07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, August 2, 2013

தூரிகை கண்ட முத்துக்கள் - நாள் 4

என் இனிய தூரிகை கண்ட முத்துக்களுக்கு இதமான காலை வணக்கம். என்ன எல்லாரும் அலுவலகம் சென்றபின் பதிவுன்னு பார்க்கறீங்களா..? சரி அலுவலகத்தில ஓய்வு நேரம் இருக்கும்போது அப்படியே இந்தத் தூரிகை கண்டெடுத்த முத்துக்களின் ஒளியில் அவர்கள் பூந்தோட்டம் சென்று மலர்களின் மணம் நுகர்ந்து வாழ்த்திட்டு வாங்க.


இன்று பிரமிக்க வைக்கும் இயற்கைய ரசிச்சுட்டு தொடர்ந்து மற்ற மலர்களைக் காண்போம்.
கண்முன்னே இருப்பதை

காணவிடாது மறைத்து..
வளர்ந்ததை வீழ்த்தியும்
வீழ்ந்திருப்பதை 
உயரத்தில் அமர்த்தியும்
இடம்மாற்றித் 
தடம் மாற்றித் தடுமாறவைக்கும்
ஆடிமாதக்காற்று...
பிரமிக்க வைக்கும் இயற்கை...!!!

ஹிஷாலி அவர்களின் கவரிமானின் கற்பனை காவியம் பெயருக்கேற்ப வலைத்தளமும் அழகு. அழகு வலைத்தளத்தில் மட்டுமல்ல நேர்த்தியாக பல்சுவையாய் பகிர்ந்திருக்கிறார் தன் சிந்தனைகளை.  கவிதை, சமூகக்கவிதை, பெண்ணியக்கவிதை, ஜோக்ஸ், சிறுகதை ஹைக்கூ...இன்னும் நிறைய.  அவற்றில் ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல ஒரே ஒரு சமூகக் கவிதை பகிர்கிறேன்
//அய்யோ என்றாலும்
ஆருயிர் திரும்பாது
அதற்குள் அறிந்துகொள்
இதுவே ஆரம்பம்
அதுவே உலகின் ஓரின்பம் ...!//
இவரின் மற்ற பதிவுகளைகளையும் சென்று பார்வையிடுவோம். ஹிஷாலியின் பதிவுகள் தொடர்ந்திட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

*****
சகோதரர் திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வலைத்தளம் அனைவரும் அறிந்த ஒன்றே. அனைவரையும் எப்பொழுதும் ஊக்கப்படுத்தியும், தன் பல்வகைப்பட்ட பதிவுகளால் நமையெல்லாம் மகிழ்வித்தும் வரும் இவரது தளத்தில் பேசுங்கள்..பேசுங்கள்...ஆனால்..? இதில் பேச்சின் தன்மையைப்பற்றி அழகா விளக்கியிருக்கிறார். மனிதனின் பிரச்சினைக்கு காரணமான குணம் என்ன..? (அவரின் பதிவில் குறிப்பிட்ட சில வரிகள் இங்கே பகிர்வதற்கு  எண்ணினேன் இயலவில்லை..) அவரது தளத்தில் சென்று பார்வையிடுவோம்.  இவரது தளம் ஏற்கனவே அறியப்பட்ட தளமாக இருப்பினும் புதிதாக வலைச்சரத்தில் 
அறிமுகமாகியிருக்கும் வலைப்பூ நண்பர்களும் அறியும் எண்ணத்தில் பகிர்ந்துள்ளேன்.
சகோதரருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
*****
தேவா. சு அவர்களின் வாரியர் (Warrior) ஜெயிக்கப்பிறந்த இவர் ஆன்மீகப்பயணம் செய்து, அனுபவத்தையும் பகிர்ந்து சமூகத்தைப்பற்றிய கட்டுரைகள் தொகுத்து காதல் கவிதையில் மூழ்கி கதையும் சொல்லி சமூகக்கதையின் மூலம் நமக்கு நம் சமூகத்தில் நடப்பனவற்றைப் படம்பிடித்துக்காட்டுகிறார்.  இவரின் சமூகக்கதையில் பைத்தியம் 
கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.  
 //"பைத்தியக்காரனுகள பாரேன்....பசிச்சுதுன்னா குப்பைத் தொட்டியில இருந்து ஏதோ ஒரு எச்சில் எலைய எடுத்து தின்னுட்டு சொகமா சுத்திட்டு இருக்கானுக....நம்ம பொழப்ப பாத்தியா நாய் படாத பாடு...."
யாரோ யாரிடமோ சொல்லிக் கொண்டு பைக்கில் பறந்து கொண்டிருக்க....//
பைத்தியம் அல்லாதவரைக்கூட பேசிப்பேசி பைத்தியமாய் மாற்றிவிடும் சமூகம்...இவரின் எழுத்துக்கள் கண்ணெதிரே ஒரு பைத்தியம் நிற்பதுபோல் தோன்றுகிறது.  
தோழருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.  தொடரட்டும் தங்களுடைய எழுத்துப்பணிகள்..
*****
வாழும் வரை நன்மைக்காக வாழ்ந்து பார்க்கவிரும்பும் R.V.Saravanan அவர்களின்
குடந்தையர்... வலைப்பூவின்  முகப்பே மனதைக்கவரும் படியாக அமைத்துள்ளார். இவரது தளத்தில் அனுபவம் பேசுது, கவிதை சோலை, சிரிப்பு, ஓவியம், சிறுகதைகள் எனப் பல்சுவையான பகிர்வுகள் காட்சியளிக்கின்றன.. சோழர்கால அற்புதம் ஐராவதேஸ்வரம்
பதிவில்   சோழர் காலத்தின் புகழை இன்றளவும் உலகுக்கு உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும்  தாராசுரம் ,கோவிலை பற்றிய சிறப்பு தகவல்களை அழகிய கோயிலின் தோற்றங்களுடன் பகிர்ந்துள்ளார்.

 //தாரன் என்பவன் வழிபட்டதால்  தாராசுரம் எனவும்,இந்திரனின் பட்டத்து  யானை ஐராவதம், தன் சாபம் தீர வந்து வழிபட்டு  பேறு பெற அருளிய இறைவன்  ஐராவதேஸ்வரர் எனவும் இந்த ஸ்தலம் ஐராவதேஸ்வரம் எனவும் பெயர் பெற்றிருக்கிறது// 
கோயிலை தரிசித்து வருவோம் வாங்க..
தோழர் சரவணன் அவர்களுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்.. நாளை வேறு சில மலர்களைக் கண்டு ரசிப்போம் தோழமைகளே. 
காயத்ரியின் தத்துவத்துடன் இன்றைய நாள் இனிதே அமைய வேண்டுகிறேன்.

சிரிப்பில் ஒளிந்திருக்கும் அழுகை

அழுகையில் ஒளிந்திருக்கும் சிரிப்பு
அன்பில் ஒளிந்திருக்கும் கயமை
இரக்கத்தில் ஒளிந்திருக்கும் ஏளனம்
கோபத்தில் ஒளிந்திருக்கும் பொறுமை
சகிப்புத்தன்மையில் ஒளிந்திருக்கும் வெறுப்பு
பசியில் ஒளிந்திருக்கும் வறுமை
பணத்தில் ஒளிந்திருக்கும் கருணை
முரண்கள் அனைத்தையும் 
முடிவின்றி கற்கின்றோம்..!!

அறிமுகமாகும் நண்பர்களுக்கும் வலைச்சரத்தின் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.  தங்கள் அனைவரது எண்ணங்களும் எழுத்துக்களாய் எண்ணற்று வெளிவர வலைச்சரத்தின் மலர்கள் தொடர்ந்து தங்கள் பூந்தோட்டத்தில் மணம் வீசுவோம்.

அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி... _/\_
வாழ்க வளமுடன்... J




மேலும் வாசிக்க...

Thursday, August 1, 2013

தூரிகை கண்ட முத்துக்கள் - நாள் 3



எனதன்பு தூரிகை கண்ட முத்துக்களுக்கு நான்காவது நாளின் மூன்றாவது நாள் மனம்கனிந்த வணக்ககம். _/\_ 

இன்று நம்ம விசு சாருக்கு வேற சூட்டிங்க் இருக்காங்க.. அதான் தூரிகையின் உங்கள் காயத்ரியாகவே அறிமுகப்படுத்திடலாம்னு இருக்கேன்.  அதுமட்டும் இல்லைங்க...உங்க மேல உள்ள அன்பினாலயும்தான். 2 நாளா உங்களுக்கெல்லாம் தல சுத்து சுத்துனு சுத்தியிருக்கும்.  இன்னிக்கு கொஞ்சம் ஓய்வா இருங்க..அதுக்காக இந்தப்பதிவ படிக்காம ஓய்வெடுத்திடாதீங்க..படிச்சு கருத்து சொல்லுங்க.  விசு சார்கிட்ட இருந்து இன்னிக்கு ஓய்வு.  வேண்டுமானா காலை நேரத்துல காயத்ரியின் ஒரு தத்துவத்தோட துவங்கலாமா அறிமுகத்த...??

அதுக்காக தத்துவத்திற்கும் இந்த அறிமுகத்திற்கும் தொடர்பு படுத்தி பார்த்திடாதீங்க...அப்புறம் உங்க நிலைமைய என்னால நினைச்சுக்கூட பார்க்கமுடியல..

தத்துவம் படிச்சிட்டு(தத்துவம் சொன்னா ஆராயக்கூடாது..அனுபவிக்கனும்) மேற்கொண்டு அறிமுகங்கள படிச்சிட்டு கடைசியா ஒரு முரண்பட்ட சிந்தனைய படிச்சிட்டு இன்றைய நாள் முரண் இல்லாம, இனிய நாளாக அமையட்டும்.   வாழ்க வளமுடன். :)

தத்துவம்
நம்மை நாம் 
உணர்வுதற்கு முற்படும் முன்பே, 
உணரப்படவேண்டிய பலவற்றை
உணராமலே 
கடந்துவிடுகிறோம்..
உணர்ந்ததை 
உணர்ந்ததாக 
உணர்வதற்குள் 
காலம் கடந்துவிடுகிறது வாழ்வில்.

சரி வாங்க இன்றைய மலர்களின் மணமறிவோம்.. 


அனிதா ராஜ்  அவர்கள் மனதில் உதிர்க்கும் தமது எண்ணங்களை எண்ண ஓவியத்தில் தீட்டியிருக்கிறார். கதை, கவிதை மட்டுமின்றி அனுபவங்களை மலரும் நினைவுகளாய்ப் பகிர்ந்து நம்முடைய நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் வகையில் தன் எண்ணங்களை எழுத்துக்களாய் வடித்திருக்கிறார். வெளியூரில் இருக்கும் தாய்வீட்டிற்கு மகள் வரும் சமயம் எத்தனையெத்தனை வேலைகளையோ நினைத்து வர அம்மா வீடு அனைத்தையும் மறக்கச்செய்யும்.   மலரும் நினைவுகள் - 4

//“நிறைய வேலை இருக்குனு சொன்னியே” - அம்மா
“எல்லாம் அடுத்தமுறை வரும் போது பார்த்துக்கலாம்மா” இது ஒவ்வொருமுறை நான் செல்லும் போது பரிமாறப் படும் சம்பாஷைனைகளில் ஒன்று.//
தோழி அனிதா ராஜ்  தங்கள் எண்ணங்களை ஓவியமாய்த் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்..

*****
பாண்டிப்பிரியன்(Pandi Priyan)   தென்மேற்குப் பருவக்காற்றில் இருந்து மலையின் அடுத்த பக்கம் வரை சம்பவங்களின் சேகரிப்பாய் இந்த நேற்றைய ஈரம்... தளம்.  முகநூலில் மட்டும் தன்  சிந்தனைகளைப் பகிர்ந்துவந்த இவர் புதிதாக வலைத்தளம் துவங்கியிருக்கிறார்.  கிராமத்து மணம் வீசும் படி யதார்த்தமான நிகழ்வுகளை எடுத்துரைக்கும் இவரின் நான் கிராமத்தாண்டே பதிவு கிராமத்து ஆரோக்கிய வாழ்க்கை முறையினை அழகாய் எடுத்துக்கூறும் விதமாய் அமைந்துள்ளது.
//வெக்கங்கெட்ட விவசாய நாடுல
விவசாயிய மதிக்கிறதில்ல
எம் பொழப்பு உனக்கு அதிசயமா இருக்குது
உன்ன கண்டா எனக்கு புதுசா தெரியிது
நான் கிராமத்தாண்டே
என் சொல்லு உனக்கு புரியாது// 
நாமும் சென்றுதான் பார்ப்போமே எப்படித்தான் நோயின்றி நம் கிராமத்தினரின் வாழ்க்கை முறைப் பற்றிக்கூறுகிறார் என..:)
தம்பி பாண்டியின் நேற்றைய ஈரத்தை என்றும் அவரது பதிவுகளினால் குளிர்விக்க வாழ்த்துகிறேன்.
*****
ஆத்மாவின்  பெயருக்கேற்ப அவரது சுய அறிமுகமே அசத்தல்)  சிட்டுக்குருவி கவிதை, கட்டுரை, புகைப்படம், அனுபவம் எனப்பல்சுவையாய் அமைந்திருக்கிறது இவரது தளம்.  " வன்புணர்வு " குற்றமல்ல என்ற கட்டுரையில் இன்றைய நிகழ்வுகளையும் அதனால் ஏற்படும் விபரீதங்களையும் கூறியுள்ளார். சற்றே கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விசயம்தான். கவிதையும் உணர்வுபூர்வமாகவே கொடுத்துள்ளார் .கவிதைத் திருடர்கள்.

//கவிஞர்கள் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன்
அவர்கள் மிகப் பெரிய சூனியக் காரர்களாமே...
(அப்படியா..??!!)
அவர்களின் எழுத்துக்களுக்கு உயிர்
கொடுக்க யுத்தம் கூட செய்வார்களாம்
பெருமைப் பட்டேன் யாரோ எப்பவோ
என் எழுத்தைப் பார்த்து கவிதை என்று
கூறியதைக் கேட்டு நானும்
கவிஞனாய் இருப்பதையெண்ணி// அருமையான வரிகள். நண்பர் ஆத்மாவின் சிட்டுக்குருவி, சிறகடித்துப்பறக்க வாழ்த்துகள்.

******

ஒளியவன்  நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருருக்கும் இவரின்  ஒளியவனின் சிறுகதைகள் தளத்தில் அறிவியல் புனைவுகள், படிப்பினை, கடந்தகால குறிப்புகள், வலி எனப் பல்வகைப் பதிவுகளைப் பதிந்திருக்கும் இவரின் தளத்தில்  சத்தமின்றிப் பூக்கும் பூக்கள்... சிறுகதை மூலம் இவர் அம்மாவிற்கு எழுதியிருக்கும் கடிதம்.   ///தமிழில் எழுதப்பட்ட அனைத்து காதல் தோல்வி கவிதைகளும் மனப்பாடமே ஆகிவிட்டது ஒரு சமயம். நானும் எழுதினேன் அவளுடன் பகிர்ந்து கொண்ட நாட்களின் வாசத்தையும் மோசத்தையும் விரல் முனை வழியே இணையத்தில். வாசித்தவர்கள் பாராட்டினார்கள், அதில் ஓடிக் கொண்டிருக்கும் வலி அறியாமல்.///  
கடிதத்தில் என்னதான் சொல்லி முடித்திருக்கிறார் தன் அம்மாவிடம் சென்று பார்ப்போம்.  தோழர் ஒளியவனின் எழுத்துக்கள் ஒளிமயமாய்த் தொடர்ந்திட வாழ்த்துக்கள். 
********
முரண்பட்ட சிந்தனைகள்
காலத்தால் ஏற்பட்ட காயங்கள் மனிதர்களாலும்,மனிதர்களால் ஏற்பட்ட காயங்கள் காலத்தாலும் ஆற்றப்படுகிறது... :)

அறிமுகமாகும் அனைத்து மலர்களும் என்றும் நறுமணம் வீச வாழ்த்துகள்.  நண்பர்களுக்கு, அனைவரும் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து படைப்பாளிகளின் எழுத்துக்கள் எண்ணற்று வெளிவர தொடர்ந்து உடன் இருப்போம் தோழமைகளே.

அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி... _/\_
வாழ்க வளமுடன்... :)


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது