07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, November 29, 2007

அசத்தல்ஸ் ஆப் சிங்கம்ஸ்

எங்க தல கைப்புள்ள இப்ப தான் புதுசா ஆப்பு வாங்குறார் என்று யாரும் தப்பா நினைச்சுக் கூடாது. அனைத்து ஆப்புகளையும் தனக்கே என வாங்க பிறந்த தியாக செம்மல். அந்த தியாக செம்மல் தன் இள வயதில் பெற்ற ஆப்பை காண... நல்ல ஒரு ஒளிமயமனா ஆப்பு இது.

கைப்புள்ள யின் - வச்சான்ய்யா ஆப்பு

சென்னையில் மழைக்காலம் எப்படி இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதை தன் வழக்கமான நகைச்சுவையில் சொல்கிறார் நம்ம தேவ், கிண்டாலாக சொன்னாலும் அதில் ஒரு சமூக கருத்தையும் வச்சு இருக்கார் நம்ம போர்வாள்.

தேவ் வின் - மனதோடு மழைக்காலம்

நம்ம தளபதியின் யின் டிபிக்கல் கைப்புள்ளையின் சங்கம் பிராண்ட் காமெடி

நாமக்கல் சிபி யின் - காமெடி வியாழன்

கல்யாணத்துக்கு தாலி எம்புட்டு முக்கியமோ அம்புட்டு முக்கியம் கல்யாண வீட்டில் சீட்டாட்டம் ஆடுவது. அதை நம்ம விவசாயி எப்படி சொல்லி இருக்காருனு பாருங்க. தலைப்புக்கு ஒரு தனி விளக்கமே கொடுத்து இருப்பார்.

இளா வின் - 3*(13*4)+6=0

நம்ம தம்பி கதிரு ஒரு நியாயமான கேள்வி கேட்குறான். ஆனா தலைப்பை பாத்துட்டு இது அவன் பண்ணிய கூத்து தானானு என்னையவே கேட்க கூடாது சொல்லிட்டேன்

தம்பி - தண்டவாளத்தில் ஒன்னுக்கு போனா தப்பா?

நாம் இலவசமாக பயன்படுத்திக் கொண்டு ப்ளாக்கருக்கு கட்டணம் வசூலிச்சா என்ன ஆகும். இப்படி தான் ஆகும் னு நம்ம வெட்டிக்காரு சொல்லுறாரு.

வெட்டிப்பயல் - என்னது இலவசம் இல்லையா?

நம்ம ராயல் மதுரக்கார பய னு நமக்கு எல்லாம் தெரியும். மதுரக்கார பசங்க வீரத்துக்கு சொல்லவா வேணும், அப்படி ஒரு வீர தீர சாகசம் தான் இந்த பதிவு

இராமின் - பேய், பிசாசு, ஆவீ

இன்றைய இளைஞர்களின் சார்பாக யுவதிகளிடம் ஜில்லுனு 5 சந்தேகங்களை முன் வைக்குறார் நம்ம ஜொள்ளின் ஜொள்ளன். எல்லாமே நியாயமான சந்தேகமாக தான் இருக்கு.

ஜொள்ளுப்பாண்டி யின் - ஜில்னு 5 டவுட்ஸ்

பள்ளி, கல்லூரியில் பசங்களை அப்பன், ஆத்தா வச்சு பெயரை வச்சு கூப்பிடுவதை விட பட்ட பெயர்களால் அழைக்கப்படுவர்கள் தான் அதிகம். அது போல சில பட்ட பெயர்களுக்கு விளக்கம் கூறும் நம் கயவன் கப்பியின் பதிவு.

கப்பிபய - பேர் சொல்லும் பிள்ளைகள்

பாக் நம்மை விட்டு பிரிந்ததால் நமக்கு ஏற்பட்ட பாதிப்பை விவரிக்கும் பதிவு. கொஞ்சம் பொறுமை தேவை. அப்புறம் என்ன திட்டக் கூடாது சொல்லிட்டேன்

நாகை சிவா வின் - பாக். பிரிந்ததால்

8 comments:

 1. ஏலேய் நீ இன்னும் அந்த நாயி மேட்டரை மறக்கலேயா??? இந்த பதிவை வைச்சி நீ போட்ட எதிர்பதிவுக்கு ஏன் யாரு ராசா லிங் தரலை??? :(

  ReplyDelete
 2. மறுக்க கூடிய நிகழ்வா அது? ;)

  அந்த பதிவு போட்டு சபையில் ஏன் அசிங்கப்படுத்துவானே என்று தான்...

  கூடவே, நீ மறுபடியும் முருங்கை மரம் ஏறிட்டேனா?

  ReplyDelete
 3. சிங்கங்களின் வண்டவாளங்களின் அருமையான தொகுப்பாகத் தெரிகிறதே :-)

  ReplyDelete
 4. \\நாகை சிவா said...
  மறுக்க கூடிய நிகழ்வா அது? ;)

  அந்த பதிவு போட்டு சபையில் ஏன் அசிங்கப்படுத்துவானே என்று தான்...

  கூடவே, நீ மறுபடியும் முருங்கை மரம் ஏறிட்டேனா?\\

  சகா எனக்கு மட்டும் அந்த லிங்கை கொடு ;-))

  ReplyDelete
 5. மார்க் பண்ணியாச்சு ம.சிவா

  ReplyDelete
 6. @ சேதுக்கா!

  வண்டவாளத்தை எல்லாம் அம்புட்டு சீக்கிரம் வெளியே விடுவோமா. இது சும்மா மேம்போக்கா உள்ளது தான் :)

  ReplyDelete
 7. @ கோபி!

  லிங்கை வாங்கி படிச்சுட்டியா இல்லையா ;)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது