07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 8, 2009

ரம்யாவிற்கு பிரியாவிடை

சென்ற ஒரு வார காலமாக ரம்யா ஆசிரியராகப் பொறுப்பேற்று அருமையாக, நிறைவாகப் பொறுப்பை நிறைவேற்றினார். ஏழு பதிவுகள் இட்டு ஏறத்தாழ ஆயிரத்து ஐநூறுக்கும் மேலாக மறு மொழிகள் பெற்று மன நிறைவுடன் விடை பெறுகிறார்.

இவரது மறுமொழிகள் எண்ணிக்கை வலைச்சர சரித்திரத்தில் ஒரு சாதனை. இவ்வளவு எண்ணிக்கையில் மறுமொழிகள் இதுவரை வரவில்லை. அவ்வகையில் இவர் பெருமைக்குரியவரே !

பதிவுகளும் புதுமையாக கடவுள் வாழ்த்து, ஒரு சமூக நிகழ்வு, புதிய பதிவர்கள் அறிமுகம், உலகநீதிப் பாடல், முடிவுரை என பல பத்திகளைக் கொண்ட பதிவுகளாக இருந்தன. பல புதிய நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்தினார்.

இவருக்கு வலைச்சரத்தின் சார்பிலும் என் தனிப்பட்ட முறையிலும் நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகளைக் கூறி விடை அளிக்கிறோம்.

சீனா
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் ஏழாம் நாள் என் ஆசிரியர் பணி




கடவுள் வாழ்த்து
===============
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்


ஆசிரியருக்கும் மற்றும் அனைத்து வலைச்சரம் நிர்வாகிகளுக்கும்
கட்டித் தங்கங்களான
சுட்டித் தங்கங்களை
தன் சரத்தால் கட்டி அணைத்து
புதுமையான பல பரிமாணங்களைப்
பெற்று சிகரத்தை தொட்ட
வலைச்சர வைரங்களுக்கு
முத்துப் பரல்கள் நிறைந்த
மாலை அணிவிக்கின்றேன்




நன்றி நவிலல்
=============
எந்த ஒரு துறையிலும் பிரபலமாக வேண்டுமானால், அதற்கு நல்ல செல்வாக்கும், நல்ல பின்னணியும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு தனி மனிதனின் திறமையும் பேசப்படும். ஆனால், என் போன்ற மிகச் சாதாரணமான - ஆனால் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டவர்கள் வெளிச்சத்திற்கு வரவேண்டுமானால் வலைச்சரம் போன்ற ஒரு தளம் தேவை.



இளம் வயதில் சிறுகதைகள் எழுதி, வார வெளியீடுகளில் வந்துள்ளன. ஆனால் அதிலும் பல சிக்கல்கள்; விளைவு முன்னேற்றம் தடைப் பட்டது. சில மாதங்களுக்கு முன்பு, "Will To Live" தமிழாக்கம் "வாழ்ந்தே காட்டுவேன்".

என்ற வலைப்பதிவை துவங்கினேன். ஆனால் சற்றும் எதிர் பாராத விதமாக வலைச்சரம் என்ற தளத்தில் ஆசிரியர் என்ற மேன்மையான பொறுப்பை ஒரு வாரகாலத்திற்கு அளித்து, இந்த அண்டத்தில் 'ரம்யா'வை பற்றி பேசவைத்தது இந்த வலைச்சரம் தான்.


வளரும் சமுதாயத்திற்கு நல்ல பல கருத்துக்களை தரும் தளமாக இந்த வலைச்சரம் அமைய எல்லாம் வல்ல "சமயபுர மாரியம்மனை" வேண்டி வணங்குகிறேன்.



இந்த வாய்ப்பினை அளித்த வலைச்சர பொறுப்பாசிரியர் சீனா அவர்களுக்கும், மற்றும் வலைச்சர உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



இந்த ஒரு வாரம் வலைச்சரத்தின் ஆசிரியராக பணியாற்றி வந்த சமயம் எனக்கு வந்து வாழ்த்திய மற்றும் பின்னூட்டங்கள் அளித்து ஊக்கப்படுத்திய எனது நண்பர்கள் பட்டாளாம் மற்றும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.




நண்பர்களுக்கு
=============
எனது நண்பர்களுக்கு மூன்று கோடிகளைக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

இந்த மூன்று கோடிகளையும் கடைப்பிடித்தால் நம் வாழ்க்கையில் எந்த அவமானங்களுக்கும் உட்பட மாட்டோம் என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறேன்.

இது என் பாட்டி எனக்கு சொல்லிக் கொடுத்தது.
============================================
மனிதர்களின் எண்ண அலைகளின் வீச்சு எனக்கு புரியாது, புரிந்தவுடன் இந்த கோடிகளை நினைப்பேன். உடனே என் மனம் ஒரு முடிவிற்கு வந்துவிடும்.



ரம்யாவின் இந்த கோடிகளின் திணிப்பை தவறாக எடுத்துக் கொள்ளாமல் ஏற்றுக் கொள்ளுங்கள்.



மூன்று கோடிகள்
===============
1. மதியாதார் முற்றம் மதித்தொருகால் சென்று மிதியாமை கோடிபெறும்

2. கோடி கொடுத்தும் குடிபிறந்தோர் தம்மோடு கூடுவதே கோடி பெறும்

3. கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கோடாமை கோடி பெறும்




முடிவுரை
=========
பயன் கருதாது அறஞ்செய்க
=========================
நன்றி ஒருவற்குச் செயத்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா -- நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்

பொருள் விளக்கம் :- நற்குணமுடையவனுக்கு உதவி செய்தால், அவனுஞ் சிறந்த உதவியை வணக்கத்தோடு விரைந்து செய்வான் என்பதாம்.



பிரிதலின் உணர்வை பல முறை உணந்தித்ருக்கிறேன். அந்த பிரிவு என்ற உணர்வு இன்றும் என் மனதை உருக்குலைய வைத்து விட்டது. கடந்த 7 நாட்களாக ஊண், உறக்கம் இல்லாமல் வலைச்சரம், ஆசிரியர் பணி அது மட்டும் தான் எனது நினைவில் இருந்தது. இந்த காலக்கட்டத்தில் என் வீட்டில் யார் எது பேசினாலும் என் பதில்கள் தாறுமர்றாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு என் நினைவு மொத்தமும் வலைச்சரம் தான். இன்று என் பதிவு எப்படி அமைக்கலாம்? எதை கொடுக்கலாம்? இந்த என் நினைவுகள் தான் என் மனதில் ஆளப் பதிந்த வலைச்சர எண்ணத்தின் வண்ணங்கள். இன்று இந்தப் பணி நிறைவு பெற்றிருந்தாலும், வலைச்சரம் பற்றிய என் நினைவுகள் என மனதில் இருந்து எப்பவும் பிரியாது.



எனது அன்றாட பணிகளையும் செய்து கொண்டு, வலைச்சர ஆசிரியர் பணியையும் முடித்துவிட்ட நிறைவு என் மனதில் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.



சென்ற வாரம் இந்த நேரத்தில் என்ன செய்யப் போகிறேன் என்று இருந்தது. நாட்கள் தான் எவ்வளவு வேகமாக நகர்ந்து விட்டன!! இன்று எனக்கு கொடுக்கப் பட்ட பணியை ஓரளவிற்கு முடித்து விட்டேன் என்ற நிறைவு இருக்கிறது.
பிரியும் நேரம் நெருங்கி விட்டது நண்பர்களே, சகோதர, சகோதரிகளே நான் உங்கள் அனைவரிடமும் இருந்து விடை பெற்றுக் கொள்கிறேன்.

வலைச்சர பொறுப்பாசிரியர் மேன்மை தங்கிய திரு.சீனா அவர்கள் மற்றும் வலைச்சர உறுப்பினர்கள் அனைவரிடம் இருந்தும் நான் விடை பெறுகிறேன்.



இனிதே வாழ்க!!






வணக்கம்
நன்றியுடன்
ரம்யா










மேலும் வாசிக்க...

Saturday, February 7, 2009

வலைச்சரத்தில் ஆறாம் நாள் என் ஆசிரியர் பணி



கடவுள் வாழ்த்து
==============
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலரான்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு





இன்று என் பார்வையில்



ராமலக்ஷ்மி
==========
இவர் அறிமுகம் கிடையாதுங்க, இவர் கவிதை என்ற கயிற்றால் எல்லாரையும் கட்டி போட்டு விடுவாங்க. அவ்வளவு அருமையா எழுதறாங்க. இவரோட எல்லா கவிதைகளையும் நான் படிச்சிட்டேன்.



இவர் கோர்த்த முத்துக்களை உங்களுக்காக எடுத்து வந்திருக்கிறேன்.



நான் ரசித்த ராமலக்ஷ்மியை இங்கு கூறுவதில் பெருமை அடைகிறேன். எழுதுவதிலும், ரசித்தலிலும் புசித்தல் இன்பம் அடைகிறோம் அல்லவா??எனக்கு சமீபமாகத் தான் இவர்களைத் தெரியும். இவர்கள் வலைப்பதிவு சிறிது நாட்களுக்கு முன் தான் பார்க்க நேர்ந்தது. இவர்களின் எல்லா பதிவுகளுமே ரொம்ப அருமையா இருந்திச்சு. எல்லாவற்றையும் படித்து பிரமித்துப் போனேன்.




கல்விச் சந்தை
=============
July 17, 2003 திண்ணை இணைய இதழில் 'நீதித் தேவதையே நீ சற்று வருவாயா?' என்கிற தலைப்புடன் வெளிவந்தது. ரொம்ப அருமையா இருந்திச்சுங்க, நான் படிச்சு ரசிச்சேன்!! இதுக்கு மேல் என்ன சொல்ல... அந்த கவிதைச் சொற்களில் நான் அமிழ்ந்து போனேன்! நீங்களும் படிச்சு மகிழுங்கள்!! கல்விச் சந்தை.


முதல் நாளில் என் முதல் கவிதை
==============================

ராமலக்ஷ்மி தனது பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எழுதிய இந்த கவிதை, ஐம்பது ஆண்டு நிறைவையொட்டி வெளியிட்ட சிறப்பு மலரில் வெளியானது. அப்போது அரங்கேற்றிய கவிதை இப்போது நாம் படிக்க உதவிய வலைப்பதிவிற்கு நன்றி. புது வருடத்தின் முதல் மாதம் முதல் நாளில் முதல் நாழிகையில் இதோ என் முதல் கவிதை..


மின்னுகிறது கிரீடம் - மகுடம் சரிந்தது
=================================
ராமலக்ஷ்மியின் அடுத்த முத்து. இதை நான் சொல்லி நீங்க ரசிக்க முடியாது. நீங்க போய் படிங்க அப்போதுதான் அதன் முழு அழகும் உங்களுக்கு தெரியும். மின்னுகிறது கிரீடம் - மகுடம் சரிந்தது.



அடுத்து சமூக சேவைக்கு தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மாமனிதரைப் பற்றி இங்கே சொல்ல விழைகிறேன்.





P. கல்யாணசுந்தரம்


அப்பா இன்று என் வலைச்சரத்தின் ஆறாம் நாள் ஆசிரியர் பணியை உங்கள் பாத கமலத்தில் சமர்பிக்கின்றேன்.



உங்களைப் பற்றியும் கொஞ்சமா சொல்லிக்கிறேனே!!


திரு.கல்யாணசுந்தரம் அவர்கள் பாலம் என்ற அமைப்பை வைத்து சமூகச் சேவை செய்து வருகிறார். எனக்கு இவரின் அறிமுகம் ஆன அந்தச் சம்பவத்தை மிகப் பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். திரு.கல்யாணசுந்தரம் சேவை செய்வதில் கடல் என்று கூறினால் மிகை ஆகாது.



ஒரு சந்தர்ப்பத்தில் திரு.கல்யாணசுந்தரம் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாலம் அமைப்பின் படிகளில் ஏறும்போதே அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து வந்து வரவேற்பு கொடுத்தார். என்ன ஒரு மனித நேயம்!!



நான் பெரியவன், நீ சின்னவன் என்ற எல்லா சொற்களும் அங்கே அடையாளம் தெரியாமல் போய்விட்டது. எளிமை, எளிமை, தன்னலமற்ற இவரின் சேவை இவைகள்தான் எனக்கு அங்கே பிரதானமாகப் பட்டது.



அவரின் நலம் விசாரிப்பில் அப்பா தன் மகளிடம் பேசும் கனிவைக் கண்டேன். சேவைகளை அறியத் துடிக்கும்போது அவரின் மனதை அறிந்தேன். அப்போது அவர் கண்களில் தென்பட்ட ஒளியைக் கண்டேன். அந்த ஒளியில் அவரின் மொத்தச் சொத்துக்களான சுயநலமில்லாத சேவைகளைக் கண்டேன்.


இன்று இங்கு அவரைப் பற்றிக் கூறுவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். பொதுவாக குழந்தைகள் என்றால் அவருக்கு அதீத அன்பு, பாசம், பொறுப்பு கலந்த உதவிகள். இவை எல்லாம் என் மனதை எங்கோ கொண்டு சென்றன.


பொது வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டால் இந்த உள்ளம் மட்டும் இருந்தால் போதும் நாம் எத்துணை சிகரம் வேண்டுமானாலும் தொடலாமே!!



ஒரு நல்ல உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், எளிமையான வாழ்க்கை முறை கொண்ட உயர்ந்த நோக்கங்கள். அவர் காந்தியடிகளின் கொள்கைகளை கடை பிடித்தார். உலகம் நம்மை கவனித்தால் என்ன கவனிக்காவிட்டால்தான் என்ன என்பது இவரின் பிரதான கொள்கை.


எப்பொழுது சென்று உதவி கேட்டாலும், யாரும் அவரை தவறாக நினைக்க மாட்டார்கள். இப்போ கொடுத்தால் மறுபடியும், மறுபடியும் வந்து கேட்பாரோ என்றெல்லாம் நினைக்க மாட்டார்கள். மறுபடியும் அவர்களாகவே வந்து உதவிகள் செவார்கள். அந்த அளவிற்கு அவரின் மேல் நம்பிக்கை. ஏழைகளுக்கு உதவி செய்வதில் அவருக்கு நிகர் அவரேதான்.


மனித நேயத்தில் தலை சிறந்த மாமனிதர். அவரின் வாழ்க்கை வரலாறு, ஒரு அருமையான கவிதை என்று தான் சொல்ல வேண்டும்.


பிறந்தது மேலகருவேலங்குலம் கிராமம், Nangunari taluk in Tirunelveli district. அந்த கிராமத்தில் மொத்தம் முப்பது வீடுகள்தான். அந்த கிராமத்தில் ரோடு, பேருந்து, மின்சாரம், ஒரு சிறு பெட்டி கடை இப்படி எந்த வசதியும் கிடையாது.


கெரோசின் விளக்கு இல்லை என்றால் மெழுகுவத்தி வெளிச்சத்தில் தான் படித்தது, அப்போது எனக்கு பத்து வயது என்று அவரே கூறி இருக்கிறார்.



தனது ஒரு வயதில் தந்தையை இழந்தார். பள்ளிப் படிப்பு முடிந்தவுடன், கல்லூரிப் படிப்பில் B.A. தமிழில் பட்டப் படிப்பு படிக்க St. Xavier's College, Tirunelveli சேர்ந்தார். அந்த நிர்வாகம் வேறு மொழி எடுத்து படிக்குமாறு பரிந்துரை செய்தது. ஆனால் திரு.கல்யாணசுந்தரம் அவர்கள் மறுத்து விட்டார்கள். அவரின் தீர்க்கமான முடிவைப் பார்த்து அசந்து போனார்கள்.


கருமுத்து தியாகராஜ செட்டியார், the founder of MTT ஹிந்து காலேஜ். அந்தக் கல்லூரியின் நிறுவனர், இளைஞர்களின் படிப்புச் செலவுகள் அனைத்தையும் அவரே ஏற்றுக் கொண்டார். அந்த நல்ல உள்ளத்தின் உதவிகளும், அன்பும் இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது என்று அந்த நாட்களை பற்றி மிகவும் பெருமையாக கூறுவார். அந்த நாட்கள் எனக்கு மறுபடியும் கிடைக்காது என்று ஆற்றாமையுடன் கூறுவதை கேட்கும்போது அவரின் நன்றியுணர்ச்சி நம் மனதை நெகிழச் செய்யும்.


மெட்ராஸ் பல்கலைகழகத்தில் "நூலக அறிவியல்" படித்துக் கொண்டிருந்த சமயம் ஒரு திருப்புமுனை நிகழ்ந்தது. இந்தியா - சீனாவுக்கு இடையேயான யுத்தம் நடை பெற்றுக் கொண்டிருந்தது. அப்போது இருந்த பிரதம மந்திரி "பண்டிட் ஜவர்ஹலால் நேரு" அவர்கள் யுத்தத்தில் பொருட்களை இழந்தவர்களுக்கு தேவையான நிதி உதவி திரட்டுவதாக வானொலியில் அறிவித்ததை கேட்ட திரு.கல்யாணசுந்தரம் அவர்கள்.



அப்போது முதலமைச்சராக இருந்த "பெருந்தலைவர் காமராஜ்" அவர்களை சந்த்தித்து தன் கழுத்தில் இருந்த தங்கச் சங்கலியை கழட்டி கொடுத்தார். அநேகமாக அவ்வாறு உதவி செய்த மாணவர்களில் அவர்தான் முதன்மையாக திகழ்ந்தார்.


முதல்வர் "பெருந்தலைவர் காமராஜ்" அவர்களுக்கு அந்த இளைஞனின் இரக்கம் வெகுவாக கவர்ந்தது. தன் அபிமானத்தை வெளிப்படுத்தும் வகையில் 1963'ம் வருடம் வந்த மே தின விழாவில் திரு.கல்யாணசுந்தரம் அவர்களை பாராட்டினார்.



பிறகு தூத்துக்குடியில் உள்ள "குமரகுருபரர் கலைக் கல்லூரியில்" 'நூலகப் பொறுப்பாளராக' பதவி ஏற்றார். தனது 45 வயதில் தனது முழுக் கவனத்தையும் ஏழைக் குழந்தைகள் மீது திருப்பினார். உதவிகள் பல செய்து வந்தார். தான் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின் முழுவதுமாக ஈடு படலாம் என்று முடிவிற்கு வந்தார்.


மாதாந்திர ஊதியத்தையும் ஏழைகளுக்கு கொடுத்து விடுவார். தனது சாப்பாட்டை இரு வேளையாக குறைத்துக் கொண்டார். அதற்கும் உணவு விடுதியில் பகுதி நேர பணியாளராக உழைத்தார்.



அவரின் பூர்வீக சொத்து விற்றுக் கிடைத்த பணத்தையும், அதே போல் ஊதிய நிலுவையில் கிடைத்த ரூபாய் ஒரு லட்சம் பணத்தையும் மாவட்ட ஆட்சியாளரிடம், ஏழைகளுக்கும் மற்றும் அனாதைகளுக்கும் உதவி செய்யுமாறு கொடுத்து விட்டார்.


திருமண ஆகாத இவர் எல்லா குழந்தைகளுக்கும் தந்தை என்று தான் கூறுவேன். தனது வாழ்க்கையை ஏழைகளுக்காக அர்ப்பணம் செய்து விட்டார் என்றால் அது மிகையாகாது.



பாலம் என்ற அமைப்பை ஆரம்பித்து அதன் வழியாக பல உதவிகளை செய்து வருகிறார். இந்தியாவைப் பொறுத்த வரை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற எல்லாவற்றிற்கும் இந்த அமைப்பு உதவிகள் பல செய்து வருகின்றன.



மனித உள்ளங்கள் ஏன் அவரை நம்புகிறார்கள் என்றால் அவருடைய எளிமைதான் முதல் காரணம். ஏழைகளுக்கு நிகராக, ரயில் நிலையத்திலும் , நடை பாதையிலும், இது போன்ற இடங்களில் எங்கு படுத்து உறங்க என்று யோசிக்க மாட்டேன், எனக்கு என்று ஒன்றுமே வேண்டாம், எளிமையான வாழ்க்கை ஒன்றே போதும். இதுதான் இவர் அடிக்கடி கூறுவது. என்னால் எந்த கடினமான வேலைகளும் செய்ய முடியும். உணவு விடுதி, laundry இப்படி எந்த இடத்திலும் என்னால் வேலை செய்ய முடியும் என்று நிரூபித்தவர்.


அவர் மிகவும் பெருமையாக நினைவில் வைத்திருப்பது.
`Man of the Millennium' இது அமெரிக்க அரசால் கொடுக்கப்பட்ட பட்டம்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி திரு.பில் கிளிண்டன் அவர்கள் திரு.கல்யாணசுந்தரம் அவர்களின் சமூக சேவையால் ஈர்க்கப்பட்டு, அவரைப் பாராட்டி முப்பது கோடி ரூபாய் அன்பளிப்பாக கொடுத்தார். தனக்காக அந்த பணத்தில் இருந்து ஒரு சல்லிக்காசு கூட எடுத்துக் கொள்ளாமல், அதை அமெரிக்காவில் உள்ள ஏழைக் குழந்தைகளின் நலனுக்காக அன்பளிப்பாக கொடுத்து விட்டு வந்தார்.



இவரைப் பற்றி கூற வேண்டுமானால் நிறைய சொல்லலாம். மற்றுமொரு சமயத்தில் கூறுகிறேன்.



பொறுமையாக படித்த என் அன்பு நண்பர்களுக்கு மிக்க நன்றி!!













எனக்குப் பிடித்த உலக நீதி
இயற்றிவர்: உலகனாதனார்
=========================
சேராத இடந்தனிலே சேர வேண்டாம்
செய்நன்றி யொருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடுங் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைப்பட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்
வாராருங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!!













இன்று என் முடிவுரை
===================
நல்லதையே செய்வோம்
நல்லதையே நினைப்போம்
இந்த நாள் இனிய நாளாக
எல்லோருக்கும் அமையட்டும்!!!




















மீண்டும் வருவேன்....
உங்கள் ரம்யா













மேலும் வாசிக்க...

Friday, February 6, 2009

வலைச்சரத்தில் ஐந்தாம் நாள் என் ஆசிரியர் பணி



கடவுள் வாழ்த்து
==============
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை


வதந்தி வளரும் வேகம்

ஆசிரியர் ஒருவர் வயல் வழியாக வந்து கொண்டிருந்தார். திடீரென்று கடுமையான இருமல் வந்தது. "லொக்" "லொக்" என்று இருமிக் கொண்டே இருந்தார். அவர் தொண்டையில் இருந்து வந்த சளியைத் துப்பினார். மொத்தமாக விழுந்த சளியைப் பார்த்தார். அதில் பறவையின் இறகு ஒன்று கிடப்பதைக் கண்டு திகைத்தார்.


'ஐயோ! எனக்கு என்ன வந்தது என்று தெரியவில்லையே? சளியில் பறவையின் இறகு எப்படி வர முடியும்? என்று தள்ளாடியபடியே தன் வீட்டை அடைந்தார்.
"உங்களுக்கு என்ன? ஏன் இப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டாள் அவர் மனைவி.


"நீ யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று வாக்குறுதி தந்தால் நான் சொல்கிறேன்" என்றார் அவர்.
"தான் யாரிடமும் சொல்ல மாட்டேன், எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்" என்று வற்புறுத்தினாள் அவள்.


நான் துப்பிய சளியில் வெண்மையான சிறு இறகு கிடந்ததைச் சொன்னார் அவர்.
அவளால் அந்த ரகசியத்தைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. பக்கத்து வீட்டுக்காரியிடம்" நீ யாரிடமும் சொல்ல மாட்டேன் என்றால் என் கணவரைப் பற்றிய ஒரு செய்தியைச் சொல்கிறேன்" என்று கூறினாள்.

"நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். தயங்காமல் சொல்" என்று கூறினாள் பக்கத்து வீட்டுக்காரி.

நீ யாரிடமும் சொல்ல மாட்டாய் அல்லவா? என்று மீண்டும் கேட்டாள் அவள்.

"என் மீது நம்பிக்கை இல்லை என்றால் சொல்ல வேண்டாம். இதுவரை எப்பொழுதாவது உன்னை ஏமாற்றி இருக்கிறேனா?" என்று கோபத்துடன் கேட்டாள் பக்கத்து வீட்டுக்காரி.

"கோபம் வேண்டாம் நீ மிக நல்லவள். அதனால் தான் உன்னிடம் சொல்ல வந்தேன். இன்று காலை வயலுக்குச் சென்றிருந்த போது என் கணவர் கடுமையாக இருமி விட்டு எச்சல் துப்பினாராம். அதில் கொக்கின் இறகு ஒன்று முழுமையாக வந்ததாம். அவருக்கு என்ன நோய் என்று தெரியவில்லை. எனக்கு மிகவும் கவலையாக உள்ளது.."

"கவலைப்படாதே, இப்படிப்பட்ட நிகழ்ச்சி சில சமயம் நடக்கும். இதை பற்றி வேறு யாரிடமும் சொல்லாதே. அவர்கள் வதந்திகளைப் பரப்பி விடுவார்கள்" என்று நல்லவளைப் போலப் பேசினாள் பக்கத்து வீட்டுக்காரி.


குளத்திற்கு தண்ணீர் எடுக்கச் சென்ற அவள் தன் தோழி ஒருத்தியைப் பார்த்தாள். "நான் சொல்லும் செய்தியை நீ யாரிடமும் சொல்லக் கூடாது மிகவும் ரகசியம். ஆசிரியரின் மனைவியே என்னிடம் சொன்னாள். அவள் கணவர் வயலுக்குச் சென்றிருந்த போது இருமிவிட்டு எச்சில் துப்பினாராம். அவர் வாயிலிருந்து கொக்கு ஒன்று வெள்யே வந்து பறந்து சென்றதாம்" என்று கூறினாள்.

"என்னா முழு கொக்கா? அவ்வளவு பெரிய பறவை, வாயிலிருந்து வந்து பறப்பது அதிசயமாக அல்லவா உள்ளது? இந்தச் செய்தியை யாரிடமும் சொல்ல மாட்டேன்" என்று சொன்னாள் தோழி.


அடுத்தவளிடம் அந்தத் தோழி "ஆசிரியரின் வாயிலிருந்து வெளிவந்த கொக்கு இறக்கை அடித்துப் பறந்து சென்றது" என்றாள்.


சிறிது நேரத்தில் அந்த செய்தி ஊர் முழுவதும் பரவியது.


"உங்களுக்குச் செய்தி தெரியுமா? ஆசிரியரின் வாயிலிருந்து கொக்கு கூட்டமே வெளியே வந்து பறந்து சென்றதாமே"? என்று கேட்டார் ஒருவர்.


"கொக்கு கூட்டம் மட்டும் இல்லை காக்கை, பருந்து போன்ற பறவைகளும் அவர் வாயிலிருந்து வந்தன. அந்த பறவைகளின் கூட்டத்தினால் கதிரவனே மறைக்கப் பட்டு எங்கும் இருள் சூழ்ந்தது" என்றார் மற்றொருவர்.


இந்தச் செய்திகளைக் கேள்விப்பட்ட ஆசிரியருக்குப் பைத்தியமே பிடிக்கும் போல இருந்தது, தப்ப அவருக்கு வேறுவழி தெரிய வில்லை. யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக ஊரை விட்டு இன்னொரு ஊருக்குச் சென்றார் அவர்.


இந்த கதை நமக்கு உணர்த்துவது கண்ணாடி போல் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளதே!!



ரகசியம் என்பது உன் உதட்டுக்குள் இருக்குவரை தான் அது ரகசியம், உதடு தாண்டினால் அது உலகைச் சுற்றி வந்துவிடும்; உருவமும் மாறி விடும்.



இந்த அனுபவம் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கண்டிப்பாக இருக்கும். நம்மிடம் நல்லவர்கள் போல் பேசி நம் நோக்கத்தை தெரிந்து கொண்டு அதை அவர்கள் பாணியில் வடிவமைத்துக் கொள்வதும் நாம் தினம் தினம் வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டு தானே இருக்கிறோம்.



இராகவன் நைஜீரியா
==================
என் பார்வையில் சமுதாயச் சிந்தனை....
ராகவன் உருப்படாத அணிமாவால் என் பதிவிற்கு அறிமுகப் படுத்தப்பட்டார். முதலில் பின்னூட்டம் மட்டும் போட்டுக்கிட்டு இருந்தார். இவருக்கு பதிவர்களால் ஒரு பட்டப் சூட்டப்பட்டது. அதான் பின்னூட்ட சூறாவளி. அப்போ எவ்வளவு வேகம் பாருங்க.

வலைப்பதிவு எனக்கு அளித்த அன்புச் சகோதரர் ராகவன் அவர்கள். சக பதிவர் திரு.குடுகுடுப்பையாரால் "பாசமலர் சிவாஜி கணேசன் / சாவித்திரி" என்ற பட்டமும் அளிக்கப் பட்டது. நன்றி குடுகுடுப்பையாரே!

ஆபாச பின்னூட்டங்கள் இடுபவர்களே! தானாக திருந்துங்கள்! இல்லை கைக்கு காப்பு தயார்!

வலை ஒன்று ஆரம்பித்து, அதில் பின்னூட்டக் கயமைத்தனம் என்று தவறு செய்தவர்களுக்கு வாள் வீச்சு, வேல் வீச்சு போல் ஒரு பதிவு அளித்தார் . ராகவன் அவர்கள். அவருக்காக இந்த பதிவு போடவில்லை. பாதிக்கப் பட்ட எல்லாருக்காகவும் இந்த பதிவு போட்டார் என்றே கருதுகிறேன். இந்த பதிவு. எல்லாராலும் மிகவும் போற்றி பேசப் பட்டது. இது சமுதாயச் சிந்தனை தானே?

எனக்கு அண்ணனிடம் மிகவும், பிடித்த குணம். தனக்காக மட்டும் வாழாமல் பிறர் துயர் கண்டு, ஒரு படி மேலே போய் அத்துயரை துடைக்க எடுத்துக் கொள்ளும் சிரமம் தான் எவ்வளவு. மற்றவர்களுக்காக நியாயம் பேசும் சிலரில் அண்ணனும் ஒரு அங்கம் தான்! ஆபாச பின்னூட்டங்கள்



பதிவுத் திருட்டு, இது ஒரு சமுதாயச் சீர்கேடு இல்லையா?? யாரோட எண்ணங்களை யார் திருடுவது?

இதெல்லாம் சினம் கொண்டு நீதி கேட்டு பதிவு போட்டாருங்க. இந்த சகோதரர் ஏற்கனவே அறிமுகம் ஆனவரு. நான் அறிமுகப் படுத்தவில்லை. அவரின் சமுதாயச் சிந்தனைக்கு எப்போதும் மனதிற்குள் ஒரு சபாஷ் போட்டு கொண்டிருப்பேன். ராகவன் அண்ணா தொண்டு மேன் மேலும் வளர இந்த சகோதரி வாழ்த்த வயதில்லை; வணங்குகிறேன்!! தேவையா இந்த பொழப்பு... வேண்டாம் நிறுத்துங்க!



சேமிப்பின் அவசியம்
==================
இது எல்லாருக்கும் மிகவும் அவசியமான ஒன்றுதானே. இதை பாருங்க இதை ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து கூறி இருக்கிறார். பாத்துட்டு எனக்கும் சொல்லுங்க, சேமிப்பின் அவசியம்.


குடுகுடுப்பையார்
==============
நண்பர் குடுகுடுப்பையார் இருக்காரே! இவரின் எழுத்துக்களை படித்து நான் அசந்து போய் இருக்கிறேன். நகைச்சுவை என்றாலும் சரி, தனது கல்லூரி அனுபவம் என்றாலும் சரி எல்லாவற்றையும் உடுக்கை அடிச்சே சொல்லிடுவாருங்க. ரொம்ப தெளிவா எழுத்து நடை இருக்கும். கல்லூரி நண்பர்களுடன் அட்டகாசம் பண்ணிய அருமையான மனிதர் இவர். என்ன கொஞ்சம் அமைதியானவர் போல தெரியுது, அந்த அமைதியை குடுக்டுடுப்பையாரின் பின்னூட்டம் இடும் முறையில் இருந்து தெரிந்து கொண்டேன். இது சரியா தப்பா? குடுகுடுப்பையார் தான் சொல்லணும்.

குடுகுடுப்பையார் அருமையான சமுதாயச் சிந்தனை கொண்டு அவரின் நண்பர்க்கு அரங்கேறிய ஒரு அவலத்தையும் எழுதி இருக்காரு. இதை படித்து விட்டு பல நாட்கள் அந்த நண்பரை நினைத்து நொந்து போன உறங்கா இரவுகள் பல. அதற்கு காரணம் உள்ளது. என் உடன் பிறந்த சகோதரியும் இதே நிலையில் இப்போ இருக்கிறார்கள். அதை என் பதிவில் பிறகு எழுதுகிறேன்.

சரி, இப்போ நம் நண்பர் குடுகுடுப்பைராரின் நண்பர்க்கு அரங்கேறிய அவலத்தை இங்கே வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறேன். நண்பர் கொடுத்து இருக்கிற பல அறிவுரைகள் நம் எல்லாருக்கும் எப்போதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பயனுள்ளதாக இருக்கும். சோகமா கொடுத்த பதிவு என்று மட்டும் என்னை நினைக்க வேண்டாம். எல்லாருக்கும் முடிந்தவரை அறிதல் வேண்டும். அந்த அறிதலும் நமக்கு பயன் உள்ளதாக இருக்கலாம் என்ற ஒரு நோக்கம் தான்.


நண்டு குழம்பு, சாக்லேட், டைஜின்
=============================
உயிரோட நண்டுகளை பிடிச்சி என்ன அட்டகாசம் நண்பர்களோட பண்ணி இருக்கிறார் பாருங்க. அதை நீங்களும்தான் போய் பாருங்களேன். இதுலே ஒரு முக்கியமான செய்தி! குடுகுடுப்பையாரின் நண்பரின் உடைகளை கொஞ்சம் கவனிக்கணும், மனிதர் இப்படியா உடை உடுத்துவார், இதுக்கு ஒரு பஞ்சாயத்து வைக்கணும். கொஞ்சம் கேளுங்க நீங்களும் என் சார்பில்.
சாவு காப்பீட்டின் அவசியம்
========================
இந்த காப்பீட்டு அவசியம் என்ற பதிவை நான் படிச்சு சிரிச்சதுக்கு அளவே இல்லைங்க. ரொம்ப அருமையான கற்பனைத் திறன் நம்ம நண்பருக்கு. எப்படித்தான் யோசிப்பாங்களோ தெரியலை. அந்த ரகசியத்தை நீங்கதான் படிச்சிட்டு எனக்கும் கேட்டு சொல்லணும்.




இவர்கள் எல்லாம் அறிமுகம் ஆனார்களா? என்று தெரிய வில்லை. ஆனாலும் எனக்கு பிடித்த இவர்கள் உங்களின் பார்வைக்கு.



வியா
=====
இவங்க ரொம்ப அருமையா கவிதை கட்டுரை எல்லாம் எழுதுவாங்க. படித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள், கிடைக்கற நேரத்திலும் நல்ல படைப்புக்கள். அதிலும் எவ்வளவு அருமையா எழுதி இருக்காங்க பாருங்களேன்.


இன்னும் என்னுள் தொடரும் நினைவுகள்
===================================
அவங்களோட பள்ளிக்கூட நினைவுகள் அருமையா பகிர்ந்து கொண்டுள்ளார்கள். என்ன எழுதுறதுன்னு தெரியலை? அதனால் எனது சில தொடரும் நினைவுகள் உங்களுடன்.

மனித வாழ்கையில் மறக்க முடியாத பல விஷயங்கள் இருக்கும். சிலரின் மனதில் அந்த நட்பு, காதல், இனிமையான உறவுகள், சோகம், கண்ணீர், மகிழ்ச்சி என இன்னும் அழிக்க முடியாத,என்றும் தொடரும் நினைவுகள் ஏராளம். என் இனிய வாழ்கையில் இதே மாதிரி நிறைய நினைவுகள்.



நீ இல்லாமல் நானும்
===================
காதலின் வலியை பற்றிக் கூறுகிறார்கள், பாருங்களேன்! படிக்கு போதே வலிக்கிறதே. நீங்களும் படித்து அவர்களின் வலியை உணருங்களேன். மரண படுக்கையிலும், மறக்க மாட்டேன், நீ என்னிடம் விட்டு சென்ற அன்பு வார்தைகளை.. நீ இல்லாமல் நானும்


பொன். வாசுதேவன்
================
இவர் அகநாழிகை வலைப்பதிவு என்று எழுதிக் கொண்டு வருகிறார். இவர் இன்னும் நிறைய எழுத வேண்டும் என்பது எனது விருப்பம். பாருங்க புது வருடத்தை எவ்வளவு அழகா கொனடாடராறு. நான் பயந்துட்டேன் நீங்க ..............?
அவர் கண்முன் நிற்கும் தேவதையின் அழகை அழகா வர்ணிச்ச்ருக்கார், எப்படி? வழக்கம்போல் கவிதைதான். கண் முன் ஒரு தேவதை அலைகளை சேகரித்து வீசுகிறாள் முகத்தின் மீது, தேடறாரு எப்படின்னு கேட்கிறீங்களா?
வலை வீசி தேவதை.


அடர் மழை மௌனமாய், யாருக்கும் தெரியாமல், இறங்கும் வேளையில், உயிர்ச்சுழி தேடிப் பரவுகிறது, நீ வீசிய வலை, அப்படின்னு சொல்லறாரு வாங்க போய் பார்க்கலாம் மிதந்து கொண்டேயிருக்கும் வலை.








எனக்குப் பிடித்த உலக நீதி
இயற்றிவர்: உலகனாதனார்
=======================
வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோ டிணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியைவைத் திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திருடுவாரோ டிணங்க வேண்டாம்
சேர்த்தபுக ழானனொரு வள்ளி பங்கன்
திருக்கைவே லாயுதனை செப்பாய் நெஞ்சே














இன்று என் முடிவுரை
===================
நல்லதையே நினைப்போம்
நல்லவைகளே செய்வோம்
இந்த நாள் இனிய நாளாக
எல்லோருக்கும் அமையட்டும்











மீண்டும் வருவேன்....
உங்கள் ரம்யா
மேலும் வாசிக்க...

Thursday, February 5, 2009

வலைச்சரத்தில் நான்காம் நாள் என் ஆசிரியர் பணி


கடவுள் வாழ்த்து
==============
பாலும் தெளிதேனும் பாகும்
பருப்புமிவை நாலுங் கலந்துனக்கு
நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கக் தமிழ்மூன்றும் தா


மற்றவர்கள் கேலி செய்தால்

ஒரு நாட்டின் தலை நகரத்தில் குப்பன் என்பவன் இருந்தான். அவன் எது செய்தாலும் அவனை எல்லோரும் கேலி செய்வார்கள். அதனால் குப்பன் மனது புண் பட்டது. அவமானம் தாங்க முடியாமல் ஒரு நாள் குப்பன் அரசவைக்கு வந்து அரசரை வணங்கினான்.

குப்பன்: அரசே! வணக்கம் எல்லோரும் என்னை கேலி செய்கிறார்கள் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தாங்க முடியாத கோபம் வருகிறது. நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் தான் அறிவுரை சொல்ல வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொண்டான்.

இந்த வேண்டுகோளைக் கேட்டு அவையில் இருந்தவர்கள் திகைத்து நின்றார்கள். மற்றவர்கள் இவனைக் கேலி செய்வது சரிதான். முட்டாளாக இருப்பதால் தான் அரசனிடமே இப்படிக் கேட்கிறான் என்று அவர்கள் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டார்கள்.

அரசன்: நான் இதற்கு ஒரு நல்ல வழி சொல்கிறேன். பதிலுக்கு நான் எதைக் கேட்டலும் தருவாயா ? என்று கேட்டான் அரசன்.

குப்பன்: பிறர் என்னை கேலி செய்யக் கூடாது; அதற்காக என் உயிரையே கேட்டாலும் தருவேன்.

அரசன்: நான் விரும்பியதும் அதுதான். நான் என்ன சொல்கிறேனோ அதை அப்படியே நீ செய்ய வேண்டும். சிறு தவறு நடந்தாலும் உன் உடலில் உயிர் இருக்காது.

குப்பன்: உணர்ச்சி வேகத்தில் என்ன பேசி விட்டோம் என்று வருந்தினான். அரசே!! நான் என்ன செய்ய வேண்டும் ??

அரசன்: வீரா! ஒரு கிண்ணத்தில் வழிய வழிய எண்ணெய் நிரப்பி குப்பனிடம் கொண்டுவந்து கொடு.

வீரா : இந்தா குப்பா, எண்ணை கிண்ணத்தை கச்சிதமாக வாங்கிக் கொள் அரசர் சொன்னவைகளை நினைவில் வைத்து, இந்த காரியத்தை கச்சிதமாக செய்து முடி.

அரசன்: குப்பா, நீ இந்தக் கிண்ணத்தை எடுத்திக் கொண்டு நகர வீதிகளின் வழியே சென்றுவர வேண்டும். இந்தக் கிண்ணத்தில் இருந்து ஒரு துளி எண்ணெயும் தரையில் சிந்தக் கூடாது. அப்படிச் சிந்தினால் உன் உடலில் உயிர் இருக்காது, போய் வா.

வழிய வழிய எண்ணெய் இருந்த அந்தக் கிண்ணத்தைக் கையில் ஏந்தியபடி கவனமாக நடந்தான் குப்பன். அவன் அப்படிச் செல்வதை பார்த்த பலரும் கேலியும் கிண்டலும் செய்தனர். எதையும் அவன் காதில் வாங்கிக் கொள்ள வில்லை. உயிர் பிழைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் மனது புண் பட்டது இருந்தது.

அரண்மனை திரும்பிய குப்பன்...

குப்பன்: அரசே! நீங்கள் கட்டளை இட்டபடியே செய்து முடித்து விட்டேன். கிண்ணத்தில் இருந்து ஒரு துளி எண்ணெயும் சிந்தவில்லை.

அரசர்: நீ நகர வீதிகளின் வழியாகச் சென்றபோது சிலர் உன்னைப் பார்த்துக்கேலி செய்தார்களாமே உண்மையா?

குப்பன்: எண்ணைய் சிந்தக் கூடாது என்பதிலேயே கவனமாக இருந்தேன், அதனால் அவர்கள் பேசியது என் காதில் விழவில்லை அரசே!

அரசர்: நீ கவனத்துடன் ஒரு செயலில் ஈடுபட்டிருக்கும் போது பிறர் என்ன சொன்னாலும் நீ பொருட்படுத்துவது இல்லையே. அப்படி இருக்கும் போது பிறர் கேலி செய்கிறார்கள் என்று எதற்காக என்னிடம் வந்தாய்?

குப்பன்: அரசே! உங்களால் இன்று நான் நல்ல பாடம் கற்றுக்கொண்டேன். இனி யாரும் என்னைக் கேலி செய்யும்படி நடந்து கொள்ள மாட்டேன். அப்படியே கேலி செய்தாலும் அதைப் பொருட்ப்படுத்த மாட்டேன்.

இதை மிகவும் மகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டு குப்பன் அங்கிருந்து புறப்பட்டான்.

எப்போதும் நாம் நமது செயல்களை செவ்வனே செய்யவேண்டுமே அல்லாமல் அவங்க என்ன கூறுவார்கள், இவங்க என்ன கூறுவார்கள், அப்படின்னு நினைக்கக் கூடாது. யார் மனதிலே காயங்கள் இல்லை, காயத்துக்கு மருந்து காலம்தான், என்று நினைத்தாலே போதுமே!!

நம்மை வெல்ல இவ்வுலகத்தில் யார் இருக்கிறார்கள் ?

இந்த நாளில் நான் ரசித்த சில புதியவர்கள்

ஹரிணி அம்மா

==============
கணவனா? காதலனா?...
ஒரு நொடி தாமதமானாலும் --> அப்படின்னு சொல்லி கணவனை காதலிக்கும் கண்மணியாத் திகழ்கிறார். போய் படிச்சு பாருங்க. அப்புறம் எல்லாரும் அவங்களை மாதிரியே......

பார்த்திபன் கனவு, சில்லென்று ஒரு காதல், இதெல்லாம் சொல்லி அவுங்க வீட்டிலே உண்மை எல்லாத்தையும் ஒத்துக் கிட்டாராம். எல்லாமே கவிதை தாங்கோ படிச்சு ரசிங்க

குழவி: மலர்களின் சிரிப்பினைக் கண்டு மகிழாதார் உண்டோ? குழந்தையோட சிரிப்பைப் பார்த்து அசத்தலா ஒரு கவிதை எழுதி இருக்காங்க இந்த கவிதாயினியைப் போய் பாருங்களேன், உன் ...

நிலாவும் அம்மாவும்
=================
கிருஷ்ணா! கிருஷ்ணா! உங்க எல்லாருக்கும் நீங்க எப்டி பிறந்தீங்கன்னு உங்க அம்மா சொல்லிருப்பாங்க...ஆனா கிருஷ்ணர் சாமி எப்டி பிறந்தார்னு உங்கம்மா சொன்னாங்களா? எங்க அம்மா சொன்ன கதை நான் சொல்லட்டுமா, நிலா வீட்டு சின்ன குட்டி சொல்லராங்கலாம், கிரிஷ்ணர் வேஷம் எல்லாம் போட்டிருங்கங்க. அந்த அழகை போய் பாருங்களேன்.

பொங்கல் தெரு விழா. என்ன செஞ்சீங்க அத்தை மாமா பொங்கலுக்கு.....கரும்பு, அந்த குட்டி பாப்பா பொங்கல் வாழ்த்து சொல்லறாங்க, அந்த அழகையும் பாருங்களேன் மாறு வேடப் போட்டியில் பரிசு எல்லாம் வாங்கினாங்களாம்

ரெக்கை கட்டி பறக்குதய்யா அம்மாவோட சைக்கிள். அப்படின்னு அழகா பாடிகிட்டு சூப்பர்ஆ சைக்கிள் ஓட்டறாங்க பாருங்க அந்த குட்டி பாப்பா. நான் பாத்துட்டேன் அந்த அழகை நீங்களும் பாருங்களேன்.

இந்த நாளில் நான் ரசித்த சில நகைச்சுவை நாயகர்கள்

இவர்கள் எல்லாம் என் பார்வையில் நகைச்சுவை அரசர்கள். இவங்க எல்லாம் ரொம்ப நல்லா எழுதறவங்க. இவங்களை எல்லாம் நான் அறிமுகப் படுத்துவதாக நினைக்காதீங்க. ரொம்ப அருமையா சிரிக்க வைப்பாங்க. எப்படித்தான் கற்பனை பண்ணுவாங்களோ??.

நசரேயன்
========

இவரு இருக்காறே ரொம்ப கில்லாடிங்க. நல்லா வயறு முட்ட சாப்பிட்டிட்டு இன்னைக்கு என்னா பதிவு எழுதலாம்னு மோட்டுவளைய பாத்துகிட்டே இருப்பாராம், அப்படியே தூங்கிடுவாராம். ஆனா இவரு அதிருஷ்டம் முழிச்சிகிட்டு இருக்கறபோது வராத கற்பனைகள், கனவில் தலை விரிச்சி ஆடுமாம். உடனே இவர் அதை அப்படியே மனசுலே படம் பிடிச்சி, அப்புறமா அதை பதிவா போடுவாராம். இதுதான் நான் நசரேயனைப் பற்றி இதுவரை அறிந்த நிலவரம். என்ன ஒரே கலவரமா இருக்கா??

என் முதல் நேர்முகத் தேர்வு
=========================

வழக்கம் போல படிச்சிட்டு வேலை தேடி அலையற அவலத்தை, அவர் கண்ணோட்டத்தில் ஒரு சிரிப்பா சொல்லி இருக்காரு. ஆனா இது கனவு இல்லையாம் அனுபவமாம். நம்புங்க ப்ளீஸ். ஆனா, மேனேஜர் கேட்ட கேள்விக்கு சரியாதான் பதில் சொல்லி இருக்காரு. சரியா? இல்லையான்னு? கொஞ்சம் போயி பாத்து எனக்கும் சொல்லுங்களேன். எதுக்கும் கொஞ்சம் உஷாரு.

வேர் ஆர் யு புட் ஆப்? ன்னு ஒரு கேள்வியை கேட்டு புட்டாரு. என்னடா இது புட் ஆப்.. படிச்சா மாதிரி ஞாபகம் இல்லையேன்னு, அந்த "வேரை" ஆணிவேரா வச்சி சொல்லவும் ஒரு தயக்கம், அதனாலே முதல் கேள்வியை விட்டு பிடிக்கலாம்னு. நீங்க கேட்டது எனக்கு புரியலை சார் ன்னு சொன்னேன்.மறுபடியும் திருப்பி சொன்னாரு, நானும் அதே பதில் சொன்னேன். என் முதல் நேர்முகத் தேர்வு..


சங்கம் திவால்
=============

சங்கத்திலே கடன் வாங்கிகிட்டு வெளி நாட்டுக்கு போய்ட்டாங்களாம். அது யாருன்னு இப்போ லிஸ்ட் எடுக்கச் சொல்லி காவல் நிலையத்திற்கு சம்பந்தப் பட்டவங்க எல்லாம் கம்ப்ளைண்ட் கொடுத்து இருக்காங்களாம். என்ன செய்ய? இவங்களுக்கு பணம் கடன் கொடுத்தவங்க மஞ்ச கடுதாசி எல்லாம் கொடுத்துட்டாங்களாம். யோசிங்க! என்ன பண்ண போறாருன்னு போயி அங்கே தான் பாருங்களேன், ஏன்னா நானும் அந்த சங்கத்திலே பணம் போட்டு இருக்கேன். எனக்கும் வந்து சொல்லுங்க திவாலா நிஜம்மா இல்லே ஹவாலாவா ?? பேச்சு வார்த்தை நடக்குது. என்ன நடந்து என்ன பண்ண??

சங்க தலைவர் : என்ன பொருளாளரே நம்ம சங்கத்தோட நிதி நிலைமை எப்படி இருக்கு போட்ட பணம் கிடைக்குமா?? சங்கம் திவால்

இது கள்ளக்காதல்?
================

ஏதோ புதிர் போடற மாதிரி ஆரம்பம். எதுக்கும் கொஞ்சம் உஷாரா இருப்போம். மறுபடியும் இங்க வச்சி மொக்கை போடுறதுக்குள்ள சாந்தி மின்சார ரயில் நிலையம் போய்விட்டாள்.

அவளை ஓடிபோய் பிடிக்கிறதுக்குள்ள மூச்சு 300 மைல் வேகத்துல வாங்குது. இதெல்லாம் வேறே நடக்குது. போயி பாருங்க என்ன அட்டகாசம் பண்ணராருன்னு. இது கள்ளக்காதல்?


உருப்புடாதது_அணிமா

====================
திரு. அணிமா அவர்கள் பழகுவதற்கு இனிமையான நண்பர்ங்க என்ன கோவமா பேசினாலும் உங்களை சிரிக்க வச்சிடுவாரு நல்ல நகைச்சுவை மிகுந்த நண்பர். இந்த அணிமாவை நான் வன்மையா கண்டிகிறேனுங்க, இந்தியா போறேன்னு சொன்னாரு, அதுக்கு நம்ப எல்லாம் வேண்டாம்னு போறதா? அதுக்குதான் இந்த கண்டிப்பு. நானும் நிறைய முயற்சி பண்ணி அணிமா அவர்களை தேடி பாத்துட்டேனுங்க, நம்ப தம்பி S.K. கிட்டே கூட சொன்னேன், யப்பா தம்பி நம்ப அணிமா அங்கிட்டு எங்கிட்டாவது கண்ணுலே பட்டா உடனே பதிவு உலகத்துக்கு அனுப்புன்னு. தம்பி S.K.யும் ஆளுங்க, வேண்டியவங்க, வேண்டாதவங்க (என்ன வேண்டாதவங்க?? ), மற்றும் போலீஸ், CID எல்லாம் வச்சி தேடினாராம், ஆனா அணிமா சிக்கலையாம். இதுதான் இதுவரை நிலவரம்.

பாருங்க நைஜீரியாவில் நடந்த பயங்கரம் (பதிவர்-வாசகர் சந்திப்பு) போட்டு ஒரே அலம்பல் பண்னறாரு. படிச்சிட்டு நீங்களே சொல்லுங்க இதெல்லாம் கொஞ்சம் ஓவரு இல்லே????

இவரு அப்பப்போ எஸ் ஆய்டுவாறு. அப்பப்போ வந்து எஸ் ஆனதுக்கும் சேர்த்து எல்லார் கிட்டேயும் மல்லு கட்டுவாரு. இப்ப இங்கே போய் பாருங்களேன் என்ன அலம்பல் பண்றாருன்னு ( மீண்டு வந்த) அணிமா is back ( இது அந்த back இல்லீங்க )

நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.., இனி மேலும் பொது இடத்தில் புகைபிடிக்கும் முன் யோசியுங்கள், அப்படீன்னு சமுதாயச் சிந்தனையுடன், அணிமாவோட சொந்த கருத்தையும் சேர்த்து சொல்லி இருக்காரு, இந்த பழக்கம் வேண்டாம்னா நல்லது தானுங்களே. நல்லது யாரு சொன்னாலும் ஏத்துக்கணும் இல்லையா? இங்கே பாருங்க என்ன அழகா படங்கள் போட்டு விவரத்தோட சொல்லி இருக்காருன்னு.


விஜய்
=====
வெட்டி வம்புன்னு சொல்லுவாங்க ஆனா விஜய்....

காணக் கண்கள் கோடி வேண்டும்
=============================
காலை 5.00 மணி. பெங்களூர் மார்கழிக் குளிரில் ஜாகிங் வாக்கிங் போகும் கடமை கண்ணாயிரங்கள் கூட இழுத்துப் போர்த்தி உரங்கும் நேரத்தில் நான் என்ன செய்கிறேன். மார்கழி மாசத்தில் அதிகாலையில் கோவிலுக்கு வரச் சொன்ன்னாள் அம்மா. அதிகாலையில் எழுந்து குளிரை எதிர்கொண்டு, ஸ்வெட்டர் மஃப்ளர் ஏதும் இல்லாமல் சில்லென்று அடிக்கும் காற்றில் நடந்து பெருமாளை சேவித்து வந்தோம். இதெல்லாம் நடந்தது ஒரு வாரம். ஒரே வாரம். அடுத்த வாரத்திலிருந்து, “அம்மா, நேற்று ஆஃபீஸிலிருந்து 12 மணிக்குத் தான் மா வந்தேன்” என்று இழுக்க, பிள்ளைக்காக பெருமாளைத் துரந்தது, மார்கழி மாதத்துக் குளிருக்கு தனி மகத்துவம் உண்டுங்க. அதுவும் பெங்களூர்லே நம்ம விஜய் பாவம்ங்க. என்ன பாடு படராருன்னு பாருங்க. பித்து மனம் கொண்ட தாய் மனது.

ஹம் ஹோங்கே காம்யாப்
=======================
ச்சேசே விஜய் ரொம்ப நல்லவரு. வெட்டி வம்பும் பண்ண மாட்டாரு, திட்டவும் மாட்டாரு. இந்த பாட்டு நம்ப நண்பருக்கு ரொம்ப பிடிக்குமாம். கொஞ்சம் அமைதியா இருந்து பாருங்க. உங்க காதுலே விழலையா?? ஹையோ ஹையோ, விஜய் இங்கே பாடலைங்கோ, பெங்களூர்லே பாடறாரு.

இந்த வருடத்தில் எப்படியாவது என் உடம்பு எடையைக் குறைப்பது என்ற தீர்மானத்தை, என்ன தான் காயத்ரி(தங்க்ஸ் தங்க்ஸ்), என் சம்மதமேயில்லாமல் அவளாக நிறைவேற்றிக் கொண்டாலும், நானே கோதாவில் இறங்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

ரொம்ப குண்டா இருக்காராமா!!! பாவம் ரொம்ப குண்டக்க மண்டக்க கஷ்டப் பட்டிருக்காரு.

ரொம்ப யத்தினப் பட்டு தலை கீழாக சிரசாசனம் செய்கையில், கைக்கடியில் ஏதோ கடித்துத் தொலைக்க அப்படியே, மாட்டு வண்டி குடை சாய்வது போல் கட்டிலுக்கும் சுவருக்கும் இடையே இருக்கும் இடுக்கில் விழுந்து தொலைக்க, சிரசாசனம், குண்டக்கா மண்டக்காசனம் ஆனது. விஜய் என்னா ஆனாறுன்னு தெரியுனுமா. உடனே விரைந்து செல்லுங்கள், இதோ உங்கள் விஜய் விஜய் விஜய்...

ரயில் பயணங்களில்
==================
அடுத்த நீண்ட பயணம், சென்னையிலிருந்து கொல்கத்தா. இப்போதும், கூட வந்தவர்களில் பெறும் பாலும் ஆந்திரா மற்றும் ஒரிஸ்ஸாவைச் சேர்ந்தவர்கள் தான். ஆங்கிலத்தில் பேச்சையெடுத்தாலும், “கீ ஆஷ்சே”, “எந்துக்கு, ஆய்ப்பெயந்தி” என்று அவர்கள் பாஷையிலேயே பதிலளிக்க, நம்மால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கொல்கத்தா வரை மௌன விரதம் தான்.

இப்படி எல்லாம் பாஷை தெரியாமல் கஷ்டப் பட்டதை அருமையா சொல்லி இருக்காரு. உங்களுக்கும் இது பிடித்திருக்கும்ன்னு நினைக்கிறேன். கொஞ்சம் போயி அவரை எட்டிப் பாத்துட்டு வந்திடுங்களேன். ரயில் பயணங்களில்.






எனக்குப் பிடித்த உலக நீதி
இயற்றிவர்: உலகனாதனார்
========================

குற்றமொன்றும் பாராட்டித் திரியா வேண்டாம்
கொலைகளவு செய்வாரோ டிணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோ டெதிர்மாறு பேச வேண்டாம்
கோயிலில்லா ஊரிற்குடி யிருக்க வேண்டாம்
மற்றுநிக ரில்லாத வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே




இன்று என் முடிவுரை
===================

நல்லதையே நினைப்போம்
நல்லவைகளே செய்வோம்
இந்த நாள் இனிய நாளாக
எல்லோருக்கும் அமையட்டும்










மீண்டும் வருவேன்....
உங்கள் ரம்யா



மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது