வலைச் சரத்தில் ஜீஎம்பியின் 4-ம் நாள்
➦➠ by:
4-ம் நாள்,
gmb writes
வலைச்சரத்தில் ஜீஎம்பியின் 4-ம் நாள்
---------------------------------------------------------
நான்காம் நாள்
இன்று நான் பதிவுலக சக்திகளில் சிலரை அறிமுகப் படுத்துகிறேன்
முதலில் திருமதி கீதா சாம்பசிவம் ஆன்மீக விஷயங்களில் இவர் கரை கண்டவர் என்று
கூறப்பட்டதுண்டு 2000-க்கும் அதிகமான பதிவுகளை எழுதி இருக்கிறார். இன்ன
தலைப்புதான் என்றில்லை. அவர் வீட்டில் குருவிகளைப் புகைபடமெடுத்தது முதல் திருமண
சம்பிரதாயங்கள் சடங்குகள் போன்றவற்றில் தனக்கிருக்கும் நம்பிக்கைகளையும் எழுதுபவர். தான் கொண்டுள்ள சில கொள்கைகளில் அசையாப்
பிடிப்பும் கொண்டவர். திருச்சி சென்றால் நான் சந்திக்க விரும்பும் ஒரு ஆற்றல் மிக்க
பெண்மணி.இவரது பதிவுகளில் எதைக் குறிப்பிடுவதுஎதை விடுவது தெரியவில்லை இருந்தாலும்
ஒரு ருசிக்காக இதோ
தொழில் நுட்பத் திறனில் திருமதி ராமலக்ஷ்மி கோலோச்சுகிறார்
குறிப்பாகப் புகைபடக்கலையைச் சொல்லலாம் இவரை பெங்களூரில் நடந்த ஒரு சிறிய பதிவர்
சந்திப்பில் கண்டேன் கவிதைகள் எழுதுவார். ஒரு புத்தகமும் வெளியிட்டுள்ளார்.இவரை
பதிவுலகில் தெரியாதவர் இருக்க வாய்ப்பில்லை போர்ட்ரெய்ட் பற்றிய இவரது பதிவைப்
பாருங்கள் பலவிஷயங்கள் புரியும்
அடுத்த சக்தி கீதமஞ்சரி என்னும் தளத்தில் எழுதி வரும்
திருமதி கீதா மதிவாணன் ஆஸ்திரேலியாவில்
வசிக்கும் இவர் திருச்சியைச் சேர்ந்தவர். சிறுகதைகளின் நீள அகல ஆழங்களைக்கண்டு
விமரிசனம் செய்யும் திறன் வாய்ந்த வித்தகி ஆஸ்திரேலியாவின் சரித்திரம் முதல் அங்கு
வாழும் சகல ஜீவராசிகளைப் பற்றியும் தாவரவகைகளைப்பற்றியும் எழுதி இவர் ஒரு தகவல்
களஞ்சியமே உருவாக்கி இருக்கிறார். ஒரு முறை என் தோட்டத்தில் பெயர் தெரியாமல்
வளர்ந்திருந்த சில வாசமில்லப் பூக்களின் பெயர் தெரியவில்லை என்று எழுதி அவற்றின்
புகைப்படங்களை வெளியிட்டிருந்தேன். தகவல் களஞ்சியமல்லவா. எங்கெல்லாமோ தேடிக் கண்டு
பிடித்து அது பற்றய விளக்கங்களும் கொடுத்திருந்தார். இவரது ஒரு பதிவுசாம்பிளுக்காக
அடுத்த சக்தி திருமதி ஷைலஜா. இவர் ஏற்பாடு
செய்திருந்த ஒரு குட்டிப் பதிவர் மாநாட்டில் பங்கேற்கப் போனேன் . அப்போது நேரில்
அறிமுகம்இவரும் பன்முகத் திறனாளி என் வீட்டுக்கும் திரு ஐயப்பன் கிருஷ்ணனோடு
வந்திருக்கிறார் எழுதுவது அவர் உடலில் ஓடும் ஜீன்ஸிலேயே இருக்கும் போல. தந்தையும்
பிரபல எழுத்தாளர். பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி இவருக்கு உறவு
எழுத்துக்கள் பெரும்பாலும் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் இருக்கும் மாதிரிக்கு
ஒன்று.”கொஞ்சம் சீரியசா'
பதிவுலகில் சக்திகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம் நான்
பதிவுலகில் ப்ரவேசித்தபோது எனக்கு ஊக்கம் அளித்தவர் சக்திப்ப்ரபா. இவரை நான்
பெங்களூர் பதிவர் சந்திப்பின் போது நேரில்
அறிமுகமானேன் பெங்களூரில் இருந்தவர் இப்போது சென்னைவாசி ஆகிவிட்டார். பதிவர் திரு
அப்பாதுரை ஒரு முறை புத்தாண்டு ப்ரமாணமாக இவரது பதிவுகளை விடாமல் படிக்கவேண்டும்
என்று கூறி இருந்தார் சிலகாலம் சோவின் எங்கே பிராமணன் என்னும் கருத்தை இவர்
பாணியில் தொகுத்து எழுதிக் கொண்டிருந்தார். இப்போது பதிவுப்பக்கம் எப்போதாவதுதான் வருகிறார் இவரது தளம்
மின்மினிப்பூச்சிகள் இவரது அண்மையப்பதிவு ஒன்று உங்கள் கவனத்துக்கு”குரு வந்தனம்
இனி இன்னும் வேறு சில அறிமுகங்களோடு நாளை
சந்திக்கலாம்