07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, September 12, 2008

என்ற ஊர்க்காரங்க

என்னங்க இது என்றன்னு பார்க்கறேங்களா, கொங்கு பாஷையில என்னுடையதுன்னு அர்த்தமுங்க. என்னடா ஒட்டிக்கறான்னு பார்க்கறீங்களா. பொறந்த மண்ணு பாசந்தாங்க.



முதல்ல சொல்ல வேண்டியவரு பரிசல்காரன் அண்ணணுங்கோ, இவரும் உடலப்பேட்டக்காரருங்க ( உடுமலைப்பேட்டை) அதாவ்து உடும்பு மலை பேட்டைகாரருங்கோ. ஒரு காலத்துல எங்க திருமூர்த்தி மலைல உடும்புக நெறைய இருந்ததா கேள்வி பட்டிறுக்கோங்க ஆனா இப்பெல்லாம் கண்ணுல படறதே இல்லீங்க.




இப்ப அண்ணன் திலுப்பூருல வேலை செய்யறாங்க இவரோட வலைப்பூ பரிசல்காரன்






ரசிப்போர்கள் விழி தேடி... பதிவுகள் எழுதறாருங்க.



நம்மளப் பத்தி சொல்லோணும்னா..



நானெழுதுவது உங்களுக்குப் பிடிக்கவேண்டுமென நினைப்பதில்லை.. ஆனால் கண்டிப்பாய் படிக்கவேண்டுமென நினைப்பேன்! (ஏதாவது புரிஞ்சுதா?) அப்படீங்கறாருங்கோ.




அவரைப் பத்தி என்ன சொல்லறதுக்கு இருக்குங்க, அதான் மூன்றரை லெச்சம் தடவை இவர் படிக்கப்ட்டிருக்காங்க்றது ஒன்னு போதாதுங்களா? ஆனாலும் ஒண்ணு ரெண்டு சொல்லறேங்க.






இப்பத்தான் நூறாவது பதிவை போட்டிருக்காங்க. கஷ்டப்படறவங்கள பரிசலாக இருந்து கரை சேர்க்க பாடுபடுகிறார். K. B. கிருஷ்ணக்குமார் அண்ணன்.




கோவிலுக்கு வெளியிலேயும் தெய்வமுண்டு அதை குழந்தையும் எனச்சொல்வதுண்டு அப்படீன்னு குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றுன்னு சொல்லற அண்ணன் வாழ்க.




----------------------------------------


அடுத்தவங்க சின்ன அம்மிணிங்க, நம்ம சின்ன அம்மிணி இல்லீங்க இவங்க கோயம்புத்தூர்காரங்க ஆனா இப்ப வசிப்பது நியூசிலாந்தில்ங்க. அதனால கிழக்கால இருக்கறதால காலையிலே நேரத்துலயே பின்னூட்டம் போட்டுறறாங்க.






நம்ம கொங்குப்பேரையே தன்னோட பேரா வெச்சுகிட்டு இருக்காங்க அம்மிணி.



பெண்களில் நல்ல பெண்கள் கெட்ட பெண்கள் உண்டு
தாயாரில் நல்ல தாயார் கெட்ட தாயார் உண்டோ
- ஆதி சங்கரர் ன்னுட்டு அம்மாவைபப்த்தி அருமையா எழுதற இவங்க எழுத்தைப்படிக்க கிளிக்குங்க சின்ன அம்மிணி.




------------------------

அடுத்த கொங்கு அன்பர் Covai Ravee ங்க. இசையே மூச்சாக வாழும் அன்பர் கோவை இரவி. இவரின் வலைப்பூக்கள் தெய்வீக இராகம் SPB அவ்ர்களுக்காக படைக்கப்பட்ட வலைப்பூ. விநாய்கரோட் ஆபிஷேகம் அருமை.பாலாபிஷேகம் காணும் அனைவருக்கும் இறைவன் அருள் புரியட்டும்ன்னு நல்ல எண்ணத்தோட இருககாங்க. பணம் திரட்டி பொது சேவைகளும் செய்யறாங்க.




இவரோட வற்றாயிருப்பு சுந்தர் ரும் இந்த பூவுல எழுதுறாங்க.


எல்லா பாடகர்களுக்கும் வலைப்பூ வெச்சிருக்காங்க இரவி அண்ணன்


பாடும் நிலா பாலு பாட்டு கேக்க போங்க SPB சாரோட பாட்டுக்கள்.



இசைக்குயில் SJ இசைக்குயில் ஜானகியம்மா அவர்கள் வழங்கிய இனிய பாடல்கள் இந்த வலைப்பூவில கேட்கலாம் நீங்க.



இசையரசி இன்னிசையரசி பி.சுசீலா அவர்களின் பாடல்களில் மெய்மறந்து கரைந்து போகும் உள்ளங்களின் துடிப்புகள் இந்த வலைப்பூவின் பதிவுகள். சினிமாப்பாடல் வலைப்பூ தேன் கிண்ணத்துலயும் எழுதுறாறு ரவி சார்.




You rock ங்கற அந்த அனிமேஷன் பூணை அருமை.


__________________

இன்றைய தினம் முக்தி தரவல்ல மானசரோவர் ஏரியின் காட்சிகள் அதிகாலை சூரியன் ஒளியில் மற்றும் இராவணன் தவம் இராக்ஷஸ் தால் எனப்படும் இராவண ஏரியின் சில காட்சிகள்.



Sun's reflection in Holy Manasarovar





சூரிய கதிரை மனசரோவர் பிரதிபலிக்கும் அழகு



VIEW OF HOLY MANASAROVAR AT EARLY MORNING


காலை சூரிய ஒளியில் தங்கமென மின்னும் மானசரோவர்


மானசரோவர் தடாகம் பிரம்மா தனது மனதிலிருந்து உருவாக்கியது. இதன் கரையில் கிடைக்கும் ஒவ்வொரு கல்லும் சிவலிங்கம். இதில் ஒரு முறை குளித்தால் முக்தி வழங்கவல்லது. சிவசக்திக்கு ஆகும் அபிஷேக நீரே மானசரோவர் தடாகத்தில் வந்து கலக்கின்றது. அம்மையின் சக்தி பீடங்களுள் ஒன்றாகவும், வைணவர்கள் திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் கருதும் மானசரோவரின் பல்வேறு அழகை கண்டு களிக்கின்றீர்கள்.








We get the first view of Kailash from Rakshas Tal only.





அசுரன் இராவணன் சிவபெருமானை நோக்கி தவம் செய்த போது உருவாக்கிய ஏரி இந்த இராக்ஷஸ் தால் ஏரி. எனவே இதன் தண்ணீரை நாம் பயன்படுத்துவது இல்லை. ஆயினும் யாத்திரையின் போது நமக்கு கயிலங்கிரியின் முதல் தரிசனம் இதன் கரையிலிருந்து தான் கிடைக்கின்றது.





மேலும் வாசிக்க...

Thursday, September 11, 2008

இனிய Positive அந்தோணி முத்து

இது மற்றபப்திவுகளைப் போல ஒரு அன்பரை அறிமுகப்படுத்தும் பதிவு அல்ல.

ஒரு உடற் குறையை எதிர்த்து போராடி வெற்றி கண்ட ஒரு வீர உள்ளத்துக்கு தலை வணங்கும் பதிவு.

அதே சமயம் அவருக்கு உதவியவர்களுக்கு நன்றி கூறும் பதிவு.

வலைப்பூ என்பது பொழுது போக்கு மட்டும் அல்ல பல நன்மைகள் செய்வதற்கும் உபயோகப்படும் எனபதை உணர்த்தும் பதிவு.

இனிய Positive அந்தோணி முத்து

எதையும் தெளிவாகக் கற்றுக்கொள்.
அதை அனுபவித்து மகிழ்.
மகிழ்ச்சியாக இரு.

நீ கடவுள் மீது கூட நம்பிக்கை வைக்க வேண்டாம்.
உன்னிடம் நம்பிக்கை வைத்தால் போதும்.
ஏனெனில், நீயும் ஒரு தெய்வம்தான்.
-ஸ்ரீ சத்ய சாய்பாப

என்று ஆரம்பிக்கும் அந்தோணி முத்துவின் வலைப்பூவிற்கு சென்று பார்பவர்கள் அவருடைய திட மனதை புரிந்து கொள்ளலாம் . வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில், ஆழக் கடலும் தோணியாகும் ஆசை இருந்தால் நீந்தி வா என்று அவர் விடும் அறைகூவல் நம்மை எல்லாம் உற்சாகப்படுத்துகிறது.


அவரின் கதையை அவரே கூறியுள்ளதை இங்கே படியுங்கள்.

The Real Anthony Muthu

Yeah..! I"ve got a Special boon from God. Physically Challenged.Percentage of Disability is 90 %(According to the doctor's certificate.)
Paralysed below my chest.

Oh... Thank you God for giving me 2 hands & an Independent Brain to work.
Residing at Chennai/Tamilnadu/India at the mercy of my elder sister.Below my chest there is no sense at all. I do not have the sense to pass Urine & Toilet. Someone has to press my Stomach to pass Urine. My Sister, has to dig out Toilet manually. She is a living God for me.
I got this disability at the age of 11. (In an accident)

Knowledge

My reading habit increased my knowledge. Developed a great interest in Electronics at the age of 15 & got 2 Diplomas in Radios & Audios respectively. (studied through correspondence) At the age of 20 the love for music from my boyhood flowered. Got an Electronic Musical Keyboard from a friend, & practiced on my own. Got basic lessons in music from
Rev.Fr. Paul Rajareegam and continued to study B.A degree (Indian music) through open university in Chennai University.

I N V E N T I O N S

In 1998 I Invented a new sound system by Combining Music fundamentality & Electronics(similar & advanced than Dts).
You can feel music Dancing around you according to the Composing in my sound system.

My Failures

I left no stone unturned and left no doors unknocked to popularize & to utilize my idea to the Film Industry.I cried for recognition.....No one recogonized me.Each and every moment of life chased me to the extreme end of my life.In one of those dark days with a black mood due to frustration and anger I smashed my Sound system, into pieces.

Regaining Confidence

Later I learnt to smile through the most difficult situations, and negotiate persistently for my point of view, taking risks in the process, in the most difficult of circumstances.

Computers

In 2005 my Friend Miss.Gomathi gifted me an old Computer & I practiced with it for atleast 18 hrs every day.Now I can say that I am a little bit Computer savvy.

Internet

In 2007 Novermber, I got internet connection, & my life took a sudden turn with beautiful bends.... The world with a path leading to heaven with beds of roses!!!

Blog Writing

I began to write a blog in Tamil, and the whole Tamil world turned its attention towards me. I even started my own English blog too.

Future Plans

I'm not sure what God wants me to do with all of this, but the strange thing is, I feel less tension with good hearted people around me always..

I have a greater sense of equilibrium about me now.Sometimes I have days when a black mood takes over and I just donot know how to shift from it, whatever the weather, rain or shine.If my mind is made up that I'm going to have a negative thinking day, then nothing can stop it, not even the brightest sunshine outside.
But I don't let my disability define me.....
And that keeps me alive....with lots of...hope...courage...confidence....and trust on me!!!!

What the future will bring? Who knows?


அன்பர்கள் பலர் சேர்ந்து அவருக்கு சக்கர நாற்காலி வழங்கிய பின் அவர் எழுதியுள்ள கவிதை

எனக்குக்
கால்கள் முளைத்தன....
சக்கரமென்னும்
விரல்களுடன்.....

தெரிந்த பத்து முகங்கள்
தவிர பலப்பல
முகங்களின்
தரிசனம்......
தினமும்......

எனக்கே எனக்கான
வெயிலுடன்
மழையுடன்
காற்றுடன்,
பூக்களுடன்..,
செடி, கொடி... மரங்களுடனும்...
என்னை நானே
அறிமுகப் படுத்திக்
கொண்டேன்.....

இருபத்தைந்து
வருடங்களுக்குப் பிறகு
வண்ணத்துப் பூச்சியுடன்
சினேகம்.......

ஓ.....வாழ்க்கை
இவ்வளவு அழகானதா?

இப்புதிய சக்கரங்கள்
கற்பித்த அற்புதங்களை
அனுபவிக்க வித்திட்ட
அத்தனை
அன்புள்ளங்களையும்

கண்ணீர்ப் பளபளக்கும்...
விழிகளுடன்...
பெருமை பொங்க... நோக்கி...

எவரெஸ்ட் உச்சி மீதேறி நின்று.....
"நான் சந்தோஷமா இருக்கேன்"
எனக்கூவ ஆவல்.........

சொற்களைத் தேடியலைந்து
தோற்றுப் போயின
என் உணர்வுகள்.....

வெறும் நன்றி
சொல்லித் தப்பிக்கப்
போவதில்லை.....

கரம் கூப்பி
சிரம் தாழ்த்தி
வணங்குகிறேன்........

ஒரே நாளில்
பதினோரு வயதுக்
குழந்தையாய் மறுபடி பிறந்தேன்.....

மீண்டும் வாழ்கிறேன்
பதினோரு வயதிலிருந்து ஆரம்பித்து.........

ஆம்...

நான் நடக்கத் தொடங்கியிருக்கிறேன்.

இல்லையில்லை..!

சிறகு விரித்துப் பறக்கத் துவங்கியிருக்கிறேன்...!

அவரது வலைப்பூ அந்தோணி முத்து

இவ்வாறு அவர் எழுதுவதற்கு ஒரு சக்கர நாற்காலி வாங்கித் தந்த அனைவருக்கும் கோடி கோடி நன்றி. அன்பரே துன்பம் வரும் போது யாரும் துவண்டு விடத்தேவையில்லை, தன்னம்பிகை மட்டும் போதும் வானமும் வசப்படும், இறைவன் ஒரு கதவை மூடினால நிச்சயமாக மறு கதவை திறந்து வைத்துள்ளான் எனபதை உலகுக்கு உணர்த்திய உங்களுக்கும் நன்றிகள்.
----------------------------------------------------------------
பல பேர் ஏன் இவ்வாறு சிலர் துன்பப்பட வேண்டும் என்று நினைக்கலாம், கடவுளே உனககு கருணை கிடையாதா என்று வசை பாடலாம். ஆனால் அவனின் கணக்கில் எல்லாவற்றிக்கும் ஒரு விளக்கம் உண்டு.

எனது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி, எனக்கொரு மகன் பிறந்தான் என்று மகிழ்ந்தோம், இரண்டாவதாக என் மகன் பிறந்தவுடன், எல்ல்லோரையும் போல் வளர்ந்தான், ஓடினான் , பாடினான்,பள்ளியில் கணக்கில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றான், அப்பனிடம் கதைகள் கேட்டான், மாணிக்கவாசகருக்காக ஐயன் பிரம்படி பட்ட கதை அவனுக்கு ரொம்பப்பிடிக்கும்.

திடீரென்று ஒரு நாள் பள்ளியில் ஆசிரியை என் மனைவியிடம் கூறினார்கள், ரவி டிபன் பாக்ஸை திறக்க முடியாமல் கஷ்டப்படுகின்றான் என்னவென்று பாருங்கள் என்று, டாக்டர்களிடம் ஒடினோம், மூளையில் சிறிய இரத்தக்கட்டி இடதுகரம் செயலிழக்க துவங்கிவிட்டது , கல்லீரலும், மண்ணீரலும் வீங்கியுள்ளது பார்க்கலாம் என்று கூறினார்கள் நான்கு வருடங்கள் ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக அலைந்ததுதான் மிச்சம். ஒன்றும் பலன் இல்லை முடிவில் மூளையின் செல்கள் தானாக மடிகின்றன ஒன்றும் செய்ய முடியாது என்று கை விரித்து விட்டனர்.

முதலில் இடது கை மடங்கியது, பின் இடது கால் என்று ஒவ்வொரு அவயவமாக முடங்கி இறுதியில் படுக்கையில் முடக்கியது ஏதோ ஊட்டுவாள் என் மனைவி, அதுவும் நெஞ்சுக்குள் சென்று Infection ஆகும், அதற்கும் மருந்து கொடுத்து பார்த்துக் கொண்டோம். ஒரு நாள் இறைவன் நீ பட்டது போதும் என்னிடமே வா என்று அழைத்துக் கொண்டான்.

எதற்காக இந்தக்கதை என்று யோசிக்கிறீர்களா? இவ்வாறு அவன் துன்பப்பட்ட போது பலர் கேட்ட கேள்வி இது. ஏன் இது போல துன்பப்பட வேண்டும், ஏன்? ஏன் ? இந்த் சிறு வயதிலேயே இவ்வளவு துன்பம் ஏன்? எவ்வளவு பணம் இருந்தாலும் ( எங்கள் கம்பெனியில் மருத்துவம் இலவசம், எங்கு வேண்டுமென்றாலும் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் இலவசமாக. இந்தியா முழுக்க சுற்றினேன், டெல்லி AIIMS. பெங்களூர் NIMHANS என்று ) ஆனாலும் பலன் ஒன்றும் கிட்டவில்லை. பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்பது எவ்வளவு பொய் என்பதை இறைவன் அடியேனுக்கு உணர்த்தினான் .

அப்போதுதான் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்பட்டது ஒரு தெளிவும் தோன்றியது நாம் ஆணவத்தால் என்னதான் செய்ய நினைத்தாலும் அவனன்றி ஒரு அணுவும் அசைவதில்லை. எல்லாம் அவன் செயலே.
எனவே அவனிடம் பூரண சரணாகதி ஒன்று மட்டுமே நாம் செய்ய வேண்டியது என்பது விளங்கியது.

இனி அந்த கேள்விக்கான விடை பூர்வ புண்ணிய பாவம், நாம் இருக்கும் நிலை நம்மைத்தொடர்ந்து வரும் இருவிணையின் பயன். யாருக்கு மோட்சம் நெருங்குகின்றதோ அவர்க்ள் இந்த கர்ம பூமியில் அதிக நாள் தங்குவதில்லை. இருக்கின்ற கர்மாவை சீக்கிரம் தொலைத்து விட்டு எம்பெருமானுக்கு சேவை செய்யப் போய் விடுகின்றனர். பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகளும் இவ்வாறு தான் இருக்கின்றன சிறு கர்மாவை ஒழிக்க அது ஜன்மம் எடுக்கின்றது. Spastics வகைக் குழந்தைகளும் இவ்வாறுதான். அவர்கள் யாருக்கும் துன்பம் செய்ய முடியாது, அவர்களுக்கு யாரும் துன்பம் விளைவிக்கவும் முடியாது. இவவாறு பிறந்தவர்களுக்கு சேவை செய்பவர்களும் கொடுத்து வைத்தவர்களே. அவர்கள் அனைவரும் இறைவனின் குழந்தைகள், முக்தியை நெருங்கி விட்ட ஆத்மாக்கள்.

ஆகவேதான் அன்பர்களே ஆன்மீகப்பதிவுகள் மட்டுமே எழுதி வருகிறேன் அவன் புகழ் பாடுதல் ஒன்று மட்டுமே பேரின்பம், நிலையானது, குறைவில்லாதது, அழியாதது, அள்ள அள்ளக் குறையாதது, மற்ற ஐம்புலன்களால் நாம் உணரும் இன்பங்கள் எல்லாம் சிற்றின்பங்களே.
இது அடியேன் சொலவதல்ல, நம் முன்னோர்கள் சொல்லிய்வைதான் இதை உணரத்தான் இறைவன் இப்பிறவியை அளித்தானோ என்னவா. இலுப்பையூர் வாழ் சிவனே இன்னுமோர் அன்னை கருப்பை வராமற் கா என்பதே அந்த இறைவனிடம் பிரார்த்தனை.

அந்தோணி முத்து போன்றவர்கள் இறைவனின் அன்பர்கள் அவர் போன்றவர்களுக்கு உதவி செய்பவர்களும் இறைவனுக்கு பிரியானமானவர்கள் எனப்தால் உங்கள் அனைவருக்கும் தலை வணங்கி இப்பதிவை நிறைவு செய்கின்றேன்.
----------------------------------------------------------------------

மேலும் வாசிக்க...

Wednesday, September 10, 2008

அடியேனையும் இரசிக்கும் சில அன்பர்கள்

எந்த கலைஞனுக்கும் கைதட்டல் எவ்வாறு உற்சாகத்தைத் தருமோ அது போல வலைப்பூவில் பின்னூட்டங்கள் வ்லைப்பின்னலர்களுக்கு உற்சாகத்தை தருகின்றன. இவ்வாறு அடியேனுக்கு ஆதி காலத்திலிருந்து ஊக்கம் அளித்து வரும் சில அன்பு உள்ளங்களின் வலைப்பூக்கள் இப்பதிவில். ஏனென்றால் அடியேனின் வலைப்ப்பூக்களை படிப்பவர்கள் மிகக்குறைவு.

முதலில் நாம் பார்க்கப்போகும் அன்பர் வடுவூர் குமார் கட்டுமானத்துறை நிகழ்வுகளை பற்றிய பதிவிடற இவர், அவ்வப்போது கொஞ்சம் வெளி விஷயங்களைப்பற்றியும் எழுதுகின்றார்.



"இன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று!!" ஒரு அரிய உண்மையும் கூறும் இவர், தன்னுடைய பழைய இடுகைகளுக்கு இட்டுள்ள பெயர் கள்ளிப்பெட்டி, இவரை மயக்கும் பாடல்களையும், பிடிக்கும் பாடல்களையும் தருகின்றார் இவர் கட்டுமானத்துறை என்ற அவரோட வலைப்பூவில்.




கத்திப்பராவில் கட்டிய புதுமேம்பாலத்தில் Shoulderகள் இல்லை என்றும். வாகன போலீஸ்காரர்களூக்கு முகக்கவசம் கொடுக்கவேண்டும்.அரசாங்கம் மூலம் நடக்கவேண்டும் என்றால் இவர்களை சென்றடைய இன்னும் பல காலங்கள் அதற்குள் அவர்கள் நலம் இன்னும் மோசமாகக்கூடும்.அதனால் செலவு குறைவாகக்கூடிய இந்த நற்பணியை தமிழ் வலைப்பதிவர்கள் ஏன் மேற்கொள்ளக்கூடாது? கேட்பதிலிருந்து இவரது நல்ல உள்ளம் உங்களுக்கு புரிந்திருக்கும்.



மேலும் இவர் லினக்ஸ் என்று வலைப்பூவில் லினக்ஸ் கற்றுத்தருகின்றார்.


--------------------------------------------------------------------


அடுத்த அன்பர் ச்சின்னப்பையன் சார். இவரை இவர்கள் தங்கமணி தண்ணி தெளிச்சுவிட்டா போறாதுண்ணு குடத்தையை அப்படியே கவுத்துட்டதால் வலைச் சரத்தையே தன்னுடைய நகைச்சுவையா கலக்கிட்டு இருக்கறரு.



2020ல் இவர் தான் தமிழக முதல்வருன்னு நம்பிக்கையோட இருக்கறவங்களை இவரோட வலைப்பதிவுக்கு வரலாம்னு கூப்புடறாருங்க. இவரின் காமெடிகளை இரசிக்க க்ளிக்குங்கள் ச்சின்னப் பையன் பார்வையில் .


தற்போது இவர் வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்
வலைப்பூவின் அட்லாஸ் சிங்கம். இவ்வாறு உல்லாசமாக சுற்றிக்கொண்டிருக்கும் வாலிபப்பசங்கள்ன்னு தன்னைத்தானே சொல்லிக் கொள்பவர்கள்



























நேரம் கிடைக்கும் போது சென்று படியுங்கள் ச்சின்னப்பையன் வலைப்பூவை வாய் விட்டு சிரித்து உங்கள் நோய் விட்டுபோகும். அப்படியே பொழுது போக்கவேணும்ன்னா வாலிபபப்சங்க வலைப்பூபக்கம் போங்க அவங்க அடிக்கற லூட்டியில உங்க மனம் லேசாயிடும்.
------------------------------------------------------------
மூன்றாவது அன்பரும் மிகவும் நகைச்சுவையாக எழுதுபவர்தான். இவர் மட்டுமல்ல இவரது அன்பு மகளும் அதாவது அபி பாப்பாவும் தாய் ( இங்கு தந்தை) எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்று நிரூபித்தவள். இவரது வலைப்பூ அபி அப்பா
இவர் மற்றவர்களுடன் சேர்ந்து கும்மி அடிக்கும் தள்ம் எது தெரியுமா? அன்பர்களே



வேடந்தாங்கல்.......
பறவைகள் சரணாலயம் அல்ல இது கும்முபவர்களின் சரணாலயம். அன்பின் பிறப்பிடம்;நட்பின் உறைவிடம்;சந்தோஷ சரணாலயம் வேடந்தாங்கல்.

நாங்கதேன்னு இவருடன் சேர்ந்து கும்முபவர்கள் இவங்கதேங்க

ஆயில்யன்

பொன்வண்டு

கண்மணி

காயத்ரி

முத்துலெட்சுமி-கயல்விழி

கோபிநாத்

மின்னுது மின்னல்

.:: மை ஃபிரண்ட் :

:. குட்டிபிசாசு

இளைய கவி

தருமி

சுரேகா..

அய்யனார்

குசும்பன்



அபி அப்பாவின் நூலகம் ஒரு அருமையான தகவல் பெட்டகம் என்றால் அது மிகையாகாது. இவ்வ்லைப்பூவில் கர்நாடக சங்கீதம், பின்னவீனத்துவம், பெண்களின் பிரச்னைகளூக்கான தீர்வு, அவர் ஊரான மயிலாடுதுறை மற்றும் மரக்காணம் பாலவின் பதிவுகள் உள்ளன.



ஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - என்று ரமணர் காட்டிய பாதையில் நடக்கும் அபி அப்பாவிற்கு வாழ்த்துக்கள்.
---------------------------------------------------------------------


10 வருடங்களாக செளதி அரேபியாவில் பணி புரிகிறேன். பிடித்தது ‍‍- தமிழ், பிடிக்காதது - பொய் பேசுவது, கற்றது பிழைப்பு நடத்துமளவுக்கு மின் பொறியியல், கல்லாதது - உலகளவு, கேட்க விரும்புவது இனிய இசை, கேட்க விரும்பாதது - புறம் பேசுவது, மற்றபடி என்னை பற்றி கூற என்ன இருக்கிறது? அப்படின்னு தன்னை அறிமுகம் செய்து கொள்கின்ற expat Guru ஐயாதான் நம்மோட அடுத்த அன்பர் Madras Thamizhan என்று வலைப்பூவின் பெயர் வைத்துக்கொண்டு உலக்ம் சுற்றும் Expat Guru ஐயா அவர்கள். பல இடங்களில் இவர் பட்ட கஷ்டங்களைக்கூட மிகவும் நகைச்சுவையாக எழுதுகின்றார் இவர். நல்லதை நினைப்போம், நல்லதே செய்வோம்! என்ற கொள்கையுடன் வலம் வரும் இவருக்கும் வாழ்த்துக்கள். ஆனால் ஐயா தன்னுடைய இயற்பெயரை எங்கும் குறிப்பிடவில்லை.
---------------------------------------------------

அடுத்த அன்பர் கோவி கண்ணன் அவர்கள். காலம் - எண்ணக் கவி'தைகள்' (கோவி.கண்ணன்) -உலகத்து உண்மைகளை உரக்கச் சொல்லுவது அறிவியல் ... உணர்ந்து சொல்லுவது கவிதைகள் ...! என்று இவரது இவ்வலைப்பூ முழுவதும் அருமையான கவிதைகள். எத்தனை எத்தனை எண்ணங்கள் நெஞ்சினிலே.... வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!நேரமில்லை என்றால், தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே! என்று இவர் கூறும் விதம் அருமை. இவரது இரண்டாவது வலைப்பூ காலம் எந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் !
----------------------------------------------------





அடுத்த அன்பர் பாஸ்டன் பாலா ஐயா அவர்கள் பீட்டர்ஸ் என்னும் வலைப்பூவில் ஆங்கிலம் பேசுவது எழுதுவது குறித்தான உதவிப் பதிவு.








உங்கள் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். என்று அன்பர்க்ளைன் பல சந்தேகங்களை தீர்த்து வைக்கின்றார். உலகும் முழுதும் உள்ள விளம்பரங்களை தொகுத்து India, NRI, Tamil, USA, World News








பாஸ்டன் பாலாவிடம் - 1. நீங்கள் இடும் இடுகைகளின் எண்ணிக்கையை தாக்குப்பிடிக்க முடியாமல் டிவிட்டரின் சேவை வழங்கிகள் அடிக்கடி திணறுவது உண்மையா? என்ற கேள்வியில் பாட்ஸ்டன் பாலா ஐயாவின் எழுத்து வன்மை புரியும்.




மற்ற அன்பர்களைப்பற்றி முன்னர் எழுதிய பதிவுகளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதால் விடுபட்ட அன்பர்களின் வலைப்பூக்கள் இப்பதிவில் இடம் பெறுகின்றன. மேலும் சில சமயம் வந்து பார்த்து விட்து பின்னூட்டம் இடாமலும், ஏதோ ஒரு தடவை பின்னூட்டமிட்டும் சென்ற அன்பு உள்ள்ங்கள் கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் இப்பதிவின் மூலம் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வரும் கால்த்திலும் வந்து தரிசன்ம் பெறுங்கள்.
---------------------------------


View of west and North faces - மேற்கு முக மற்றும் வடக்கு முக தரிசனம்



















North face on way to Dolma Pass- we can clearly see the extension of the east face.






டோல்மா கணவாய் செல்லு வழியில் கைலாய தரிசனம். சிவலிங்கத்தின் தாரா போல விளங்கும் கிழக்கு முகத்தின் தொடர்ச்சியை தெளிவாக காணலாம்.









இன்றைய தினம் மரகதவல்லி மீனாக்ஷி அம்மன் மலைமகள் கௌரி நீராடும் கௌரி குளத்தின் தரிசனம் காணுங்கள் அன்பர்களே. அன்னையின் கர்ப்பகிரகம் டோலமா கணவாய் மற்றும் கௌரி குளம் இயற்கையாகவே அம்மனுக்கு உரிய இடப்பக்கத்தில் அமைந்துள்ளது.













Gauri Kund in June.


























Gauri Kund





Gauri Kund is located just below Dolma Pass. It is supposed to be the pond in which Mother Parvati takes bath. It is really wonderful that the pond is emerald green reflecting the color of Mother. where as the water is crystal clear. The water of Gauri Kund is supposed to have cancer curing properties.




மேலும் வாசிக்க...

பூவையரின் சில வலைப்பூக்கள் -2

பெ. அ: அடுத்து நாம சொல்லப்போறவங்க ஒரு அன்புத்தோழிங்க.

"இறைவா அனைவரையும் காப்பாத்துண்ணு"


வேண்டற பரந்த மனம் கொண்டவருங்க இவங்க அன்புத்தோழி வலைப்பூவுல " நான் ஒரு நல்ல அன்புத்தோழியாக என்னுடைய எண்ணங்களை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள ஆசைப் படுகிறேன். அதே போல் உங்கள் எண்ணங்களையும் முழு மனதுடன் வர வேற்கிறேன். "ன்னுட்டு பல உபயோகமான விஷயங்களை சொல்லறாங்க.

சி. அ : அதுல வர பட்டாம்பூச்சி சூப்பரா இருக்குதல்லப்பா.

பெ அ: அதுவுவல்லாம மழலை உலகம் ங்கற வலைப்பூவுல குழந்தை வளர்ப்பு பத்துன நல்ல செய்திகளை சேகரிச்சு கொடுக்கறாங்க.




சி. அ : மழலை உலகத்துல தலைப்புப்படம் சிறப்பு.




இதுல அவங்க அருமையான தாலாட்டுப் பாட்டுகளை கொடுத்திருக்காங்க. குறிப்பா கணணனை துயில் எழுப்பும் பாடல் அருமை.

அப்ப நல்ல சேவை செய்யறாங்கண்ணு சொல்லறீங்களா

பெ. அ: உண்மையிலேயே அருமையான சேவைதான்.






ஆனா ஒண்ணை ரெண்டு பேரும் மறந்தீட்டிங்களே.






சி. அ : அது என்னப்பா?






இவங்க ஒரு ஆன்மீகப்பதிவரும் கூட கற்பூர நாயகியே கனகவல்லியிலே அம்மன் பாடல்களை பதிவிடறாங்களே அதுதான்.

அன்புத்தோழியே உங்கள் சேவை தொடர வாழ்த்துகின்றோம்.
---------------------------------------

பெ அ: வலைச்சரத்தில் புயலாக வீசிய ஒரு தென்றல்தான் புதுகைத்தென்றல் அம்மிணி.

சி அ: ஒரு வாரத்துல வலைச்சரத்துல 45க்கு மேற்பட்ட பதிவுகளை எழுதி ஒரு பெரிய சாதனையே செய்திருக்காங்க இந்த ஆன்ட்டி.

"வீசும் போது நான் தென்றல் காற்று", "காற்றுக்கென்ன வேலின்னு" வீசுற இவங்க பெண்களூக்கு மிகவும் வேண்டிய Husbandologyல கணவனை எப்படி கைக்குள் வைத்துக் கொள்றதுன்னு சொல்லித்தர அன்பு உள்ளம் கொண்டவங்க.

பெ அ : இவங்களோட வலைப்பூக்கள் ஏராளம் அதுல ஒன்னுதான் புதுகைத்தென்றல்/




பின்னூட்டம் இட்டவர்களை தென்றல் வீசியதில் மகிழ்ந்தவ்ர்களுக்கு இவங்க அன்பாக அடையாளம் காட்டுறாங்க. அதுவுவில்லாம

பேரன்ட்ஸ் கிளப்ல

நந்து f/o நிலா























இவங்களோட சேர்ந்து குழந்தை வளர்ப்பது எப்படின்னு இவங்களும் சொல்லித்தர்றாங்க.


( பெ . அ மனசுக்குள்ள் இதெல்லாம சொல்லித்தருவாங்க வேலை வெட்டி இல்லதவங்க போல இருக்கு)

இன்னும் நன்றாக தென்றல் வீசிட வாழ்த்துக்கள்




-----------------------------------------






சி. அ: அடுத்த நாம பார்க்கப்போற பதிவர் இனியவள் புனிதா ஆன்ட்டி.





பெ.அ : கவிதைகளை மழையாக பொழிகின்றார் இவர். அனைத்தும் உருக்கமான கவிதைகள்.





"நினைவுகள் என்றும் மனதின் பாரங்கள்" என்று என்று இயம்பும் இவர், அந்த ஈரமான நினைவுகள், மயிலிறகாய் வருடிய, தென்றலாய் தழுவிய, மின்னலாய் தீண்டீன என்கிறார்.



ஜில்லென்று ஒரு மலேசியா இவருடைய மற்றொரு குழுப்பதிவு இவருடன் சேர்ந்து மலேசியாவை நமக்கு அறிமுகப்படுத்தும் மண்ணின் மைந்தர்கள்

VIKNESHWARAN"

::மை ஃபிரண்ட் ::

மற்றும் துர்கா அவர்கள் ( இவர் அறிமுகம் கிட்டவில்லை)



பெ அ: இதிலிருந்தே இவர் கவிதைகள் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று அனைவரும் உணரலாமே.





அப்பாவுக்காக என்று இவர் இயற்றிய கவிதை சூப்பர்.





சி. அ: கவிதை மட்டுமல்ல , அக்கவிதைகளுக்கு இவர் போடற படங்களும் சூப்பரோ சூப்பர்.





எங்கிருந்து இவ்வளவு அருமையான படங்களை இவர் தரவிறக்கம் செய்கின்றார் என்று கேட்கத் தோன்றுகிறது.





சி. அ : இவரின் கவிதை ஒன்றை தருகின்றோம் சாம்பிளாக





கொஞ்சும் தமிழே
உன்னிடன் கெஞ்சும்...
மிஞ்சும் உன் அழகை - நல்ல வேளை
கண்ணதாசன் பார்க்கவில்லை
இல்லை
உன் தாசனாகி போயிருப்பான்.


----------------------------------------------



இப்பதிவில் வ்டக்கு மற்றும் கிழக்கு முகம் இனைந்த கோலத்தையும் பிரம்மா தன் மனதிலிருந்து உருவாக்கிய மானசரவோர் ஏரியின் சில தோற்றங்களையும் தரிசனம் செய்யுங்கள் அன்பர்களே.









திருககயிலாய தரிசனம் கண்டு மானசரோவரில் நீராட 21 தலைமுறையினர் முக்தி பெறுவர் என்பது ஐதீகம்.



Waves sparkling like diamond during noon


மதிய சூரிய ஒளியில் வைரமென மின்னும் மானசரோவரின் அழகு.




Gurla Mandata( grand father of Sri Rama)ranges in the background.

Manasarovar is nestled in between Kailash ranges on the north and Gurla ranges on the north.



மானசரோவர், கைலாய மலைத்தொடர் மற்றும் குர்லா மாந்தாத்தா ( இராமரின் பாட்டனார்) மலைத்தொடருக்கு இடையில் கிழ மேற்கில் அமைந்துள்ளது. குர்லா மாந்தாத்தா மலைத்தொடரை இப்படத்தில் காணலாம்.



Swans enjoying their swim in Manasarovar

பிரம்மா இராஜ அன்னப்பறவையாக மானசரோவரில் வலம் வருவதாக ஐதீகம், இங்கே பறவைகள் மானசரோவரில் நீந்தும் அழகு.






The climate at this altitude is very much unpredictable.

Manasarovar at a clouded time.


மேகம் சூழ்ந்த நேரத்தில் மானசரோவரின் அழகு( நிமிடத்திற்கு நிமிடம் இங்கே சீதோஷண நிலை மாறுகின்றது)
மேலும் வாசிக்க...

பூவையரின் சில வலைப்பூக்கள் -1

இன்னைக்கு காலையிலே பதிவு எழுதலான்னு உட்கார்ந்தங்க, சின்ன அம்மணீயும் பெரிய் அம்மணியும் இன்னைக்கி ஸ்டரைக் நாங்க ஒண்ணும் உங்க ஆட்டத்துக்கு வல்லன்னு கோவுச்சுட்டு சமையக்கட்டுலயே உட்கார்ந்து கிட்டாங்க.

என்னடா! இது வம்பாப் போச்சேன்னு போய் கூப்பிட்டா, நீங்க மட்டும் தனியா எழுதறேங்கல்ல, நாங்க உங்க ஆட்டத்துக்கு வல்ல அப்படின்னு மக்கர் பண்ணர்றாங்க.

எப்படியோ இன்னிகு ரங்கநாதன் தெருவுக்கு கூட்டிட்டுப்போறேண்ணு தாஜா பண்ணினா, ஒரு கண்டிஷன் போடறோம், அதுக்கு ஒத்துகிட்டாதான் ஆட்டத்துக்கு வருவோம்ன்னு ஒரு வழியா எறங்கி வந்தாங்க. அந்த கண்டிஷன் என்னனனு கேக்கறீங்களா? எங்களுக்கு 33% இடம் குடுத்தாதான் நாங்க வருவேண்ணு மக்கர் பண்ணறாங்க. என்ன பண்ணற்துங்க அவங்க சொல்றதைக் கேட்டுத்தான ஆகணும் இல்லாட்டி அடுத்த வேளை சாப்பாடு கிடைக்காதே இனி எழுதற பதிகள்ள பூவையர்களின் பற்றி எழுதறேன்னு சொல்ல ரெண்டு பேரும் வந்தாங்க படிங்க இனி .

பெ அ: இனி மேல நாந்தான் அறிமுகப்படுத்துவேன்



( ஒரு கண்டிஷன் வேற போட்டாங்க.)

சரி போடுண்ணா போடுறேன் தோப்புக்கரணம்ன்னு சொல்லி ஒத்து கிட்டேன் . அதனால இந்த பதிவு முழுவதும் மகளிருக்கு உரியது.

சி. அ : முதல்ல நாம அறிமுகப்படுத்தப்போறது ஷைலஜா ஆன்டியைத்தானேம்மா?

அவங்களேதான், கற்றது கை மண் அளவுன்னு அடக்கமா சொல்லற அவங்க எவ்வளவு பெரிய தத்துவங்களை எல்லாம் சொல்லறாங்க தெரியமா?


எண்ணிய முடிதல் வேண்டும்


என்று தைரியம் கொடுக்கறாங்க இவங்கன்னு சந்தடி சாக்குல நானும் கொஞ்சம் எடுத்து விட்டேன்.

சி. அ : இதுல இவங்க பூ, கடிகாரம், பஞ்சவர்ணக்கிளி அத்தனையும் அருமை. கண்ணன் பாடல்ல 100 பாடலை இவங்களும் பாடியிருக்காங்க அல்லம்மா?


அப்ப இவங்க ஆன்மீகப்பதிவரும் ஆயிட்டாங்க.

பெ அ :ஆமா இவ்ங்க, KRS, குமரன் இவர்களோட கூட்டணி ஒரு நல்ல கூட்டணி.

"தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவவகை செய்தல் வேண்டும் "என்னுங்கற கொள்கையோட







எல்லோரடயும் சேர்ந்து தமிழ்ச்சங்கம் வேற நடத்துறாங்க.

ஒரு ஆச்சிரியமாக "காசேதான் கடவுளடான்னு "இவங்க



மங்களூர் சிவாவோட இணைந்து












ஒரு வணிக வலைப்பூவுலயும் எழுதுறாங்க.






சி. அ: அம்மா நாளைக்கு மங்களூர் சிவா அங்கிளுக்கு கல்யாணம் இல்ல அதற்கு வாழ்த்து சொல்லலாமா?






மூவரும்: அன்பு மங்களூர் சிவா, இல்லறத்தில் நல்லடி எடுத்து வைக்கும் தாங்கள் அந்த வடபழனி முருகன் அருளால் சகல வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.

பல விதங்களில் எழுதி சேவை செய்யும் ஷைலஜாவிற்கு நன்றிகள்.
----------------------------

பெ. அ : துளசி டீச்சரைப் பத்தித்தான் நாம அடுத்து சொல்லணும் இது என்னோட ஆர்டர்.

சி அ: ஏம்மா அவங்க நெசமாவே டீச்சராம்மா? எந்த பாடம் நடத்தறாங்க?

பெ அ: ஆமா, அவங்க பெரம்ப எடுத்தா வலைப்பதிவர்கள் அத்தன பேருமே நடுங்குவாங்க

அதனாலதான் அவங்களுக்கு பேரு டீச்சர்.

சி. அ : அவங்க ஒரு யாணைத்தலைவி. இல்ல இல்ல தானைத்தலைவி. அவங்க யாணை , பூணை அனிமேஷன் அத்தனையும் சூப்பரோ சூப்பர், அதைப் பாக்கறதுக்காகவே நான் அவங்க பதிவை படிப்பனாக்கும்.

"நினைத்தது, கண்டது, கேட்டதுன்னு" எல்லாத்தையும் நகைச்சுவையா தன்னோட துளசி தளம் வலைப்பூவுல எவ்வளவு அருமையா எழுதுறாங்க துளசி கோபால் அம்மா.

இந்த அம்மா எப்படி இவ்வளவு நகைச்சுவையா எளிமையா எழுதறாங்கண்ணு ஆச்சிரியப்பட வைக்கற எழுத்து அவங்களோடது.

பெ. அ : இவரோட ஒரு நல்ல குணம், எந்த புதிய பதிவர் எழுதுனாலும் அதைப்படிச்சு பார்த்துட்டு அதுல பின்னூட்டமும் இட்டு அவங்கள் உற்சாகப்படுத்தறதுதான்.


சி. அ : எல்லாருக்கும் புதுப் புது பேரு கொடுக்கறதுல இவங்க சூப்பர் இல்லம்மா?

ஆமாம்மா ஊர் ஊரா இல்ல நாடு நாடா சுத்தற (உலகம் சுற்றும் வாலிபி) இவங்க அங்க கிடைக்கற காய்கறி, பழம், பூன்னு எல்லாத்தையும் சூப்பரா போட்டோ எடுத்து தன்னோட வலைப்பூல போட்டு அருமையா புதுப் புது பேரும் கொடுத்து கலக்கறாஙக.

பெ அ : அப்ப துளசி டீச்சரோட சேவை நம்ம அனைவருக்கும் தேவைன்னு சொல்லறீங்களா?




அதுல என்ன சந்தேகம், இல்லாட்டி இவ்வளவு விஷயங்களை எப்படி நாம தெரிஞ்சுக்க முடியும்.

சாப்பிட வாங்க!



ன்னு எல்லாருக்கும் விருந்து இவங்களும் படைக்கறாங்க





இவங்க கூட்டணியில இருக்கற மத்தவங்க
















இன்னும் இவங்களோட பெருமைகளை சொல்லிகிட்டே போகலாம் ஆனாலும் மத்தவங்களைப்பத்தியும் சொல்லனுமல்ல அதனால அவங்களுக்கு நன்றி சொல்லிட்டு அடுத்தவருக்கு போகலாமா?




சரி சரி
------------------------------------------

சி. அ : அடுத்தவங்க நாச்சியார் அம்மா. திருப்பாவை பாடிய கோதை நாச்சியாரோட பேரையே தன்னோட புணைப்பெயரா வெச்சிருக்கற இவங்க தன்னோட வலைப்பூவுக்கு வில்லிபுத்தூர் ஸ்ரீ ன்னு பேர் வெச்சிருக்காங்க இல்லம்மா?

ஆமா "வருகை தரும் புதியவர்களுக்கும் வந்தவ்ர்களுக்கும் நன்றின்னு" சொல்லி அருமையான எளிமையான எழுத்தால மகிழ்விக்கறாங்க இவங்க.

பெ அ: இவங்க எழுத்து ரெம்ப சிம்பிளாத்தான் இருக்கும், ஒவ்வொரு நிகழ்வுகளையும் இவங்க சொல்லுற அழகே அழகு.






வலைப்பூவுல இவங்க எழுதுறது எல்லாமே சாதாரணமா எல்லார் வீட்டுலயும் நடக்கிற விஷயங்கதான் ஆனாலும் அதை இவங்க எழுதற விதம் தான் அருமை.

நிழலின் அருமை,காலைக் காற்று, சூழும் இசை என்றும் வேண்டும்ன்னு இவங்க அசைபோடுற அனைத்துமே அருமை.

தங்களுக்கும் நன்றி வல்லி சிம்ஹன் அம்மா.

-------------------------------------------


இன்றைய தினம் ஈசான முகம் என்று அழைக்கப்படும் முந்நீர் கலங்கிட எழுந்த காய் சின ஆலம் உண்ட நீலகண்டரின் மேல் நோக்கிய முக தரிசனம் காணுங்கள் அன்பர்களே.


The fifth aspect (face) of the Lord( Kailash ) is "Ishaan" . at the top of the peak, facing up to the sky. This face is the one that bestows blessings on mankind. Thus the five faces of the Lord represent five acts of the Lord.


ஈசான முகம் : சிறுபிள்ளை முகம் போல் பளிங்கு நிறமாய் ஈசான திசையை பார்த்து மேல் நோக்கி இருக்கும் முகம். பஞ்ச பூதங்களில் ஆகாயத்தை குறிக்கின்றது, ஐந்தொழிலில் அருளல் தொழிலைக் (அனுக்கிரகம்) குறிக்கின்றது. ஐந்தெழுத்தில் "ய". ஐயன் சதாசிவ வடிவம். அம்மை பராசக்தி வடிவம். சுத்த அன்னம் நைவேத்யம். இம்முகத்தை



ஈஸான: சர்வ வித்யானாம் ஈஸ்வர: சர்வ பூதானாம்
பிரஹ்மாதிபதிர் பிரஹ்மணோதிபதிர்
ப்ரஹ்மா சிவோ மே அஸ்து சதாஸ’வோம்.

என்னும் ஊர்த்வ வக்தர ப்ரதி பாதக மந்திரத்தால் துதிக்கின்றோம்.

சிவலிங்கம் போல் விளங்கும் கயிலாய மலையின் மேல் நோக்கிய முகம் இதோ கையிலங்கிரியிலே ஈசான முகத்தை நேரடியாக நாம் பார்க்க முடியாது, மலைதொடரிலே கையிலாய சிகரம் மட்டு 2000 அடி உயரம் அதிகம் மேலும் நான்கு புறமும் பர்வதங்களால் சூழப் பெற்றுள்ளதாலும் கைலாயத்தின் சிகரத்தின் அடிவாரத்திலே ஆழமான பனியாறுகள் இருப்பதாலும் யாரும் கையிலங்கிரியை நெருங்குவதே கடினம் எனவே ஈசான முக தரிசனம் இந்த படத்தின் மூலமாகவே கிட்டும்.



See how the HOLY Kailash resemblesa Shiv Lingam with the extension on the east side.


This face, faces upward and so it is difficult to witness this face from ground during the parikrama. This picture is the photo taken from helicopter.



ஐயனின் தரிசனம் கண்டோம் அம்மையின் தரிசனமும் வேண்டுமல்லவா, அன்னை கிரி ராஜ குமாரி, பர்வத ராஜ புத்ரியின் கர்ப்பகிரகம் தான் டோல்மா கணவாய் , யாத்திரையின் மிகவும் உயரமான இடம். திபெத்திய கொடிகளால் சூழப்பட்டுள்ளாள் அன்னை பார்வதி.

இந்துக்களுக்கு டோல்மா, சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராஜ கன்யை பார்வதி தேவி, திபெத்தியர்களுக்கு அவர்களுடைய காவல் தெய்வம் தாரா தேவி.



View of Dolma Pass in June





சிவசக்தி ஸ்தலம் டோல்மா கணவாய்









Dolma Pass is the highest point in the whole yatra. It is also called as Shiv Sakthi sthal. This is considered to be the sanctum santorum of the Lord and Mother. Dolma is Tara Devi for Tibetians and Parvati for Hindus. We worship mother here. It is also the difficult point in the whole of Parikrama. Our group was lucky that we stayed here for around 30 minutes and did havan by Her Grace, as the weather was extremely good.


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது