07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, February 23, 2013

6. வலைச்சரம் ஆறாம் நாள்: வலைப் பதிவு ஒரு கலை



வலைப்பதிவைப் படிப்பதும் அதில் எழுதுவதும் இப்போது ஒரு சிறந்த பொழுது போக்கும் அம்சமாக மாறி வருகிறது. இப்போது அரசியலுக்கும் வலைப்பதிவு தேவைப் படுகிறது.. நான் வலைப்பதிவை ஒரு கலையாகவே காண்கிறேன். அதில்  பைத்தியம் கிடையாது. வலைப்பதிவர்கள் அனைவரும் அவரவர் வழியில் நன்றாகவே எழுதுகிறார்கள். படிக்கும் அனைத்துப் பதிவுகளுக்கும் கருத்துரை இட நேரம் இருப்பதில்லை. மாறிவரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப வலைப்பதிவும் மாறி வருகிறது. நமக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

இன்றைய  எனது அறிமுக வலைப்பதிவுகள்:

பதிவின் பெயர் : நாச்சியார்

திருமதி ரேவதி நரசிம்ஹன் என்ற வல்லிசிம்ஹன் அவர்கள்
” கண்டது, கேட்டது, நினைத்தது எல்லாம் இங்கே பதிவாகிறது. “ என்று எழுதி வருகிறார்.  நானும் ஒரு நட்சத்திரம் என்று http://naachiyaar.blogspot.in/2011/10/blog-post_17.html
தான் வலைப் பக்கம் வந்த கதையைச் சொல்லுகிறார்.

சென்ற ஆண்டு (2012) சென்னையில் நடைபெற்ற சென்னையில் நடைபெற்ற பதிவர் மாநாடு குறித்து இவர் எழுதிய பதிவு இது.
வெற்றிகரமாக நடந்த பதிவர் மாநாடு..நன்றி

பதிவின் பெயர் : ஹரணி பக்கங்கள்.......
 
தஞ்சை கரந்தை பேராசிரியர் ஒருவரின் பக்கங்கள் இவை. தனது தந்தையின் கவிதைகளை இங்கே மகன் தந்தைக்கு ஆற்றும் விதமாக இங்கே தந்துள்ளார். என் அப்பாவின் கவிதைகள்... http://thanjavur-harani.blogspot.in/2012/02/blog-post.html

 


பதிவின் பெயர் : சினிமாப் பாடல்கள் http://cinemapadalkal.blogspot.com (சந்த்ரவதனா)

இந்த பதிவில் சந்த்ரவதனா அவர்கள் பல தமிழ் திரைப் படப் பாடல்களை எழுத்து வடிவத்தில் தந்துள்ளார். சினிமா பாட்டு புத்தகம் போல படிக்கலாம்.
http://familytree-chandravathanaa.blogspot.in என்ற பதிவில் தனது குடும்பம் என்ற ஆலமரத்தின் மூல வேர்களைத் தொகுத்துள்ளார். இது ஒரு புதிய வழி காட்டலாகத் தெரிகிறது.

இவரது Profile – இல் இவருடைய பல வலைப் பதிவுகளைக் காண முடிகிறது.


பதிவின் பெயர் : R P ராஜநாயஹம்   http://rprajanayahem.blogspot.in

இவரது வலைத்தளம் உலக இலக்கியம், சங்கீதம்,உலக சினிமா, ஹாலிவுட் சினிமா, அரசியல், செக்சுவாலிட்டி, சுய அனுபவங்கள், போன்ற பன்முக விஷயங்கள் அடங்கியது. இவர் எழுதிய பதிவுகளை முழுதும் படித்தால்தான் நான் சொல்வதன் உண்மை தெரியும். நான் மாணவனாக இருந்த காலத்தில் கேள்விப்பட்ட தமிழ் சினிமா உலகின் செய்திகளையும் இலக்கியங்களைப் பற்றியும் எழுதி இருக்கிறார். எங்கள் ஊரில் இருந்த எம்.கே.தியாகராஜர் பற்றிய ஒரு பதிவு.

ஒருமுறை, திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் இருக்கும் எம் கே தியாகராஜ பாகவதர் அடக்கம் செய்து இருக்கும் சமாதியை காணச் சென்று இருக்கிறார். அந்த சமாதியானது அங்கு கழிவறையாக பயன்பட்டு வருவது கண்டு மனிதன் நொந்துவிட்டார். எம்.கே. தியாகராஜ பாகவதர் தங்கத் தட்டில் சாப்பிட்ட வாழ்வினையும் இப்போது அவரது சமாதி இருக்கும் நிலையினையும் எண்ணி ஒரு பதிவில் எழுதியுள்ளார்.



பதிவின் பெயர் : சட்டப் பார்வை
http://sattaparvai.blogspot.in  (அட்வகேட் P R ஜெயராஜன்) 
           
சேலம் அட்வகேட் P R ஜெயராஜன் அவர்கள் தனது பார்வையில் சட்டத்தைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் இங்கு பேசுகிறார்.
சேலம் பிறந்த கதை http://sattaparvai.blogspot.in/2010/05/blog-post.html என்ற பதிவில் சேலம் நகருக்கு அந்த பெயர் எப்படி வந்தது என்பதைச் சொல்லியுள்ளார். மேலும் மதனப் பெண் என்ற வலைப்பதிவு ஒன்றையும் எழுதி வருகிறார். இதில் முழுக்க முழுக்க குடும்பப் பிரச்சினைகளை முன்வைத்து பதிவுகள் தந்துள்ளார். 


பதிவின் பெயர் : சிட்டுக்குருவி 
http://vimalann.blogspot.in ( விமலன் )  

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா என்று தனது வலைபதிவில் ஏகப்பட்ட விஷயங்களை அள்ளி தருகிறார் விருதுநகரில் இருக்கும் விமலன் அவர்கள்.
சாரக்காத்து என்ற தலைப்பில் தனது சைக்கிள் கனவை அழகாக சொல்லுகிறார். http://vimalann.blogspot.in/2011/05/blog-post_24.html
//அனைத்து குடும்பங்களிலும் பங்கு வகிக்கும் ரத்தமும்,சதையுமற்ற ஓர் குடும்ப  உறுப்பினராக  இன்றளவும்  காட்சி   தருகிற  ஒரு   பொருளாயும், பயன்பாட்டிலுள்ள உயிர் திணைபோல் ஆகிப்போன எனது சைக்கிளின் பரிதாப நிலைபற்றி,,,,,,,,,  //


பதிவின் பெயர் : அவார்டா கொடுக்கறாங்க? http://awardakodukkaranga.wordpress.com


RV என்ற ராமஸ்வாமி வைத்தியனாதன் என்பவரும் அவரது நண்பர் பக்ஸ் என்பவரும் இணைந்து எழுதும் தளம். அன்றும் இன்றும், எம்ஜிஆர் பக்கம், சிவாஜி பக்கம், திரை உலக வரலாறு, 1950 - இலிருந்து என்று பழைய புதிய தமிழ் திரைப்பட விவரங்களை இந்த தளத்தில் காணலாம். இடையிடையே ஹாரி பாட்டர், ஸ்கைபால் என்று ஆங்கில படங்களைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மலரும் நினைவுகளாக பழைய தமிழ் படங்களை நினைப்பவர்கள் இந்த தளம் சென்று பார்க்கலாம்.



பதிவின் பெயர் : மதன்மணிஅன்பைத்தேடி.....
http://thamizhmagan.blogspot.com  ( த.மணிகண்டன்)

ஈரோட்டுக்காரர். தமிழ் இலக்கிய மாணவன். ( கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி.திருச்செங்கோடு ) இவர் தனது வலைப்பூவில் தமிழ் இலக்கிய மணம் கமழ எழுதுகிறார். மாணவர் என்பதால் இவர் அதிகம் வலைப்பக்கம் வருவதில்லை என்று நினைக்கிறேன். தனக்கு தமிழார்வம் ஊட்டிய தமிழாசிரியர்களைப் பற்றி தமிழ் தேடல் அதை நாடல் கண் பாடல் என்ற பதிவில் http://thamizhmagan.blogspot.in/2010/11/blog-post_25.html சொல்லுகிறார். இணையத்தோடு இணைந்து வாழுங்கள் என்று இவருக்கு வழிகாட்டியவர் வலைப்பதிவர் ” வேர்களைத் தேடி” முனைவர் இரா.குணசீலன் என்பதில் மிக்க மகிழ்ச்சி!

பதிவின் பெயர் : கவிதை வீதி...  
http://kavithaiveedhi.blogspot.com (சௌந்தர்)

இந்த வலைப் பதிவின் சொந்தக்காரர் கவிதைவீதி சௌந்தர் அவர்கள். இவர் கவிதை, கட்டுரை, அரசியல், அனுபவம் என்று வலைப் பதிவில் கலக்குகிறார். எம்ஜிஆர் பற்றிய தகவல்களை
என்ற பதிவில் காணலாம். 


மோகனன் என்பவர் நாட்டுப்புற, கிராமியப் பாடல்களையும், பழைய திரைப்பாடல்களையும் இங்கு தொகுத்து தந்துள்ளார். பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

”செவலக் காளை ரெண்டு பூட்டி” என்ற புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடலுக்கு முன்னுரையுடன் ஒலி வடிவில் தந்த பக்கம் இது: http://moganaraagam.blogspot.in/2011/06/blog-post.html

பதிவின் பெயர் : வல்லத்தான்...
http://duraigowtham.blogspot.in (துரை கௌதம்)

தஞ்சைக்கு அருகில் உள்ள வல்லம் என்ற ஊர்க்காரர். இவரது பதிவுகளில் அதிகம் இடம் பெறுவது சினிமா செய்திகள்தான் என்று நினைக்கிறேன். தஞ்சை நகரத்தைப் பற்றியும், அதன் அருகில் உள்ள தனது ஊர் வல்லம் பற்றியும் நிறைய தகவல்கள் தருகிறார். ஒரு பழைய தமிழ் திரைப்பட விமர்சனத்தை அமுத வள்ளி-1959 http://duraigowtham.blogspot.in/2012/06/1959.html என்ற பதிவில் படிக்கலாம். இந்த படத்தில் “ஆடைகட்டி வந்த நிலவோ” என்று கணீர் குரலில் பாடி நடித்தவர் டி ஆர் மகாலிங்கம்.

பதிவின் பெயர் : தமிழ்ஸ்டுடியோ

// இன்றைய நிலையில் ஒரு குறும்படம் எடுப்பது என்பது யாருக்கும் எட்டாக் கனியல்ல. // என்று குறும்படத்தைப் பற்றி பேசுகிறது இந்த தளம்.  தமிழில் குறும்பட ஆவணப் படங்களுக்கான அனைத்து விதமான தொழில்நுட்ப வசதிகள், படங்களை திரையிடல் போன்ற செய்திகளை இந்தத் தளத்தில் காணலாம்.

பதிவின் பெயர் : அன்புடன்

நான் எழுதியவையும் படித்து ரசித்தவையும் என்று, இந்த வலைத்தளத்தில் சினிமா, அரசியல் என்று தனது பார்வையை வீசுகிறார் வர்மா அவர்கள். திரைக்கு வராத செய்தி, தடம் மாறிய தமிழ்ப் படங்கள் என்று பழைய தமிழ் திரைப்படங்கள், கமல் ரஜினி கால சினிமா செய்திகளை காணலாம்.

நடிகை விஜயகுமாரி பற்றிய செய்திகள் கொண்ட இரண்டு பதிவுகள்:
தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 11 http://varmah.blogspot.in/2011/11/11.html
திரை உலகில் பறிக்கப்பட்ட கதைகள் http://varmah.blogspot.in/2011/12/blog-post_21.html



பதிவின் பெயர் : பாரதி பயிலகம் வலைப்பூ

http://www.bharathipayilagam.blogspot.in (தஞ்சாவூரான்)


சுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்களின் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ. பொதுத்துறை ஒன்றில் 38 ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வுபெற்றவர். தஞ்சாவூரான் என்ற பெயரில் எழுதி வருகிறார்.

கரிச்சான்குஞ்சு என்ற பழைய எழுத்தாளர் பற்றி ” இவருடைய தோற்றம் தலையில் குடுமி, வேதப் படிப்பு, நெற்றியில் பட்டை திருநீறு, சந்தனக் கீற்று, ஆனால் இவர் ஒரு கம்யூனிச சித்தாந்தவாதி.” – என்று அறிமுகம் செய்கிறார்.

கரிச்சான்குஞ்சு

உலக வரலாற்றில் நடந்த சம்பவங்களைப் பற்றி ஒரு கட்டுரை.
உலக சர்வாதிகாரிகளின் கோர முடிவுகள்



 





மேலும் வாசிக்க...

Friday, February 22, 2013

5. வலைச்சரம் ஐந்தாம் நாள்: கருத்துரைகள்



நாம் நமக்கு கிடைத்த எழுத்து சுதந்திரத்தில் நமக்கு பட்டதை எழுதுகிறோம். வலைப் பதிவில் பத்திரிகைகளில் செய்யும் தணிக்கை முறை இங்கு இல்லை. எனவே நாம் சொன்ன கருத்துக்கள் சரியா தவறா என்று நமக்கு தெரியாது. இதை சுட்டிக் காட்ட மற்றவர்கள் கருத்துரைகள் நமக்கு அவசியம் தேவை. வலைப் பதிவை எழுதத் தொடங்கியதுமே கருத்துரைப் பெட்டியில் ( COMMENTS BOX ) அடுத்தவர்கள் கருத்து உடனே எதிர்பார்க்க கூடாது..  நாம் நன்றாக எழுத எழுத,  மற்றவர்கள் பதிவுகளில் நமது கருத்தைச் சொல்லச் சொல்ல நமக்கும் கருத்துரைகள் வந்து சேரும்.

இன்றைய  எனது அறிமுக வலைப்பதிவுகள்:

.
வவ்வால் தனது பதிவுகளில் A to Z எல்லாவற்றையும் அக்கு வேறு ஆணி வேறாக காட்டுவார். நான் எனது பதிவில் “ புதிய பதிவர்களே! பின்னூட்டம் பற்றி கவலைப் படாதீர்கள்! “ http://tthamizhelango.blogspot.com/2011/10/blog-post_25.html என்று எனது வலைப் பதிவு அனுபவத்தை வைத்து ஒரு கட்டுரை தந்தேன். அப்போது  //சாரே கவலைப்பட்டாதிங்க நான் உங்களுக்கு ஆதரவு தரேன்.(பின்னூட்டம் கிடைக்காம ரொம்ப நொந்து போயிருப்பிங்க போல தெரியுது)  இப்படி மரங்களை காப்போம், மண் வளம் காப்போம் , விவசாயிகள் பாவம்னுலாம் பதிவுப்போட்டா யாரும் எட்டிப்பார்க்கமாட்டங்க(அனுபவம்) சினிமா விமர்சனம்(கில்மா படமா இருந்த டபுள் ஓகே) அடல்ட் ஜோக், கிசு..கிசு எழுதீனா கல்லா கட்டலாம்! :-)) // என்று ஆதரவு தந்தவர் இவர்.  தனது கட்டுரைகளில் பல விவரங்களை புள்ளி விவரங்களோடு சொல்கிறார். இடையிடையே நகைச் சுவையும் நையாண்டியும் இழையோடும். சினிமா, அரசியல், ஊர், உலகம் என்று எல்லாவற்றிலும் வலம் வருகிறார்.
பெட்ரோல் விலை ரகசியம்! என்ற பதிவில் பெட்ரோல் வில உயர்வுக்கான காரணங்கள் என்று சில புள்ளி விவரங்களைத் தருகிறார். http://vovalpaarvai.blogspot.in/2011_12_08_archive.html

இன்வெர்ட்டர் (Inverter ) குறித்து இவர் எழுதிய மின்வெட்டில் மின்னல் வெட்டும் தலைகீழ் மின்மாற்றி சேமகலன் . என்ற கட்டுரையில் நிறைய விவரங்கள். http://vovalpaarvai.blogspot.in/2012_02_12_archive.html


பதிவின் பெயர் : வீடு திரும்பல் 
http://veeduthirumbal.blogspot.com ( மோகன்குமார் )

வீடு திரும்பல் மோகன்குமார் அவர்களின் பதிவுகளைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. தமிழ்மணம் தர வரிசையில் முதல் இடத்தில் உள்ளவர். இவருடைய பதிவுகளில்  இவர் தரும் புகைப்படங்களே போட்டோகிராபியில் இவருக்குள்ள ஆர்வத்தைக் காட்டும். சென்ற ஆண்டு சென்னையில் நடந்த பதிவர் மாநாடு குறித்து இவர் தந்த பதிவுகள் மூலம் ( பதிவுலக நண்பர்கள் )
பல பதிவர்களின் முகங்களைக் காண முடிந்தது.
நீடாமங்கலத்தைச் சேர்ந்த வீடு திரும்பல் மோகன்குமார் அவர்கள் தனது சொந்த ஊரைப் பற்றி  நீடா நினைவுகள்(12).என்ற தலைப்பில் எழுதியுள்ளவை மிகவும் அருமை. உதாரணத்திற்கு...

இந்த பதிவர் ராமலக்ஷ்மி ஒரு சிறந்த போட்டோகிராபர். இவரது வலை முழுக்க வண்ண மயமான புகைப் படங்களைக் காணலாம். நானும் போட்டோகிராபியில் ஆர்வம் உள்ளவன். அவரது நெல்லை கோயில் பற்றிய பதிவினை படங்களுடன்  காணலாம்.

இறையும் கலையும் - நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் புகைப்படங்கள்.http://tamilamudam.blogspot.com/2010/12/blog-post_09.html

இவர் அங்கத்தினராக இருக்கும்  PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை என்ற வலைத்தளம் புகைப்படக் கலையை எளிய தமிழில் இனிமையாகத் தருகிறது. பதிவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய வலைத்தளம்.

பதிவின் பெயர் : gmb writes
 http://gmbat1649.blogspot.in   (G M பாலசுப்ரமணியம்)

உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும். -  என்று சொல்லும் இவர், தன்னை 74 வய்து நிரம்பிய இளைஞராகவும் , திறந்த ஒரு புத்தகமாகவும் சொல்வதிலிருந்தே இவரது தன்னம்பிக்கையையும் உறுதியையும் தெரிந்து கொள்ளலாம். பதிவுகளிலும் அவை எதிரொலிக்கக் காணலாம்.  கீழே பாம்புகளைப் பற்றி ஒரு இடத்தில் சுவையாகச் சொல்லுகிறார்.

என்ற பதிவில் //  இந்தியாவில்  ஒரு இடத்தில்  ராகு காலம் இன்னொரு  இடத்தில்  வேறு நேரத்தில் அல்லவா இருக்கவேண்டும்.. இந்தியாவில் ,ஜப்பானில், அமெரிக்காவில்  ராகு காலங்கள்  ஒரே  நேரத்தில்  இருக்க  சாத்தியமில்லையே...//  என்று கேட்கிறார்.

பதிவின் பெயர் : அரசர் குளத்தான்

இவர் எழுதும் அரசியல் கட்டுரைகளை தொடர்ந்து படிப்பேன். பெரும்பாலும் அரசியல் என்பதால், நான் கருத்துரைகள் அதிகம் தந்ததில்லை. இது நியாயம்தானா? நீங்களே சொல்லுங்கள் – ஒரு பதிவரின் ஆதங்கம் www.rahimgazzali.com/2011/11/beware-copy-paste-blogger.html என்ற கட்டுரையில் தனது பதிவுகளை நகல்/ஒட்டு வேலை (COPY &  PASTE) செய்பவர்களைப் பற்றி எழுதியுள்ளார்.

பதிவின் பெயர் : முகம்மத் ஆஷிக் citizen of world 

நான் வலைப் பதிவு தொடங்கிய சமயத்தில் எனது பதிவு ஒன்றிற்கு கருத்துரை தந்து ஊக்கப் படுத்தியவர்களில் இவரும் ஒருவர். இவரது பதிவுகளை தமிழ் திரட்டிகளில் படித்துள்ளேன்.  இவர் எழுதிய ஒரு பதிவு எனக்கு உபயோகமாக இருந்தது. அந்த பதிவு இது..

பதிவின் பெயர் : மதுரை சரவணன்

கல்விப் பணியோடு சமூக சேவைகளையும் செய்து வரும் மதுரை சரவணன் அவர்கள் வலைப்பதிவிலும் அச் செய்திகளைத் தருகிறார். அண்மையில் பள்ளி மாணவர்களைக் கொண்டு டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு தெரு நாடகங்களை மதுரையில்  நடத்தினார் இவர்களையும் புறக்கணிக்கலாமா?   என்ற தலைப்பில்   http://veeluthukal.blogspot.in/2011/12/blog-post.html  மாற்றுத் திறனாளிகள் குறித்த சமூகப் பார்வை கட்டுரை ஒன்றை தந்துள்ளார்.

பதிவின் பெயர் : சந்திரகௌரி  

சகோதரி சந்திரகௌரி அவர்கள் கதை, கட்டுரை, கவிதை என்று ஆர்வத்தோடு எழுதி வருகிறார்.
தமிழர் கலாசாரத்தில் தாலி என்ற தலைப்பில் ஒரு வரலாற்றுத் துறை பேராசிரியர் போன்று விளக்கமாக எடுத்துரைக்கிறார். http://kowsy2010.blogspot.in/2011/10/blog-post_13.html
துடக்கு என்ற தலைப்பில் தீட்டு என்றால் என்ன என்பதை விளக்குகிறார். அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை இது. http://kowsy2010.blogspot.in/2011/10/blog-post_21.html

மேலும் இவர், பெண்களுக்குத் தேவையான குறிப்புகளை கீழே சொல்லப்பட்ட தனது வலைப பதிவில் வழங்குகிறார்.

பதிவின் பெயர் : கவியாழி
http://kaviyazhi.blogspot.in (கவியாழி கண்ணதாசன்)

உணர்ச்சி வெள்ளத்தை உள்ளத்தின் உள்ளே வைக்காமல் வெளியே கவிதை வரிகளைக் கொட்டுகிறார். இவர் எழுதிய கவிதைகளில் என்னைக் கவர்ந்த கவிதை அம்மா.....வருவாயா? (மீண்டும் )அன்பை .....தருவாயா? என்ற தலைப்பில்.

உயிர் பிடித்து உடல் கொடுத்து
உள்ளத்தில் நல் அன்பை விதைத்து
நல்பிள்ளையாய் நாளும் வளர்த்து-என்னை
செல்லமாய்  நன்கு  சீராட்டி வளர்த்தவளே

பதிவின் பெயர் : வரலாற்று சுவடுகள்
 
சுற்றுப்புறச்சூழல், அறிவியல், வரலாறு, மருத்துவம் என்று இவரது பதிவுகளில் காணலாம். பல பதிவர்களின் பக்கங்களில் கருத்துரைப் பெட்டியில் (Comments Box) இவருடைய கருத்துரைகளைக் காணலாம். உலகின் முதல் பல்கலைக்கழகம் ...  பற்றி ஒரு பதிவு.

பதிவின் பெயர் : "நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை" www.eraaedwin.com  (இரா.எட்வின்)

ஆசிரியர் பணியில் இருக்கிறார். இவருடைய பதிவில் சமூக சாடல்களையும் ஆதங்கத்தினையும் காணலாம். நடந்தாய் வாழி காவேரி என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். இவரோ


பதிவின் பெயர் : இதமான அலைகள்
http://yashothakanth.blogspot.com (யசோதாகாந்த்)

யசோதாகாந்த் - நல்ல பெண் கவிஞர் இவர். இயல்பாகவும் அதேசமயம் ஆவேசத்துடனும் சமூகக் கொடுமைகளை சாடுகிறார்
கருணை இல்லா கற்புக்கரசி என்ற தலைப்பில் http://yashothakanth.blogspot.in/2011/10/blog-post_7728.html
//பத்தினிபெண் நீ என்பதால்
  உன்னை தலை வணங்குகிறேன் //
என்று தொடங்கிய வரிகள்
//புத்தகங்கள் வேண்டுமானால் உனை புகழட்டும்
  எனக்கு உன் மேல் என்றென்றும் கோபமே! //
என்று முடிகின்றன.


“சமயத்தில் மாடர்னாகவும் சமயத்தில் கட்டுபெட்டியாகவும் இருக்க பிடித்த ஒரு பெண்ணின் பார்வை தான் இது.” என்று தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொள்கிறார்.  ஈரோடு கௌரி! இளம் பதிவர் இவர். எது கவிதை ? என்ற தலைப்பில்
http://sadharanamanaval.blogspot.in/2012/08/blog-post_8.html  கவிதையைப் பற்றி பேசுகிறார்.

மடக்கி எழுதினால் கவிதை
மடக்காமல் எழுதினால் கட்டுரை
என்கின்றனர் ஒரு சாரார்
மடக்கி மடக்கி எழுதினால் அது மடக்கி
கவித்துவமாக எழுதினால் அது கவிதை
என்கிறார்கள் இன்னொரு சாரார்


பதிவின் பெயர் : கன்னம்.காம்
http://www.kannam.com (சதிஷ் பிரபு)

பல்வேறு தலைப்புகளில் பல கவிதைகள். இக் கவிதைகளை எழுதும் பதிவர் ஒரு வழக்குரைஞர். அவர் தந்த கவிதைகளில் ஆரம்ப காலத்தில் நான் படித்து ரசித்த ஒரு கவிதையில் சில வரிகள்...
// எத்தனை பேர் வந்தாலும்
அவன் அலுவலகத்தில்
வெளியே கிடக்கும் செருப்பு
அவனுடையது மட்டும்தான்..!//

கன்னத்தில் கத்தி போடும் போது கவிஞர் கனிவாக கண்ட காட்சி கவிதையாக வந்துள்ளது. மற்ற கவிதைளும் வார்த்தைகளால் விளாசுகின்றன.

பதிவின் பெயர் : நிஜாம் பக்கம்...
http://nizampakkam.blogspot.in                ( அ.முஹம்மது நிஜாமுத்தீன் )

ஆனந்தவிகடன், கல்கி இதழ்களில் இவரது படைப்புகள் வந்துள்ளன. இயல்பான நடையில் எழுதுகிறார். சிதம்பரத்தில் கூரியர் சர்வீஸ் அறிமுகமான சமயம் அங்கு ஒரு சர்வீஸில் பணியாற்றி இருக்கிறார். அப்போது பணி முழுவதும் ரெயிலில்தான். அந்த நினைவோடைகளை  ரயில் வரும் நேரமாச்சு! என்ற பதிவில் சொல்லிச் செல்கிறார்.

// என்னைக் கவர்ந்த பாடல் இது. உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். // என்று பழைய பாடல்களின் வரிகளைத் தந்துள்ளார். இதோ ஒரு பாடலின் வரிகள் அனைத்தும்
எனக்கும் இந்த பாடலும், படமும் பிடிக்கும். ரங்கராவ் நடிப்பு கண்ணில் நீரை வரவழைக்கும்.

பதிவின் பெயர் :  திருமதி பக்கங்கள்

சகோதரி கோமதி அரசு அவர்கள். ஆர்வத்துடன் நிறைய பதிவுகள் தந்து இருக்கிறார்.

தனது தங்கை பேரனின் ஆயுசுஹோமம், முடிஇறக்குதல், காதுகுத்துதல் ஆகிய விழாக்களில் தான் கலந்து கொண்ட நிகழ்ச்சியை இந்த பதிவில் அழகிய படங்களுடன் விவரிக்கிறார்.


பதிவின் பெயர் : ரிஷபன்

ரிஷபன் அவர்கள் பத்திரிகை எழுத்தாளர் மற்றும்  வலைப்பதிவர் ஆவார். திரு. VGK ( வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களின் நண்பர். ரிஷபன் அவர்கள் தனது வலையில் சிறுகதை, கவிதைகள், ஆன்மீகம் என்று பல தலைப்புகளில் எழுதி வருகிறார். நான் ரசித்த அவரது ” நீங்களும் நானும்   என்ற கவிதையிலிருந்து சில வரிகள்:
கை குலுக்கிக் கொள்ளலாம்..
இருக்கை பற்றிய அவஸ்தை இல்லை..
... ... ... ... ...
கை குலுக்கல் என்றால் மனதின் இழைதல்..
முரண்பாடற்று..
நாளை இன்னொரு இடம்.. இன்னொரு கவனிப்பு..
வாழ்க்கையை அதன் போக்கில்
ரசிப்பதை..யார் தடுத்தார்கள் இப்போது ?


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது