மலரும் நினைவுகள்! - முதல் நாள்
➦➠ by:
வே.நடனசபாபதி
மலரும் நினைவுகள்! - முதல் நாள்
நன்றி நவிலலும்
சுய அறிமுகமும்
வணக்கம்
வலைப்பதிவுலக நண்பர்களே! இந்த வார வலைச்சரத்தின் ஆசிரியராக இருக்கப் பணித்த திரு
சீனா அவர்கட்கு, முதற்கண்
எனது மனமார்ந்த நன்றிகள். பதிவுலகின் ஜாம்பவான்கள் செய்த பணியை தொடர என்னால் முடியும்
என்ற நம்பிக்கையில் உங்கள் ஆதரவோடு தொடங்குகிறேன்.
என்னைப்பற்றி ...
மருத்துவம் படிக்க
ஆசைப்பட்டு இடம் கிடைக்காததால், வேளாண்மை அறிவியல் படித்து, மாநில மற்றும் மத்திய
அரசின் வேளாண் துறைகளில் பணி ஆற்றி பின், வங்கியில் சேர்ந்து
34 ஆண்டு காலம் பணி புரிந்து ஒய்வு பெற்றவன்.
பள்ளியில் படிக்கும்போதே, எழுத்தாளரும், எனது அண்ணனுமான திரு வே.சபாநாயகம் அவர்களின் எழுத்தைப் பார்த்து நாமும் எழுதவேண்டும் என்ற எண்ணிய எண்ணம் அப்போது ஈடேறவில்லை.
பணி மூப்புக்குப் பின் இணையதளத்தில் உலா வந்தபோது, தமிழ்மணத்தில் வெளிவந்த பல்வேறு துறைகளில் அறிவும் அனுபவமும் பெற்றவர்களின் பதிவுகளைப் பார்த்த பின், ஒரு நாள் ஏன் நாமும் நம்முடைய அனுபவங்களை பதிவில் எழுதக்கூடாது என்று எண்ணினாலும், எப்படி வலைப்பதிவை ஆரம்பித்து பதிவிடுவது எனத் தெரியாததால், உடனே அதை செயலாக்க முடியவில்லை.
பின்பு அதிரை வலைப்பதிவில், நண்பர் மதிப்பிற்குரிய அப்துல் சலாம் மஸ்தூக்கா அவர்களின்
‘சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது
எப்படி?' என்ற தொடரைப் படித்ததும் தைரியமாக நினைத்துப்பார்க்கிறேன் என்ற தொடரை 2009 ஆம் ஆண்டு சனவரி திங்கள் 30 ஆம் நாள் தொடங்கினேன்.அவருக்கு இந்த நேரத்தில்
மறுபடியும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
பதிவு எழுதத் துவங்கிய புதிதில்
என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் திரு சென்னை பித்தன் அவர்கள், திரு க.வாசுதேவன் அவர்கள் மற்றும் எனது
அண்ணன் திரு வே. சபாநாயகம் அவர்கள் ஆகியோருக்கு எனது நன்றிகள்.
எனது வலைப்பதிவை முதன்முதல்
தனது ‘தீராத பக்கங்கள்’ வலைப்பதிவில் புதிய பதிவர்கள் என்ற தலைப்பில் அறிமுகப்படுத்திய திரு
மாதவராஜ் அவர்களுக்கு நன்றி!
என்னை முதன் முதல் வலைச்சரத்தில் ‘கலையழகு முத்துக்கள்’ என்ற தலைப்பின் கீழ் அறிமுகப்படுத்திய திருமதி மனோ சாமிநாதன் அவர்கட்கும்
பிறகு அறிமுகப்படுத்திய திரு சென்னை பித்தன், கவிஞர் மதுமதி, திருமதி தென்காசி தமிழ் பைங்கிளி, திருமதி சசிகலா, திரு T.N.முரளிதரன், திரு தி.தமிழ்இளங்கோ ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
கடந்த நான்கு ஆண்டுகள் காலமாக எனது வாழ்வில் நடந்த நிகழ்வுகளை ‘நினைவுகள்’ மற்றும் நிகழ்வுகள் என்ற தலைப்புகளிலும், இடையிடையே எனக்குபிடித்த கவிதைகள் மற்றும் செய்திகளை வெவ்வேறு தலைப்புகளிலும் வெளியிட்டு வந்திருக்கிறேன்.
இதுவரை நான் இட்ட 265 பதிவுகளிலிருந்து
எனக்கு அதிகம் பிடித்தவைகளை பட்டியலிட விரும்புகிறேன்.
1.நமக்குப் பிடித்த தலைவர்கள் கவிஞர்கள் போன்றோரை பெருமைப்படுத்த
தெருக்கள் அல்லது நிறுவனங்கள் ஆகிவைகளுக்கு அவர்களது பெயரை சூட்டிய பிறகு, அந்த பெயர்கள் சிதைக்கப்படுவதைப் பார்த்து மனம் வெதும்பி இட்ட பதிவு ‘என்ன பெயரில் அழைக்கலாம்? எப்படி அழைக்கலாம்?’
3. ஒரு போட்டிக்காக எழுதி ஒரு சில காரணங்களால் அனுப்ப இயலாத கவிதையை பற்றிய பதிவு ‘நம்பிக்கை’
4 அவ்வைப் பாட்டி யாரை மரம் என்று கிண்டல் செய்கிறார் என்பதைப் பற்றிய பதிவு ‘எனக்குப் பிடித்த பாடல்கள் 3’
5. பொழுதைப்போக்க நான் வரைந்த ஓவியங்கள் பலவற்றை பதிவில் வெளியிட்டிருந்தேன். அதில் ஒன்று ‘எனது ஓவியங்கள் 4’ என்ற இந்த பதிவு
6. நமது மாநிலத்திற்கு வர இருந்த தொழிற்சாலைகள் வேறு மாநிலத்திற்கு சென்றதன் காரணம் அறிந்ததும், இட்ட பதிவு ‘விதையைத் தின்னும் விவசாயிகள்’
7. நகைச்சுவை பிடிக்காதவர் உண்டோ? வங்கியாளனான எனக்கு பிடித்த நகைச்சுவை பற்றிய பதிவு ‘வங்கியாளரைப் பற்றிய நகைச்சுவை 5’
8 தர்மம் தலை காக்கும் என்ற பழமொழியை அனுபவித்து உணர்ந்ததால் எழுதிய பதிவு ‘தர்மம் தலை காக்குமா’
10. பணியில் இருந்தபோது எனது Boss களாக இருந்த சிலரைப் பற்றிய தொடர் பதிவு ‘Boss கள் பலவிதம்' இது 40 பகுதிகளாக வெளியிடப்பட்டது.
12. மின்னல்வரிகள் பால கணேஷ் அவர்கள் கேட்டுக்கொண்டதிற்கிணங்க எழுதிய தொடர் பதிவு ‘மீண்டும் பள்ளிக்குப்போகலாம்’
13. மலையாளிகள் அனைவரும் ஓணம் கொண்டாடுவது போல் தமிழர்கள் அனைவரும் ஏன் பொங்கல் கொண்டாடுவதில்லை என்ற ஏக்கத்தில் எழுதிய பதிவு ‘பொங்கல் வாழ்த்து’
14. ஆண்டில் ஒரு நாள் மட்டும் குழந்தைகள் நாள் கொண்டாடிவிட்டு மற்ற நாட்களில் மறந்துவிடுவது பற்றிய பதிவு ‘மழலை உலகம்மகத்தானது’
15. நான் ஏன் எழுதுகிறேன் என்பதைப் பற்றிய பதிவு ‘நினைத்துப் பார்ப்பது ஏன்?’
இனி வரும் நாட்களில் சந்திப்போம் புதிய தலைப்புகளுடன், புதிய எண்ணங்களுடன் வலைப்பதிவர்களின் அறிமுகத்தோடு.































