கவிதை மலர்
➦➠ by:
ஆசியா உமர்.
கற்பனையும் உண்மையும் கலந்து தான் கவிதை மலர்கிறது. மனத்திரையில் எழுதி, பின்பு முழுவடிவம் பெறுகிறது. அப்படி வடிவம் பெற்ற என் தேடலில் கிடைத்த, நான் ரசித்த, சில கவிதைகளை இன்று பகிர்ந்திருக்கிறேன்.
வலைச்சரப் பொறுப்பாசிரியர் மதிப்பிற்குரிய சீனா அய்யா, வாழ்க்கை பற்றி எழுதிய புதுக் கவிதை. இது மொக்கையா ? இல்லவே இல்லை.
முத்துச்சரம் ராமலஷ்மியின் தேவதைக்கு பிடித்த காலணிகள். அருமை. தளத்தில்
எந்தக் கவிதையை நான் தேர்ந்தெடுப்பது. குவிந்து கிடக்கிறதே !
தோழி இளமதியின் இயற்கை பற்றிய கவிதை தொகுப்பு. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் பற்றிய பகிர்வு. தேடலில் எப்பொழுதும் அவர் கவிதைகள் ஒன்றை ஒன்று விஞ்சும் படியாய்..
ஹேமாவின் எல்லாக் கவிதைகளும் எனக்கு பலமுறை வாசித்தால் தான் புரியும்.
சமையலறை கூட போதிமரம் தான் என்கிறார் கவிஞர் ரமணி. என்னமோ! சமையலறையே என் உலகமாய் இருப்பதால், இந்தக் கவிதையையே தேர்ந்தெடுத்தேன்.
ஆயிஷா ஃபரூக்கின் உழவைக் காப்போம் கவிதையின் வரிகள் என் உள்ளத்தை பிரதிபலிப்பதாய் இருக்கிறது. உழவின்றி உணவிற்கு
வழியேது, உழவனன்றி உழவிற்கு
ஆள் ஏது – நாம் அனைவரும்
சிந்தித்து பார்க்க வேண்டிய வரிகள்.
சீனியின் பக்கத்து வீடு – இனம், மதம்,
மொழி கடந்து பக்கத்து வீட்டாருடன் பரிவோடு நடப்பது நன்மை பயக்கவல்லது என்கிறார்.
மீனவர்கள் எதிர்பார்க்கும் தீர்ப்புகள் திருத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை தானே!
உங்க விஞ்ஞானத்துல
ஒரு அரிசி செய்யுங்க
காலமெல்லாம் உங்க வீட்டில்
கால்புடிச்சு நிப்போமுங்க..............
ஒரு அரிசி செய்யுங்க
காலமெல்லாம் உங்க வீட்டில்
கால்புடிச்சு நிப்போமுங்க..............
கிருஷ்ணப்ரியாவின் தஞ்சை கவிதையில் இல்லத்தரசியின்
ஞாயிற்றுக் கிழமையின் அரூபப் புலம்பல்கள் .மிக அருமை.
தமிழ் நிலாவின் நிச்சயமில்லை கவிதை – உலகம் எப்போதோ அழிந்து விட்டது. இறக்கப் பயப்படாதே. மனிதம் இறந்து நாளாகிவிட்டது என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். மனிதங்களை நேசிக்கும் சக்தி ஒன்று தான் நிலையானது. மதங்கள் அல்ல என்கிறார்.
சிநேகிதன் அக்பர் – வெளிநாட்டுவாசியின் விடுமுறை நாட்கள் - நச் கவிதை.
இளம்
தூயவனின் – அழகுஅருமை.
எங்கள் வாழ்வுக்கு ஒரு விடிவு வராதா? என்ற மனவேதனை
நம்மையும் தொற்றிக் கொள்கிறது.
கவிதை வரிகளில் நாட்டின் நடப்பை பகிர்ந்த விதம் அருமை.
நிம்மதி என்னும் வெளிச்சத்தில் என்ற நீரோடை மலிக்காவின் கவிதைப் பகிர்வு வானொலியில் புத்தாண்டுக்கவிதையாக வாசிக்கப்பட்டதை கேட்டு ரசியுங்கள்..
இதயத் துடிப்பின் கவிதை துடிப்பு - ப்ரசாந்தின் இதயத் துடிப்பில் வெளிவந்த கவிதை
கலைஞரின் கவிதைகளுக்கும் அவருடைய குரலுக்கும் நான் பெரிய ரசிகை, அவ்வளவே !
அடுத்து நான் ரசிப்பது கவிஞர் வைரமுத்து
இதோ தமிழ்வாசி பகிர்ந்த தன் அம்மாவிற்காக - பெத்தவளே உன் பெருமை, ஒத்த வரி சொல்லலையே அவரே வாசிக்கிறார். கேட்டுப் பாருங்கள்.
இத்துடன் இன்றைய பகிர்வை முடித்துக் கொள்கிறேன்.
மீண்டும் அசத்தலான பதிவர்களுடன் நாளை சந்திப்போம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.