அன்பார்ந்த
வலைப்பூ உறவுகளே,
இன்றைக்கு
தான் என்னுடைய பணியை ஆரம்பிக்கிறேன். முதலில் என்னுடைய புகுந்த வீட்டின் உறவுகளை உங்களுக்கு
அறிமுகம் செய்து வைக்கிறேன். ஒரு பெண் தன் புகுந்த வீட்டில் உள்ளவர்களை, உயர்வாக சொல்லும்போது தான், அந்த வீட்டின் சிறப்புகளை காண
முடியும். அது போல் நான் இங்கு எனக்குத் தெரிந்த வலைப்பூ எழுத்தாளர்களை பற்றி சொல்கிறேன்.
கம்பனின்
மீது தீராக் காதல் கொண்டு, அவனுடைய பாடல்களிலிருந்து உவமைகளையெல்லாம் நமக்குத் தந்துக்கொண்டிருப்பவர்
தான் திருவாளர். அன்பு ஜெயா அவர்கள் தமிழ்ப் பந்தல்
ஆஸ்திரேலிய
நாட்டின் ஆளும் கட்சியினை திருவாட்டி. சந்திரிகா சுப்ரமணியம் எவ்வாறு விமர்சிக்கிறார்
என்று இங்கு பாருங்கள் - சந்திப்போமா? சிந்திப்போமா?
பணத்தைப்
பற்றிய ஒரு விரிவான அலசலை, திரு. பக்கிரிசாமி இங்கே தந்திருக்கிறார் ஊக்கமது கைவிடேல்
கானா பிரபாவான
இவர், தான் சந்தித்த வலைப்பதிவாளர்களைப் பற்றி அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார்.
உலா
இவர் தன்னோட இன்னொரு வலைப்பூவில் தான் வலைப்பூ உலகில் பிறந்து
8 ஆண்டுகளை கடந்து விட்டதை நினைவு கூறுகிறார். மடத்துவாசல் பிள்ளையாரடி
பெண்களை சக மனிதராக பார்க்காமல் நுகர்வுப்
பண்டமாய்ப் பார்க்கிறார்களே என்று ஆதஞாப்படுகிறார் ஷ்ரேயா மழை
மகளின் குறும்பை
மிக அழகான ஒரு கவிதையின் மூலம் சொல்லியிருக்கிறார் திருவாட்டி. கீதா மஞ்சுரி அவர்கள்
- கீதமஞ்சுரி
ஆண்களும் பெண்களும் இரண்டு காதுகளை எவ்வாறு பயன்படுத்துக்றார்கள் என்று திருவாட்டி. யசோதா என்கிற மணிமேகலா அவர்கள் ரசிக்கும்படியாக சொல்லியிருக்கிறார்கள்.
அதாவது ஆண்கள் விஷயங்களை ஒரு காதால் கேட்டு, மறு காதால் வெளியிடுவார்களாம் (நச்சுன்னு
சொல்லனும்னா இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுடுவாங்களாம்) ஆனால் பெண்கள்... நீங்கள் படித்துப் பாருங்கள். அக்ஷய பாத்ரம்
திரு. ரட்னசீலன் அவர்கள் சிட்னி முருகன்
கோவிலைப் பற்றிய விளக்கங்களை இங்கே பகிர்ந்து
கொண்டுள்ளார் - yarl puththan
சிவஞானதீபம் சதாவதானி நா கதிரவேற்பிள்ளை
அவர்களின் சரித்திரத்தை இங்கே வழங்கியிருக்கிறார்கள் திரு. சிறீதரன் அவர்கள் - தமிழ் வலையின் மினி நூலகம்
சிட்னி முருகன் கோவிலில் வருடாந்திரம் நடக்கும்
பங்குனி விழாவைப் பற்றி மிக அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறார் கஸ்தூரிபென் நினைவுகள் இலவசம்
நாம எல்லோரும் ஒரு திரைப்படத்தின் விமர்சனத்தை
மட்டும் தான் சொல்லுவோம். ஆனால் இங்க கோச்சடையான் திரைப்படத்திற்கு விமர்சனம் செய்து,
இறுதியில் தன்னோட ஒரு குட்டி கதை மூலமாக இந்த படத்தை சேர்த்த விதம் மிக அருமை. நீங்களும்
படித்துப்பாருங்களேன் - படலை
இறுதியாக, இங்கு ஆஸ்திரேலியாவை இருப்பிடமாகக்
கொண்டு மூன்று தளங்கள் இயங்குகின்றன.
2.
தமிழ்
முரசு அவுஸ்திரேலியா - அதன் இணைப்பாளர் பாஸ்கரன் தமிழ் முரசு
3. உயர்திணை
- அதன் இணைப்பாளராக யசோதா. உயர்திணை
உண்மையில் எனக்கு இதில் ஒரு சிலரை
மட்டும் தான் தெரியும். அவர்களை மட்டும் எவ்வாறு அறிமுகப்படுத்துவது, கண்டிப்பாக இன்னும்
சிலர் இருக்க வேண்டும் என்று எண்ணி, திருவாட்டி, யசோதா அவர்களை தொடர்புகொண்டு கேட்டபொழுது,அவர்கள்
அரைமணி நேரத்திற்குள் மற்றவர்களின் வலைப்பூ முகவரிகளை தந்து உதவினார்கள். அவர்களுக்கு
என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
மேலும் வாசிக்க...
அன்பார்ந்த
வலைப்பூ உறவுகளே,
உங்கள்
அனைவருக்கும் என்னுடைய அன்பு கலந்த வணக்கங்கள். வலைப்பூ உலகத்தில் இரண்டே வயதான
இந்த குழந்தையை நம்பி ஒரு வாரத்திற்கு வலைச்சரத்திற்கு ஆசிரியராகும் பொறுப்பை
ஒப்படைத்த அன்புமிக்க சீனா ஐயாவிற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த ஒரு வாரமும் என்னால் இயன்ற அளவு சிறப்பாக இந்த ஆசிரியப்பணியை செய்ய
முயல்கிறேன்.
என்னையும்
பதிவுலகத்தில் அறிமுகப்படுத்திய ஸ்கூல் பையன் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அடியேனின்
திருநாமம் சம்பந்தம் ஆகும். கடந்த பதினேழு ஆண்டுகளாக மஸ்கட், யுகே, சிங்கப்பூர், மலேஷியா மற்றும் ஜப்பான் எல்லாம் சுற்றிவிட்டு
ஒரு வழியாக ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்து சிட்னி மாநகரில் கணினியை மாரடித்துக் கொண்டிருக்கிறேன்.
வார இறுதி நாட்களில் சனிக்கிழமையன்று சிட்னியில் ஹோல்ஸ்வோர்தி என்னும் இடத்தில் இயங்கும்
பாலர் மலர் தமிழ் பள்ளியில் கடந்த ஆறு வருடங்களாக தமிழ் சொல்லிக்கொடுத்து கொண்டு வருகிறேன்.
உண்மையை சொல்லப்போனால் தமிழ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வதற்கு
பதில் தமிழ் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
(ஏன்னா, அந்த அளவிற்கு நான் தமிழில் ரொம்ப ஸ்ட்ராங்!!!)
2011யில்
நாமளும் ஒரு வலைப்பூவை தொடங்கலாம் என்று எண்ணி உண்மையானவன் என்று பெயர் வைத்து ஒரு
சுபயோக தினத்தில் தொடங்கினேன். அதற்கு பிறகு என்ன எழுதுவது என்று தெரியாமல் அப்படியே
வைத்துவிட்டேன். பிறகு ஒரு வருடம் கழித்து, மீண்டும் அந்த வலைப்பூவை தூசித்தட்டி எழுத ஆரம்பித்தேன்.
நான் சொக்கன்
ஆனதற்கு காரணம் இந்த பதிவில் சொல்லியிருக்கிறேன்.
சிட்னியில்
முதன்முதலில் ஒரு வீட்டை வடகைக்கு எடுப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதை நான் இந்த
பதிவில் சொல்லியிருக்கிறேன். சிட்னியில் வாடகை வீடு
நான் சிட்னியில்
தான் முதன் முதலில் கார் ஓட்டுனர் உரிமத்தை பெற்றேன். அதில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை
இதில் எழுதியிருக்கிறேன். நான் லைசென்ஸ் எடுத்த கதை
எல்லோரும்
கவிதை எல்லாம் எழுதுறாங்களேன்னு, நானும் முயற்சி செஞ்சு பார்த்தேன். அப்பத்தான் கவிதைக்கும் நமக்கும் ரொம்ப
தூரம்னு தெரிஞ்சுது. இருந்தாலும் விடாப்பிடியாக உரைநடையில் காதல் கவிதையை இங்கே எழுதியிருக்கிறேன். காதல் தொகுப்பு
தாய்மை
என்றொரு சிறிய தொடர்கதையும், காதல் கீதம் என்றொரு சற்று நீண்ட தொடர்கதையும் இங்கே எழுதியிருக்கிறேன். தொடர்கதைகள்
என்னுடைய
முதல் அமெரிக்க அனுபவத்தையும், தலைவா திரைப்படத்தில் நடித்த அனுபவத்தையும் இங்கு பகிர்ந்திருக்கிறேன்.தொடர் கட்டுரைகள்
சிறு குழந்தைகளின் நாடகமான "தமிழ் பாடம்" நாடகம் இங்கு சிட்னியில் இரு வெவ்வேறு மேடைகளில் மேடையேற்றப்பட்டிருக்கிறது.
தமிழ் பாடம் - நாடகம்
என்னுடைய
சுயபுராணம் சற்றே நீண்டு விட்டது. அதனால் முடித்துக்கொள்கிறேன். நாளை முதல் பதிவர்களை
அறிமுகம் செய்யும் வேலையில் இறங்குகிறேன்.
பின்குறிப்பு: சிட்னி நேரமானது இந்திய
நேரத்தைக் காட்டிலும் நாலரை மணி நேரம் முன்னதாக இருப்பதால், என்னால்
இந்திய நேரப்படி காலை நேரங்களில் பதிவிட இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மாலையில்
கண்டிப்பாக பதிவிடுகிறேன். சில நாட்களில், அலுவலகத்தில் கொஞ்சம்
வேலை குறைவாக இருந்தால், முன்னதாக பதிவிடுகிறேன்.
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர் வெல்லூர் இராமன் - இவரது வலைத்தளம் : ஒரு ஊழியனின் குரல் - http://ramaniecuvellore.blogspot.in - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த ஆர்வத்துடனும், பொறுப்புணர்வுடனும், ஈடுபாட்டுடனும் - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
இவர் எழுதிய பதிவுகள் : 009
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 065
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 076
பெற்ற மறுமொழிகள் : 118
வருகை தந்தவர்கள் : 2163
வெல்லூர் ராமன் பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.
வெல்லூர் இராமனை - அவரது கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு சுப.சம்பந்தம் என்கிற சொக்கன் சுப்ரமணீயன் ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்
இயற் பெயர் - சொக்கன் சுப்ரமணியன். ஆஸ்திரேலியாவில் ஏழு வருடங்களுக்கு மேலாக கணினித் துறையில் வேலை பார்த்து வருபவர், சிட்னி சொக்கன் என்ற பெயரில் நாடகங்களை எழுதி மேடையேற்றி வருபவர். சிட்னியில் இருக்கும் ஒரு தமிழ் வானொலிக்கு நிகழ்ச்சிகளை வழங்குபவர். உண்மையானவன் என்ற வலைப்பூவில் அனுபவங்களையும், கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.
சொக்கன் சுப்ரமனியத்தினை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் சுப.சம்பந்தம் என்கிற சொக்கன் சுப்ரமணீயன்
நல்வாழ்த்துகள் வெல்லூர் இராமன்
நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...
மனிதன்
என்பவன் தெய்வமாகலாம் என்று கவியரசரின் பாடல் வரிகள் தொடங்கும். மனிதன் தெய்வமாக
வேண்டிய அவசியமில்லை. அவன் மனிதனாக வாழ்ந்தாலே போதுமானது. மனிதம் என்பதை பலரும் மறந்து போய்க்
கொண்டிருக்கிறார்கள். வெற்றி என்பது பலரையும் மயக்கத்தில் ஆழ்த்தி ஆணவத்தில் ஆடச்
செய்கிறது. இது ஒரு புறம். தாங்கள் ஏன் பிறந்தோம், ஏன் வாழ்கிறோம் என்று இலக்கே
இல்லாமல் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று வாழ்க்கையை முடித்துக் கொள்கிற பல
மனிதர்களும் உள்ளனர். தங்களின் வாழ்வை அர்த்தம் மிக்கதாய் வாழ்ந்து மற்றவர்களின்
வாழ்வை இனிமையாக்கியவர்களும் உண்டு. அப்படிப்பட்ட மனிதர்கள் அனைவரையும் வணங்கி
வாழ்த்தி எனது நிறைவுப் பகுதிக்குச் செல்கிறேன்.
என்னைக்
கவர்ந்த சில மனிதர்களைப் பற்றிய அறிமுகம்தான். உங்களுக்கு தெரியாதவர்கள் யாரும்
கிடையாது.
முதலில்
வலையுலகில் இருவரைப் பற்றி நான் சொல்ல வேண்டும்.
வன்மமும்
வக்கிரமும் நிறைந்தவர்களின் உலகமாக பதிவுலகம் மாறி வருவது என்பது சோகமான
யதார்த்தம். அனானிகளாக பலர், நேரடியாக சிலர் என்று அடுத்த பதிவர்களை குத்தி, கீறி,
காயப் படுத்தி வருவதைப் பார்க்கிறோம். காயப்பட்டவன் எதிர்வினை ஆற்றுவதை புலம்பல்
என்று சொல்வதையும் பார்க்கிறோம். அப்படிப் பட்ட பதிவுலகில் அனைவரையும்
வாழ்த்துவது, உற்சாகப் படுத்துவது என்பதுதான் இவரது இயல்பு. மனமாறப்
பாராட்டுகிறேன்.
வலைச்சரத்தின்
பெருமையை எங்கெங்கும் கொண்டு சேர்க்கிற பெருமை இவருக்கே உண்டு. அறிமுகம்
செய்யப்படுகின்ற ஒவ்வொரு பதிவருக்கும் தகவல் சொல்லி அவரை மகிழ்விப்பதை தன்
கடமையாகக் கொண்டுள்ள இவருக்கும் எனது பாராட்டுக்கள்.
இப்போது வேறு
சில மனிதர்களைப் பற்றி பார்ப்போம்.
சிம்மக்குரலோன்
கடுமையான சிவாஜி ரசிகராக இருந்தாலும் இங்கே அவர் எழுதியிருப்பது யாரைப் பற்றி
தெரியுமா?
நண்பர் கரந்தை
ஜெயக்குமார் பகிர்ந்து கொண்டிருப்பது ஒரு சாமானிய மனிதன் பற்றி. படித்து
முடிக்கும் போது அவர் சூப்பர் மனிதராக உருவெடுக்கிறார். இன்னொரு மாமனிதர் பற்றி அவர் விரிவாக
எழுதியுள்ள கட்டுரை நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.
படியுங்கள்.
இன்று
வேலூரில் ஒரு விளம்பரம் பார்த்தேன். இசைஞானி இளையராஜாவின் எழுபத்தி ஒன்றாவது
பிறந்த நாளை ஒட்டி நாளை எழுபத்தி ஓராயிரம் மரக்கன்றுகள் நடும் விழா பெறும் என்று. மனதிற்கு
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சியை விமர்சகர் ஹாஜியோடு நானும்
பகிர்ந்து கொள்கிறேன்.
எனக்கு
மிகவும் பிடித்த பாடகரான கேஜே.யேசுதாஸ் என்ற இசையால் ஆனமனிதன் பற்றிய பதிவு
சரியான விமர்சனங்களோடு. இத்துடன் சிங்காரவேலனே தேவா பாடிய ஜானகியம்மா பற்றிய
பதிவும் இங்கே.
காஷ்யபனின்
இந்த பதிவும் முக்கியமானது. முக்கியமான மனிதர் பற்றியது. அமெரிக்கா வெறுத்தால்
அவர் கண்டிப்பாக நல்ல மனிதராகத்தானே இருந்தாக வேண்டும். அமெரிக்கா போகிறேன்
என்று சொல்லி விட்டு துப்பாக்கி தூக்கிய மனிதரையும் அறிந்து
கொள்ளுங்கள்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த இரண்டு தலைவர்கள் பற்றி மாற்று சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளது. அதைப்
பல மனிதர்களை எப்படி துயரப்படுத்துகின்றனர் என்பதை சொல்லும்.
அணையாத ஜோதி
யார் என்பதை தோழர் மாதவராஜ் அவர்களின் தீராத பக்கங்களை புரட்டி தெரிந்து
கொள்ளுங்கள்.
தோழர்
மாதவராஜ் அவர்களின் மிக முக்கியமான பதிவு மிக முக்கியமான மனிதரைப்பற்றியது. ஏழு
அத்தியாயங்களில் ஒன்றிற்கு மட்டும் இணைப்பு அளித்துள்ளேன். மற்ற அத்தியாயங்களையும்
படியுங்கள்.
யார் அந்த
மாமனிதர்?
அவரைப் போல்
உலகில் படித்தவரும் கிடையாது. அவரைப் போல் உலகில் எழுதியவரும் கிடையாது. மக்களால்
நேசிக்கப்பட்டவர். மக்கள் விரோத அரசுகளால் வெறுக்கப்பட்டவர். எதிர்காலத்தில்
எப்படிப்பட்ட நிகழ்வுகள் வரும் என்று துல்லியமாக கணித்தவர் அவர். ஆனால் அது
ஜோசியமில்லை. உலகம் எப்படிப்பட்ட திசைவழியில் போனால் நல்லது என்பதை வகுத்துத்
தந்தவர். இனி எதிர்காலம் இல்லை என்று ஏளனமாய் பேசியவர்கள் கூட தங்களுக்கு ஒரு
நெருக்கடி வந்த போது அந்த தாடிக்காரரின் புத்தகத்தில் ஏதாவது தீர்வு இருக்கிறதா
என்று புரட்டிப் பார்த்தார்கள்.
ஆயிரம்
ஆண்டுகளின் மாமனிதர் என்று வேறு வழியில்லாமல் பி.பி.சி சொன்ன அந்த மகத்தான மனிதர்
“மாற்றம் மட்டுமே மாறாதது” என்று சொன்னது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. சாமானிய
மனிதனுக்கு தேவைப்படும் மாற்றமும் கூட நிகழ்ந்தே தீரும். அதுவும் அவர் காட்டிய
வழியிலேயே.
நன்றியோடு
உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். வாய்ப்பளித்த வலைச்சரத்திற்கும் நெஞ்சார்ந்த
நன்றிகள் பல. வணக்கம்.
மேலும் வாசிக்க...
இன்று ஞாயிற்றுக் கிழமை. வீட்டில் உள்ளவர்களுக்கு சிறப்பாக
சமைக்கலாம் என்று திட்டமிட்டு அதற்கான பொருட்களை வாங்க
புறப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள், சிக்கன், மட்டன், மீன் என்று வாங்க
புறப்படுபவர்கள் அப்படியே சென்று விடுங்கள். இங்கே உங்களுக்கு
எதுவுமில்லை.
நம்மையும் ஒரு சமையல் விஞ்ஞானி என்று மக்கள் ஒப்புக் கொள்ள
காரணம் இந்த தயாரிப்புதான் அதன் பிற்கு ஏராளமான சமையல்
குறிப்புக்கள் எனது பக்கத்தில் இருக்கும். வலைச்சரத்தில் கூட
அறிமுகமாகி உள்ளது. அதே நேரம் ஒரு சொதப்பல் அனுபவம்
படித்து சிரியுங்கள்.
ஒரு வேதனை கூட உள்ளது. முதலில் இதை படியுங்கள்.
இப்போது இந்த இணைப்பிற்குச் செல்லுங்கள்.
பதிவுலகில் மிகப்பெரிய சாபம் இது. காபி & பேஸ்ட் செய்யுங்கள்,
ஆனால் ஒரிஜனல் யாரென்று நன்றியோடு தெரிவியுங்கள்.
சரி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் புளிக்காய்ச்சல்
தயாரிக்கும் முறையை அறிந்து கொள்ளுங்கள்.
கர்னாடகாவின் சிறப்பு உணவான பிஸி பேளா ஹூலி அன்னா
எப்படி தயாரிப்பது என்று அண்ணன் ஜி.எம்.பி சொல்வதைக்
கேளுங்கள்.
அரிசியோடு வேர்கடலை வேக வைத்தாலும் இறுதியில்
கசகசா, பட்டை வறுத்து அந்த பொடியை சேர்ப்பதும் இன்னும்
சுவை தரும். தேங்காய் துறுவலைக் கூட வறுத்து விட வேண்டும்.
நீங்க செஞ்ச பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள காரமா
திருமதி ராஜி செய்துள்ள அரைச்சு விட்ட கத்திரிக்காய் குழம்பு
செஞ்சுடுங்க.
மீண்டும் மாலை பார்ப்போம்.
மதிய உணவு சாப்பிட்டதும் ஜில்லுனு பாதாம் கீர் சாப்பிடுங்க
நம்ம தயாரிப்புதான்
மேலும் வாசிக்க...