07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, February 2, 2008

அனுராதாவின் அருமையான வலைப்பூ

இப்பதிவு ஒரு புற்று நோயால் பாதிக்கப்பட்ட, அதன் துன்பங்களை அனுபவித்து வரும் ஒரு சகோதரியின் கதை. கேன்சருடன் ஒரு யுத்தம் என்ற வலைப்பூவினில், தன் நோயைப் பற்றியும், தான் படும் துன்பங்களைப் பற்றியும், அதற்கு உட்கொள்ளும் மருந்துகள் பற்றியும், பெற்றுக் கொண்டிருக்கிற சிகிச்சைகளைப் பற்றியும், தன் மருத்துவ மனை அனுபவங்களைப் பற்றியும், சந்தித்த நல்ல உள்ளங்களைப் பற்றியும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

சகோதரி அனுராதா இதுவரை 37 பதிவுகள் எழுதி இருக்கிறார். எட்டாம் வகுப்பு வரையே கற்ற இவர், ஆங்கிலமும் தெரியாத இவர், என்ன அழகாக, தன் துன்ப வரலாற்றை தன் கணவர் மூலம் எழுதி வருகிறார். இவர் சொல்லச் சொல்ல, அருமைக் கணவர் எழுதுகிறார். அத்தனை பதிவுகளும் இவர் சொன்னது தான்.

2003- ஆக்ஸ்டுத் திங்களில், தனக்கு மார்பகப் புற்று நோய் இருக்கிறது என்று அறிந்த உடன், அதற்கு உண்டான சிகிச்சைகளை, முறையாகத் தொடங்கி, இன்று வரை சிகிச்சை பெற்று வருகிறார். நோயின் தாக்கம் முற்றுகிறது. சிகிச்சை, மருந்துகள், மருந்துகளின் தாக்கம், சிகிச்சையின் பின் விளைவுகள் எல்லாம் பாடாய்ப் படுத்துகின்றன. அறுவைச் சிகிச்சையை விரும்பாது, கதிரியக்க சிகிச்சைகளை கடைப் பிடிக்கிறார்.

தான் சந்தித்த ஒவ்வொரு மருத்துவரைப் பற்றியும், ஒவ்வொரு மருத்துவ மனையைப் பற்றியும் எழுதி வருகிறார். சென்னை, ஹைதராபாத், சிங்கப்பூர், மதுரை என வளைய வருகிறார். தற்போது, மதுரையில் தங்கி, சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒவ்வொரு பதிவினையும் படிக்கும் போது, அவர் பதிவிடுவதின் நோக்கம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பெண்கள் மார்பகப் புற்று நோயை எவ்வாறு அறிந்து கொள்வது, வந்து விட்டால், என்ன சிகிச்சை பெறுவது, எங்கு பெறுவது என்ற அனைத்து விவரங்களையும் விளக்கமாகக் கூறுகிறார்.

கணவர் ஏறத்தாழ 38 ஆண்டு காலம் வருவாய்த்துறையில் பணி புரிந்து காலூன்றி நின்றவர். துணை ஆட்சியாளர் பதவி உயர்வு வரப் போகும் நேரத்தில், துணைவியின் நோய் காரணமாக, விருப்ப ஓய்வு பெற்றவர். அன்று முதல் துணைவியாருக்கு இவர் தான் எல்லாம்.

பணியில் இருந்த காலத்தில், பெரும்பான்மையினரைப் போலவே, கணவர் அலுவலகமே கதியாய்க் கிடந்தவர். அக்கால கட்டத்தில், வீட்டில் சகோதரியே ஆட்சி செய்ய வேண்டிய சூழ்நிலை. ஆக, சகோதரியே, பெற்ற மக்கள் அனைவரையும் நல்ல முறையில் வளர்த்து, மணமுடித்து, பேரன் பேத்திகள் பெற்று, மனமகிழ்ந்தவர்.

தற்போது சகோதரியின் அனைத்துத் தேவைகளையும், துணைவர் அன்புடன், ஆதரவுடன் நிறைவேற்றி வருகிறார்.

சகோதரி அனுராதாவின் ஆசைகள் எல்லாம், புற்று நோயால் அவதிப்படும் நண்பர்களுக்கு, குறிப்பாக சகோதரிகளுக்கு, ஆதரவுக் கரம் நீட்டி, நீண்ட கால பண, மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும் என சதா சர்வ காலமும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறார். இவரது கணவரும் ஒத்த மனதினரைத் தொடர்பு கொண்டு வருகிறார். சீக்கிரமே இவர்களின் எண்ணம் ஈடேறும்.

சகோதரி அனுராதா, பூரண நலம் பெற்று, துன்பங்களிலிருந்து விடுதலல பெற எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் பிரார்த்திப்போமாக. கூட்டுப் பிரார்த்தனைக்கு நிச்சயம் பலனுண்டு.

இறைவா, இவரை துன்பங்களிலிருந்து காப்பாற்று. நோயின் தாக்கத்தைக் குறை.

சகோதரி அனுராதா.
மேலும் வாசிக்க...

மீண்டும் ஒரு ஆன்மீகச்சரம்

அன்புக்கு இனிய பதிவர்களே



முன்பு, ஆன்மீகச்சரத்தினில் அறிமுகப் படுத்தப் பட்ட நண்பர் கைலாஷி, அழகாக ஒரு பதிவு இட்டிருக்கிறார். ஆன்மீக அன்பர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அப்பதிவில் அவரும் சில ஆன்மீக அன்பர்களை அறிமுகப் படுத்தி இருக்கிறார். அப்பதிவர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.



அன்பர் நடராஜ் பிரகாஷ் சென்னையைச் சேர்ந்தவர். தற்போது லாஸ் ஏஞ்ஜெல்ஸில் இருக்கிறார். தமிழின் மீதும், தமிழகத்தைச் சேர்ந்த கோவில்கள் மீதும் தீராக்காதல் கொண்டவர். வாரத்திற்கு ஒரு கோவிலாக அறிமுகம் செய்கிறார். அதுவும் ஒலி வடிவினில். கேட்க கேட்க இன்பம். கற்றலின் கேட்டலே இன்பம். கேட்டு மகிழுங்களேன்.

அன்பர் Dr. N. கண்ணன் தென் கொரியாவில் இருக்கிறார். ஆழ்வார்க்கடியான் என்ற வலைப்பூவினில் அழகு தமிழில், வைணவத்தின் மகிமை பற்றியும் ஆழ்வார்களின் வேத சாரத்தினைப் பற்றியும் எழுதி வருகிறார். " இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதர்க்கு மொழியே தேவையில்லை! " . இது இவரது பொன்மொழி. இவர் எழுதி வரும் பத்து வலைப்பூவினில். இதுவும் ஒன்று. சென்று தான் பாருங்களேன்.

அடுத்த பதிவினில் சந்திப்போமா




மேலும் வாசிக்க...

Thursday, January 31, 2008

கவிஞர்கள் அறிமுகம் - வலைச்சரம்

நண்பர்களே, சில கவிஞர்களை அறிமுகம் செய்கிறேன்.

முதலில் அருமை நண்பர் புகாரி பற்றி எழுதுகிறேன். வானூறி மழை பொழியும், வயலூறி கதிர் விளையும், தேனூறி பூவசையும், தினம்பாடி வண்டாடும், காலூறி அழகுநதி கவிபாடிக் கரையேறும், பாலூறி நிலங்கூட பசியாறும் உரந்தையில்(ஒரத்தநாடு - தஞ்சை மாவட்டம்) பிறந்தவர். தற்போது கனடாவில் வசிக்கிறார். தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசணிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும். தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்குப் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும். இவை அனைத்தும் கவிஞர் கைவண்ணம். எது என் ஊர் என ஒரு அழகுக் கவிதை, எளிய சொற்களில், நச்சென்ற முடிவுடன் படைத்திருக்கிறார். அவரது அருமைக் கவிதைகளில் இதுவும் ஒன்று. வெளிச்ச அழைப்புகள் என்றதொரு புத்தகமும் கவிப்பேரரசின் முன்னுரையோடு வெளி வந்துள்ளது.
செல்லுங்களேன் அவரது கவிதையைச் சுவைக்க.

நண்பர் நந்து, அருமை நிலாவின் தந்தை. பலவித ஒளிப்படங்கள் படைத்திருக்கிறார். அருமை அருமை. பார்க்க வேண்டிய பதிவொன்று. கண்ணுக்கு விருந்து படையுங்கள்.

நண்பர் கருப்பன் நெதர்லாண்ட்ஸில் பணியாற்றுகிறார். மாலைப் பொழுதின் மயக்கத்திலே என்ற ஒரு வலைப்பூவில் எழுதுகிறார். நகைச்சுவை மிளிர புதிய திரைப்படம் "ரோபோ" பற்று எழுதி இருக்கிறார். படியுங்களேன்.

செல்வி ஷங்கர் என்ற ஒரு பெண் பதிவர் அழகுத் தமிழில் அருமையான ஒரு வலைப்பூ வைத்திருக்கிறார். பட்டறிவும் பாடமும் என்ற வலைப்பூ. பல வித கவிதைகளும் கட்டுரைகளும் எழுதி இருக்கிறார். பயனுள்ள பதிவு.

நாளை சந்திப்போமா ?








மேலும் வாசிக்க...

வலைச்சர, படிக்காத, படிக்க வேண்டிய பதிவுகள்

நண்பர்களே !! வலைச்சர கொள்கைப்படி, பதிவர்களால் அதிகம் படிக்காத, ( படித்தும் மறு மொழி இடாத) , பயனுள்ள பதிவுகள் பற்றி கீழே எழுதி இருக்கிறேன்.

நண்பர் பிரபு ராஜ துரை மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணி யாற்றுகிறார். பலதரப்பட்ட வழக்குகளையும் கையாளுகிறார். அவற்றைப் பற்றி எளிமையாக விளக்குகிறார். இதோ அவரது வலைப் பூவான மணற்கேணியில் வந்த
ஜல்லிக்கட்டு பற்றிய இடுகை. இதில் உச்ச நீதி மன்றத்தில் நடந்த, சல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு பற்றி விளக்குகிறார். இன்னுமொரு இடுகை அலங்காநல்லூர் சல்லிக்கட்டு பற்றியதும் இப்பதிவினில் இருக்கிறது. படியுங்களேன்.

பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள கோட்டக்குப்பத்தில் வளர்ந்த நண்பர் இக்பால் தற்போது சிங்கப்பூரில் பணியாற்றுகிறார். இவர் இயற்கையோடு கூடி வாழ்ந்தால் இது சுகமே என்ற பதிவினில் பல விதமான பாட்டி வைத்தியம் பற்றிக் கூறுகிறார். பலவித
கீரைகளின் பயன்கள், இஞ்சி மற்றும் தேன், நெய் ஆகியவை எவ்விதம் நம் உடலைப் பாதுகாக்க உதவுகின்றன என்பதை எல்லாம் விரிவாக எடுத்துரைக்கிறார். சென்று தான் பாருங்களேன்.

மக்கள் சட்டம் என்றொரு வலைப்பூ மக்களுக்கான சட்டங்களை வளர்த்தெடுக்கவும், மக்கள் விரோத சட்டங்களை அடையாளம் காட்டவும் அரிய பணி யாற்றிக் கொண்டிருக்கிறது.
வங்கிகளில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும், பல்வேறு வங்கிகளின் கிரெடிட் கார்டுகள், அதன் மூலம் பெறப்படும் கடன்கள், அதனால் விளையும் துன்பங்கள் பற்றி எல்லாம் விரிவாக எடுத்துரைக்கிறது. பயனுள்ள பதிவு. பதிவர்கள் அலசலாமே!!

நண்பர் ஜி.ராகவன் அடுப்படி என்ற வலைப்பூவினில் சுவைக்கச் சுவைக்க சிறந்த சமையல் குறிப்புகளை சுவை படத் தருகிறார்.
முட்டைக்கோஸ் ஓட்ஸ் உப்புமா செய்வது பற்றி நகைச்சுவையாக குறிப்புகள் தருகிறார். முயற்சி செய்யலாமே.

பதிவர்களே அடுத்த பதிவில் சந்திக்கலாமா ?
மேலும் வாசிக்க...

Wednesday, January 30, 2008

படித்ததில் பிடித்த பதிவுகள் - வலைச்சரம்

நண்பர்களே ! இதுவரை தொடுத்த சரங்களில் இருந்த பூக்கள் எல்லாம், எல்லோரும் நன்கு அறிந்த வலைப் பூக்கள். ஆனால் வலைச்சரத்தின் நோக்கமே புதிய பதிவர்களை அறிமுகப் படுத்துதலும், அதிகம் அறியப்படாத பதிவர்களை அரங்கத்திற்கு கொண்டு வருவதுமே ஆகும். அவ்வடிப்படையில், இவ்விடுகையில் சில பதிவர்களை அறிமுகப் படுத்துகிறேன்.

அருமை நண்பர் சேவியர் அலசல் என்றொரு வலைப்பூ வைத்திருக்கிறார். அதில் பல்வேறு பயனுள்ள தகவல்களையும், பல்வேறு ஆய்வு முடிவுகளையும், பல்வேறு ஒளிப் படங்களையும் ( புகைப் படங்கள் அழிந்து விட்டதால் இப்போதெலாம் Digital Camera தான் அதன் மூலம் எடுக்கும் படங்களை இவ்வாறு அழைக்கலாமா), சில நகைச்சுவை இடுகைகளையும் தருகிறார். இவரது இடுகைகளில் பல்வேறு செய்திகள் இருக்கும்.வலைப்பூ ஆரம்பித்து 15 மாதங்கள் ஆகின்றன. ஏறத்தாழ 250 இடுகைகள் இட்டிருக்கிறார். அதிக பட்ச பதிவர்கள் இவ்விடுகைகளுக்கு வருவதில்லை. 90 விழுக்காடு - இடுகைகள் என்னால் படிக்கப் பட்டவை. இவரது கிரிக்கெட் கலாட்டா - சிட்னி ஸ்பெஷல் ஒரு நகைச்சுவைப் பதிவு. அனைவரும் ஒரு முறை இவ்விடுகைக்கு வருகை புரியலாமே!

மற்றொரு நண்பர் கலை அரசன் மார்த்தாண்டம். இவர் தூறல் என்ற வலைப்பூவின் உரிமையாளர். நெல்லைச் சீமையைச் சார்ந்தவர். குமரி முனையை ரசித்தவர். காவிரிக் கரையில் வசிப்பவர். கவிதைகளில் களிப்பவர். மும்பை, மராத்திய முரசு ஏட்டில் பத்துக்கும் மேற்பட்ட பைந்தமிழ்க் கவிதைகளைத் தந்தவர். 2006 சூலை முதல் இடுகைகள் இட்டு வருகிறார். கவிதைகள், சிறு கதைகள், நடப்புகள், தொடர் கவிதை, ஹைக்கூ கவிதைகள் என்று கலக்குகிறார். பேனாவைப் பற்றிய நல்லதொரு கவிதை. சென்று தான் பாருங்களேன்.

அடுத்த நண்பர் சிவமுருகன் மதுரையைச் சார்ந்தவர். பெங்களூரு பணி செய்யுமிடம். நிகழ்வுகள் என்ற வலைப்பூவில் ஈராண்டுகளாக நிறையச் செய்திகளை உள்ளடக்கிய இடுகைகள் படங்களுடன் படைத்துள்ளார். குறும்பு என்ற இடுகை அவரது பள்ளிப் பருவத்தைப் பற்றியது. குறும்பு வாரமாக ஒரு வாரத்தை, பல்வேறு குறும்புகளுடன் கொண்டாடி இருக்கிறார். படியுங்களேன். இவர் ஒரு பன்முகப் படைப்பாளர். பாராட்டி மகிழலாம். குறளை 11 மொழிகளில் ( சௌராஷ்ட்ரா உட்பட) பதிந்திருக்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் பற்றி அரிய படங்களுடன் சுமார் 50 இடுகைகள் இட்டிருக்கிறார்.

இனிய நண்பர் கபீரன்பன் கோவையில் வேதியியல் பொறியாளர். இவர் கபீரின் கனிமொழிகள் என்ற வலைப்பூவில், கபீர்தாஸின் இரண்டடி தோஹாக்களை தமிழ்ப் படுத்தி இருக்கிறார். சில நாட்களின் சிறைவாசம் அரவிந்தரை ஆன்மீகத்திற்குத் திருப்பியது. தீவிரமான கருத்துகளோடு சுதந்திரப் போராட்டத்தில் இருந்தவரை திசை திருப்பியது. அந்நிகழ்வை அவரது சொற்களிலேயே படைத்துக் காட்டுகிறார். அரவிந்தரின் அனுபவத்தை கபீரின் கருத்துகளோடு ஒப்பிட்டுக் கூறுகிறார். நாமும் படித்து மகிழலாமே !


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது