07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, April 10, 2007

லிவிங்ஸ்மைலுக்கு வாழ்த்துக்கள்

கணிணியில் அன்றைய தினத்தந்தி செய்தித்தாளை படித்துக்கொண்டிருந்த ஆசான் கோயிந்ஞ்சாமியின் வருகையில் நிமிர்ந்தார்.

"வா கோயிந்தசாமி... விஷயம் தெரியுமா? நம்ம பதிவர்ல ஒருத்தவங்க சினிமாவுல நடிக்கப்போறாங்க"

"யார் நம்ம தலயா?.... இன்னா வேஷம்பா... சும்மா ஆளு ஹீரோ கணக்கா கீறாருன்னு மெய்யாலுமே சினிமாவுல பூட்டாரா.. இனிமே பதிவெல்லாம் எழுதுவாராமா... நான் அர்ஜீண்டா போயி ஒரு சலாம் போட்டுட்டு வந்துடறேன்"

"டேய்... அது நம்ம தலயும் இல்ல, வாலுமில்ல.. லிவிங் ஸ்மைல் வித்யா தான் அது.. "கருவறை பூக்கள்' ன்னு ஒரு படத்துல நடிக்குறாங்க.. இரு...
தினத்தந்தியில என்ன போட்டுருக்கோ அதை அப்படியே படிக்குறேன் கேளு..

"வாழ்த்து சொல்லிடுவோம் வாத்தியாரே"

'சொல்லிட்டா போச்சு... வாழ்த்துக்கள் வித்யா.. அப்புறம் கோயிந்து இவங்க எப்பவுமே வித்தியாசமா கோபமா எழுதுறவங்க.. அவங்க எழுத்துல உனக்கு ரொம்ப பிடிச்சதா ஒரு பதிவு சொல்ல சொன்னா எதை சொல்வே"

"இன்னா வாத்யாரே இப்படி சொல்லிட்டே.... அந்த மரணம் கவித எவ்ளோ நல்லா இருந்தது.. தெரியுமா... "

"அப்பால இன்னிக்கு எதுனா ஸ்பெசல் இருக்குதா வாத்யாரே"

"ஏன் இல்லாம... காட்டாறுன்னு ஒருத்தர் வந்திருக்காங்க.... பதிவும் தலைப்பு மாதிரியே காட்டமா இருக்கும்ன்னு உள்ள போனா அதிர்ச்சிதான் இருக்கும். ஒரு பதிவு எழுதி அது சம்மந்தமா ஒரு அழகான கவிதையையும் தர்றாங்க..
அதுல எனக்கு பிடிச்சது டி.வி.யைப் பத்தி எழுதுனது இந்த கவிதை...

"ஆனாலும் நம்மள ஓவரா சிந்திக்க வைக்கிறது இந்த அண்ணாச்சிதான்... ஒரு கவுஜ எழுதுனா.. அவரு என்ன எழுதியிருக்குறாருன்னு நாம சிந்திக்குறதுக்குள்ள அது புரிஞ்சவங்க பதில கவுஜயா போட்டுடுவாங்க... அதுல தமிழ்மணத்த பதிவுகளால வாழ வைக்குறதுல முக்கியமான ஆளு இவரு"

"உண்மைதான் கோயிந்து... உன்ன மாதிரி எங்க வம்பு கிடைக்கும்ன்னு அலையறவங்களுக்கு எல்லாம் அவர்தான் குரு"

"அப்பால யாழினி அத்தன், சில்வண்டு, கார்மேக ராஜா இவங்க கவுஜய கூடத்தான் நான் படிக்குறேன்.. நல்லா எழுதுறாங்கப்பா கவுஜய."

"ஆனா வாத்தியாரே... நான் காதல் கவுஜ எழுதுறவங்களை பத்தி சொல்லலன்னா நல்லா இருக்காது.."

"அத எழுதாதவங்க யாராச்சும் இருந்தா சொல்லு.. அவங்க பேர சொல்வோம்"

10 comments:

  1. என்னுடைய வாழ்த்துக்களையும் சகோதரிக்கு தெரிவித்துக்கொள்கிறேன்...\

    புதிய பதிவர்கள் எல்லாம் கலக்கறாங்கப்பா...

    ReplyDelete
  2. வந்து வாழ்த்தியமைக்கு நன்றி ரவி :)

    ReplyDelete
  3. சென்ஷி! அய்யனார் அட்டகாசாமான கவிஞர்! சேத்துகோங்க, நம்ம கிடேசன் பார்க் மெம்பர்:-))

    ReplyDelete
  4. //அபி அப்பா said...
    சென்ஷி! அய்யனார் அட்டகாசாமான கவிஞர்! சேத்துகோங்க, நம்ம கிடேசன் பார்க் மெம்பர்:-)) //

    கண்டிப்பாக.... அவரும் ஒரு அட்டகாசமான கவிஞர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை

    ReplyDelete
  5. ஏன்யா சென்ஷி,

    இந்த மாதிரி வலைச்சரம் ஆசிரியரா இருக்கேன்னு நமக்கெல்லாம் ஒத்த வரில புறா மூலமா தூது அனுப்பக் கூடாது? புறாக் கறி தின்னு ரொம்ப நாளாச்சில்லா :-)

    சாத்தான்குளத்தான்

    ReplyDelete
  6. //Asif said...
    ஏன்யா சென்ஷி,

    இந்த மாதிரி வலைச்சரம் ஆசிரியரா இருக்கேன்னு நமக்கெல்லாம் ஒத்த வரில புறா மூலமா தூது அனுப்பக் கூடாது? புறாக் கறி தின்னு ரொம்ப நாளாச்சில்லா :-)

    சாத்தான்குளத்தான்//

    அந்த பயந்தான் அண்ணாச்சி.. அப்புறம் புறாவுக்கு பதிலா நாமக்கல் சிபி தொடைய கேப்பீங்க.. எதுக்கு வம்பு :))

    ReplyDelete
  7. எனது கவிதைத் தொகுப்பு "ஊரெல்லாம் தூரல்",
    கவிதை நேசிக்கும் தமிழ் உள்ளங்களுக்காக இணையத்தில்.

    (plz open with new window)
    தட்டுங்கள்


    படித்து உங்கள் கருத்துக்களை, பதித்துச் செல்லவும்.

    அடுத்தத் தொகுப்புக்கான விதைகளை தூவிச் செல்லுமாறு
    அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    நன்றி
    (plz open with new window)
    தொட்டராயசுவாமி.அ
    கோவை.

    ReplyDelete
  8. //படித்து உங்கள் கருத்துக்களை, பதித்துச் செல்லவும்.

    அடுத்தத் தொகுப்புக்கான விதைகளை தூவிச் செல்லுமாறு
    அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    நன்றி
    (plz open with new window)
    தொட்டராயசுவாமி.அ
    கோவை.//

    கண்டிப்பாக ஐயா..

    ReplyDelete
  9. /லிவிங் ஸ்மைல் வித்யா தான் அது.. "கருவறை பூக்கள்' ன்னு ஒரு படத்துல நடிக்குறாங்க.. இரு...
    தினத்தந்தியில என்ன போட்டுருக்கோ அதை அப்படியே படிக்குறேன் கேளு..
    /

    வித்யாவுக்கு வாழ்த்துக்கள்!
    தகவலுக்கு நன்றி, சென்ஷி!

    இந்த வார வலைச்சரம் ஆசிரியர்க்கு வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  10. நன்றி தென்றல்

    சென்ஷி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது