07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 10, 2007

படித்ததில் பிடித்தது

கொஞ்ச நாளைக்கு முன்னாடியிருந்து நான் படித்ததில் பிடித்த சில பதிவுகளை del.icio.us ல சேத்து வைக்க ஆரம்பிச்சேன். என் பதிவின் சைட்பாரில் ஒரு லிஸ்ட்டா வரும்.

இன்னைக்கு ஆபீஸ்ல கண்டபடி
ஆணி பிடுங்க வேண்டியிருந்ததால, என் சேமிப்பிலிருந்து சில பதிவுகள உங்களுக்குத் தரலாம்னு இந்தப் பதிவு.

தானத்தில் சிறந்தது பத்மா அர்விந்த்
இதுபோல மிக பிரபலமான பத்திரிக்கைகளில் வரும் கருத்துக்கள் எந்த அளவு மக்கள் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் என்பதை விகடன் ஆசிரியர் குழு அறிவார்களா?

இயேசுவின் கோபம் வரவனையான்
நாடகத்திற்கான நாளும் வந்துச்சு, மனிதர்களின் பாவத்திற்கு சிலுவை சுமந்து கொண்டு ஏசு வருகிறார் அங்கு கூடியிருக்கும் மக்கள் கண்ணீர் வழிய ஏசுவை பின் தொடர்கின்றனர். பார்த்துக்கொண்டிருக்கும் மக்களும் கண்ணீர் வழிய காட்சிகளை உள்வாங்கி கொண்டிருந்தனர்

வேசி!! ராஜ்வனஜ்
அது ஒரு தகர பெட்டிக்கடை. வெளியில் நின்று தான் குடிக்க வேண்டும். முதல் நாளே அவளை கவனித்தேன்.

2. யார் இவர்? உமா கதிர்
"மரியாதைக்குரிய கவிஞர்களுக்கு மட்டும்தான்கடற்கரையில் சிலை வைக்க முடிவெடுத்தோம்!அதனால்தான் அப்படி" என்றார். இவர், கண்கள்சிவக்க "என்ன? அப்படியானால் அப்பர் பெருமான்மரியாதைக்குரியவர் இல்லையா?"

கமல்ஹாசன் - உள்ளிருக்கும் கடவுள்! லக்கிலுக்
பொதுவாக கமல்ஹாசனை ஒரு சதுரத்துக்குள்ளேயோ அல்லது வட்டத்துக்குள்ளேயோ அடக்குவது என்பது மிக சிரமம்.

சிவபாலன்: ஓரினச்சேர்க்கை... சிவபாலன்
ஓரினச் சேர்க்கைக்கு எதிரான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு ரத்து செய்யப்படுகிறது.

நரகாசூரன் ! - கோவி. கண்ணன்
ஐந்து மாடிகள்தி.நகர் கடைகளில் வளர்ந்தும்அடிமையாய்அதே சிறுவர்களைஉழைப்பிற்கேற்றஊதியம் இல்லாமல்ஊதாரியாக மாற்றிவிடஆண்டு தோறும் பிறக்கிறான்அதே நரகாசூரன் !

எனது சித்தூர்கட் செலவு கைப்புள்ள
சித்தூர்கட்டில் இருக்கும் கோட்டை வரலாற்று புகழ்பெற்றது. உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பல சுற்றுலா பயணிகள் இதை பாக்க வர்றாங்க. 560அடி உயரமுள்ள ஒரு மலையின் மீது இந்த கோட்டை அமைஞ்சிருக்கு.

பிரம்மாண்ட நட்சத்திரக்கலைவிழா.. பெனாத்தல் சுரேஷ்
சிக்கனமாய் இருக்கச்சொன்னது ஈரோட்டுக் கிழவன்சிக்குன் குனியாவை அழித்ததுஇந்த திருவாரூர் உழவன்.


தருமி: 197. பொங்கல் - ஜோ-வும் இன்ன பிறரும்....
நீயும் இதை ப்ரசாதமா நினச்சுதான் சாப்பிடணும்னு முரண்டு பிடிச்சா அது என்ன முரட்டுப் பிடிவாதம்?

பொன்ஸ் பக்கங்கள்: The Fountain Head - Ayn Rand
ரோர்க் ஒரு புதுமை விரும்பி. ஏற்கனவே இருக்கும் பழைய வகையிலான கட்டுமானத்தை அப்படியே திரும்பவும் படியெடுப்பதில், அல்லது மாற்றுவதில் சுத்தமாக விருப்பமில்லாதவன்.

நிறங்கள்: தோழிமார் கதை செல்வநாயகி
எடுத்த எடுப்பிலேயே எனக்குப் பாலகுமாரன் கதைகள் பிடிக்காமல் போனது.

துளசிதளம்: தமிழ் அப்படியொண்ணும் அழிஞ்சுறாது.
எப்படியோ வாழ்நாளில் குறைஞ்சது ஒரு புத்தக் கண்காட்சியாவது பார்த்தோம் என்ற திருப்தியுடன் கிளம்புனோம்.

இப்போதைக்கு இவ்ளோதான் முடிஞ்சது. இன்னும் நேரம் கிடிக்கும்போது கொஞ்சம் வித்தியாசமான அடுத்த பதிவு
மேலும் வாசிக்க...

Friday, March 9, 2007

பதிவு படிக்கலியோ... பதிவு

வலைச்சரம் எனும் புதிய முயற்சியை ஆரம்பித்து அழகாகச் செய்து வரும் சிந்தாநதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

முதலில் அவர் எனக்கு வலைச்சரம்பற்றி சொல்லியபோது ஆர்வம் பற்றிக்கொண்டது. இப்ப யோசிச்சாத்தான் கொஞ்சம் இடிக்குது, அதுவும் பொன்ஸின் முந்தைய பதிவுகளப் பாத்ததும் சிகாகோ குளிருலயும் 'குப்'புன்னு வேர்த்திடுச்சு.

கொஞ்ச நாளாக பதிவுகள் படிப்பதை குறைத்துவிட்டேன். சில புதிய முயற்சிகளில் அதிக ஈடுபாடுடன் செயல்படுவதால் வந்த தற்காலிகத் தடை இது. இந்த வார வலைச்சரம் சரியா வரலன்னா கோவிச்சுக்காதீங்க. I will try my best.

முதல் பதிவ என் விருப்பம்போல பயன்படுத்தச் சொல்லிட்டார் பேராசிரியர் (நான் ஆசிரியர்னா சிந்தாநதி பேராசிரியர்தானே?) அதனால. கொஞ்சம் புகுந்து ஆடட்டுமா?

ஏதோ ஒரு தமிழ் பதிவு கன்ணில்பட, எழுதலாமேன்னு ஆர்வம் வந்துச்சு. சில பதிவுகளப் படிச்சா 'அட நாமும் எழுதலாமே'ன்னு ஆர்வம் வரும். சிலதுகளப் படிச்சா 'அட நாம என்னடா எழுதுறோம்னு' தோணும். அலுவல்களை விரைவாக முடிப்பது என் வழக்கம். (இதுனால தரம் கொறஞ்சா எனக்கென்ன? :) மீதமிருக்கும் நேரத்த எங்க ஊர் 'முட்டம்'பற்றி எழுத ஆரம்பித்தேன். அங்க ஆரம்பிச்சு சற்றுமுன் வரைக்கும் ஓயல (ஆகா.. டபுள் மீனிங்கா?)

வலைப்பதிவுகள் அருமையான ஊடகம். மாற்று ஊடகம். ஒரு படைப்ப பத்திரிகைக்கு அனுப்பிட்டு காத்திருப்பதுபோலல்லாமல், நம்ம படைப்புக்களையெல்லாம் (நல்லாயிருக்கிறதையும் நல்லாயில்லாதத்தையும்) ஒரு இடத்துலபோட்டு அத நாலுபேர் பாத்து படிச்சு வாழ்த்தி, இல்ல திட்டி (சில நேரம் காறித் துப்பி) உடனடி மறுமொழி கிடைக்குது பாருங்க. இந்த வசதி எதுலயும் கிடைக்காது.

இன்னொண்ணு, எதப்பத்தி வேணும்னா எழுதலாம். இதுதான் பதிவுகளின் பலமும், பலவீனமும்னு நினைக்கிறேன். யார் வேணும்னாலும், எதப்பத்தி வேணும்னாலும் எழுதலாம். சுதந்திரம் நெருப்புமாதிரி, விளக்கும் ஏத்தலாம் ஊரையும் எரிக்கலாம்.

தமிழ் வலைப்பதிவுகள் அசுரத்தனமா வளர்ந்திருக்குது எனலாம். நான் டிசம்பபர் 2005ல் வரும்போதே பலரும் கலக்கிட்டிருந்தாங்க. இப்ப இன்னும் பெரிதாகிகிட்டேயிருக்குது. இதுவே வலைப்பதிவுகளின் சக்தியைக் காமிக்குதில்லையா?

நிச்சயமாக நாம் ஒரு மாற்று ஊடகத்தை செவ்வனே உருவாக்கியிருக்கிறோம் என்பதி ஐயமே இல்லை. எத்தனைவகையான பதிவுகள்? பத்திரிகையுலகம் காணாத அளவுக்கு வித்தியாசம் நம்மால் தரமுடிகிறது. சொல்லப்போனால் ஒரு பத்திரிகையால் இதுபோல ஒரு ஒருங்கிணைப்பை செய்ய இயலாது. பூங்காவைப்போல 5 முதல் 10 வெவ்வேறு வகையிலான பத்திரிகை வடிவங்களைத் தர முடிகிற அளவுக்கு பதிவுகள் இருக்கின்றன என்பதில் ஐயமே இல்லை.

சில விஷயங்கள் நெருடலாகத்தான் இருக்கின்றன.

வலைப்பதிவுன்னாலே ஒழுங்குபடுத்தப் படாத ஊடகம் என்றுதான் நினைக்கிறோம், ஆனால் இன்றைக்கு உலகளவில் வலைப்பதிவுகள் பல உயரங்களை எட்டியிருக்கின்றன. பத்திரிகைகள், செய்தியாளர்கள், அரசியல் தலைவர்கள், ஆன்மீகவாதிகள் என எல்லாவிதமான எழுத்துக்களும் பரவலாக, உடனுக்குடன் வெளியில் வர உலகளவில் பதிவுகள் ஊடகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் தமிழ் பதிவுகளால் சில எல்லைகளைத் தாண்டிவிட முடியவில்லை என்பதை வருத்தத்துடனே பதிக்கவேண்டியுள்ளது.

உலகளவில் பதிவுகள் சாதாரண மக்களால் பாப்புலர் ஆக்கப்பட்டு இப்போது பெயர்போன பத்திரிகையாளர்களும், இன்னும் முக்கியமானவர்களும் உள்ளே வந்துள்ளனர். ஆனால் தமிழ் பதிவுலகுக்கு வந்த எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் (சிலர்) விட்டால் போதும்னு ஓடிட்டாங்க. வலைப்பதிவுகளில் எனென்னெ விஷயங்கள் பெரிதாய் விவாதிக்கப்படுகின்றனவோ அவைகளில் அதிகம் பிடிப்புள்ள எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும்தான் இவர்கள். ஆனாலும் இவங்க ஓடிப்போக காரணம் என்ன? யோசிக்கவேண்டியுள்ளது.

நம் வளர்ச்சி எண்ணிக்கையளவிலேயே நின்றுவிட்டதோ என எண்ணத்தோன்றுகிறது. ஊடகத்தைப் புரிந்தவர்கள் உள்ளே வரும்போதுதான் நம்மால் முக்கியமான அடுத்த கட்டங்களுக்கு விரைந்து செல்ல இயலும் என நினைக்கிறேன். அடுத்த கட்டம்னா? பொது ஊடகமாக பதிவுகளை உருவாக்குவதுதான் அடுத்தகட்டமாக இருக்கும். பதிவர்களும் இன்னும் சிலரும் மட்டுமே என சிறிய குழுவுக்காகவே என அல்லாமல் இணையத்தில் உலவும் எல்லாத் தமிழர்களும் படித்து பயன்பெறும்வகையில் பதிவுகள் பன்முகப் படவேண்டும், பயனுள்ளதாக ஆகவேண்டும். இதில் பன்முகம் நமக்கு நிறையவே கிடைத்திருக்கிறது.

பதிவுகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் குழுப் பதிவுகள் பெரும் பங்குவகிக்கின்றன. குழுவாகச் சேர்ந்து செயல்படும்போது பலதும் சாத்தியமாகிறது. சற்றுமுன் குழு துவங்கி 20 நாட்களிலேயே 300க்கும் மேலான பதிவுகளை தந்துள்ளது. இது தனி ஆளாய் சாத்தியமில்லாதது. (சற்றுமுன் அதிகமாக தலைப்புச் செய்திகளைத் தருவதாலும் இது எளிதில் சாத்தியமாகிறது.)

குழு பதிவுகளின் வெற்றிக்கு முக்கியமாக நான் கருதுவது, ஒருங்கிணைப்பு அவசியம். தொடர் தகவல் பரிமாற்றம் நிகழவேண்டும். உறுப்பினரின் தனி பதிவை பாதிக்காதவகையில் இருக்கவேண்டும். குழுவில் இணைபவர்கள் குழுவின் நோக்கத்தில் ஈடுபாடுள்ளவர்களாயிருத்தல்வேண்டும். குழு கொஞ்சம் பெரிதாயிருத்தல் நல்லது.

என் மனதில் இருக்கும் புதிய குழுக்களுக்கான யோசனைகள், யார் வேண்டுமானாலும் துவங்கலாம். No copyrights reserved.

திரைப் பார்வை - சினிமா/சினிமா இசை விமர்சனத்திற்கான குழு. ஒரே படம் பல பார்வைகளில் விமர்சிக்கப்படலாம். இந்தக் குழுவின் பதிவை பார்த்துவிட்டு சினிமா பாக்கவா வேண்டாமா என முடிவு செய்ய முடியவேண்டும். விகடன்போல குழுவின் மொத்த உறுப்பினர்களும் சேர்ந்து மதிப்பிட முயலலாம்.

வரி விளம்பரம் - சற்றுமுன் Breaking news தளத்துக்கு முன்பு இந்த ஐடியாவைத்தான் மும்முரமாக யோசித்துக்கொண்டிருந்தேன். அதாவது மக்கள் பொருட்களை, சேவையை வாங்க விற்க ஏற்றதாய் வரி விளம்பரங்களை வழங்கும் பதிவு.

புத்தக விமர்சனம் - திரை விமர்சனம் போல.

தமிழ் இலக்கியம் - தமிழ் சங்கம் இப்போது குறள் கவிதைகளை வழங்குவதுபோல மற்ற இலக்கியங்களில் ஏதேனும் ஒன்றை விளக்குவது. இப்படி பலதும் போடலாம், அகநானூறு புறநானூறு etc. etc.

மத நல்லிணக்கம் - நம்மால ஒரே தளத்தில் தத்தம் மதங்களின் நல்ல பண்புகளை உயர்த்திப் பேசும் பதிவுகளை இட முடியும் எனக் காண்பிக்க. நமக்கு நாமே சேறடித்துக் கொள்ளும் பழக்கத்திலிருந்து கொஞ்சம் விடுபட்டுப்போக. ஆன்மீகப் பதிவெழுதுபவர்கள் யோசிக்கலாம் (I am ready) ஒரே பக்கத்தில் பல்வேறு மதங்களின் ஆன்மீகப் பார்வைகள். எண்ணிப்பாக்கவே ஆனந்தமாயிருக்குது.

திருக்குறள் குழுமம் - தமிழ்சங்கம் ஒரு குறளுக்கு ஒரு கதை என எழுதுகிறது. இது முடிய ஆண்டுகள் ஆகலாம். ஆனால் சில பதிவர்கள் கூடி வெறும் குறள்களை அதிகாரத்துக்கு ஒரு பதிவு என எழுதி (குறைந்த பட்ச தெளிவுரையுடன்) குறிச் சொற்களுடன் சேர்த்து பதிக்கலாம். Easy browsing.

ஒன்றாய் செயல்பட்டாலேயல்லாமல் அடுத்த நிலைக்கு நாம் செல்ல இயலாது. வெறுமனே சண்டைபோட்டுக்கொள்ளவும், சாட்டிங்போல பேசிக்கொள்ளவும் மட்டுமே பதிவுகள் என்பதை மாற்றி (இதுவெல்லாமும் கொஞ்சம் தேவைதான்) அடுத்த நிலைக்குச் செல்ல முயலுவோம். இப்படிச் செய்ய நினைப்பவர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் வேண்டாத எழுத்துக்களை விலக்கிவைக்க இயல்கிறது. சில நல்ல கருத்துக்கள் தேவையில்லாத வார்த்தைப் பிரயோகங்களால் அடித்துச் செல்லப்படுகின்றன. பூக்களைப் பறிக்க அரிவாளோடு அலைபவர்கள் பலர்.

உலகையே மாற்றும் வாய்ப்பு ஒரு சிலருக்குத்தான் கிடைக்கிறது, ஆனால் நம்மை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு நமக்கு நிச்சயம் உண்டு. ஒன்றுபடுவோம் செயலக்குவோம்.

என்னடா பதிவுகள அறிமுகப்படுத்தலியான்னு கேக்குறீங்களா.

அடுத்த பதிவுல ஆரம்பிக்கலாமா?
மேலும் வாசிக்க...

Thursday, March 8, 2007

இரண்டாவது ஆசிரியர்

வலைச்சர முயற்சி அனைவராலும் வரவேற்கப் பட்டிருக்கிறது. இதன் ஆரம்ப முயற்சியான வலைப்பூ தந்த மதிகந்தசாமி, காசி ஆறுமுகம் ஆகியோருக்குத்தான் நன்றி கூற வேண்டும். அவர்கள் காட்டிய வழிச்சுவட்டில் வலைச்சரம் தன் பயணத்தை தொடர்கிறது.

வேலை நெருக்கடி காரணமாக பொன்ஸ் குறைவான பதிவுகளே இட்டார் என்ற போதும் சிறப்பாக தொகுத்திருந்தார். ஆரம்பம் என்பதால் என்ன செய்வது என்ற தெளிவின்மை இருப்பதாக சொன்னார். ஆனாலும் வலைப்பதிவு நுட்பம் மற்றும் பெண் பதிவர்கள் அறிமுகம் என வகைப் படுத்தி தொகுத்தது நன்றாகவே இருந்தது. அவருக்கு நன்றி.

அடுத்து வருபவர் தேன் வலைப்பதிவர் சிறில் அலெக்ஸ். சமீபத்தில் சூடுபிடித்துள்ள செய்திக் கூட்டுப் பதிவான சற்றுமுன்-ஐ துவக்கியவர் . தமிழோவியம் இணைய இதழின் ஆசிரியர் குழுவிலும் இருக்கிறார். சிறில் தொகுத்து தரும் வலைப்பூக்களை அடுத்து காண்போம்
மேலும் வாசிக்க...

Tuesday, March 6, 2007

மின்னும் புதியவர்கள்..

வலைச்சரம் ஆசிரியராக செய்ய வேண்டியவை என்று நான் பட்டியலிட்டதில் எனக்குப் பிடித்த, நான் படிக்கும் புதியவர்களின் பதிவுகளை அறிமுகப்படுத்துவதும் ஒன்று. பெண்கள் தின வாரமாத்தில், அறிமுகப்படுத்தும் புதிய பதிவர்கள் அனைவரும் பெண்களாக அமைவது ஒரு எதேச்சையான நிகழ்வே.

சில மாதங்களாகவே தமிழ்ப்பதிவுகளுக்குப் புதுவரவுகளில் பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதிலும் பலவகையான எழுத்துக்கள் காணக் கிடைக்கின்றன. வலையுலகில் பெண்மொழி இன்றைய தொலைக்காட்சி சீரியல்கள் போல் ஒரே விதமான சோக கீதங்களாக இல்லாமல், விளையாட்டு, வம்பு, உரிமைக்குரல், விழிப்புணர்வு என்று பலவிதங்களிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அடுத்தவருக்காக பிரார்த்தனை செய்வதிலும், தொடர்பே இல்லாத இன்னொரு உயிருக்காக வருந்தும் இரக்க உணர்விலும் முன்னணியில் இருக்கும் பெண்களின் பண்பாக, பிரார்த்தனை நேரம் என்று தாயுள்ளத்தோடு தனிப் பதிவே தொடங்கி செயல்பட்டு வரும் கௌசி பற்றி முதலில்... சின்னச் சின்னக் கவிதை இடுகைகளுடன் நுழைந்த கௌசி, சாந்தியின் பாலின சர்ச்சை பற்றிய பதிவில் தான் முதன்முதலில் கவனம் பெற்றார். அந்த நேரத்துப் பதிவுகளில் வராத விவரங்கள் பலவற்றைத் தேடி ஆராய்ந்து எழுதிய இவரது இடுகை, சாந்தியையும் தாண்டி ஒலிம்பிக்கின் வேறு பல பிரச்சனைகளையும் தொட்டுச் சென்றது. பெண்ணுரிமை பற்றிய கௌசியின் பார்வையும் ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களும், பாரதி பிறந்தநாளைப் பற்றிய பதிவும் பெரிய அலைகளை எழுப்பவல்ல, சின்னச் சின்னக் கற்கள். வைரமுத்துவின் நூறுவண்ணக் கனவைப் பற்றிய இவரது இடுகை எனக்கு மனதிற்கு மிகவும் நெருக்கமானது. பெரிய அறிவாளியோ, அறிந்தவளோ இல்லை என்று சொல்லிக் கொண்டே பலவிசயங்களைப் பற்றிப் பரவலாக எழுதிக் கொண்டிருக்கும் கௌசி இன்னும் அதிகம் எழுத வேண்டும் என்று இந்தப் பதிவின் மூலம் வேண்டுகோள் வைக்கிறேன். கொஞ்சம் லைட்டாகவும் ஏதாச்சும் எழுதுங்களேன் கௌசி...

அடுத்தபடியாக, புதிதாக வந்து, சக்கை போடு போட்டுக் கொண்டிருப்பவர் கண்மணி. பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்பது பொதுவாக சமூகத்தில் புழங்கும் ஒரு கருத்து. ஒரு மனோரமா, ஒரு கோவை சரளாவுக்குப் பின் காமெடி நடிகைக்கான இடம் கூட தமிழ்ச் சினிமாவில் பல நாள் காலியாகத் தான் இருந்தது. அப்படி இருக்கையில், விளையாட்டாக, சின்னச் சின்ன வாழ்க்கை நிகழ்வுகளில் தானும் சிரித்து, அடுத்தவர்களையும் சிரிக்க வைக்கும் சில பெண்கள் வியப்புக்குரியவர்களாகிறார்கள். இந்த விதத்திலேயே, எனக்கு கண்மணியை மிகவும் பிடிக்கும். போன டிசம்பரில் வலைக்கு வந்து, நான்கு மாதங்களில், அரைசதத்தைத் தொடப் போகும் கண்மணியின் ஒவ்வொரு பதிவுமே ஒவ்வொரு விதமான நகைச்சுவை தான். சாய்பாபா-கலைஞர் சந்திப்பை ஒட்டி, இவர்கள் பாபாவைச் சந்தித்தால், தமிழ்மண பின்னூட்ட உயரெல்லையை ஒட்டி, 24ஆம் புலிகேசியை 30ஆக்கிய கதை, ஜோதியில் சேருவதற்காக கண்டாக்டரிடம் போன பதிவு, மதன்ஸ் திரைப்பார்வை என்று உள்குத்து வெளிக்குத்து கவலையில்லாமல், அடித்து ஆடிக் கொண்டிருக்கிறார் கண்மணி. சமீபத்தில் சுப்பிரமணிக்கு இனிஷியல் வைத்தது படித்து சிரி சிரியென்று சிரித்துக் கொண்டிருந்தேன்.
"அம்மணி கண்மணி, ரெண்டு வாண்டுக்கு அம்மாவா நீங்க? கல்யாணம் ஆன பின்னும் சிரிச்சிகிட்டிருக்கீங்களா?!! அதிசயமாக்கீதும்மா..!! இன்னும் நல்லா சிரிச்சி எங்களையும் சிரிக்க வையுங்க :) "

அடுத்து நான் தவறாமல் படித்துவிடும் மற்றொரு பதிவர் "மை பிரெண்ட்". பலநாட்களாக எழுதிக் கொண்டிருந்தாலும் டிசம்பர் போலத்தான் எல்லாம் தமிழில் எழுதத் தொடங்கி இருக்கிறார் மை பிரெண்ட். இவருடைய உலகை அழிக்கும் ரப்பர் பதிவை நண்பர் ஒருவர் பரிந்துரைத்ததால் இவரின் இடுகைகளைப் பார்க்கத் தொடங்கினேன். தோஹாவின் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், மலேசிய அரியணை மாற்றங்கள், இயற்கைப் பேரிடர்கள் என்று தன் நாட்டின் பல்வேறு நிகழ்வுகளையும் செய்திப் பகிர்வுகளும், திரைப்பட விமர்சனங்களும் என்று பலவும் காணக் கிடைக்கிறது இவரின் நட்புலகில் (The World of My Friend). கதையல்ல நிஜம் என்ற மை பிரெண்டின் குழந்தைப்பருவத் தொடர், விறுவிறுப்பான திருப்பங்களைக் கொண்ட வித்தியாசமான மர்மத்தொடராகவும், நகைச்சுவை கலந்த ஜாலியான தொடராகவும் இருக்கிறது. அமைதியான பெண்குரல் ஒன்றும் ஒளிந்திருக்கிறது மை பிரெண்டின் பதிவுகளில். மை ப்ரெண்டின் பதிவுகளில் எனக்குப் பிடித்த பதிவு இது. இந்தப் பதிவு படித்த பின் கேட்ட அந்தப் பாடலும் எனக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது.. அந்த மர்மத் தொடரை சீக்கிரம் முடிங்க தாயி..

ஒரு தாயாக, தன் குழந்தைகளின் மொழியை முன்வைக்கும் சிறுமுயற்சிகள், ஏற்கனவே நாம் படித்திருக்கும் உலக சினிமா விமர்சனங்களைத் தன்பார்வையில் தரும் மனிதம், பெண்களே அதிகம் சிறுநீரக தானம் செய்கிறார்கள் என்பது போன்ற செய்தி விமர்சனங்கள், கௌசியை எழுத வைத்த பெண்ணுரிமை பற்றிய பதிவு, சமையல் என்று பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்துக் கொண்டே வருகிறார் முத்துலட்சுமி. அம்மாவுடன் கொண்டாடிய பண்டிகைகள் பற்றிய பதிவும் அண்டை வீட்டாராக புறாக் குடும்பமொன்றை வளர்த்த பகிர்வும் எனக்கு மிகவும் பிடித்த பதிவுகள். இடைவெளியின்றி சீராக எழுதிக் கொண்டிருக்கும் முத்துலட்சுமி இன்னும் பரவலான விசயங்கள் பற்றியும் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.. (கவிதை எழுதி காலத்தை வீணடிக்காதீங்க லட்சுமி :)))) )

நான் படிக்கும் புதுப் பதிவர்கள் இவர்கள் என்பதைத் தவிர, இன்னும் சில புதிய பதிவர்கள் விட்டுப் போயிருக்கலாம். இன்னும் இன்னும் அதிக பதிவர்கள், ஆரோக்கியமான பதிவுகளுக்காக வலைப்பதிவுலகம் என்றென்றும் ஆர்வத்துடன் காத்திருக்கிறது.
மேலும் வாசிக்க...

Friday, March 2, 2007

பதிவுகள் குறித்த பதிவுகள்.

துறைசார்ந்த இடுகைகள் என்று பேசுகையில், நான் இருக்கும் மென்பொருள்துறையைச் சேர்ந்த சில இடுகைகளை இங்கே உங்களுக்கு அறிமுகமாக வைக்கிறேன். இவற்றில் சில ஏற்கனவே நமக்குத் தெரிந்தவை. ஏற்கனவே நாம் பயன்படுத்தியவையும் உண்டு. இருப்பினும் என் கவனத்துக்கு வந்தவை இங்கே.

ப்ளாக் உதவி பக்கங்களில் உதவிக் குழுவினர் அவ்வப்போது வரும் மடல்களுக்கும், தனிமடலில் கேட்பவர்களுக்கும் உதவி செய்து கொண்டிருக்கும் போது, சயந்தன் புதிதாக வலை நுட்பம் வகுப்புகள் தொடங்கியுள்ளார்.

லேபிள் இடுதல், ட்ராப்டவுன் மெனு, மற்ற பதிவுகளுக்கு லிங்க் கொடுத்தல், தனி ஒலிப்பதிவு பெட்டி.. என்று பட்டையைக் கிளப்பும் பட்டியல். கேள்வி கேட்க ஆளில்லாமல் தனியே அடித்து ஆடுகிறார். முடிந்தால் நல்லா, நாலு கேள்வி கேட்டு முடுக்கிவிட வேண்டும்

அடுத்து ப்ளாக்கர் பற்றி எழுதுபவர்களில் குறிப்பிடத் தகுந்தவர், ரவிசங்கர். தமிழ்மணத்திற்கு நுட்ப ஆலோசனைகள் நாற்பதில் நிறுத்தியதில் முன்னணி வகித்தவர் என்ற முறையில், தற்போது எல்லாருக்கும் தெரிந்த வலைபதிவு இவருடைய கணிமை. வலைபதிவதைப் பற்றிய கலைச்சொல்லாக்கம், இணையத்திற்கான அடிப்படை மென்பொருட்கள், தளங்கள், HTML நிரலிகள் எழுத ஒரு சின்ன பயிற்சி என்று இணையத்திற்கு புதிதாக வருபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பக்கம் இது.

சமீபத்தைய மறுமொழிகளைத் திரட்டுவது பற்றிய இவரது சமீபத்தைய பதிவு புளோக்கர் கணக்கு வைத்திருக்கும் எல்லாருக்கும் உதவியாக இருக்கும்.

அமைதியாக, இதே போன்ற பிளாக்கர் தொடர்பான உதவிகளைச் செய்துவரும் மற்றொருவர், தீபா. முறையாக தமிழ் பயின்றிறாத தீபா ஆங்கிலம் கலந்த தமிழில் புளோக்கரில் செய்யக் கூடிய நுட்ப மேம்பாடுகள் குறித்து விதவிதமாக எழுதுகிறார். அதிலும் புது பிளாக்கர் இவருடைய சிறப்பான விசயமாக இருக்கிறது. தமிழ் வலைப்பதிவுகளில் தற்காலிகமாக ஓய்விலிருக்கும் ரமணியின் மூன்று பத்தி வார்ப்புரு பார்த்து தீபா உருவாக்கிய புது வார்ப்புரு இங்கே உங்கள் உபயோகத்திற்கு..

யாஹுவின் சிரிப்பான்களைப் பதிவில் தெரியவைக்கும் இவரது நிரலியைத் தற்போது தமிழ்வலைப்பதிவில் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். இந்த நிரலியின் மூலம் எல்லா இடுகைகளும் சிரித்துக் கொண்டும், ரசித்துக் கொண்டும் இருக்கின்றன :)
தீபாவிடமிருந்து நாம் நுட்பம் கற்கும் வேளையில், தமிழ்ப்பதிவுகளிலிருந்து இன்னும் கொஞ்சம் நல்ல தமிழ் கற்றுக் கொண்டால் நமக்குப் படிக்கச் சுலபமாக இருக்கும் :D

புது பிளாக்கர் பற்றிய, அடுத்த குறிப்பிடத் தகுந்த இடுகை ஜெகத்துடையது. புது ப்ளாக்கரில் பழைய பின்னூட்டங்களை ஜிலேபித் தமிழிலிருந்து நம் யூனித்தமிழிலேயே பார்க்க கோபியுடன் சேர்ந்து ஜெகத் செய்த உதவி இப்போது பல இடங்களிலும் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்மணப் பட்டியுடனேயே, ஜெகத்தின் இந்த நிரலியையும் உள்ளிடுவது இப்போது வழக்கமாகிவிட்டது. இது மட்டுமே அல்லாமல், கொஞ்சம் தேடிப் பிடித்து மாற்றம் செய்ய முடிந்தவர்களுக்கு, அவரவர் பதிவில் தமிழிலேயே நாளும் நேரமும் காட்ட இந்தப் பதிவின் நிரலி உதவி செய்கிறது.

பழைய புளாக்கரின் பழைய தமிழாகக் நிரலியை விடவும் இந்த நிரலி இன்னும் அதி நேர்த்தியாக வேலை செய்கிறதென்றால் மிகையில்லை..

இப்போதைக்குப் புது ப்ளாக்கர் பற்றிய தொழில்நுட்பப் பதிவுகள் எண்ணிக்கையில் குறைவு தான் என்றாலும் மேலும் மேலும் பிளாக்கர் குறித்த நுட்பப் பதிவுகள் இங்கு அவசியமாக இருக்கின்றன. முந்தைய பதிவு, அடுத்த பதிவு போன்றவற்றைக் குறிக்கும் சொற்களுக்கான மாற்றங்களைச் சுலபமாக்குவது, புதுப் ப்ளாக்கருக்கேற்ற வார்ப்புருக்கள் இன்னும் சிலவற்றை அதிகரிப்பது, கணினி நுட்பம் தெரியாதவர்களும் இவற்றில் சில நிரலிகளைப் பயன்படுத்த வழி செய்வது, வகைமேகங்கள், விரிபட்டி (widebar - பக்கங்களில் இல்லாமல் பதிவு தொடங்குமுன் இடுகைப் பகுதிக்கும், பக்கப் பட்டிகளுக்கும் பொதுவாக விரிந்த பட்டி) இணைப்பது போன்ற பலவிசயங்கள் தமிழில் இல்லாமலே இருக்கிறது. இவற்றிற்கும் கணித்தமிழில் இடுகைகள் அதிகரிக்க வேண்டும்.

சயந்தன், தீபா, ஜெகத் போல, இன்னும் பலர் தத்தம் புது ப்ளாக்கர் அனுபவத்தை எழுத எழுத, இந்த விதமான பதிவுகள் இங்கும் பெருகும்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது