மண்ணின் மணம்!
➦➠ by:
கவிஞர் கி. பாரதிதாசன்
வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்!
மண்ணின் மணம்!
புதுவையுள் ஓங்கிப் பொலிந்திடும்
வலைகள்
புகழினைக்
கண்டுளம் பூத்தேன்!
புதுமையுள் நாட்டைப் புகுத்திடும்
வண்ணம்
போந்துள
பதிவுகள் ஆய்ந்தேன்!
பொதுமையுள் உலகம் புறப்பட வேண்டிப்
பொங்கிடும்
மறவரைக் கண்டேன்!
எதுகையுள் சிறந்த என்கவி யாவும்
எழில்தமிழ்
மண்மணம் அன்றோ!
வலைத்தமிழ் வளர்க்கும் மறத்தமிழ்ப்
புதுவை
வளத்தினை
வடிப்பதென் கடமை!
கலைத்தமிழ் கொஞ்சும்! கவித்தமிழ்
மிஞ்சும்!
கடல்வளம்
போல்அதன் பெருமை!
இலையுறும் பசுமை! ஈடிலா வளமை!
இசைத்திட
இசைத்திட இனிமை!
மலைத்தமிழ் மாண்பைத் தலையெனக்
காத்தால்
வாழ்வினில்
இலையொரு சிறுமை!
மறமியல் கற்ற மாண்புடைத் தமிழன்
வலையியல்
கற்றிட வேண்டும்!
அறமியல் கற்ற அன்புடைத் தமிழன்
அறிவியல்
ஆய்ந்திட வேண்டும்!
திறமியல் கற்ற சீருடைத் தமிழன்
தீந்தமிழ்
காத்திட வேண்டும்!
பொறியியல் கற்ற பொற்புடைத் தமிழன்
புகழியல்
புனைந்திட வேண்டும்!
பாட்டின் இலக்கணம்: எழுசீர் விருத்தம்
நால்விள மும்மா நடைபெறுங் கொடிய
நச்சுவேல் நயனமார் அமிழ்தே [விருத்தப்பாவியல்
பக்கம் - 15]
விளம் + மா + விளம் + மா +
விளம் + விளம் + மா.
ஐந்தாம் சீரில் மோனை வரும்.
--------------------------------------------------------------------------------------------------------
முனைவர் மு. இளங்கோவன்
வலைப்பூ: முனைவர் மு. இளங்கோவன்
முத்தமிழ் தீட்டும் மு.இளங் கோவர்
மொழிந்துள
பதிவுகள் கண்டேன்!
புத்தமுது ஏந்திக் புகழ்த்தமிழ் ஏந்திப்
பொலிந்திடும்
அழகினைக் உண்டேன்!
முத்தொளிர் வண்ணம் புத்தியுள்
மின்னும்
முதுமொழிப்
பற்றினைக் கொண்டார்!
எத்திசை பாட இவர்பணி ஓங்க
இறையவன்
திருவருள் புரிக!
--------------------------------------------------------------------------------------------------------
இராஜ. தியாகராசன்
வலைத்தளம்: புதுச்சேரி
மின்னிதழ் ஒன்றை மீட்டிடும் நண்பர்
வியன்வலை முன்னணி யாளர்!
பொன்னிதழ் போன்றே பூங்கவி யாவும்
புனைந்திடும் நற்கவி சீலர்!
மென்னிதழ் உள்ளம் மேவிய ராசர்
மேன்மையை உரைப்பதும் எளிதோ?
இன்னிதழ்ச் சுவையை இவர்வலை ஊட்டும்
இனிப்புற அனைவரும் செல்வீர்!
--------------------------------------------------------------------------------------------------------
பேராசிரியர் அ. பசுபதி
வலைப்பூ: தேவமைந்தன்
மண்மணம் தேவ மைந்தரின் வலையை
மகிழ்வுடன்
கண்டுளம் பூத்தேன்!
தண்மணம் ஆக்கம் தமிழ்மணம் கொண்டு
தழைத்திட
இங்கதைச் சேர்த்தேன்!
ஒண்மணம் ஊட்டும் ஒப்பிலா நெறிகள்
உலகுயர்
வழிகளைக் காட்டும்!
பண்மணம் வீசும்! படர்நலம் பேசும்!
பாங்கினைக்
கண்டிடச் செல்வீர்!
--------------------------------------------------------------------------------------------------------
சொ. ஞானசம்பந்தம்
வலைப்பூ: இலக்கியச்சாரல்
இலக்கியச் சாரல் எனும்சுவை வலையை
இயக்கும்,சொ.
ஞானசம் பந்தம்!
உலுக்கிய மரமாய் உதிர்ந்திடும் கனிகள்
ஓதிய
பதிவுகள் என்பேன்!
கலக்கிய வினையாய்க் கருத்தினை ஆய்ந்து
கமழ்ந்திடத்
தந்துள ஆக்கம்
குலுக்கிய பரிசாய்க் கொண்டிட வேண்டும்
குதித்துடன்
கண்டிடச் செல்வீர்!
--------------------------------------------------------------------------------------------------------
இரா. சுகுமாறன்
வலைப்பூ: புதுச்சேரி
வலைப்பதிவர் சிறகம்
என்னுடை ஊரின் இன்றமிழ் வலைகள்
இணைந்திடப்
பணிபல ஆற்றும்!
தன்னுடைத் தோள்மேல் தமிழினை துாக்கித்
தழைத்தட
ஊர்வலம் போகும்!
பொன்னுடை மேன்மை! புதுவையின் சீர்மை!
பூத்திடப்
பதிவுகள் போடும்!
இன்னடை யாக உன்னுளம் மாறும்
இவர்வலை
கண்டிடச் செல்வீர்!
--------------------------------------------------------------------------------------------------------
கலைமாமணி
கவிஞர் தே. சனார்த்தனன்
வலைப்பூ: கவிஞர் தே. சனார்த்தனன்
கவிதைகள்
சிந்தையுள் இனிக்கும் செந்தமிழ்
மணக்கும்
தேன்மலர்
சோலையே இப்பூ!
மொந்தையுள் உள்ள முதுசுவை போன்றே
மொழிதனை
அளித்திடும் இப்பூ!
சந்தையுள் உள்ள மந்தையாய் மக்கள்
வாழ்வதை
மாற்றிடும் இப்பூ!
எந்தையின் ஆக்கம்! இனமொழி காக்கும்!
இன்றமிழ்
இல்லமே இப்பூ!
--------------------------------------------------------------------------------------------------------


