மரபுக் கவிதை வசம் நாட்டம் செல்லவில்லை. முயற்சியை நிறுத்திவிட்டேன்
இவருக்கும் திருமணம் நிகழ்ந்தது அதன் பின் வலைப் பதிவில் தென்படுவதே இல்லை.
இருந்தாலும் என் ஆசானையும் அறிமுகப் படுத்துகிறேன் பெண்கள் பற்றி அவர் எழுதிய ஒரு
கவிதை நிச்சயம் ரசிப்பீர்கள் ரஜனிப்ரதாப் சிங் கேள்விப்பட்டிருக்க வேண்டுமே ‘” கேட்கலாமா கேர்ல்ஸ் சின்னதாசில டௌட்ஸ்.
இன்றைய அறிமுகங்களுள்
இறுதியாக கரந்தை ஜெயக்குமார். நான் அவரை கரந்தையில் ஒருமுறையும்
மதுரைப்பதிவர்விழாவில் ஒரு முறையும் சந்தித்து இருக்கிறேன் எனக்குப் பயணங்கள்
என்றால் பிடிக்கும் அவருக்கும் பிடிக்கும் என்று தெரிகிறது. பதிவர்களுள் நட்பை
விரும்பும் ஒரு அதிசய மனிதர். பதிவுலகில் அவருக்கு என்று ஒரு பாணி உண்டு பெய்ர்
போன மனிதர்களின் கதைகளை அவர் சொல்லிப் போகும் விதமே அலாதி. இவரைப்பற்றி நான்
கூறுவதை விட நம் பதிவர்கள் அறிவார்கள் இருந்தாலும் அறிமுகத்தில் நான் ஒரு
பதிவையாவது சுட்டிக் காண்பிக்க வேண்டுமே. அதுதான் எனக்கு சிரமம் தருகிறது எதைச்
சொல்ல எதை விட. அவரது தள முகவரி தருகிறேன் எந்தப் பதிவை வேண்டுமானாலும் படிக்கலாம்
அல்லது எல்லாமே நீங்கள் படித்ததாயிருக்கும் இன்று இத்துடன் முடிக்கிறேன் மீண்டும் நாளை சந்திப்போம்.
இவர்களை எந்த முறையில் வகைப்படுத்தி இருக்கிறேன் தெரிகிறதா?
இவர்களை எந்த முறையில் வகைப்படுத்தி இருக்கிறேன் தெரிகிறதா?