07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, November 2, 2007

எதிர்ப்பாட்டு எக்ஸ்பிரஸ்

தமிழ் வலைப்பதிவை பொருத்தவரை முரண்பாடுகளின் மூட்டை என்றால் அது புனித பிம்பங்களும் அதனை கட்டமைக்கும் ஊடகங்களும் அந்த வகையில் அந்த புனித பிம்பங்களை உடைத்தெரியும் எல்லா பதிவுகளும் ஒரு அலையை ஒரு எதிர் விவாதத்துக்குறிய பொருளை நம்மிடையே தோற்றுவிக்கத் தவறுவதில்லை அந்த வகையில்...

அசுரனின் இந்த பதிவு இதுவரை பசும்பொன் மேல் இருந்த ஒரு மாதிரியான புனித பிம்பம் அசுரனின் வாதங்களுடன் என்னில் இருந்து மறைந்து போயின. தான் பின்னூட்டம் இடுவதையும் பதிவுகள் எழுதுவதையும் ஒரு போர்க்களம் போல் மிகக் கவனமாகவும் சிரத்தையோடும் எழுதுவது இவருக்கு நிகர் இவரே.

அதே போல டாக்டர். இராமதாஸ் பற்றி ஊடகங்கள் அடுக்கடுக்காய் வீசிய எல்லா மாய அடிகளையும் குழலியின் இந்த பதிவு புரட்டிப் போட்டது என்றால் மிகையாகாது.

அப்துல் கலாம்தான் அடுத்த ஜனாதிபதியாக தொடர வேண்டும் என ஊடக வெளிச்சத்தில் கிடந்த பழைய பஞ்சாங்கங்கள் தமிழ் சசியின் இந்த பதிவை படித்த உடன் கொஞ்சமாவது தனது எண்ணங்களை மாற்றிக் கொண்டிருக்கும்.

லக்கி லுக்கின் இந்த பதிவு தினமலர் ரமேஷ் பற்றி வந்த ஒரு மிகத் தெளிவான பதிவு. அவர்மேல் ஆயிரம் காரணங்களுக்காக லக்கிக்கும் கோபம் இருப்பினும் தன்மேல் அவர் காட்டிய அன்பை மிக அழகாக சொல்லியிருந்தார்.

மெல்கிப்சனின் படங்களை சலிக்காமல் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு தெகாவின் இந்த ஏன் இப்படிப் பதிவு கொஞ்சம் ஆச்சர்யம் கலந்த கேள்விகளை எழுப்பியது :) பதிவை விட பின்னூட்டங்கள் சூப்பரா இருக்கும்...

அதே போல ரஜினி நாசர் பற்றி சற்றுமுன்னில் வந்த இந்த பதிவுக்கு சன்னாசியும் செல்வனும் பின்னூட்டத்தில் விளாசிக் கொள்வதை படித்துப் பாருங்கள்

இன்றும் என் இடுகைகள் மிகத் தாமதமாக வருவதற்கு வலைச்சர ஆசிரியர் மன்னிக்க வேண்டுகிறேன் ஆரம்பிக்கும் போது சும்மாக் கிடந்த எனக்கு ஆரம்பித்த உடன் தலைக்கு மேல் வேலை :)

No comments:

Post a Comment

தமிழ் மணத்தில் - தற்பொழுது