07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, April 20, 2007

வந்தேன் நானே வலைச்சரம் தொடுக்க...

ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் உண்மை. தமிழ்மணத்தில் இந்த வாரம் நட்சத்திரமாக தமிழ்மணமே இருக்கும் இதே வாரத்தில் வலைச்சரத்திலும் அதே நிலைமை!

தமிழ்மணத்தில் நட்சத்திரத் தேர்வு என்பதும் வலைச்சர ஆசிரியர் தேர்வு என்பதும் பாரட்சமின்றி தேர்வு செய்யப் படும் ஒன்று. இதற்கு வெறுமனே யாராவது வருகிறீர்களா என்று அறிவிப்பு சொல்லி விண்ணப்பிப்பவர்களில் இருந்து தேர்வு செய்ய இயலாது. அப்படி எவரும் விண்ணப்பிக்கவும் மாட்டார்கள். குறிப்பிட்ட ஒருங்கிணைப்பாளர் ஒருவர் வலைப்பதிவர்களில் இந்த வாரம் யாரை அழைக்கலாம் என்பதை நேரங்காலம் அறிந்து யோசித்து கேட்டு அவர்களின் சம்மதம் அறிந்து விவரம் தந்து தயார்ப்படுத்தி வர வேண்டிய விஷயங்கள் இவை. இன்னும் பலர் வர வேண்டியிருக்கிறது. நிறைய பேரை அழைக்கவே இல்லை. அழைக்காததற்கு காரணம் உதாசீனமல்ல. நேரக்குறைவே.

மின்னஞ்சல் முகவரி கிடைத்து அவர்களின் வசதி அறிந்து தர வேண்டும். இரண்டாவதாக வலைச்சரத்தைப் பொறுத்தவரை முந்திய வலைப்பூ ஆசிரியராக இருந்தவர்களை சற்று தாமதமாக அழைக்கலாம் இப்போதைக்கு புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கலாம் என்று தீர்மானம். தேடுதல் அதிகரிக்கிறது.

உண்மையில் இது போன்ற முயற்சிகளும் சரி அதில் பங்கேற்பவர்களுக்கும் சரி மகிழ்ச்சிக்குரிய பெருமைக்குரிய விஷயம் தான். ஆனால் நேரக்குறைவால் இதில் தேவைப்படும் கடுமையான உழைப்புக் காரணமாக தடுமாற்றங்கள் நிகழ்கின்றன.

தமிழ்மண நட்சத்திரத் தேர்வு பற்றி பலரும் பேசுவதை நாம் பார்த்து வந்திருக்கிறோம். இதையும் பாரபட்சமாக பேசுபவர்கள் இருப்பார்கள் தானே? புரிந்து கொள்ளவீர்கள் என்ற நம்பிக்கையோடு தொடர்கிறேன்.

இடைவெளி, தாமதம் குறித்து இங்கே சொல்லிவிட்டதால் மீண்டும் சொல்லி போரடிக்கவில்லை.

-oOo-

நான் படித்த பதிவு இடுகைகளில் சில....

இலக்கணப் பிழைகள் பற்றிய பதிவென்றதும் உள்ளே நுழைந்து பார்த்தால் அது ஆங்கில இலக்கணம். ஆனாலும் நமக்கெல்லாம் ஏற்படும் சின்னச்சின்ன பிழைகள் பற்றி கூறியிருக்கிறார் பகீ.

இந்த பூமிக்கு கேடு விளைவிக்கும் விஷயங்களை நீக்கி சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக இந்த பூமிக்கு நாம் செய்யகூடிய 51 விஷயங்கள்! குறித்து பேசுகிறார் இவர்.

சமீபத்தில் விவாதத்துக்குள்ளாகிய இரு பிரபலங்களின் தேசப்பற்று பற்றாக்குறை சார்ந்த விவாதம் பற்றி இவரது கருத்தையும் பார்ப்போம்.

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 11 என்று 11வது பதிவாக விளக்கி வருகிறார் இந்த சங்கத் தோழர்.

தொடர்ந்து தொழில் நுட்ப பதிவுகளாகத் தரும் தமிழ்ப்பித்தன் இங்கே உரையாடல் களைப் பதிவு செய்ய ஒரு தளத்தை அறிமுகம் செய்கிறார்.

3 comments:

 1. // முந்திய வலைப்பூ ஆசிரியராக இருந்தவர்களை சற்று தாமதமாக அழைக்கலாம் // முன்பு நட்சத்திரமா இருந்தவங்களை சொல்றீங்களா?

  அப்படின்னா பொன்ஸ், மலைநாடான், சிறில் அலெக்ஸ் எல்லாம் இந்த லிஸ்டில் எப்படி வந்தாங்க.

  ReplyDelete
 2. அனானி,
  சிந்தாநதி ஏற்கனவே இணையத் தொடர்பில் பிரச்சனைன்னு சொன்னதினால, இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல முயற்சி செய்யுறேன்..

  நீங்க நினைக்கிற தமிழ்மணம் நட்சத்திரம் வேற, வலைப்பூ ஆசிரியர் வேற. வலைபதிவுகள் தொடங்கப்பட்ட ஆரம்பகாலகட்டத்தில், வலைப்பூ என்று தொடங்கி அதில் ஒவ்வொருவரை ஒவ்வொரு வாரம் ஆசிரியராக அழைத்துக் கொண்டிருந்தார்கள். தமிழ்மணம் போன்ற திரட்டிகள் இல்லாத காரணத்தால், அந்த வாரம் அவர் படித்த, பிடித்த இடுகைகளைப் பகிர்ந்து கொள்வதே வலைப்பூ ஆசிரியரின் பொறுப்பாக தொடங்கியது இது. அப்புறம் மெல்ல மெல்ல, தமிழ்மண நட்சத்திரம் போல், பதிவர் தன்னுடைய திறமைகளையும், எண்ணங்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் மேடையாக உருவெடுத்தது.

  முதல் சில காலம் இருந்த பரிந்துரைக்கும் பணியைத் தான் இந்த வலைச்சரம் ஆசிரியர் செய்யவேண்டும் என்று சிந்தாநதி தொடங்கினார். அந்தவகையில் ஏற்கனவே இருந்த வலைப்பூ ஆசிரியராக இல்லாதவராக பார்த்து அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார். நான் சொன்னது புரியலைன்னா, இங்க பாருங்க..
  வலைச்சரம் தொடங்கும்முன்னமே எல்லாத்தையும் தெளிவா விளக்கி பதிவு போட்டிருக்கார்..

  ReplyDelete
 3. எப்படியிருந்தா என்ன?

  வலைச்சரம் இனிமே படிக்க முடியுமில்ல. அது போதும் :)

  சென்ஷி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது