07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, November 17, 2007

புதுசு கண்ணா புதுசு..

சில பதிவர்கள் வலைபதிய ஆரம்பித்து சில பதிவுகளிலேயே பல பேர் இதயங்களில் இடம் பிடித்துவிடுவார்கள். அது அவர்களின் எழுத்து திறனும், மற்றவர்களுடன் சகஜமாக பழகும் திறனும் காரணமாக இருக்கலாம்.

மற்ற சிலர் நன்றாக எழுதியிருந்தாலும் படித்து ஊக்கம் கொடுக்க ஆளில்லாமல் ஒரு கட்டத்தில் அவர்கள் தங்களுடைய வலையை பூட்டுப்போட்டு பூட்டிட்டு செல்ற நிலை கூட இருக்கும். ஊக்கமும், பாராட்டுக்களும் ஒருத்தருக்குள் தன்னம்பிக்கை வளர்ப்பதில் பெரிய பங்கு வகிக்கிறது.

என்னுடைய ஆரம்பக்காலத்தில் கிடைத்த ஊக்கங்களால்தான் இன்று இங்கே வலைச்சரம் ஆசிரியராக உட்கார்ந்திருக்க முடிந்திருக்கிறது. இன்று என்னுடைய பங்குக்கு ஒரு சில புதிய பதிவர்களை இங்கே கௌரவ படுத்த வேண்டும் என்று எழுதுகிறேன்.

புரியல.. தயவு செய்து விளக்கவும் என்று தலைப்பில் வலைப்பதிவை தொடங்கிய TBCDக்கு என்னத்தை விளக்குவது? அவர் சொல்லும் பல விஷயங்கள் எனக்கு புதிதாக இருக்கின்றது. அவர்தான் எனக்கு விளக்க வேண்டும். அரசியல் மற்றும் சமூக பதிவுகளில் மிகவும் ஈடுபாடு வைத்திருக்கும் இவர் பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டார். இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு வேலை சம்பந்தமாக வந்திருக்கும் இவர் எழுதிய தமிழன தமிழனே ஏசுறாண்டா தம்பி பயலே.. இது மாறுவது எப்போ தீருவது எப்போ நம்ம கவலை என்ற பதிவு என்னை மிகவும் கவர்ந்தது. சமீபத்தில் எழுதிய கற்றது தமிழின் விமர்சனமும் என்னை வெகுவாக கவர்ந்திருந்தது.

ரியாத்திலிருந்து வலைப்பதியும் அக்கா வித்யா கலைவாணி. களவானி எப்படி கலைவாணி ஆனாள் என்பதே ஒரு சுவாரஸ்யமான பதிவு. இப்போது வலைப்பதிவர்களுக்குள் கிரிக்கேட் போட்டி நடத்தி இப்போதெல்லாம் சீரியஸ் பதிவுகள் எழுத ஆரம்பிச்சுட்டார். உதாரணத்திற்கு ஏ.சி செய்யும் கொடுமைகள்.

அடுத்து எங்க நாட்டு காரர் ஒருத்தரோட அறிமுகம். பேராக் மாநிலத்துல இருந்து வலைப்பதிகிறார் விக்னேஷ்வரன் அடைக்கலம். ஒரு வருடம் வலையுலகில் இருந்தும் நான் சாதிக்காத பல விஷயங்களை குறுகிய காலத்தில் சாதித்திருக்கிறார் இந்த நண்பர். பொதுவாக இயற்கை, மற்றும் அறிவியலில் இவருக்கு நாட்டம் அதிகம். இவர் எழுதிய திருடியது யார்? என்ற சிறுகதை மலேசிய நாளிதழ் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டதுக்கு இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இப்பொழுது இவர் ஜில்லென்று ஒரு மலேசியாவிலும் இணைந்து மலேசிய வரலாறை மிக விறுவிறுப்பாக எழுதுகிறார்.

கோலங்கள் கோலங்கள் என்ற அசத்தல் பதிவு எழுதியவர் மங்களூர் சிவா. ஒரு நாளைக்கு 2-3 பதிவுகளையும் போட்டு எல்லா பதிவுகளில் கும்மியும் அடிக்கிறார். எங்கிருந்துதான் இவருக்கு அவ்வளவு நேரம் கிடைக்குதுன்னு தெரியவில்லை. சிவா, கொஞ்சம் எங்களுக்கும் சொல்லுங்களேன்.. இவருடைய Think Big என்ற வலைப்பூவையையும் படிக்கவும்.

அனுராதா என்ற பெயரை பார்த்தவுடனேயே, "ஆஹா, என் பெயரிலே ஒரு வலைப்பூ" என்று ஆர்வத்துடனும் சந்தோஷத்துடனும் சென்றேன். அங்குள்ள பதிவுகளை படித்ததும் எனக்கு மிஞ்சியது சோகம்தான். ஒரு கேன்சர் நோயாளி தன் அனுபவங்களையும் கேன்சருடன் நடத்தும் யுத்தத்தையும் பகிர்ந்துக்கொள்கிறார். ஒவ்வொன்றும் நரக வேதனை. ஆனாலும், இதை படிக்கும்போது நமக்கும் அந்த நோயைப் பற்றி பல உண்மைகள் தெரிய வருகிறது. இனி நம்மை சுற்றி யாருக்காவது அதே நோய் வந்தால் என்ன செய்யவேண்டும் என்று தெரிந்துக்கொள்ளலாம். அவர் குணமடைய இத்தருனத்தில் இறைவனை பிரார்த்திப்போமாக..

பாசக்கார குடும்பத்தில் சகோதரனாக இருக்கும் குட்டிப்பிசாசு @ அருண் சிவா வந்து புதுசுலேயே பல பேருடைய கவனத்தை ஈர்த்தவர். சிறிது காலமாய் வலைப்பக்கம் அவரை காணாவிட்டாலும் நகைச்சுவை மற்றும் சீரியஸ் பதிவுகளை அவ்வப்போது எழுதிக்கொண்டேதான் இருக்கிறார். பாசக்கார குடும்பம் என்ற தலைப்பில் எழுதிய அத்தனை பதிவுகளும் அருமையா அமைந்த பதிவுகள்: பாசக்கார முதவன் ரீமேக், நான் ரம் அடிக்கிற ஸ்டைல பார்த்து, பாசக்கார குடும்ப சுற்றுலா.

புதுசா வந்திருக்கேன் ஃபிரண்ட். வந்து என் பதிவையும் பாருங்கன்னு ரசிகன் கூப்பிட்டதும் நான் அங்கே போனேன். சும்மா சொல்ல கூடாதுங்க.. நான் மட்டும்தான் ஆரம்பக்காலத்திலிருந்து இப்போது வரைக்கும் தடுமாறிக்கிட்டு இருக்கேன். ஆனால், இவங்கெல்லாம் வரும்போதே ஸ்டெடியா வர்றாங்க. தீபாவளியா? தீபா "வலி"யா? படித்து பாருங்களேன்.

புதுசா வந்து கலக்கிக்கிட்டு இருக்கிற இன்னொருவர் பொடியன் அங்கிள். இந்த காலத்து குட்டீஸ்.. ஒரூ போட்டி மாதிரி பதிவில் அவர் எழுதிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. இதே போல் பல பதிவுகளை எழுத வாழ்த்துக்கள்.

புதுசு புதுசுன்னு சொல்லி இந்த பூவுலகின் புதுசாய் மலர்ந்த சின்ன குட்டிகளை அறிமுகப்படுத்தாமல் இருக்க முடியுமா?

கொஞ்ச நாளா எல்லா இடத்துலேயும் கும்மின்னா துண்டை விரிச்சு உட்கார்ந்திருக்கிற வள்ளல் நிலா குட்டி. இவ போடுற சில பின்னூட்டங்கள் நமக்கே கண்ணை கட்டுதுப்பா. (சில நேரம் இவளோட அப்பாவே இவ பேர்ல பின்னூட்டங்கள் போடுகிறார்..) அப்பப்போ புகைப்படங்களாய் போட்டிடுட்டிருந்த நிலா, இப்போது புதுசா அவளோட மொழின்னு சொல்லி பதிவெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டா.. (எழுதுறது அவ அப்பான்னு தெரிஞ்சாலும் குட்டி பொண்ணு எழுதுற மாதிரி நமக்கெல்லாம் ஒரு சந்தோஷம்.)

அடுத்து முக்கியமான ஒரு செல்லக்குட்டி.. என்னுடைய தம்பி.. பவன் கண்ணாதான். நாமெல்லாம் பள்ளிகூடத்துக்கு போய் கரெக்ட்டா அட்டெண்டன்ஸ் போடுறோமோ இல்லையோ.. ஆனால் என் தம்பி தினமும் மறக்காமல் அவனுடைய புகைப்படங்களை 2 வருடமா போட்டுட்டிருக்கான். உனக்கு இருக்கிற அந்த பொருப்புணர்ச்சி உன் அக்கா எனக்கில்லையே ராசா..

நான் வித்யா கலைவாணியின் மகன் என்ற வலைப்பதிவை திறந்துவிட்டு அதிரடியாய் களமிறங்கியிருக்கிறான் அப்ராஜித் என்ற கார்த்திக். அறிமுகத்துக்கு பிறகு எந்த பதிவும் போடலையா தம்பி?

இந்த மூன்று குட்டீஸ்களும் இனி வரும் குட்டீஸ்களும்தான நாளைய தலைமுறைகள். இப்போதிலிருந்தே இவர்களை ஊக்குவிப்போம்... வாருங்கள்..

16 comments:

 1. வந்துட்டேன்....

  ReplyDelete
 2. அடுத்து முக்கியமான ஒரு செல்லக்குட்டி.. என்னுடைய தம்பி.. பவன் கண்ணாதான். நாமெல்லாம் பள்ளிகூடத்துக்கு போய் கரெக்ட்டா அட்டெண்டன்ஸ் போடுறோமோ இல்லையோ.. ஆனால் என் தம்பி தினமும் மறக்காமல் அவனுடைய புகைப்படங்களை 2 வருடமா போட்டுட்டிருக்கான். உனக்கு இருக்கிற அந்த பொருப்புணர்ச்சி உன் அக்கா எனக்கில்லையே ராசா..

  ஆகா ஆகா ஆகா...என்ன இது...எதுனா உள் குத்து இருக்காக்கா...

  ReplyDelete
 3. //மற்ற சிலர் நன்றாக எழுதியிருந்தாலும் படித்து ஊக்கம் கொடுக்க ஆளில்லாமல் ஒரு கட்டத்தில் அவர்கள் தங்களுடைய வலையை பூட்டுப்போட்டு பூட்டிட்டு செல்ற நிலை கூட இருக்கும்.


  ஊக்கமும், பாராட்டுக்களும் ஒருத்தருக்குள் தன்னம்பிக்கை வளர்ப்பதில் பெரிய பங்கு வகிக்கிறது.//

  சரியாக சொன்னீர்கள்....

  ReplyDelete
 4. சோ.நீங்க என்ன சொல்ல வரீங்க..

  எல்லோரும் நல்ல "ஊக்கு"விக்கனுமின்னு சொல்லுறீங்க..

  ஊக்கு வாங்க..கொஞ்சம் பணம் கம்மியாகுதாம்.."அனு"ப்பி வைக்கவும்..

  :)

  ReplyDelete
 5. மிக்க நன்றி சகோதரி...

  ReplyDelete
 6. அக்கா அப்பாவ தனியா ஒரு ப்ளாக் ஆரம்பிக்க வெச்சு அங்க தொரத்தீட்டேன்.

  ReplyDelete
 7. சொல்ல மறந்துட்டேன், அக்காவுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 8. ஆஹா.. இப்பதேன் பாக்கறேன் ஃமைபிரண்டு.. ரொம்ப நன்றிகள்ப்பா.. ஆனாக்கா ஒரு உண்மைய சொல்லட்டுமா..
  பதிவுக்கு வர்ரத்துக்கு முன்னாடி உங்க பதிவெல்லாம் அடிக்கடி படிச்சதுனாலத்தேன் ..இப்ப கொஞ்சம் எளிமையா இருக்கு.. நெசமாத்தேன்.. அதுக்கு நாந்தேன் தாங்க்ஸ் சொல்லனுமுங்க..

  ReplyDelete
 9. @வித்யா கலைவாணி:

  //நன்றி :)
  //

  ஆஹா.. இன்னைக்கு தம்பியை நீங்க முந்திக்கிட்டீங்களா??

  ReplyDelete
 10. @Baby Pavan:

  //வந்துட்டேன்....//

  அட்டெண்டண்ச் எடுக்க டீச்சர் இன்னும் வரல. :-P


  //ஆகா ஆகா ஆகா...என்ன இது...எதுனா உள் குத்து இருக்காக்கா...//

  சத்தியமா இல்லடா ராசா. :-)

  ReplyDelete
 11. @ரங்கன்:

  //
  //ஊக்கமும், பாராட்டுக்களும் ஒருத்தருக்குள் தன்னம்பிக்கை வளர்ப்பதில் பெரிய பங்கு வகிக்கிறது.//

  சரியாக சொன்னீர்கள்....//

  நன்றி ரங்கன். :-)

  ReplyDelete
 12. @TBCD:

  //சோ.நீங்க என்ன சொல்ல வரீங்க..

  எல்லோரும் நல்ல "ஊக்கு"விக்கனுமின்னு சொல்லுறீங்க..

  ஊக்கு வாங்க..கொஞ்சம் பணம் கம்மியாகுதாம்.."அனு"ப்பி வைக்கவும்..

  :)//

  அணு குண்டைத்தான் ஊசியில கோர்த்து பினாங்குக்கு அனுப்பனும் போல. :-)))

  ReplyDelete
 13. @P.A.விக்னேஷ்வரன்:

  //மிக்க நன்றி சகோதரி...//

  :-)

  ReplyDelete
 14. @நிலா:

  //
  அக்கா அப்பாவ தனியா ஒரு ப்ளாக் ஆரம்பிக்க வெச்சு அங்க தொரத்தீட்டேன்.//

  ஹீஹீ.. நல்ல பொண்ணு. :-)

  //நிலா said...
  சொல்ல மறந்துட்டேன், அக்காவுக்கு மிக்க நன்றி
  //

  எதுக்குடா நன்றின்னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம்? :-)

  ReplyDelete
 15. @ரசிகன்:

  //ஆஹா.. இப்பதேன் பாக்கறேன் ஃமைபிரண்டு.. ரொம்ப நன்றிகள்ப்பா.. //

  :-)

  //ஆனாக்கா ஒரு உண்மைய சொல்லட்டுமா..//

  ஒன்னே ஒன்னுதானா??
  :-P

  ப//திவுக்கு வர்ரத்துக்கு முன்னாடி உங்க பதிவெல்லாம் அடிக்கடி படிச்சதுனாலத்தேன் ..இப்ப கொஞ்சம் எளிமையா இருக்கு.. நெசமாத்தேன்.. அதுக்கு நாந்தேன் தாங்க்ஸ் சொல்லனுமுங்க..//

  ஆஹா.. ஏற்கனவே மத்தவங்க பதிவையெல்லாம் படிச்சு ரசிச்சதனால்தான் ரசிககன்னு பேர் வச்சிக்கிட்டிங்களோ? :-)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது