07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, November 22, 2007

கவிச்சோலை

இன்னிக்கு பதிவு நான் ரசித்த கவிஞர்கள்/கவிதாயினிகள் தொகுப்பு. இந்த இனிய மாலை வேளையில் கவிச்சோலைல எல்லாரும் ஒரு உலா போயிட்டு வாங்க

முதல்ல நாம பாக்க போறது கன்யா பத்தி. இவங்களோட கதையை படிக்க சொல்லி கில்ஸ் அனுப்பினாரு. அது ரொம்ப பிடித்ததால அவங்க ப்ளாக்ல எட்டிப்பாத்தேன். அருமையான கவிதை தொகுப்புகள்

* எனக்கு பிடித்த அவங்களோட சுமங்கலி கதை ( மன்னிக்கனும். PDF file-அ எப்படி ஷேர் பண்றதுன்னு தெரியல. அதான் இப்படி படமா :( )
* இவங்களப்பத்தி இவங்களே எழுதிய கவிதை - நான்
* ஒரு குடும்பத்தலைவன் பார்வையில் ஒரு கவிதை
* கர்ணனைப் பற்றி ஒரு கவிதை
* ஹைக்கூ தொகுப்புகள் - தொகுப்பு 1 தொகுப்பு 2

அடுத்து நாம பாக்க போறது ப்ளாக் உலக தபுசங்கர். சும்மா அவ்ளோ காதல் கவிதையா கொட்டுவாரு.

* தேவதை ஊர்வலம் - இது ஒரு தொடர் மாதிரி இந்த தலைப்புல கவிதையா கொட்றாரு. இந்த கவிதைத்தொகுப்பின் ஸ்பெஷாலிட்டி கவிதையுடன் தேவதைகளின் படங்களும் ஊர்வலத்தில் உண்டு.
* காதல் தீ
* விண்மீனாய்..
* விழியோரமாய்
* வாழ்க்கை கவிதை

பூக்கள் உலகின் அரசி ராஜியின் கைவண்ணத்தில் கவிதைகள் நாலு வரில இருந்தாலும் சும்மா நச்சுன்னு இருக்கும்.

* சிறகுகள்
* தேய்பிறை-தேயும்பிறை
* என் உலகம்
* படக்கவிதை
* உன் நினைவுகள்
* நீயும்.. நீயாகிய நானும்..
* அலைகள்
* மழைத்துளி

போன பதிவுல கடல்கணேசனோட காமெடி பதிவுகள் பாத்தீங்க. அவர் உருகி உருகி எழுதிய கவிதைத்தொகுப்பு இங்கே.

* என்ன வேண்டும் உனக்கு
* உனக்காகவே நான்
* நீதான்

14 comments:

 1. மொத கமெண்ட்டையும் நானே போட்டுகிற்றேன்! இது மொத தான??

  ReplyDelete
 2. @ட்ரீம்ஸ்

  முதல் கமெண்ட் உன்னோடது தான் :D

  ReplyDelete
 3. @வேதா

  வாங்க குருவே.. மொத கமெண்ட்ட விட்டுட்டீங்க :)

  //கன்யா இனிமே தான் படிச்சு பார்க்கனும் :)//
  பரவாயில்ல. நீங்க படிக்காதவங்கள்ல ஒருத்தராவது இருக்காங்களே. அந்த கதையும் படிச்சுட்டு எப்படின்னு சொல்லுங்க :)

  ReplyDelete
 4. கன்யா ஓன்லி மிஸ்சிங்....படிக்கிறேன் ;)

  ReplyDelete
 5. @கோபி,

  படிச்சுப்பாருங்க. அநியாயத்துக்கு சீரியஸா எழுதுவாங்க :)

  ReplyDelete
 6. //
  G3 said...
  @கோபி,

  படிச்சுப்பாருங்க. அநியாயத்துக்கு சீரியஸா எழுதுவாங்க :)
  //
  warning??

  ReplyDelete
 7. //
  Dreamzz said...
  மொத கமெண்ட்டையும் நானே போட்டுகிற்றேன்! இது மொத தான??
  //
  :):):):):)

  ReplyDelete
 8. பரவாயில்லையே.. புதுசு புதுசா வலைவீடுகளை தெரிஞ்சிக்கிறதுக்கு கூகுளாண்டடவர்கிட்ட போகவேண்டியதில்லை போல... வகை வாரியா இங்கயே தெரிஞ்சிக்கலாம்.
  நல்ல தொகுப்பு.. உபயோகமா இருக்குங்க எல்லா சுட்டிகளும்.

  ReplyDelete
 9. @சிவா

  ஹி..ஹி.. எல்லாம் ஒரு பில்ட் அப் தான் :)

  ReplyDelete
 10. @ரசிகன்,

  ஆஹா.. புது பதிவர்கள தெரிஞ்சிக்க நீங்க கூகிள் ஆண்டவர் கிட்ட எல்லாம் போவீங்களா? நான் ஏதாவது ப்ளாக்ல புதுசா யாராவது நக்கலா கமெண்டி இருந்தா அவங்க யாருன்னு எட்டி பாப்பேன். மத்தபடி நண்பர்களோட நண்பர்கள்னு அறிமுகமாகறவங்க தான் எல்லாரும் :)

  ReplyDelete
 11. //
  G3 said...
  @சிவா

  ஹி..ஹி.. எல்லாம் ஒரு பில்ட் அப் தான் :)
  //
  பொழைப்பே அப்பிடித்தானே ஓடிகிட்டிருக்கு தனியா வேற சொல்லனுமா???

  ReplyDelete
 12. @சிவா

  //பொழைப்பே அப்பிடித்தானே ஓடிகிட்டிருக்கு தனியா வேற சொல்லனுமா???//

  ஹி..ஹி.. இதெல்லாம் கண்டுக்கப்புடாது :)

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் ஜி3. இன்னிக்குதான் உங்கள் வலைச்சர பதிவுகள் பக்கம் பார்த்தேன்.
  நீங்கள் நினைவுபடுத்தியதைப் பார்த்தபின் தான் எனக்கே என்னுடைய புதன்கிழமை 'ஏமாற்றும் பதிவுகள்' நினைவுக்கு வந்தன. :-).

  தாரிணி(ஐஸ்கிரீம்) எழுத்துக்களையும் கவிதைன்னு சொன்னதுக்கு மிக்க நன்றி.

  மீண்டும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. @கடல்கணேசன்

  நன்றிங்க கணேசன் :)

  //நீங்கள் நினைவுபடுத்தியதைப் பார்த்தபின் தான் எனக்கே என்னுடைய புதன்கிழமை 'ஏமாற்றும் பதிவுகள்' நினைவுக்கு வந்தன. :-)//

  ஹி..ஹி.. அதெல்லாம் மறக்க முடியுமா? மொத கமெண்ட் போட எம்புட்டு போட்டி போட்டிருப்போம் :)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது