07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, November 24, 2007

விதிவிலக்காய் ஒரு பதிவு

நாம என்னைக்கு விதிகள மீறாம நடந்திருக்கோம்? அதனால இங்கயும் ரூல்ஸ ப்ரேக் பண்றதுன்னு முடிவு பண்ணியாச்சு. தமிழ் பதிவுகளுக்கு மட்டும் தான் இடுகைகள் குடுக்கனுமா என்ன? நாங்க தங்கிலீஷ் பதிவுக்கும் குடுப்போமில்ல. தங்கிலீஷ் பதிவுகள்ல இன்னிக்கு ஸ்பெஷல் கலாய்த்தல். நம்ம மக்கள் மத்த ப்ளாக் மக்கள கலாய்ச்சு போட்ட பதிவுகள். அதுல 1-2 தமிழ் பதிவும் வரும். கண்டுக்காதீங்க. இப்போ பதிவுகளுக்கு போகலாமா?

* முதல்ல நாட்டாமை பதிவுல இருந்து ஆரம்பிப்போம். நம்ம ப்ளாக் உலக சிங்கங்கள் எல்லாம் சேந்து பாங்க்ல கொள்ளை அடிக்க போனா எப்படி இருக்கும்?

* ஒரு ப்ளாக்கர் மீட்டுக்கு கூப்டா, புள்ள வந்து ரொம்ப அமைதியா ஒக்காந்திருந்துட்டு சமத்தா வீட்டுக்கு போயிடுச்சு. வீட்டுக்கு போனதும் எல்லாரையும் கலாய்ச்சு பதிவ போட்டுட்டு, இப்ப சொல்லுங்க யாரு அமைதின்னு கேள்வி வேற கேக்ககுது :((

* இன்னொரு மீட்டு & இன்னொரு பதிவு

* நம்ம ப்ளாக் மக்கள் எல்லாம் காணாம போயிட்டா எப்படி விளம்பரம் வரும்னு இங்கன பாருங்க

* கந்தன் கருணை ரீமிக்ஸ்

* இதுக்கு முந்தின பதிவோட கமெண்ட்ல நாங்க மூனு பேர் அடிச்ச கும்மிக்கு பதில் சொல்ல முடியாம பழிவாங்கும் படலமா போடப்பட்ட பதிவு

* முட்டாள்கள் தின சிறப்பு பதிவு

* நான் ராம் நல்லவரா கெட்டவரான்னு கேட்டு போட்ட 2 வரி பதிவுக்கு 120 கமெண்ட் வந்தத பாத்து டென்ஷன் ஆகி என்ன ஓட்றதுக்குனு போட்ட பதிவு. கடைசில என் ப்ளாக்குக்கு சூப்பர் விளம்பரமா மாறிடுச்சு :))

* நம்ம பக்கா தமிழன கலாய்ச்சு ஒரு பதிவு

* என் பொறந்தநாளுக்கு பாரபட்சமில்லாம எல்லாரையும் கலாய்த்த என் குருவோட பதிவு

இவங்க மட்டும் தான் கலாய்ப்பாங்களா என்ன? நாங்களும் கலாய்ப்போமில்ல.

* எதிர் கட்சி மக்கள் அவங்க பொறந்தநாள கொண்டாடின அனுபவம் - ஜில்லுனு ஒரு கலாட்டா

* இன்னொரு முறையும் கலாய்ப்போமில்ல :))

11 comments:

 1. இங்கிலீஸே அரை குறை நான் இதுல தங்கிலீஸ் எனக்கு ரொம்ப கஷ்டமான விசயம் அது.:((

  முதல் லிங் தமிழில் இருப்பதல் படிச்சிட்டேன்.

  ReplyDelete
 2. // நம்ம மக்கள் மத்த ப்ளாக் மக்கள கலாய்ச்சு போட்ட பதிவுகள்.//

  ஆஹா.. இந்த மாதிரி குடுமிப்புடி சண்டைய பாக்கனுமின்னு ரொம்ப நாளா ஆசை...
  ஏலே..யாருப்பா அது.?. ஆபிஸுல ஒரு மணி நேரம் பர்மிஷன் சொல்லிடு...

  பதிவை படிச்சிப்புட்டு வர்ரேனுங்க ....

  ReplyDelete
 3. @வேதா,

  வாங்க குருவே வாங்க. ஆமா நாட்டாமை போனப்புறம் புளியோதரையும் போச்சு :(

  //ஏற்கனவே படிச்சது தான் இருந்தாலும் இன்னொரு முறை படிச்சு விவிசி :):)//
  :)) இது தானே எங்களுக்கு வேணும் :)

  ReplyDelete
 4. @குசும்பன்

  1,7,8,9,10,12 பதிவுகள் எல்லாம் தமிழ் தாங்க :)) [1/2 தமிழ் பதிவு இருக்கும்னு பாத்தா பரவாயில்லயே.. 6 பதிவு தமிழ்ல இருக்கு :)) ]

  ReplyDelete
 5. @ரசிகன்,

  ஆஹா.. இம்புட்டு நல்லவரா நீங்க? நல்லா படிச்சு என்சாய் பண்ணுங்க :)

  ReplyDelete
 6. //
  ரசிகன் said...

  ஆஹா.. இந்த மாதிரி குடுமிப்புடி சண்டைய பாக்கனுமின்னு ரொம்ப நாளா ஆசை...
  //
  ரிப்பீட்டேய்

  ReplyDelete
 7. @சிவா,

  யூ டூ??? :)

  ReplyDelete
 8. //
  G3 said...
  @சிவா,

  யூ டூ??? :)
  //
  யெஸ் G3 மீ டூ வெரி சாதாரண மனுஷன்.

  :-)))))))

  ReplyDelete
 9. @சிவா,

  :-)))))))))))

  ReplyDelete
 10. @கோபி

  என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல.. இருந்தாலும் ஒரு சிரிப்பான் போட்டுக்கறேன் :))

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது