07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, November 26, 2007

ரவுசு

ஒரு சில பதிவுகளை படிக்கும் போதே இவங்க ரவுசுக்கு ஒரு அளவே இல்லாம போய்கிட்டு இருக்கேனு நமக்கு தோணும். அது போல எனக்கு தோன்றிய சில பதிவுகள். மிஸ் பண்ணாம பாருங்க கண்டிப்பா நீங்களும் அது போல தான் பீல் பண்ணுவீங்க.

கப்பி பயலின் - நாகை சிவாவின் கட்டளைக்கிணங்க!!

கப்பியின் ஒரு பதிவுக்கு நான் இட்ட பின்னூட்டத்துக்கு எதிர்வினையா இந்த பதிவை உடனே போட்டார் நம்ம ஜாவா பாவலர். சரியான ரவுசாக இருந்தாலும் அவரை பின்னூட்டத்தில் கலாய்த்ததில் நான் என்ன சொன்னேனோ அதையே அவர் திரும்ப கூறியது தனிக் கதை. அது என்னனு நீங்களே பாருங்க.

இராமநாதனின் - காலம் மாறுகிறது - ஒரு கேள்வி

டாக்டரின் இந்த பதிவை படிச்ச பிறகு நாம் கவுண்டமணி நிலைமைக்கு மாறி எப்படிய்யா(டா) உனக்கு இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேட்க தோணுது? தோணும். ஞானப்பழத்துக்கு கொட்டை இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு சமம். அந்த கேள்விய நீங்களே என்னனு போய் பாருங்க.

நாமக்கல் சிபி - இன்றைய ஸ்பெஷல் (TMICT)

தமிழ்மணத்தில் போன வருடம் எதை எதை எப்படி செய்யனும் என்பதை பற்றி ஆள் மாத்தி ஆள் பதிவு போட்டங்க (என்னையும் சேர்த்து தான்) அதை எல்லாத்தையும் தொகுத்து ஒரு பக்கத்தில் இந்த பதிவில் இருக்கு. அதிலும் தர்ம அடி வாங்குவது எப்படி? கொடுப்பது எப்படி? எப்படிங்கள் இருந்து தப்பிப்பது எப்படி? னு அனைத்து எப்படிகளும் செம ரவுசு தான். எல்லாத்தையும் விடாம படிச்சு பாருங்க.

ஜொள்ளு பாண்டி - Bikini ல ஒரு பிகர்

குசும்பனுக்கு அண்ணன் நம்ம பாண்டி. என்னத்த சொல்ல நீங்களே போய் பாருங்க அதை. வயது வந்தவர்கள் மட்டும்.

இராமநாதன் - How Big is Your P*nis?

தலைப்பை பார்த்து ஒதுக்கிடாதீங்க. எஸ்.ஜே. சூர்யா ரகம் தான். டாக்டர் ராம்ஸ், டாக்டர் பிரகாஷ் ஆக முயற்சி செய்கிறாரோ என எண்ண வைக்கும் தலைப்பு தான். ஆனால் நம் வாழ்வில் ஒரு அங்கம் ஆகி விட்ட ஒரு பொருளை வைத்து அலசிய ஒரு விஞ்ஞானப்பூர்வமான அலசல். அப்படி எதை பற்றிய அலசல் என்பதை போய் பாருங்க.

இம்புட்டு சொல்லிட்டு நம்மள நாமளே சொறிஞ்சிக்காட்டி எப்படி? அப்படியே நம்ம ரவுசையும் ஒரு எட்டு எட்டி பாத்துடுங்க.

நாகை சிவா - இதுவும் மரணம் தான்...
தேன் கூடு போட்டியில் கலந்துக் கொள்ள போட்ட பதிவு இது. மரணத்தில் என்னய்யா ரவுசு கேட்குறீங்களா... போய் தான் பாருங்களேன்.

18 comments:

 1. நம்ம கவிஞ்ஞர் கப்பி நிலவர் போட்ட பதிவை நினைச்சா இன்னமும் சிரிப்பு வரும்... :)

  அதிலே பெருசு கேள்விக்கு ஒன்னும் புரியாமே பதில் சொல்லியிருப்பானே அத நினைச்சி சிரிப்பேன்... :)))

  ReplyDelete
 2. ஆமாம் ராம். அதிலும் அந்த நேரத்தில் ஸ்பானிஷ் மொழியை வைத்து விளையாடியது ஒரு தனி விளையாட்டு தான். கப்பி மறந்து இருக்க மாட்டான் என்று நினைக்குறேன்

  ReplyDelete
 3. கப்பி ரவுசு சூப்பர் ;))

  அதுல பின்னூட்டம் எல்லாம் படிச்சிட்டு ஒரே சிரிப்பு தான் ;)))))))

  ReplyDelete
 4. ஜொள்ளு பாண்டி - Bikini ல ஒரு பிகர்

  குசும்பனுக்கு அண்ணன் நம்ம பாண்டி. என்னத்த சொல்ல நீங்களே போய் பாருங்க அதை. வயது வந்தவர்கள் மட்டும்.////

  நல்ல வேளை புலி பாண்டிய அண்ணன் என்று சொன்ன எங்க அந்த படத்தில் இருக்கும் பெண்ணுக்கு அண்ணன் என்று சொல்லி இருந்தா அம்புட்டுதேன்.:(((

  ReplyDelete
 5. அறிவுஜீவியோட பதிவுக்கு:
  :-)))))

  உங்களோட மரணம் பதிவுக்கு:
  :-)))))))))))))))))))

  ReplyDelete
 6. ஞாபகம் வருதே ஞாபகம் வருதே :))))

  //அதிலும் அந்த நேரத்தில் ஸ்பானிஷ் மொழியை வைத்து விளையாடியது ஒரு தனி விளையாட்டு தான்//

  ஹூம்ம்ம்..அதெல்லாம் அந்த காலம் :)))

  ReplyDelete
 7. //கப்பி பய said...
  ஞாபகம் வருதே ஞாபகம் வருதே :))))

  //அதிலும் அந்த நேரத்தில் ஸ்பானிஷ் மொழியை வைத்து விளையாடியது ஒரு தனி விளையாட்டு தான்//

  ஹூம்ம்ம்..அதெல்லாம் அந்த காலம் :)))//

  கப்பி என்ன இது ஏதோ ரிட்டயர்ட்டு ஆன மாதிரி கப்பித்தனமா பேசிகிட்டு?? ;))) கமான் மக்கா...

  ReplyDelete
 8. //குசும்பன் said...
  ஜொள்ளு பாண்டி - Bikini ல ஒரு பிகர்

  குசும்பனுக்கு அண்ணன் நம்ம பாண்டி. என்னத்த சொல்ல நீங்களே போய் பாருங்க அதை. வயது வந்தவர்கள் மட்டும்.////

  நல்ல வேளை புலி ! பாண்டிய அண்ணன் என்று சொன்ன எங்க அந்த படத்தில் இருக்கும் பெண்ணுக்கு அண்ணன் என்று சொல்லி இருந்தா அம்புட்டுதேன்.:(((//

  என்ன குசும்பன் :))
  நமக்கே லேசா அல்வா கிண்டி கொடுக்கப் பாக்குறீயலளா ?? ;))) நாங்க எல்லாம் பொண்ணுங்களோட அண்ணன் போஸ்டுக்கெல்லாம் போட்டியே போட மாட்டோம் மக்கா !! கவலையே வேண்டாம்!! போனா போகுதுன்னு பெரிய மனசு பண்ணு அந்த பதவிய வாழ்க்கை முச்சூடும் உங்களுக்கே விட்டுதாறேன் !! திருப்தியா?? ;))))))

  ReplyDelete
 9. ஆரம்பமே ரவுசா? அசத்துங்க :))))

  கப்பி ரவுசு அட்டகாசம்..

  உங்க ரவுசுல கப்பி கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலியே.. எப்படி அது ஆண் கொசு தான்னு கண்டுபிடிச்சீங்க :P

  ReplyDelete
 10. @ கோபிநாத்

  //கப்பி ரவுசு சூப்பர் ;))

  அதுல பின்னூட்டம் எல்லாம் படிச்சிட்டு ஒரே சிரிப்பு தான் ;)))))))//

  கோபி அண்ணனே.. அந்த சமயத்தில் ஆட்டமே பின்னூட்டத்தில் தான். ரொம்ப பீல் பண்ணி ஒரு கதை எழுதினாப்புல. அதுல பண்ணின பின்னூட்ட கலாட்டால சீரியஸ் பதிவு செம காமெடி ஆயிடுச்சு... :)

  ReplyDelete
 11. //நல்ல வேளை புலி பாண்டிய அண்ணன் என்று சொன்ன எங்க அந்த படத்தில் இருக்கும் பெண்ணுக்கு அண்ணன் என்று சொல்லி இருந்தா அம்புட்டுதேன்.:(((//

  குசும்பா அதுக்கு போய் உன்னைய அண்ணன் ஆக்குவேனா சொல்லு....

  ஒரு அசின், ஒரு சந்தியா, நயன் தாரா, கம்னா னா சரி...

  ReplyDelete
 12. //அறிவுஜீவியோட பதிவுக்கு:
  :-)))))

  உங்களோட மரணம் பதிவுக்கு:
  :-)))))))))))))))))))//

  மை ஃபிரண்ட் ஸ்மைலிக்கு நன்றி...

  நம்ம பயல அறிவுஜீவி னு சொன்னீங்க பாருங்க அதுக்கு __/\__

  ReplyDelete
 13. //ஞாபகம் வருதே ஞாபகம் வருதே :))))//

  உண்மையிலே கப்பி! உன் பதிவுக்கு ஒரு விசிட் அடிச்சப்ப அப்படி தான் இருந்துச்சு... காவல் நிலையம், கயல்விழி, நீ பீல் பண்ணி எழுதிய ஒரு கதை, கையூட்டு.. எல்லாம் சரி தானே...

  //அதிலும் அந்த நேரத்தில் ஸ்பானிஷ் மொழியை வைத்து விளையாடியது ஒரு தனி விளையாட்டு தான்//

  ஹூம்ம்ம்..அதெல்லாம் அந்த காலம் :)))//

  காலங்களும் மாறியது. கோலங்களும் மாறியது.

  ReplyDelete
 14. ஆஹா ஜொள்ளு அண்ணனே எப்படி இருக்கீக.. பாத்து எம்புட்டு நாள் ஆச்சு... உங்க பேட்டைக்கு ஆள் அனுப்பினா தான் வந்து பாப்பீகளோ..

  ReplyDelete
 15. //ஆரம்பமே ரவுசா? அசத்துங்க :))))//

  வாழ்த்துக்கு நன்றி!

  //கப்பி ரவுசு அட்டகாசம்.. //

  இல்லையா பின்ன.. நம்ம பயல் ஆச்சே அவன் :)

  //உங்க ரவுசுல கப்பி கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலியே.. எப்படி அது ஆண் கொசு தான்னு கண்டுபிடிச்சீங்க :P//

  அதுல 70 சொச்சம் பின்னூட்டம் இருக்குமே. அம்புட்டையும் படிச்சிங்களா... ரொம்ப தான் பிஸியா இருக்கீங்க போல. கப்பி க்கு சபையில் பதில் சொல்லாம தனியா சொல்லி இருப்பேன்.

  இப்ப பதிலுக்கு வரேன். இந்த கொசுவை தெரிஞ்சுக்க சில படிப்புகள் இருக்கு. அவை

  டிப்ளமோ இன் கொசுலாஜி
  டிகிரி இன் கொசுலாஜி
  மாஸ்டர்ஸ் இன் கொசுலாஜி

  இதுல நான் படிச்சது டிப்ளமோ. அப்படி படிச்சு தெரிஞ்சுக்கிட்டது தான், ஏது ஆண் கொசு, ஏது பெண் கொசு என்பது எல்லாம். பேச்சுவாக்குல சொல்வதை எல்லாம் நம்பக் கூடாது. எல்லாத்தையும் படிச்சு தெரிஞ்சுக்கனும்.

  நீங்களும் இந்த படிப்புகளை படிக்க விரும்பினால் அனுகவும் - சங்கம்

  ReplyDelete
 16. //இதுல உங்க ரவுச தவிர வேற எதுவும் படிச்சதில்ல படிச்சுட்டு சொல்றேன் ;)//

  பொறுமையா படிச்சுட்டு வாங்க வேதா!

  ReplyDelete
 17. //இந்த கொசுவை தெரிஞ்சுக்க சில படிப்புகள் இருக்கு. //

  அவ்வ்வ்வ்வ்.. முடியல.. சின்னப்புள்ள தெரியாம கேட்டுட்டேன். விட்டுடுங்க :(

  ReplyDelete
 18. காயத்ரி!

  இதுக்கேவா....????

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது