07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ஜி3. Show all posts
Showing posts with label ஜி3. Show all posts

Sunday, November 25, 2007

புலி இன்று புறப்பட்டதே



புலி இன்று புறப்பட்டதே

மக்கள் நல்ல
பதிவை படிப்பதற்கு
கும்மி அடிப்பதற்கு
பொழுதை கழிப்பதற்கு
இடுகை குடுப்பதற்கு

புலி இன்று புறப்பட்டதே

உன்னோட பின்னூட்டங்கள் ரசிக்கின்ற கூட்டமுண்டு
நீ ரசித்த பதிவுகளை ரசிக்கின்ற கூட்டமிங்கு

நல்ல பதிவை கொடுக்கும் வரைக்கும்
அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம்

சபதம் செய்து
புலி இன்று புறப்பட்டதே..
மேலும் வாசிக்க...

விடைபெறுகிறேன்

இந்த ஒரு வாரமா என் பதிவுகள படிச்சு பின்னூட்டமிட்டு ஆதரவு தந்த ரசிகன், வேதா, பேபி பவன், வித்யா கலைவாணி, நிலா, ஜி, குசும்பன், கோபிநாத், காயத்ரி, டுபுக்கு டிசைபிள், ட்ரீம்ஸ், மை ஃபிரண்ட், மங்களூர் சிவா, கோவை ரவி, மருதம், கிட்டு மாமா, சீனா, கடல்கணேசன், இம்சை, ஜி.ராகவன் அனைவருக்கும், பின்னூட்டம் போடாம் ஜி-டாக், மின்னஞ்சல் மூலமா ஆதரவு தந்த மற்ற நண்பர்களுக்கும், வலைச்சரத்தில் எழுத வாய்ப்பு கொடுத்த வலைச்சர ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். என்னை இப்படி பதிவு போடுங்க இந்த பதிவு போடுங்கன்னு ஐடியா குடுத்து ஊக்குவிச்ச தங்கச்சிக்காக்கு ஸ்பெஷல் நன்றி. ஆனா அவ ஆசைப்பட்டு கேட்ட பதிவு நாங்க கமெண்ட்ல கும்மி அடிச்ச பதிவுகளுக்கான இடுகைகள். அதுவும் முக்கால்வாசி தங்கிலீஷ்லயே இருக்கும்ன்றதால அதுக்குன்னு ஒரு பதிவ போட்டா மறுபடி விதிய மீறினா மாதிரி ஆயிடும். அதனால அவளுக்காக ஒரே ஒரு கும்மிய மட்டும் இங்க ட்ரான்ஸ்லேட் பண்ணி இருக்கேன். என்சாய் :))

நான் ப்ளாக் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி கே.கே ப்ளாக்ல டேட்டிங் பத்தி அவர் போட்ட பதிவுல அடிச்ச கும்மி இது :)

நான் : பெரியவங்க எல்லாம் சேர்ந்து ரொம்ப சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்டிருக்கீங்க.. இங்க குழந்தைங்களுக்கெல்லாம் வேலை இல்லன்னு தெரியுது.. நான் போயிட்டு அடுத்த போஸ்டுக்கு வரேன்

ஷ்யாம் : ஆமா ஆமா குழ்ந்தைங்களுக்கெல்லாம் வேலை இல்ல. உங்கள மாதிரி பாட்டீஸ்க்கும் வேலை இல்ல

கில்ஸ் : @ஜி3, வி.வி.சி. ஐயோ பாவம்.. நான் ஒன்னும் சொல்லலபா..
@ஷ்யாம், தல.. ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சொன்னீங்க போங்க. உங்களுக்கு புளியோதரை & தொண்டிவனம் பார்சல் கண்டிப்பா.. கைவசம் கேஷ் கம்மிங்கறதால ஸ்டாம்ப் ஒட்டாம அனுப்பி இருக்கேன்.. சமத்தா மிச்சம் வைக்காம சாப்ட்ரனும்

நான் : உங்கள மாதிரி கொள்ளு தாத்தாக்களுக்கு தான் இங்க வேலை ஜாஸ்தின்னு நல்லாவே தெரியுது

ஷ்யாம் : @ஜி3, இது தான் உங்க கமெண்டா இருக்கும்னு நான் நினைச்சேன். அது தான் வந்திருக்கு

நான் : என்ன பண்றது. துப்பறிபும் சாம்புக்கு எப்பவும் அதிர்ஷ்டம் ஜாஸ்தி. அவர் கெஸ் பண்றதெல்லாம் கரெக்டா வந்துடுது

கே.கே. : @ஜி3, குழந்தைங்களுக்கு வேலை இல்லன்னு சொல்லிட்டு நீங்க ஏன் கிளம்பிட்டீங்க? இப்படி எல்லாம் செஞ்சா உங்கள நாங்க குழந்தைகள் லிஸ்ட்ல சேர்த்துடுவோம்னு நினைச்சீங்களா? நடக்காது

கில்ஸ் : ஜி3 குழந்தை பாவம்.. டேடிங்னா என்னன்னு தெரியலையாம்.. அதுனால தான் சைலண்டா போயிட்டாங்களாம். நீங்களும் கன்யாவும் தான் இந்த டாபிக்ல தீஸிஸ் பண்ற அளவுக்கு பிரிச்சு மேஞ்சிட்டீங்கள்ள.. விளக்குங்க

நான் : @கே.கே. நீங்க ஒத்துக்கலைன்னா நாங்க அந்த லிஸ்ட்ல இல்லன்னு ஆயிடுமா? நோ சான்ஸ்

@கில்ஸ், உங்களுக்கும் தானே தெரியல.. அதை ஏன் சொல்லாம விட்டீங்க? உங்களுக்கு தெரிஞ்சிருந்தா சொல்ல வேண்டியது தானே? ஜப்பான்ல இருந்து ஜாக்கிசான் பேசறதா ஆபீஸுக்கு போன போட்டு ஓட்ட மட்டும் தான் தெரியும் உங்களுக்கு

கில்ஸ் : ஆபீஸ்ல அப்படியே பரம் சாது மாதிரி போன் பேசினீங்க.. இப்ப என்ன உதார்

நான் : அதெல்லாம் கண்டுக்ககூடாது. ஆபீஸ்ல நான் நிஜமாவே சாது தான்

கே.கே : @கில்ஸ், கேள்வி கேக்கறது ஈஸி.. பதில் சொல்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?? அதனால பதில் கன்யா சொல்லிடுவாங்க
//ஆபீஸ்ல அப்படியே பரம் சாது மாதிரி போன் பேசினீங்க.. இப்ப என்ன உதார்//
கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்

@ஜி3, வேணும்னா வோட் வெச்சு பாக்கலாமா? எத்தனை பேர் ஜி3ய குழந்தைன்னு ஒத்துக்கறாங்கன்னு???

நான் : "ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை".. எத்தனை பேர் ஜி3க்கு எதிரா கள்ள ஓட்டு போட்டாலும் ஜி3 - குழந்தை தான்

கே.கே : பளார்னு அடிச்ச ஃபீலிங் இருக்கு எனக்கு

ஷ்யாம் : //ஆதவன் மறைவதில்லை// நீங்க சன் டீ.வி. ஓனருக்கு சொந்தமா

நான் : வெள்ளை கொடிய அதுக்குள்ள இறக்கிட்டீங்களா? இது என்ன கதையா இருக்கு.. சன் டீ.வி ஓனரோட்ட சொந்தகாரங்க மட்டும் தான் சூரியன பத்தி பேசனுமா என்ன? டூ மச்..
[ அப்போ தான், என்னை ஒரு வாரத்துக்கு ஓட்ட மாட்டேன்னு அவர் ப்ளாக்ல வெள்ளை கொடி ஏத்தி இருந்தாரு ]

கே.கே : ஜி3 இப்போ கட்சி மாறி இருப்பாங்க. சொல்ல முடியாது தமிழ் புலமை இருக்கறதால DMKல சேர்ந்திருப்பாங்க தமிழ் குடிமகனுக்கு ரீப்ளேஸ்மண்டா

நான் : என் தமிழ் புலமை எல்லாம் நான் படிக்கற நாவல் வளர்த்து விட்டது தான் சாமி.. என்ன இப்படி அரசியல்ல எல்லாம் வம்புக்கிழுக்காதீங்க.. நமக்கு அந்த பக்கம் ஒன்னுமே தெரியாது

ஷ்யாம் : //வெள்ளை கொடிய அதுக்குள்ள இறக்கிட்டீங்களா?// இது வெள்ளைக்கொடி ஏத்துறதுக்கு முன்னாடி சொன்னது.. டைம் ஸ்டாம்ப் பாருங்க

நான் : அதானே நாட்டாமை சொன்ன சொல் தவற மாட்டாரே

ஷ்யாம் : அப்படியே கூட BGM போட்டு இருந்தா நல்லா இருக்கும்

கே.கே : ஜி3, ஷ்யாமுக்கு ஐஸ் போடுறீங்களா?

நான் : @கே.கே, அதிசயமா ஒருத்தர் வெள்ளை கொடி தூக்கி இருக்கார்.. அவர பாராட்டினா தானே திரும்ப இந்த பாலிஸிய வேற யாராவது ஃபாலோ பண்ணுவாங்க
@ஷ்யாம், அதெல்லாம் நீங்களே படிக்கும் போது சேத்துக்குவீங்கன்னு நினைச்சேன்

ஷ்யாம் : பின்ன வேற ........... ச்சே.. இந்த வெள்ளை கொடி வேற வந்து தடுக்குது

நான் : சரி சரி டென்ஷன் ஆவாதீங்க அடுத்த வாட்டில இருந்து கரெக்டா BGM போட்டுடறேன்

கே.கே : ஷ்யாம், அந்த டயலாக்க முழுசா சொல்லுங்க.. என் தலையே வெடிச்சிடும் போல இருக்கு.. (சிந்து பைரவி ஜனகராஜ் மாதிரி)

நான் : கே.கே.,மறுபடியும் 75-வது கமெண்ட். இன்னும் 50 பொற்காசுகள் (இந்த வாட்டி fedex எல்லாம் வேணாம். Western union money transfer பண்ணிடுங்க )

கே.கே : ஜி3, எனக்கு காது கேக்கலை.. சாரி.. கண்ணு தெரியலை

ஷ்யாம் : ஜி3, இவர் கிட்ட இருந்து ஒன்னும் கிடைக்காது. மீறி கேட்டா அக்கவுண்ட் வெச்சுக்க சொல்வார். அப்புறம் அந்த அக்கவுண்ட் நோட்ட.... உங்களுக்கே தெரியும் [இதே மாதிரி ஒரு முறை காலேஜ் படிக்கற காலத்துல அக்கவுண்ட் எழுதி வெச்சுட்டு கடைசில அந்த நோட்ட கிணத்துல தூக்கி போட்டுட்டாரு ]

@கே.கே, //ஷ்யாம், அந்த டயலாக்க முழுசா சொல்லுங்க// இன்னும் ஒரு 4 நாள் வெயிட் பண்ணுங்க

நான் : //கண்ணு தெரியலை// யப்பா, சந்தோஷம்.. அப்போ இனிமே என் கமெண்ட படிச்சு பதில் போட மாட்டீங்க

@ஷ்யாம், //மீறி கேட்டா அக்கவுண்ட் வெச்சுக்க சொல்வார். அப்புறம் அந்த அக்கவுண்ட் நோட்ட// அவரே கேடி. அவருக்கு நீங்க எடுத்து வேற குடுக்கறீங்களாக்கும்?

//இன்னும் ஒரு 4 நாள் வெயிட் பண்ணுங்க// கே.கே. நல்ல புள்ள.. இன்னும் 2 நாள்ல இதைப்பத்தி மறந்துடுவாராம்

***************************************************

அப்புறம் என்னங்க.. அவர் அடுத்த பதிவ போட்டுட்டாரு.. அதுல கும்மி அடிக்க ஆரம்பிச்சிட்டோம் :))
மேலும் வாசிக்க...

Saturday, November 24, 2007

விதிவிலக்காய் ஒரு பதிவு

நாம என்னைக்கு விதிகள மீறாம நடந்திருக்கோம்? அதனால இங்கயும் ரூல்ஸ ப்ரேக் பண்றதுன்னு முடிவு பண்ணியாச்சு. தமிழ் பதிவுகளுக்கு மட்டும் தான் இடுகைகள் குடுக்கனுமா என்ன? நாங்க தங்கிலீஷ் பதிவுக்கும் குடுப்போமில்ல. தங்கிலீஷ் பதிவுகள்ல இன்னிக்கு ஸ்பெஷல் கலாய்த்தல். நம்ம மக்கள் மத்த ப்ளாக் மக்கள கலாய்ச்சு போட்ட பதிவுகள். அதுல 1-2 தமிழ் பதிவும் வரும். கண்டுக்காதீங்க. இப்போ பதிவுகளுக்கு போகலாமா?

* முதல்ல நாட்டாமை பதிவுல இருந்து ஆரம்பிப்போம். நம்ம ப்ளாக் உலக சிங்கங்கள் எல்லாம் சேந்து பாங்க்ல கொள்ளை அடிக்க போனா எப்படி இருக்கும்?

* ஒரு ப்ளாக்கர் மீட்டுக்கு கூப்டா, புள்ள வந்து ரொம்ப அமைதியா ஒக்காந்திருந்துட்டு சமத்தா வீட்டுக்கு போயிடுச்சு. வீட்டுக்கு போனதும் எல்லாரையும் கலாய்ச்சு பதிவ போட்டுட்டு, இப்ப சொல்லுங்க யாரு அமைதின்னு கேள்வி வேற கேக்ககுது :((

* இன்னொரு மீட்டு & இன்னொரு பதிவு

* நம்ம ப்ளாக் மக்கள் எல்லாம் காணாம போயிட்டா எப்படி விளம்பரம் வரும்னு இங்கன பாருங்க

* கந்தன் கருணை ரீமிக்ஸ்

* இதுக்கு முந்தின பதிவோட கமெண்ட்ல நாங்க மூனு பேர் அடிச்ச கும்மிக்கு பதில் சொல்ல முடியாம பழிவாங்கும் படலமா போடப்பட்ட பதிவு

* முட்டாள்கள் தின சிறப்பு பதிவு

* நான் ராம் நல்லவரா கெட்டவரான்னு கேட்டு போட்ட 2 வரி பதிவுக்கு 120 கமெண்ட் வந்தத பாத்து டென்ஷன் ஆகி என்ன ஓட்றதுக்குனு போட்ட பதிவு. கடைசில என் ப்ளாக்குக்கு சூப்பர் விளம்பரமா மாறிடுச்சு :))

* நம்ம பக்கா தமிழன கலாய்ச்சு ஒரு பதிவு

* என் பொறந்தநாளுக்கு பாரபட்சமில்லாம எல்லாரையும் கலாய்த்த என் குருவோட பதிவு

இவங்க மட்டும் தான் கலாய்ப்பாங்களா என்ன? நாங்களும் கலாய்ப்போமில்ல.

* எதிர் கட்சி மக்கள் அவங்க பொறந்தநாள கொண்டாடின அனுபவம் - ஜில்லுனு ஒரு கலாட்டா

* இன்னொரு முறையும் கலாய்ப்போமில்ல :))
மேலும் வாசிக்க...

Friday, November 23, 2007

கூட்டாஞ்சோறு

:)) தலைப்ப பாத்தே புரிஞ்சிருப்பீங்க. இது நான் ரசித்த, பலரின் கைவண்ணத்தில் உருவான பதிவுகளின் தொகுப்பு.

* பொற்கொடி தன் வாழ்வில் தான் சந்தித்த வித்தியாசமான மனிதர்களைப் பற்றி நம்முடன் பகிர்கிறார். பகுதி 1 - பீட்டர் பகுதி 2 - சீதா

* தன்னுடன் இல்லாத நண்பனுக்காய் பொற்கொடி எழுதிய பிறந்தநாள் வாழ்த்து

* வெறும் படம் போட்டே கதை சொல்லும் ட்ரீம்ஸ்

* ஒரு பார்ட்டியில் தான் சந்தித்த மக்களையும் அவர்களின் உரையாடல்களையும் பற்றி மனிதரில் எத்தனை நிறங்கள் பதிவில் பகிர்கிறார் ப்ரியா

* வீட்டில் உள்ள ஆண்களுக்கு சமையல் போட்டி வைத்த ஆப்பு வாங்கிய சுவாரசியமான அனுபவம்

* தன் தந்தையின் பிறந்தநாளன்று அவரைப்பற்றி பதிவிட்டு வாழ்த்தியது

* இயற்கையா? செயற்கையா? - கவிதை

* கைப்புள்ள இன் லேட்டஸ்ட் ரொமான்ஸ்

* தான் குடுத்த கிப்டுக்கும் அர்த்தம் சொல்லும் தங்கமணி

* கிறுக்கல்ஸ் - கவிதை

* எல்லாரும் கதை எழுதறாங்களே நானும் எழுதுவேன்னு புலிய பாத்து சூடு போட்டுக்கொண்ட பூனை

* இதுக்கு என்னன்னு இண்ட்ரோ குடுக்கறதுன்னு தெரியல :(

* தத்துவம்

* ஒரு கூட்டாஞ்சோறு பதிவு
மேலும் வாசிக்க...

Thursday, November 22, 2007

கவிச்சோலை

இன்னிக்கு பதிவு நான் ரசித்த கவிஞர்கள்/கவிதாயினிகள் தொகுப்பு. இந்த இனிய மாலை வேளையில் கவிச்சோலைல எல்லாரும் ஒரு உலா போயிட்டு வாங்க

முதல்ல நாம பாக்க போறது கன்யா பத்தி. இவங்களோட கதையை படிக்க சொல்லி கில்ஸ் அனுப்பினாரு. அது ரொம்ப பிடித்ததால அவங்க ப்ளாக்ல எட்டிப்பாத்தேன். அருமையான கவிதை தொகுப்புகள்

* எனக்கு பிடித்த அவங்களோட சுமங்கலி கதை ( மன்னிக்கனும். PDF file-அ எப்படி ஷேர் பண்றதுன்னு தெரியல. அதான் இப்படி படமா :( )
* இவங்களப்பத்தி இவங்களே எழுதிய கவிதை - நான்
* ஒரு குடும்பத்தலைவன் பார்வையில் ஒரு கவிதை
* கர்ணனைப் பற்றி ஒரு கவிதை
* ஹைக்கூ தொகுப்புகள் - தொகுப்பு 1 தொகுப்பு 2

அடுத்து நாம பாக்க போறது ப்ளாக் உலக தபுசங்கர். சும்மா அவ்ளோ காதல் கவிதையா கொட்டுவாரு.

* தேவதை ஊர்வலம் - இது ஒரு தொடர் மாதிரி இந்த தலைப்புல கவிதையா கொட்றாரு. இந்த கவிதைத்தொகுப்பின் ஸ்பெஷாலிட்டி கவிதையுடன் தேவதைகளின் படங்களும் ஊர்வலத்தில் உண்டு.
* காதல் தீ
* விண்மீனாய்..
* விழியோரமாய்
* வாழ்க்கை கவிதை

பூக்கள் உலகின் அரசி ராஜியின் கைவண்ணத்தில் கவிதைகள் நாலு வரில இருந்தாலும் சும்மா நச்சுன்னு இருக்கும்.

* சிறகுகள்
* தேய்பிறை-தேயும்பிறை
* என் உலகம்
* படக்கவிதை
* உன் நினைவுகள்
* நீயும்.. நீயாகிய நானும்..
* அலைகள்
* மழைத்துளி

போன பதிவுல கடல்கணேசனோட காமெடி பதிவுகள் பாத்தீங்க. அவர் உருகி உருகி எழுதிய கவிதைத்தொகுப்பு இங்கே.

* என்ன வேண்டும் உனக்கு
* உனக்காகவே நான்
* நீதான்
மேலும் வாசிக்க...

Wednesday, November 21, 2007

சிரிப்பு விருந்து

நகைச்சுவை பதிவுன்னு சொன்னாலே முதல்ல ஞாபகம் வர்றது நம்ம அருண் தான். அவரோட சில பதிவுகள் இங்க உங்களுக்காக

* பனிச்சறுக்கு விளையாட போயிட்டு கோச் சொல்லிக்குட்த்தத கவனிக்காம அங்க இருந்த பிகருங்கள பாத்து சைட் அடிச்சுட்டு கடைசில மாட்டின பூட்ஸ் காலோட உருண்டு புரண்டு வழுக்கி சறுக்கி ஒரு வழியான கதை.

* பொது விழாக்களுக்கு போகும் போது உங்கள் மனைவியை கூட்டிட்டு போகாதீங்கன்னு சொல்லி அதுக்கு காரணத்தையும் சொல்ற பதிவு

* திருவிளையாடல் ஆரம்பம் படத்த பாத்து நொந்து நூடுல்ஸ் ஆகி அவர் போட்ட புலம்பல் பதிவு (புலம்பும்போது கூட நக்கலா புலம்ப இவங்களாலத்தான் முடியும் போல :)) )

* நீங்க சமைக்கும் போது அது தீஞ்சு போயிட்டா என்ன பண்ணுவீங்க? தலைவிதியேன்னு கஷ்டப்பட்டு சாப்பிடுவீங்க இல்லாட்டி தூக்கி குப்பைல போடுவீங்க தானே. இங்க இவர பாருங்க. கத்திரிக்காய தீச்சது மட்டிமில்லாம, அதை பத்தி ஒரு பதிவு, கவுஜ, இது மூலமா தெரிஞ்சிக்கிட்ட தத்துவம்னு ஒரு கலக்கு கலக்கறாரு.

* இது எல்லாத்தையும் விட பெஸ்டுன்னு சொல்லனும்னா இவரு நண்பர வழியனுப்ப இவரு போட்ட இந்த பதிவு தான். என்ன ஸ்பெஷல்ன்னு நீங்களே படிச்சு தெரிஞ்சிக்கோங்க :)


அடுத்து நான் சொல்லப்போறது நம்ம சிங்கம் ஏஸோட பதிவுகள பத்தி. பாவம் அவரும் வந்ததுல இருந்து எல்லாரும் என்ன கொடுமை இதுன்னு அவர பாத்தே கேக்கறதால சரவணன்ற பேர ஏஸ்னு மாத்தினாரு. அப்பவும் விடாம என்ன கொடுமை இது ஏஸ்னு கேட்க அவரும் பேர ஐ ஆம் நாட் ஏஸ் னு மாத்தினாரு. அப்பவும் யாரும் விடலன்னு கடைசில சிங்கம்லே ஏஸ்னு பேர மாத்திட்டு சிங்கம் மாதிரியே அவர் ப்ளாக்கையும் இப்போ தூங்க விட்டுட்டாரு. அவரோட பதிவுகள்ல சிலது உங்களுக்காக

* திருவிளையாடல் படத்துல, சொக்கன் - நக்கீரர் விளையாட்டுல சொக்கனுக்கு ப்ராக்ஸியா போன தருமி பாட்டு தப்புன்னதும் புலம்பின புலம்பல எல்லாரும் பாத்திருப்பீங்க. அதே டேமேஜர் குடுத்த பக் (bug) இருக்கற சாப்ட்வேரோட கிளையண்ட் கிட்ட மாட்டிக்கிட்டு இவரு புலம்பறத பாருங்க.

* "உடம்புக்கு வந்தால் புலம்புவோம். சுஜாதா போன்ற சிலர் மருத்துவம்+அறிவியல் தகவல் கொடுத்து ஆன்ஜியோகிராம் எல்லாம் விளக்கலாம். இவரோ, கலக்கலாய் ரீடர்ஸ் டைஜஸ்ட் கட்டுரை படித்த ஞாபகம், அமெரிக்க மருத்துவமனையின் எமர்ஜென்சி முறை, என்று அவரின் கஷ்டத்தை நகைச்சுவையாக சிரிக்க வைத்து பகிர்கிறார். என்னமா எழுதறார்…" - இது கில்லில இந்த பதிவ பத்தி வந்த விமர்சனம் :)

* இவரு கல்லூரில படிக்கும் போது நிஜமாவே சிங்கமா இருந்த கதைய இங்கன படிங்க. கடைசில கமெண்ட் போட சோம்பல் படறவங்களுக்காக இவரே 2 சாய்ஸ் குடுத்து ஏதாவது ஒன்ன காப்பி போஸ்ட் பண்ணிட்டு போங்கன்னு வேற சொல்றாரு :))

* திருவிளையாடல் ரீமிக்ஸ் பாத்தீங்க. பராசக்தி ரீமிக்ஸ் பாக்காம விடலாமா?? (இந்த பதிவ இவர் போட காரணம் அதுக்கு முன்னாடி யாஹூ காண்பரன்ஸ்ல அவரையும் சேத்து ஒரு 10 பேர் கும்மு கும்முனு கும்மினது தான் :) )


அடுத்து நாம பாக்க போறது திரு.கடல் கணேசன் அவர்களோட பதிவுகள. இவரோட சீரியஸ் பதிவுகள பத்தி நம்ம தங்கச்சிக்கா போன வாரம் சொல்லி இருந்தாங்க. ஆனா அவரோட நகைச்சுவை பதிவுகளும் ரொம்ப அருமையா இருக்கும். ஒரு காலத்துல புதன்கிழமைனா எங்கள ஏமாத்தற பதிவா போட்டு பல வாரங்கள் வாசகர்களை ஏமாற்றியவர்.

* ரோஸியும் என் திருமண நாளும்னு இவர் போட்ட பதிவு (ரோஸி அவருடைய கற்றது கடலளவு தொடரில் வரும் ஓர் உண்மை கதாபாத்திரம். அதனால அநியாயத்துக்கு நிறைய பேர் ஏமாற்றப்பட்டார்கள் இந்த பதிவில் :) )

* தமிழின் டாப் டென் வலைப்பதிவர்கள் பற்றி ஒரு பதிவு (இந்த பதிவில் பின்னூட்டங்களை மறக்காமல் படித்து பாருங்கள் :) )

* என் இனிய லாப்டாப் என்று அவர் லாப்டாப்பை பற்றி அவர் கண்ட கனவு

* கடைசியாக அவருடைய காதல் கோட்டை கதை


இந்த தலைப்புல இன்னும் நிறைய இடுகைகள் கைவசம் இருக்கு. முடிந்தால் இன்னொரு நாள் அதை எல்லாம் பதிவிடுகிறேன் :)
மேலும் வாசிக்க...

Tuesday, November 20, 2007

வலைப்பதிவில் பாடகர்கள்

இந்த தலைப்புல நான் எழுதனும்னு ஆசைப்பட்டதுக்கு காரணம் எங்க குரூப்ல இருக்கற சூப்பர் ஜோடி கிட்டு மாமா & மாமி தான். இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பாடினா கச்சேரி சும்மா சூப்பரா களைகட்டும்.

இவங்க பாடின டூயட்ல எனக்கு ரொம்ப பிடித்தது நறுமுகையே . பின்னனி இசை இல்லாம கூட இவங்க கலக்கி இருப்பாங்க.

காதலர்கள் தின சிறப்பு விருந்தா இவங்க பதிவிட்ட மலர்களே மலர்களே பாட்டும் அசத்தலா இருக்கும்.

இவரே பாடல் வரி எழுதி மெட்டு போட்டு பாடிய பாடல் இங்கே.

இவங்களோட பாடல் தேர்வே கலக்கலா இருக்கும். மற்ற பாடல்களை இங்க போய் ஒரு எட்டு கேட்டுட்டு வாங்க.

எங்க கிட்டு மாமாவோட இன்னொரு ஸ்பெஷாலிட்டி அவரோட குறள். 2 லைன் குறளுக்கு html லிங்க எல்லாம் குடுத்தா கொஞ்சம் ஓவரா இருக்கும். அதனால இங்கயே சாம்பிளுக்கு சிலது குடுக்கறேன்.

துன்பங்களைக் கண்டு கலங்காதவனைத் தொடரும்
துன்பங்கள் துன்பப்பட் டழிந்துவிடும்

பொருளடக்கம் : இடுக்கண் அழியாமை


இப்படி சீரியஸா மட்டும் தான் எழுதுவாருன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. காமெடியும் கலந்தே குடுப்பாரு.

கஷ்ட்டப்பட்டு ஆணிபுடுங்கியதை மதிக்காத மேனேஜர்களை
கோணியிலிட்டு கும்முவதே சிறப்பு

பொருளடக்கம் : கள்ளிப்பால்

கண்சிமிட்டும் நேரம் இதயம் சிமிட்டுகிறதடி
ஒருவினாடியுன்னை பார்க்க முடியாதென்று

பொருளடக்கம் : ஐஸ் கட்டி பால்

குறள்ல பொருளடக்கத்த கவனிச்சீங்களா? அதுலயும் இவரோட குசும்பு எக்கச்சக்கமா இருக்கும் :) மற்ற குறள்களையும் படிக்க...

இவரோட திறமை இதோட முடியலைங்க. இன்னும் கதை, கவிதை, விமர்சனம், கலாட்டான்னு இவர் விட்டு வைக்காத சப்ஜெக்டே இல்ல. நேரம் கிடைக்கும்போது அவர் வலைப்பூல பழச எல்லாம் எட்டிப்பாருங்க.



*******************

அழகான குரல்வளம் கொண்ட இன்னொரு வலைப்பதிவர் நம்ம மருதம். அவங்களோட வலைப்பூவ நானும் ரொம்ப படிச்சதில்ல. ஆனா அவங்க பாட்ட கண்டிப்பா மிஸ் பண்ண மாட்டேன். நீங்களும் கேட்டு ரசிக்க இங்குட்டு போயிட்டு வாங்க.



*******************

அடுத்து நாம கேட்கப் போற குரல் கே.கே.வோடது . இந்த பாட்டு இவருக்கு ரொம்ப பிடித்த பாட்டாம். படம் வர்றதுக்கு முன்னாடியே இந்த பாட்ட பல முறை கேட்டு ரொம்ப ஆர்வமா படத்தோட ரிலீஸ்க்கு காத்திருந்தவரு, படம் வந்ததும் இந்த பாடல் படமாக்க பட்டிருந்த விதத்தை பாத்து ரொம்ப கடுப்பாகிட்டாரு. இந்த பாட்டு எப்படி படமாக்கலாம்னு அவரு கற்பனை பண்ணி எழுதியிருப்பாரு (மன்னிச்சிக்கோங்க. பதிவு ஆங்கிலத்துல இருக்கும்). அதோட நிறுத்தினாரா இவரு? இவன் எடுத்த காட்சிக்கு ஏ.ஆர். ரஹ்மான் பாடினதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி. நான் பாடறதே போதும்னு அவரு பாடி அதையும் அந்த பதிவோட சேத்திருப்பாரு பாருங்க... வாய்ப்பே இல்ல. இந்த பதிவு வந்த காலத்துல இந்த பாட்ட கேட்டு வயிறு வலிக்கற அளவுக்கு சிரிச்சிருக்கேன் நான். (தங்கிலீஷ் படிக்க கஷ்டமில்லன்னா அந்த பதிவோட பின்னூட்டத்த படிச்சு பாருங்க. சும்மா குசும்பன் சொல்ற மாதிரி கலாய் கலாய்ன்னு கலக்கலா கலாய்ச்சிருப்போம் :)) )

இவர் பாடினதுல எனக்கு பிடித்தவை ராஜ ராஜ சோழன் நான் & கண்ணே கலைமானே

இன்னிக்கு இம்புட்டுத்தானுங்க :)
மேலும் வாசிக்க...

Monday, November 19, 2007

நன்றி!!

ஹி..ஹி... ஆரம்பமே நன்றியான்னு ஆச்சர்யப்படறவங்களுக்கு, இது போனவாரம் வலைச்சர ஆசிரியரா இருந்த தங்கச்சிக்காவுக்கு இந்த வார வலைச்சர ஆசிரியராகிய நான் கூறும் நன்றி. எங்க தங்கச்சிக்கா ஒரு வாரமா வலைச்சரத்த சும்மா அதிரவெச்சிட்டாங்க இல்ல. இவங்க இத்தனை நாள் எல்லா பதிவுக்கும் போய் வெறுமனே மீ த பர்ஸ்டுன்னு கமெண்ட் போட்டுட்டு பதிவ படிக்காமலே கும்மி அடிச்சிட்டு வருவாங்கன்னு நினைச்சிட்டிருந்தவங்களுக்கெல்லாம் அதிர்ச்சி தர்ற மாதிரி சரவெடியா கொளுத்திட்டாங்க இல்ல. தங்கச்சிக்கா, உங்க புண்ணியத்துல நானும் வலைச்சர வாசகர்களும் நிறைய நல்ல பதிவுகளை தெரிஞ்சிக்கிட்டோம். எங்கள் எல்லோரின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள்.

போன பதிவுல நீங்க எல்லாரும் குடுத்த அமர்க்களமான வரவேற்புக்கும், அறிமுகப்பதிவு போட்ட தங்கச்சிக்காவுக்கும், என்னை வலைச்சரம் எழுத அழைத்த வலைச்சர ஆசிரியர்களுக்கும் சிறப்பு நன்றிகள் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என்னை வலைச்சரம் எழுத கூப்பிட்டப்ப எனக்கு கொஞ்சம் ஆச்சர்யமா இருந்தது. ஏன்னா இதுக்கு முன்னாடி இந்த பக்கம் நான் வந்தது மிகவும் அரிதாகத்தான். அப்படி இருக்கும்போது என்னை எல்லாம் கூப்பிடறாங்களே. யாரையுமே தெரியாத இடத்துல போய் நாம என்ன பண்ண போறோம்னு ஒரு தயக்கம் (பயம்ன்னெல்லாம் படிக்கபுடாது சொல்லிட்டேன்). அப்புறம் நம்ம தங்கச்சிக்காவும் முத்துக்காவும் தான் அதெல்லாம் ஒன்னும் இல்ல. சும்மா நீ படிச்ச, ரசிச்ச பதிவுகளோட இடுகைகளை குடுத்தா போதும்னு சொன்னாங்க. ஆஹா. இது வெறுமனே கடை தேங்காய எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைக்கற கதை தான் போல. இதை நான் நல்லாவே செய்வேனேன்னு நானும் களத்துல குதிச்சிட்டேன். நல்ல தேங்காயான்னு நீங்க தான் சொல்லனும். (உங்களை எல்லாம் கடவுள்னு சொல்லியிருக்கேன்.. இந்த ஐஸுக்காவது கொஞ்சம் பலன் இருக்கான்னு பாப்போம் :)) )

என்ன பத்தி சொல்லனும்னா நான் வலையுலகத்துக்கு வந்தது ஆபீஸ்ல இருக்கற வெட்டியான நேரத்தை போக்கதான். நேரத்தை போக்க வலைப்பூக்குள்ள எப்படி நுழைஞ்சேங்கற அரிய வரலாற்றை இங்க பதிவிட்டிருக்கேன். படிச்சிக்கோங்க. இப்படியாக வலைப்பூவத் திறந்தப்புறம் எப்ப எல்லாம் எனக்கு போர் அடிக்குதோ அப்போ ஏதாவது ஃபார்வர்ட் மெயில்ல இருந்து படம்/ கவிதைன்னு சுட்டு பதிவா போட்டுட்டு எல்லாருக்கும் ஒரு மின்னஞ்சல் தட்டி புது பதிவு போட்டுட்டேன்னு சொல்லுவேன். வெட்டியா இருக்கறவங்க யாராவது வந்து இதெல்லாம் ஒரு பதிவான்னு துப்ப ஆரம்பிப்பாங்க. மாட்னான்யா ஒருத்தன்னு நானும் அவங்களோட கமெண்ட்ல கும்மி அடிக்க ஆரம்பிச்சுடுவேன் :) எப்பவுமே இப்படி சுட்ட பதிவாவே போடறதால G3 = சுடறதுன்னு புது அகராதியே போட்டுபுட்டாய்ங்க பதிவுலகத்துல. பதிவுலக வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்னு நானும் ப்ரீயா விட்டுட்டேன் :)

ஒன்னுமே உருப்படியா எழுதலைன்னாலும் இவ்ளோ நாள் நான் இந்த வலையுலகத்துல இருக்க காரணம் என் வலையுலக நண்பர்கள் தான். அவங்கள்ல சில பேரையும் அவங்களோட பதிவுகளையும் தான் உங்களுக்கு இந்த வாரத்துல நான் அறிமுகப்படுத்த போறேன். குடுக்கப்பட்டிருக்கும் நேரம் குறைவுங்கறதால எல்லா பதிவுகளையும் திரட்ட முடியுமான்னு தெரியல. அதனால தமிழ்மணத்துல இல்லாத மக்கள பத்தி மட்டும் எழுதலாம்னு இருக்கேன். உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

என்றும் நட்புடன்,
ஜி3.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது