07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, November 21, 2007

சிரிப்பு விருந்து

நகைச்சுவை பதிவுன்னு சொன்னாலே முதல்ல ஞாபகம் வர்றது நம்ம அருண் தான். அவரோட சில பதிவுகள் இங்க உங்களுக்காக

* பனிச்சறுக்கு விளையாட போயிட்டு கோச் சொல்லிக்குட்த்தத கவனிக்காம அங்க இருந்த பிகருங்கள பாத்து சைட் அடிச்சுட்டு கடைசில மாட்டின பூட்ஸ் காலோட உருண்டு புரண்டு வழுக்கி சறுக்கி ஒரு வழியான கதை.

* பொது விழாக்களுக்கு போகும் போது உங்கள் மனைவியை கூட்டிட்டு போகாதீங்கன்னு சொல்லி அதுக்கு காரணத்தையும் சொல்ற பதிவு

* திருவிளையாடல் ஆரம்பம் படத்த பாத்து நொந்து நூடுல்ஸ் ஆகி அவர் போட்ட புலம்பல் பதிவு (புலம்பும்போது கூட நக்கலா புலம்ப இவங்களாலத்தான் முடியும் போல :)) )

* நீங்க சமைக்கும் போது அது தீஞ்சு போயிட்டா என்ன பண்ணுவீங்க? தலைவிதியேன்னு கஷ்டப்பட்டு சாப்பிடுவீங்க இல்லாட்டி தூக்கி குப்பைல போடுவீங்க தானே. இங்க இவர பாருங்க. கத்திரிக்காய தீச்சது மட்டிமில்லாம, அதை பத்தி ஒரு பதிவு, கவுஜ, இது மூலமா தெரிஞ்சிக்கிட்ட தத்துவம்னு ஒரு கலக்கு கலக்கறாரு.

* இது எல்லாத்தையும் விட பெஸ்டுன்னு சொல்லனும்னா இவரு நண்பர வழியனுப்ப இவரு போட்ட இந்த பதிவு தான். என்ன ஸ்பெஷல்ன்னு நீங்களே படிச்சு தெரிஞ்சிக்கோங்க :)


அடுத்து நான் சொல்லப்போறது நம்ம சிங்கம் ஏஸோட பதிவுகள பத்தி. பாவம் அவரும் வந்ததுல இருந்து எல்லாரும் என்ன கொடுமை இதுன்னு அவர பாத்தே கேக்கறதால சரவணன்ற பேர ஏஸ்னு மாத்தினாரு. அப்பவும் விடாம என்ன கொடுமை இது ஏஸ்னு கேட்க அவரும் பேர ஐ ஆம் நாட் ஏஸ் னு மாத்தினாரு. அப்பவும் யாரும் விடலன்னு கடைசில சிங்கம்லே ஏஸ்னு பேர மாத்திட்டு சிங்கம் மாதிரியே அவர் ப்ளாக்கையும் இப்போ தூங்க விட்டுட்டாரு. அவரோட பதிவுகள்ல சிலது உங்களுக்காக

* திருவிளையாடல் படத்துல, சொக்கன் - நக்கீரர் விளையாட்டுல சொக்கனுக்கு ப்ராக்ஸியா போன தருமி பாட்டு தப்புன்னதும் புலம்பின புலம்பல எல்லாரும் பாத்திருப்பீங்க. அதே டேமேஜர் குடுத்த பக் (bug) இருக்கற சாப்ட்வேரோட கிளையண்ட் கிட்ட மாட்டிக்கிட்டு இவரு புலம்பறத பாருங்க.

* "உடம்புக்கு வந்தால் புலம்புவோம். சுஜாதா போன்ற சிலர் மருத்துவம்+அறிவியல் தகவல் கொடுத்து ஆன்ஜியோகிராம் எல்லாம் விளக்கலாம். இவரோ, கலக்கலாய் ரீடர்ஸ் டைஜஸ்ட் கட்டுரை படித்த ஞாபகம், அமெரிக்க மருத்துவமனையின் எமர்ஜென்சி முறை, என்று அவரின் கஷ்டத்தை நகைச்சுவையாக சிரிக்க வைத்து பகிர்கிறார். என்னமா எழுதறார்…" - இது கில்லில இந்த பதிவ பத்தி வந்த விமர்சனம் :)

* இவரு கல்லூரில படிக்கும் போது நிஜமாவே சிங்கமா இருந்த கதைய இங்கன படிங்க. கடைசில கமெண்ட் போட சோம்பல் படறவங்களுக்காக இவரே 2 சாய்ஸ் குடுத்து ஏதாவது ஒன்ன காப்பி போஸ்ட் பண்ணிட்டு போங்கன்னு வேற சொல்றாரு :))

* திருவிளையாடல் ரீமிக்ஸ் பாத்தீங்க. பராசக்தி ரீமிக்ஸ் பாக்காம விடலாமா?? (இந்த பதிவ இவர் போட காரணம் அதுக்கு முன்னாடி யாஹூ காண்பரன்ஸ்ல அவரையும் சேத்து ஒரு 10 பேர் கும்மு கும்முனு கும்மினது தான் :) )


அடுத்து நாம பாக்க போறது திரு.கடல் கணேசன் அவர்களோட பதிவுகள. இவரோட சீரியஸ் பதிவுகள பத்தி நம்ம தங்கச்சிக்கா போன வாரம் சொல்லி இருந்தாங்க. ஆனா அவரோட நகைச்சுவை பதிவுகளும் ரொம்ப அருமையா இருக்கும். ஒரு காலத்துல புதன்கிழமைனா எங்கள ஏமாத்தற பதிவா போட்டு பல வாரங்கள் வாசகர்களை ஏமாற்றியவர்.

* ரோஸியும் என் திருமண நாளும்னு இவர் போட்ட பதிவு (ரோஸி அவருடைய கற்றது கடலளவு தொடரில் வரும் ஓர் உண்மை கதாபாத்திரம். அதனால அநியாயத்துக்கு நிறைய பேர் ஏமாற்றப்பட்டார்கள் இந்த பதிவில் :) )

* தமிழின் டாப் டென் வலைப்பதிவர்கள் பற்றி ஒரு பதிவு (இந்த பதிவில் பின்னூட்டங்களை மறக்காமல் படித்து பாருங்கள் :) )

* என் இனிய லாப்டாப் என்று அவர் லாப்டாப்பை பற்றி அவர் கண்ட கனவு

* கடைசியாக அவருடைய காதல் கோட்டை கதை


இந்த தலைப்புல இன்னும் நிறைய இடுகைகள் கைவசம் இருக்கு. முடிந்தால் இன்னொரு நாள் அதை எல்லாம் பதிவிடுகிறேன் :)
மேலும் வாசிக்க...

Tuesday, November 20, 2007

வலைப்பதிவில் பாடகர்கள்

இந்த தலைப்புல நான் எழுதனும்னு ஆசைப்பட்டதுக்கு காரணம் எங்க குரூப்ல இருக்கற சூப்பர் ஜோடி கிட்டு மாமா & மாமி தான். இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பாடினா கச்சேரி சும்மா சூப்பரா களைகட்டும்.

இவங்க பாடின டூயட்ல எனக்கு ரொம்ப பிடித்தது நறுமுகையே . பின்னனி இசை இல்லாம கூட இவங்க கலக்கி இருப்பாங்க.

காதலர்கள் தின சிறப்பு விருந்தா இவங்க பதிவிட்ட மலர்களே மலர்களே பாட்டும் அசத்தலா இருக்கும்.

இவரே பாடல் வரி எழுதி மெட்டு போட்டு பாடிய பாடல் இங்கே.

இவங்களோட பாடல் தேர்வே கலக்கலா இருக்கும். மற்ற பாடல்களை இங்க போய் ஒரு எட்டு கேட்டுட்டு வாங்க.

எங்க கிட்டு மாமாவோட இன்னொரு ஸ்பெஷாலிட்டி அவரோட குறள். 2 லைன் குறளுக்கு html லிங்க எல்லாம் குடுத்தா கொஞ்சம் ஓவரா இருக்கும். அதனால இங்கயே சாம்பிளுக்கு சிலது குடுக்கறேன்.

துன்பங்களைக் கண்டு கலங்காதவனைத் தொடரும்
துன்பங்கள் துன்பப்பட் டழிந்துவிடும்

பொருளடக்கம் : இடுக்கண் அழியாமை


இப்படி சீரியஸா மட்டும் தான் எழுதுவாருன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. காமெடியும் கலந்தே குடுப்பாரு.

கஷ்ட்டப்பட்டு ஆணிபுடுங்கியதை மதிக்காத மேனேஜர்களை
கோணியிலிட்டு கும்முவதே சிறப்பு

பொருளடக்கம் : கள்ளிப்பால்

கண்சிமிட்டும் நேரம் இதயம் சிமிட்டுகிறதடி
ஒருவினாடியுன்னை பார்க்க முடியாதென்று

பொருளடக்கம் : ஐஸ் கட்டி பால்

குறள்ல பொருளடக்கத்த கவனிச்சீங்களா? அதுலயும் இவரோட குசும்பு எக்கச்சக்கமா இருக்கும் :) மற்ற குறள்களையும் படிக்க...

இவரோட திறமை இதோட முடியலைங்க. இன்னும் கதை, கவிதை, விமர்சனம், கலாட்டான்னு இவர் விட்டு வைக்காத சப்ஜெக்டே இல்ல. நேரம் கிடைக்கும்போது அவர் வலைப்பூல பழச எல்லாம் எட்டிப்பாருங்க.



*******************

அழகான குரல்வளம் கொண்ட இன்னொரு வலைப்பதிவர் நம்ம மருதம். அவங்களோட வலைப்பூவ நானும் ரொம்ப படிச்சதில்ல. ஆனா அவங்க பாட்ட கண்டிப்பா மிஸ் பண்ண மாட்டேன். நீங்களும் கேட்டு ரசிக்க இங்குட்டு போயிட்டு வாங்க.



*******************

அடுத்து நாம கேட்கப் போற குரல் கே.கே.வோடது . இந்த பாட்டு இவருக்கு ரொம்ப பிடித்த பாட்டாம். படம் வர்றதுக்கு முன்னாடியே இந்த பாட்ட பல முறை கேட்டு ரொம்ப ஆர்வமா படத்தோட ரிலீஸ்க்கு காத்திருந்தவரு, படம் வந்ததும் இந்த பாடல் படமாக்க பட்டிருந்த விதத்தை பாத்து ரொம்ப கடுப்பாகிட்டாரு. இந்த பாட்டு எப்படி படமாக்கலாம்னு அவரு கற்பனை பண்ணி எழுதியிருப்பாரு (மன்னிச்சிக்கோங்க. பதிவு ஆங்கிலத்துல இருக்கும்). அதோட நிறுத்தினாரா இவரு? இவன் எடுத்த காட்சிக்கு ஏ.ஆர். ரஹ்மான் பாடினதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி. நான் பாடறதே போதும்னு அவரு பாடி அதையும் அந்த பதிவோட சேத்திருப்பாரு பாருங்க... வாய்ப்பே இல்ல. இந்த பதிவு வந்த காலத்துல இந்த பாட்ட கேட்டு வயிறு வலிக்கற அளவுக்கு சிரிச்சிருக்கேன் நான். (தங்கிலீஷ் படிக்க கஷ்டமில்லன்னா அந்த பதிவோட பின்னூட்டத்த படிச்சு பாருங்க. சும்மா குசும்பன் சொல்ற மாதிரி கலாய் கலாய்ன்னு கலக்கலா கலாய்ச்சிருப்போம் :)) )

இவர் பாடினதுல எனக்கு பிடித்தவை ராஜ ராஜ சோழன் நான் & கண்ணே கலைமானே

இன்னிக்கு இம்புட்டுத்தானுங்க :)
மேலும் வாசிக்க...

Monday, November 19, 2007

நன்றி!!

ஹி..ஹி... ஆரம்பமே நன்றியான்னு ஆச்சர்யப்படறவங்களுக்கு, இது போனவாரம் வலைச்சர ஆசிரியரா இருந்த தங்கச்சிக்காவுக்கு இந்த வார வலைச்சர ஆசிரியராகிய நான் கூறும் நன்றி. எங்க தங்கச்சிக்கா ஒரு வாரமா வலைச்சரத்த சும்மா அதிரவெச்சிட்டாங்க இல்ல. இவங்க இத்தனை நாள் எல்லா பதிவுக்கும் போய் வெறுமனே மீ த பர்ஸ்டுன்னு கமெண்ட் போட்டுட்டு பதிவ படிக்காமலே கும்மி அடிச்சிட்டு வருவாங்கன்னு நினைச்சிட்டிருந்தவங்களுக்கெல்லாம் அதிர்ச்சி தர்ற மாதிரி சரவெடியா கொளுத்திட்டாங்க இல்ல. தங்கச்சிக்கா, உங்க புண்ணியத்துல நானும் வலைச்சர வாசகர்களும் நிறைய நல்ல பதிவுகளை தெரிஞ்சிக்கிட்டோம். எங்கள் எல்லோரின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள்.

போன பதிவுல நீங்க எல்லாரும் குடுத்த அமர்க்களமான வரவேற்புக்கும், அறிமுகப்பதிவு போட்ட தங்கச்சிக்காவுக்கும், என்னை வலைச்சரம் எழுத அழைத்த வலைச்சர ஆசிரியர்களுக்கும் சிறப்பு நன்றிகள் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என்னை வலைச்சரம் எழுத கூப்பிட்டப்ப எனக்கு கொஞ்சம் ஆச்சர்யமா இருந்தது. ஏன்னா இதுக்கு முன்னாடி இந்த பக்கம் நான் வந்தது மிகவும் அரிதாகத்தான். அப்படி இருக்கும்போது என்னை எல்லாம் கூப்பிடறாங்களே. யாரையுமே தெரியாத இடத்துல போய் நாம என்ன பண்ண போறோம்னு ஒரு தயக்கம் (பயம்ன்னெல்லாம் படிக்கபுடாது சொல்லிட்டேன்). அப்புறம் நம்ம தங்கச்சிக்காவும் முத்துக்காவும் தான் அதெல்லாம் ஒன்னும் இல்ல. சும்மா நீ படிச்ச, ரசிச்ச பதிவுகளோட இடுகைகளை குடுத்தா போதும்னு சொன்னாங்க. ஆஹா. இது வெறுமனே கடை தேங்காய எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைக்கற கதை தான் போல. இதை நான் நல்லாவே செய்வேனேன்னு நானும் களத்துல குதிச்சிட்டேன். நல்ல தேங்காயான்னு நீங்க தான் சொல்லனும். (உங்களை எல்லாம் கடவுள்னு சொல்லியிருக்கேன்.. இந்த ஐஸுக்காவது கொஞ்சம் பலன் இருக்கான்னு பாப்போம் :)) )

என்ன பத்தி சொல்லனும்னா நான் வலையுலகத்துக்கு வந்தது ஆபீஸ்ல இருக்கற வெட்டியான நேரத்தை போக்கதான். நேரத்தை போக்க வலைப்பூக்குள்ள எப்படி நுழைஞ்சேங்கற அரிய வரலாற்றை இங்க பதிவிட்டிருக்கேன். படிச்சிக்கோங்க. இப்படியாக வலைப்பூவத் திறந்தப்புறம் எப்ப எல்லாம் எனக்கு போர் அடிக்குதோ அப்போ ஏதாவது ஃபார்வர்ட் மெயில்ல இருந்து படம்/ கவிதைன்னு சுட்டு பதிவா போட்டுட்டு எல்லாருக்கும் ஒரு மின்னஞ்சல் தட்டி புது பதிவு போட்டுட்டேன்னு சொல்லுவேன். வெட்டியா இருக்கறவங்க யாராவது வந்து இதெல்லாம் ஒரு பதிவான்னு துப்ப ஆரம்பிப்பாங்க. மாட்னான்யா ஒருத்தன்னு நானும் அவங்களோட கமெண்ட்ல கும்மி அடிக்க ஆரம்பிச்சுடுவேன் :) எப்பவுமே இப்படி சுட்ட பதிவாவே போடறதால G3 = சுடறதுன்னு புது அகராதியே போட்டுபுட்டாய்ங்க பதிவுலகத்துல. பதிவுலக வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்னு நானும் ப்ரீயா விட்டுட்டேன் :)

ஒன்னுமே உருப்படியா எழுதலைன்னாலும் இவ்ளோ நாள் நான் இந்த வலையுலகத்துல இருக்க காரணம் என் வலையுலக நண்பர்கள் தான். அவங்கள்ல சில பேரையும் அவங்களோட பதிவுகளையும் தான் உங்களுக்கு இந்த வாரத்துல நான் அறிமுகப்படுத்த போறேன். குடுக்கப்பட்டிருக்கும் நேரம் குறைவுங்கறதால எல்லா பதிவுகளையும் திரட்ட முடியுமான்னு தெரியல. அதனால தமிழ்மணத்துல இல்லாத மக்கள பத்தி மட்டும் எழுதலாம்னு இருக்கேன். உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

என்றும் நட்புடன்,
ஜி3.
மேலும் வாசிக்க...

Sunday, November 18, 2007

வலைச்சரவரலாற்றில் முதன்முறையாக...

என்னடா இவ.. நன்றி டாட்டா பை பைன்னு எல்லாம் சொன்னதும் கிளம்பிட்டான்னு நினைச்சேன்.. தொல்லை இன்னும் போகலையேன்னு நீங்க நினைப்பீங்க.. ஆமாம்.. நீங்க மனசுல நினக்கிறது மலேசியா வரை கேட்குது.. :-P

என்ன தலைப்பு இது? வலைச்சர வரலாற்றில் முதன் முறையாக.. இது வலைச்சர பொறுப்பாசிரியர் எனக்காக எழுதிய அறிமுகப்பதிவின் தலைப்பாச்சேன்னு யோசிப்பீங்க.. ஆமாம்.. இப்போதும் நீங்க மனசுல நினைச்சது இங்கே வரை கேட்குது.. :-P

ஆனால், இந்த பதிவுக்கு இந்த தலைப்பைத்தவிர வேற எதுவும் பொருத்தமாக இருக்காது என்று தோன்றியதால் முதல் பதிவுக்கும் கடைசி பதிவுக்கும் ஒரே தலைப்பு வைத்தாகிவிட்டது. ஏன் என்று கேட்பவர்களுக்கு நான் ஒன்னு சொல்லிக்கிறேன். கீழே விடை இருக்கு. தொடர்ந்து படிங்க. :-P

நான் சொல்ல நினைத்ததை 7 நாட்களுக்கு 7 பதிவுகளாக பிரித்து சொல்லியாகிவிட்டது.. அதனால்த்தான் நன்றிகளும் சொல்லி விடைப்பெற்றுவிட்டேன்.. ஆனால், இந்த பதிவு அடுத்து வரப்போகும் வலைச்சர ஆசிரியரின் அறிமுகம்..

வலைச்சர வரலாற்றில் முதன் முறையாக தற்போதைய ஆசிரியர் அடுத்து வரப்போகும் ஆசிரியருக்கு அறிமுகம் செய்து வச்சா எப்படி இருக்கும்? வலைச்சர பொறுப்பாசிரியருக்கு வேலை இருக்காது.. அவ்வளவுதானேன்னு சொல்றீங்களா? இருந்துட்டு போகட்டும்.. நாளை தாரை தப்பட்டைகள் முழங்க வரப்போவது யார் தெரியுமா???


G3.. G3.. G3....


இவங்களை பத்தி என்ன சொல்றது..ம்ம்ம்.. மைக்கல் மதன காம ராஜன் பார்த்திருக்கீங்களா.. அதுல வில்லன் கோஷ்டி ஒரு டயலோக் ரிப்பீட்டே பண்ணிக்கிட்டே இருப்பாங்க.. அதாவது "இவன் பெரிய ஆளுடா.. எல்லா இடத்துலேயும் ஆள் வச்சிருக்கான்.. அங்கே நெட்டையா ஒரு போடிகார்ட். இங்கே குட்டையா ஒருத்தன். கையில ஏ.கே 47"ன்னு.. ஆனா, அது ஏ.கே 47 கிடையாது.. கரண்டிதான்..

இப்படித்தான் இவங்களும்.. எல்லா இடத்துலேயும் ஆள் வச்சிருக்காங்க.. ஏ.கே 47ன்னு இவங்க சீரியஸ் கைன்னு நெனச்சிடாதீங்க. அது கரண்டி மாதிரி காமெடி ஆகிடும்.. அந்த அளவுக்கு காமெடி பார்ட்டி இவங்க.. சுறுக்கமா சொல்லணும்ன்னா இவங்க ஒரு லேடி கைப்புள்ள..

ஆப்பு.. இல்ல இல்ல.. தோப்பே இறக்கி வச்சாலும் அசராம நின்னு அடுத்த தோப்பு எப்போன்னு கேட்ப்பாங்க.. தோப்புன்னா என்னன்னு கேட்குறீங்களா? ஒன்னு வாங்குனா அது ஆப்பு... பல்க் ஆர்டர்ல வாங்குனா அது தோப்பு! :-P

இவங்க பெயருக்கு ஒரு மீனிங் இருக்கு. G3 = சுடுறது... இதுவே இவங்க ஸ்பெஷலிட்டி... அழகா சுட்டு சுட்டு போடுவாங்க.. அந்த பெயர் எப்படி வந்துச்சுன்னு அவங்களே நாளைக்கு விளக்கம் சொல்லுவாங்கன்னு நாமும் எதிர்ப்பார்ப்போமே!

அப்புறம் ஒரு மேட்டர் சொல்ல மறந்துட்டேனே! இவங்க பதிவுகளை ஆரய்ச்சி பண்றதை விட வந்திருக்கிற பின்னூட்டங்களை பாருங்க.. எல்லா பதிவிலும் ஒரு குட்டி கலாட்டாவே நடந்திருக்கும். அதுவே ரொம்ப விருவிருப்பா இருக்கும். ;-)

இவங்க சாதனை என்ன தெரியுமா? ஒரு பதிவுல 3000+ பின்னூட்டங்களும் வாங்கி கலக்கியிருக்காங்க..

அடுத்து நாம் எல்லாரும் சேர்ந்து வலைச்சர கரண்டியை இவங்க கையில கொடுப்போம். தினமும் ஒரு உணவு கலக்கி சுவையா நமக்கு ஊட்டுவாங்கன்னு எதிர்ப்பாப்போம்.

ம்ம்.. வாங்க.. அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா.. ம்ம். கிளம்புங்கள்.. :-))
மேலும் வாசிக்க...

நானும் பதிவுகளும் நன்றியும்..

வலைச்சரத்தில் முதல் பதிவை பதித்தப்பின் நண்பர்கள் கேட்ட கேள்வி: “முதல் பதிவு உன்னையும் உன்னுடைய பதிவுகளையும் பற்றி எழுதாமல் மற்றவர்கள் பற்றி எழுதியிருக்காயே?”

நான் எழுதிய பதிவுகளை நானே இங்கே வரிசைப்படுத்தினால் அது தற்பெருமையாகிவிடும் என்பதால் இதை தவிர்த்தேன். அதை விட மற்றவர்கள் ரசிக்கும்படி ஏதாவது உருப்படியா எழுதியிருக்கேனான்னு தெரியாது. ஆனால் இப்போது நண்பர்களின் வற்ப்புறுத்தலுக்கினங்க இந்த பதிவில் எழுதுகிறேன்.

வலைப்பதிக்க ஆரம்பித்த போது பெரிதாக ஏதும் சாதிக்க வேண்டும் என்று நினைத்து ஆரம்பிக்கவில்லை. எல்லாரும் வச்சிருக்காங்களே, அப்படி என்னத்தான் இருக்கு இதில் என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் @ curiosity மட்டுமே! என் கிறுக்கல்களை பொறித்து வைக்கும் ஒரு உலகமாக உருமாறியதுதான் THe WoRLD oF .:: MyFriend ::. இதையும் ரசித்திருக்கிறார்கள் என் நண்பர்கள்.. “இன்னும் எழுது இன்னும் எழுது” என்று நண்பர்கள் கொடுத்த ஊக்கம் மற்றும் சில வலைப்பூக்களும் உருவாக காரணமாகிவிட்டது.

சும்மா கிறுக்கிட்டு இருக்கும்போது நல்லா எழுதுறீயேன்னு ஒருத்தவங்க சொன்னால், ‘அட.. நம்மையும் ஒரு சிலர் கவனிச்சிட்டு இருக்காங்களே! அவங்க எழுதுற அளவுக்கு எழுதமுடியாவிட்டாலும் ஓரளவு படிக்க முடியிற அளவாவது எழுதணுமே’ என்று நமக்குள்ளே தோணுமல்லவா? அந்த மாதிரி சமயத்தில் ‘உனக்கென்ன தெரியும்? அதைப்பற்றி எழுது! தெரியாத விஷயத்தில் ஆழம் தெரியாமல் கால் வைக்காதே’ன்னு என் உள்மனசு சொல்ல, எனக்கென்ன தெரியும்ன்னு யோசிச்சதில் எனக்கு தெரிஞ்சது என்னை சுற்றி நடக்கும் விஷயங்கள் மட்டும்தானே என்று தோன்றியது..

உடனே மலேசியா சம்பத்தப்பட்ட பதிவுகளை எழுத ஆரம்பிச்சுட்டேன். ‘இது நல்லா இருக்கே!’ என்று சிலர் சொல்வதுக்கும் ‘மலேசியாவை பற்றி எங்களுக்கும் ஒன்னும் தெரியாது. இன்னும் நிறைய எழுதுங்க. தொடர்ந்து எழுதுங்க’ன்னு நண்பர்கள் கொடுத்த ஆர்வத்துக்கும் அளவே இல்லை. ஆனால், இப்படி அதிகமாக எதிர்ப்பார்ப்புகள் வரவர என்னால் செய்ய முடியுமா என்று எனக்குள்ளேயே ஒரு கேள்விக்குறி. பதில்? அப்போது மலேசியாவில் பிறந்து சிங்கப்பூரில் வாழும் துர்காவின் நட்பு கிடைக்கவே, நாங்கள் சேர்ந்து ஆரம்பித்த வலைத்தளம் ஜில்லென்று ஒரு மலேசியா.

மலேசியாவைப் பற்றி ஜில்லென்று ஒரு மலேசியாவில் எழுத ஆரம்பிச்சதும் திரும்ப என் வலைப்பூவில் ஈயோட்ட ஆரம்பிச்சுட்டேன். என்ன எழுதுறது என்று ஒன்னும் தெரியலையே என்று யோசிக்கும்போது வெட்டி அண்ணே சொன்னாரு.. “காமெடி எழுதும்மா”. என்னை வச்சி என்னமோ காமெடி பண்றார்ன்னு திரும்ப அவர்க்கிட்ட கேட்டேன். ‘இல்ல. சீரியஸாதான் சொல்றேன்’ன்னு சொல்லி ஆர்வத்தை மூட்டிவிட்டுட்டார். மூளையை கசக்கி ஒன்னு ரெண்டு காமெடி பதிவெழுதினேன். வ.வா. சங்கத்து பாசமுள்ள அண்ணன்கள் இதையெல்லாம் படிச்சு காமெடி குவீன்னு பட்டமெல்லாம் கொடுத்துட்டாங்க. யார் யாருக்கோ பெரிய எழுத்தாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பட்டத்தை தங்கச்சிங்கிற பாசத்துல எனக்கு கொடுத்துட்டாங்க.

இதுதான் எங்களுடைய பயமறியா பாவையர் சங்கத்துக்கு பிள்ளையார் சுழி. அனுசுயாக்கா தலைமையில கண்மணியக்கா, இம்சையக்கா, G3யக்கா, கவிதாயினி அக்கான்னு எல்லாரும் நகைச்சுவையில் கலக்கிட்டு இருக்காங்க. கூடவே நானும் ஒட்டிகிட்டு இருக்கேன். ஆங்.. சொல்ல மறந்துட்டேனே! இப்போது ‘நாங்க ரெடி.. நீங்க ரெடியா?’ன்னு ஒரு போட்டி கூட நடக்குது. நேரமிருந்தா வந்து கலந்துக்கொள்ளுங்களேன்.

பதிவுலகம் ஜஸ்ட் டைம் பாஸுக்கு மட்டுமே என்று நினைப்பவர்களுக்கு விதிவிலக்காய் திகழ்வது ப்ளாக் யூனியன். திடீரென்று அண்ணன் அம்பிக்கும் அக்கா டுபுக்கு டிசபள்க்கும் வந்த ஐடியாவில் உதயமாகியதுதான் இந்த க்ரூப். பதிவுலக நண்பர்கள் பலரும் பல ஊரில் சிதறி கிடகும்போது ஒருத்தர்க்கு ஒருத்தர் ஒத்தாசையாக இருக்கவும் நட்புடன் இருக்கவும் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு 50 பேர் சேர்ந்த குழுவாக வளர்ந்து நிற்கின்றது இப்போது. ஒன்றாய் சேர்ந்து கும்மியடிக்கவும் நட்புடன் இருக்கவும் ஒரு அருமையான நட்பு வட்டாரம் இது.

இதெல்லாம் ஒரு பக்கம் ஓடிட்டிருக்க பின்னூட்டங்களை அள்ளி தெளிப்பதில் அதிக ஆர்வத்திலும் இருந்தேன். நிறைய படித்தால்தான் நிறைய கற்றுக்கொள்ள முடியும்ங்கிறதுனாலேயும் எனக்கு அப்போது (இப்போதும் கூட..) தமிழ் கற்றுக்கொள்ள வேண்டியது இருந்ததுனாலேயும் நிறைய பதிவுகளை படித்தேன். முடிந்த வரை படித்துவிட்டு பின்னூட்டம் போடுவேன்.

ஆனால் பின்னாட்களில் இப்படி சேர்ந்து பின்னூட்டம் @ கும்மி அடித்ததில் ஒரு கூட்டணியே அமைந்துவிட்டது. பாசக்கார அன்பர்கள் எல்லாரும் சேர்ந்து பாசக்கார குடும்பமாய் ஒன்றாய் சேர்ந்தது கும்மியில்தான். குட்டிப்பிசாசு சிவா, முத்துலெட்சுமிக்கா, கண்மணியக்கா, கோபிண்ணே, தருமி ஐயா, குசும்பன் அண்ணே, கவிதாயினியக்கா, அபி அப்பா, மின்னலண்ணே, அய்யனார் அண்ணேன்னு சகோதரர்கள் அனைவரும் சேர்ந்த்து அடிக்கும் லூட்டிக்கும் அளவில்லை. எங்கள் சந்தோஷத்தில் அப்பப்போ வந்து கலந்துக்கொள்ளும் மற்ற பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி. வாங்க.. சேர்ந்து கும்மியடிக்கலாம்.

சங்கம் க்ரூப்ஸின் மற்றொரு படைப்பாக உருவாகியது சங்கம் விஷ்ஷஸ். அதுவே இப்போது சுவரொட்டி என்ற பெயர் மாற்றத்தில் புது பொலிவுடன் வந்திருக்கிறது. எனக்கு அங்கேயும் ஒரு துண்டு போட்டு இடம் கொடுத்திருக்காங்க. யாருக்காவது பிறந்தநாள், திருமணம், குழந்தை பிறப்பு, நோட்டிஸ், வாழ்த்து என என்ன இருந்தாலும் போஸ்டர் அடிச்சு ஒட்டுறதுதான் எங்க வேலை. யாருக்காவது வாழ்த்து சொல்ல வேண்டுமா? உடனே நீங்கள் நாடவேண்டியது சுவரொட்டியை...
சமீபத்தில் இந்த குழந்தை துண்டு விரித்து அமர்ந்திருப்பது குட்டீஸ் கார்னரில். என்னைப்போல் சிறு பிள்ளைகள் விளையாடும் மைதானம். மழலை செல்லங்களை பார்க்க வேண்டுமா? வாங்கோ ஆண்டிஸ்.. வாங்கோ அங்கிள்ஸ்... குட்டீஸ்கள் நாங்கள் எல்லாரும் சேர்ந்து TEACH என்ற ஒரு பயனுள்ள ஐடியாவுடன் வந்திருக்கோம். அதுக்கு உங்க எல்லாருடைய ஆதரவுகளும் தேவை. இவை பற்றி மேலும் அறிய இதை படிங்க. மேலும் விவரங்களுக்கு இங்கே ஒரு மின்னஞ்சல் அனுப்புங்க.

இந்த 7 நாட்களாய் நான் படித்தவை ரசித்தவை என்று என்னால் முடிந்த வரை கொஞ்சம் சொல்லிட்டேன். 7 நாட்கள் என்பதும், வெறும் ஏழே இடுகைகள் என்பதும் என்னை பொருத்த வரை மிக மிக குறைவு. வாய்ப்பு கிடைத்தால் இன்னும் நிறைய பேரை பற்றியும் அவர்களின் பதிவுகளை பற்றியும் தனித்தனியாக பதிக்கலாம்.

நான் படித்ததில் ரசித்த பதிவுகளை பி.டி.எஃப்-அக மாற்றி சேர்த்து வைத்துள்ளேன். அதில் பாதியை கூட இங்கே சொல்லி முடிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் என்னால் முடிந்த வரை ராமனுக்கு ஒரு அனுமானாக இல்லாவிட்டாலும் ஒரு அணிலாய் இருந்து எனக்கு கொடுத்த பொறுப்பை சரியாக செய்து முடித்து இருக்கிறேன் என நம்புகிறேன். முத்துலட்சுமிக்கா, பொன்ஸக்கா, நீங்கதான் ஆமாவா இல்லையா என்று சொல்லணும்..

வலைச்சரத்தில் கால் மேல் கால் போட்டு வலைச்சரம் தொடுத்த என்னை ஆதரிச்சு ஏழு நாட்களும் என்னுடன் என் பயணத்தில் கலந்துக்கொண்ட நண்பர்களுக்கு முதலில் நன்றி.

என்னையும் நம்பி வலைச்சரத்தில் எழுத வாய்ப்பு கொடுத்த வலைச்சர பொறுப்பாளர்களுக்கும் ஒரு மாதத்துக்கு முன்பிலிருந்தே என்னுடைய பொறுப்பு நவம்பர் 12 என்று அவ்வப்போது ஞாபகப்படுத்திக்கொண்டிருந்த முத்துக்காவுக்கும் எனது அடுத்த நன்றிகள்.
என்னை தொடர்ந்து அடுத்து வரப்போகும் வலைச்சரம் ஆசிரியர் யாருன்னு தெரியும்ல? ச்சும்மா அதிர போகுது வலைச்சரம்.. அவங்களுக்கும் இவ்வேளையில் பாராட்டுக்களும் நன்றிகளையும் சொல்லிக்கொள்கிறேன். இனி வரும் வலைச்சர ஆசிரியர்களும் பல நல்ல இடுகைகளை சுட்டிக்காட்டி வாழ்த்த வேண்டும் என என் விருப்பம் நிறைவேறும் என நினைக்கிறேன்..

என்னுடைய வலையுலக ஓராண்டு பயணத்தில் கிடைத்த நட்புதான் நான் சம்பாரித்த விலைமதிப்பில்லா சொத்து. நண்பர்கள் அனைவருக்கும் இவ்வேளையில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புதிதாய் வரும் வலை நண்பர்களுக்கு பழைய வலைபதிவர்கள் வழிக்காட்டியாக இருந்து அவர்களுக்கும் பாதையை காட்டினால் அனைவரும் சேர்ந்தே வளருவோம். கூடவே தமிழும் வளரும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் நல்லாசியுடன் விடைப்பெறுகிறேன்.

என்றும் நட்புடன்,
.:: மை ஃபிரண்ட் ::.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது